கல்வி செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 ஜூன், 2025

100% தேர்ச்சி சாதனை: ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம், கொம்மடிக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வித் தரத்தில் தொடர்ந்தும் சாதனை படைத்து வருகிறது.



இக்கல்லூரியில் 2023 - 2025 கல்வியாண்டில் முதுகலை வணிகவியல் (M.Com) படிப்பை பயின்ற மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த மாணவர்களின் உழைப்பையும், பேராசிரியர்களின் முழுமையான வழிகாட்டலையும் கல்லூரி முதல்வர் டாக்டர். அருள்ராஜ் பொன்னுதுரை மற்றும் துணை முதல்வர் டாக்டர். மகேஷ் குமார் சிறப்பாக பாராட்டினர்.

2025 - 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவலுக்கு 99655 09113 மற்றும் 99524 88989 என்ற எண்ணங்களில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.



சனி, 21 ஜூன், 2025

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் சர்வதேச யோகா தினம் விழா கொண்டாடப்பட்டது

 Tamil Nadu updates, photo news by Tamilan Ravi

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தேதி: ஜூன் 21, 2025

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் சர்வதேச யோகா தினம் விழா கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஜூன் 21ஆம் தேதி சிறப்பாக யோகா விழா நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்னான்டோ தலைமையிலும், கல்லூரி செயலர் அருட்சகோதரி குழந்தை திரேஸ் முன்னிலையிலும் நடைபெற்றது. 



காலை நேரத்தில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியை பயிற்சியாளர் முத்துலட்சுமியும், என்.சி.சி. லெப்டினன்ட் மேரி பிரியாவும் மாணவிகளுக்கு வழிகாட்டியாக இருந்து நேரடியாக நடத்தினர்.



சுமார் 70க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவிகள் இதில் பங்கேற்று, யோகாவின் முக்கியத்துவத்தையும், பல்வேறு ஆசனங்களின் பயன்களையும் புரிந்து கொண்டு ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.


மாணவிகளிடையே மன உறுதி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 21 மார்ச், 2025

தமிழர் அடையாளங்கள் தமிழர்களால் அழிக்கப்படுகின்றன – திருப்பணி செட்டிகுளத்தில் விழிப்புணர்வு முகாம்

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தமிழர் அடையாளங்கள் தமிழர்களால் அழிக்கப்படுகின்றன – திருப்பணி செட்டிகுளத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது 



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி: தமிழர் பண்பாடு, மொழி மற்றும் அடையாளங்களை காப்பாற்ற வேண்டிய தேவையை வலியுறுத்தும் வகையில், திருப்பணி செட்டிகுளத்தில் நாட்டு நல பணித் திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றது. சாயர்புரம் டாக்டர் ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி சார்பாக நடைபெற்ற இந்த முகாமில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இம்முகாமிற்கு கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ரவீந்திர சார்லஸ் தலைமை வகித்தார். முதல்வர் டாக்டர் ஜே. ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். முகாமின் சிறப்பு அழைப்பாளராக திருப்பணி செட்டிகுளம் ஊராட்சி தலைவர் சுயம்புலிங்கம் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினார்.

தமிழரின் அடையாளங்கள் – விழிப்புணர்வு உரை

முகாமின் முக்கிய நிகழ்வாக தமிழன்டா இயக்க தலைவர் ஜெகஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 


"தமிழர் அடையாளங்கள் தமிழர்களால் அழிக்கப்படுகின்றன" என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். இவ்வுரையில், தமிழர் பண்பாடு, மரபுகள், மொழி, கலாச்சாரம் ஆகியவை மெல்ல மெல்ல அழிவுப் பாதையில் செல்லக் காரணமான சமூகச் சூழல், கல்வி மற்றும் பண்பாட்டு மாற்றங்களை அவர் விளக்கினார்.



"தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழக்காமல் இருக்க, மரபு, மொழி, வரலாறு ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பு நம்மிடமே உள்ளது" என அவர் வலியுறுத்தினார். மேலும், இயற்கை உணவு, ஆரோக்கியம், வாழ்வியல் தத்துவங்கள் குறித்து மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

முகாமின் முக்கிய நிகழ்வுகள்

  • முதல் நாள்: இயற்கை உணவு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
  • மாணவர்கள் பங்கேற்பு: பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்களது சமூகப் பணியின் ஒரு பகுதியாக முகாமில் கலந்துகொண்டு பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டனர்.
  • பொதுமக்கள் உற்சாக பங்கேற்பு: ஊர் மக்கள் ஆர்வத்துடன் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு

இந்த முகாமை நாட்டு நல பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் சா. டென்னிசன் ஒருங்கிணைத்தார். மேலும், எஸ்தர் தங்கம், அந்தோணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.



இம்முகாம், தமிழர் மரபு மற்றும் பண்பாட்டு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

மேலும் விவரங்களுக்கு: தூத்துக்குடி லீக்ஸ்

புதன், 29 ஜனவரி, 2025

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மகளிர் பூப்பந்தாட்டம்: புனித மரியன்னை கல்லூரி சாம்பியன்

 # மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மகளிர் பூப்பந்தாட்டம்: புனித மரியன்னை கல்லூரி சாம்பியன்

Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜனவரி 29, 2025


APCV மகாலட்சுமி கல்லூரியில் நடைபெற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் பூப்பந்தாட்ட போட்டியில், புனித மரியன்னை கல்லூரி மாணவிகள் அணி வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது.



கேப்டன் மாளவிகா தலைமையிலான இந்த அணி, அரை இறுதியில் வ.உ.சி கல்லூரி அணியை நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் APCV மகாலட்சுமி கல்லூரி அணியை 35-28, 28-35, 35-28 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.


"குறிப்பிடத்தக்க வகையில், புனித மரியன்னை கல்லூரி அணி கடந்த ஆண்டு தென்காசி ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் நடந்த போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆண்டு போட்டியை நடத்திய APCV மகாலட்சுமி கல்லூரி அணியையே வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது."



வெற்றி பெற்ற அணி உறுப்பினர்கள்:

- மாளவிகா (கேப்டன்)

- அனி

- P.சந்தியா

- சசி

- முவேதா

- கயல்விழி

- ஸ்ரீமாரி தங்கம்

- மெர்ஸி டயானா

- பவித்ரா


வெற்றி பெற்ற அணிக்கு சுழல்கோப்பை வழங்கப்பட்டது. 




சிறப்பாக விளையாடிய அனைத்து வீராங்கனைகளையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் திரு. பாலசிங் மற்றும் திரு. ஈஸ்டர் ஆகியோரையும் புனித மரியன்னை கல்லூரி முதல்வர் முனைவர். சகோ. ஜெஸ்ஸி பர்ணாந்து பாராட்டி வாழ்த்தினார்.



புதன், 20 நவம்பர், 2024

மாணவி மகேஷ் நாச்சியார் சாதனை சிலம்பம் போட்டியில் முதலிடம் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம்கால்வாய் கிராமத்தை சோ்ந்த பள்ளி மாணவி

அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த   மாணவி மகேஷ் நாச்சியார் சாதனை படைத்துள்ளார்.

இது பற்றிய செய்தியாவது:-

பெங்களுாில் அகில இந்திய அளவில்  சிலம்பம் போட்டி நடைபெற்றது இதில் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிலம்பம் பயிற்சி எடுத்த மாணவிகள் போட்டி யில் கலந்து கொண்டார்கள்.


தமிழகத்தின் சார்பில்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமத்தை சோ்ந்த உக்கிரபாண்டி இசக்கிராணி தம்பதியினர் மகள் மகேஷ் நாச்சியார். கலந்து கொண்டார்.


பெங்களூரில் அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் மகேஷ் நாச்சியார் முதலிடத்தில் வெற்றி பெற்றார்.



மாணவி மகேஷ் நாச்சியார்  இந்தியாவில் முதலிடம் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளாா்.


    

     இந்த விளையாட்டு போட்டிகளின் மூலம் பல மாணவ மாணவிகள் அரசுத்துறை சார்ந்த படிப்புடன் கூடிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அரசுத்துறை சார்ந்த பணிகளுக்கும் தேர்வாகி வருகின்றன. 


தமிழக அரசை பொறுத்தவரை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பும் தமிழகத்தில் எல்லா விளையாட்டு போட்டி களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு ஊக்குவித்து வருகிறார். 



மாநில அளவில் தேர்ச்சி பெறும் வீரர்களுக்கு அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகள் மட்டுமின்றி உலக அளவில் நடைபெறும் போட்டி களுக்கும் தேவையான உதவிகளை அரசின் சார்பில் செய்து வருகிறார். 

  Photo news by

sunmugasuthram Reporter 



திங்கள், 11 நவம்பர், 2024

பாலியல் தொந்தரவு மறைக்கும் பள்ளி நிர்வாகம் விளையாட்டு ஆசிரியர் கைது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை மேலும் பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளரும் கைது

பள்ளி 🏫 மாணவிகளுக்கு 

பாலியல் தொந்தரவு மறைக்க முயற்சி யில் பள்ளி நிர்வாகம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிரடி போக்சோ வில் விளையாட்டு ஆசிரியர் கைது நடவடிக்கை 

அதனை தொடர்ந்து தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளரும் கைது செய்யப்பட்டு ள்ளார்கள்.





தூத்துக்குடி மாவட்டம் :12.11.2024

இது பற்றிய செய்தியாவது 

விளையாட்டு ஆசிரியர் மீது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை க்கு வந்த பாலியல் புகார்!!!


மாணவிகளை அழைத்து சென்ற இடத்தில் விளையாட்டு ஆசிரியர் மதுபானம் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு 

திருச்செந்தூர்  பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு தூத்துக்குடி க்கு  அழைத்து சென்ற இடத்தில் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும், மேலும் அந்த தனியார் பள்ளி நிர்வாகம் இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்காமல் மறைப்பதாகவும் தெரிய வந்தது


சம்பவம் உண்மை!!!

 அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி,  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி சம்பவம் உண்மை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

போக்சோ சட்டத்தில் கைது!!

இதனையடுத்து மேற்படி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான உடன்குடி கிறிஸ்டியானகரம் பகுதியைச் சேர்ந்த பொன்சிங் (42) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மூடி மறைக்க முயன்ற தனியார் பள்ளி மீது காவல் துறை வழக்கு பதிவு 


பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளரும் மீது கைது செய்யப்பட்டு உள்ளார்கள்!!!

மேலும் பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்ட சம்பவத்தை காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்காமல் மறைக்க முயன்ற பள்ளியின் முதல்வர் மற்றும் பள்ளியின் செயலாளர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சனி, 9 நவம்பர், 2024

ஈரோட்டில் 100 மீ ஓட்டப்பந்தய போட்டி தூத்துக்குடி மாணவி தங்கம் வென்றார்

தமிழ் நாடு  அரசின் சாா்பில்     மாநில அளவிலான  17  வயதிற்குட்பட்ட  100  மீட்டா்   ஓட்டப்பந்தயம்  ஈரோட்டில்  நடைபெற்றது



இப் போட்டியில் தூத்துக்குடி புனித  சவேரியாா் உயர்நிலைப்பள்ளி சார்பில் மாணவி சகாய  ஜெமியா கலந்து கொண்டார்.நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

வரவேற்பு!!!

வெற்றி பெற்று தூத்துக்குடிக்கு வந்ததும்    மாணவி சகாய  ஜெமியாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியர்  மரிய செல்வராணி  பூங்கொத்து  அளித்து வரவேற்றார்.

மகிழ்ச்சி 

 தூத்துக்குடி  சவேரியாா்புரம்   

பங்கு தந்தையும்  பள்ளியின் தாளாருமான  அருட்தந்தை குழந்தை ராஜன்     

ஊர் நிர்வாகி  பிரான்ஸிஸ் மற்றும் பள்ளியின் பழைய மாணவர் ஜான்கென்னடி  ராஜன் ஆகியோர் சந்தனமாலை மற்றும் பொன்னாடை அனிவித்து மகிழ்ச்சி தெரிவித்தார் கள். 

பாராட்டு நிகழ்ச்சி 

தொடர்ந்து  பள்ளியின்  கலையரங்கில்  வைத்து  பாராட்டு விழா நடைபெற்றது    

     

பாராட்டு விழாவில்  மாணவ மாணவிகள்  கை தட்டி  உற்சாகபடுத்தி பரிசு கள் வழங்கினார்கள்  

நன்றி தெரிவித்த பெற்றோர்கள்!!!

வெற்றி பெற்ற  மாணவிக்கு  உதவி புரிந்து உற்சாகபடுத்திய  பிரான்சிஸ் செல்வ தினேஷ்   மற்றும் அந்தோணி ஜாஸ்மின்  ஆசிரியா்  பிரான்சிஸ்  பயிற்சியாளர்  அஜிஷ்   மற்றும் அருட்சகோதரிகள்    அனைவருக்கும்   மாணவி சகாய ஜெமியா வின்   பெற்றோர்கள்  மிக்கேல் பாஸ்கர்  சகாயரதி  ஆகியோா் நன்றி  தெரிவித்தாா்கள்

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

வேட்டையன் பாணியில் தூத்துக்குடியில் கோச்சிங் அகாடமிகள் புற்றீசல்களாய் தூத்துக்குடிக்கு படையெடுக்கும் மாணவ மாணவிகள் பரிதாபங்கள்

 ⚫ வேட்டையன் பாணியில் தூத்துக்குடியில் கோச்சிங் அகாடமிகள் புற்றீசல்களாய் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு  படையெடுக்கும் மாணவ மாணவிகள் பரிதாபங்கள்

சனி, 5 அக்டோபர், 2024

12 கல்லூரிகளில் ஒரே நாளில் 800 மாணவிகளுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

12 கல்லூரிகளில் ஒரே நாளில் 800  மாணவிகளுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி அளிக்க ப்பட்டது 



இது பற்றிய செய்தியாவது:-

தவப்புதல்வி கிராமப்புற பெண்களின் திறன் மேம்பாட்டு வளர்ச்சி பனியின் ஓர் அங்கமாக 18 இடங்களில் 18 க்கும் மேற்பட்ட ஜே சி ஐ பயிற்சியாளர்கள் கொண்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியர் சார்பாக 12 கல்லூரிகளில் நடைபெற்றது.

உலக சாதனை!!!

 முன்னதாக கிராமப்புற தையல் கலைஞர்களை கொண்டு 20 நாட்களில் 2024 வண்ணமயமான மேலங்கி தயாரித்து கல்லூரி மாணவிகள் பெருமளவில் அணிந்து குளோபல் உலக சாதனையில் பங்குபெற்ற நிகழ்வை  தொடர்ந்து நேற்று கல்லூரி மாணவிகளுக்கு கிராமப்புற பெண்களின் உற்பத்தியை சந்தைப்படுத்த உறுதுணையாக மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப வாயிலாக சந்தைப்படுத்தும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 

மகிழ்ச்சி!!!

 எங்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் பெண்களின் பொருளாதார வளர்ச்சியில் உதவிடவும் எங்களுடைய இந்த பயிற்சி பெருமளவில் பங்களிக்கும் என மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெவித்தது இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான தொலைநோக்கு பார்வையை வெளிப்படுத்துகிறது 


சந்தைப்படுத்தல்!!!

 இணையவழியில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பொருட்கள் உருவாக்குதல், விளம்பரப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தலுக்கான பயிற்சி தவப்புதல்வி சார்பாக அளிக்கப்படும் எனவும் என தவப்புதல்வி தனியார் திட்டத்தின் அமைப்பாளர் மற்றும் ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியரின் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை தெரிவித்தார்.

உற்சாகம் 

 மாணவிகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியில் உற்சாகமாக பங்கேற்றது மேலும் பல மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ஊக்கமளிப்பதாக பயிற்றுனர்கள் தெரிவித்தனர்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

கருங்குளம் அரசு பள்ளி ஆசிரியர் சக்திவேலுக்கு பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ஒரு லட்சம் காசோலை வழங்கல்

  ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃3-9-2024 photo news 

by sunmugasunthram Reporter 

தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாாியம் சாா்பில் பசுமை முதன்மையாளர் விருது தூத்துக்குடி கருங்குளம் அரசு பள்ளி ஆசிாியர் சக்திவேல்க்கு விருதுடன் ஓரு லட்சம் ரூபாய்  வழங்கப்பட்டது.


இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2024 ஜீன் 12ம் தேதி நடைபெற்ற சிறந்த பசுமை முதன்மையாளர் விருதுக்கான தேர்வு நடைபெற்றது. 



தேர்வு!!!

இந்நிகழ்ச்சியில்... மொத்தம் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிாியர் சக்திவேல் உள்பட 7 பேர் கலந்து கொண்டனர். 


 தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்த முதன்மையாளர் தேர்வு நடைபெற்றது. 


புதுமையான பசுமை தயாரிப்பு!¡!


மீன் கழிவுகளின் இருந்து பதப்படுத்தப்பட்டு திரவ வடிவத்தில் எடுக்கப்பட்ட மீன் அமீலத்தில் 50மிலி எடுத்து அதோடு 10 லிட்டர் தண்ணீர் கலந்து  செடிகளின் மீது தௌித்தால் அதிக மகசூல் கிடைக்கும் என்பதை தன்னுடைய தோட்டத்தில் பாிசோதனை நடத்தி வெற்றி கண்டதோடு, நிறுத்திவிடாமல் அந்த மீன் அமிலங்களை பிற இடங்களில் நடப்படும், மரக்கன்றுக்களுக்கும் பசுமை பூங்காக்களுக்கும் ெதளிக்கப்பட்டு வருகிறது என்பது புதுமையான பசுமை தயாாிப்பாகும். 


ஈஷா மையம்!!! மரக்கன்று!!

மேலும் வருடந்தோறும் 50 ஆயிரம் மரகன்றுகள் வரை ஈஷா மையத்தோடு இணைத்து கருங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பஞ்சாயத்தை சார்ந்த கிராம மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார். 

மாணவர்களுக்கு விழிப்புணர்வு!!!

இளம் பருவத்தை சார்ந்த மாணவர்கள் தனது செல்போனில் பாா்த்து பொழுதை போக்காமலும், தன்னுடைய வாழக்கையை இழக்காமலும், இருக்கும் பொருட்டு தனது விவசாய பெற்றோர்களின் நிலைமையினை புாிந்து கொள்ளும் வகையில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அருகில் உள்ள கிராமங்களில் எல்லையில் உள்ள விவசாய நிலங்களோடு அழைத்து செல்லும் இயற்கை விவசாயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். 

பிளாஸ்டிக் (நெகிழி) ஒழிப்பு!!!

அது போல் கருங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மண்ணில் புதைத்து பல நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல் இருந்த எண்ணற்ற நெகிழி கழிவுகளை கண்டெடுத்து அதனை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


மருத்துவ குணங்கள் உள்ள செடிகள் வளர்ப்பு!!!

இவர் வேலைப்பாா்க்கும் கருங்குளம் அரசு பள்ளியில் பசுமை பூங்கா அமைத்து அதில் மருத்துவ குணம் நிறைந்த நித்யகல்யாணி செடி, துதுவளை, கண்டகத்தாி, நொச்சி, கற்பூரவள்ளி, மணத்தக்காளி, மருதாணி, செடிகளும் காய் மற்றும் பழத்தோட்டம் அமைத்து பாரமாித்து வருகிறார். 



பாராட்டு விருது!!!

மேற்கண்ட இவாின் சேவையை பாராட்டி தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாாியம் சாா்பில் பசுமை முதன்மையாளர் விருது ஆசிாியர் சக்திவேல்க்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் இசக்கியம்மாள், சான்றிதழள் மற்றும் ரூ1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.

 நிகழ்ச்சியில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பிரதீப் உடனிருந்தார்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடியில் ஸ்பிக் கீரீன் ஸ்டார் இலவச கல்வி மையம் திறப்பு விழா!!!

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

30-8-2024 photo vel Raj reporter 

newsby Ravikumar reporter


தூத்துக்குடி புதிய துறைமுக சுனாமி காலனியில் 

ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு ஸ்பிக் நிறுவனம் சார்பில் ஸ்பிக் கீரீன் ஸ்டார் இலவச 

கல்வி மையம் திறப்பு விழா நடைபெற்றது 



இதுபற்றி செய்தியாவது 


தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனம் ஆண்டு தோறும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு பல்வேறு திட்ட உதவிகள் செய்து வருகிறது 


தூத்துக்குடி புதிய துறை முக சாலையில் உள்ள சுனாமி காலனியில் உள்ள ஊர் மக்கள் ஸ்பிக் நிறுவனத்திடம் தங்கள் பகுதியில் கல்வி மையம் அமைத்து உதவிட கோரிக்கை வைத்தனர் 


அதனை தொடர்ந்து ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக

(Corporahe Soual Res ponmolity) பங்களிப்பு மூலம்

ஸ்பிக் நிறுவனம் சுனாமி காலனியில் கல்வி மையம் ஏற்படுத்தி தந்து இன்று 30-8-2024  காலை 11 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.


டியூஷன் சென்டர் 



 திறப்பு விழா நிகழ்ச்சியில் 

E.பாலு(முழுநேர இயக்குநர்)

ஜெயப்பிரகாஷ் (முகநிலைமேலாளர்) நிர்விடும்

. சதீஷ்கண்ணன் (முதுநிலை மேலாளர்) சீகில்

 பரமசிவம் (மேலாளர் - Planning)

த. சிப்ரியன் பால்ராஜ் - பொதுமேலாளர் - AMF

யுவன்- மேலாளர்-AmF மற்றும்  

ஊர்பொதுமக்கள்

ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

சனி, 24 ஆகஸ்ட், 2024

பள்ளி மாணவ மாணவிகளுடன் பேருந்தில் குஷியாக பயணித்த கனிமொழி எம்பி ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை பார்க்க ஆசைப்பட்ட மாணவ மாணவிகள் விருப்பத்தை நிறைவேற்றினார்!

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

news by arunan journalist 

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை  ஒரு முறை காண விருப்பபட்டனர்  பள்ளி மாணவ மாணவிகள்.

அந்த விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக இன்று கனிமொழி எம்பி  பள்ளி மாணவ மாணவிகள் உடன் கலந்து உரையாடல் செய்தவாறே பேருந்தில் பயணித்து பார்வையிட சென்றார்.





இது பற்றிய செய்தியாவது:-

பள்ளி மாணவ மாணவிகளுடன் பேருந்தில் குஷியாக பயணித்த கனிமொழி எம்பி ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை பார்வையிட வைத்தார்! 

கடந்த ஜூலை மாதம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு இன்பேன்ட் ஜீசஸ் கல்லூரி நிகழ்ச்சி நடைபெற்றது.

கனிமொழி எம்பி இடம் தங்கள் விருப்பம் தெரிவித்த மாணவிகள்!!! 

அபபோது,... அக்கல்லூரியில் செயல்பட்டு வரும் மாதிரி பள்ளி மாணவர்கள் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்திற்கு தங்களை அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் தங்கள் பள்ளியில் செயல்பட்டு வரும் நூலகத்திற்கு புத்தகங்கள் வேண்டும் என ...

 அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பி அவரிடம் கோரிக்கை வைத்தனர்.‌ 



புத்தம் வழங்கல்!!!

இதனைத் தொடர்ந்து, இன்று (24/08/2024) சனிக்கிழமை, வல்லநாட்டில் செயல்பட்டு வரும் மாதிரி பள்ளிக்கு நேரில் சென்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இப்பள்ளிக்காக கொடுத்த புத்தகங்கள், தூத்துக்குடியைச் சேர்ந்த தொழில் நிறுவனர் எட்வின் சாமுவேல் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் தனது அலுவலகத்தில் இருந்து புத்தகங்களையும் அப்பள்ளிக்கு வழங்கினார்.




   அதனைத் தொடர்ந்து, இன்று (24-8-2024) கனிமொழி கருணாநிதி எம்பி . அப்பள்ளியின் மாணவ மாணவிகளை  பேருந்தின் மூலமாக அழைத்துச் சென்று ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை பார்வையிட வைத்தார்!






உடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.




மகிழ்ச்சி யில் மாணவிகள் !!!

இன்று பேருந்தின் மூலமாக அழைத்துச் சென்று  ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை பார்வையிடும் போது தங்கள் உடன் இருந்த கனிமொழி எம்பிக்கு மாணவ மாணவிகள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்!


சனி, 1 ஜூன், 2024

தூத்துக்குடியில் 10 +12 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்குபாராட்டு சான்றிதழும் கேடயம் வழங்கல்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 2-6-2024

செய்தி புகைப்படங்கள்  

தமிழன் ரவி

மூத்த பத்திரிகையாளர் 

அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர் மாணவிகளுக்கு தூத்துக்குடியில்

பாராட்டு விழா நடைபெற்றது.

இது பற்றிய செய்தியாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.



     தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சுபாஸ்ரீ சேவா மகளிர் சுய உதவிக் குழு இணைந்து பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று 1-6-2024 நடைபெற்றது. 


 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற தலைவர் மைதிலி செல்வராஜ்  தலைமை தாங்கினார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் முனைவர் கோ அருள் ஒளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


பின்னர் பேராசிரியர் முனைவர் கோ அருள் ஒளி மாணவ மாணவிகளுக்கு கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

         முன்னதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் பொருளாளர் சாந்தி சரவணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


 விழாவிற்கு சார்பதிவாளர் குருசாமி  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் செயலாளர் காமாட்சி முருகன் முன்னிலை வகித்தனர்.

        வழக்கறிஞர் விஜய சுந்தர் முனைவர் சகாய ராஜன் கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் முனைவர் முருகன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற துணைத் தலைவர் பத்மலதா ராஜ் ஆசிரியை கோமதி நடராஜன் ஆசிரியை மாரியம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் மாணவிகள் விவரம்:-

        பத்தாம் வகுப்பு தேர்வில் ஆர்த்தி 483 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் சங்கரேஸ்வரி 480 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் சூரிய தேவ் மற்றும் சப்னம் 470 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று பரிசுகளை பெற்றனர்.


 பதினொன்றாம் வகுப்பில் ஜெகன் 505 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் தனுஜா 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் கோபிகா 477 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றனர்.


 பன்னிரண்டாம் வகுப்பில் ஜனனி 564 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் ரேஷ்மா ரெட்டி 517 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் சிவரஞ்சனி 504 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று கேடயமும் பாராட்டு சான்றிதழும் பெற்றனர். 


பத்தாம் வகுப்பில் சிறப்பு பரிசும் கேடயமும் பெற்ற மாணவர்கள் ஆகாஷ், பெத்தனேஸ்வரி, ஸ்ரீ வர்ஷினியும், பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பு பரிசு பெற்ற லட்சுமி தனஸ்ரீக்கும் கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

        ஆசிரியை தேவி  நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி  நிறைவுற்றது.

 விழாவில் குடியிருப்பு வாழ் பொது மக்களும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நலம் மன்ற உறுப்பினர்களும் சுபாஸ்ரீ சேவா மகளிர் உதவிக் குழு உறுப்பினர்களும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

       விழா ஏற்பாடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நில மன்றம் சுபாஸ்ரீ சேவா மகளிர் சுய உதவிக் குழு சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை இணைந்து சிறப்பாக செய்திருந்தது.

வியாழன், 30 மே, 2024

தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் அ.குருநாதன் பணி நிறைவு தமிழாசிரியர் கழகம் சார்பாகபொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

30-5-2024

செய்தி புகைப்படங்கள்  

தமிழன் ரவி

முத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடி  மாவட்ட கல்வி அலுவலர் அ.குருநாதன் பணி நிறைவு ஓய்வு பெறுகிறார்.

 தமிழாசிரியர் கழகம் சார்பாக அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது 



இது பற்றிய செய்தியாவது:-

  தூத்துக்குடி  மாவட்ட கல்வி அலுவலர் அ.குருநாதன் இன்று 30-5-2024 பணி ஓய்வு பெறுகிறார் 


அனத முன்னிட்டு அவருக்கு பணி  நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது


 தூத்துக்குடி மாவட்டத் தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பாகபொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


பணி நிறைவு பெறும் மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன் -க்கு நினைவுப் பரிசாக... தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்கள் முகமது யூசுப், தேரிக்காட்டு இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபன்,நெல்லை தேவன் ஆகியோரின் நாவல்கள் மற்றும் படைப்புகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில் தூத்துக்குடி கல்வி மாவட்ட தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவர் கா. பழனி வேலாயுதம் தூத்துக்குடி கல்வி மாவட்டச்செயலர் கருத்தப்பாண்டியன் தூத்துக்குடி கல்வி மாவட்டப் பொருளாளர் பூபால் செல்லையா, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஆதி அருமைநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

மகாகவி பாரதியாாின் 142-வது பிறந்த நாள் தூத்துக்குடியில் கலை இலக்கியப் பேரவை சார்பில் கவியரங்கம் சிறந்த நூலகர் கெளவிப்பு கேள்வி மற்றும் அழகான நாள் என்ற இரண்டு குறும்படங்கள் வெளியீடு

thoothukudileaks 17-12-2023

செய்தி புகைப்படங்கள்

தமிழன் ரவி

மகாகவி பாரதியாாின் 142-வது பிறந்த நாள் விழா 

தூத்துக்குடியில் கலை இலக்கியப் பேரவை சார்பில் கவியரங்கம் சிறந்த நூலகர் கெளரவிப்பு "கேள்வி"   மற்றும்  "அழகான நாள்"  என்ற  இரண்டு  குறும்படங்கள்  வெளியீட்டனர்.



இதுபற்றி செய்தியாவது :-                                 தூத்துக்குடியில் கலை இலக்கியப் பேரவை நடத்திய  மகாகவி பாரதியாாின் 142  ஆவது பிறந்த நாள் விழா இன்று 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை  காலை11 மணியளவில்  பால்ஸ் அகாடமி அரங்கத்தில்  நடைபெற்றது .  

பேச்சு அரங்கம் !!!

                                                        பாரதியார் பற்றிய பேச்சு அரங்கம் நிகழ்ச்சி முனைவா்  அருட்சகோதாி  எழிலரசி   தூய மாியன்னைக் கல்லூாி   பேராசிாியா்  தலைமையில்  நடைபெற்றது  

கவியரங்கம் !!!                     

அதனை தொடர்ந்து கவியரங்கம் நிகழ்ச்சி கவிஞா்  மூக்குப்போி  தேவநாதன்   கிராமப்புறம்  தமிழ் மன்றத்தலைவா்    தலைமையில்  நடைபெற்றது 


  இந்நிகழ்வில் .7  கவிஞா்கள்  கவிதை  வாசித்தனா் 

சிறந்த நூலகர்!!! 

   மகாகவி பாரதியார் பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறந்த  நூலகருக்கான  முடிவைத்தானேந்தல் நூலகா்  முருகன்    பாராட்டி கெளவிக்கப்பட்டார் .

குறும்படம் வெளியீடு!!! 

 அடுத்து     அருந்ததிஅரசு  இயக்கிய  கேள்வி   மற்றும்  அழகான நாள்  என்ற  இரண்டு  குறும்படங்கள்  வெளியிடப்பட்டது 

       நிகழ்விற்கான  ஏற்பாடுகளை   தொடுவானம் கலை  இலக்கியப்பேரவை   தலைவா்  நெல்லை  தேவன்  செயலாளா்  மாாிமுத்து  ஆகியோா் செய்திருந்தனா்

கவிஞா் மாாிமுத்து நன்றி கூறினாா்   

செவ்வாய், 28 நவம்பர், 2023

மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

thoothukudileaks 28-11-2023

தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார் 



இது பற்றிய செய்தியாவது

தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் 364 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கினார் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்

 

அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது 

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு முதலமைச்சரின் உயரிய திட்டமான சைக்கிள் வழங்கும் திட்டம் இருந்து வருகிறது.


 இத்திட்டத்தின் மூலம் கிராம புற மாணவ-மாணவி பெரிதும் பயனடைந்து வருகின்றனர். 


இந்த பள்ளிக்கென்று ஒரு பெருமை உண்டு. நல்ல சீருடையுடன் ஒழுக்கமாக படித்து, எந்த போட்டி தேர்வாக இருந்தாலும் அதில் ஈடுபாடுடன் பங்கேற்று வெற்றி பெறுகிறீர்கள்.



 பள்ளி படிப்பு நமக்கு முக்கியமான கால கட்டம். தன்னம்பிக்கையுடன் கல்வியை கற்று அறிவுத்திறனையும் பெற்று இந்த சமுதாயத்திற்கு மட்டுமின்றி நாட்டிற்கும் உங்கள் வீட்டிற்கும் நன்மை கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும். 


இங்கு படிக்கின்ற மாணவிகள் கல்லூரி படிப்பையும் பயின்று, பல்வேறு உயர் பதவிகளுக்கு வர வேண்டும். 


தமிழக முதலமைச்சருக்கு கல்வியும் மருத்துவ துறையும் இரண்டு கண்கள் என்று பல விழாக்களில் அவர் பேசியுள்ளார். 

நாட்டின் எதிர்கால தூண்களாக விளங்கக்கூடிய உங்களை மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார் அமைச்சர் கீதாஜீவன் 

இவ் விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தினி கௌசல், பள்ளிச் செயலாளர் முரளி கணேசன், பள்ளி இயக்குநர் லெட்சுமி ப்ரீத்தி, மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி, பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். 

photo news by sunmugasunthram journalist 

சனி, 14 அக்டோபர், 2023

இடமாற்றம் பணிமாறுதல் பற்றி தூத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ் பேச்சு பரபரப்பு ஆசிரியர் & மாணவர்களுக்கு கலெக்டர் தனது ஆதங்கமான அட்வைஸ்

thoothukudileaks 15-10-2023

photo news by 

arunan journalist 

இடமாற்றம் பணிமாறுதல் பற்றி தூத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ் ஆதங்கம் தெரிவித்து பேசினார்.



இது பற்றிய செய்தியாவது:-

தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் ஆக லட்சுமிபதி இ.ஆ.ப.,அவரை நியமனம் செய்துள்ளார்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில் ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்  கலெக்டர் செந்தில் ராஜ் காலகட்டத்தில் தூத்துக்குடி மற்றும் மாவட்டத்தில் பல சரித்திர முக்கியத்துவமான பல நல்ல நிகழ்வுகள் நடைபெற்றன. 

இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் கனிமொழி எம்பி கீதாஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் கடம்பூர் ராஜு மார்கண்டேயன் சண்முகையா மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடன் கண்ணியமிக்க நல்ல  தொடர்பு இருந்ததால் மக்கள் பணிகளை தொய்வில்லாமல் செய்து வந்தார் 



குறிப்பாக தூத்துக்குடிமாவட்ட  கனிமொழி எம்பி பேரன்புடன் கனிமொழி எம்பி யின் எண்ணோட்ட அலைவரிசையில் அவரது பணிகளை திறம்படச் செய்ததது பாராட்ட தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் அன்பை அமைதியாக பெற்றிருக்கிறார் இவரின் இடமாற்றம் என்பது மக்கள் பிரதிநிதிகள் சமுக ஆர்வலர்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு போன்ற பலருக்கு மிக வருத்தம் தந்துள்ளது என்கிறார்கள்.

ஆசிரியர் & மாணவர்களுக்கு  கலெக்டர் தனது ஆதங்கமான அட்வைஸ் பரபரப்பு பேச்சு !!!

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தினக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில் ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் 



தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மேல் நிலைப்பள்ளி கூட்டரங்கில் நேற்று 14 10 2023  நடைபெற்றது.

 

கலெக்டர் செந்தில் ராஜ் பேசுகையில் ..

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையில் அவர் பேசியதாவது :

இன்றைய தினம் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைத்து
ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


தூத்துக்குடி மாவட்டம் தேர்ச்சி சதவிகிதத்தில் அடுத்த முறை முதல் இடத்திற்கு
வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையில்
தூத்துக்குடியை பற்றி எந்தவிதமான புகாரும் இதுவரை வந்தது கிடையாது.

தூத்துக்குடி க்கு மரியாதை !!!


தூத்துக்குடிக்கு என்று எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு. 

அரசு துறையில்
பணிபுரிபவர்களுக்கு இடமாறுதல் வழக்கமான ஒன்றுதான். 

அரசு பணியில்
பணிபுரியும் ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம்தான். 


அரசு செயல்படுத்தக்கூடிய
திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள்
பணியாற்றுவதற்குதான் அரசு பணிக்கு வந்திருக்கிறோம். 

ஆசிரியர்கள்
வகுப்பறையாக இருந்தாலும் சரி, 

தேர்தல் பணியாக இருந்தாலும் சரி
எந்தவொரு சிரமம் பார்க்காமல் பணிபுரிகிறார்கள்


எனக்கு எனது தாயாருடன்
பள்ளிக்கு சிறு வயதில் சென்றபோது அங்குள்ள ஆசிரியர்கள், கல்வி
அலுவலர்களை பார்த்து அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது.

கலெக்டரின் ஆசை!!!


அப்போது..

 நான் முதன்மை கல்வி அலுவலராக வேண்டும்
ஆசைப்பட்டேன். 

நான் பள்ளியில் முதல் மாணவனாக வந்தபோது ஆசிரியர்
என்னை மருத்துவராக வேண்டும் என்று நம்பிக்கையை தந்தார். அதன்படியே
நான் மருத்துவரானேன். பின்னர் நன்றாக படித்து மாவட்ட ஆட்சியர் ஆனேன்.

சின்ன சின்ன விஷயங்கள் மாணவ, மாணவிகளிடையே தாக்கத்தை
ஏற்படுத்தும். மாணவ, மாணவியர்கள் எல்லோரும் ஆசிரியர்களுக்கு மரியாதை
தர வேண்டும். 


நீங்கள் என்ன யோசிக்க வேண்டும் என்பதைவிட எப்படி
யோசிக்க வேண்டும் என்பதைத்தான் பார்க்க வேண்டும். நீங்கள் நிறைய
விளையாட வேண்டும்.


 உங்கள் பள்ளியில் ஏதேனும் குறைகள்
இருக்கும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
பள்ளிகளுக்கு பல்வேறு துறைகளின் மூலம் பல்வேறு திட்டப்பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.


 ஆகையால் ஆசிரியர்களாகிய நீங்கள் எப்போதும்
சிறப்பாக செயல்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தைப் பள்ளிக்கல்வித்துறையில்
முதன்மை மாவட்டமாக கொண்டுவர அயராது பாடுபட வேண்டும் என மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  தெரிவித்தார்கள்.

கலெக்டர் செந்தில் ராஜ் விருது வழங்கல் 

 அடுத்ததாக ..தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,

இ.ஆ.ப., அவர், 

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் .எல்.ரெஜினி

, தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் .ஏ.குருநாதன்,

கோவில்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் .சு.ஜெயபிரகாஷ்ராஜன்

ஆகியோர்களுக்கும் நல்அளுமை விருதுகளை வழங்கினார்.



பின்னர் 

மாநில நல்லாசிரியர்

விருதுபெற்ற 11 ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகளையும்,

12 சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளையும், கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற

10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி

பெற்ற 67 பள்ளிகளின் 550 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு

பாராட்டுச் சான்றிதழ்களையும் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அவர்கள்

கற்றுத்தரும் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் அதிகமாக பெறவைத்த 36

ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்கள்.




இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி  முன்னிலை வைத்தார். 

விழாவின் வரவேற்புரையை தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி கெளசல் ஆற்றினார் 


இவ் விழாவின் தலைமை உரையாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல். ரெஜினி   பேசினார் விழாவின் வாழ்த்துரையாக மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும்  மேயர் ஜெகன்  சிறப்புரை ஆற்றினார்கள்.

 கல்வி அலுவலர்கள் (இடைநிலைக்கல்வி) .குருநாதன் (தூத்துக்குடி),


.ஜெயபிரகாஷ்ராஜன் (கோவில்பட்டி), வேப்பலோடை அரசு மாதிரி


மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் .சேகர், பள்ளிகளின்

தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

இந்நிகழ்வை அரசு மேல்நிலைப்பள்ளி கீழப்பூவானி தலைமை ஆசிரியர்  கஜேந்திர பாபு  சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

 இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் தலைமை ஆசிரியர்கள் கஜேந்திர பாபு,சேகர், கார்த்திகேயன், சிவபிரசாத்,பெர்சியாள் ஞானமணி பொன் சந்தன லதா மற்றும் ஜோயல் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் உதவி திட்ட அலுவலர்கள் இடைநிலை மற்றும் தொடக்கநிலை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு கல்வி  ஃபெல்லொஷிப் உடன் இருந்தனர்.



இந்நிகழச்சியில் ஏராளமான பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.





.

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

தூத்துக்குடி கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்

 thoothukudileaks 9-10-2023

Photo news by sunmugasunthram 

தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.

      தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  சதுரங்க போட்டி நடைபெற்றது



இதில் கலந்து கொண்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பேசுகையில்....


 கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒருவருடம் முழுவதும் கொண்டாட வேண்டும் அவரது சாதனைகள் மற்றும் எல்லாத்துறையிலும் முத்திரை பதித்ததை நாட்டுமக்களுக்கு நினைவுப்படுத்த வேண்டும். என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டதிற்கிணங்க வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட எல்லா பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளுடன் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 


ஏற்கனவே விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 


இதனையடுத்து சிறுவர் சிறுமியர்களுக்கான சதுரங்க போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கும் திறமைகள் அதிகம் தேவைப்படுகின்ற விளையாட்டாகும்.


 எந்த துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றினாலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்வியும் விளையாட்டும் நமக்கு அவசியமானது என்பதை உணர்ந்து எதிர்கால தலைமுறையினராகிய நீங்கள் நல்ல பழக்க வழக்கங்களுடன் எல்லாத்துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும். என்று பேசினார். 



     விழாவில் பள்ளி தாளாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும் மாநகராட்சி மண்டலத்தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், துணை அமைப்பாளர் சின்னத்துரை, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆரோக்கிய ராபின், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சனி, 7 அக்டோபர், 2023

தமிழரும் கலைஞரும் பற்றி அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி லீக்ஸ் 8-10-2023

த சண்முகசுந்தரம் மூத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடியில் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்

இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கவிதைகள் திரைப்பட வசனங்கள் ஓப்புவித்தல் போட்டி போல்பேட்டை கீதா மெட்ரிக்பள்ளியில் நடைபெற்றது.



   வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பேசியதாவது :-


புரட்சிக்கரமான வரலாறுகளை எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். என்பதற்காக கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக முதலமைச்சர் தளபதியார் அறிவுறுத்தலின்படி நடைபெறுகிறது. 

தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு தலைகுனிந்து எழுதியவர் கலைஞர் 


முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கருத்துக்கள் கவிதைகள் என பலவற்றின் மூலம் தமிழன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். என்பதற்காக முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலை குனிந்து எழுதினார். 


1998ல் முதல் முறையாக கனிணித்துறை மூலம் தமிழ்வழிக்கல்வி தொடங்கப்பட்டது. 


அது தான் இன்று உலக அளவில் தமிழர்களின் வாழ்வாதரம் உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. 


தமிழ் மொழி செம்மொழி உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்தவர் கலைஞர் கடந்த காலத்தில் வாழ்ந்த தலைவர்களின் வரலாறுகளை இனிவரும் எதிர்கால தலைமுறையினருக்கு தெரிய வேண்டும். 

அதற்காக மாணவ மாணவிகளுக்கு இப்போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டுகிறேன். என்று பேசினார்.


நிகழ்ச்சிக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சரத்பாலா தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஞானப்பிரகாஷம், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சோமநாதன், மனோகரன், மாரியப்பன், தாமோதரகண்ணன், பாலமுருகன், ஆவுடையப்பன், மாநகர தலைவர் கணேசன், துணைத்தலைவர் சாமி, துணை அமைப்பாளர்கள் ஆனந்த், அற்புதராஜ், பழனி, சீதாலட்சுமி, ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர அமைப்பாளர் மரிய ஜோன் பிரான்சிஸ் வரவேற்புரையாற்றினார்.

    விழாவில் திமுக மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணி ஸ்டாலின், வக்கீல் பாலகுருசாமி, வக்கீல் அசோக், ரமேஷ், விஸ்வநாதராஜா, சீனிவாசன், துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, ராமர், பகுதி செயலாளா ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், சேர்மபாண்டியன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், சீதாராமன், துணை அமைப்பாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், ரவி, குமரன், இலக்கிய அணி சக்திவேல், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், ஜாக்குலின்ஜெயா, நாகேஸ்வரி, விஜயகுமார், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, பொன்னுச்சாமி, கருப்பசாமி, சேகர், முத்துராஜா, ராஜாமணி, சக்திவேல், சதீஷ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், குருசாமி, மற்றும் கருணா, மணி, அல்பட், சத்யா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார். மாவட்ட தலைவர் இருதயராஜ் நன்றியுரையாற்றினார்.