தூத்துக்குடி லீக்ஸ் — செய்தி
தூத்துக்குடி, டிசம்பர் 08, 2025:
ஒன்றிய மோடி அரசு தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் வகையில் கொண்டு வந்த நான்கு தொகுப்பு தொழிலாளர் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்று (08.12.2025) காலை 11 மணிக்கு இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு தொழிலாளர் பாதுகாப்பு, ஊதிய நெறிமுறைகள், வேலை நேர கட்டுப்பாடுகள் உள்ளிட்ட உரிமைகளை பாதிக்கும் வகையில் புதிய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள்:
- தோழர் மு.முருகன், மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்.எல்)
- தோழர் K.P. ஆறுமுகம், மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)
- தோழர் கரும்பன், மாவட்டச் செயலாளர், சிபிஐ
- தோழர் ம. கணேசன், மாவட்டச் செயலாளர், விசிக
- தோழர் பி. சம்பத், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
- தோழர் பாலசுந்தரம், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்.எல்)
- தோழர் வழ. வில்லவன் கோதை, துணை பொதுச்செயலாளர், விசிக
- தோழர் P. லோகநாதன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர், சிபிஐ
சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் “தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்!”, “தொழிலாளர் உரிமை எங்கள் உரிமை!” என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டம் முழுவதும் அமைதியாக நடைபெற்றது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக