பேருந்து நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேருந்து நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

ஏரல் அருகே அரசு பேருந்து பிரேக் டவுன் - பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை

 தூத்துக்குடி லீக்ஸ் 17 -2-2025

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 


ஏரல் அருகே அரசு பேருந்து பிரேக் டவுன் - பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை

சாயர்புரம், பிப்ரவரி 17: தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது வணிக நகரமாக விளங்கும் ஏரலில் இருந்து திருவைகுண்டம் மற்றும் ஆத்தூர் பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்கும் நிலை தொடர்கிறது.



 இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், 28A என்ற அரசு பேருந்து ஆத்தூரில் இருந்து திருவைகுண்டம் செல்லும் வழியில் வாழவல்லான் பகுதியில் பழுதாகி நின்றது. 


இதில் பயணித்தவர்கள் புதுமனை, அம்மாள் தோப்பு ஆகிய ஊர்களை கடந்து, ஏரல் பேருந்து நிலையம் வரை நடைபயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேபோல், நேற்று (16-2-2025) ஏரல் காவல் நிலையம் அருகே ஏரல்-திருவைகுண்டம் வழித்தடத்தில் ஓடிக் கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் பேருந்து நிலையம் வரை நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டது. இதுவே தொடர்ந்து நடப்பதால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலை தொடராமல் இருக்க, பழுதாகும் பழைய பேருந்துகளை ஒதுக்கி, புதிய பேருந்துகளை இயக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றங்கள் தேவையா?

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

தூத்துக்குடி: புதிய பேருந்து நிலையத்தில் "யூத் சலூன்" திறப்பு

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி: புதிய பேருந்து நிலையத்தில் "யூத் சலூன்" திறப்பு



இளைய சமுதாயம்  

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள "யூத் சலூன்" இன்று 15-12-2024 ஞாயிறு திறக்கப்பட்டது.


 இந்த சலூன், இளைய சமுதாயத்திற்கேற்ப நவீன உள் கட்டமைப்புகளை வழங்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது.

எங்குமில்லாத நவீன கட்டமைப்பு 

சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த சலூன், நவீன வசதிகளுடன் கூடியது.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே .... "யூத் சலூன்" 

  

தூத்துக்குடி மாநகரின் முக்கிய பகுதியான தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்  உள்பகுதியில் அமைந்துள்ளதால், இது பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன முறையில் பல சலுகைகள் வழங்கப்படுவதாக சுதீப் தெரிவித்தார் கள்.


சலூன் திறப்பு விழாவில் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.


வரவேற்பு 

இந்நிகழ்ச்சியில் யூத் சலூன்

 சார்பில் 

சு.சுதிப்

சு.அஸ்வின்

சு. பேச்சீராஜ்

பா சண்முக சுந்தரம்

ரா சஞ் சய்

வீ.ஸ்ரீராம்

ப ராகுல். ஆகியோர் கலந்து கொண்டவர்களை வரவேற்றனர் .


சனி, 7 செப்டம்பர், 2024

குட்டி ஸ்டோரி?தூத்துக்குடி மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்ட்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

7-9-2024 photo news 

by Arunan journalist 

தூத்துக்குடி மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்ட்



ஒரு  குட்டி ஸ்டோரி!!!

next news 


தூத்துக்குடியில்...

(கூட்டமில்லாத ட்ரிப் ல)

ஒரு மினிபஸ் ல 

டாஸ்மாக் குடிமகன்  & கண்டக்டர் 

சுவாரஸ்யமான உரையாடல் 


குடிமகன்:-  இந்தா ப்பா மாட்டு தாவணி க்கு ஒரு டிக்கெட் கொடு 


கண்டக்டர் : என்னென்னே சொல்ற


குடிமகன்:- அதாம்பா நம்ம மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்ட் 



கண்டக்டர் :-

ஒ அது வா  தந்துடுறேன் 


இந்தா பிடி  புது பஸ்ஸ்டாண்ட் டிக்கெட் 



குடிமகன்:- 

ஒகே யப்பா


கண்டக்டர்:- 

உன்ன மாதிரி தான் அண்ணே  

இப்ப எல்லாரும் டிக்கெட் கேட்கிறாக

என்னத்த சொல்ல!!!



குடிமகன்: நாங்க யாருன்னு தெரியுமா கப்பல்ல இங்க ஹிட்லர் வந்தப்ப ... 


கண்டக்டர்:- வந்தாரா!!!!


குடிமகன்:- நம்ம ஊரு கடலில் கப்பல் ல வந்தாரு 

இப்பவும் நேரே போ கடல் தெரியும் 

அப்ப ஹிட்லர் விரும்பி கேட்டார் கிட் கேட் சாக்லேட்   


அப்ப கூட ..

இந்தியா வேனுமா இலங்கை வேனுமா அவரு கேட்டப்ப எங்க தாத்தன் வேணாம்னு சொல்லிட்டாரு


கண்டக்டர்:- ஏன் அண்ணே?


குடிமகன்:- அப்பவே வாங்கி போட்டு இருக்கலாம்...?

ச்சே மிஸ் பண்ணிட்டாங்க 

ஹிட்லர் ரொம்ப நல்ல மனுஷன் தீடீர்ன்னு தற்கொலை பண்ணி செத்துட்டாரு

 

ஹிட்லர் போட்டோ  பாக்குறியா என் செல் போன் ல


கண்டக்டர்:- அண்ணே கொஞ்சம் கம் ன்னு வாண்னே 


இதோ நீ கேட்ட மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்ட் வந்துட்டு இறங்கு!!!

தள்ளாடி இறங்கும் போது... கண்டக்டர் கொஞ்சம் சத்தமாக 

அண்ணே உங்க கட்சி தலைவரை நான் கேட்டதாக சொல்லு?

காதில் கேட்ட குடிமகன் யூட்டனாக மினிபஸ் நோக்கி திரும்பி வர... 



மினிபஸ் மின்னல் வேகமெடுத்தது



இப்படி தான் மாறி போச்சு ங்க


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்



next news 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் 

பசு மாடுகள் அங்குமிங்கும் திரிகின்றன 

குறிப்பாக.. வேகமாக வரும் பஸ் 🐄 மாடுகள் முன் வந்து போவதால் விபத்து ஏற்படலாம் 

இதே போல...

மதுரை பஸ் க்காக இருக்கையில் காத்திருக்கும் பயணிகள் இன்று தள்ளி விட்டு மாடுகள் செல்கிறது 

சிறு குழந்தைகள் வேறு நடமாட்டம்.




இஃது போன்று தமிழகத்தில் எந்த மாநகராட்சி பஸ் நிலையத்திலும் இந்த நிலை இல்லை 

இன்று 7-9-2024 இருக்கையில் காத்திருக்கும் மதுரை பயணிகளை இடித்து கடந்து செல்லும் 🐄 மாடுகள் 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே 🐄 மாடுகள் திரிவதை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறதா என மதுரை செல்லும் பயணி பேசுகையில் ....

மதுரை யில் மாட்டு தவணி இருந்த இடத்தில் மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்ட் வந்த போதும்...அதன் எல்லை யில் ஒத்த மாடு கூட இப்படி சுற்றி திரியாது 

இது வீடியோ அழுத்தி பார்க்க...


சாலையில் சுற்றி திரியும் மாடுகள் பிடித்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள்.

இப்போது... மதுரை மாட்டு தாவணி பேருந்து நிலையம் 

எம்ஜிஆர் பேருந்து நிலையம் ஆக பெயர் மாற்றி ட்டாங்க ....

இது வீடியோ அழுத்தி பார்க்க...

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் இங்கு 🐄 மாடுகள் சுற்றி திரிவதை தூத்துக்குடி மாநகராட்சி தடுக்காமல் ஏன் விட்டு வைக்கிறது புரியல என கேள்வி எழுப்பினார் .






ஞாயிறு, 10 மார்ச், 2024

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் . மேயர் ஜெகன் பெரியசாமி இரண்டு விற்பனை கடைகள் திறப்பு

கருப்பட்டி விற்பனை  கடை அண்ட் ஸ்ரீ லெட்சுமி பேன்ஸி & புட் கேர் திறப்பு விழா  மேயர் ஜெகன் பெரியசாமி  தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் ஆரம்பித்து வைத்தார்.



இதுபற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே PSB கருப்பட்டி விற்பனை கடை இன்று 11-3-2024 காலை 10 மணியளவில் மேயர் ஜெகன் பெரியசாமியால் திறக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி அங்குள்ளவர்களிடம் கருப்பட்டி துண்டுகளை வழங்கி பொதுமக்கள் அனைவரும் மனித உடலுக்கு வலுசேர்க்கும் தரமாக கருப்பட்டி வாங்கி உபயோகிக்குமாறு கேட்டு கொண்டார்.


நிகழ்ச்சி ஏற்பாடுகள செய்த விற்பனையாளர் PSB ராஜா இங்குஉடன்குடி - வேம்பார் பகுதி தயாரிக்கப்படும் சுத்தமான நம் உடலுக்கு வலுசேர்க்கும் தாமான கருப்பட்டி அச்சுவெல்லம் பனங்கற்கண்டு சர்க்கரை  சில்லு கருப்பட்டி என அனைத்து வகைகளும் கிடைக்கும் பொது மக்கள் அனைவரும் வாங்கி பயன்பெறுமாறு கேட்டு கொண்டார்.




அடுத்தாக ஸ்ரீலெட்சுமி பேன்ஸி & புட் வேர்  விற்பனை கடையை மேயர் ஜெகன் பெரியசாமி  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சி  ஏற்பாடு ஸ்ரீ லெட்சுமி ஃபே பேன்ஸி உரிமையாளர் A.ராஜ்குமார்

தங்கள் கடையில்

புத்தம்புது டிசைனில் அனைத்து வகையான பொருட்களும் குறைவான விலையில் கிடைக்கும் அனைவரும் அழகுபொருட்கள் பயன்பெறுமாறு கேட்டு கொண்டார்.



இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 8 மார்ச், 2024

வள்ளியூரை புறக்கணிக்கும் பேருந்துகள்.... அல்லல் படும் பொதுமக்கள்..

மீண்டும் வள்ளியூரை புறக்கணிக்கும் பேருந்துகள்....

அல்லல் படும் பொதுமக்கள்..



இது பற்றிய செய்தியாவது :-

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் முறையாக வந்து செல்ல வேண்டுமென கடந்த 2023 வருடம் ஜூன் மாதம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் PDP.சின்னதுரை தலைமையில் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டு பேருந்துகள் முறையாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.



 இதனைத் தொடர்ந்து 2023 ஜூலை மாதம் சபாநாயகர் அப்பாவு, சசிகுமார் துணை மேலாளர் வணிகம் முன்னிலையில் போக்குவரத்துக் கழக அதிகாரிகளோடு வள்ளியூர் பயணியர் விடுதியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று போடப்பட்டு நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும் 18 END TO END பேருந்துகளை தவிர மற்ற அனைத்து பேருந்துகளும் வள்ளியூர் ஊருக்குள் வந்து செல்ல வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டு அதன்படி கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக பேருந்துகள் வள்ளியூர் ஊருக்குள் முறையாக வந்து சென்றது..

அரசு உத்தரவு 

 ஆனால் தற்பொழுது கடந்த சில மாதங்களாகவே மீண்டும் வள்ளியூர் ஊருக்குள் பேருந்துகள் வராமல் புறவழிச் சாலையில் செல்ல துவங்கி உள்ளதால் மக்கள் கடும் அவதிக்க ஆளாகின்றனர்.


 குறிப்பாக மதுரை மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் கோவை மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் வள்ளியூர் ஊருக்குள் வருவதில்லை,


 நேற்று மதியம் திருநெல்வேலியில் இருந்து மதுரை மண்டல பேருந்தில் (TN 58 N 2404) ஏறிய வள்ளியூர் பயணிகள் 12 பேரை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இணைந்து வள்ளியூர் போகாது எனக் கூறி திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வெளியே இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.


இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி தெற்கு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் PDP சின்னதுரை சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக சசிகுமார்துணை மேலாளர் வணிகம் அதிகாரியிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.



இன்று மதியம் அதே மதுரை மண்டலத்தை சேர்ந்த TN 58 N 2482 பேருந்து மதியம் திருநெல்வேலியில் இருந்து குமார் 15 பயணிகள் ஏறிய நிலையில் 15 பயணிகளையும் வள்ளியூர் போகாது எனக்கூறி கீழே இறக்கி விட்டு சென்றுள்ளார். அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து பழனி பணிமனையில் இருந்து இயக்கப்படும் நாகர்கோவில் பழனி பேருந்து வள்ளியூர் போகாது எனக் கூறி நடத்துனர் தகராறில் ஈடுபட்டு.

அதிகாரியிடம் முறையிட்டு அதன் பின்பு தான் பேருந்தானது வள்ளியூர் ஊருக்குள் வந்து சென்றது.

தொடர்ந்து இதுபோன்று வள்ளியூர் வளர்ச்சியை தடுக்கும் விதத்திலும் வள்ளியூரை புறக்கணிக்கும் விதத்திலும் அதிகாரிகள் ஈடுபடுவது மிகவும் வேதனையடைய செய்துள்ளது என்கிறார்கள்.




செவ்வாய், 10 அக்டோபர், 2023

பயணிகள் மகிழ்ச்சி ஸ்மார்ட் சிட்டி தூத்துக்குடி மாநகராட்சி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையம் உள்ளே பேருந்துகள் இயக்கப்படும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆனையர் தினேஷ்குமார் முன்னிலையில் கலெக்டர் செந்தில் ராஜ் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்

தூத்துக்குடி லீக்ஸ் 10-10-2023

photo news  

arunan journalist 

ஸ்மார்ட் சிட்டி தூத்துக்குடி மாநகராட்சி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையம்  நாளை முதல் பேருந்து கள் உள்ளே செல்லும் இயக்கப்படும் என அறிவித்தனர் 

பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய தொடங்கி விட்டார்கள்.



இதுபற்றி செய்தியாவது

தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் கடந்த 2019 ல் இடிக்கப்பட்டு சீர்மிகு திட்டம் ஆக ரூபாய் 58.கோடி 67 லட்சம் மதிப்பீட்டில் மிக சிறப்பாக தூத்துக்குடி பொதுமக்கள் அதிசயத்தக்க விதத்தில் 4 அடுக்கு ஃப்ளோர் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது.

கனிமொழி எம்பி - அமைச்சர் கே என் நேரு திறப்பு 



இருநாட்களுக்கு முன் 8-10-2023  அன்று காலை 12 மணி அளவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி பேருந்து நிலையத்தில் அடிக்கல்லை திறந்து வைத்திட மாநகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பேருந்து நிலையம் வாயிலை  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் .




இந்நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு  தீடீர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்



 தூத்துக்குடி மாவட்ட அமைச்சர்கள் -கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் மார்கண்டேயன் எம்எல் ஏ மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாகராட்சி ஆனையர் தினேஷ்குமார் மாநகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




  ஆயினும்...அன்று 

 ஸ்மார்ட் சிட்டி தூத்துக்குடி மாநகராட்சி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பஸ்கள் உள்ளே வந்து செல்ல இயங்கபட வில்லை 

மின் இணைப்பு வயர் பொருத்துதல், குடிநீர் இனைப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா அமைக்கும் சில பணிகள் பாக்கி முழுமையடையாமல் இருந்தாக கூறினார்கள் மேலும் வியாபாரம் கடைகள் திறக்கப்படவில்லை

ஆகவே இன்று10-10-2023  காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கலெக்டர் செந்தில் ராஜ் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆனையர் தினேஷ் குமார் ஆகியோர் பஸ் நிலைய பகுதியில் ஆய்வு செய்ய வந்திருந்தனர்.



அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது 

11-10-2023 அனறு முதல் ஸ்மார்ட் சிட்டி தூத்துக்குடி மாநகராட்சி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையம் உள்ளே பேருந்துகள் இயக்கப்படுகின்றன திருநெல்வேலி திருச்செந்தூர் பஸ்கள் உள்ளே வந்து செல்லும் முவரும்  மகிழ்ச்சி யுடன் தெரிவித்து கொண்டார்கள் 

பயணிகள் மத்தியில் ரொம்ப மகிழ்ச்சி 

தூத்துக்குடி இருந்து வெளியூர் சென்று வரும் பேருந்து நிலையத்தில் நாளை ஹேப்பி மோடூல சுற்ற வர போகிறார்கள்

பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் பஸ் நிலையம் பூராவும் சுற்றி சுற்றி வருவார்கள் 

 


குடிநீர் ஆண் பெண் கழிவறைகள் இலவசம் ஆங்காங்கே பச்சை பசேல் ஃபுல் வெளிகள் அகண்ட விஸ்தாரமான காற்றோட்டம் முக்கிய மாக‌ செல்ஃபி பாயிண்ட் உட்பட 

சிறுகுழந்தைகள் இளைஞர் கள் மகளிர் கள் கவரும் வண்ணம் இருப்பதால் 


தூத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ் மாநகராட்சி ஆனையர் தினேஷ் குமார் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் .




தூத்துக்குடி லீக்ஸ்

சிறப்பு பதிவு 10-10-2023
ரோஜா அருணன் செய்தியாளர் 

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

பரபரப்புக்கு மத்தியில் பேறிஞர் அண்ணா பேருந்து நிலையம் தூத்துக்குடியில் திறப்பு கோலாகலமாக கொண்டாடப்பட்டது

thoothukudileaks 8-10-2023

photo news by arunan journalist 

பேறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அரசியல் பரபரப்புடன் தூத்துக்குடியில் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது



 தூத்துக்குடி மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் இன்று 8-10-23 திறப்பு விழா கோலாகலமாக வெகு விமரிசையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.


 இது பற்றி செய்தியாவது


 தூத்துக்குடியில் பழைய பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் சீர்மிகு நகர திட்டத்தின் படி 57 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு இன்று 8-9-2023 காலை  11-30 மணியளவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி இணைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ரிப்பன். கட் பண்ணி திறந்து வைத்தார்கள்.

பின்னர் உள்பகுதி பேருந்து‌ வளாகத்தில் மலர் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த  குத்துவிளக்கில் மெழுகுவர்த்தி யால்‌ திரியில் 🔥 தீபம்  ஏற்றினார்கள்.



அடுத்து சரியாக 12-03 pm தூத்துக்குடி மாநகராட்சி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையம் பெயர் பொறித்த அடிக்கல் ஸ்கீரின் ரிமோட் ஜ வைத்து கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.







 இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...

ரூபாய் 87 கோடி மதிப்பில் கழிவுநீர் கால்வாய் பணிகள், மீன்வளத்துறை சார்பில் ரூபாய் 9 கோடி மதிப்பில் மீன் ஏலக்கூடம், பொதுப்பணித்துறை சார்பில் எட்டயபுரத்தில் ரூபாய் 5.63 கோடி மதிப்பில் சார் பதிவாளர் கட்டிடம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2.75 கோடி மதிப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில்‌ பல்வேறு இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்கள்.


தூத்துக்குடி மாநகராட்சி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையம் 1to 4 ஃப்ளோர் வரைபடம் 

தூத்துக்குடி அம்பேத்கார் நகரில் ரூபாய் 29 கோடி மதிப்பில் புதிதாக‌ அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் பூங்கா திறக்கப்பட்டது.

திறப்பு விழா மேடையில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது...


உடன், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் .ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர்.தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அண்ணா பேருந்து நிலையம் திறப்பு விஷயத்தில்...

தூத்துக்குடி யில் திமுக அதிமுக பாஜக அரசியல் கட்சிகள் பரபரப்பு காட்டியது   

புதியதாக கட்டி முடிக்கப்பட்ட அண்ணா பேருந்து நிலையம் வர நாங்க தான்  என அதிமுக பாஜக கட்சிகள் இன்று தூத்துக்குடி மாநகரில் பரபரப்பு போஸ்டர் ஒட்டி இருந்தார்கள் அதே போல் திமுகவும் ஒருவிதமாக பரபரப்பு போஸ்டர் ஒட்டி இருந்தார்கள்.


திறப்பு விழா முந்தைய தினம்7-10-203 காலை தூத்துக்குடி மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையம் நுழைவு வாயில் எழுத்து அருகில் பிரதமர் மோடி படத்தை ஒட்டியதும் .. பின்பு கிழிக்கப்பட்ட தும் பரபரப்பாக 

அடுத்து திறப்பு விழா நடைபெறும் போது தூத்துக்குடி பாஜாகா தரப்பு கறுப்பு கொடி காட்டுவோம் என கிளப்பி விட்டது வேற டென்ஷன் ஏற்படுத்தி இருந்தது

பேருந்து நிலையம் சுற்றிலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்ததால் ஒன்றும் நடக்கவில்லை

மேயரின் உழைப்புக்கு பாராட்டு 

மேயர் ஜெகன் பெரியசாமி ஆனையர் தினேஷ் குமார் காட்டிய விறுவிறுப்பினால்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் இன்று காலை வரை முழு டென்ஷன் ஆகி இருந்தது நிகழ்ச்சி முடிந்ததும் தான் பெருமூச்சு விட்டனர் 

கடந்த சில நாட்களாக இரவுபகல்பாராமல்

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆனையர் தினேஷ் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக ரொம்ப மும்மரமாக ஒவ்வொரு விஷயமும் துரிதகதியில் செய்து முடித்தது கண்கூடு இப்போது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்கள்.


சனி, 7 அக்டோபர், 2023

பிரதமர் மோடி படம் கிழிப்பு கலைஞர் எழுத்து பொறிப்பு தூத்துக்குடியில் தீடீர் பரபரப்பு பாஜக vs திமுக மோதல்

thoothukudileaks 7-10-2023

Photo news by arunan journalist 

தூத்துக்குடியில் பாஜக திமுக திடீர் மோதல் பரபரப்பு 

இது பற்றிய பரபரப்பு செய்தியாவது:-

மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ருபாய் 53 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் நாளை 8 -10 -2023 அன்று காலை திறப்பு விழா நடைபெறும் என நேற்று6-10-2023 அமைச்சர் கீதா ஜீவன் தகவல் தெரிவித்தார்.

மேலே ஒட்டப்பட்ட பிரதமர் மோடி படத்தை சிலர் கிழிக்கிறார்கள்



 அதன்படி அதற்கான வேலைகள் துரிதமாக புதியதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்தது.பந்தல் மேடை அமைப்பு தொடக்க விழா ஆரம்பிப்பதற்கு தெரிய அகன்ற திரை அதாவது ஸ்கீரின் டிவி பணிகள் நடைபெற்று முடிந்தது

இந்நிலையில் இன்று 11 மணி அளவில் தூத்துக்குடி பாஜகவினர் 10 பேர் மேற்பட்டோர் வாசல் நுழைவு பகுதியில் வைக்கப்பட்டிருந்த வளைவில் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது 

பாஜாகா வினர் 


எழுதப்பட்ட கரையோரம் இடைவெளி இருந்தது அதில் பிஜேபினர் மேலே ஏறி பிரதமர் மோடியின் படத்தை உருவப்படத்தை ஒட்டி விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டம் மத்திய அரசு திட்டம் பிரதமர் மோடி படம் இருக்க வேண்டும் என அங்கு இருந்து சென்றார்கள்.

பிரதமர் மோடி படம் கிழிப்பு !!!

இதனால் திமுக வினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வியப்போடு பார்க்க ஆரம்பித்தார்கள் இது விஷயம் தெரிந்ததும் பதறி அடித்து ஓடி வந்தார் அமைச்சர் கீதா ஜீவன்.

அவர் வருவதற்குள் சிலர் மேலே ஏறி பிரதமர் மோடியின் உருவப் படத்தை தாறுமாறாக கிழித்து கீழே எறிந்தார்கள்


இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  அப்போது உள்ளே வந்து பார்த்த அமைச்சர் கீதா ஜீவன் எதுவும் நடந்தால் உடனே எனக்கு இடம் என்னிடம் தகவல் தெரிவிக்குமாறு அங்கிருந்து இருந்தவர்களிடம்  பேசி  விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார் .

அவர் சென்ற அரைமணி நேரத்தில் ..

 கலைஞர் நூற்றாண்டு எழுத்து பொறிப்பு!!! 


கிழித்து எறியப்பட்ட பகுதியில் 

பேருந்து நிலைய நுழைவு வாயில் எழுதிய பெயிண்ட் தொழிலாளர் கள் திரும்ப வரவழைக்கப்பட்டு அவர்களிடம் கலைஞர் நூற்றாண்டு எழுதி விட்டார்கள் .

கலைஞர் நூற்றாண்டு என  திரும்ப வந்து எழுதும் தொழிலாளர் 


பிரதமர் மோடி படம் ஒட்டிய இடத்தில் கலைஞர் நூற்றாண்டு எழுதப்பட்டது 

 பாஜகவினர் கறுப்பு கொடி 

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி புதிய பேருந்து நிலையத்தில் ஏற்கனவே இருந்த பிள்ளையார் கோயில் வைக்கப்பட வேண்டுமென என தூத்துக்குடி பிஜேபியினர் கோரிக்கை வைத்தனர் .

அப்படி வைக்கப்படவில்லை  எனில் புதிய தாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு விழாவின் போது பிஜேபியினர் கருப்பு கொடி காட்டுவோம் என செய்தியாளர்கள் களிடம் தெரிவித்திருந்தார் கள் குறிப்பிடத்தக்கது .

கறுப்பு கொடி காட்டுவோம் என தூத்துக்குடி ிஜேபியினர் பேட்டியளித்த கடந்த September 29 ல் எடுத்த வீடியோ 

தற்போது ஸ்மார்ட் ஸ்மார்ட் சிட்டி புதிய புதிதாக கட்டப்பட்ட அண்ணா பேருந்து நிலையம் சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பேருந்து நிலையம் சுற்றி காவல்துறை பாதுகாப்பு 


தூத்துக்குடியில் பாஜக திமுக தீடீர் மோதல் நடவடிக்கைகளால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது .

கோட்டை விட்ட காவல்துறை டென்ஷன்


இன்று காலை 11 மணியளவில் பாஜாகா வினர் பிரதமர் மோடி படம் ஒட்ட வந்த போது காவல்துறை கோட்டை விட்டதால் அவர்கள் ஒட்டி சென்று விட்டனர் உளவு்துறை மெத்தனம் இருந்ததால் இச்சம்பவம் நடந்து விட்டது அவ்விடத்தில் பிரதமர் மோடி படம் ஒட்ட விடாமல் தடுத்து இருக்கலாம் என அப் பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர் 
பின்னர் பிரதமர் மோடி படம் கிழிப்பு போதும் தடுக்க வில்லை என்கிறார்கள்.