THOOTHUKUDI New லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
THOOTHUKUDI New லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 மார்ச், 2023

புதுவை தேச மாத இதழ் 13.ஆண்டு விழா மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

 புதுவை தேச மாத இதழ்

13.ஆண்டு விழா மற்றும்

சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா 

நேற்று 28/02/2023 ம் பரபரப்பாக வெகு விமரிசையாக நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:-


புதுச்சேரியில் தமிழ் நாடு பிரஸ் அண்ட் மீடியா நிறுவனத்தலைவர் புதுவை தேச மாத இதழ் ஆசிரியர்

 மு.சிவதமிழவன் அவர்களது முன்னெடுப்பில்

புதுவை தேச மாத இதழ்

13.ஆண்டு விழா மற்றும்

சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் 

புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.ரங்கசாமி

மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

திருமதி தமிழிசை சொளந்தர்ராஐன் அவர்களது ஆசியுடன்

அமைச்சர் பெருமக்கள்

கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தது நிகழ்ச்சி வந்திருந்த அனைவருக்கும் பெரு மகிழ்ச்சி யாக  அமைந்தது.

ஏனெனில்...

 சோதனைகளை கடந்து

சாதனை படைக்கும்

  தமிழ்நாடு பிரஸ் அண்ட்

மீடியா யூனியனின் 

    தலைவர் தலைமை நிர்வாகிகள் தோளோடு தோள்  கொடுத்து இந்த நிகழ்ச்சி பெருவிழாவாக இருந்தது.

பின்பு சாதனை யாளர் விருது வழங்கப்பட்டது .



நிகழ்ச்சி நிறைவில் 

புதுவை

தேச இதழ ஆசிரியர் நிர்வாகிகள் செய்தி 

தொடர்பாளர்கள் வாசகர்கள்  புதுச்சேரி தமிழ் நாடு

பத்திரிகை சொந்தங்களுக்கும் நண்பர்

களுக்கும் நிர்வாகிகளுக்கும்

 தமிழ்நாடு பிரஸ் அண்ட்

மீடியா ரிப்போர்ட்ஸ் யூனியன் சார்பாக நன்றி தெரிவித்தனர்.

         

                              🙏

வியாழன், 23 பிப்ரவரி, 2023

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75வது பிறந்த நாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெ திருவுருவ படத்திற்கு மலர்தூவி இனிப்பு லட்டு வழங்கி கொண்டாடினர்

முன்னாள் தமிழக முதல்வர் புட்சித்தலைவி மாண்புமிகு ஜெயலலிதா  75 ஆவது பிறந்தநாள் விழா தூத்துக்குடி யில் அதிமுக இனிப்பு லட்டு வழங்கி கொண்டாடினர்.



இதுபற்றிய செய்தியாவது -:-

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று (24.02.2023) காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில்  மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்  அறிவுறுத்தலின் பேரில், தூத்துக்குடி டுவிபுரம் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகம் முன்பு  புரட்சித்தலைவி ஜெயலலிதா  திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மேடை அமைக்கப்பட்டு இருந்தது.



அதில் மாலை அணிவித்து மலர் தூவினர் பின்பு  அதிமுகவினர் அப் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு பிறந்த நாள் கொண்டாடினார்கள்.

இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர மாநகரப் பகுதி பேரூராட்சி மாநகர வட்டக் கழக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். 


வியாழன், 16 பிப்ரவரி, 2023

ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 18ம் தேதி மஹா சிவராத்திரி விழா 20ம் தேதி வித்யா விருத்தி மஹா யாகம்!

thoothukudileaks 16-2-2023

photo news by shanmuga Sundaram 

    தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 18ம் தேதி மஹா சிவராத்திரி விழாவும், அதனைத்தொடர்ந்து 20ம் தேதி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வித்யாவிருத்தி மஹா யாகமும் நடைபெறுகிறது.



தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடம் அமைந்துள்ளது. இங்கு, குருபகவான் குருமகாலிங்கேஸ்வராக தனிசந்தியில் எழுந்தருளியுள்ளது மிகவும் சிறப்பான அம்சமாகும்.

குருமகாலிங்கேஸ்வரருக்கு ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 18ம் தேதி காலை கணபதி, -நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மஹாலெட்சுமி ஹோமத்துடன் மஹா சிவராத்திரி விழா துவங்குகிறது. மாலை நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மஹாபூஜை-தீபாரதனையும், இரவு மஹா சிவராத்திரி வழிபாடு பூஜைகளும், பூர்ணாகுதி, அபிஷேக அலங்கார தீபாரதனைகளும் நடைபெறுகிறது.

இரவு 10மணிக்கு ‘மனித வாழ்க்கையில் மனநிறைவு தருவது இறை அருளா.? அல்லது இறைவன் தந்த பொருளா.? என்ற தலைப்பில் பேராசிரியர் செபாஸ்டின் தலைமையில் நகைச்சுவை வழக்காடு மன்றம் நடைபெறுகிறது.

தொடர்ந்து இரவு 12மணிக்கு மஹா அபிஷேகம், தமிழ் மறையில் தேவார திருவாசக பாராயணமும், அதன்பின்பு அதிகாலை 2மணிக்கு சதுர்வேத பாராயணமும், அதிகாலை 4மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலுடன் மஹா சிவராத்திரி விழா நிறைவடைகிறது.

அதனைத் தொடர்ந்து, 20ம் தேதி(திங்கட்கிழமை) மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மாணவ-மாணவியர்களின் கல்வி ஞானமும், ஞாபக சக்தியும் அதிகரித்து 10ம் வகுப்பு, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நன்றாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்றிடுவதற்காக ஸ்ரீமஹா சரஸ்வதிதேவிக்கு மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வித்யா விருத்தி ஹோம வழிபாடு நடைபெறுகிறது.

அன்று காலை 10மணிக்கு மஹாகணபதி-மஹாலெட்சுமி ஹோமமும், பகல் 11மணிக்கு ஸ்ரீமஹா சரஸ்வதிதேவிக்கு மஹா யாக சிறப்பு வழிபாடும், மதியம் 12.30மணிக்கு அபிஷேக அலங்கார தீபாரதனையும், மதியம் 2மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.

வரும் மார்ச் மாதத்தில் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் ஒன், பிளஸ்டூ பொதுத்தேர்வுகளில் மாணவ-மாணவியர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிடுவதற்காக நடத்தப்படும் சிறப்பு மஹா வித்யா விருத்தி ஹோம வழிபாட்டில் பங்கேற்கும் மாணவ-மாணவியர்களுக்கு ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் மஹா யாகத்தில் வைத்து வழிபட்ட பேனாக்களை பரிசாக வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

மஹா யாக சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கும் மாணவ-மாணவியர்கள் தங்களது பெயர், வகுப்பு, நட்சத்திரம் உள்ளிட்ட விபரங்களை 94434 04832, 63698 74760, 70108 87829, 99432 03700 என்ற செல்போன் எண்களில் முன்பதிவு செய்திடுதல் வேண்டும்.

மஹா சிவராத்திரி விழா மற்றும் ஸ்ரீமஹா சரஸ்வதிதேவிக்கான சிறப்பு வித்யா விருத்தி மஹா யாகத்தில் சிவபக்தர்கள், ஆன்மீக அன்பர்கள், மாணவ-மாணவியர்கள், ஆசிரியபெருமக்கள், பெற்றோர்கள் தவறாமல் பங்கேற்று குருமகாலிங்கேஸ்வரர், மஹா சரஸ்வதிதேவியின் பேரருளை பெற்றுச்செல்லுமாறு ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாசசித்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

தூத்துக்குடி மாநகராட்சி கழிவு நீர் பக்கிள் ஒடையில் குதித்து உயிருக்கு போராடிய முதியவரை காப்பாற்றிய பள்ளி ஆசிரியர் சமூக ஆர்வலர்கள் பாராட்டு

 தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் பக்கிள் ஓடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12 - 2 - 2023) பகல் 12 மணியளவில் ஆதரவற்ற முதியவர் ஒருவர் உள்ளே விழுந்துவிட்டார். 


வெளியே எழந்து வர முடியாமல் பல மணி நேரம் தவித்து கொண்டிருந்தார்.

 பொதுமக்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள்.



அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த தூத்துக்கு டி சில்வர் புரம் டி என் டி டி ஏ பள்ளியில் பணிபுரியும்  ஆசிரியர் நிர்மல் கோயில் ராஜ் சற்று யோசிக்காமல் அந்த பக்கிள் ஒனட சாக்கடையில் விழந்த முதியவரை கழிவு நீர் சாக்கடையில் இறங்கி  அவரை காப்பாற்றி வெளி இழத்து கொண்டு வந்தார்.

வீடியோ பார்க்க

 தூத்துக்குடி சில்வர்புரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நிர்மல் கோயில்ராஜ் சற்றும் தாமதிக்காமல் உள்ளே இறங்கி அந்த முதியவரை மேலே கொண்டு வந்ததும் பின்னர் 108 ஆம்புலன்சில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியர் நிர்மல் கோயில்ராஜை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகிறார்கள்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்க கோரி தூத்துக்குடி கலெக்டரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் மனு அளித்தனர்


🤷🏻‍♀️, thoothukudileaks

12-12-2022

தூத்துக்குடி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 12-12-2022 காலை 10. மணி அளவில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் _சுமார் 300மேற்பட்டோர் தமிழக மூதல்வர் ஸ்டாலின் அவரிடம் ஒப்படைக்க கோரி தூத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ் இடம் புகார் மனு கொடுத்தார் கள். 


மனு கொடுக்க எழுச்சியுடன் வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள்



_இதனால் தூத்துக்குடி மாநகரத்தில் பல பகுதிகளில் காவல்துறை வாகனம் போலீசார் பாதுகாப்பு பணி‌ என்று நிறுத்த ப்பட்டிருந்தார்கள்_



_இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழக்த்தை விட காவல்துறை போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தார்கள்_




ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது:-

7339110763 9443584049 9488478955 9843412669 9791123059 7305172352

பெறுநர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,

தலைமைச் செயலகம்,

சென்னை.

உரிய வழியாக:

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

தூத்துக்குடி மாவட்டம்,

தூத்துக்குடி.

தேதி:12.12.2022

பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு,

நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே.22 & 23, 2018

நாட்களில் நடந்த அமைதி வழிப் போராட்டத்தில், காவல்துறையால் 13 பேர்

சுட்டும், 2 பேர் அடித்தும் கொல்லப்பட்டனர். துப்பாக்கிசூட்டில் காவல்துறை

அத்துமீறல் இருந்ததா? என்பதை விசாரிக்க கடந்த அதிமுக அரசால்

நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி. அருணா ஜெகதீசன் ஆணையம்

கடந்த மே-18 ல் தமிழக அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.



ஆணையத்தின் அறிக்கையை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக தாங்கள் கூறினீர்கள்.

ஆணைய அறிக்கை மீது, கடந்த 18-10-2022-ல் தமிழக சட்டமன்றத்தில்

நிகழ்ந்த வாதத்தின் போது தாங்கள் "துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட

அனைவரும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவார்கள்” என்று உறுதியளித்தீர்கள்.

தூத்துக்குடி-தமிழக மக்களும், பிஜேபி தவிர்த்த அனைத்து கட்சிகளும் தங்களின்

உறுதிமொழியை பெரிதும் வரவேற்றனர்.

ஆனால் 17-10-22 அன்று தங்களது அரசால் வெளியிடப்பட்ட G.O.No.SS

11/320-16/2022 அரசாணையில், அமைச்சரவை முடிவுப்படி, ஆணையத்தின்

பரிந்துரையில் துறை ரீதியான நடவடிக்கை மட்டும் ஏற்றுக்கொள்வதாக

கூறப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும்

உண்டாக்கியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ற வேலை,

வேலை வாய்ப்பு & வெளிநாடு செல்ல வழக்குத்தடை நீக்கம், ஸ்டெர்லைட்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும் தலைவர்கள் மீதும் பதியப்பட்ட

வழக்குகள் வாபஸ், சட்ட முரணாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு

ரூ.1,00,000/-நிவாரணம் உட்பட பல்வேறு பொருத்தமான துயர்துடைக்கும்

பணிகளை செவ்வனே செயல்படுத்தி உள்ளீர்கள். இன்றுவரை ஸ்டெர்லைட்டை

திறக்க விடாமல் தடுத்து வருகிறீர்கள்.

துறை ரீதியிலான

குற்ற நடவடிக்கையும்,

கொன்றவர்கள் மீதான

நடவடிக்கையும் ஆணைய அறிக்கை வந்தவுடன் தமிழ்நாடு அரசு எடுக்கும் என

எதிர்பார்த்தோம். 

தாங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மக்களை

படுகொலை செய்தவர்கள் எந்த உயர் பொறுப்பில் இருந்தாலும் குற்றவியல்

நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் எனவும், கடந்த அதிமுக அரசின்

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை பலவீனமானது என்றும் தாங்கள்

ஆட்சிக்கு வந்த பின்பு சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நிரந்தரமாக

அகற்றப்படும் என்றும் உறுதியளித்து இருந்தீர்கள்.

தங்களின் வாக்குறுதியை உண்மையானது, சரியானது, உறுதியாக

நடைமுறைக்கு வரும் என்று ஏற்றுக்கொண்டோம். ஆனால், தற்போது கொலை செய்த போலீசார் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பது தூத்துக்குடி மக்களை

அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

எனவே, சட்டப் பேரவையில் தாங்கள் "தவறு செய்தோர் குற்றவாளிக்

கூண்டில் ஏற்றப்படுவார்கள்" என்ற உறுதிமொழியை அமல்படுத்த,

அமைச்சரவையை மறுபடியும் கூட்டி உரிய ஆலோசனை செய்து மேற்படி

அரசாணையை திரும்பப் பெற்றோ அல்லது திருத்தம் செய்தோ துப்பாக்கிச் சூடு

நடத்தி மக்களை கொன்ற போலீஸார் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள்

மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டியும், சிறப்பு சட்டமியற்றி

ஸ்டெர்லைட்டை அகற்றி, நீதியை நிலைநாட்டிட வேண்டுமென்றும் தங்களை

மிகுந்த நம்பிக்கையோடு தூத்துக்குடி மற்றும் தமிழ்நாடு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு

கூட்டமைப்பு

இடம்: தூத்துக்குடி



வியாழன், 27 அக்டோபர், 2022

தூத்துக்குடியில் புதிய தலைமுறை இளசுகள் லவ்வர்ஸ்களை கவர்ந்திழுக்கும் செல்ஃபி பாயிண்ட் முதன் முதலில் கனிமொழி எம்.பி. தனது செல்போனில் செல்ஃபி எடுத்து குஷி மேலும் படிக்க..

 தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம்

பிறந்து 37வருடம் கடந்த வாரம்

கொண்டாடப்பட்டது.




இதையொட்டி

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரிய சாமி தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி யாக

உயர்ந்த மாநகராட்சி தூத்துக்குடி யின்

பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை

மேற்கொண்டு வருகின்றார்.



தூத்துக்குடி யில் புதிய தலைமுறை

இளைஞர் இளைஞிகளை கவரும்

வண்ணம் அவரவர் தூத்துக்குடியின்

அடையாளத்தை தங்கள் செல்போன்

முலம் போட்டோ எடுத்து மகிழ்ச்சி

பெறவும் வெளியூர் ல இருந்து

வருபவர்கள் தூத்துக்குடி வந்ததன்

நினைவாக புகைப்படங்கள்

செல்போனில் எடுத்திட "நம்ம தூத்துக்குடி "

என பிரம்மாண்டமாக தமிழில் எழுத்து வடிவில்  தூத்துக்குடி

மாநகராட்சி சார்பில்

தூத்துக்குடி முன்றாம் கேட் மேம்பாலம்

ஜெயராஜ் சாலையில் வண்ணகலரில்

வடிவமைப்பு செய்துள்ளார்கள். 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் செல்லும் (மேம்பாலம்) வழியில் அமைந்திருக்கிறது.

அதை தற்போது குழந்தைகள் மற்றும் இளசுகள் தூத்துக்குடி செல் : பிபாயிண்ட் என அழைக்கிறார்கள்.

Video

தூத்துக்குடிக்கு வெளியூர் இருந்து வருபவர்கள் தூத்துக்குடி வந்ததன்

நினைவாக புகைப்படங்கள் இங்கே

செல்போனில் எடுத்து செல்கிறார்கள்


நம்ம தூத்துக்குடி செல்ஃபி பாயிண்ட்

நம்ம ஊரு அடையாளம்

நம்ம ஊரு தூத்துக்குடி மாவட்ட எம்.பி

கனிமொழி முதன் முதலில் அங்கு வந்து

தனது செல்போனில் செல்ஃபி 

எடுத்து குஷியானார்


இதனை தொடர்ந்து தூத்துக்குடி

பொதுமக்கள் மட்டுமல்ல

சுற்றுலா

வருபவர்களும் லவ்வர்ஸ் களுக்கும் கூட

செல்போனில் செல்பி இது மகிழ்ச்சியை

தந்திருக்கிறது என்றால் மிகையல்ல..?




வெள்ளி, 21 அக்டோபர், 2022

பகைவன் குறும்படம் வெளியீடு

சமுகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பகைவன் என்ற பெயரில் குறும்படம் தூத்துக்குடியில் வெளியீடு செய்தார்கள்.



இதுபற்றிய செய்தியாவது -

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆடிட்டோரியத்தில்... இன்று 21-10-2022 காலை 10 மணியளவில் வானம் எண்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள.."பகைவன்" என்கிற விழிப்புணர்வு குறும்படம்

 தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் G.சிவக்குமார் உறைவிட மருத்துவர் டாக்டர் சைலேஸ் ஆகியோர் வெளியீட்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 

 இந்த நிகழ்ச்சியில்... 

நெஞ்சக பிரிவு மருத்துவர்கள்.., மற்றும்,

குறும்பட இயக்குனர் S.அருந்ததிஅரசு, இணை இயக்குனர் கி.ம.சங்கர்..,

இசையமைப்பாளர் சீலன் சுருதி,

தூத்துக்குடி மாவட்ட மகாத்மா காந்தி கூட்டுறவு சங்க தலைவர் 

 P. கணேசன்,

இந்து துவக்க பள்ளி செயலர்

மு.வெற்றிவேல்,

அறம் அறக்கட்டளையின் பொறுப்பாளர் 

S. பால்ராஜ் ,

கலையின் குரல் P.சக்திவேல்

படத்தின் தயாரிப்பாளர் M.E.மாரிமுத்து,

உதவி இயக்குனர்கள்

S.ஆத்விக்,

V.தங்கராஜ் 

மற்றும்

மருத்துவ கல்லூரி மாணவர்கள் 

கலந்து கொண்டனர்.

திங்கள், 17 அக்டோபர், 2022

தூத்துக்குடியில் அதிமுக ஒபிஎஸ் அணி சார்பில் ஏசாதுரை தலைமையில் அஇஅதிமுக 51 -வது துவக்க விழா கொண்டாட்டம்

தூத்துக்குடியில் அதிமுக  ஒபிஎஸ் அணி சார்பில் ஏசாதுரை தலைமையில் அஇஅதிமுக 51 -வது துவக்க விழா கொண்டாட்டப்பட்டது.



இதுபற்றிய செய்தியாவது -

கடந்த 1972அக்டோபர் 17 ல் திமுக வை விட்டு விலகி புரட்சி தலைவர் எம்ஜிஆர் தனது ரசிகர்களுடன் அஇஅதிமுக கட்சியை ஆரம்பித்தார்.

இன்று 2022அக் 17 ல் 51 வது துவக்க விழா கொண்டாடப்படுகிறது 

இதுபற்றிய செய்தியாவது:-

மறைந்த‌ நிரந்தர பொதுச் செயலாளர்மாண்புமிகு ஜெயலலிதா 

நல்ஆசியுடன்

ஒருங்கினைப்பாளாரும்பொருளாளரும்முன்னாள்முதல்வருமான  ஓ. பன்னீர்செல்வம்  ஆணைக்கிணங்க

S. ஏசாதுரை மாவட்டMGR  மன்ற மாவட்ட செயலாளர் தலைமையில் இன்று அதிமுக கழகத்தின் 51 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

இதை  முன்னிட்டு தூத்துக்குடி யில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் திருவுரு சிலைக்கு பாலாபிஷேகம் செய்து ரோஜாக்கள் மாலையணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி விழா சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி யில் நகராட்சி வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை தருவை மைதானம் எம்ஜிஆர் சிலை சத்திரம் எம்ஜிஆர் சிலை ஆகிய இடங்களில் ஏசாதுரை தலைமையில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பொதுமக்கள் இடம் தெரிவித்துக் கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

 V. T தங்கம் Ex வட்டச் செயலாளர் அந்தோணி செல்வராஜ் வடக்கு பகுதிMGR மன்ற செயலாளர்

உமா கண்ணன் Ex mc முன்னாள் மாவட்ட கழகஇனைச்செயலாளர்

கமலக்கண்ணன் ex MC

கப்பல் ராஜன் தொழிற் சங்க தலைவர்

KS செல்லத்துரை மேற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர்

N. ரமேஷ் மேற்கு பகுதிMGR மன்ற துணை செயலாளர்

லட்சுமணன் வடக்கு பகுதிMGR மன்ற துணை செயலாளர்

மட்டக்கடைமகேஷ்வரன்

லோகுகணேசன் தெற்கு பகுதி துணை செயலாளர்

மணிகண்டன் வட்டப் பிரதிநிதி கிஷோர் ஓட்டுனர் அணி செயலாளர்

சுதாகர் வட்டச் செயலாளர்

முத்து பட்டன் வட்டப் பிரதிநிதி ரமேஷ் மத்திய வடக்கு பகுதி இளைஞர் பாசறை செயலாளர் MS மாடசாமி அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணை செயலர் ஜெயபால் காமாட்சி வட்டச் செயலாளர்

பேச்சியம்மாள் மேற்கு பகுதி துனை செயலாளர் மாப்பிள்ளயூரணி கருணாகரன்

சாமுவேல் கிழக்கு ஒன்றிய பொருளாளர்

மோகன்ex வட்டச் செயலாளர் ஸ்ரீவைஜெயராமன்அம்மாபேரவை

முரளி வட்டச் செயலாளர்

தர்மராஜ் பகுதி

Y சபிக்குமார் மத்திய வடக்கு பகுதி மாணவரணி

அப்துல்லாஹசன்

சிங்கத்துரை குலாம் வட்டப் பிரதிநிதி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

வெள்ளி, 14 அக்டோபர், 2022

அ.இ.அதிமுக 51வது ஆண்டு தொடக்க விழா‌ தூத்துக்குடியில் அதிமுக வினர் அனைவரும். வெகு விமர்சையாக கொண்டாடிட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வேண்டுகோள்

 2022 அக்டோபர் 17ல் அ.இ.அதிமுக 50வது ஆண்டு பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழா ஆரம்பமாகிறது.



தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து இடங்களிலும் 51-வது ஆண்டு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடிட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...


புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 50ஆண்டுகள் பொன்விழாவை நிறைவு செய்து வரும் 17/10/2022 திங்கட்கிழமை அன்று 51வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாண்புமிகு கழக இடைக்கால பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  ஆணையின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்ட கழகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகள் மற்றும் ஒன்றிய கழகத்திற்குட்பட்ட அனைத்துக் கிளைக் கழகங்கள் மற்றும் சிற்றூர்களில் அனைத்து இடங்களிலும் புதிய கழக கொடியை ஏற்றியும், அவ்விடத்தில் கழகத்தின் கொள்கை பாடல்களை ஒலி பெருக்கி மூலம் ஒலிக்கச் செய்தும், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கழகத்தின் 51வது ஆண்டு விழாவை கழகத்தினர் வெகு விமர்சையாக கொண்டாடிட வேண்டும்.


 இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய, நகர, மாநகர பகுதி, நகராட்சி மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் செய்திடுமாறும் தங்களை இதன் மூலம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


மேலும், அக்டோபர் 18, செவ்வாய் கிழமை அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தூத்துக்குடி பாளை ரோடு வி.வி.டி சிக்னல் அருகே எம்.ஜி.ஆர் திடலில் வைத்து மாலை 5 மணிக்கு மாபெரும் கழக ஆண்டு விழா பொதுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது .


இதில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ பி.ஜி.ராஜேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் எ.கே.சீனிவாசன், தலைமைக் கழக பேச்சாளர்கள் எஸ்.ஜீவா கணேசன், தீப்பொறி அப்பாதுரை ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்..





வியாழன், 1 செப்டம்பர், 2022

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை நீங்கியது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து லட்டு வழங்கி மகிழ்ச்சி தெரிவிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை நீங்கியது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட  அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து லட்டு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார் அதன் பின்னர் சங்கராமேஸ்வர் கோவிலில் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.



இது பற்றிய செய்தியாவது:- 

ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து - அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு.


தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி மேல் முறையீடு செய்திருந்தார்.


கடந்த 25 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த பின், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் தற்போது தீர்ப்பு.


ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து  செய்து 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு.


அதிமுக பொதுக்குழு செல்லும் என நீதிபதிகள் அறிவிப்பு.

 இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் பழனிச்சாமி எதிராக வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்பு செல்லாது என உத்தரவிட்டதை தொடர்ந்து அதனைக் கொண்டாடும் விதமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு இதனை கொண்டாடும் விதமாக அதிமுக திரண்டு வந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார் .




இந்த நிகழ்ச்சி யில் அமைப்பு செயலாளர் ஓட்டுனர் அணி பெருமாள் சாமி.மாநில எம்ஜிஆர் மற்ற இனைசெயலாளர் டாக்டர் ராஜசேகர் மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் மாவட்ட அதிமுக அவை தலைவர் திருபாற்கடல்  துனைசெயலாளர் செரீனா மாவட்ட எம்ஜிஆர் மாவட்ட இனைசெயலார் சத்யா இலெட்சுமணன் சார்பு அணி நிர்வாகி யூ எஸ் சேகர் அருண் ஜெயக்குமார் விக்கி தனம்  டாக்ராஜா பிரபு முனியசாமி கோமதி மணிகண்டன் முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸி முன்னாள் சேர்மன் இரா ஹென்றி மாமன்ற உறுப்பினர் வெற்றி செல்வன் மந்திரமூர்த்தி பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் நட்டார் முத்து பொன்ராஜ் மற்றும்   கே ஏ சி ராதா ஜெயக்குமார் அய்யாதுரை தீப்பொறி முருகேசன் இலக்கிய அணி நடராஜன் ஜாக்சன் தேவராஜ் முத்துமதி அரசு போக்குவரத்து தூத்துக்குடி மண்டல செயலாளர் கல்விகுமார் தூத்துக்குடி மண்டல துணை தலைவர் பார்வதி பொன்சிங்  தொப்பை கணபதி இனைசெயலாளர அமைப்பு செயலாளர் ஓட்டுநர் துணை செயலாளர் சி பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர் 

தமிழகம் முழுவதும் அதிமுக வினர் இந்த தீர்ப்பு வரவேற்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.


 

வியாழன், 28 ஜூலை, 2022

வெள்ளைக்கார கொடுங்கோலன் ஆஷ் நினைவு மண்டப பணிகளை உடனடியாக நிறுத்த கோரி தூத்துக்குடியில் இந்துமுன்னணி போராட்டம்

 தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பீச் ரோடு சார் ஆட்சியர் அலுவலகத்தின் வடபுறம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இந்திய விடுதலைக்கு போராடிய வ.உ.சி, வாஞ்சிநாதன், சுப்பிரமணியசிவா உள்ளிட்ட இந்திய சுதந்திர போராட்ட வீர்களுக்கு எதிராக செயல்பட்ட  ஆஷ் மணிமண்டபம் மாநகராட்சி சார்பில் புனரமைக்கப்படுவதை நிறுத்த கோரி இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார் தலைமையில், 

இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா

 மாநில செயலாளர் கா. குற்றாலநாதன் ,மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சக்திவேலன் ஆகியோர் முன்னிலையில் 

இந்து முன்னணியினர் தூத்துக்குடி பழைய மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள வ உ சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.




பின்னர் மாநகராட்சி ஆணையரிடம் பாதை யாத்திரையாக சென்று மனு கொடுக்க செல்ல முயன்றனர். அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.


பின்னர் அங்கிருந்து போலீசாரால் வேனில் ஏற்றப்பட்டு மாநகராட்சி அலுவலகம் சென்று மாநகராட்சி ஆணையாளர்  சாரு ஸ்ரீ சந்தித்து மனு அளித்தனர்


இதில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து மாவட்ட செயலாளர் ராகவேந்திரா,சிவலிங்கம்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் பலவேசம்,சரவணகுமார்,மாரியப்பன்,நாராயண ராஜ், ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் மாரியப்பன்,ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் சிபு,,சுடலை செல்வம், ராஜா, செல்வம் ,மேற்கு மண்டல பொறுப்பாளர் சுடலை,கவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் நெல்லை சுடலை, விமல், சுரேஷ், சங்கர்,சேவாபாரதி மாநிலச் செயலாளர் வெண்ணிமலை,பிராமண சங்கம் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்

திங்கள், 25 ஜூலை, 2022

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் திருவிழா கொடியேற்றம்

  இன்று 26-7-2022 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் திருவிழா இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.


தூத்துக்குடி பனிமய மாதா 


தூத்துக்குடியில் அமைந்து உள்ள பிரசித்திபெற்ற தூய பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 5-ம் தேதி வரை நடைபெறும். அதன்படி 440-வது ஆண்டு பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து காலை 6.45 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை பிஷப் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார். 


விழாவில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன், ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா மற்றும் பாதிரியார்கள், பேராலய நிர்வாகிகள், மற்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொடியேற்றம் நிகழ்ச்சியில் கலந்து கொணடார்கள்.


  

வெள்ளி, 8 ஜூலை, 2022

பொதுசெயலாளர் எடப்பாடி யார் தூத்துக்குடி அதிமுகபரபரப்பு போஸ்டர்

 அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி யார் தூத்துக்குடி பரபரப்பு போஸ்டர் அதிமுகவினர் ஒட்டியுள்ளார்கள்.




இது பற்றிய செய்தியாவது -

தூத்துக்குடி மாநகரில் இன்று 08- 07-2022 எம் ஜி ஆர் ரசிகர்கள் அதிமுக முத்த உறுப்பினர்கள் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் ஒற்றை தலைமை தான் அதிமுக வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்து தூத்துக்குடி மாநகர எங்கும் பரபரப்பாக வால் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்கள்.


ஏற்கனவே இந்த பரபரப்பு சுவரொட்டி ஒட்டிய ...


எம்.ஜிஆர் ரசிகர்கள் முத்த அதிமுக உறுப்பினர்கள் தூத்துக்குடி முத்துமணி அரங்கில் நடத்திய கூட்டத்தில் கடந்த 2022ஜூன் 25 அன்று தொடர்ந்து அதிமுக கட்சிக்கும் மற்றும் ஒற்றுமையாய் செயல்படாமல் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சித்து வரும் ஒ பன்னீர் செல்வத்தை  கட்சி விட்டு நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


வெள்ளி, 6 மே, 2022

39 வது வணிகர் தின விழா - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இளைஞர் அணி சார்பாக மரகன்றுகள் நட்டனர்.

 வணிகர் தினத்தை முன்னிட்டு (5.5.22) தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, தூத்துக்குடி மாநகராட்சி உடன் ALL CAN TRUST இணைந்து தூத்துக்குடி பாளை ரோடு MGR பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன..




இளைஞர் அணி தெர்மல் ராஜா -க்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.


தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி , மாநகராட்சி கமிஷனர் திருமதி. சாருஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..




39 வது வணிகர் தினத்தை முன்னிட்டு சுதேசி நாயகரும், வணிகர்களின் ஒரே  பாதுகாவலருமான  த.வெள்ளையன் ஆணைக்கிணங்க (5.5.22) தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை இளைஞர் அணி சார்பாக தூத்துக்குடி பாளை ரோடு MGR பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன..


விழாவிற்கு தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பழரசம் பா.விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். பிரையன்ட் நகர் வியாபாரிகள் சங்க தலைவர் மார்க்கஸ்,  3வது மையில் வியாபாரிகள் சங்க தலைவர் இசக்கிராஜா, மில்லர் புரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தசேகரன், அண்ணா நகர் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயமுருகன், பாளை ரோடு வியாபாரிகள் பாதுகாப்பு வியாபாரிகள் சங்க தலைவர் பாக்கியா சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.


தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி , மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ , மாநகராட்சி நல அலுவலர் Dr.அருண்குமார், மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ஸ்டாலின், அரசு குற்றவியல் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் N.T.முருகன்,   ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தபால் தலை வெளியீடு


விழாவில் அனைத்து கிளை சங்க இளைஞர் அணி உறுப்பினர்கள் , ALL CAN TRUST உறுப்பினர்கள், வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த கிளை சங்க பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



விழா ஏற்பாடுகளை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல்.சொ.ராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் நவமணி, துணை தலைவர்கள் செபஸ்தியான், காளித்துரை, துணை செயலாளர்கள் விக்னேஷ் , செல்வராஜ் ஆகியோர்  செய்திருந்தனர்.


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ( இளைஞர் அணி )

வியாழன், 5 மே, 2022

தூத்துக்குடியில் மதிமுகவின் 29வது ஆண்டு துவக்க விழா மதிமுக கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்..

 தூத்துக்குடி லீக்ஸ் 06-05-2022


மதிமுகவின் 29வது ஆண்டு துவக்க விழா :தூத்துக்குடியில் மதிமுக  கட்சியினர் .கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்கள்,

29வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக வாழ்வாதாரங்களுக்காவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் சமரசமின்றி உழைக்கும் என அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் மதிமுகவினரால் 29 ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகரம் மதிமுக சார்பில் பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அலுவலகத்தில் மதிமுக கொடியேற்றும் நிகழ்ச்சி மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் நடைபெற்றது.



இதில் மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், மாநில தொண்டரணி துணை செயலாளர் பேச்சிராஜ், எம்எல்எப் மாநில பொருளாளர் அனல் செல்வராஜ், மாவட்ட மீனவர் அணி செயலாளர் தொம்மை, மாநகர பொருளாளர் செல்லப்பா, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், வட்ட செயலாளர்கள் பொன்ராஜ், குமார், எம்எல்எப் தூத்துக்குடி அனல்மின் நிலைய திட்ட செயலாளர் எபனேசர் தாஸ், வட்ட செயலாளர் செல்வராஜ், மாநகர அவைத்தலைவர் செந்தாமரைக் கண்ணன், எம்எல்எப் மாநிலச் செயலாளர் சுப்பிரமணியன், பாண்டி உள்ளிட்ட மதிமுகவினர் பலர் கலந்து கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை வாழ்த்தி கோஷங்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

புதன், 27 ஏப்ரல், 2022

முன்னாள் அமைச்சர் S.P.சண்முகநாதன் மாவட்ட செயலாளர் ஆக தேர்வு தூத்துக்குடி யில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவிப்பு.




அஇஅதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியானது. 




இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஆக எஸ்.பி.சண்முகநாதன் தேர்வு அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

அத்துடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் உடன்  மனு தாக்கல் செய்த அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக தலைமை அறிவிப்பு தொடர்ந்து தூத்துக்குடி அதிமுகவினர் ஏராளாளமானோர் திரண்டு வந்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையப் பகுதியில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.

பட்டியல் விவரம் - தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள்


மாவட்ட அவை தலைவர் S.திருப்பாற்கடல், M.A., L.L.B, 

மாவட்ட செயலாளர்

S.P. சண்முகநாதன் 

(முன்னாள் அமைச்சர்)

மாவட்ட இனை செயலாளர் 

செரினா சி.த. பாக்கியராஜ், B.A., 

மாவட்ட துனைசெயலாளர்

 S. வசந்தா, B.A., 



மாவட்ட N  துப்செயலாளர்கள் 

A. சந்தனம் 

மாவட்ட பொருளாளர்

அமலி T. ராஜன் 


பொதுக்குழு உறுப்பினர்கள்

 K. ஜான்சி (தூத்துக்குடி தொகுதி)

 M.அய்யாத்துரைப்பாண்டியன் (ஸ்ரீவைகுண்டம் தொகுதி)

 M.ராஜேஸ்வரி ( திருச்செந்தூர் தொகுதி)



திங்கள், 31 ஜனவரி, 2022

தூத்துக்குடி மாநகராட்சி மன்ற தேர்தல் திமுக வேட்பாளர் பட்டியல் கூட்டணி கட்சிகளுக்கு 11 சீட் 59வது வார்டில் திமுக போட்டி யிட வில்லை

 தூத்துக்குடி மாநகராட்சி மன்ற தேர்தல் திமுக வேட்பாளர் பட்டியல் வெளிவந்தது 

9,11,23,25,34,,35,38,43,44,48,59, ஆகிய வார்டுகளுக்கு கட்சிகூட்டணி வேட்பாளர் கள் நிறுத்தப்படுவதால் அதுகுறித்து பொது செயலாளர் துரைமுருகன் முழுமையாக அறிவிப்பு செய்யவில்லை.


பட்டியல் வரிசை விடுபட்ட குழப்பம் திமுக கட்சி கவுன்சிலர் கள் வேட்பாளர் மத்தியில் தாங்கள் லிஸ்ட் டில் இருக்கிறோராமா ? பரபரப்பு தெரிகிறது.

 

முக்கியமாக 59வது வார்டு பகுதியில்அதிமுக வி ஐ பி மேயர் வேட்பாளர் ஆக எஸ்பி எஸ் ராஜா நிற்கிறார் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் யார்  திமுக தரப்பில் நிறுத்த வில்லை கூட்டணி கட்சி போட்டியிடும் என தெரிகின்றது. இன்னும் வேட்பாளர் அறிவிப்பு வரவில்லை 




1️⃣ வது வார்டு

சி.காந்திமணி


2️⃣ வது வார்டு

எம். சங்கீதா


3️⃣ வது வார்டு

ஆர். ரெங்கசாமி


4️⃣வதுவார்டு

எம்.எஸ். நாகேஸ்வரி


5️⃣ வது வார்டு

எ. அந்தோணி பிரகாஷ் மார்சலின்


6️⃣வது வார்டு

க. ஜெயசீலி


7️⃣வது வார்டு

தொ. நிர்மல்ராஜ்


8️⃣வது வார்டு

எம். பவானி மார்ஷல்


9️⃣வது வார்டு


⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

கட்சி கூட்டணி இன்னும் தேர்வு செய்யாமல் பெயர் விவரம் வெளிவரவில்லை



1️⃣0️⃣வது வார்டு

எஸ். சந்தனமாரி


1️⃣1️⃣வது வார்டு ல்


⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

கட்சி கூட்டணி இன்னும் தேர்வு செய்யாமல் பெயர் விவரம் வெளிவரவில்லை



1️⃣2️⃣வது வார்டு

எஸ். தெய்வேந்திரன்


1️⃣3️⃣வது வார்டு

எஸ். ஜாக்குலின் ஜெயா


1️⃣4️⃣வது வார்டு

எம். முருகேசன்


1️⃣5️⃣வது வார்டு

வி. இசக்கிராஜா


1️⃣6️⃣வது வார்டு

பா. கண்ணன்


1️⃣7️⃣வது வார்டு

த. ராமர்


1️⃣8️⃣வது வார்டு

த. ஸ்ரீனிவாசன் (எ) ஜான்


1️⃣9️⃣வது வார்டு

செ. சோமசுந்தரி 


2️⃣0️⃣வது வார்டு

ஜெகன் பெரியசாமி



2️⃣1️⃣வது வார்டு

எம். ஜான்ஸிராணி


2️⃣2️⃣வது வார்டு

தி, மகேஸ்வரி


2️⃣3️⃣வது வார்டு


⁉️⁉️⁉️⁉️⁉️

கட்சி நிற்க கூட்டணி இன்னும் தேர்வு செய்யாமல் பெயர் விவரம் வெளிவரவில்லை



2️⃣4️⃣வது வார்டு

டி. மெட்டில்டா


2️⃣5️⃣வது வார்டு

⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

கட்சி கூட்டணி இன்னும் தேர்வு செய்யாமல் பெயர் விவரம் வெளிவரவில்லை




2️⃣6️⃣வது வார்டு

சு. மரியகீதா


2️⃣7️⃣வது வார்டு

ஆர். சரண்யா


2️⃣8️⃣வது வார்டு

ஜெ. முத்துமாரி


2️⃣9️⃣வது வார்டு

தி. கலைச்செல்வி



3️⃣0️⃣வது வார்டு

ர. அதிஷ்டமணி


3️⃣1️⃣வது வார்டு

எஸ்பி. கனகராஜ்


 3️⃣2️⃣வது வார்டு

கோ. கந்தசாமி


3️⃣3️⃣வது வார்டு

எம். பொன்னப்பன்


3️⃣4️⃣வது வார்டு

⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

கட்சி கூட்டணி இன்னும் தேர்வு செய்யாமல் பெயர் விவரம் வெளிவரவில்லை




3️⃣5️⃣வது வார்டு


⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

கட்சி கூட்டணி இன்னும் தேர்வு செய்யாமல் பெயர் விவரம் வெளிவரவில்லை





3️⃣6️⃣வது வார்டு

ர. விஜயலெட்சுமி


3️⃣7️⃣வது வார்டு

ஜெ. ரூபவல்லி ஜெயசிங்


3️⃣8️⃣வது வார்டு


 ⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

கட்சி கூட்டணி இன்னும் தேர்வு செய்யாமல் பெயர் விவரம் வெளிவரவில்லை




3️⃣9️⃣வது வார்டு

எஸ். சுரேஷ்குமார்


4️⃣0️⃣வது வார்டு

ஜெ. ரிக்டர் ஆர்தர்மச்சாது



4️⃣1️⃣வது வார்டு

பொ. பேபிஏஞ்சலின்



4️⃣2️⃣வது வார்டு

கே. அன்னலெட்சுமி



4️⃣3️⃣வது வார்டு


⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

கட்சி கூட்டணி இன்னும் தேர்வு செய்யாமல் பெயர் விவரம் வெளிவரவில்லை





4️⃣4️⃣வது வார்டு


⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

கட்சி கூட்டணி இன்னும் தேர்வு செய்யாமல் பெயர் விவரம் வெளிவரவில்லை



4️⃣5️⃣வது வார்டு

பிபி. ராமகிருஷ்ணன்



4️⃣6️⃣வது வார்டு

செ. ஜெனிட்டா



4️⃣7️⃣வது வார்டு

எஸ். ரெக்ஸிலின் சூசை அந்தோணி



4️⃣8️⃣வது வார்டு


⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

கட்சி கூட்டணி  இன்னும் தேர்வு செய்யாமல் பெயர் விவரம் வெளிவரவில்லை




4️⃣9️⃣வது வார்டு

வி. வைதேகி



5️⃣0️⃣வது வார்டு

எஸ். சரவணக்குமார்



5️⃣1️⃣வது வார்டு

முத்துராஜ்


5️⃣2️⃣வது வார்டு

ஜெ. ராஜ்மோகன் செல்வின்



5️⃣3️⃣வது வார்டு

எஸ். முத்துவேல்


5️⃣4️⃣வது வார்டு

விஜயக்குமார்



5️⃣5️⃣வது வார்டு

ராஜதுரை



5️⃣6️⃣வது வார்டு

சுயம்பு




5️⃣7️⃣வது வார்டு


எஸ்.சித்திரை புஷ்பம்



5️⃣8️⃣வது வார்டு

பச்சிராஜ்



5️⃣9️⃣வது வார்டு

⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

கூட்டணி கட்சி இன்னும் தேர்வு செய்யாமல் பெயர் விவரம் வெளிவரவில்லை



    6️⃣0️⃣வது வார்டு

ஆ பாலகுருசுவாமி

புதன், 5 ஜனவரி, 2022

கோமான் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டபம் விஷயத்தில் .. வரலாற்று பிழை செய்ய வேண்டாம் ....தமிழக அரசிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை _ வேண்டுகோள் ! .

 தூத்துக்குடி மாநகர ஒட்டு மொத்த மக்களுக்காக, அவர்கள் தாகம் தீர்க்க குடிநீர் கொண்டு வர வேண்டும் என்று அரும்பாடுபட்டு திட்டங்களை நிறைவேற்றியவர் கோமான் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் ஆவார்.





 அன்னார் அவர்கள்  தன் பதவி பலத்தைக் கொண்டு அவரது சந்ததிகளுக்கு சொத்து மற்றும்  பணம் சேர்த்துக் குவிக்கவில்லை. அது போன்ற அற்பத்தனமான ஆசைகளுக்கு சிறிதும் அடிமை படவில்லை.


மாறாக தன்னிடம் இருந்த சொத்துக்களை கூட  பொதுமக்களுக்கு வாரி வாரி வழங்கியுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.


அவ்வாறு அனைத்து பொதுமக்களும் பயன் அடைந்ததில் பழைய நகராட்சிக் கட்டிடம், மூன்றாம் மைல் மையவாடி, வ.உ.சி சந்தை ..... என பட்டியலிட்டு கொண்டு போகலாம்.


தற்போது அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்து விட்டு அதனை தூத்துக்குடியை விட்டு வெளியே வல்லநாட்டில் கட்டப்போவதாக செய்திகள் உலவி வருகின்றன. 

இது உண்மையாக இருந்தால் இது எந்தவிதத்திலும் ஏற்புடையதாக தெரியவில்லை. 


ஊருக்கு, தனது மொத்த சொத்தையும்  மக்கள் நலனுக்காக தானங்கள் செய்தும், நாம் அதன் பயனை அனுபவித்து வந்தும், தற்போது அவருக்கு மணிமண்டபம் கட்ட ஊருக்கு வெளியே வல்லநாட்டிலோ, தூத்துக்குடியில் ஒரு ஒதுக்குப்புறத்திலோ இடம் தீர்மானிப்பது என்பது வரலாற்று பிழையாகவே அமையும்


அந்த வரலாற்று தவறை தமிழக அரசு இழைத்திட  வேண்டாம்  என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கேட்டு கொள்கிறோம்.


சொ.ராஜா B.A.,L.L.B.,

மாநில அமைப்பாளர்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

வெள்ளி, 31 டிசம்பர், 2021

New year ரூ 100 தூத்துக்குடி திமுக கலாச்சாரம் ரூ 100 ருபாய் வாங்க அலைமோதும் பொது மக்கள்

 தூத்துக்குடி லீக்ஸ் - 01-O 1 - 2022

தூத்துக்குடி மாவட்டத்தில்  அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் தங்களது கட்சி தொண்டர்கள் புத்தாண்டு தினம் அன்று நேரில் வாழ்த்து தெரிவிக்க வந்தால் பணம் அன்பளிப்பு உணவு விருந்து வழங்கி தங்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்ஆதரவாளர்களை புத்தாண்டு அன்று சிரித்து பேசி மகிழ்ச்சி கடலில் தள்ளுவார்கள் (தூத்துக்குடி கடற்கரை இருப்பதால்)



ஆனால்? தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் மனறந்த N.பெரியசாமி ரொம்ப வித்தியாசமான மனிதர்  முதலில் தான்  தூத்துக்குடி நகராட்சி ஆனதும் அந்த ஆண்டில் இருந்து பெரியசாமி அவரது வீட்டில் காலையில் கட்சி காரர்களுடன் டேபிள் போட்டு அமர்ந்து விடுவார்கள் அப்பகுதி பொதுமக்கள் வரிசையாக வந்து ரூ 50 ரூ 100 ரூ 200  ரூ 300 கட்சி காரர் வரிசையில் வந்தால் ஏலே இந்தா வச்சுக்கல என உரிமையுடன் 500 ரூபாய் வழங்கிடுவார். அவர் உயிரோடு இருக்கும் காலத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் என்று கலக்குவார்.

காலையில் 7 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் 11 மணி வரை தொடரும் பின்புதான் திமுக கட்சி நிகழ்ச்சிகளுக்கு மா.செ பெரிய சாமி செல்வார். இதனால்  போல் பேட்டை செல்வ விநாயகம் புரம் புது பஸ் ஸாடாண்ட் பகுதி பொதுமக்கள் தி மு க எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான பெரிய சாமி வீட்டு முன் குவிந்து விடுவார்கள் அவரை சந்தித்து ரூபாய் பெற்று செல்வார்கள்.


கடந்த 2017 ஆம் மா.செ பெரிய சாமி இறந்து விட்டார் மறைவையொட்டி  சில வருடங்களாக  Newyear அன்று பொதுமக்கள் பணம் அன்பளிப்பு வழங்க படவில்லை.

அமைச்சர் கீதாஜீவன் வீட்டு முன்பு வரிசையில் அப்பகுதி மக்கள்


தற்போது திமுக அமைச்சர் கீதாஜீவன் (இவர் மாசெ பெரியசாமி மகள் ) 2022 ஜனவரி 1இன்று காலை 8 மணியில் இருந்து போல் பேட்டை பகுதியில் உ ள்ள அவரது வீட்டில் பொது மக்களை வரிசையாக வர சொல்லி ரூ 100 வழங்கினார்.

பணம் பெற ஒட்டமாக செல்லும் பெண்கள் கூட்டம்


அதை போல் திமுக பொது குழஉறுப்பினர் N.P. ஜெகன் பெரியசாமி (இவர் மா.செ. பெரியசாமி மகன்) புது பஸ்ஸா டான்ட் பகுதியில் உள்ள கீதா ஹோட்டல் முன்பு பொதுமக்களை வரிசையாக சந்தித்து ரூ 100 வழங்கினார். ஜெகன் பெரியசாமி.



மகிழ்ச்சியுடன் ... வாங்கி சென்று பொதுமக்களில் பெண் ஒருவர் தூத்துக்குடி எம் பி . கனிமொழி அந்தம்மா  தூத்துக்குடியில் இருந்திருந்தால் ரூ 500 வாங்கி இருக்கலாம் என ஆதங்கபட்டார்கள்.


விரைவில் உள்ளாட்சி தேர்தல் வருகிறது என்பது வெற்றியை தக்க வைக்க எல்லா அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கிட்டாங்க டோய்..?