அறிவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 அக்டோபர், 2024

விரைவில் ரேசன் கார்டு முடக்கம் மக்கள் உஷாராக இருங்கள்

தூத்துக்குடி லீக்ஸ்

 29-10-2024

மூன்று மாதம்  பொருள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கம்?




ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை குறைந்த விலையில் அரசு வழங்கி வருகிறது.



முடக்கம்!!!!

தமிழக அரசின் விதிப்படி 3 மாதம் வரை பொருள் வாங்கவில்லை எனில், ரேஷன் அட்டைகள் பயனில் இல்லை என கருதி முடக்கப்படும்.


கண்டு பிடிப்பு??

விரைவில்...

அதன்படி, தற்போது நாடு முழுவதும் பல லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள், 

மூன்று மாதம் வரை எந்த பொருளும் வாங்காதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அவை விரைவில் முடக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.


வியாழன், 8 ஆகஸ்ட், 2024

ஏர் பஸ் விமானம் தூத்துக்குடியில் பயணிகள் மகிழ்ச்சி

 தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏர் பஸ் விமானம் வந்து செல்லும் என்ற அறிவிப்பு பயணிகளை ரொம்ப மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது .



இதுபற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து ஏர் பஸ் விமானம் வந்து செல்லும் வசதி வருவதால் விமான பயணிகள் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

 

இப் போது...

 தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் ஐந்து முறை விமானமும், பெங்களூருக்கு இருமுறை விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.


வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்கள் வசதிக்காக தூத்துக்குடி விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. 



தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.227.33 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் அமைத்தல் உள்ளிட்ட விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. 


இந்த புதிய பயணிகள் முனையம் 17 ஆயிரத்து 341 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. 


மேலும், விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதைச்சார்ந்த அலுவலகக் கட்டிடங்கள், தீயணைப்புத்துறை கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது.



 தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமானநிலைய புதியமுனையத்துக்கு செல்லும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இணைப்புச்சாலை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.


புதிய முனையத்தில் புறப்பாடு பகுதியில் 4 வாயில்களும், 21 பயணியர் செக் இன் கவுண்டர்களும், 3 ஏரோப்ரிட்ஜ்களும், 2 வருகைக்கான கன்வேயர் பெல்ட்களும், ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், 2 வி.ஐ.பி. அறைகள், லிப்ட் வசதிகள், பயணிகள் அதிகமாக வருகை தரும் நேரங்களில் 1 மணி நேரத்துக்கு1440 பயணிகளை கையாளக்கூடிய வகையிலான வசதிகள், பயணிகள் வருகை, புறப்பாடு, பயணிகள் காத்திருப்புஅறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீனவசதிகளுடன் உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த புதிய முனையம் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக அமைக்கப்பட்டு வருகிறது. 


முனைய கட்டிடங்கள் முழுவதும் சோலார் பொறுத்தப்பட்டு உள்ளது. 

2024 அக்டோபர் மாதத்திலிருந்து....

தற்போது வரை 76 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகிற 2024 அக்டோபர் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வர உள்ளது. 


இதே போன்று ரூ.113.63 கோடி மதிப்பீட்டில் 3115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. 


தற்போது வரை 93 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் இந்தமாதம் இறுதிக்குள் முடிவடைய உள்ளது.




தமிழகத்தில் நான்கு வழிப்பாதைகளையும் கொண்ட ஓரே மாவட்டம் தூத்துக்குடி தான். வான்வழி, தரைவழி, ரயில் வழி, கப்பல் வழியென நான்கு தடங்களையும் உள்ளடக்கிய தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் ஐந்தாவது தடமாக விண்வெளி தடமும் அமைய உள்ளது.


தூத்துக்குடியில் ஹைட்ரஜன் தொழிற்சாலை!!!!


ஏற்கனவே... துறைமுகம் தொழிற்சாலை கள் இயங்கும் 

துாத்துக்குடியில்   பர்னிச்சர் பார்க், வின் பாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் என அடுத்தடுத்து புதிய திட்டங்கள்,

சிங்கப்பூரை சேர்ந்த, 'செம்ப்

கார்ப்' நிறுவனம்,

துாத்துக்குடி மாவட்

டத்தில், சூரியசக்தி,

காற்றாலை மின்சா

ரத்தை பயன்படுத்தி,

36,238 கோடி ரூபாய்

முதலீட்டில் பசுமை

ஹைட்ரஜன் உற்பத்தி

செய்யும் தொழிற்சா

லையை அமைக்க

உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் இம்மாதம் ஆகஸ்ட் 21 ம் நடைபெறுகிறது.

 துாத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது


புதன், 19 ஏப்ரல், 2023

சைபர் கிரைம் உங்க வாட்ஸ்அப் பற்றிய எச்சரிக்கை

 thoothukudileaks 19-4-2023

Arunan 

வாட்ஸ்அப்ல "இந்த மாதிரி லிங் மெசேஜ் வந்தால்  open லிங் தொட்டு திறந்து படிக்க வேண்டாம் என்று 

சைபர் கிரைம் உங்க வாட்ஸ்அப் பற்றிய எச்சரிக்கை விடுத்துள்ளது .

இதுபற்றிய செய்தியாவது:-

வேலைவாய்ப்புகளை வழங்குவதாக சொல்லி, நிறைய மோசடிகள் நடந்து வரும்நிலையில், அது தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




தொழில்நுட்பம் பெருக பெருக, குற்றங்களும் பெருக ஆரம்பித்துவிட்டன.. வளர்ச்சி என்ற நோக்கில் விஞ்ஞானத்தை அணுகினாலும், அதனால் ஏற்படும் வன்முறைகளையும், தவறுகளையும் தடுக்க முடிவதில்லை.


சமீப காலமாகவே, பணம், நகைகளை பறிக்கும் மோசடி கும்பல்கள் ஆன்லைனில் வட்டமடித்து வருகிறது.. செல்போன்களை, யாராலுமே தவிர்க்க முடியாத பட்சத்தில் இதை தான் தங்களுக்கு சாதகமாக சிலர் பயன்படுத்தி நூதன கொள்ளைகளில் இறங்கி உள்ளனர்.


புதிய மோசடி: இப்படி ஒரு மோசடி வாட்ஸ்அப் மெசேஜ் மூலமாகவும் நடக்கிறது என்பதுதான் அதிர்ச்சியை கிளப்பி விட்டுள்ளது.. அதுவும் வேலைவாய்ப்பு மோசடி என்று புதிய மோசடி துவங்கி உள்ளதாம்.. நம் நாட்டில் வேலையில்லா பிரச்சனைகள் இதுவரை தீராமல் உள்ளது.. வேலையில்லாமல் எத்தனையோ இளைஞர்கள் தற்கொலையை தேடிக்கொள்ளும் சூழலில், வேலை வாய்ப்பு என்ற பெயரில் மோசடிகளை செய்து காசு பார்த்து வருகிறது ஒரு கூட்டம்..


லட்சக்கணக்கான இளைஞர்கள் வாய்ப்புகளுக்காக வெவ்வேறு வெப்சைட்களில் வேலை பார்க்கிறார்கள். அந்த வகையில் சாட்டிங் மூலம் பணி அமர்த்தலில் ஈடுபட்டுள்ள நிறுவனமான Hirect, அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்களை தந்துள்ளது. நாட்டில் வேலை தேடும் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 56 சதவீதம் பேர் வேலை தேடும்போது மோசடிகளால் பாதிக்கப்படுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.


மெசேஜ்கள்: இந்த மோசடிக்காகவே, புதிய நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறாராம்.. வேலைக்கு ஆட்கள் தேவை என்ற பெயரில், எஸ்எம்எஸ் அல்லது மெசேஜ்கள் வாட்ஸ்அப்-க்கு அனுப்பப்படும்.. பிறகு வேலை உறுதி என்பார்களாம்.. தினமும் இவ்வளவு சம்பளம் தருகிறோம் என்று சொல்லி பெரிய தொகையை சொல்வார்களாம். இவ்வளவும் மெசேஜ் மூலமாக வாட்ஸ்அப்களில் வந்து விழும்..


பெரும்பாலும் இந்த மேசேஜ்களில் ஒரு லிங்க் தந்துவிடுவார்கள்.. அந்த லிங்க்கை கிளிக் செய்தால், உங்கள் தனிப்பட்ட தரவுகளை திருடி கொள்ள முடியுமாம்.. சில சமயம், யாராவது ஒருவர் வாட்ஸ்அப்பில் தொடர்புகொண்டு, கூடுதல் விவரங்களை கேட்பார்கள். பதிவுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துமாறு சொல்வார்கள்.


wa.me என்று தொடங்கும் லிங்க் இருக்கும்.. இதற்குள் சென்றால், மறுமுனையில் உள்ளவர் கூடுதல் விவரங்களை கேட்பார்.. ஆனால், அவரிடம் அவர் எதிர்பார்க்கும் எந்த பதிலையும் நாம் தந்துவிடக்கூடாது.. அதனால், இதுபோன்ற மெசேஜ்களை உடனடியாக தவிர்த்துவிட வேண்டும். இதனிடையே, டெல்லி போலீஸாரின் சைபர் கிரைம் பிரிவு ஆன்லைன் மோசடியிலிருந்து நம்மை பாதுகாக்க சில வழிகாட்டுதல்களை தந்துள்ளது.. சில அறிவுரைகளையும் தந்துள்ளது.


ஈமெயில்: குறிப்பாக, "வேலை தேடுவோரை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அவர்கள் naukari.com. shine.com போன்ற வேலை தேடுவோருக்கான வெப்சைட்களிலிருந்து, செல்போன் நம்பர், ஈமெயில் அட்ரஸ், கல்வித்தகுதி, பணி அனுபவம் போன்ற விவரங்களை திருடுகிறார்கள். அவற்றை பயன்படுத்தி, புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உறுதி என்று கூறி, போலியான தகவல்களை அனுப்புவார்கள்..


எனவே, உண்மையாக வேலை வழங்குபவர்கள் யாரும், வேலைவாய்ப்பு பதிவு, ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் போன்றவற்றுக்காக பெரிய தொகையை கேட்கவே மாட்டார்கள். மோசடி செய்பவர்கள் ஒரே மாதிரியான மின்னஞ்சல் கணக்குகள், லோகோக்கள் போன்றவற்றை பயன்படுத்தி உண்மையான வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். அதனால், வேலைவாய்ப்பு உதவிக்காக பணம் செலுத்துவதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் விவரங்களை சரிபார்க்க வேண்டும்.


ஜாக்ரதை: வேலை வழங்குவதாக சொல்லும், நிறுவனம் பற்றி முதலில் ஆன்லைனில் தேடி அறிந்து கொள்ள வேண்டும். அந்த நிறுவனத்தின் மீதான புகார்கள், மதிப்புரைகள் போன்றவற்றை முன்கூட்டியே அதில் நாம் தெரிந்துகொள்ளலாம்.. மதிப்புரைகளில் புகார்கள் அதிகமாக இருந்தால், அவர்கள் ஒருவேளை ஏமாற்றும் கும்பலாக இருக்கலாம்.. மெயில், அல்லது வாட்ஸ்அப்களில் வரும் தகவல்களை அப்படியே நம்பி ஏமாறக்கூடாது.. ஒவ்வொரு தகவலையும் வேறு வழிகளில் சரிபார்ப்பது மோசடியில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க உதவும்" என்று எச்சரித்துள்ளனர்.