செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 ஜூலை, 2023

ஓட்டுநர் உரிமம் புதிய வசதி தொடக்கம் – போக்குவரத்து ஆணையர் புதிய உத்தரவு

 தூத்துக்குடி லீக்ஸ்18-7-2023

ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலைப் பெற தமிழக அரசு புதிய வசதியை தொடங்கியுள்ளது. இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார். 



இதன்படி ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், அதை மீண்டும் பெற எப்ஐஆர் பெறத் தேவையில்லை வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தங்கள் கவனக் குறைவால் ஓட்டுநர் உரிமம் தொலைந்து போனால் என்ன செய்வது என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே உள்ளது


பொதுவாக ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், சம்பந்தப்பட்ட நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கு புகார் மனு ஏற்பு சான்றிதழ் அளிக்கப்படும். இதற்கே 15 முதல் 20 நாட்கள் வரை காலதாமதம் ஏற்படும். அதன்பிறகே, அவர் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் புதிய தாக பதிவு செய்ய முடியும். இதன் பிறகு ஆர்டிஓ அந்த ஆவணத்தை சரிபார்த்து ஓட்டுநர் உரிமத்தை வழங்குவார்


இந்நிலையில், தொலைந்து போன ஓட்டுநர் உரிமத்தை பெறும் முறையை எளிமைப்படுத்தி போக்குவரத்து ஆணையரகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது


இணையதளத்தில்..

அதன்படி, தொலைந்துபோன ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக நகல் (டூப்ளிகெட்) உரிமம் பெற http://www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் தொலைந்துபோன ஆவண அறிக்கை (Lost Document Report) என்ற பிரிவில் சென்று பதிவு செய்து, தாங்களே பிரிண்ட் எடுத்துக் கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்*


இதனால் வீண் அலைச்சலை தடுக்க முடியும்.வாகனப் பதிவு சான்று தொலைந்து போனாலும் இதே முறையை பின்பற்றி வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த முறையை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பின்பற்ற வேண்டுமென போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்


இந்த புதிய வசதியால் ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலை எளிதாக பெற முடியும். இதற்காக போலீஸார் சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ள மாட்டார்கள். இந்த ஓட்டுநர் உரிமத்தின் நகல் ஆவணம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே பொருந்தும்

செவ்வாய், 24 ஜனவரி, 2023

மாப்பிள்ளையூரணியில் சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

thoothukudileaks 24-1-2023

photo news by Ravi

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.

இது பற்றிய செய்தியாவது:-

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி அடுத்துள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட கணபதி நகர் பகுதியில் 24 1 20 23 செவ்வாய்க்கிழமை இன்று காலையில் நடைபெற்றது.



கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் ஜோசப் தலைமையில் நடைபெற்ற இந்தமுகாமில்  மாப்பிள்ளையூரணி கால்நடை  உதவி மருத்துவர் வினோத் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகளை அளித்தார்.


 இந்த மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்தல் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல்    தாது உப்பு கலவை வழங்குதல்  கால்நடைகளுக்கு   தடுப்பூசி மற்றும் கோழி களிசல் தடுப்பூசி உள்ளிட்டவை போடுதல் என பல்வேறு சிகிச்சைகள் இங்கே வழங்கப்பட்டன .



இந்த முகாமில் கால்நடை ஆய்வாளர் ஷர்மிலி கால்நடை பராமரிப்பு உதவி அலுவலர் பரமசிவம் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு கலந்து கொண்டனர் வருடத்திற்கு ஒருமுறை இந்த முகாம் நடைபெறும் இந் முகாமில் பங்கேற்ற சிறந்த இடையேறி கன்றுகளுக்கு மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயி மூன்று பேருக்கு சீல்டு வழங்கப்பட்டது.

     இன்று நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் 75 பசுமாடுகளும் 719 வெள்ளாடுகளும் 89 நாய்களும் 250 கோழிகளும் பயன் பெற்றன.


தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை தூத்துக்குடி மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.


இந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் மாப்பிள்ளை யூரணி பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கால்நடைகளை கொண்டு வந்து மருத்துவ முகாமில் பயனடைந்தனர்


சனி, 30 ஏப்ரல், 2022

தூத்துக்குடியில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு கட்டுபடுத்தி குறைத்திட வலியுறுத்தி னர்




அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் ஆணைப்படி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக,பெட்ரோல், டீசல் கேஸ் விலையை கட்டுப்படுத்திட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

இன்று 30.04 .2022 சனிக்கிழமை விவிடி சிக்னல்  திடலில் 11மணியளவில் நடைபெற்றது...



 தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்

M.X.வில்சன் தலைமை தாங்கினார் .

முன்னிலை :

 தயாளன்

 தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்

 பாஸ்கரன் 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்

 பன்னீர்செல்வம்

 ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் 

 பிரபு

இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் 


கண்டன பேருரையாற்றினார்

 N.M.Sவிவேகானந்தன்

 மாநில கொள்கை பரப்புச் செயலாளர்

குரூஸ் திவாகர்

மாநில இளைஞரணி துணைச் செயலாளர்விளக்க உரையாற்றினார்.

இவ் ஆர்ப்பாட்டம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

 ராமகிருஷ்ணன்

 தூத்துக்குடி மத்திய மாவட்ட பிரதிநிதி

 சூசைமுத்து

 மத்தியமாவட்ட பொருளாளர்

 ராஜா

தெற்கு மாவட்ட பொருளாளர்

 சந்திரா

 தூத்துக்குடி மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர்

கேபி செல்வா

 தூத்துக்குடி மத்திய மாவட்ட இளைஞரணி செயலாளர் 

 அந்தோணி துரைராஜ்

 தூத்துக்குடி மத்திய மாவட்ட மாணவரணி செயலாளர் 

 சாமுவேல்

மாவட்ட விவசாய அணி செயலாளர் 

 பாரதி வாசன்

 மாவட்ட வர்த்தக அணி செயலாளர்

 சித்திரவேல்

 தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர்

 அருள்ராஜ்

ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் 

 கண்ணன்

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர்

 அய்யாத்துரை பாண்டியன்

கோவில்பட்டி நகர செயலாளர் 

 சின்னதம்பி

 கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் 

 ஜான் ராஜா 

 சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர்

 சீமான்

 திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர்

 தேவராஜ்

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் 

 லென்ஸின்

ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர்

 அழகேசன்

உடன்குடி ஒன்றிய செயலாளர்

ராஜேந்திரன்விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்

 பகுதி செயலாளர்கள்

கனி ராமன் 

விஜயராஜ் மற்றும் ஏராளமான சமக கட்சி

தொண்டர்கள் கலந்து கொண்டனர்.




வியாழன், 24 மார்ச், 2022

பஸ் பயணிகள் நலன் கருதி ...தமிழக அரசுப் பேருந்துகளை உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகள் வெளியீடு

 தமிழக அரசுப் பேருந்துகளை உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகள் வெளியிட்டுள்ளார்கள்

அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகள் பின் வருமாறு உள்ளது.

 


உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் உணவகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும்படி பராமரிக்க வேண்டும்.


பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கப்பட வேண்டும்.


கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும்.


உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். மேலும் பயணிகளுக்கு கழிவறையில் தண்ணீர் வசதி எப்போழுதும் இருக்கவேண்டும். கழிவறையை கம்பரஷர் மூலம் தான் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் மேலும் பயோ-கழிவறை இருக்க வேண்டும்.



உணவகத்தின் அமைப்பு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் நின்று செல்வதற்க்கு போதுமான இடவசதியுடன் இருக்க வேண்டும். மேலும் பேருந்து நிறுத்தம் செய்யும் இடம் கான்கிரீட் (Concrete) தளமாக அல்லது Pavar Block போட்டிருக்க வேண்டும்.


உணவகம் கட்டாயம் சாலையின் இடது புறமாக மட்டுமே அமைந்திருக்க வேண்டும்.


பேருந்துகள் உணவகத்தில் உள்ளே சென்று வெளியே வருவதற்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது.


பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாக தெரியும்படி உணவகத்தின் இட அமைப்பு இருக்க வேண்டும்.


உணவகத்திற்கு மின் இணைப்பு மற்றும் ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும்.


உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து பகுதிகளிலும் CCTV பொருத்தியிருக்க வேண்டும்.


பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடமைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்.


உணவகத்தில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலைபட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும். 



மேலும் உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் M.R.P., விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்/ M.R.P., விலையை விட அதிகமாக உணவு பொருட்கள் விற்க்கப்பட்டால் உரிமம் இரத்து செய்யப்படும்.


உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு எந்தவொரு இடையூறு தரும் செயல் (அ) புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும்.


பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கும் மற்றும் உணவகத்தில் வாங்கும் பொருட்களுக்கும் கணணி மூலம் இரசீது (Computerised Bill / Cash Bill) கொடுக்கப்பட வேண்டும்.


உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும்.

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

முதுகுளத்தூர் பகுதியில் வாகன சோதனையில் நிற்காமல் சென்றதாக டூவிலரில் வந்த இளைஞரை போலீசார் இரும்புக் கம்பியால் அடித்து கொன்றதாக பரபரப்பு புகார் !!! நியாயம் கிடைக்கும் வரை பிணத்தை வாங்க முடியாது என்று பொதுமக்கள் மறியல் !!!!

 இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா நீர்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் L.மணிகண்டன் (வயது22 )என்பவரை, இரு சக்கர வாகன சோதனை சம்பந்தமாக கீழத்தூவல் காவல் நிலைய அதிகாரிகள் அடித்தே கொன்றுள்ளதாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

போலீஸ் தாக்குதல் பின்பு இறந்த போன மணிகண்டன்


இறந்த போன அவரது உடலை வாங்க மறுத்து இது சம்பந்தமாக அவரது குடும்பத்தினர் காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளனர்.


நியாயம் கிடைக்கும் வரை பிணத்தை வாங்க முடியாது என்று பொதுமக்கள் மறியல் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



சம்பவத்தன்று 04-12-2021 மாலை 4 மணி அளவில் முதுகுளத்தூர் சென்று விவசாயத்துக்கு உரம் வாங்கி வருவதாகச் சொல்லிச் சென்ற மணிகண்டன் அவரது நண்பர் கீழத்தூவல் சஞ்சய் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது கீழ தூவல் காவல் நிலைய காவலர்கள் வாகன சோதனை செய்வதாக மேலச்செவல் கிராமத்தில் வைத்து மேற்படி இருசக்கர வாகனத்தை மறித்தனர் அப்போது நிற்காமல் சென்றதாக கூறி காவல் ஆய்வாளர் லட்சுமியின் உத்தரவின்பேரில் விரட்டி சென்று மணிகண்டனை போலீசார் பிடித்து சென்றார்கள்.


இரவு அதிகாலை(5 12 2021) சுமார் ஒரு மணி அளவில் கல்லூரிமாணவர் மணிகண்டன் இறந்துவிட்டார்

தனது அண்ணன் மணிகண்டன் வாகன சோதனை என்ற பெயரில் போலீசார் இரும்பு கம்பியால் மர்ம உறுப்பில்அடித்தே கொன்று கொலை செய்ததாக கீழ சேவல் ஆய்வாளர் லட்சுமி செந்தில் லட்சுமணன் பிரேம்குமார் கற்பகம் ஐயப்பன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது தம்பி அலெக்ஸ் பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் முதுகுளத்தூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்கள்.






வெள்ளி, 24 செப்டம்பர், 2021

சாதி ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! கடலூர் சாதி ஆணவக் கொலையாளிகளுக்கு தண்டனை நீதிமன்றத் தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

 thoothukudileaks 24.9.2021

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திற்கு அருகில் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 2003ம் ஆண்டு நடைபெற்ற கொடூரமான சாதி ஆணவக் கொலை மற்றும் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை வழக்கில் கடலூர் எஸ்.சி., / எஸ்.டி. நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பையும், தீர்ப்பினை வழங்கிய நீதிபதி  உத்தமராஜ் அவருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.



                பட்டியலின வகுப்பைச் சார்ந்த பொறியியல் பட்டதாரி முருகேசன் என்பவருக்கும், அதே கிராமத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கண்ணகி என்பவருக்கும் காதல் ஏற்பட்டு 05.05.2003 அன்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். கண்ணகியினுடைய உறவினர்கள் இவர்கள் இருவரையும் தேடிக் கண்டுபிடித்து 8.7.2003 அன்று  ஊருக்கு கொண்டு வந்து கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். இருவரையும் பட்டப்பகலில் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று இருவருடைய வாயிலும், காதுகளிலும் விஷத்தை ஊற்றி அதிகாலை 5.30 மணியளவில் படுகொலை செய்து பிணங்களை எரித்து விட்டனர்.


                இத்தகைய கொடுமைகளிலிருந்து தங்களை விடுவித்து விடுங்கள் என அவர்கள் கதறி அழுதது யார் காதிலும் விழவில்லை. எங்களை பிரித்து கண்ணகியை வேறு யாருக்காவது திருமணம் செய்து கொடுத்து விடுங்கள் என்ற முருகேசனின் கதறலையும் செவி மடுக்காமல், ஏராளமானோர் திரண்டு நிற்க, அவர்கள் முன்னிலையில் இளம் தம்பதியினரை கொடூரமாக கொலை செய்து தீ வைத்து கொளுத்திய கொடுமை அரங்கேற்றப்பட்டது.


                இவ்வளவையும் செய்ததோடு காவல்துறையினரின் உதவியை பயன்படுத்தி முருகேசனுடைய தந்தை சாமிக்கண்ணு உள்ளிட்ட நான்கு பேர் முருகேசனை விஷம் கொடுத்து கொன்றதாகவும், கண்ணகியினுடைய சகோதரர் மருதுபாண்டியன் உள்ளிட்ட நான்கு பேர் கண்ணகிக்கு விஷம் கொடுத்து கொன்றதாகவும் பொய் வழக்கு பதிவு செய்து எட்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


                இச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்திடவும்,பொய் வழக்கினை ரத்து செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருத்தாசலம் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டமும், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. முருகேசனுடைய தந்தை சார்பில் வழக்கறிஞர்கள் ரத்தினம் மற்றும் மனித உரிமை அமைப்பைச் சார்ந்தவர்கள் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இவ்வழக்கு 22.04.2004 அன்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.


                தொடர்ந்து வழக்கறிஞருடைய வற்புறுத்தலால் விசாரணையை மேற்கொண்ட சிபிஐ விசாரணை அதிகாரிகள் ஏற்கனவே பதிவு செய்த பொய் வழக்கை ரத்து செய்து கண்ணகியினுடைய உறவினர்கள் 11 பேர் மீதும், பொய் வழக்கு போட்டு வழக்கை திசைதிருப்பவும், சாட்சிகளை மறைக்கவும் உதவி செய்த உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மற்றும் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு, எஸ்.சி / எஸ்.டி வழக்கு பதிவு செய்து சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதிலும் முருகேசனுடைய உறவினரான அய்யாசாமி, குணசேகரன் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்க்கக் கூடாது என்பதை சிபிஐ அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.


                இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக செங்கல்பட்டு சிபிஐ நீதிமன்றத்திலும், கடலூர் எஸ்.சி / எஸ்.டி நீதிமன்றத்திலும் நடைபெற்றது. குற்றவாளிகள் வழக்கை நடத்த விடாமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வந்தனர். சாட்சிகளை கலைப்பதற்கும் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டனர். குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளும் தமது முழு அதிகாரங்களை பயன்படுத்தி சாட்சிகளை மிரட்டி கலைப்பதற்கு முயற்சித்தனர். இவர்களுக்கு அடிபணிந்து சிலர் பிரழ் சாட்சியாகவும் மாறினார்கள். திரு செல்வராஜ் என்ற நேரடி சாட்சி இவர்களின் மிரட்டலால் பணிந்து நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியை அளிப்பதற்கு முதல் நாள் 31.08.2017 அன்று தற்கொலை செய்து கொண்டார். குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மிரட்டலால் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என செல்வராஜின் மனைவி அளித்த புகாரின் மீது விருத்தாசலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போதுமான ஆதாரங்கள் இல்லை என விருத்தாசலம் காவல்துறை வழக்கை முடித்து விட்டது.


                பல தடைகளை கடந்து இன்று (24.09.2021) கடலூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் கண்ணகியினுடைய சகோதரர் மருதுபாண்டியனுக்கு மரண தண்டனையும், மற்ற 11 பேருக்கு கிரிமினல் சதி செய்தது, கொலை செய்தது, வன்கொடுமை இழைத்தது என்கிற அடிப்படையில் மூன்று  ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்து குற்றத்தை மூடி மறைக்க முயற்சித்த போலீசாருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. முருகேசனுடைய உறவினர் இரண்டு பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அனைத்து குற்றவாளிகளுக்கும் தலா ஐம்பதாயிரம் அபராதம் விதித்ததோடு ஏற்கனவே காவல்துறையினரால் பொய் வழக்கு புனையப்பட்டு கைது செய்யப்பட்ட முருகேசனின் உறவினர்கள் 3 பேருக்கு தலா இரண்டு லட்சம் இழப்பீடு  வழங்க வேண்டுமெனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


                சாதிய வன்மத்தோடு நடத்தப்பட்ட ஆணவப்படுகொலை வழக்கு என்பதோடு எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழும் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியதாகும். இவ்வழக்கில் தொடர்ந்து கண்காணித்து உதவிய வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், கோ. சுகுமாறன் உள்ளிட்ட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


                தமிழகத்தில் தொடர்ந்து வரும் இத்தகைய ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்தவும், குற்றவாளிகள் உரிய தண்டனை பெறவும் தமிழக அரசு ஆணவப்படுகொலை தடுப்புக்கென தனி சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென கோருகிறோம். உசிலம்பட்டி விமலாதேவி ஆணவக் கொலை வழக்கில் நீதியரசர் வி.ஆர். சுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டுமெனவும் முன்வைக்கிறோம். மேலும் அடித்தட்டு கிராமப்புற உழைப்பாளி மக்களான பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாதிய மோதல்களில் ஈடுபடாமல் தங்களது வாழ்வாதார பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

(கே. பாலகிருஷ்ணன்)


மாநில செயலாளர்

திங்கள், 6 செப்டம்பர், 2021

முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் மாநில துனை பொது செயலாளராக ஷாஜகான் நியமனம் : காயல் அப்பாஸ் அறிவிப்பு!!!

thoothukudileaks 06-09-2021 1.30pm


மாநில துனை பொது செயலாளராக ஷாஜகான் நியமனம் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்  மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.

ஷாஜகான்


முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் தமிழக மாநில தலைவர் பாத்திமா அலி அவர்களின்  ஓப்புதலோடு திருச்சி, தென்னூர், சின்னச்சாமி நகர், விவேகானந்தர் தெருவை சேர்ந்த எஸ்.ஷாஜகான் இன்று முதல் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் இயக்கத்தின் மாநில துனை பொது செயலாளராக  நியமிக்கபட்டுள்ளார்.


பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் , இயக்கத்தின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் ,  இயக்கத்தின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .


மேலும் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் மாநில துனை பொது செயலாளராக நியமிக்க பட்டுள்ள எஸ். ஷாஜகான் அவர்களுக்கு இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறோம்  . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

புதன், 1 செப்டம்பர், 2021

ஏழை மணப்பெண் பெற்றோர்கள் தமிழக அரசின் அறிவிப்பை பார்த்து அதிர்ச்சி ? மண்டபங்களில் திருமணம் நடந்தால்? திருமண நிதி உதவி இனி கட் ? தமிழக அரசு தடாலடி!!!

தமிழகத்தில் ஏழை பெண்களுக்கு  திருமண நிதி உதவி திட்டம்  மூலம் கடந்த அதிமு க ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த  தமிழக அரசு தாலிக்குதங்கம் நிதியுதவி தமிழக அரசு வழங்கி வந்தது..



தற்போது திமுக ஆட்சி வந்ததும் இது பற்றி தமிழக அரசு  இனி யாருக்கெல்லாம் இந்த திட்டம் பொருந்தும் என விதிமுறைகளை தெரிவித்துள்ளது.


 இதனால் இதுவரை உதவி பெற்று வந்த படித்த ஏழை மணப்பெண் பெற்றோர்கள் தமிழக அரசு தெரிவித்துள்ள நெறிமுறைகளை பார்த்து மிகவும் அதிர்ச்சி அனடந்து போயுள்ளார்கள்.


திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு தாலிக்குத் தங்கம் உதவித்தொகை கிடையாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் உள்ள தகுதியானோருக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போரின்
வீட்டில் யாரும்அரசுப் பணியில் இருக்கக்கூடாது.

வேறு ஏதேனும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்றிருக்கக் கூடாது.

மாடி வீடு - நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழங்கப்படாது.

ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும்.




வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடியில் நான்கு செல்போன் உடன் கீதா கைது!!! இணையதளத்தில் ஜொள்ளு விட்ட 20 ஆண்களிடம் பணம் அபேஸ் !!! திருமணமாகாத கவர்ச்சியான இளம்பெண் போல் பேசி பணம் பறிப்பு !!!!!

தூத்துக்குடி லீக்ஸ்:-  27.08.2021

 தூத்துக்குடியில்  நான்கு செல்போன் உடன்  கீதா கைது செய்யப்பட்டார்.



மணப்பெண் இணையதளத்தில்  ஜொள்ளு  விட்ட 20 ஆண்களிடம் பணம் அபேஸ்?  திருமணமாகாத கவர்ச்சியான  இளம்பெண் போல் பேசி பணம் பறித்துள்ளார்.




இதுபற்றிய செய்தியானது:-  

ஹைதராபாத், செகுந்தராபாத் சாயினிக்பூரி கண்டிகொண்டா பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வாசுதேவன் (34) என்பவர் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். 


இவர் தனக்கு திருமணம் செய்வதற்காக வரன் தேடும் ஒரு திருமண இணையதளத்தில் அழகான  மணப்பெண் தேடியுள்ளார். 


அந்த இணைய தளத்தில் திவ்யா (வயது 28) என்று ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் இருந்த ஐ.டியைப் பார்த்து மேற்படி வாசுதேவன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். 



 எதிர்முனையில் திவ்யா என்ற பெயரிலிருந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார்.


 இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பேசிக் கொண்டுள்ளனர்.

 இந்நிலையில் அந்த திவ்யா என்ற பெண், தன்னுடைய தோழிக்கு அவசரமாக ரூபாய் 40,000/- தேவைப்படுகிறது.



 தனக்கு உடனே அனுப்புமாறு ஒரு வங்கி கணக்கை அனுப்பி வைத்துள்ளார். 


இவரும் அந்த வங்கி கணக்கிற்கு கடந்த 08.07.2021 ரூபாய் 40,000/-ஐ அனுப்பியுள்ளார். 


அதனை தொடர்ந்து மேலும் பணம் தேவைப்படுவதாக ரூபாய் 40,000/-ம் அனுப்புமாறு கூறியதால், திரும்பவும் வாசுதேவன் 04.08.2021 அன்று ரூபாய் 40,000/-ஐ அதே வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். 



இந்நிலையில் மேற்படி வாசுதேவன் அந்தப் பெண்ணிடம், உன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறி விலாசம் கேட்டு, அந்த விலாசத்திற்கு சென்று விசாரித்தபோது அப்படி திவ்யா என்ற பெயரில் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 


இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டதையறிந்த வாசுதேவன் புகார் அளித்தார்.


 அவரது புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  மேற்படி மோசடி குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  இளங்கோவன் அவருக்கு உத்தரவிட்டார்.


 சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன்  தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


 வாசுதேவன் பணம் அனுப்பிய வங்கி கணக்கு முகவரியை விசாரித்தபோது தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியைச் சேர்ந்த தங்கவேலு மனைவி கீதா (36) என்ற பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு...



 அவரை கைது செய்து விசாரித்ததில், இவர்தான் திவ்யா என்ற பெயரில் திருமண இணையதளத்தில் தனது உண்மையான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யாமல் வேறொரு கவர்ச்சியான அழகான பெண்ணின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளதும்,  மேற்படி வாசுதேவனை ஏமாற்றி பணம் மோசடி செய்ததையும்  கீதா ஒப்புக்கொண்டார். 


இதே போன்று 20க்கு மேற்பட்ட நபர்களை ஏமாற்றியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடமிருந்து ஏமாற்றுவதற்கு பயன்படுத்திய 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


இது குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



சனி, 21 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட தாதுமணல் கடத்தல் வி.வி நிறுவனம் செய்தி வெளியிட்ட நாளிதழ்கள் தூத்துக்குடி முழுவதும் கடைகளில் விலைக்கு வாங்கி அள்ளி சென்ற மர்ம நபர்கள்!!! செய்தி வெளியீடு செய்யாத PRO -க்கள்??

 தூத்துக்குடியில் 2021ஆகஸ்ட் 20-ல் அன்று  தூத்துக்குடி 


சிப்காட் வளாகத்தில் உள்ள விவி மினரல்ஸ் டைட்டானியம் ஆலைக்கு இல்மனைட் தாது மணல் ஏற்றி சென்ற 5 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 


தற்போது தனியார் தாது மணல் ஆலைகள் செயல்பட தடை உள்ள நிலையில் இவர்களுக்கு இல்மனைட் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விட்டார்கள்

இச் சம்பவத்தில் விவி நிறுவனத்திற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்திள்ளார்கள்.

கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆய்வு


இச் செய்தி மக்கள் மாவட்ட  PRO -க்கள் செய்தி வெளிடாமல் இருந்தார்கள்

என்ன நடந்தது ? மாவட்ட கலெக்டரும் மாவட்ட எஸ்.பி யும் நேரில் சென்ற தகவல் செய்தி வெளியீடு செய்யவேண்டியது PRO பணி  ?  இதனால் தூத்துக்குடி செய்தியாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து போனார்கள்.

இதேபோல போலீஸ் தரப்பிலும் செய்தி வெளிவரவில்லை.

இதில் செய்தியாளர்களுக்கு வழக்கமாக தகவல் தருபவர்கள் ஏன் இப்படி நடந்துகொள்ளும் அவசியம் என்ன?

இதில் தூத்துக்குடியில் உலவும் பல செய்தி ஊடகம் ஸ்டெர்லைட் பிரச்சினை போல செய்தி வராமல் கள்ள மௌனம் காத்தார்கள். காத்திருப்புக்கு பலன் உண்டு என கருதிவிட்டார்கள்.?

 நேர்நிலையில் உள்ள செய்தி ஊடகங்கள் மட்டும் செய்தியை வெளியிட்டது சபாஷ்!!!


இந்நிலையில் .... ஆகஸ்ட் 21 காலை செய்தி வெளிவந்த தினமலர் தினகரன் இந்து நாளிதழ் அதிலும் குறிப்பாக தினமலர் நாளிதழ் தூத்துக்குடி கடைகளில் விற்பனையாவதற்கு முன்பாக ஒரு சிலர் வந்து மொத்த மொத்தமாக தூத்துக்குடி பஸ்ஸா டாண்ட் மற்றும் பெட்டி கடையில் விலைக்கு வாங்கி அள்ளி சென்றார்கள் தூத்துக்குடி நகர் முழுவதும் பேப்பர் கடைக்காரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்றார்கள்.

தினமலர் செய்தி

தி இந்து நாளிதழ் செய்தி


இன்று தடைசெய்த தாதுமணல் தூத்துக்குடி காவல்துறை யிடம் 9 டன் ஏற்று வந்த லாரி உடன் பிடிபட்டவர்கள்.... செய்தி வரவில்லை பிரபல  ஒன்றிய நாளிதழ்களில் ? 


அதாங்க நடுநிலை நாளிதழ் சொல்லப்படும்...!!! தினதந்தி - மாலைமலர் - மானல முரசு மட்டுமே தூத்துக்குடி  பொதுமக்களுக்கு விற்பனைக்கு கிடைத்தது.




மற்ற நாளிதழ் படிக்க கிடைக்க வில்ல என்பதுதான் தூத்துக்குடியில் பரப்பரப்பு பேச்சு.


புதன், 18 ஆகஸ்ட், 2021

தமிழக சட்டப்பேரவையில் இன்று அசர வைத்த உதயநிதி ஸ்டாலின் எம்.எம்.ஏ பேச்சு!!! சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் முதல் பேச்சு!!! மகளிர் இலவச பஸ் பயணம் செய்பவர்கள் ஸ்டாலின் பஸ் என்றே அழைக்கிறார்கள்!!! மேலும் பரபரப்பாக பேசிய முழுவிவரம்!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது முதல் உரையை ஆற்றினார்.




சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினின் கன்னிப் பேச்சு தெரிவித்தாவது. :-


தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மூவரையும் வணங்கி என்னுடைய கன்னிப் பேச்சை இந்த அவையில் பதிவு செய்கிறேன்.


நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன். இந்தக் குரல் எப்போதோ ஒலித்த குரல் அல்ல. எப்போதும் ஒலிக்கின்ற குரல். இப்போது என்னிடமிருந்து ஒலிக்கின்ற உரிமைக் குரல்.


திராவிடன் என்ற உணர்வை எங்களுக்கு ஊட்டிய தந்தை பெரியார். அந்த உணர்வை அரசியல் கொள்கையாக்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரக்க முழங்கிய பேரறிஞர் அண்ணா. திராவிட இனத்தின்-இயக்கத்தின் தனிப் பெரும் தலைவராக விளங்கி, இந்திய அரசியலுக்கே வழிகாட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்.


கலைஞரின் தோழராக, அண்ணனாக இருந்து இன உணர்வும், திராவிட இயக்க சிந்தனைகளும் கடைக்கோடி கழக தொண்டர்களை சென்றடைய செய்த பேராசிரியர் தாத்தா அவர்கள். இன்னும் எண்ணற்ற திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்த - காக்கின்ற தொண்டர்களுக்கும் என் வணக்கம்.


தலைவருக்குத் தலைவராய்-தொண்டருக்குத் தொண்டராய்-மக்களில் ஒருவராய், தமிழ்நாட்டை நோக்கி ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் திரும்பிப்பார்க்கச் செய்திருக்கும் ‘திராவிட மாடல் ’அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கத்தையும், சட்டமன்ற உறுப்பினராவதற்கு வாய்ப்பளித்து, எனக்காக தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஜெயலலிதா அம்மையார் மறைவுக்கு பிறகு, கழக தலைவர் அவர்கள் நினைத்திருந்தால் என்றோ ஆட்சி அமைத்திருந்திருக்கலாம். ஆனால், ஜனநாயக வழியில் மக்களை சந்தித்து தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தலைவர் அவர்கள் பொறுமை காத்தார்கள்.


முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்த போது, அண்ணா நினைவிடத்துக்கு அருகாமையில் தன்னுடைய நினைவிடமும் அமைய வேண்டும் என்ற கலைஞரின் கடைசி ஆசையை நிறைவேற்ற விடாமல் கூட கடந்த அதிமுக அரசு முட்டுக்கட்டை போட்டது.


அப்போதிருந்த அந்த அசாதாரண சூழ்நிலையை அருகில் இருந்த பார்த்த லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன்.


நம்முடைய கழக தலைவர் அவர்கள் அப்போது ஒரு சிறு கண்ணசைவை காட்டியிருந்தால் கூட அன்று நிலைமை வேறு மாதிரி அமைந்திருக்கும்.


ஆனால், நம் தலைவர் அவர்கள் பொறுப்புமிக்க அரசியல் தலைவராக சட்டப்போராட்டம் நடத்தி, முத்தமிழறிஞரின் கடைசி விருப்பம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை நிலைநாட்டினார்கள்.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொறுமையும் – பொறுப்புணர்ச்சியும் - உழைப்புமே அவரை இந்த இடத்துக்கு அழைத்து வந்திருக்கின்றன.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உழைப்பில், அவரின் பொறுப்பிணர்வில் 1% பெற்றுவிட்டால்கூட போதும், நான் மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பினராகிவிடுவேன்.


நம் முதலமைச்சர் அவர்கள் கடைக்கோடியில் இருக்கிற மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றாலும் சரி, ஒட்டுமொத்த மாநிலத்துக்கே ஒரு பிரச்சினை என்றாலும் சரி, அதற்காக குரல் கொடுத்து அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார்கள்.


உதாரணமாக நாமக்கல்லை சேர்ந்த குழந்தை மித்ராவின் அறுவை சிகிச்சைக்கு ரூ.16 கோடி தேவை என்றதும், அதற்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எல்லோரும் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.


மருத்துவ சிகிச்சைக்கான ஜி.எஸ்.டி தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள்.


அதனடிப்படையில், பலரும் நிதியளித்ததாலும், ஜி.எஸ்.டி ரத்து செய்யப்பட்டதாலும் தற்போது மித்ராவுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.


முத்தமிழறிஞர் காலத்தில் இருந்து, அன்பில் தர்மலிங்கம் தாத்தா, அன்பில் பொய்யாமொழி மாமா அவருக்கு பிறகு இன்று என்னுடைய நண்பனாக, தேர்தல் பணி, கழக பணிகளில் என்னுடன் தோளோடு தோள் நிற்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் எனது நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


எனக்காக தொகுதியில் பணியாற்றிய தோழமை கட்சியை சேர்ந்தவர்களுக்கும், மாவட்டக் கழக பொறுப்பாளர் சகோதரர் சிற்றரசு, பகுதிக் கழக செயலாளர்களான அண்ணன்கள் காமராஜ், மதன்மோகன், வட்டக்கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


ஏற்கெனவே அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றி என்னுடைய பணியை எளிமையாக்கி வைத்திருந்த முத்தமிழறிஞர் கலைஞர், பெரியவர் ரகுமான்கான் அவர்கள், மதிப்புக்குரிய ஜெ.அன்பழகன் அண்ணன் உள்ளிட்டவர்களையும் இந்தத் தருணத்தில் நினைவில்கொள்கிறேன்.


சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நான் கிட்டத்தட்ட 4 அல்லது 5 நாட்களே பிரச்சாரம் செய்தேன். அப்படியிருந்தும் என் மீது முழு நம்பிக்கை வைத்து 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வைத்த என் தொகுதி மக்களுக்கு நன்றி.


மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, என் தொகுதியில் எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமன்றி, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து உழைக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.


தேர்தல் வெற்றிக்கு பிறகு தொகுதி மக்கள் காட்டும் அன்பும், பாசமும் அவர்களில் ஒருவனாகவே என்னை மாற்றிவிட்டது. அவர்களுடைய வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். அவர்கள் வீட்டு பிள்ளையாகவே என்னிடம் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். நான் எப்போதும் அவர்களுக்காக உழைப்பேன் என்று இந்த நேரத்தில் நான் உறுதியளிக்கிறேன்.


இந்த பேரவையில் இங்கு படமாக நிற்கும் நம் கலைஞர் அவர்கள் வழியில், அவர்களது மறுவுருவமாக நம் முதலமைச்சர் அவர்கள் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.



கலைஞர் காட்டிய வழியில் தான் நம் கழக தலைவர் அவர்கள் தலைமையிலான அரசு இந்த 100 நாட்களுக்குள்ளாகவே எண்ணற்ற சாதனைகளை செய்து முடித்துள்ளது.


தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத விஷயங்களை கூட செய்துகாட்டியுள்ளார்.


கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு ரூ.4000 வழங்கும் திட்டம்.


ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு.


மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவச பயணத்திட்டம்.


 மாற்றுத்திறனாளிகள் – திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயண திட்டம்.


உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களை கொண்ட பொருளாதார ஆலோசனை குழு.


 மாநில வளர்ச்சிக்குழுவின் துணை தலைவராக பொருளாதார நிபுணர் அண்ணன் ஜெயரஞ்சன் அவர்கள் நியமனம்.


 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை திட்டம்.


உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் கண்காணிப்பிலேயே செயல்படுத்தியது.


கொரோனா காலத்தில் பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்தது.


 கொரோனாவால் பலியான மருத்துவத்துறையினர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்.


அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான பொருட்கள் கொரோனா கால நிவாரணமாக வழங்கப்பட்டது.


மருத்துவர் - செவிலியர்கள் / தூய்மைப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை.


டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக ஜுன் 12 அன்று மேட்டூர் அணை திறப்பு.


 கடந்த சில ஆண்டுகளாக அதிமுக அரசே, “ இந்தாண்டு ஜுன் 12 அன்று திறக்க வாய்ப்பில்லை” என கையை விரித்த வரலாறுகள் உள்ளன.

 


ஆனால், நம்முடைய கழக அரசு, டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணை இந்தாண்டு ஜுன் 12 அன்று உரிய தேதியில் திறக்கப்பட்டது.


தென் சென்னைக்கென்று தனி உயர் சிறப்பு மருத்துவமனை அறிவிப்பு.



மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்.


இலக்கிய மாமணி விருது, தகைசால் தமிழர் விருது அறிவிப்பு.


தமிழ் எழுத்தாளர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம்.


முத்தமிழறிஞர் கலைஞர் வளர்ந்த திருவாரூர் மாவட்டத்தில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு.


கோவிட் -19 தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி மற்றும் அவர்களின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என உத்தரவு.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்.



கடந்த அதிமுக ஆட்சியின் போது ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அப்பாவி மக்களின் குடும்பத்தாருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை.


பத்திரிகையாளர்கள் மீது அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ்.


விஷன் தமிழ்நாடு திட்டம் மூலம் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு.


 முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு என்ற திட்டத்தின் மூலம் 28,664 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள்.


முக்கியமாக நாடெங்கும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் வண்ணம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டலில் சட்டப்போராட்டம் நடத்தப்பட்டு OBC பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது.


கோவில் சொத்துகள் மீட்பு


 கோவில் சொத்துகளை இணையத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை.


நம் பிள்ளைகளின் மருத்துவராகும் கனவை சிதைக்கும் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பை அறிய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் சிறப்பு கருத்துக்கேட்பு குழு.


இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நாட்டிற்கே முன்மாதிரியாக பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி ரூ.3 ஐ குறைத்தது.


தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் வகையில் 58 பயிற்சிபெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்புகள் என அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம்.


இப்படி பல திட்டங்களை இந்த அரசு இந்த 100 நாட்களுக்குள்ளாகவே செயல்படுத்தி, மாநிலத்தின் நீடித்த, நிலைத்த வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளது.


நிதிநிலை அறிக்கை


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில் மாண்புமிகு நிதியமைச்சர் அண்ணன் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்துள்ள முதல் இ-பட்ஜெட் மாநிலத்தை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்து செல்லவுள்ளது.


நம்முடைய கழக அரசு இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.


இந்த கொரோனா காலத்தில் கற்றல் இழப்பை தவிர்க்கவும், இளம் வயதிலேயே மாணவர்களுக்கு கணினி திறனை அளிக்கவும், 1784 அரசு நடுநிலைப்பள்ளிகளில் ரூ.114.18 கோடி செலவில் உயர் ஆய்வகங்கள், 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 20.76 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதும், நம் மாணவ – மாணவியரின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அளவில் உதவிகரமாக அமையும்.


மேலும், இந்த அரசு தொலைநோக்கு மிக்க அரசு என்பதை உணர்த்துகிற வகையில், 2025-ம் ஆண்டிற்குள், 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும், எழுதவும், அடிப்படை கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்ய ரூ.66.70 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்படுவது போற்றத்தக்கது.


மேலும், உயர்கல்வியை பொறுத்தவரையில், இந்தாண்டு 10 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இதை ஏதோ பெயரளவுக்கு செய்கிறோம் என்றில்லாமல், அவற்றின் தரத்தை உறுதிய செய்ய தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழுவின் தரநிலையை எட்டுவதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பது இந்த அரசு எதையும் வெறும் எண்களாக மட்டும் செய்கிற அரசல்ல என்பதை உணர்த்துகிறது.



இந்த கொரோனா காலத்தில் இணை நோய்களுக்காக மருத்துவமனைகளுக்கு செல்வது என்பதே ஒரு சவாலாக உள்ளது. 



இதை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டே சுட்டிக்காட்டினார்கள்.



இந்த சூழலில், அனைத்து மக்களையும் மனதில் வைத்து மக்களைத்தேடி மருத்துவம் எனும் திட்டம் ரூ.257.16 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் – செவிலியர்கள் வீட்டுக்கே சென்று மருத்துவம் அளிப்பதன் மூலம், தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்பு இன்னும் வலுவாகி மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக திகழும்.

விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்த 108 ஆம்புலன்ஸ் சேவையை இன்னும் அதிகப்படுத்தும் வகையில், 1,303 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூடுதலாக இயக்கப்படும் என்ற அறிவிப்பு, மக்கள் நலன் மீது கழக அரசு கொண்டுள்ள அக்கறைக்கு சாட்சியாகும்.


இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது மிகப்பெரிய விஷயமாக உள்ளது.


இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்ய திறன் பயிற்சி என்பது அவசியமானது என்பதன் அடிப்படையில் கழக அரசு ரூ.60 கோடி செலவில் 15 அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் திறன் மேம்பாட்டு மையங்களை அமைக்கவுள்ளது வரவேற்கத்தக்கது.


 கடந்த ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கே பெருநிறுவனங்கள் அஞ்சின. ஏனென்றால் அந்தளவுக்கு லஞ்சமும், கமிஷனும் தலை விரித்தாடியது. இங்கு லஞ்சம் கொடுத்த காரணத்தால் ஒரு பெரு நிறுவனம் அமெரிக்காவில் அபராதம் கட்டிய நிகழ்வுகள் எல்லாம் இருந்தன.


ஆனால், நமது அரசு முறைகேடுகள் ஏதுமின்றி புதிய தொழில் தொடங்க ஏதுவாக ஒற்றைச்சாளர முறையை பின்பற்றவுள்ளது.


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னையில் 2000-மாவது ஆண்டில் டைடல் பூங்கா அமைத்தார்.


 இந்நிலையில் நம்முடைய அரசு, திருச்சி, திருப்பூர் , வேலூர், மதுரை, தூத்துக்குடி போன்ற முக்கிய  நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கவுள்ளது.


இதன் மூலம் கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்கள் அவரவர்களுக்கு அருகாமையில் உள்ள நகரங்களில் வேலைவாய்ப்பை பெறுகிற வாய்ப்பை பெறுவர். மேலும், வேலைவாய்ப்பு என்பது ஒற்றை நகரத்தில் குவியாமல் மாநிலமெங்கும் பரவலாக்கம் செய்யப்படும் என்பது வரவேற்க்கத்தக்கது.


 கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், சென்னை மாநகரை மேம்படுத்தவென எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. இந்த சூழலில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேயராக இருந்த போது அறிமுகப்படுத்திய சிங்காரச்சென்னை திட்டம், சிங்காரச்சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது, சென்னையை எழில்மிகு மாநகராக்கும்.


வேளாண்மை நிதிநிலை அறிக்கை


மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே. இதுமட்டுமன்றி, தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு அமைச்சர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்துள்ளார்கள

அதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அறிவிப்பும், திட்டமும் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக வேளாண் பெருங்குடி மக்களும், விவசாய இயக்கத்தவரும் நம் கழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.


 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த சிறப்பான திட்டம். இந்நிலையில் அந்த திட்டம் இன்னும் ஆற்றலுடன் தொடர ஏதுவாக வேளாண் பட்ஜெட்டில் ரூ.4,508.2 கோடி செலவில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்கும் வண்ணம் கழக அரசு கரும்பு கொள்முதல் விலை ரூ.2900 ஆக உயர்த்தி வழங்கவுள்ளது.


பனை என்பது நம் பண்பாட்டில் பிரிக்க முடியாத ஒன்று. அந்த வகையில் பனை தொழிலை ஊக்குவிக்க ஏதுவாக, பனை வெல்லத்தை அரசு நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். மேலும், பனை மரங்களை பாதுகாக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்பது பனை சார்ந்த தொழில்களை மேலும் ஊக்கப்படுத்தும்.


காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வரும் இன்றைய சூழலில், மண்ணோடு இயைந்த இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும், அதற்காக நம்மாழ்வார் பெயரில் இயற்கை விவசாய ஆராய்ச்சி மையத்தை தொடங்கவுள்ளதை வரவேற்கிறேன்.


• அதேபோல நம்முடைய பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்ற வேண்டிய தேவையும் இந்த சூழலில் உள்ளதை நம்முடைய கழக தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. அதன்பேரில் தான், தன் வாழ்நாளை பாரம்பரிய நெல் விதைகளை பெருக்கவும் அவற்றை பாதுகாக்கவும் அர்ப்பணித்த மறைந்த திரு. நெல் ஜெயராமன் அவர்கள் பெயரில் பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாக்கும் இயக்கம் தொடங்கப்படவுள்ளது.


இப்படி விவசாயத்தை லாபகரமான தொழிலாக்கவும், இளைஞர்களும், அடுத்த தலைமுறையினரும் விவசாயைத்தை நோக்கி வரவும் தேவையான அறிவிப்புகள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.


மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… நான் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது என்னிடம் சொல்லப்பட்ட முக்கியமான விஷயம், ”தி.மு.கழக ஆட்சியில் தகுதியான பயனாளிகளை அடையாளம் கண்டு முறையாக வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை அதிமுக ஆட்சியில் பலருக்கு நீக்கப்பட்டுள்ளது” என்பது தான்.



வீடிருந்தும் வருவாயின்றி, பிள்ளைகள் இருந்தும் கைவிடப்பட்ட நிலையில் தவிக்கும் முதியோர்களுக்கு மீண்டும் முதியோர் உதவி தொகையை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.


தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது நீட் தேர்வு. தங்கை அனிதாவில் தொடங்கி 14 மாணவ – மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் பெயரை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.


தங்கை அனிதா, செஞ்சி பிரதீபா, ஏஞ்சலினா ஸ்ருதி, திருச்சி சுபஸ்ரீ, அரியலூர் விக்னேஷ், கோவை சுபஸ்ரீ, திருச்செங்கோடு மோதிலால், தர்மபுரி ஆதித்யா, மதுரை ஜோதிஸ்ரீ துர்கா, தேனி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா, பெரம்பலூர் கீர்த்தனா, நெல்லை தனலட்சுமி, விழுப்புரம் மோனிஷா என 14 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டனர்.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி உயிரிழந்த தங்கை அனிதா, ஆதித்யா, விக்னேஷ், மோதிலால், ஜோதிஸ்ரீ துர்கா ஆகியோர் வீடுகளுக்கே நான் நேரில் சென்று அந்த மாணவர்- மாணவியரின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னேன்.


பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் சொன்ன ஒரே வார்த்தை நீட் வேண்டாம் என்பது தான்.


முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி காலம் வரை வராத நீட் – அம்மையார் ஜெயலலிதா ஆட்சியின் போதும் வராத நீட் தேர்வு, கடந்த ஆட்சியில்தான் திணிக்கப்பட்டது.


நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஆரம்பம் முதலே நம்முடைய கழக தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்கள்.


நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் – நம் கழக தலைவர் அவர்கள் அறிவுரைப்படி கழக இளைஞரணி சார்பில் நானும், மாணவரணி சார்பில் அதன் செயலாளர் அண்ணன் சி.வி.எம்.பி எழிலரசன் அவர்களும் போராட்டங்களை முன்னின்று நடத்தினோம்.


ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணமும் நீட் வேண்டாம் என்பது தான்.


மக்களின் இந்த உணர்வை பிரதிபலிக்கும் விதமாகத்தான் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம் கழக தலைவர் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி தந்திருந்தார்கள்.


தற்போது இதை மையப்படுத்தி, ஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆகிவிட்டனவே, உங்கள் வாக்குறுதி என்ன ஆகிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன?


எதிர்க்கட்சிகள் மட்டுமில்லை, பத்திரிகைக்களும் - ஊடகங்களும் அத்தகைய கேள்வியை எழுப்புகின்றன.


இதற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். கடந்த அதிமுக அரசு நீட் தேர்வை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை.


கடந்த ஆட்சிக்காலத்தின் நிர்வாக சீர்கேட்டால் அரசு என்ற ஒன்று இயங்குகிறதா இல்லையா என்றே தெரியாத நிலையில் தமிழ்நாட்டு மக்கள் போராட வலுவற்று சோர்வடைந்து இருந்தனர்.


ஒட்டுமொத்த மாநிலமே மந்த நிலையிலேயே இருந்தது. இதை பயன்படுத்தி கடந்த ஆட்சியாளர்கள் இன்னும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டனர்.


ஆனால், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நீட் ஒழிப்பின் முதல்படியாக மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் கருத்துக்கேட்பு குழு ஒன்றை நியமித்து, அந்த குழு தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளது.


இப்படி பணிகள் சென்று கொண்டிருக்கும் போதே, நீட் தேர்வு ஏன் ரத்து செய்யவில்லை என்ற கேள்விகள் வருகின்றன.


நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டின் அனைத்து தரப்பையும் பாதிக்கிறது. இதில் கட்சி பேதமெல்லாம் கிடையாது.


நீட்டால் நம் தி.மு.கழகத்துக்காரர் வீட்டு பிள்ளைகள் மட்டுமில்லை, அதிமுக, பாமக, காங்கிரஸ், வி.சி.க ஏன் பாஜகவினர் வீட்டு பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றன.


கட்சி சாராத நடுநிலையாளர்களின் வீட்டு பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றன.


எனவே, நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வு ரத்து என்பதை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று உங்கள் வாயிலாக அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.


தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது போல மகளிருக்கு இலவச பேருந்து பயணம், - அதனை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பெயரை சொல்லித்தான் – அதாவது கலைஞர் தொலைக்காட்சி பெட்டி வழங்கிய போது எப்படி அது கலைஞர் தொலைக்காட்சி ஆனதோ, அதே போல நம் முதலமைச்சர் அவர்கள் இலவச பேருந்து பயணம் அறிவித்த பிறகு நகர பேருந்தை அனைவரும் ”ஸ்டாலின் பஸ்” என்றே அழைக்கின்றனர்.


ஆனால், இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.


பெட்ரோல் விலையை குறைத்தது உள்ளிட்ட நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை பேசாதவர்கள் நீட்டை மட்டும் குறி வைப்பது ஏன்?


 நீட் தேர்வு தவறானது என்பதை உணர்ந்துள்ள பத்திரிகைகளும், ஊடகங்களும் அவற்றின் உரிமையாளர்களும் நீட்டுக்கு எதிரான தங்களின் குரலை பதிவு செய்ய வேண்டும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதனை எனது அரசு என்று சொல்லவில்லை. மாறாக நமது அரசு சொல்லியுள்ளார்கள். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நீட் தேர்வை ஒழிக்க குரல் கொடுப்போம் என்று மாண்புமிகு பேரவை தலைவர் அவர்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.


நீட் போராட்ட வழக்குகள் வாபஸ்


இந்த நேரத்தில் நான் உங்களின் வாயிலாக முதலமைச்சர் அவர்களுக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.


முதலாவது கோரிக்கை : நீட் ஒழிப்பு போராளி தங்கை அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்று தங்கை அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர். 

அப்படி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட....இக்கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி தருவார்கள் என நம்புகிறேன்.



நம்முடைய அரசு அமைந்ததும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது கடந்த அதிமுக அரசு போட்டிருந்த அத்தனை வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.


அதேபோல, நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.




மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கடந்த அதிமுக அரசு ஒருபுறம் மாநிலத்தை சீரழித்தது என்றால், இன்னொருபுறம் ஒன்றிய அரசும் தமிழ்நாட்டை வஞ்சித்தது.


2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் பாஜக அசுர பலத்துடன் அதாவது மிகப்பெரிய பெரும்பாண்மையுடன் ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது.


அப்படியென்றால் அந்த அரசு எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டிருக்க வேண்டும்?


ஆனால், அப்படி நடக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் நம் அனைவரின் பதிலும்.


பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழை – எளிய மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோனது. இன்றுவரை அது சரியாகவில்லை.


ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தியதால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு ரூ.15,475 கோடி அளவு ஜி.எஸ்.டி பாக்கி ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டியுள்ளது.


இது இப்படி என்றால், மாநிலத்துக்கு பல ஆண்டுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் ஒற்றை செங்கல் நட்டு வைத்ததோடு அப்படியே உள்ளது. இதனை பிரச்சாரத்தின் போது நான் சுட்டிக்காட்டி பேசினேன்.


இந்த பிரச்சினை தமிழ்நாட்டின் சாமானிய மக்களுக்கும் புரிந்திருக்கிறது. அதனால் தான் திருச்சியில் உள்ள செங்கல் சூளை ஒன்றிற்கு AIMS BRICKS என பெயர் சூட்டியுள்ளனர்.

எய்ம்ஸ்பிரச்சினை இங்கு மட்டுமில்லை. நாடு முழுவதும் இருக்கிறது என்பதற்கு பீகார் பிரச்சினையே சான்று.


 நான் எப்படி பிரச்சாரத்தின் போது எய்ம்ஸ் மதுரைக்கு வரவில்லை என்பதை சுட்டிக்காட்ட ஒற்றை செங்கலை காட்டினேனோ, அதேபோல, பீகாரிலும் அங்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ்-ஐ கட்டக்கோரி செங்கலை காட்டி பீகார் பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.




 கொரோனாவை அறிவியல்பூர்வமாக கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், கைதட்டுங்கள், மணி அடியுங்கள், விளக்கேற்றுங்கள் என மூட நம்பிக்கை வழியே அணுகியதன் காரணத்தால் தான் கொரோனா பேரழிவு ஏற்பட்டது.


 ஒன்றிய அரசு எதை சொன்னாலும், அதை அப்படியே பின்பற்றும் அதிமுகவினர், மணி அடித்து, விளக்கு ஏற்றி, கைதட்டியதன் விளைவே தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் வராமல் போனதற்கு காரணமாக அமைந்தது.




இதுமட்டுமல்லாமல், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரியமிக்க நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதும் தொடர்கிறது.


விமான நிலையம், ரயில்வே, பெட்ரோலியம்.. ஏன் ராணுவத்தில் கூட தனியார் முதலீடுகளும் தனியார்மயமும் தொடர்கின்றன.


விமானம் நிலையம், ரயில் சேவையெல்லாம் தனியார் வசம் உள்ளது போல் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை காட்சி வைக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த நகைச்சுவையை இன்று நம் கண் முன்னே ஒன்றிய அரசு நடத்திக்காட்டுகிறது.


மத்திய, மாநில அரசுகள் இவ்வாறு செயல்பட்டதால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்.


மருத்துவர் மரணம்


 குறிப்பாக கொரோனா நேரத்தில் மருத்துவர்களின் மரணத்தை கூட கடந்த அதிமுக அரசு மறைத்தது.


எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழ்நாட்டில் 43 மருத்துவர்கள் கொரோனா நோயால் மறைந்தார்கள் என்று கடந்த 03-08-2020 அன்று கூறியிருந்தேன்.


ஆனால், அதை ஏற்காத அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், நான் வதந்தி பரப்புவதாகவும், என் மீது வழக்கு தொடருவேன் என்று கூறினார்.


ஆனால், கடைசி வரை வழக்கு தொடரவேயில்லை. மேலும், நான் சொன்ன தகவல் உண்மை என்று இந்திய மருத்துவ கூட்டமைப்பும் அறிவித்தது.


அதற்கு பிறகு அப்போதைய அமைச்சர் அமைதியாகிவிட்டார்.


கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதை தவிர்ப்பதற்காகவே அப்போதைய அரசு அப்படி செய்ததாக மருத்துவர்கள் குற்றஞ்சாட்டினர்.


ஆனால், தற்போது அமைந்துள்ள கழக ஆட்சியில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கொரோனாவால் பலியான மருத்துவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.


அதுமட்டுமில்லாமல், கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கிற விதமாக கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகிற அறைக்கே நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் PPE Kit அணிந்து சென்றார்கள்.


குளறுபடிகளால் மாநிலத்தின் நிதி நிலை எந்த அளவில் சீர்குலைந்து உள்ளது என்பதை மாண்புமிகு நிதியமைச்சர் அண்ணன் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தெளிவாக எடுத்துக்கூறியிருந்தது.


ஒன்றிய அரசின் மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை. அவர்கள் நல்லது செய்தால் ஏற்கவும் பாராட்டவும் தயாராகவுள்ளோம்.


ஆனால், தவறிழைக்கும் பட்சத்தில் முன்பைவிட இன்னும் வேகமாக அதனை சுட்டிக்காட்டுவோம் விமர்சிப்போம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களை கண்ணியமாகத்தான் நடந்துகொள்ள சொல்லியிருக்கிறார்களே தவிர அடிமையாக இருக்க சொல்லவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.




மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, கொரோனா 2-வது அலையை கடந்து விட்டோம். மூன்றாவது அலை எழுமா என்ற கேள்வி உள்ளது.




தமிழ்நாடு முழுவதும் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 2 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரத்து 337 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சில் மொத்தம் 44 லட்சத்து 51 ஆயிரத்து 728 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில்


சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதல் டோஸ் 85,108-ம், 2வது டோஸ் 32,394-ம் என மொத்தம் 1,17,502 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


இப்படி ஒன்றிய அரசிடம் போராடி தடுப்பூசிகளை பெற்று மக்களுக்கு தடுப்பூசியிடும் பணிகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறுகின்றன.


இன்னொரு அலை நிச்சயம் வரக்கூடாது. அப்படி வந்தாலும் தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியிட்டுக்கொள்ள வேண்டும்.



முக்கியமாக முக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி சோப்பின் மூலம் கையை சுத்தப்படுத்துதல் போன்ற அரசு காட்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.


அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு மூன்றாவது அலையை தடுப்போம்.


தொகுதியின் கோரிக்கைகள்


மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே.. கடந்த 100 நாட்களாக எனது தொகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டோம்.


தொகுதி மக்களின் கருத்துக்களை அறிந்தோம். அதனடிப்படையில் தொகுதியில் உள்ள பிரதான கோரிக்கைகள் ஒரு சிலவற்றை இங்கே இந்த மாமன்றத்தின் முன் வைக்கிறேன்.


 எனது தொகுதியில் உள்ள கொய்யாத்தோப்பு, காக்ஸ் காலனி, நாவலர் நெடுஞ்செழியன் நகர், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய நான்கு குடிசைமாற்றுவாரிய குடியிருப்புகள் பழமையானதாகிவிட்ட காரணத்தால், அவற்றிற்கு பதிலாக புதிய குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும் என தொகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.


அக்கோரிக்கைகளை மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் அண்ணன் தா.மோ.அன்பரசன் அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்சென்றோம்.


தற்போது, நான்கு இடங்களிலும் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.


இந்த நேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், இந்த பணிகளை ஒருங்கிணைக்கும் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் தா.மோ.அன்பரசன் அவர்களுக்கும் தொகுதி மக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


மேலும், இந்த நான்கு குடிசைமாற்று குடியிருப்பு வீடுகளுக்கும் தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பெயர்களை சூட்ட வேண்டும் என்றும் மேலும், நம்முடைய இந்த நான்கு தலைவர்களின் பொதுவாழ்வை விளக்கும் வண்ணம் அந்த குடியிருப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் உங்கள் வாயிலாக மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.


தொகுதியில் மாட்டாங்குப்பம் பகுதியில் சில மின்மீட்டர்களில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின் இணைப்பை பெற்று அதிக மின்சார கட்டணம் செலுத்தி வந்தனர்.


 கழக அரசு அமைந்த பிறகு, மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு எடுத்து சென்று, மேற்சொன்ன வீடுகளுக்கு தனித்தனி மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


 இந்த நேரத்தில் நம் தொகுதி மக்களின் சார்பில் மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


எங்கள் தொகுதியில் அயோத்திக்குப்பம், நடுக்குப்பம், மாட்டாங்குப்பம் போன்ற பின்தங்கிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், பெண்களுக்காக, பெண்களே இயக்கும் பிரத்யேக கூட்டுறவு கடன் சங்கங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் வாயிலாக மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அண்ணன். ஐ.பெரியசாமி அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.


ஆசியாவிலேயே மிக நீளமான மெரினா கடற்கரையின் ஒரு பகுதி எனது தொகுதியில் உள்ளது.


 சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்தி மேலும் அழகுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.


எங்கள் தொகுதியில் மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள சென்னை பள்ளிகள், அரசு பள்ளிகள் பல உள்ளன. அவற்றில் பல பள்ளிகளின் கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளன.


அவற்றை சீரமைத்து தருமாறு மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களை உங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.


என் தொகுதியிலுள்ள கழிவு நீர் குழாய்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதிருந்த மக்கள் தொகையை கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டவை.


அதனால் அடிக்கடி, கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இப்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அவற்றை மாற்றித்தருமாறு மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.


இவை தவிர மேலும் பல கோரிக்கைகளை மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களிடம் எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்கிறேன். அவற்றையும் நான் பேசியதாகக் கருதி அவைக்குறிப்பில் பதிவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


ஓர் எளியவனாக இந்தக் கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறேன். இவை நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது.


இப்படித்தான், காட்சிக்கு எளியவரான ஒருவர், என் வயதிலும் இளையவராக ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பேரவையில் தனது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அது வெறும் பேச்சல்ல. விவசாயிகளுக்கான உரிமைக் குரல்.


திருக்குவளை எனும் சிற்றூரில் பிறந்து, திருவாரூர் எனும் சிறு நகரத்தில் வளர்ந்து,


திராவிடமே தனது இயக்கமாகவும், தமிழே தனது மூச்சாகவும் கொண்டு, இளம் வயதிலேயே பொதுவாழ்வுப் பணிகளை மேற்கொண்டு, மொழி காக்க சிறை சென்று,


கலை-இலக்கியம்-நாடகம்-திரைப்படம் என அனைத்திலும் தனித்துவமான தமிழால் திராவிடக் கொள்கையை எடுத்துரைத்து,


 மக்களின் பேராதரவுடன் 1957ஆம் ஆண்டு குளித்தலைத் தொகுதியில் முதன்முறையாக இந்தப் பேரவைக்குள் வந்த அந்த எளிய மனிதர், முத்தமிழறிஞர் கலைஞர்.


13 முறை தேர்தல் களத்தில் தோல்வியே காணாத வீரராக-சட்டமன்றத்தை 60 ஆண்டுகள் அலங்கரித்து சாதனை படைத்தவர்.


5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அதிக காலம் இந்த மாநிலத்தை ஆட்சி செய்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை வழங்கியவர். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியவர்.


 அவரை இந்திய அரசியல் திரும்பிப் பார்த்தது. டெல்லி, அவர் சொல் கேட்டது.


13 வயதில் தமிழ்க்கொடியை கையில் ஏந்திய அவரது கைகள், இந்திய சுதந்திரத்தின் 25 ஆம் ஆண்டு விழாவின்போது, தேசியக் கொடியை கோட்டைக் கொத்தளத்தில் ஏற்றியது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அந்த உரிமையைப் பெற்றுத் தந்தவரும் அவர்தான்.


இந்திய சுதந்திரத்தின் 50ஆம் ஆண்டுவிழாவிலும் முதல்வராக அவர்தான் கோட்டையில் கொடியேற்றினார்.


முத்தமிழறிஞர் கலைஞர் எனும் மகத்தான அந்தத் தலைவர் பெற்றுத் தந்த உரிமையை, இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவில் கொடியேற்றி நிலைநாட்டினார், நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.


கழக தலைவரின் அரை நூற்றாண்டு அரசியல் அனுபவத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தந்த வெகுமதிதான் முதலமைச்சர் எனும் பெரும் பொறுப்பு.


இந்திய ஒன்றியத்திலேயே முதல்வர்களில் முதல்வர் என்ற பாராட்டு அவரது ஓயாத உழைப்புக்கு கிடைத்துள்ள தனிச் சிறப்பு.


 நான், முத்தமிழறிஞர் கலைஞரின் மடியில் தவழ்ந்தவன், மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழியில் நடப்பவன்.


என் தொகுதி மக்களின் உரிமைக் குரலாய் ஒலிப்பேன்.


 தமிழ்நாடு அனைத்து துறையிலும் சிறந்து விளங்கிட அயராது பாடுபடும் நம் முதல்வருக்குத் துணை நின்று உழைப்பேன் என்று உங்கள் வாயிலாக உறுதியளிக்கிறேன். நன்றி, வணக்கம்."



இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.