அண்ணா மலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணா மலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 டிசம்பர், 2024

# பாஜக தலைவர் அண்ணாமலையின் புதிய போராட்ட அறிவிப்புஇது குறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை வெளியிட்டார்

Tamil Nadu updates,

# பாஜக தலைவர் அண்ணாமலையின் புதிய போராட்ட அறிவிப்பு இது குறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.

இது பற்றிய செய்தியாவது:-

சென்னை, டிச. 26 -


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியை கண்டித்து புதிய போராட்டத்தை அறிவித்துள்ளார். 



செருப்பு அணியாமல் இருப்பேன்!!!

சாட்டையால் அடித்து போராட்டம்!!!

திமுக ஆட்சி முடியும் வரை செருப்பு அணியமாட்டேன் என்றும், தனது வீட்டு முன்பு தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

48நாட்கள் விரதம்!!!

மேலும், தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் பாஜக சார்பில் மக்கள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், தமிழக மக்களின் நலனுக்காக 48 நாட்கள் விரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.


இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.


இது குறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில்...


, "பல்கலைக்கழக வளாகத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளதும் கவலையளிக்கிறது. அமைதி வழியில் போராடியவர்களை கைது செய்வதற்கு பதிலாக, அந்த காவல்துறையினரை பல்கலைக்கழக பாதுகாப்பிற்கு பயன்படுத்தியிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது" என குற்றம்சாட்டியுள்ளார்.


பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை பாஜகவின் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

பரபரப்பு நடைபயணம் தூத்துக்குடியில் அண்ணா மலை க்கு செம மாஸாக பிஜேபி யினர் பொதுமக்கள் வரவேற்பு

thoothukudi leaks 13-8-2023

Photo news by - Arunan 

என் மண் என் மக்கள் பிஜேபி மாநில தலைவர் அண்ணா மலை நூறு நாள் நடைபயணம் 

தூத்துக்குடியில் குழந்தையை வாங்கி முத்தமிடும் அண்ணா மலை 




தூத்துக்குடி யில் அண்ணா மலை க்கு செம மாஸாக பிஜேபி யினர் பொதுமக்கள் வரவேற்பு 

தூத்துக்குடியில் எதிர்பார்த்ததை விட ..பலத்த வரவேற்பு ஆர்வத்துடன் வந்த கூட்டத்தில் திணறிபோனார் அண்ணா மலை!!!

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர் வருகையில் பாதுகாப்பு கருதி விருதுநகர் குழு அண்ணா மலை க்கு பாதுகாப்பு அரணாக வந்திருந்தனர்.

இதுபற்றி செய்தியாவது -

விரைவில்2024-ல் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தவும், பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயண திட்டத்தை அறிவித்து


அதன்படி அண்ணா மலை நூறு நாள் நடைபயணம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு தொடங்கியது...

   ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுமக்களை சந்திக்கிறார்.




இன்று 2023ஆகஸ்ட்13ல் 

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகரில் பாஜக மாநில தலைவர் அண்ணா மலை தூத்துக்குடி மாநகராட்சி முன்பு இருந்து என் மண் என் மக்கள் நடைபயணம் தொடங்கியது.




பிஜேபி தொண்டர்கள் மகளிர் கள் திரளாக உடன் வர அண்ணா மலை வழிநெடுக சாலையோரமாக பொதுமக்கள் கூட்டம் நிறைந்திருந்தது அவர்கள் அருகில் சென்று உற்சாக கைகுலுக்கவும் பலர் செல்போன் போட்டோ எடுத்து கொண்டு இருந்தார்கள்.



நடைபயணம் வரவேற்பு சிறுவர் சிறுமியர் வைத்து சிலம்பு ஆட்டம் கராத்தே உடையில் ஃபைட் செய்து காட்டி அசத்தினார்கள் பெண்கள் முளைப்பாரி எடுத்து அண்ணா மலை நடைபயணத்தை வரவேற்றனர் மேலும் பேண்ட் வாத்தியம் மயில் தொகை ஒயிலாட்டம் என களை கட்டியது .

முளைப்பாரி எடுத்து வரும் பெண்கள் 


தூத்துக்குடி மாநகராட்சி யில் தொடங்கிய அண்ணா மலை நடைபயணம் ஜயா குரூஸ்பர்ணாந்து..சிலை வழியாக வ.உ.சி சாலை சிவன் கோயில் மேலரத வீதி வடக்கு ரத வீதி கீழே ரத வீதி அந்தோணி யார் கோவில் சண்முகபுரம் சிவந்தைரோடு திருச்செந்தூர் சாலை என சென்றனர்.



தூத்துக்குடி சிவன் கோயில் அருகே விஸ்வகர்ம பிரமுகர்கள் மாலை அணிவித்தார்கள்.




கீழ ரத வீதியில் பிராமணர் சங்கம் சார்பில் கும்ப மரியாதை செலுத்தினர்.



அழகர் ஜுவல்லரி அருகில் அண்ணா மலை வரும் போது அப் பகுதி வியாபாரி சார்பில் குமரேசன் சால்வையை அண்ணா மலைக்கு போர்த்தவும் அங்கு சந்தணமாலை அண்ணா மலை அணிவித்தார்கள்.



நடைபயணத்தில் உடன் வந்த மாநில மகளிர் அணி முன்னாள் மேயர் சசிகலா புஷ்பா உச்சி வெயில் கூட்ட நெரிசலை தாக்க முடியாமல் நடந்து வர இயலாமல் திணறிடதை பாத்துட்டு அண்ணா மலை அவரிடம் கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு அழகர் ஜுவல்லரி வரும் போது சேர்ந்து கொள்ளுங்கள் என்றார் அதன்படி சிறிது ரெஸ்ட் பிறகு நடைபயணத்தில் சசிகலா புஷ்பா இனைந்து கொண்டார்.

அண்ணா மலை நோக்கி கைகுலுக்க வரும் சிறுமி... அருகில் நடந்து வரும் சசிகலா புஷ்பா 


அண்ணா மலை நடைபயணத்தில் முன்பாக இரண்டு பேர் புகார் பெட்டி கொண்டு வந்து கொண்டு இருந்தார்கள்.



நடைபயணத்தில் வழிநெடுக பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை தமிழ்நாடு பாஜக அச்சிட்ட 10 லட்சம் புத்தகங்களை பொதுமக்களுக்கு வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

தூத்துக்குடியில் தலைமுடி வெட்டிய அண்ணா மலை!!!



சலூன் நூலகர் பொன் மாரியப்பன் உடன் அண்ணா மலை புகைப்படம் எடுத்து கொண்டார்.


பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவா்  அண்ணாமலை தூத்துக்குடி  நடைபயணம்  வந்துள்ள  அவா் முடி வெட்டிக்கொள்ள  சமீபத்தில் பிரபலமான மில்லர் புரம் சலூன் நூலகா்  பொன்மாாியப்பன்  கடைக்கு  சென்று சலூனில் வைக்க பட்டு இருந்த நூலகத்தை பார்த்து பாராட்டி யவர் பின்பு அங்கேயே தனது தலைமுடி வெட்டி கொண்டார் 


அண்ணா மலை தொடரும் நூறுநாள் நடைபயணம் விவரங்கள் 

 2023 ஜுலை (29-ந்தேதி) காலை ராமேசுவரத்தில் இருந்து நடைபயணம் புறப்பட்டார் அண்ணாமலை தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் மக்களை சந்தித்தார்.

தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் அவர் பொதுமக்களை சந்தித்தார்.


இதைதொடர்ந்து ஜூலை 30-ந்தேதி முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை, சிவகங்கையில் நடைபயணம் .


 ஆகஸ்ட் 1-ந்தேதி மானாமதுரையிலும், 2-ந்தேதி ஆலங்குடியிலும் நடைபயணம்  அண்ணாமலை ஆகஸ்ட் 5-ந்தேதி மதுரை

பின்பு. 9-ந்தேதி திருச்சி ,

ஆகஸ்ட் 13-ந்தேதி தூத்துக்குடியிலும், 14-ந் தேதி திருச்செந்தூரிலும், 15-ந்தேதி கன்னியாகுமரியிலும் நடைபயணம் சென்று மக்களை சந்திக்கிறார்.


ஆகஸ்ட் 20-ந்தேதி நெல்லையிலும், 31-ந்தேதி தென்காசியிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். 


செப்டம்பர் மாதம் 1-ந்தேதி சங்கரன்கோவிலில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் 9-ந்தேதி பழனிக்கும், 13-ந்தேதி கோவைக்கும் செல்கிறார். 


ஈரோட்டில் செப்டம்பர் 21-ந்தேதியும், கரூரில் அக்டோபர் 9-ந் தேதியும், திருச்சியில் 11-ந் தேதியும் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் அக்டோபர் இறுதியில் சீர்காழிக்கு நடைபயணம் செல்கிறார்.


நவம்பர் 1-ந்தேதி மயிலாடுதுறை செல்லும் அண்ணாமலை நவம்பர் 27-ந்தேதி சேலம் செல்கிறார். டிசம்பர் 8-ந்தேதி தர்மபுரி செல்லும் அவர் டிசம்பர் 31-ந்தேதி அன்று திருத்தணி மற்றும் அரக்கோணத்துக்கு செல்கிறார்.


அடுத்த ஆண்டு ஜனவரி 2-ந்தேதி திருவள்ளூரில் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு ஜனவரி 4-ந்தேதி மதுரவாயல், அம்பத்தூரில் நடைபயணம் செல்கிறார்.


சென்னையில் ஜனவரி 7, 8, 9 மற்றும் 11 ஆகிய 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அண்ணாமலையின் நடைபயணம் ஜனவரி 11-ந்தேதி சென்னையில் முடியும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அண்ணாமலை 5 மாதங்களுக்கும் மேலாக 100 நாட்களை கடந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்கிறார்கள்.

பாராட்டும் முக்கிய விஷயமாக... 

நடைபயணத்தில் உடன் சாலையில் க்ளீன்‌ பண்ணி வரும் பிஜேபி தொண்டர்கள் 



அண்ணா மலை நடைபயணத்தில் ஏற்படும் தண்ணீர் பாட்டில் மற்றும் வேஸ்ட் குப்பைகள் அள்ளி சாலைகளை சுத்தம் படுத்தப்படுகிறது. இதற்காக வேஸ்ட்டா சிதறும் பொருட்கள் அள்ளி போடும் வண்டிகளும் நடைபயணத்தில் உடன் செல்கிறார்கள்.

தூத்துக்குடி லீக்ஸ் க்காக

போட்டோ மற்றும் செய்தி

அருணன் 

சனி, 15 ஏப்ரல், 2023

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை ஆதாரத்தை சொல்ல வேண்டும். 15 நாட்களில் எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு

 thoothukudileaks 15-4-2023

திமுக மற்றும் திமுகவினர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி களங்கம் கற்பிக்கும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் 

ஆதாரத்தை சொல்ல வேண்டும். 15 நாட்களில் எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு 



இது பற்றிய செய்தியாவது 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில் தெரிவித்தாவது:-


தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை திமுக பற்றி குற்றச்சாட்டு சொல்ல போகிறார் என்றார். ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது அவர் சொல்லியிருக்கிறாரா இல்லை.

 அவர் சொன்ன பேட்டியை வைத்து எல்லாம் பார்க்கும் போது ...

1972ம் ஆண்டிலே, கலைஞர் மீது எம்ஜிஆர் கவர்னரிடத்தில் கொடுத்த ஊழல் குற்றச்சாட்டுகளை, சட்டமன்றத்தில் வைத்து வரிக்கு வரி பதில் சொன்னார் கலைஞர். பதில் சொல்வதற்கு முன்பாக, எடுத்த எடுப்பிலே சொன்னார்.


இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன். அதுபோல அண்ணாமலை கொடுத்து இருக்கிற எல்லாம் பார்க்கும் போது உள்ளபடியே பட்டிமன்றத்தை பார்ப்பது போல உள்ளது. 


சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தில் இடையிடையே நகைச்சுவை செய்வார்கள். 

ஒரு மணி நேரம் பார்த்தால் அரை மணி நேரம் சிரிக்க கூடிய நல்ல வாய்ப்பு இருக்கும். அதேபோல தான் அண்ணாமலையின் பேட்டியை பார்த்தால் சிரிக்க தான் தோன்றுகிறது. அவரது அறியாமையை பார்த்து, இப்படிப்பட்ட ஒருவர் எப்படி ஐபிஎஸ் தேர்ச்சி செய்தார். எப்படி அவரை போலீஸ் துறையில் வைத்திருந்தார்கள் என்று எல்லாம் சந்தேகம் வருகிறது.


அண்ணாமலை குற்றச்சாட்டு சொல்லியிருக்கும் 12 பேரும் தேர்தலில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் போதும் அவர்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது விதி. தேர்தல் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். டி.வி, பத்திரிகையில் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்று விதி உள்ளது. அவர்களும் அவ்வாறே கொடுத்துள்ளனர். 


அப்படி இருக்கும்போது அண்ணாமலை யாருக்கு பூ சுற்றுகிறார் என்று தெரியவில்லை. அண்ணாமலை கூறிய ஊழல் குற்றச்சாட்டுகளில் எங்கேயாவது லஞ்சம் வாங்கினார்கள். இப்படி பண்ணியிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறாரா என்றால் இல்லை.


அண்ணாமலை எப்போதும் உண்மையை சொல்லி பழக்கம் கிடையாது. உதாரணத்திற்கு, சொல்ல வேண்டும் என்றால், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி செத்து போய் விட்டார் என்று சொன்னார். 

உயிரோடு இருக்கிறாரா, இல்லையா?. இதேபோல தான் அவர் சொல்கிற குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் உள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கிறார். யார் யார் சொத்துகளையோ சேர்த்து சொல்லியிருக்கிறார். இன்றைய மதிப்பை சொல்லியிருக்கிறார். எல்ஐசி ரூ.87 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது என்று தகவல் உள்ளது. 

ன்றைய மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டும். அதேபோல அண்ணாமலை யார், யார் பற்றி சொல்லியிருக்கிறாரோ, அவர்கள் அண்ணாமலை மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பார்கள்.


அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்வதை காட்டிலும், நீதிமன்றத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தான் அதிகமாக இருக்கும். 


ஒவ்வொருவரும் நீதிமன்றத்திற்கு சென்றால், ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் அவர் பதில் சொல்ல வேண்டியது இருக்கும். இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எங்களுக்கு புதியது அல்ல. எம்ஜிஆரே எங்கள் மீது குற்றச்சாட்டு சொன்னார். மவுண்ட் ரோட்டில் உள்ள அண்ணா தியேட்டர் கருணாநிதிக்கு சொந்தம் என்று கையெழுத்து போட்டு கவர்னரிடம் கொடுத்தார். அந்த தியேட்டர் இஸ்லாமியர் ஒருவருக்கு சொந்தம். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அருண் ஓட்டல் என்று உள்ளது. அந்த ஓட்டல் கருணாநிதிக்கு சொந்தம் என்று கவர்னரிடம் கொடுத்தார்.


அது யாருக்கு சொந்தம் என்று எல்லாருக்கும் தெரியும். அதேபோல தான் அண்ணாமலை யார் யாருக்கோ சொந்தமானது எல்லாம் இவர்களுக்கு சொந்தம் என்று சொல்லியிருக்கிறார். சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு அழைப்பார்கள். ஏதாவது ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா? அண்ணாமலையின் பேட்டியே சீட்டிங்கில் ஆரம்பித்துள்ளது. . 


நான் சவால் விட்டு சொல்கிறேன். 6 முறை திமுக ஆட்சியில் இருந்திருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டை சொன்னவர்கள் ஒன்றையாவது நிரூபித்து இருக்கிறார்களா, எம்ஜிஆர் கூட ஊழல் குற்றச்சாட்டை சொன்னார். ஆட்சி அதிகாரம் 10 ஆண்டுகள் அவரிடம் இருந்தது. போலீஸ் கையில் இருந்தது, விஜிலென்ஸ் கையில் இருந்தது.


ஆனால், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. ஊழல் வழக்கு போடமுடியவில்லை. நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை. ஜெயலலிதா கலைஞர் மீது நள்ளிரவில் பாலம் ஊழல் என்று வழக்கு போட்டார். மு.க.ஸ்டாலினை கடலூர் சிறையில் கொண்டு போய் வைத்தார்கள். 


10 வருடம் ஆட்சியில் இருந்தார்கள். ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா, நிரூபிக்க முடிந்ததா, நான் சவால் விட்டு கேட்கிறேன். 

எம்ஜிஆர், ஜெயலலிதாவை விட அண்ணாமலை பெரிய அறிவுலக மேதை இல்லை. 

எம்ஜிஆர், ஜெயலலிதாவாவது ஊழல் குற்றச்சாட்டுகளை சொன்னார்கள் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், அண்ணாமலை சொத்துகளை சொல்கிறார். பெரிய வேடிக்கை என்னவென்றால் திமுக சொத்து என்கிறார்.


தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்கள் எல்லாம் ஆருத்ராவில் டெபாசிட் செய்து விட்டு வயிற்றெரிச்சலோடு 2 நாட்களுக்கு முன்னர் பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


84 கோடியை நேரடியாக அண்ணாமலைக்கும், அவரது சகாக்களுக்கும் கொடுத்ததாக பொதுமக்கள் மட்டுமல்ல, கட்சியில் உள்ளவர்கள் கூட சொல்லி, கமலாலயத்தில் போராட்டம் நடத்தினார்கள். 



திமுகவை பொறுத்தவரை எங்கள் மடியில் கனம் இல்லை. வழியிலேயும் பயமில்லை. அண்ணாமலை சொல்கின்ற குற்றச்சாட்டுகள்

15 நாளில் பத்திரத்தை தர வேண்டும்’

திமுகவுக்கு ரூ.1408.94 கோடி சொத்து இருக்கிறது என்கிறார். அதன் பத்திரத்தை இன்றையில் இருந்து 15 நாட்களுக்குள் எங்களிடம் தர வேண்டும். திமுக பள்ளி நடத்துகிறது என்கிறார். ரூ.3,418 கோடியில் பள்ளிக்கூடங்கள் இருக்கிறது என்கிறார். 


அந்த பள்ளிக்கூடங்கள் எந்த ஊரில் இருக்கிறது என்பதை பெயர் பட்டியலோடு வெளியிட்டு அதற்குரிய ஆதாரத்தை எங்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அடுத்து திமுக கல்லூரி, பல்கலைக்கழகம் நடத்துவதாக சொல்லியிருக்கிறார்.


இதற்கான ஆதாரத்தை சொல்ல வேண்டும். 15 நாட்களில் எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

வியாழன், 13 ஏப்ரல், 2023

அண்ணா மலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியல் யாருக்கு எவ்வளவு சொத்து ? பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை

thoothukudileaks 14-4-2023

யாருக்கு எவ்வளவு சொத்து ? பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை 



தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ஆட்சியாளர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில் திமுக.,வினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் யார் எவ்வளவு சொத்து வைத்துள்ளனர் என்ற விவர பட்டியலையும், ஊழல் விவரத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.



 மேலும் முதல்வர் ஸ்டாலின் ரூ.200 கோடியை இரு ஷெல் நிறுவனத்திடம் இருந்து லஞ்சமாக பெற்றுள்ளார் என்ற திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டார். 

இதனால் முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.



இன்று தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 


இந்த பேட்டியில் அவர் பேசியதாவது :-

ஏனோ தானோ என்று இந்த புகாரை வெளியிடவில்லை. பூதகண்ணாடி கொண்டு பாருங்கள், 

21 ம் தேதி மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அந்நாளில் கேள்வி பதில் வைத்து கொள்வோம்.


இன்று வெளியான சொத்து விவரம் பட்டியல் வருமாறு:


ஜெகத்ரட்சகன் - ரூ.50 ஆயிரத்து ,219.37 கோடி


எ.வ.வேலு - ரூ.5,442.39 கோடி


கே.என்.நேரு - ரூ.2,495.14 கோடி


கனிமொழி- ரூ.830.33 கோடி


கலாநிதிமாறன் - ரூ.12,450 கோடி


டிஆர் பாலு - ரூ.10,841.10 கோடி


துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் - ரூ.579.58 கோடி


கலாநிதி வீராசாமி - ரூ.2,923.29 கோடி


பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி - ரூ.581.20 கோடி


திமுக கட்சியின் சொத்து மதிப்பு - ரூ.1,408.94 கோடி


அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.1,023.22 கோடி


உதயநிதி - ரூ.2,039 கோடி


சபரீசன் - ரூ.902.46


ஜி ஸ்கொயர் வருமானம் - ரூ.38,827.70 கோடி


மொத்தம் ரூ.1,343,170,000,000 (ரூ.1,34,317 கோடி)


ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம்


பாஜக அண்ணாமலை கூறியதாவது: 


முதல்வர் ஸ்டாலினுக்கு ரூ.200 கோடிக்கு ஆல்ஸ்டாம் கம்பெனி மூலமாக லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.


 இந்தோ யூரோப்பியன் வென்சர் பிரைவேட் லிமிடெட் என்ற சிங்கப்பூரை சேர்ந்த ஷெல் கம்பெனியும், ஹாங்காங்கை சேர்ந்த குளோபல் கிங் டெக்னாலஜி என்ற ஷெல் கம்பெனியும் தான் 2011ல் தேர்தல் நிதியாக இந்த பணத்தை ஸ்டாலினிடம் லஞ்சமாக கொடுத்துள்ளது. இதனை சிபிஐ இயக்குனரிடம் நானே நேரடியாக புகார் அளிக்க உள்ளேன். இதில் மத்திய அரசின் 15 சதவீத பங்கு இருப்பதால் இதனை சிபிஐ விசாரிக்க முழு உரிமை உள்ளது.



இது நம் ஜனநாயகத்திற்கான போராட்டம். ஊழல், லஞ்சம் குறித்து இப்போது கேள்வி கேட்காவிட்டால், தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய கேடு காத்துக்கொண்டு இருக்கிறது.