புதன், 11 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடியில் Whatsapp குருப்-ல இணைத்து ? ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என கூறி ரூபாய் 2 லட்சம் மோசடி !!! தூத்துக்குடி சைபர்கிரைம் அதிரடி ரூபாய் 2 லட்சம் மீட்பு!!!!

தூத்துக்குடி மாவட்டம்: 11.08.2021




தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கணேசன் நகரைச் சேர்ந்த இம்மானுவேல் மகன் அந்தோணி பிரவீன் தாஸ்  (33) என்பவரின் வாட்ஸ் ஆப் எண்ணை கடந்த 30.03.2021 அன்று Profile Maker என்ற வாட்ஸ்அப் குழுவில் சேர்த்துள்ளனர். 




இவர் அந்த வாட்ஸ்அப் குழுவின் நிர்வாகிகளான ரூபா மற்றும் ரஞ்சனியிடம் என்னை எதற்காக குழுவில் சேர்த்தீர்கள் என்று செல்போனில் கேட்கும்போது ரஞ்சனி என்பவர் Optimus Market   என்ற  தனியார் நிறுவனம் வைத்திருப்பதாகவும், எங்களது நிறுவனத்தில் Pool Trading Investment என்ற ஒரு நல்ல திட்டம் உள்ளது .


  அந்த திட்டத்தில் நீங்கள் முன்பணமாக 50,000/- ரூபாய் முதலீடு செய்தால் வாரம் தோறும் உங்களுக்கு ரூபாய். 10,000/- பணம் தருவதாகவும், உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் முதலீடு செய்த முன்பணம் ரூபாய். 50,000/- த்தை திருப்பி பெற்றுகொள்ளலாம் என்றும் ஆசைவார்த்தை கூறி நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளனர். 




மேற்படி அந்தோணி பிரவீன் தாஸ்  இதை நான் எப்படி நம்புவது என்று  கேட்டபோது,  ஏற்கனவே இதுபோல் முன்பணம் செலுத்தி வாரம்தோறும் தொகையை பெற்று கொண்டிருக்கும் கோகுல்கோவிந்தன் என்பவரின் தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளார்.



அந்த எண்ணை தொடர்பு கொண்டு கோகுல்கோவிந்தன் என்பவரிடம் பேசி விவரம் கேட்டபோது, அவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து தற்போது வரை பணம் பெற்று கொண்டிருப்பதாகவும், அதனால் நீங்கள் நம்பி பணத்தை முதலீடு செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.



 இதனை நம்பி அந்தோணி பிரவீன் தாஸ் கடந்த 29.04.2021 அன்று தனது வங்கி கணக்கிலிருந்து மேற்படி நிர்வாகி ரஞ்சனி அளித்த வங்கி கணக்கிற்கு ரூபாய். 2 லட்சத்தை மொபைல் வங்கி சேவை மூலம் அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பிய பணத்திற்கு இதுவரை பணம் முதலீடு செய்ததற்கான முதலீட்டுப் பத்திரமும் வரவில்லை, வாரம்தோறும் எந்தப் பணமும் வரவில்லை. இதனையடுத்து அவர் தன்னை, மோசடி செய்துவிட்டனர் என அறிந்து, முதலீடு செய்த ரூபாய் 2 லட்சத்தை திரும்ப தருமாறு நிர்வாகி ரஞ்சனியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு எவ்வித பதிலும் இல்லை,  பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

 இதுகுறித்து அந்தோணி பிரவீன் தாஸ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்துள்ளார்.


மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  இளங்கோவன் இடம்  உரிய விசாரணை மேற்கொண்டு பணத்தை மீட்டு கொடுக்குமாறு உத்தரவிட்டார்.

 சைபர் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அந்த பணம் பெங்களூரில் உள்ள கிரண்குமார் என்பவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது என கண்டுபிடித்தார்கள்..


 இதனையடுத்து சைபர் குற்ற பிரிவு போலீசார் பணம் வரவு வைக்கப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த கிரண் குமாரிடம் விசாரணை செய்ததில், அவர் தனது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டு ரூபாய் 2 லட்சம் பணத்தை அந்தோணி பிரவீன் தாஸ் வங்கி கணக்கிற்கு நேற்று திருப்பி அனுப்பிவிட்டார். 


மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் மோசடி செய்யப்பட்ட ரூபாய் 2 லட்சம் பணத்தை மீட்டு  உரியவரிடம் ஒப்படைத்த சைபர் குற்ற பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பாராட்டினார்.

  

இதுபோன்று ஆன் லைன் முதலீடு செய்யலாம் அதிக லாபம் கிடைக்கும் என்றோ, கடன் தருவதாக கூறியோ, பரிசுப்பொருள் அனுப்புவதாக கூறியோ, பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை குறைந்த விலையில் தருவதாக கூறியோ, வேலை வாய்ப்பு தருவதாக கூறியோ சமூக வலைதளங்களில் வரும் ஆதாரமற்ற தகவல்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம்.




 இதுபோன்று சைபர் குற்றங்கள் மூலம் உங்களது வங்கி கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டால் உடடியாக கட்டணமில்லா தொலைபேசி எண். 155260 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக