சரத்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரத்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 ஜூலை, 2024

செய்தி கள் வெளியீடுபவர் மீது நடிகர் சரத்குமார் தீடீர் பாய்ச்சல் அறிக்கை வெளியிட்டுள்ளார்

சமூக ஊடகங்கள் மீது மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.



அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


சமூக ஊடகங்கள் என்பவை சமூக அவலங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும். 


பல முக்கியத் தகவல்களை பகிர்வதாகவோ அல்லது மக்களை மகிழ்விக்கும் விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயார் செய்வதாகவோ அவர்களது பணி அமையலாம். 


ஆனால் தற்போது பலவகையிலும் சமூக ஊடகங்கள் எல்லை மீறுவதாகவே இருக்கிறது.


பிரபலங்களின் கருத்துக்களை விமர்சிப்பதற்குப் பதிலாக அவர்களைத் தனிநபர் தாக்குதலுக்கு உள்ளாக்குவது, உருவக்கேலி செய்வது, அவர்களது சொந்த தனிப்பட்ட வாழ்வைக் கிளறி அருவெறுக்கத் தக்க வகையிலான தவறான விமர்சனங்களைப் பதிவு செய்வது என்று சமூக ஊடகப் போர்வையில் சிலர் செய்யும் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.


பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களில் பெரும்பாலும் உண்மை இருப்பதில்லை என்பதோடு, யாரது தனிப்பட்ட வாழ்விலும் தலையிட ஊடகங்களுக்கு உரிமை இல்லை என்பதே அடிப்படை சமூக நீதி.


அடுத்தவர் வீட்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் நபர்கள் இதுபோன்ற போன்ற சமூக ஊடகப் பதிவுகளை ஊக்குவித்து ஆதரவளித்து வருகின்றனர்.


இப்படிப்பட்டவர்களின் மனநிலை முதலில் பரிசோதிக்கப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும். கையில் ஒரு ஊடகம் இருக்கிறது என்பதற்காக யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று களமிறங்கி இருக்கும் நபர்கள் குற்றவாளிகளாகவே அடையாளம் காணப்பட வேண்டும்.


உயிர் உடமைகளுக்கு சேதம் விளைவித்தால் தண்டனை உண்டு என்பது போல, தனிப்பட்ட சட்டவிதிகளில் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப மாற்றங்கள் வரவேண்டும். 


அரசியல் தலைவர்களும்,சமூகத்தில் பொறுப்பான இடத்தில் இருப்பவர்களும் இதுபோன்ற போலியான சமூக ஊடகவாதிகளுக்கு எதிராகக் கண்டனக்குரல் எழுப்ப வேண்டும்.


இது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான பிரச்சனையாகப் பார்க்கப்பட வேண்டும்.


 அனைவருக்கும் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு நிம்மதியாக வாழ உரிமையுண்டு எனும் போது,அந்த அடிப்படை உரிமையை இது போன்ற சமூக ஊடகங்கள் தங்கள் லாபத்திற்காக பறித்துக்கொள்வதை அனுமதிக்கக் கூடாது.


இனிமேலும் பொய்களைக் கூறி, கீழ்தரமாக விமர்சித்து தங்கள் எல்லையைக் கடக்கும் நபர்கள் சுய பரிசோதனைசெய்து தங்களைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால் சட்டப் படியாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, எனது கோரிக்கைகளைக் குறிப்பிட்டு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் எல் முருகன் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.


 கடிதத்தின் நகலை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர், அஸ்வினி வைஷ்ணவ் அவருக்கும் அனுப்பி வைக்க இருக்கிறேன்.


 அனாவசியமாக தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் சமூக ஊடகங்கள் மீதும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசு ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

புதன், 6 மார்ச், 2024

பாஜக கூட்டணி சரத்குமார் அதிகாரபூர்வ அறிவிப்பு

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂

Photo news by roja arunan

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜகவுடன் கூட்டணியை அமைத்தது சமக


சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு




இதுபற்றிய செய்தியாவது:-


பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜகவுடன் கூட்டணியை அமைத்தது குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்திருப்பதாவது:-



வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி

கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.



பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் .அரவிந்த் மேனன்

பிப்ரவரி 28 ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து, பாராளுமன்ற தேர்தலில் பாரதிய

ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து முதல் கட்ட

பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.




அதில் ஒரு மித்த கருத்துகள் உடன்பட்டதால்

நேற்று (05.03.2024) மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. L.முருகன் , தேசிய

செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் H.ராஜா அவர்கள், பாஜக

தமிழக பொறுப்பாளர் மற்றும் தேசியச் செயலாளர் அரவிந்த்மேனன்

ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும்

பேசினார்கள்.


இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது.



அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள்

மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே எனக்கு பாராளுமன்றத் தேர்தலில்

முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று

உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட,

மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக மாண்புமிகு

நரேந்திர மோடி அவர்கள் பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா

கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன்.



மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன்.


நன்றி,

வணக்கம்

உழைப்பவரே உயர்ந்தவர்

என்றும் அன்புடன்

ராச

ரா.சரத்குமார்

நிறுவனத் தலைவர்

எண் : 2, கல்யாணிநகர், கொட்டிவாக்கம், சென்னை - 600 041

No.2, Kalyaninagar, Kottivakkam, Chennai - 600 041.

Phone : 044 - 24511373 Mail : samathuvam2007@gmail.com


இவ்வாறு தெரிவித்துள்ளார்.


செவ்வாய், 5 மார்ச், 2024

கனிமொழி Vs சரத்குமார் தூத்துக்குடி யில் எம்.பி தேர்தல் களம்!!!

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂

Photo news

by  roja arunan 

தூத்துக்குடியில்.... கனிமொழி Vs சரத்குமார் எம்பி.வேட்பாளாராக களம் இறங்குகிறார்கள்.

 வருகின்ற 2024 தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் வேட்பாளாராக கனிமொழி - சரத்குமார் களத்தில் போட்டியிட போகிறார்கள்.

மீண்டும் ஸ்டார் தொகுதியாக தூத்துக்குடி மாறுகின்றது.



இதுபற்றிய செய்தியாவது-


2024 பாராளுமன்ற தேர்தல் அரசியல் கட்சிகள் பரபரக்கின்றனர்.

திமுக கூட்டணி- அதிமுக கூட்டணி-

பாஜக கூட்டணி


தமிழகத்தில் மும்முனை  போட்டி கடுமையாக  தெரிகிறது.....?


திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை மதிமுக, வலது-இடது கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரஸ் ம.ம.க போன்றவைகள் இடம் பெறுகிறது.


இதில் அதிமுக கூட்டணியில் அதிமுக 25 மற்றவை கூட்டணி கட்சிகளுக்கு என விட்டு கொடுக்க தயாராகி வருகிறது

பாஜக பக்கம் இன்னும் போகாமல்...

தேமுதிக பாமக பேச்சுவார்த்தையில் இழுத்து கொண்டுள்ளது.

இந்நிலையில்

அதிமுக கூட்டணியில்

புரட்சி பாரதம்,

எஸ் டி பி.ஐ,இந்திய தேசிய லீக், சமத்துவ மக்கள் கட்சி என அதிமுக கூட்டணிக்குள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்

மீண்டும்...

தூத்துக்குடியில்

நடிகர் சரத்குமார்!!!


நடிகர் சரத்குமார் கட்சியான சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி - நெல்லை விருதுநகர் இதில்  இரண்டு தொகுதி  கேட்டதாகவும்.... அதில் நீங்கள் விரும்பிய ஒன்று தருவதாக கூறி யது?

தூத்துக்குடி கேட்டுள்ளது.


தற்போது

தூத்துக்குடி அதிமுக தொகுதியில் வேட்பாளர்கள் தேர்வு


முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் இவரை தவிர...

ஆறு தொகுதிகளிலும் பெயர் சொல்லுமளவில் பிரபலமடைந்த வேட்பாளர்கள் இல்லவே ? அதுவும் எதிர் அணியில் மிகபலம் பொருந்திய கனிமொழி அவரிடம் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என அதிமுக கட்டாயத்தில் இருக்கின்றது.

அதற்கான வேட்பாளர் யாரென்று தேடலில் களைத்து போயுள்ளது.


கடந்த முறை 2019 - ல்

பாராளுமன்ற தேர்தலில்...

அதிமுக தனது கூட்டணி கட்சியான பாஜக தூத்துக்குடி தொகுதியில் நின்றது.


அச்சமயம் தமிழக பாஜக மாநில தலைவி தமிழிசை சௌந்தரபாண்டியன் அதிமுக கூட்டணி நின்றார்

அவரை எதிர்த்து திமுக கனிமொழி  5 லட்சத்திற்கு மேல் ஒட்டு 2 லட்சம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்று கனிமொழி எம்பி யானார்.

 தமிழிசை செளந்தராஜன்பாஜக மாநில தலைவியே படுதோல்வி!!!


அடுத்து வந்த 2021 தூத்துக்குடி சட்டமன்ற தேர்தல் அதிமுக கூட்டணியில்வாசன் கட்சி சார்பில் எஸ்டி.ஆர் விஜயசீலன்

திமுக சார்பில் நின்ற கீதாஜீவன் வெற்றிபெற்றார்.



கடந்த 2019 பாராளுமன்ற தேர்தல் 2021 சட்டமன்ற தேர்தல் இரண்டிலும் தூத்துக்குடியில்....

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு துப்பாக்கி சூடு அதிருப்தி எதிரொலித்தது


தற்போது ஸ்டெர்லைட் மூடல் உச்சமன்ற தீர்ப்பு

எதிராலித்து கொண்டிருக்கிறது.

 இதையும் ஆளும்கட்சி திமுக கனிமொழி க்கு தங்களுக்கு சாதகமாக தெரிவிக்கிறது.


இந்நிலையில்...

கூட்டணி கட்சியான சமக நடிகர் சரத்குமார் தூத்துக்குடி தொகுதி  நிறுத்தப்படுவார்.


ஏற்கனவே முன்பு தூத்துக்குடி எம்பி தொகுதியில் நடிகர் சரத்குமார் கடம்பூர் ஜனார்த்தன் எம்பி போட்டியிட்டார்.


திமுக உள்ளுர் தலைவர்களின் தவறான வழிகாட்டலால் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்

வீர சபதம்!!¡

அதனால்...

அன்றே...

இதே தூத்துக்குடி எம்.பி தொகுதியில் நடிகர் சரத்குமார் நின்று ஜெயிப்பார் என்ற வீரசசபதம்... சவாலும்  இருக்கின்றது.

நிறைவேற்ற தயாராகிறார் நடிகர் சரத்குமார் என்கிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை நடிகர் சரத்குமார் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாடு

கனிமொழி -யும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாடு இருப்பவர்

என்பதால் போட்டி கடுமை காணலாம்.

வியாழன், 7 டிசம்பர், 2023

நெல்லை வரும் சரத்குமாருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு தூத்துக்குடி சமக ஆலோசனை கூட்டம்

thoothukudileaks 7-12-2023

photo news by

 roja arunan 

நெல்லை வரும் நடிகரும் சமக கட்சி தலைவருமான சரத்குமாருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு  தூத்துக்குடி ச ம க ஆலோசனை கூட்டம் 



நெல்லை பாளையங் கோட்டையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தலைமையில் டிசம்பர் 9 தேதி  பொதுகூட்டம் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு சமக கட்சி தலைவர் சரத்குமாருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு  தூத்துக்குடி ச ம க ஆலோசனை கூட்டம் இன்று 7-12-2023 நடைபெற்றது .


இது பற்றிய செய்தியாவது 


வருகிற 2023 டிசம்பர் 9 சனிக்கிழமை மாலையில் நெல்லையில் மாபெரும் நாடாளுமன்ற சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக பொதுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.


அதனை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் சார்பாக சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

 இக் கூட்டத்தில்

 மாநில துணைப் பொதுச் செயலாளர்&

 தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர்

சுந்தர் தலைமையில்,

 டிசம்பர் 9 காலை 09.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படிக்கப்படுகிறது. 



இதுகுறித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

 

1 புரட்சித் திலகம்  சரத்குமார் வரவேற்க தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் வருகை தந்து வரவேற்பு  அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது ...


2 மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சி உடைய இணைக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது..


இந்த ஆலோசனை கூட்டத்தில்

 தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்

 எம் .எக்ஸ் வில்சன்

தலைமை தாங்கினார்.. 

 மத்திய மாவட்ட பிரதிநிதி

 பவர்S.ராமகிருஷ்ணன்,

 மாவட்ட இளைஞர் அணி செயலாளர்

M. சாமுவேல்,

 ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர்

 அருள்ராஜ், 

ஓட்டப்பிடாரம் தொகுதி செயலாளர்

 ரஞ்சித் குமார், 

தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் திலிப்

மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 14 ஜூலை, 2023

தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் 68 வது பிறந்த நாள் கொண்டாடிய சமத்துவ மக்கள் கட்சி

 thoothukudi leaks 14-7-2023

News by :-arunan

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவரும் நடிகருமான சரத்குமார்  68 வது பிறந்த நாள் இன்று( 14-7-2023 )தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கட்சி தொண்டர்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது

  


தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் சார்பாக கீழ்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது..


 காலை 7 மணிக்கு

 தூத்துக்குடி பனிமய மாதா கோவிலில் வைத்து சிறப்பு  ஜெபம்..


 காலை 7.30 மணிக்கு

 தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை.



காலை 9 மணிக்கு

 வல்லநாடு அருகில் உள்ள வசவபுரத்தில் வைத்து

 கருங்குளம் வடக்கு ஒன்றியத்தின்

சார்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது...



 காலை 10:00 மணிக்கு

 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு

 இளைஞரணி

 சார்பாக தங்க மோதிரம வழங்கப்பட்டது..


 காலை 11 மணிக்கு

 மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி

 சார்பாக பிரம்மாண்ட கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப் பட்டது..


 மதியம் 12 மணிக்கு

 ஆதரவற்றோர் இல்லத்தில் வைத்து

 மாவட்ட கலை இலக்கிய அணி

சார்பாக

 மதிய உணவு வழங்கப்பட்டது.


 மதியம் 1மணிக்கு

 அதில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 

தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் சார்பாக*

 T. சவேரியார் புரத்தில் வைத்து ஆயிரம் பேருக்கு அன்னதானம்

(மதியஉணவு ) சிறப்பாக வழங்கப்பட்டது...


 மாலை 4 மணிக்கு

 தூத்துக்குடி

 கிழக்கு ஒன்றியம் சார்பாக தாளமுத்து நகர் பகுதியில் இயக்கத்தின் கொடி யேற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...


 மாலை 5 மணிக்கு

 தூத்துக்குடி மத்திய மாவட்ட

 ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தின்

 சார்பாக புதியம்புத்தூரில் வைத்து இயக்கத்தின் கொடி யேற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...


மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது..


தலைமை:

 எம். எக்ஸ். வில்சன்

 தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்

 முன்னிலை 

குருஸ் திவாகர்

மாநில இளைஞரணி துணை செயலாளர்..

 நலத்திட்டங்களை வழங்கியவர்

என் .சுந்தர

மாநில துணை பொதுச்செயலாளர்

 தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர்


 கலந்து கொண்டவர்கள்

 ஏ .எம். ராஜேஷ் 

மாவட்ட துணை செயலாளர்

எஸ். ராமகிருஷ்ணன்

 மாவட்ட பிரதிநிதி 

எம் .சாமுவேல்

 மாவட்ட இளைஞரணி செயலாளர் 

ஆர் .பாரதிதாசன் 

மாவட்ட வர்த்தக அணி செயலாளர் 

திலீப்

 மாவட்ட தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர்

 செல்வம்

 மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்

 சரவணன் 

மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர்

 வி. எஸ் .ஆர் சுயம்பு தங்கராஜ் 

மாநில பொதுக்குழு உறுப்பினர்

 பிரவீன் 

மாவட்ட மாணவரணி துணை செயலாளர்

 ஒன்றிய செயலாளர்கள்

 அருள்ராஜ் 

கண்ணன் 

முருகன் 

 கணேசமூர்த்தி

சேர்மராஜ்

மற்றும் பலர் கலந்து கொண்டனர்...

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

தூத்துக்குடியில் பிட் நோட்டீஸ் வழங்கி சமக கட்சி யினர் விழிப்புணர்வு மது மற்றும் போதை பொருட்கள் தவிர்த்து ஒழிப்போம் விழிப்புணர்வு பிரச்சாரம்

 thoothukudileaks 12-2-2023

தூத்துக்குடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர்  மது மற்றும் போதை பொருட்கள் தவிர்த்து ஒழிப்போம் என துண்டு பிரசுரம் வழங்கி  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள்.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில் 

இன்று(12-2-2023) காலை 10மணியளவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர்  மது மற்றும் போதை பொருட்கள் தவிர்த்து  ஒழிப்போம் என துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள்.



 தூத்துக்குடி மத்திய மாவட்டம் செயலாளர்  M. X. வில்சன்  தலைமையில் சமக கட்சியினர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், தூத்துக்குடி தற்காலிக பழைய பேருந்து நிலையம், மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி முக்கிய வீதிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது .




இந்த நிகழ்ச்சியில் 

சாமுவேல் 

மாவட்ட விவசாய அணி செயலாளர்

சந்திரா

மாவட்ட மகளிர் அணி செயலாளர்

செல்வம்

மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்

மற்றும்

பாக்கிய ராஜ்

அருள்ராஜ் மேலும் பலர் கலந்து கொண்டார்கள்.



புதன், 14 டிசம்பர், 2022

தடையை மீறி தூத்துக்குடியில் சமக கட்சியினர் உண்ணாவிரதம் போராட்டம் காவல்துறை கைது

 அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் திமுக ஆட்சியில்  போதை பொருட்களை தடை செய்ய வேண்டி உண்ணாவிரத போராட்டத்திற்கு அறிக்கை விட்டு இருந்தார்.

தூத்துக்குடியில் சமக கட்சியினர் போராட்டம் 

கடந்த 12-12-2022 அன்று நடத்த இருந்தனர்.இதற்கு தூத்துக்குடி மாவட்டம் காவல் துறை அனுமதி வழங்க வில்லை. 




இதனால் தடையை மீறி உண்ணாவிரதம் குருஸ் திவாகர் தலைமையில் மத்தியமாவட்ட செயலாளர் MX . வில்சன் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்டம்  R.தயாளன் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.S.Rபாஸ்கரன் ஆகியோர்களின் முன்னிலையில் மற்றும் தொகுதி செயலாளர் ஜான் ராஜா

 சின்ன தம்பி

ஆனிமுத்துராஜ்

மாவட்ட அணி செயலாளர்கள்

.சந்திரா

 ஜெயந்தி குமார்

 பாரதிதாசன்

 சாமுவேல்

துரைராஜ்

ராஜா ஒன்றியசெயலாளர்

. தேவராஜ் அழகேசன்

துரைராஜ் ராஜேந்திரன்

 மற்றும் சமத்துவ மக்கள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.




 இத்தகவல் அறிந்து தூத்துக்குடி காவல் துறையினர்  சமத்துவ மக்கள் கட்சியினரை கைது செய்ய பட்டு காமராஜ் காலேஜ் அருகில் உள்ள திருமண மண்டபத்தில்  கொண்டு சென்றனர் .

இதனால் தூத்துக்குடி மில் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளி, 15 ஜூலை, 2022

தூத்துக்குடியில் காமராசர் 120-வது பிறந்த நாள் விழா சமத்துவ மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் வில்சன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் காமராஜர் திருவுருவ சிலை மாலை அணிவிப்பு

 முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் 120-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வில்சன் தலைமையில் தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கி கொண்டாடப்பட்டது.





இதையொட்டி இன்று (15-07-2022)காலை வ.உ.சி மார்க்கட் பகுதியில் அமைந்திருக்கும் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பாக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வில்சன் மற்றும் நிர்வாகிகள்  ரோஜாப்பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக அப்பகுதியில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

வியாழன், 14 ஜூலை, 2022

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் பிறந்த நாள் தூத்துக்குடி மத்திய மாவட்ட சார்பாக இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகள் செய்தார்கள்

 அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் நடிகர் சரத்குமார் பிறந்தநாள் இன்று தமிழக முழுவதும் சமக வினர் கொண்டாடி வருகின்றனர்.

தூத்துக்குடியில்.....

தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வில்சன் தலைமையில்  ஜூலை 14. 2022 வியாழக்கிழமை ...காலை 7 மணிக்கு

 தூத்துக்குடி பனிமய மாதா கோவிலில் வைத்து சிறப்பு  ஜெபம்.. செய்யப்பட்டது.

தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

 அடுத்து லூசியா ஆதரவற்றோர் இல்லத்தில் வைத்து மகளிர் அணி

 காலை உணவு வழஙகினார்கள்.

இன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்குதல்


தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு இளைஞரணி சார்பாக தங்க மோதிரம் வழங்கப்பட்டது...



தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்

 தொண்டர் அணி

 சார்பாக ரத்த தானம் வழங்கப்பட்டது...

ரத்த தானம்


 

 தூத்துக்குடி டி .சவேரியார் புரத்தில் வைத்து மாணவர் அணி

 சார்பாக பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது.



மாவட்ட விவசாய அணி சார்பாக இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்கள்..

 சமத்துவ மக்கள் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் சார்பாக டீ. சவேரியார் புரத்தில் வைத்து மாபெரும் அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கபட்டது.

 தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக தாளமுத்து நகர் பகுதியில் இயக்கத்தின் கொடி யேற்றி  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 தூத்துக்குடி மத்திய மாவட்ட ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தின் சார்பாக புதியம்புத்தூரில் வைத்து இயக்கத்தின் கொடி யேற்றி  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


மேலும் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி இனிப்புகள் வழங்கினார்கள்..



நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை, பகுதி, வட்ட, அணி மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடு தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வில்சன் செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் |
T. குரூஸ் திவாகர்
 தூத்துக்குடி மத்திய மாவட்ட துணைச் செயலாளர்
A.M.ராஜேஷ்

(தூத்துக்குடி தொகுதிபாராளுமன்ற பொறுப்பாளர் )

மற்றும்மாவட்ட பிரதிநிதி

பவர் எஸ் ராமகிருஷ்ணன்
மாவட்ட மகளிர் அணி செயலாளர்
சந்திரா
மாவட்ட மாணவர் அணி செயலாளர்
அந்தோணி துரைராஜ்
மாவட்ட விவசாய அணி செயலாளர்
சாமுவேல்
ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர்
அருள்ராஜ்
தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர்
கண்ணன்
மாநில பொதுக்குழு உறுப்பினர்
சுயம்பு தங்கராஜ்
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்
மைக்கேல்
, பாஸ்கர்
தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர்
காந்தி காமராஜ்
ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர்
சரவணகுமார்
ஒன்றிய அவைத் தலைவர்
பாஸ்கரன்
ஆரோக்கியபுரம் பகுதி பொறுப்பாளர்
சேர்மராஜ்
சகாயராஜ்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்

செவ்வாய், 31 மே, 2022

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மாநகரில் சாலையோரம் நிறுத்தும் வாகனங்களுக்கு ரூ 5 ரூ 10 கட்டண வசூல் செய்யும் தீர்மானத்தை வாபஸ் பெறவேண்டும்..! மத்திய மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தல்..!!

 

தூத்துக்குடி மாநகராட்சி மாநகரில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களூக்கு ரூபாய் 5 ரூபாய் 10  என  கட்டணம் வசூலிக்கும் தீர்மானத்தை உடனடியாக திரும்பபெறவேண்டும், இல்லாதபட்சத்தில் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எம்.எக்ஸ்.வில்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எம்.எக்ஸ்.வில்சன்


 தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 10ஆண்டுகளை கடந்தும், மாநகராட்சியில் மக்களுக்கான அடிப்படைத்தேவைகள் இன்றுவரை பூர்த்தியாகவில்லை.

 

சிறு மழை பெய்தாலே மாநகரம் முழுவதும் மழைநீர் குளம் போல தேங்கி விடுகிறது. மழைக்காலத்தில் தூத்துக்குடி மாநகரமே கடலில் மிதக்கும் கப்பலாக தத்தளிப்பது காலகாலமாக தொடர்கிறது. இப்படி இருக்க தற்போது 'ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரில் மாநகரமே இன்று அலங்கோலமாக காட்சி அளித்து வருகிறது.

 

சீரான போக்குவரத்திற்கு ஏற்ப போதுமான சாலை வசதிகள் இல்லாததால் மாநகரமே தினம் தினம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.


இப்படிப்பட்ட சூழலில், கடந்த 30.05.2022 அன்று திமுக மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையிலான மாநகராட்சி கூட்டத்தில், ''மாநகராட்சி பகுதிகளிலுள்ள சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ... கட்டணம் வசூலிக்கும் தீர்மானம்'' நிறைவேற்றப்பட்டுள்ளது . தூத்துக்குடி பொதுமக்கள் அனைவருக்கும் மிகப்பெரும் அதிர்ச்சி அளித்து இருக்கிறது.

 

சாலைகளே சரியாக இல்லாத நிலையில், தங்களை நம்பி வாக்களித்த மாநகர மக்களுக்கு அன்பு பரிசாக திமுக தலைமையிலான மாநகராட்சி நிர்வாகம் மாநகரில் சாலையோரங்களில் வழக்கம் போல் இடது புறமாக நிறுத்தப் படும்  வாகனங்களுக்கு கூட கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சி ப்பது வெட்ககேடான செயலாகும்.

 

தூத்துக்குடி மாநகரை பொறுத்தவரை  பொதுமக்கள் கடைகளுக்கு பொருட்களை வாங்க செல்லும் மக்கள், வியாபாரிகள், தனியார் வணிக வளாகங்களில் பணிபுரிபவர்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு செல்பவர்கள், தொழிலாளர்கள் என பெரும்பாலானவர்கள் முக்கிய சாலையின் இடது புறங்களில் தான் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

 

இப்படி நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால், மாநகராட்சி நிர்வாகமோ சாலையோரங்களில் நிறுத்தப்படும் பைக், கார் போன்ற வாகனங்களால் தான் விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும் அதனை தவிர்க்கத்தான் இந்த பார்க்கிக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகவே தெரிகிறது.

அப்படி பார்த்தால் தினம் வெறும் ரூ 10 கட்டணமாக செலுத்தி விட்டு நான்கு சக்கர வாகனம் (கார்)ஒட்டு வோர் அநேகம் பேர் சாலையோரங்களில் நிறுத்திவிட்டு சென்று விடுவார்கள் கார்கள் சாலைகளில் நிற்பதால் போக்கு வரத்து நெரிசல் உண்டாகும் இதே போல் ரூ 50 கட்டண செலுத்தி விட்டு லாரி போன்ற கனரக வாகனங்கள் அங்காங்கே சாலையோரங்களில் நிறுத்தினாலும் போக்குவரத்து நெரிசல் தான் ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் புரியும்.

 

இதனால் வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், பணியாளர்கள், பொதுமக்கள் என அனைத்துதரப்பினரையும் பாதிக்கும் இந்த பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் தீர்மானத்தை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

 

இல்லாதபட்சத்தில் எங்கள் கட்சியின் நிறுவன தலைவரும், பொதுச்செயலாளருமான ''புரட்சி திலகம்'' ரா.சரத்குமார்  ஆலோசனையின் பேரில், மாநில துணை பொதுச்செயலாளர் என்.சுந்தர் வழிகாட்டுதல்படி வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் ஒன்றுதிரட்டி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்கள்..

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

உள்ளாட்சியில் நடிகர் சரத்குமார் தனித்து போட்டி!!! தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 


நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்கள்.



இந்நிலையில் வரப்போகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கட்சி தனித்து போட்டியிடுகிறார்கள். 

சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் தனது கட்சி மாவட்ட செயலாளருக்கு உத்தரவுவிட்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில்  மாவட்ட நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவர்கள் குறித்தும் தனித்து போட்டியிடுவதற்காக கட்சியில்  மனு பெற்று ஆலோசனை கூட்டம் அந்தந்த மாவட்ட செயலாளர் கள் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.


 தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று 19 .12 .2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.



1 .இக் கூட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக தீர்மானிக்கப்படுகிறது.


2.முதற்கட்டமாக மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட விரும்பும்

 சாமுவேல்( 10-வது வார்டு)

 மந்திரமூர்த்தி (60வது வார்டு) 

 சந்திரா 18-வது வார்டு ஆகியோர் விருப்ப மனுவை வழங்கினார்கள்..


இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எம் எக்ஸ்.வில்சன் தலைமையில் நடைபெற்றது.

 கதிரேசன் போல் பேட்டை பகுதி செயலாளர்

 சாமுவேல் மாவட்ட விவசாய அணி செயலாளர்

சந்திரா மாவட்ட மகளிரணி செயலாளர் 

அந்தோணி துரைராஜ் மாவட்ட மாணவரணி செயலாளர்

 ராமகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதி

 வட்டச் செயலாளர்கள்

 மூர்த்தி ,கார்த்திகேயன், தட்சிணாமூர்த்தி

 பகுதி இளைஞர் அணி செயலாளர்கள் 

கருவேல முத்து முத்துகிருஷ்ணாபுரம் பகுதி ,

முகேஷ் முத்தையாபுரம் பகுதி

 மாவட்ட மகளிர் அணியினர் 

ஜீனத், ரேவதி, செல்வம்

 மாவட்ட மாணவர் அணியினர் 

மாரிச்செல்வம், பிரவீன் ஊராட்சி செயலாளர் அந்தோணி அல்போன்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.