thoothukudiqnews லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thoothukudiqnews லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி கலெக்டர் புகைப்படம் மூலம் ஆன்லைன் மோசடி முயற்சி 21 வயது இளைஞர் கைது நடந்தது என்ன ?

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி, பிப். 13:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான வாட்ஸ்அப் கணக்குகள் உருவாக்கி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட முயன்ற இளைஞரை தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

thoothukudileaks


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நடித்து, அவர்களின் புகைப்படத்தை Display Picture ஆக வைத்து பல போலியான வாட்ஸ்அப் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட உதவியாளர் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இக்கணக்குகள் மூலம் பொதுமக்களிடம் பணம் கோரப்பட்டதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சைபர் கிரைம் விசாரணை 

புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) தீபு மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் தொழில்நுட்ப ரீதியான தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

உத்தரப்பிரதேச இளைஞர் கைது – சைபர் குற்றப்பிரிவு அதிரடி நடவடிக்கை


விசாரணையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ் குமார் (21) என்பவர், மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி பல போலியான வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

சிறை !!!

இதனையடுத்து, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 09.02.2026 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்று அனுஜ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் 12.02.2026 அன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான கணக்குகள் மூலம் மோசடி செய்ய முயன்ற குற்றவாளியை தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் மூலம் கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் பாராட்டினார்.

thoothukudileaks


பொதுமக்களுக்கு எச்சரிக்கை:

அரசு அதிகாரிகளின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பணம் கோரப்பட்டால் உடனடியாக சைபர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியில் ...

செயற்கை தொழில்நுட்பம் பயன் படுத்தப்பட்ட புகைப்படம் (மாதிரி )

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

அண்ணா தொழிற்சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு விருப்பமனுக்கள் வழங்கல்

 # தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு விருப்பமனுக்கள் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எஸ் பி சண்முகநாதன் இடம் தொழிற் சங்க நிர்வாகிகள் வழங்கினர் .


இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி, செப். 2:

 தூத்துக்குடி மாவட்ட அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அண்ணா தொழிற்சங்கத்தின் காலாவதியான நிர்வாகிகளுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்க விருப்பமனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



தூத்துக்குடி நகர், புறநகர், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் ஆகிய ஐந்து பணிமனைகளிலும் ஓய்வுபெற்ற மற்றும் இயற்கை எய்திய நிர்வாகிகளுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தொழிலாளர்களிடமிருந்து விருப்பமனுக்களை வாங்கிக் கொண்டார்.


## ஒற்றுமையாக செயல்பட வேண்டும் - எஸ் பி சண்முகநாதன் 


இந்த நிகழ்வில் உரையாற்றிய அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், "அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். 

நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி  முதலமைச்சராக வருவதற்கு தீவிரமாக உழைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.


மேலும் அவர் கூறுகையில்,

 "அதிமுக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் அதிமுக தொழிலாளர் பிரிவு உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

புதன், 28 மே, 2025

தூத்துக்குடியில் தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் உலக பட்டினி தின சேவை நிகழ்வுகள்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி –

 மே 28, 2025
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் மக்கள் சேவையில்...

தூத்துக்குடி, மே 28:
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 28ஆம் தேதி உலகப் பட்டினி தினம் கொண்டாடப்படுகிறது.



 “தனிஒருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்” என பாரதியார் பாடியது போல, உலகளவில் பட்டினியால் ஏற்படும் மரணங்கள், உயிர்க்கொல்லி நோய்களால் நிகழும் மரணங்களை விட அதிகம் என ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 



ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்க நாள்தோறும் 2,100 கலோரி உணவுகள் தேவைப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நாளை நினைவுகூரும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் திருமதி A.அஜிதா ஆக்னல் M.Sc., B.Ed., அவர்களின் தலைமையில், தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.





அவைகள்:

  • மேட்டுப்பட்டி உப்பளத் தொழிலாளர்களுக்கு காலை உணவு
  • அரசு மருத்துவமனை முன் வாயிலில் காலை உணவு
  • தெப்பக்குளம் Truthful Trust குழந்தைகள் மையத்தில் காலை உணவு
  • சிலுவைப்பட்டி பார்வையற்றோர் கருணை இல்லத்தில் காலை உணவு
  • தாளமுத்துநகர் தொழுநோய் மருத்துவமனையில் மதிய உணவு
  • புதிய பேருந்து நிலையத்தில் நரிக்குறவர் மக்களுக்கு மதிய உணவு
  • மேட்டுப்பட்டி பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய அன்னதானம்


இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு மக்களுடன் உணவு பகிர்ந்து, சமூக பொறுப்பை உணர்த்திய தினமாக மாற்றினர்.

– தூத்துக்குடி லீக்ஸ் 📰


**

வியாழன், 20 ஜூன், 2024

பூரண மது விலக்கு உடனே அமல்படுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

 

இறைவனின் திருப்பெயரால்...


மதுவில் தள்ளாடும் தமிழகம் - செத்து மடியும் மனித உயிர்கள். தமிழக அரசு கள்ளச்சாராயத்தை ஒழித்து, பூரண மது விலக்கை உடனே அமல்படுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

இது பற்றிய செய்தியாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை வாங்கி குடித்த சுமார் 35 பேர் மரணமடைந்துள்ளனர், 100 க்கும் அதிகமானோர் உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றனர், 



சென்ற வருடம் மரக்காணத்தில் நடைபெற்ற சம்பவத்திலிருந்து இந்த அரசும் அரசாங்க அதிகாரிகளும் பாடம் படித்துள்ளனரா எனும் கேள்வி எழுகிறது.


தங்கள் உறவுகளை இழந்து விட்டு கதறி அழும் மக்களின் அழுகுரல், கல்நெஞ்சையும் கறைப்பதாக உள்ளது.



 கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களில் 5 பேர் பெண்கள் என்பது தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது எனும் அச்சத்தை  ஏற்படுத்துகிறது, 


சம்பவம் நடந்ததற்கு பிறகு கூண்டோடு சஸ்பெண்ட் என்பது போதுமான நடவடிகை இல்லை. இந்த விற்பனையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பில் இருந்த அரசாங்க அதிகாரிகள், அரசியல் வாதிகள் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும்.


 பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


போதையில் தள்ளாடும் தமிழகத்தை காப்பதற்கு உயர்நிலை குழு ஒன்றை அமைத்து பூரண மதுவிலக்கு மற்றும் அதை கையாள்வதற்கான  செயல்திட்டங்களை அரசு வெளியிட வேண்டும் என ஆளும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.


டாஸ்மாக் விற்பனையால் போதைக்கு அடிமையாகி அதை வாங்கி குடிக்க பணம் இல்லாததால் குறைந்தவிலையில் கிடைக்கும் இது போன்ற கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்


 எனவே டாஸ்மாக்கை நடத்தும் இந்த அரசின் கொள்கையே இது போன்ற உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகிறது.


ஆயிரக்கணக்கானோரை கொல்லும், இளம் விதவைகள் நிறைந்துள்ள மாநிலமாக மாறிவரும் தமிழகத்தை காக்க பூரண மது விலக்கை கொண்டு வரவேண்டும் என தமிழக அரசை 

கேட்டுக்கொள்கிறோம்


இப்படிக்கு,

A. முஜிபுர் ரஹ்மான்,

மாநில பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.



சனி, 15 ஜூன், 2024

அமைச்சர் கீதா ஜீவன் உதவி டெல்லியில் ualifier Series எனும் சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் 5வது பரிசு பெற்றார் தூத்துக்குடி இளைஞர்

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

16-6-2024

photo

News by sunmugasunthram Reporter

டெல்லியில் ualifier Series எனும் சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் 5வது பரிசு பெற்ற தூத்துக்குடி இளைஞர் அமைச்சர் கீதாஜீவன் சந்தித்து வாழ்த்து பெற்றார் 





இது பற்றிய செய்தியாவது:-

      தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்தியாவில் தமிழகம் எல்லா துறையிலும் முதன்மை இடம் பெற்று சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும். என்று பணியாற்றி வரும் நிலையில் மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாளக்க துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டு போட்டிகளில் பங்கு கொள்ளும் தமிழா்கள் உலக அளவில் சாதனை படைக்க வேண்டும்.


 இந்த எண்ணத்ததோடு விளையாட்டை ஊக்குவித்து பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்.


     டெல்லியில் நடைபெற்ற Sheru Classic - IFBB Pro League Qualifier Series எனும் சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் 5வது பரிசு பெற்றார்.

அமைச்சர் கீதா ஜீவன் உதவி!!!

இவர் தூத்துக்குடி - அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தேவசித்தம் என்பவரது மகன் மாரி செல்வம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான, கீதாஜீவனை சந்தித்து போட்டியில் பங்கு பெற டெல்லி சென்று வர உதவியதற்கு...



 தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் தனது மனைவி குழந்தை உடன் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.