சைபர் க்ரைம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சைபர் க்ரைம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

இந்து மதத்திலிருந்து...கிறிஸ்துவ மதம் மாறினால் 10 கோடி?!! ரூபாய் 5 லட்சம் மோசடி செய்து ஏப்பம் விட்ட பலே ஆசாமி தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அதிரடி கைது நடவடிக்கை!!!

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

26-4-2024

Police news  


தூத்துக்குடி  கோவில்பட்டி யில் கிறிஸ்தவ மதம் மாறினால் ரூபாய் 10 கோடி ???

  சுமார் 5 லட்சம் பணம் மோசடி செய்தவர் கைது - சைபர் குற்ற பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை.

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு IMO என்ற செயலி மூலமாக



 சொக்கநாதன் என்ற IDல் இருந்து தொடர்பு கொண்டு பேசியவர்..!!!

 அவரிடம் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால்...

 ரூபாய் 10 கோடி பெற்று தருகிறேன் அதற்கு அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்? வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டடுள்ளார்.பலே ஆசாமி?


இவரும் இதனை உண்மை என்று நம்பி   தூத்துக்குடி கோவில் பட்டி இளைஞர் தனது ரூபாய் 4,88,159/- பணத்தை Gpay மூலம் அனுப்பியுள்ளார்.


பின்னர் தான் ஏமாற்றப்பட்டு பணம் ரூபாய் 5 லட்சம் மோசடி ஆனதை உணர்ந்தார்.


 உடனே மேற்படி இளைஞர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.


மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர்

ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

கைதான ராஜவேல்

தூத்துக்குடி மாவட்டம் சைபர் க்ரைம் டீம் தேடலில் சிக்கினான் 

 தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு, ஆனந்தம் நகர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (31) என்பவர் மேற்படி பாதிக்கபட்ட இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதனையடுத்து மேற்படி போலீசார் நேற்று முன்தினம் (26.04.2024) தஞ்சாவூர் சென்று மேற்படி ராஜவேலின் வீட்டருகே வைத்து அவரை கைது செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டார்.

சிறையில் அடைப்பு 

அதன் பிறகு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர்.


 மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 16 ஜூன், 2022

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் Cyber Supporting Officer தூத்துக்குடி எஸ்.பி புதிய உத்தரவு இலவச தொலைபேசி எண்ணான 1930 ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் சைபர் குற்றங்கள் மீது துரித நடவடிக்கை

 தூத்துக்குடி லீக்ஸ்: 16.06.2022

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் சைபர் குற்றங்கள் சம்மந்தமான வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 2 காவலர்கள் (Cyber Supporting Officer) அடங்கிய குழுவினரை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.




இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பெறப்படும் சைபர் குற்ற பிரிவு புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறையினருக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்தலைமையில் நடைபெற்றது.



தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி அனைத்து காவல் நிலையங்களிலும் (Cyber Supporting Officer)  குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு அந்தந்த காவல் நிலையங்களிலேயே சைபர் குற்றங்கள் சம்மந்தமான புகார்களை பெறுவது குறித்தும், அவ்வாறு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், இது சம்பந்தமாக புகாரளிக்க வரும் பொதுமக்களுக்கு உதவி செய்வது குறித்தும், சைபர் குற்றங்கள் சம்மந்தமாக ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (16.06.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தின் வாயிலாக OTP மூலம் மோசடியாக பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது போலியான செயலிகளை தரவிறக்கம் செய்து உங்கள் தகவல்கள் திருடப்பட்டாலோ அல்லது வேறு வகையிலோ பண இழப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் 24 மணி நேரத்தில் சைபர் குற்ற பிரிவு அறிவித்துள்ள இலவச தொலைபேசி எண்ணான 1930 ஐ தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். 


மேலும் வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் தொடர்பாக https://cybercrime.gov.in/ என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம். 




உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்‌தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமயிலான போலீசார் செய்திருந்தனர்.


இதில் சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர் சுதாகரன், தகவல் தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் அச்சுதன் உள்ளிட்ட காவல் துறையினர் உடனிருந்தனர்.

செவ்வாய், 30 நவம்பர், 2021

சைபர் குற்றவாளிகள் கையாளும் 36 வகை தந்திரங்கள்!!!


1) வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வங்கி விபரங்களை கேட்பதில்லை. மேற்படி அழைப்பை தவிர்ப்பது சிறந்தது. ஆகவே மேற்கண்ட விபரங்களை கேட்டு போன் செய்தால், எச்சரிக்கையாக இருக்கவும்.




2) வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி 1) A/c நெம்பர் 2) ATM DEBIT CARD நெம்பர், 3) PIN நெம்பர் 4) CVV நெம்பர், 5) OTP நெம்பர் 6) நெட் பேங்கிங் PASS WORD 7) CREDIT CARD நெம்பர் கேட்டால் தெரிவிக்க வேண்டாம். தெரிவித்தால் உங்கள் வங்கி கணக்கு HACK செய்யப்படலாம்.


3) சுகாதாரதுறையில் இருந்து பேசுவதாகவும், தடுப்பு

ஊசி போடப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்க விபரங்களை UPDATE செய்ய வேண்டும் என கேட்பது போல் விபரங்களை கேட்டு, உங்களது உங்கள் வங்கி கணக்கை குறிவைத்து 1) Bank A/c No, 2) Aadhar Card No, 3) PAN Card No, etc பெற்றுக்கொண்டு உங்கள் செல்லுக்கு வந்த OTP விபரம் கேட்டு பணத்தை பறிக்க முயற்சி

செய்யக்கூடும். விபரம் தெரிவித்தால்

உங்கள்

வங்கி கணக்கு HACK செய்யப்படலாம்.


4) உங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதாகவோ / லோன் தொகை பிடிக்கப்பட்டதாகவோ SMS அனுப்பி, செய்யவில்லை எனில், அந்த SMS வுடன் உள்ள LINK ஐ CLICK செய்ய வலியுறுத்துவார்கள். CLICK செய்யாமல் அதை தவிர்க்கவும். தேவைபட்டால் வங்கிக்கு நேரில் சென்று விளக்கம் பெறவும். CLICK செய்தால் உங்கள் a/c ல் இருந்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சிப்பார்கள்.


5)

KYC/PAN/AADHAR NO விபரங்கள் குறித்து கேட்டாலோ, SMS/ LINK அனுப்பினாலோ UPDATE செய்யவேண்டாம். வங்கிக்கு நேரில் சென்று தேவைப்பட்டால் ஆவணங்களை கொடுக்கவும்.

BANK Account-ற்கான செல்போன் / ATM Card தொலைந்து போனாலோ / திருட்டு போனாலோ உடனடியாக வங்கிக்கு நேரில் தெரியபடுத்தி விரைந்து BLOCK செய்யவும்.


7) வளைதளத்தில் தேடப்படும் வங்கி கஸ்டமர் கேர் எண்கள் போலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. CUSTOMER CARE CALLS செய்பவர், உங்களுக்கு

உதவுவது போல் LINK அனுப்பியோ / SCREEN SHARE செய்ய விலியுறுத்தியோ OTP விபரங்கள் பெற்றும் உங்கள் A/C ஐ HACK செய்யபடலாம் . எச்சரிக்கையாக செயல்படவும்.


8) உங்களது தனிப்பட்ட புகைபடங்களை ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம். அதை MORPHING செய்து பணம் பறிக்கவும் / வேறு வகையில் உங்களை மிரட்டவும் நேரிடலாம்.


9)

Face bookல் உங்களுக்கு தெரிந்தவர் பெயரில் போலி கணக்கு துவங்கி உங்களிடம் பண உதவி கேட்க வாய்ப்புண்டு, எனவே பணம் அனுப்பும் முன் அவரிடம் நேரிலோ, தொலைபேசியிலோ உறுதி செய்யவும்.


10) SOCIAL MEDIA-களில் உங்கள் தனிப்பட்ட விபரங்களை யார் யாரெல்லாம் பார்க்கவேண்டும்/ பார்க்க கூடாது என்பதை PRIVACY SETTINGS ல் தெளிவாக குறிப்பிடவும்.


11) SOCIAL MEDIA-வில் உங்களது அன்றாட இருப்பிடம் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய LIVE UPDATE பதிவுகள் குற்றவாளிகளால் கவனிக்கப்படுகிறது என்பதை உணருங்கள்.


12) SOCIAL MEDIAவில் வரும் LINK- ஐ, CLICK செய்தால், Bank a/c HACK ஆக வாய்ப்புள்ளது.


13) பொது இடங்களில் வைக்கப்பட்ட USB சார்ஜர்களில் சார்ஜ் போடுவதை தவிர்க்கவும், உங்களது தகவல்கள் (JUICE JACKING) முறையில் திருட்டு போக வாய்ப்புள்ளது.


14) பொது இடங்களில் உள்ள WI- FI பயன்படுத்தும்போது உங்கள் மொபைல் HACK செய்யப்படலாம்.


15) குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக SOCIAL MEDIA தகவலின் அடிப்படையில் பொருள் வாங்கும் போது மிக கவனமாக செயல்படவும். (Fake website ஆக இருக்கலாம்)


16) செல்போன் Tower அமைக்க இடம் தேவை, மாதம் ரூ 30,000/- வாடகை, 30 லட்சம் முன்பணம் வழங்கப்படும் என வரும் செய்திகளை நம்பி பணம் செலுத்தி ஏமாறவேண்டாம்.


17) APP-களின் விபரங்களை முழுவதும் அறியாமல் Download செய்யவேண்டாம். உங்களது தகவல் / வங்கி கணக்கு திருட்டு போக வாய்ப்புள்ளது.


18) ஆர்வத்தை தூண்டும் தலைப்புகளில் வரும் செய்தி LINK- களுக்கு பின்னால் தகவல் / பணம் பறிக்கும் கும்பல் மறைந்திருக்கிறார்கள் என்பதை உணர்வீர்,


19) முதலீடு செய்யும் பணத்திற்கு தினசரி 1% கமிஷன் வழங்கப்படும் என வரும் விளம்பரத்தை நம்பி பணத்தை முதலீடு செய்யாதீர்கள். மாதத்திற்கு 30 % கமிஷன் யாராலும் தரமுடியாது என்பதை சற்று நிதானமாக யோசித்து பாருங்கள்.


20) PART TIME JOB/ WORK FROM HOME/ DAILY EARN Rs 200/- to 3,000/- என வரும் தொகைக்கு ஆரம்பத்தில் கமிஷம் முதலீடு செய்யாதீர்கள். பெரும் தொகை அவர்கள் கைக்கு சென்றால் திரும்ப கிடைக்காது.

விளம்பரங்களை பார்த்து செலுத்தும் சிறு

வழங்கப்படுவதை நம்பி பெரும் தொகையை


21) உங்கள் தொலைபேசி

எண்ணுக்கு விலைமதிப்புமிக்க பரிசு விழுந்துள்ளது என வரும் தகவலை நம்பி அதை பெற அவர்களால்

சொல்லப்படும் எந்த கட்டணத்தையும்

செலுத்தாதீர்கள்.


22)

DEPOSIT இருந்தால் லோன் வழங்கப்படும் என

வரும் விளம்பரத்தை நம்பாதீர்கள். லோனுக்காக

செலுத்தும் சேவை கட்டணங்கள் லோனுடன் திருப்பி செலுத்தப்படும் என நம்ப வைத்து பணம் பறிக்கப்படுகிறது. ஏமாறவேண்டாம்.


23) அறிமுகம் இல்லாதவர்களிடம் WhatsApp CALL-ல் பேச வேண்டாம். உங்கள் செல்போனில் உள்ள FRONT CAMERAவினால் எதிர் தரப்பில் உள்ளவர்களால், உங்களின் நடவடிக்கைகள் பதிவு 

செய்யப்பட்டு, அந்த பதிவுகளை

உறவினர்களுக்கோ/ SOCIAL MEDIAவிலோ

போட்டுவிடுவோம் என உங்களை மிரட்டி பணம்  பறிக்க வாய்ப்புள்ளது.


24) ONLINE-ல் வேலை தரப்படும் என ஆசையை துண்டும் விளம்பரங்கள் மூலம் உங்களை நம்ப வைத்து, உங்களிடம் சேவை கட்டணம் என்ற பெயரில் பணம் பறிக்க வாய்ப்புள்ளது. பணம் செலுத்தும் முன், அந்த நிறுவனத்தை பற்றியும், அவர்களால் வேலை பெற்றவர்கள் விபரங்களை கேட்டு பெற்று வேலை பெற்றவர்கள் இல்லத்துக்கே சென்று உறுதி செய்யுங்கள்.


25) PASSWORD விபரங்களை எவ்வளவு நம்பிக்கைக்கு

உரியவராக இருந்தாலும் ஒருபோதும்

கொடுக்கவேண்டாம். அடிக்கடி Password ஐ

Change பண்ணவும்.

பல வங்கி கணக்கு வைத்துள்ளவர் எனில் அனைத்துக்கும் ஒரே Password கொடுக்காதீர். தங்களது ஒரு வங்கி கணக்கு பாதிக்கப்படடால் மற்ற எல்லா கணக்கும் பாதிக்கப்படும்.


26) SOCIAL MEDIA வில் தனிப்பட்ட தகவல்கள் (முகவரி, தொலைபேசி எண். படித்த பள்ளி பெயர், நிரந்திர மற்றும் தற்காலிக இருப்பிடம்) போன்றவற்றை வெளிப்படையாக தெரியாமல் PROFILE LOCK செய்யவும்.


27) பெற்றோர் மேற்பார்வை இல்லாமல், அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஆன்லைனில் பழகிய யாருடனும் நேரில் சந்திக்க ஒப்புக்கொள்ள கூடாது.


28) அச்சுறுத்தலான E-mail, Message, Post போன்ற தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.


29) பயமுறுத்தும் அல்லது புண்படுத்தும் வகையிலான

ONLINE / SOCIAL MEDIA உரையாடல்களை பெற்றோர் அல்லது நம்பகமான பெரியவர்களிடம் உடனே தெரிவிக்க வேண்டும். உதவிக்கு அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.


30) SHARE MARKET

ல் நஷ்டம் இல்லாமல் செய்துதரப்படும் என தொலைபேசியில் / SMS ல்/

LINK

மூலம் அனுகினால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் பணம் குறிவைக்கப்படுகிறது. ஜாக்கிரதை.


31) Scratch card offer To receive Rs 4900/- enter pin என அனுப்பி உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிக்கபடும்.


32) கடைகளில்

ஒட்டப்பட்டுள்ள QR - CODEகளை

கடை

உரிமையாளர்களுக்கு தெரியாமல் குற்றவாளிகளால் மாற்றி வைக்கப்படுவதால், கடை உரிமையாளர்களும், பணம் செலுத்துபவர்களும் பாதிப்பு ஏற்படவாய்ப்புள்ளது. எனவே QR - CODEகளை பாதுகாப்பாக வைக்கவேண்டும்.


33)

பொது இடங்களில் தனி DEBIT / CREDIT CARD பயன்படுத்தவும். அவைகளில் தேவைக்கு ஏற்ப பணம் இருப்பு வைத்தால் பெரும் சேதம் ஏற்பாடமல் பாதுகாக்கலாம்.

பரிவர்த்தனை நடைபெற்றதை


34) தவறான அறிந்தவுடன் உடனடியாக NATIONAL HELPLINE TOLL FREE NO /155260 எண்ணுக்கு தொடர்பு

கொண்டு தகவல் தெரிவித்தால் சைபர்

குற்றவாளிகள் கைகளுக்கு செல்லாமல், பணம் பரிவர்த்தனையை தடுத்து நிறுத்த இயலும்.


35) பெரும் சேமிப்பு உள்ள வங்கி கணக்கிற்கு CELL NO/ DEBIT/ CREDIT CARD/ NET இணைக்காமல் இருப்பது சிறந்தது. BANKING


36) தினசரி பண பரிமாற்றத்துக்கு தனி வங்கி கணக்கு

குறைந்த இருப்பில்

வைத்து

பத்திரமாக

கையாளவேண்டும். தவறு நடைபெற்றாலும்,

)

பெரும் நஷ்டம் ஏற்டாமல் தவிர்க்க உதவும்.


NATIONAL HELP LINE NO 155260 www.cybercrime.gov.in

நன்றி

தொகுப்பு அ.சா.அலாவுதீன்

நமது தேடல் செய்தியாளர்


வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடியில் நான்கு செல்போன் உடன் கீதா கைது!!! இணையதளத்தில் ஜொள்ளு விட்ட 20 ஆண்களிடம் பணம் அபேஸ் !!! திருமணமாகாத கவர்ச்சியான இளம்பெண் போல் பேசி பணம் பறிப்பு !!!!!

தூத்துக்குடி லீக்ஸ்:-  27.08.2021

 தூத்துக்குடியில்  நான்கு செல்போன் உடன்  கீதா கைது செய்யப்பட்டார்.



மணப்பெண் இணையதளத்தில்  ஜொள்ளு  விட்ட 20 ஆண்களிடம் பணம் அபேஸ்?  திருமணமாகாத கவர்ச்சியான  இளம்பெண் போல் பேசி பணம் பறித்துள்ளார்.




இதுபற்றிய செய்தியானது:-  

ஹைதராபாத், செகுந்தராபாத் சாயினிக்பூரி கண்டிகொண்டா பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வாசுதேவன் (34) என்பவர் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். 


இவர் தனக்கு திருமணம் செய்வதற்காக வரன் தேடும் ஒரு திருமண இணையதளத்தில் அழகான  மணப்பெண் தேடியுள்ளார். 


அந்த இணைய தளத்தில் திவ்யா (வயது 28) என்று ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் இருந்த ஐ.டியைப் பார்த்து மேற்படி வாசுதேவன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். 



 எதிர்முனையில் திவ்யா என்ற பெயரிலிருந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார்.


 இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பேசிக் கொண்டுள்ளனர்.

 இந்நிலையில் அந்த திவ்யா என்ற பெண், தன்னுடைய தோழிக்கு அவசரமாக ரூபாய் 40,000/- தேவைப்படுகிறது.



 தனக்கு உடனே அனுப்புமாறு ஒரு வங்கி கணக்கை அனுப்பி வைத்துள்ளார். 


இவரும் அந்த வங்கி கணக்கிற்கு கடந்த 08.07.2021 ரூபாய் 40,000/-ஐ அனுப்பியுள்ளார். 


அதனை தொடர்ந்து மேலும் பணம் தேவைப்படுவதாக ரூபாய் 40,000/-ம் அனுப்புமாறு கூறியதால், திரும்பவும் வாசுதேவன் 04.08.2021 அன்று ரூபாய் 40,000/-ஐ அதே வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். 



இந்நிலையில் மேற்படி வாசுதேவன் அந்தப் பெண்ணிடம், உன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறி விலாசம் கேட்டு, அந்த விலாசத்திற்கு சென்று விசாரித்தபோது அப்படி திவ்யா என்ற பெயரில் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 


இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டதையறிந்த வாசுதேவன் புகார் அளித்தார்.


 அவரது புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  மேற்படி மோசடி குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  இளங்கோவன் அவருக்கு உத்தரவிட்டார்.


 சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன்  தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


 வாசுதேவன் பணம் அனுப்பிய வங்கி கணக்கு முகவரியை விசாரித்தபோது தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியைச் சேர்ந்த தங்கவேலு மனைவி கீதா (36) என்ற பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு...



 அவரை கைது செய்து விசாரித்ததில், இவர்தான் திவ்யா என்ற பெயரில் திருமண இணையதளத்தில் தனது உண்மையான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யாமல் வேறொரு கவர்ச்சியான அழகான பெண்ணின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளதும்,  மேற்படி வாசுதேவனை ஏமாற்றி பணம் மோசடி செய்ததையும்  கீதா ஒப்புக்கொண்டார். 


இதே போன்று 20க்கு மேற்பட்ட நபர்களை ஏமாற்றியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடமிருந்து ஏமாற்றுவதற்கு பயன்படுத்திய 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


இது குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



ஏமாந்த இளம்பெண்கள் புகார் !!!! தூத்துக்குடியில் பக்காவாக பிளான் பண்ணி டூபாக்கூர் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்திய மூவர் கைது !!! தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் அதிரடி !!!!

 தூத்துக்குடி லீக்ஸ்:- 27.08.2021


தூத்துக்குடியில்  ‘கிங் ஸ்டார் பிரைவேட்” என்ற டூபாக்கூர்  நிறுவனம்  பேஸ்புக் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில்  அரசு அங்கீகாரம் பெற்ற வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரப்படுத்தி  வந்துள்ளார்கள்.


சில மாதங்களாக வெளிவந்த பேஸ்புக் வாட்ஸ் அப்  சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.

 அரசு அங்கீகாரம் பெற்ற வேலைக்கு ஆட்கள்தேவை வேலை வாய்ப்பு 

 கவர்ச்சிகரமான இந்த போலியான விளம்பரங்களை பார்த்து இதை நம்பி சென்று பணம் கொடுத்துள்ளார்கள். பின்பு  இளம்பெண்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பலர் தாங்கள்  ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார்கள்.

மூவர் கைது





இந்நிலையில்...போலீஸ் இடம் டூபாக்கூர் நிறுவனம்  எப்படி? சிக்கியது என்பது பற்றிய செய்தியாவது :-


தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னுடன் கல்லூரியில் படித்த அத்திமரப்பட்டியைச் சேர்ந்த தன்னுடைய தோழியின் முகநூலில் (Facebook) ‘கிங் ஸ்டார் பிரைவேட்” (King Star Private) என்ற நிறுவனம் மூலமாக அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை என்ற விளம்பரம் பதிவிடப்பட்டிருந்தது. 


இந்த விளம்பரத்தைப் பார்த்த இளம் பெண் கடந்த 14.07.2021 தூத்துக்குடி புதுக்கிராமம் பகுதியில் உள்ள மேற்படி  ‘கிங் ஸ்டார் பிரைவேட்” என்ற நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு சென்றுள்ளார். 


அந்த நேர்முகத் தேர்வில் அந்தப் பெண்ணிடம் முதலில் ரூபாய் 8000/-ம் கட்டினால் அரசு அங்கீகாரம் பெற்ற வேலைக்கான உத்தரவு கிடைக்கும் என்றும், வாரம் தோறும் ரூபாய் 2500/-ம், போனஸ் தொகையும் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்கள். 


அதனை நம்பி அந்தப் பெண் மறுநாள் மேற்படி நிறுவனத்தில் ரூபாய் 8000/- செலுத்தியுள்ளார்.


 அதனை தொடர்ந்து மேற்படி நிறுவனத்தார் அந்தப்பெண்ணிடம் 20 ரூபாய் பத்திரத்தில் ‘ஜாயினிங் லீகல் அக்ரீமெண்ட்” (Joining Legal Agreement) என்ற பெயரில் கையெழுத்துக்கள் வாங்கிவிட்டு, அவரது தனிப்பட்ட விபரங்கள் மற்றும் புகைப்படங்களை பெற்றுக் கொண்டு அந்தப் பெண்ணின் செல்போனுக்கு ஒரு ‘எம்ப்ளாயீ ஐடி” (Employee I/D) அனுப்பி, நீங்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளீர்கள் என்று கூறியுள்ளனர்.


பணியில் சேர்த்த அந்தப் பெண்ணை, அவரைப் போல வேலை தேடி வரும் நபர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்று மேற்படி நிறுவனத்தார் கூறியுள்ளனர். 



அதன்படி வேலைக்கு வரும் நபர்களுக்கு அந்தப் பெண் பயிற்சியளித்துள்ளார். 


மேற்படி நிறுவனத்தில் 2 வாரமாக வேலை பார்த்துவிட்டு அந்தப் பெண் சம்பளம் கேட்டபோது,  நீ எவ்வளவு பேரை நிறுவனத்தில் சேர்த்துவிடுகிறாயோ அதற்கு ஏற்றார் போல் கமிஷன் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். 



மேலும் 10 பேருக்கும் மேல் சேர்த்து விட்டால் உதவி மேலாளராகி விடலாம் என்றும், அவருக்கு கீழ் ஒரு உதவி மேலாளர் இருந்தால் மேலாளராகிவிடலாம் என்றும், 3 மாதம் கழித்து மாதம் தோறும் ரூபாய் 25000/-ம் சம்பளம் கிடைக்கும் என்று அந்தப் பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.


இதனை நம்பி அந்தப் பெண்ணும் ஒரு முகநூல் பக்கத்தில் மேற்படி நிறுவனம் சார்பாக அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். 


மேற்படி விளம்பரத்தைப் பார்த்து 9 பேர் அந்தப் பெண்ணைப் போலவே ரூபாய் 8000/-ம் செலுத்தி வேலைக்கு சேர்ந்துள்ளனர். மேற்படி 9 பேருக்கும் அந்தப் பெண்ணைப் போலவே 2 வாரமாக சம்பளம் கொடுக்கவில்லை. இதுபோன்று 30 பேர் சேர்ந்துள்ளனர்.


இதுகுறித்து அந்தப் பெண்ணும் மற்றவர்களும் ஒன்று சேர்ந்து நேற்று (26.08.2021) புதுக்கிராமத்தில் உள்ள மேற்படி நிறுவனத்திற்குச் சென்று அங்கு இருந்த நிறுவனத்தைச் சேர்ந்த மாரிமுத்து, மணிகண்டன், கிறிஸ்டியன் சுதாகர், சகுந்தலா, ஜெபசீலா எஸ்தர், பிரகாஷ் ஆகியோரிடம் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டபோது, உங்களைப் போலவே இன்னும் நிறைய நபர்களை சேர்த்துவிட்டால்தான் சம்பளம் தரமுடியும் என்றும், இல்லையென்றால் எங்களிடம் உள்ள உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையும், உங்களது புகைப்படத்தையும் தவறாக முகநூலில் பதிவிட்டு அசிங்கப்படுத்தி விடுவோம் என்று அவதூறாக பேசி மிரட்டியுள்ளனர்.


இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெயராம்  உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் வனிதாராணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி போலி நிறுவனத்தைச் சேர்ந்த விருதுநகர் மாவட்டம், வி.கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த மார்நாடு மகன் 1) மாரிமுத்து (23), மதுரை மாவட்டம், சுப்பிரமணியபுரம் சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் 2) மணிகண்டன் (24) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த சாமுவேல் மகன் கிறிஸ்டியன் சுதாகர் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

 S.P.எச்சரிக்கை 



இதுபோன்று நிறுவனங்கள் என்ற பெயரில் முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் ‘வேலைக்கு ஆட்கள் தேவை” என்று வரும் போலியான விளம்பரங்களை நம்பி, பொதுமக்கள் தங்களுடைய தனிப்பட்ட விபரங்கள், புகைப்படங்களை கொடுத்தும், பணத்தை கொடுத்தும் ஏமாற வேண்டாம், இதுபோன்று வரும் விளம்பரங்களை நீங்களும் போலி என்று தெரியாமல் முகநூலில் பதிவிட்டு மற்றவர்களையும் ஏமாற்றமடையச் செய்ய வேண்டாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  கேட்டுக்கொண்டுள்ளார்.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடி மாவட்டத்தில்சாதி தலைவரை இழிவு படுத்திய எட்டையாபுரம் சிறுவன் கைது பரபரப்பு !!! தலைவர்களை இழிவுபடுத்தி சாதி, மதக் கலவரங்கள் தூண்டும் செய்தி, புகைப்படங்கள் வீடியோ க்களை Facebook Whatsapp -ல் பதிவிட்டு பரப்பினால்... குண்டர் சட்டம் சிறை? தூத்துக்குடி மாவட்ட S.P. ஜெ யக்குமார் எச்சரிக்கை!!!!

தூத்துக்குடி மாவட்டம்  15.08.2021



தூத்துக்குடி அருகே உள்ள எட்டயாபுரம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தலைவரை இழிவுபடுத்தியும், வன்முறையை தூண்டும் வகையில் வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்டு பரப்பியவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.


இதுபற்றி ய செய்தியாவது:-

எட்டயாபுரம் பகுதியில்  இன்று ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தலைவரை பற்றி இழிவுபடுத்தியும், இருவேறு சமுதாயங்களுக்கிடையே வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ ஒன்று  வாட்ஸ் ஆப் மூலம் குழுக்களில் பரவியது.. பகிர்வு களை  பார்த்த  வாட்ஸ்அப் ல் உள்ளோர் அதிர்ச்சியானார்கள்.‌



இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் இடம் உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்டவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர்  மேற்பார்வையில் எட்டயாபுரம் காவல் நிலைய ஆய்வாளர்  ஜின்னா பீர்முகமது  தலைமையில் உதவி ஆய்வாளர் முருகன் ஆகியோர் அடங்கிய போலீசார் விசாரணை பரபரப்பானார்கள்.


 பின்பு வாட்ஸ் அப்-ல பதிவிட்ட வரை கண்டுபிடித்தனர். சிறுவன் என்பது அதிர்ச்சி யை தந்தது.

 


 எட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்த இளஞ்சிறுவன் ?...ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தலைவரை இழிவுபடுத்தியும், சமுதாய வன்முறையை தூண்டும் வகையில் வீடியோவை வாட்ஸ் ஆப்பில் பரப்பியது தெரியவந்தது, 



உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



புதன், 11 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடியில் Whatsapp குருப்-ல இணைத்து ? ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என கூறி ரூபாய் 2 லட்சம் மோசடி !!! தூத்துக்குடி சைபர்கிரைம் அதிரடி ரூபாய் 2 லட்சம் மீட்பு!!!!

தூத்துக்குடி மாவட்டம்: 11.08.2021




தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கணேசன் நகரைச் சேர்ந்த இம்மானுவேல் மகன் அந்தோணி பிரவீன் தாஸ்  (33) என்பவரின் வாட்ஸ் ஆப் எண்ணை கடந்த 30.03.2021 அன்று Profile Maker என்ற வாட்ஸ்அப் குழுவில் சேர்த்துள்ளனர். 




இவர் அந்த வாட்ஸ்அப் குழுவின் நிர்வாகிகளான ரூபா மற்றும் ரஞ்சனியிடம் என்னை எதற்காக குழுவில் சேர்த்தீர்கள் என்று செல்போனில் கேட்கும்போது ரஞ்சனி என்பவர் Optimus Market   என்ற  தனியார் நிறுவனம் வைத்திருப்பதாகவும், எங்களது நிறுவனத்தில் Pool Trading Investment என்ற ஒரு நல்ல திட்டம் உள்ளது .


  அந்த திட்டத்தில் நீங்கள் முன்பணமாக 50,000/- ரூபாய் முதலீடு செய்தால் வாரம் தோறும் உங்களுக்கு ரூபாய். 10,000/- பணம் தருவதாகவும், உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் முதலீடு செய்த முன்பணம் ரூபாய். 50,000/- த்தை திருப்பி பெற்றுகொள்ளலாம் என்றும் ஆசைவார்த்தை கூறி நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளனர். 




மேற்படி அந்தோணி பிரவீன் தாஸ்  இதை நான் எப்படி நம்புவது என்று  கேட்டபோது,  ஏற்கனவே இதுபோல் முன்பணம் செலுத்தி வாரம்தோறும் தொகையை பெற்று கொண்டிருக்கும் கோகுல்கோவிந்தன் என்பவரின் தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளார்.



அந்த எண்ணை தொடர்பு கொண்டு கோகுல்கோவிந்தன் என்பவரிடம் பேசி விவரம் கேட்டபோது, அவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து தற்போது வரை பணம் பெற்று கொண்டிருப்பதாகவும், அதனால் நீங்கள் நம்பி பணத்தை முதலீடு செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.



 இதனை நம்பி அந்தோணி பிரவீன் தாஸ் கடந்த 29.04.2021 அன்று தனது வங்கி கணக்கிலிருந்து மேற்படி நிர்வாகி ரஞ்சனி அளித்த வங்கி கணக்கிற்கு ரூபாய். 2 லட்சத்தை மொபைல் வங்கி சேவை மூலம் அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பிய பணத்திற்கு இதுவரை பணம் முதலீடு செய்ததற்கான முதலீட்டுப் பத்திரமும் வரவில்லை, வாரம்தோறும் எந்தப் பணமும் வரவில்லை. இதனையடுத்து அவர் தன்னை, மோசடி செய்துவிட்டனர் என அறிந்து, முதலீடு செய்த ரூபாய் 2 லட்சத்தை திரும்ப தருமாறு நிர்வாகி ரஞ்சனியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு எவ்வித பதிலும் இல்லை,  பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

 இதுகுறித்து அந்தோணி பிரவீன் தாஸ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்துள்ளார்.


மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  இளங்கோவன் இடம்  உரிய விசாரணை மேற்கொண்டு பணத்தை மீட்டு கொடுக்குமாறு உத்தரவிட்டார்.

 சைபர் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அந்த பணம் பெங்களூரில் உள்ள கிரண்குமார் என்பவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது என கண்டுபிடித்தார்கள்..


 இதனையடுத்து சைபர் குற்ற பிரிவு போலீசார் பணம் வரவு வைக்கப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த கிரண் குமாரிடம் விசாரணை செய்ததில், அவர் தனது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டு ரூபாய் 2 லட்சம் பணத்தை அந்தோணி பிரவீன் தாஸ் வங்கி கணக்கிற்கு நேற்று திருப்பி அனுப்பிவிட்டார். 


மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் மோசடி செய்யப்பட்ட ரூபாய் 2 லட்சம் பணத்தை மீட்டு  உரியவரிடம் ஒப்படைத்த சைபர் குற்ற பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பாராட்டினார்.

  

இதுபோன்று ஆன் லைன் முதலீடு செய்யலாம் அதிக லாபம் கிடைக்கும் என்றோ, கடன் தருவதாக கூறியோ, பரிசுப்பொருள் அனுப்புவதாக கூறியோ, பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை குறைந்த விலையில் தருவதாக கூறியோ, வேலை வாய்ப்பு தருவதாக கூறியோ சமூக வலைதளங்களில் வரும் ஆதாரமற்ற தகவல்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம்.




 இதுபோன்று சைபர் குற்றங்கள் மூலம் உங்களது வங்கி கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டால் உடடியாக கட்டணமில்லா தொலைபேசி எண். 155260 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.