திருநங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருநங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஜூலை, 2026

செல்போன் கேட்டு தகராறு இளைஞரை கத்தியால் தாக்கிய திருநங்கை கைது

தூத்துக்குடி லீக்ஸ்  நாளிதழ் செய்தி


தூத்துக்குடி, ஜூன் 30:

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆம்னி பஸ் நிலையப் பகுதியில் செல்போன் கேட்டு ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் திருநங்கை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

thoothukudileaks


காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 

நேற்று முன்தினம் (29.06.2026) இரவு  தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே ஆம்னி பஸ் நிறுத்தம் பகுதியில்  பேருந்தில் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த அஜய் தேவகுமரன் இருந்துள்ளார்.


 அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர் அவரிடம் செல்போன் கேட்டதாகவும், அவர் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இதையடுத்து, ஆத்திரமடைந்த திருநங்கை கையில் வைத்திருந்த கத்தியால் அஜய் தேவகுமரனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வடபாகம் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட அஜய் தேவகுமரன் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலையத்தில் குற்ற எண் 583/2026-ன் கீழ் BNS சட்டப்பிரிவுகள் 296(b), 109(1), 351(3) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த திருநங்கை ஒருவரை போலீசார் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்வாதாரம் இன்றி யாசகமாக பணம் கேட்டு தொந்தரவு செய்யும் திருநங்கைகள் !!! 

தூத்துக்குடி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பஸ் ல  வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் -கடை வியாபாரிகளிடம் பணம் கேட்டு வருவதும் தரவில்லை என்றால் தொந்தரவு செய்து வருவதாக கூறப்படுகிறது .

இஃது விஷயத்தில் மாவட்ட காவல்துறை தகுந்த அறிவுரைகளை கூறி திருநங்கைகள் வாழ்வதாரம் மற்றும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது 

செய்தி புகைப்படம்  செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது மாடலிங் 

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

திருநங்கை, திருநம்பி க்கு சலுகைகள் முக்கிய அறிவிப்பு இந்திய அரசு வெளியீடு முழு விவரம் பார்க்க

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

3-9-2024 photo news 

by Arunan journalist 

திருநங்கை, திருநம்பி, LGBTQI சமூகம் சார்ந்தவர்களுக்கு இஃது வரை இல்லாத புதிய சலுகைகள் அங்கீகாரம் சில முக்கிய அறிவிப்புகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.



இது பற்றிய செய்தியாவது :-


 சமூக நீதி மற்றும் மேம்பாடு துறை அமைச்சகத்தின் தேசியத் திருநர் கவுன்சிலின் தென்னிந்திய பிரதிநிதி

கல்கி சுப்ரமணியம் M.A JMC, M.A Intl.Rlns.,

இது தொடர்பாக செய்தி குறிப்பு  வெளியீட்டு உள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது:-


  1.  Department of Food and Public Distribution (D/oF&PD) -

இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை (D/oF&PD) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு அறிவுரையை வெளியிட்டுள்ளது,


ரேசன் கார்டு!!!

 தற்போதுள்ள விதிகளின்படி LGBTQI உறவில் உள்ள பயனர்கள் (சேர்ந்து வாழ்பவர்கள்) ரேஷன்அட்டை மூலம் பொருட்கள் மற்றும் அதன் சேவைகள் பெறுவதற்காக ஒரே குடும்பத்தின் ஒரு பகுதியாக கருதப்படுவார்கள்.


 மேலும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ரேஷன் கார்டுகளை வழங்குவதில் சேர்ந்து வாழும் உறவில் உள்ள பயனர்கள் மீது எந்தவித பாகுபாடும் காட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை (D/oF&PD) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு அறிவுரையை வெளியிட்டுள்ளது, கேட்டுக் கொண்டுள்ளது. 



வங்கி கணக்கு!!

2. Department of Financial Services (DFS) -

இந்திய அரசின் நிதிச் சேவைகள் துறை (DFS) ஒரு அறிவுரையை வெளியிட்டுள்ளது, திருநங்கைகள், திருநம்பிகள் உட்பட LGBTQI சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டு வங்கிக் கணக்கைத் (Joint account) திறப்பதற்கும், கணக்கில் உள்ள நிலுவைத் தொகையைப் பெறுவதற்கு சேர்ந்து வாழும் உறவில் உள்ள ஒருவர் அவரின் குயர் பார்ட்னரை நாமினியாக/வாரிசுதாரராக பரிந்துரைக்க எந்தத் தடையும் இல்லை. இது ஒன்றாக சேர்ந்து குடும்பமாக வாழும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆகியோருக்கும் பொருந்தும். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறக்கும் பட்சத்தில் அந்த வங்கிக் கணக்கில் வாரிசு என அவர் யாரை நியமித்திருக்கிறாரோ அவர் மீதி கணக்குத் தொகையை பெற முடியும். 



இறப்பின் போது!!!

3. Ministry of Health and Family Welfare -

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உட்பட அனைத்து துறைகளுக்கும் LGBTQI+ சமூகத்தின் உரிமைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடிதங்களை அனுப்பியுள்ளது.


 அதன்படி  சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையில் உள்ள பல்வேறு நிலை ஊழியர்களுக்கு LGBTQI சமூகத்தினர் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளித்தல், பாலின உறுதி அறுவை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தவறான மாற்று சிகிச்சைகள் வழங்குவதை தவிர்த்தல்,  


LGBTQI சமூகத்தின் ஒருவர்  இறக்கும்போது அந்த நபரின் ரத்த சொந்தங்கள் இல்லாதபோது அல்லது உடலை பெற விரும்பாதபோது அவரின் திருநங்கைகள் திருநம்பிகள் உட்பட LGBTQI சொந்தங்கள் உடலைக் கோருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் தொடர்பாக உரிமைகளை உறுதி செய்து கடிதம் எழுதியுள்ளது. 

சுகாதாரம்!!!

4. The Directorate General of Health Services, Ministry of Health and Family Welfare -

இந்திய அரசின் சுகாதார சேவைகள் இயக்குநரகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்  மாநில சுகாதாரத் துறைகள் மற்றும் பிற துறைகளுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

மருத்துவ, சுகாதார சேவைகளை உறுதி செய்தல் மற்றும் LGBTQI+ சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டைக் குறைத்தல் குறித்து அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மனநலம் !!!

5. Ministry of Health and Family Welfare -

உடல்நலம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், சிசுக்கள்/பாலின வேறுபாடு (இன்டர்செக்ஸ்) குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவ ரீதியாக சிக்கல்கள் இன்றி இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான மருத்துவ தலையீடு தொடர்பாக வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.


 தற்போது LGBTQI சமூகத்தின் மனநலம்/நல்வாழ்வு தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை அமைச்சகம் உருவாக்கி வருகிறது.



மேலும் திருநங்கைகள் திருநம்பிகள் உட்பட LGBTQI சமூகங்கள் நலன் தொடர்பாக மேலும் எடுக்கப்பட வேண்டிய  நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களைப் பகிருமாறு பொதுமக்களை இந்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அழைத்துள்ளது. 


இது தொடர்பான உங்கள் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்: abhishek-upsc@gov.in மற்றும் mayank.b@gov.in. 


- கல்கி சுப்ரமணியம் M.A JMC, M.A Intl.Rlns.,

தென்னிந்திய உறுப்பினர், தேசிய திருநர் கவுன்சில்,

மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சகம். 

தொடர்புக்கு: +91 7639741916

news by 

ரோஜா அருணன்

செய்தியாளர் 

வியாழன், 25 ஏப்ரல், 2024

அழகி போட்டியில் இரண்டாம் இடத்தில் தூத்துக்குடி திருநங்கை மேகா தேர்வு இந்த நிகழ்ச்சியில் சினிமா நடிகைகள் அமைச்சர் பொன் முடி பங்கேற்பு பாராட்டு தெரிவித்துள்ளார்

  ▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

26-4-2024

news by arunan journalist 

தமிழகம் 2024 மிஸ் கூவாகம் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தில் தூத்துக்குடி திருநங்கை மேகா தேர்வு 

அமைச்சர் பொன் முடி வாழ்த்து தெரிவித்தார்.



இது பற்றிய செய்தியாவது :-

விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் வழிபாட்டு திருவிழா வருடந்தோறும் சித்திரை மாதம் நடைபெறும்.


இவ்விழாவில் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து திருநங்கை கள் கலந்து கொண்டு கூத்தாண்டவரை வழிப்பட்டு செல்கின்றன.

மிஸ் கூவாகம் அழகி போட்டி யில் கலந்து கொண்டோர்....

தென்னிந்திய திருநங்கையர்

கூட்டமைப்பு சமுக நலத்துறை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடந்த மிஸ் கூவாகம்-2024 அழகி

போட்டி இந்த ஆண்டும் 22-4-2024 அன்று  நடைபெற்றது

 


அழகி போட்டியில் குறிப்பாக இளம் வயது திருநங்கை கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர் 


தங்கள் செயல் அறிவுதிறன் நடை உடை பாவனை களை செய்து காண்பித்தனர் 



முதலிடம் !!!

அழகி போட்டியில் 

ஈரோடு ரியா முதலிடம் பிடித்து பரிசு தொகை50 ஆயிரம் தட்டி சென்றார்.


இரண்டாம் இடம் துாத்துக்குடி அமுதா நகர்

மேகா தேர்வு பெற்றார் அவருக்கு 25 ஆயிரம் வழங்கப்பட்டது.

முன்றாம் இடம் 


சென்னையை சேர்ந்த யுவாஞ்சலி தேர்வு பெற்றார் அவருக்கு 11 ஆயிரம் வழங்கினார்கள் 

தமிழக அமைச்சர் 

பொன் முடி!!! 

விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்ற அழகி போட்டி மிஸ் கூவாகம் 2024 மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொன் முடி தேர்வு பெற்றவர்களை வாழ்த்தியும் வந்திருந்த திருநங்கைகள் அனைவரையும் பாராட்டி பேசினார்.

சினிமா நடிகைகள்!!!

2024 மிஸ் கூவாகம் அழகி போட்டி நிகழ்ச்சியில் சினிமா நடிகை கள் 


ரெபெக்கா, பிரமிளா, எதிர்

நீச்சல் திரைப்படம் காயத்ரி முன்னிலை

வகித்தனர்.



இறுதி சுற்றுக்கான

முதல் சுற்று போட்டி

யில் துாத்துக்குடி மேகா,

கோவை எமி. தஞ்சை

ஜொஸ்மா,

விருதுநகர்

ரேணுகா, ஈரோடு ரியா,

சென்னை யுவாஞ்சலின்,

சேலம் கதிஜா ஆகிய 7

பேர் தேர்வாகினர்.


 இறுதி யாக ...

கேள்வி ?பதில்!!!

 சுற்று போட்டி

நடந்தது.



அதில்,

ஈரோடு ரியா

மிஸ் கூவாகமாக தேர்வு

செய்யப்பட்டார்.



2ம் இடத்தை துாத்துக்

குடி மேகா, 


3ம் இடத்தை

சென்னை யுவாஞ்சலின்

பிடித்தனர். 


முதல் பரிசு

ரூ.50 ஆயிரம், 2ம் பரிசு

ரூ.25 ஆயிரம், 3ம் பரிசு

- ரூ.11 ஆயிரம் வழங்கப்

பட்டது. 


பின்புமூன்று பேருக்கும்

கிரீடம் சூட்டி வாழ்த்து

தெரிவிக்கப்பட்டது.



தென்னிந்திய திருநங்

கைகள் கூட்டமைப்பு

தலைவர் மோகனாம்பாள்

வரவேற்றார். அருணா,

சுபிக்ஷா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

துணை

தலைவர்

விமலா நன்றி கூறினர்.



2024 மிஸ் கூவாகம் டூ அழகி மேகா தூத்துக்குடியில் உள்ள நட்புறவு உடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.






வெள்ளி, 22 ஜூலை, 2022

தூத்துக்குடியில் திருநங்கைகள் பணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் கண்டிப்புடன் தூத்துக்குடி எஸ்.பி அட்வைஸ்!!! தூத்துக்குடி காவல்துறை அலுவலகத்தில் திருநங்கைகளை வரவழைத்து ஆலோசனை கூட்டம்

 சிக்னல்கள், தேசிய நெடுஞ்சாலை, டோல்கேட் போன்ற இடங்களில் திருநங்கைகள் சிலர் நன்கொடையாக பணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கி அவர்களின் முன்னேற்றத்திக்கான ஆலோசனை வழங்கினார்.

இதுபற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி லீக்ஸ்: 22.07.2022  

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைப்பதற்கான மாற்றத்தை உருவாக்குவதற்கும், வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், அவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பதற்கு பல்வேறு அரசு துறை அதிகாரிகள், தனியார்துறை அதிகாரிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


அவசியம் வீடியோ பார்க்க 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மற்றும் தனியார்துறை அதிகாரிகள் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு திருநங்கைகளுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைப்பதற்கான ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும்  என்ற எண்ணத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கும், அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிவதற்கும் இன்று (22.07.2022) மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  பாலாஜி சரவணன்  தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 


இதில் தூத்துக்குடியிலுள்ள முக்கிய தனியார் நிறுவனத்தினர், பல்வேறு அரசு துறைகளின் அலுவலர்கள் மற்றும் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர்.


 இக்கூட்டத்தில் திருநங்கைகள் சார்பாக அவரது கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு அவர்களின் கல்வித்திறன் மற்றும் அவர்களது தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில்  வேலை வாய்ப்புக்கான வழிவகை செய்யப்பட்டது. 




மேலும் தூத்துக்குடி மாவட்டம் குற்றம் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு தருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  முன்னிலையில் திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.



அப்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  பேசுகையில்....

 தற்போது சமுதாயத்தில் பல திருநங்கைகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். 

நீங்கள் அனைவரும் உங்களது கல்வி அறிவை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் உங்களிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சமுதாயத்தில் பொதுமக்களுடன் சரிசமமாக திகழ்வதற்கு நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்ளுங்கள். ஓவ்வொரு இடத்திலும் நீங்கள் சிறந்தவர்களாக இருப்பதற்கான தகுதியை வளர்த்து கொள்ளுங்கள். 


அது உங்கள் அனைவரிடமிருந்தும் உருவாக்கப்பட வேண்டும். போக்குவரத்து சிக்னல்கள், தேசிய நெடுஞ்சாலை, டோல்கேட் போன்ற இடங்களில் திருநங்கைகள் சிலர் நன்கொடையாக பணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.


 திருநங்கைகள் எந்த வித குற்ற செயல்களிலும்  ஈடுபடாமல், உங்களுடைய தகுதிக்கு தகுந்தாற்போல் வேலை வாய்ப்பை பெற்று, உங்களை பற்றிய புரிதல்களை சமுதாயத்தில் நல்ல விதமாக ஏற்படுத்தி, நல்ல மாற்றத்தை உருவாக்குங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  பாலாஜி சரவணன்  தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரக்கூடிய மின்சார கார் ஓட்டுனராக பணியாற்றி வரும் திருநங்கை சுபப்பிரியா, தூத்துக்குடியில் வழக்கறிஞராகவும், அன்பு டிரஸ்ட் மூலமாக முதியோர்களுக்கு உதவி புரிந்து வரும் திருநங்கை விஜி, சமூக நலத்துறை உறுப்பினராக பணியாற்றி வரும் பியூட்டி என்ற திருநங்கை ஆகியோரின் சிறப்பான செயலை பாராட்டி மாவட்;ட காவல் கண்காணிப்பாளர்  பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.




இந்நிகழ்வின்போது, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபு, தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரேமானந்தன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விநாயகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்டஅலுலவலர் லீமாரோஸ், வருவாய்துறை அலுவலக நிர்வாக அதிகாரி ராஜலெட்சுமி, மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் அருண்குமார்,  தூத்துக்குடி தமிழ்நாடு எய்ட்ஸ் நோய் கட்டுபாட்டு சங்கம் செவாலியர் ரோஸ் சொசைட்டி திட்ட மேலாளர் டிலைட் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.