விடுதலைசிறுத்தை கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலைசிறுத்தை கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

மோடி அரசு கொண்டு வந்த தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி — தூத்துக்குடியில் இடதுசாரி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி லீக்ஸ் — செய்தி

தூத்துக்குடி, டிசம்பர் 08, 2025:

ஒன்றிய மோடி அரசு தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் வகையில் கொண்டு வந்த நான்கு தொகுப்பு தொழிலாளர் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்று (08.12.2025) காலை 11 மணிக்கு இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு தொழிலாளர் பாதுகாப்பு, ஊதிய நெறிமுறைகள், வேலை நேர கட்டுப்பாடுகள் உள்ளிட்ட உரிமைகளை பாதிக்கும் வகையில் புதிய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கடும் கண்டனம் தெரிவித்தனர்.

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள்:

  • தோழர் மு.முருகன், மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்.எல்)
  • தோழர் K.P. ஆறுமுகம், மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)
  • தோழர் கரும்பன், மாவட்டச் செயலாளர், சிபிஐ
  • தோழர் ம. கணேசன், மாவட்டச் செயலாளர், விசிக
  • தோழர் பி. சம்பத், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
  • தோழர் பாலசுந்தரம், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்.எல்)
  • தோழர் வழ. வில்லவன் கோதை, துணை பொதுச்செயலாளர், விசிக
  • தோழர் P. லோகநாதன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர், சிபிஐ

சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் “தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்!”, “தொழிலாளர் உரிமை எங்கள் உரிமை!” என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டம் முழுவதும் அமைதியாக நடைபெற்றது.

வெள்ளி, 17 மே, 2024

மாணவ மாணவிகளே வாருங்கள் கட்டணமில்லா பயிற்சி திருச்செந்தூரில் திருமா பயிலகம் பயன் அடையுங்கள்

 ▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

17-5-2024

photo news by arunan journalist 



மாணவ மாணவிகளே இந்த ஆண்டு தேர்ச்சி பெறவில்லையே என கவலை பட வேண்டாம்

Don't worry   வாருங்கள் 

கட்டணமில்லா பயிற்சி திருமா பயிலகம் !!!

10, 12ஆம் வகுப்பு 

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்கள் துணை தேர்வில் வெற்றி பெற திருமா பயிலகம், வீடு கல்வி அறக்கட்டளை இணைந்து திருச்செந்தூரில் நடத்தும் 'கட்டணமில்லா பயிற்சி வகுப்புக்கு வந்து சேருங்கள்!

வெற்றி பெறுங்கள் 

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 

🌊 அலைபேசி எண் 


சு.விடுதலைச்செழியன் 

பெ.தமிழ்ச்செல்வன்


8675590803

8870183041

திங்கள், 9 அக்டோபர், 2023

தூத்துக்குடியில் நாட்டை காப்போம் கூட்டமைப்பு பொதுகூட்டம்

தூத்துக்குடி லீக்ஸ் 9-10-2023


நாட்டை காப்போம்  கூட்டமைப்பு முன்னெடுக்கும் பரப்புரை கலைப்பயணம், பொதுக்கூட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் 08/10/2023 ஞாயிறு நேற்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது.

 


விஷமத்தனமான,மதரீதியான பொய் பிரச்சாரத்தை கட்டமைத்து கேடுகெட்ட பரப்புரையை காலங்காலமாக மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை களைவோம்.




அடிப்படையில் 

சட்டம் ஒழுங்கு, 

மதநல்லிணக்கம்,

பொது அமைதி, ஏற்படுத்துவோம் பரப்புரை செய்தார்கள் 

சமூக வலைதளங்களில் ஆர்கனைஸ்ட்டாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொய்யை, அவதூறை உண்மைக்கு புறம்பான, செய்தியை மதபிரச்சாரத்தை, வெறுப்பு பிரச்சாரத்தை செய்து மக்களை பிளவுபடுத்துகிற அரசியல் கட்சிகளை புறந்தள்ள வேண்டும் 

பெண்கள், குழந்தைகள், தலித்துகள், மதச்சிறுபான்மையினர், மொழி சிறுபான்மையினர், மீனவர்கள்

அனைத்து வகை தொழிலாளர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், அரசு பணியாளர்கள், என நமது சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும்

உரிமைகளை கடமைகளை வழங்கும், பாதுகாக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என பொதுகூட்டத்தில் பேசினார்கள் 

இப் பொதுகூட்டத்தில்...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இக்பால் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார் மற்றும் 

வணிகரணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான், 

முகாம் பொறுப்பாளர் நூர்,

வழக்கறிஞர் அணி அர்ஜுன், 

முன்னாள் தொண்டரணி அமைப்பாளர் 

பட்டு வளவன்

வழக்கறிஞர் 

அணி இளையவளவன் 

மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

நாங்குநேரி சாதி வெறியில் வெட்டப்பட்ட மாணவன் சின்னத்துரை மற்றும் தங்கை சந்தான லட்சுமி யை மருத்துவனையில் விடுதலை சிறுத்தை கட்சி அகமது இக்பால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்

 thoothukudi leaks 14-8-2023

 நாங்குநேரி சாதிவெறி யால் வெட்டப்பட்ட மாணவன் சின்னத்துரை மற்றும் தங்கை சந்தான லட்சுமி யை மருத்துவனையில் தூத்துக்குடி மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சி அகமது இக்பால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



இது பற்றிய செய்தியாவது:-

 

நாங்குநேரியில் பள்ளி மாணவன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 


மாணவன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்;


தடுக்க வந்த மாணவனின் தங்கையையும் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்;


இது தொடர்பாக கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது


-


நாங்குநேரியில் 


சின்னத்துரை என்ற தலித் மாணவனையும் அவருடைய 

தங்கை சந்தான செல்வியையும் 


சக மாணவர்களால் வெட்டப்பட்டதை அடுத்து 


மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டதை அறிந்து நேற்று 13/08/23 ஞாயிறு காலை 11:30 மணியளவில் பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் சொல்வதற்காக சிறுவன் சின்னத்துரை உடைய தாயார் அம்பிகா அவர்களையும் சந்தித்து ...

அவர்களுக்கு

நாங்கள் இருக்கிறோம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உங்களுக்கு பக்கபலமாக இருக்கும் 



தலைவர் திருமாவளவன்  ஏற்கனவே உங்களிடம் செல்போனில் பேசி இருக்கிறார் 

நேரிலும் வர இருக்கிறார் 

நீங்கள் எந்த கவலையும் பட வேண்டாம் 


தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம் என்று அவருடைய கைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டு 

ஆறுதல் கூறி

2000 ரூபாயை அவர் கையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு திரும்பும்போது


தலைவர் பேசியது அவருக்கு பெரும் ஆறுதலாகவும், ஊக்கமாகவும் இருந்தது என்று எங்களிடம் குறிப்பிட்டார் 

 தூத்துக்குடி அகமது இக்பால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  உடன் 

 சுலைமான் 

வணிகரணி மாவட்ட அமைப்பாளர்,

நூர்முகமது 

கிளை பொறுப்பாளர் 


மற்றும் 

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற  கழகத்தின் 

மாவட்ட செயலாளர் முகமது ஜான் ஆகியோர் மருத்துவமனை சென்று ஆறுதல் தெரிவித்தார்கள்.



தகவல் 

அகமது இக்பால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தூத்துக்குடி மாவட்டம்

திங்கள், 20 மார்ச், 2023

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டு

 thoothukudileaks 20-03-2023

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை: 

மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு வழிகாட்டும் 'சமூகநீதி மாநிலம்' தமிழ்நாடு  என்பதை உணர்த்துகிறது !

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டு

இது பற்றிய செய்தியாவது:-

தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் சிறப்பான அறிக்கை ஆகும். திமுகவின் ‘திராவிட முன்மாதிரி ‘ அரசு உருவாக்கியுள்ள இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிப் பாராட்டி வரவேற்கிறோம்! 



'கோவிட்' பெருந்தொற்றின் காரணமாகவும், இதற்கு முன்பிருந்த அதிமுக அரசின் நிர்வாகத் திறனின்மையினாலும் தமிழ்நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக வீழ்ச்சி அடைந்திருந்தது. வருவாய்ப் பற்றாக்குறை 3.28% என்ற நிலையில் இருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளுக்குள் அந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியதோடு வருவாய்ப் பற்றாக்குறையை 1.23% ஆகக் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் போரின் காரணமாக உலக நாடுகளெல்லாம் பொருளாதார மந்தநிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாடு அரசின்

இச்சாதனை பாராட்டுதலுக்குரியதாகும். 


தமிழ்நாட்டைத் தொழில் வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் மாநிலமாக மாற்றும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தொழில் வளர்ச்சி என்பது அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக எட்டவேண்டும் என்ற நோக்கில் பின்தங்கிய மாவட்டங்களுக்கும் அது சென்று சேர வேண்டும் என்பதற்காக 1.4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 2.14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் தொழில்கள் இந்த நிதி ஆண்டில் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை மனதார வரவேற்கிறோம். 


தொழில் வளர்ச்சியின் அங்கமாக கோவையிலும் மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் துவக்கப்படும் என்றும்; ஈரோடு, செங்கல்பட்டு , திருநெல்வேலி ஆகிய இடங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும்’ என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  


'திராவிட முன்மாதிரி' என்பது எளிய மக்களுக்கான சமூகநீதியைக் கட்டிக் காப்பது தான் என்பதை நமது முதலமைச்சர் அவர்கள் தனது செயற்பாடுகளின் மூலம் உணர்த்தி வருகிறார். அந்த வகையில், புதிதாக ஒரு இலட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்கிற அறிவிப்பு ஏழை எளிய மக்களின் வயிற்றில் பால் வார்ப்பதாகும். 


சமூகத்தில் மிகவும் நலிந்த பிரிவினராக இருக்கும் ஆதிதிராவிட- பழங்குடியின மக்களின் மேம்பாடு குறித்தும், தமிழ்மொழி மேம்பாடு குறித்தும் பல்வேறு கோரிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் முன் வைத்திருந்தோம். அந்தக் கோரிக்கைகளில் பலவற்றை இந்த நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றியிருகிறார் என்பதை மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்டுகிறோம். குறிப்பாக, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களப்பலியான ஈகியர் நடராசன்- தாளமுத்து ஆகியோருக்கு நினைவிடம் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம் . அது ஏற்கப்பட்டு அதற்கான அறிவிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. அது போலவே அரசு நடத்தும் பள்ளிகளின் பெயர்களில் சாதி அடையாளங்களை நீக்க வேண்டும் என்றும் எஸ்சி ; எஸ்டி மக்களுக்கான துணைத் திட்டங்களைப் பாதுகாக்கும் நோக்கில் 'சிறப்பு சட்டம்' இயற்ற வேண்டும் என்றும்; அண்டை மாநிலமான தெலுங்கானாவில் செயல்படுத்தப்படும் ‘தலித் பந்து ‘ திட்டத்தைப் போல் தலித் தொழில் முனைவோருக்கு திட்டமொன்றை வகுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அந்த வேண்டுகோள்களையெல்லாம்  ஏற்கிற வகையில் மாண்புமிகு முல்வர் அவர்கள் அவற்றுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதாவது, ஆதிதிராவிடர், கள்ளர், பழங்குடியினர் என சாதிகளின் பெயரில் இயங்கிய சமூகப் பள்ளிகள் அனைத்தும் இனி பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அது போலவே ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எஸ்சி- எஸ்டி துணைத் திட்டங்களைப் பாதுகாக்கும் சிறப்புச் சட்டம் அடுத்த கூட்டத் தொடரில் இயற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகளுக்காக எமது மனமார்ந்த நன்றியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.


மேலும், புரட்சியாளர் அம்பேத்கரின் எழுத்துகளைச் செம்பதிப்பாகத் தமிழில் வெளியிடும் திட்டம் மற்றும்  அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் ஆதிதிராவிடக் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய அறிவிப்புகளை வரவேற்றுப் பாராட்டுகிறோம். 


தமிழ்ப் பண்பாட்டுப் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் ‘சோழர் அருங்காட்சியகம்’ அமைக்கப்படுமென அறிவித்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். 


இந்த நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்டுள்ள அறிவிப்புகளுக்கெல்லாம் சிகரம் வைப்பது போல இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத 'மகளிர் உரிமைத்தொகை' திட்டம் எதிர்வரும் செப்டம்பர்-15 முதல்  செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 7,000 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மகளிருக்கெனப் புதிய திட்டங்களை உருவாக்கியதில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு இந்த அறிவிப்பின்மூலம் உலகத்திலேயே முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெறுகிறது. 


ஒட்டு மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும். சமூக நீதி மாநிலம் இதுவென்ற பெருமையை நிலைநாட்டும்! 


இவண்:

தொல். திருமாவளவன்,

 நிறுவனர் - தலைவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

ஞாயிறு, 5 மார்ச், 2023

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்டபூர்வ பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!

 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக வதந்தி பரப்பியோர்மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்டபூர்வ பாதுகாப்பையும் உரிமைகளையும்  உறுதிப்படுத்த வேண்டும்!

தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.




இது பற்றிய செய்தியாவது 


’பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார்கள்’ என்கிற பொய்யான செய்தியை வேண்டும் என்றே சமூக ஊடகங்களின் மூலமாகப் பரப்பி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள்மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். இது திட்டமிட்ட பயங்கரவாத சதி என்பதால் இதன் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காகவும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை உருவாக்குவதற்காகவும் திட்டமிட்ட முறையில் பாஜகவும் அதனுடைய துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. திமுக தலைமையிலான இந்த அரசில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்கிற தோற்றத்தை அவர்கள் உருவாக்கப் பார்க்கிறார்கள். அத்துடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இந்திய அளவில் அவப்பெயரை உருவாக்கவும் முயற்சிக்கிறார்கள்.


ஒருபுறம் தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வது, இன்னொரு புறம் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரைப் படுகொலை செய்கிறார்கள் என்று வதந்தி பரப்புவது என இரண்டு வகையில் சனாதன சக்திகள் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கின்றன. எனவே, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சார்ந்த கூலித் தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாட்டில் செய்யப்படும் அவதூறுப் பிரச்சாரங்களைத் தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த இலட்சக் கணக்கானவர்கள் பிற நாடுகளிலும், பிற மாநிலங்களிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


நமது அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 19 (1) (d)  அனைத்து குடிமக்களுக்கும் நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் தடையின்றிச் செல்வதற்கும் உரிமை வழங்கியுள்ளது. 19(1) (e) இந்திய குடிமக்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சென்று குடியிருப்பதற்கு உரிமை வழங்குகிறது. இவை இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளாகும். இந்த அடிப்படை உரிமை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மாநிலத்துக்கு உள்ளேயே புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தான் அதிகம். மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்கிறவர்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 4% மட்டுமே ஆவர். உலக நாடுகளை ஒப்பிடும்போது மாநிலம்விட்டு மாநிலம் புலம்பெயர்வோர் இந்தியாவில் மிகவும் குறைவு என உலக வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


மாநிலம் விட்டு மாநிலம் சென்று பிழைக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக 1979 ஆம் ஆண்டு ’மாநிலங்களுக்கிடையே புலம்பெயரும் தொழிலாளர் சட்டம்’ இயற்றப்பட்டது. வெளிமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்ததாரர்கள் மாநில அரசிடம் உரிமம் பெற வேண்டும். அவர்களை அழைத்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று அந்த சட்டத்தின் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு நியாயமான கூலி மற்றும் சுகாதார வசதிகளையும், அந்தத் தொழிலாளர்களது குழந்தைகளின் கல்வி வசதியையும் அந்த ஒப்பந்ததாரர் செய்து தர வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது


வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்துவரப்படும் தொழிலாளர்கள் ஒப்பீட்டளவில் மிக குறைவான சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். அவர்களுடைய வேலை நேரமும் வரம்பற்றதாக உள்ளது. அவர்கள் கால்நடைகளைப் பட்டியில் அடைத்து வைப்பதுபோல சுகாதாரமற்ற சூழலில் வைத்து வேலை வாங்குகிறார்கள். அவர்கள் ஏறக்குறைய கொத்தடிமைகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சட்டப்படி அவர்களுக்குள்ள பிற உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம்.


இவண்:

தொல்.திருமாவளவன்,

நிறுவனர் – தலைவர்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.