மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 செப்டம்பர், 2024

இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு மாநாடு

 ▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃

30-9- 2024 

சேலத்தில் இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு மாநாடு  நடைபெற்றது அப்போது மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 



இது பற்றிய செய்தியாவது:-

 சேலம் மாவட்டத்தில் தெய்வீக திருமண மண்டபத்தில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் நடத்திய திருமணிமுத்தாறு திருவிழாவில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக "இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு மாநாடு" நேற்று 29-9-2024 நடைபெற்றது‌.



இந்த மாநாடு காலை 6 மணியளவில் ஹோமம் பூஜைகளுடன் தொடங்கி ..

இறை வணக்கம் , வரவேற்பு நடனம் , இசை கச்சேரி , ஆன்மீக சொற்பொழிவு , பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு இரவு 8.30 மணி வரை மிக  சிறப்பாக நடைபெற்றது.


 மாநாட்டில் ஆன்மீக சேவை பணியாற்றிய  வர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.


மாநாட்டில்.....


கோவை பேரூர் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ சாந்தலிங்க மருதாசல அடிகளார் , அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர்  வாழும் கலியுக சித்தர்.தவத்திரு.சுவாமி இராமானந்தா , சீர்வலர்சீர்.தண்டபாணி தேசிகபண்டார சந்நிதி சொற்கபுர ஆதீனம் ,ஸ்ரீ வள்ளிமலை ஆதீனம் , தவத்திரு.சுவாமி ஆத்மானந்தா ஜி ,தவத்திரு.சுவாமி வேதாந்தானந்தா ஜி ஆகியோர் தலைமை வகித்தனர்.


ஸ்ரீ லலிதா மஹிலா ஸமாஜம் யோகிநீ சிவப்பிரியாம்பா ஸரஸ்வதி , பாலாம்பா மாதாஜி, சென்னை ஸ்ரீ அன்னை ஞானேஸ்வரிகிரி மாதாஜி , மதுரை ஸ்ரீ வித்யாம்மா ஸரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்புரை

சிறப்பு அழைப்பாளர்களாக கிராமியம். நாராயணன் , மரபுவழி குணபரிவாளர். கோமீ. உயிரினியனார், ஜோதிட பிரம்மஸ்ரீ  முனைவர். சிவசூரியன் , கோவை முனைவர். வள்ளியம்மாள், கவிஞர். கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.



 மாநாட்டில் 

முக்கிய தீர்மானங்கள்!!!



1)திருக்கோயில்களில் வசூலிக்கப்படும் தரிசனம் கட்டணம் பக்தர்களுக்கிடையே பாகுபாடு & வேற்றுமையை உருவாக்குவதால் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.


2)பல ஆயிரம் நூற்றாண்டு பழமை வாய்ந்த திருக்கோயில்கள் சிதிலமடைந்து பூஜைகள் நடைபெறாமல் உள்ளது.


உடனே அவற்றை புதுபித்து பூஜைகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


3)திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் நமது பாரம்பரிய உடைகள் மட்டுமே அணிந்து வருதல் கட்டாயம் ஆக்க வேண்டும்.


4)திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளின் நலன் கருதி மாத ஊதியம் வழங்கிட வேண்டும்.


5)அனைத்து திருக்கோயில்களிலும்  தரமான அடிப்படை வசதிகளை செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


6)திருக்கோயில்களின் வருமானத்தை திருக்கோயில்கள் நலன் சார்ந்த மேம்பாட்டு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும். 


7)திருக்கோயில்களுக்கும் மற்றும் ஆதீனத்திற்கு சொந்தமான சொத்துக்களை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ள மாற்று மதத்தினர் மற்றும் தனிநபர்களை உடனே வெளியேற்றி அந்த சொத்துக்களை மீட்டெடுக்க வேண்டும்.

8)நமது இந்து சமயத்தை சார்ந்த சந்நியாசிகளுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று வர இலவச ரயில்வே  பாஸ் வழங்கிட வேண்டும்.


9)இந்துக்கள் மற்றும் இந்து திருக்கோயில்களின் நலனுக்காக ஒரு தனி வாரியத்தை அமைத்திட வேண்டும்.


10)இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்து சமயத்தை போற்றும் விதமாக திருக்கோயில்கள் அருங்காட்சியகங்களை அமைத்திட வேண்டும்.


11)திருக்கோயில்களின் திருவிழா காலங்களில் நமது பாரம்பரிய இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை கட்டாயம் நடத்திட வேண்டும்.

12)திருக்கோயில்கள்சார்ந்துள்ள குளம் மற்றும் நதிகளின் புனிதத்தை பாதுகாத்திட அனைத்துவித நடவடிக்கைகளையும் உடனே எடுத்திட வேண்டும் என மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

.மேலும் இந்த மாநாட்டில் பொதுமக்கள் மற்றும் சங்கத்தின் மாநில, மாவட்ட,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


இந்த மாநாடு ஏற்பாடுகளை சங்கத்தின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி அவரது தலைமையில் முனைவர்.சுபத்ரா செல்லதுரை, ராம்கமல் ,மோகன்குமார் ,வேலுசாமி , ரமேஷ் , ஜெயா , மாணிக்கவேல், பாலசுப்ரமணி , கார்த்திக் , விஷ்ணு ஆகியோர் செய்திருந்தனர்.

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

தேவேந்திர குல வேளாளர் அரசியல் அதிகார மீட்பு மாநில மாநாடுதமிழர் விடுதலைக் களத்தின் நிறுவனர், இளம் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது

thoothukudileaks 29-9-2023

news by arunan journalist 

தேவேந்திர குல வேளாளர் அரசியல் அதிகார மீட்பு மாநில  மாநாடு தமிழர் விடுதலைக் களத்தின் நிறுவனர், இளம் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது .

மாநில மாநாடு கூட்டத்தில் பரபரப்பான 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .



இதுபற்றி செய்தியாவது:-

தமிழர் விடுதலைக்களம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில்... நேற்று 28-9-2023

தேவேந்திரகுல வேளாளர்" அரசியல் அதிகார மீட்பு மாநில

மாநாடு கூட்டம் நடைபெற்றது.

 

உலகம் எங்கும் வாழக்கூடிய தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் சார்பாக 

தேவேந்திர குல வேளாளர் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கு தமிழர் விடுதலைக் களத்தின் நிறுவனர், இளம் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார் தலைமையேற்று மாநாடு கூட்டம் சிறப்பாக நடத்தினர்

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில்.நடைபெற்ற   ..

அரசியல் அதிகார மீட்பு மாநில  மாநாட்டில் சிறப்புரை நிகழ்த்தியவர்கள்.. தூத்துக்குடி தெற்கு அதிமுக மாவட்ட கழகத்தின்  செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்.

தூத்துக்குடி வடக்கு அதிமுக மாவட்ட கழகத்தின் செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு...

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன்

திருநெல்வேலி அதிமுக மாவட்ட கழகத்தின் செயலாளர் 

தச்சை கணேசராஜா..

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கசாலி

அரசியல் அதிகார மீட்பு மாநாட்டில் வாழ்த்துரை வழங்கிய தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபையின் மாநில பொறுப்பாளர் அரவிந்த்ராஜா...

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில தலைவர் பார்வதி சண்முகச்சாமி 

முன்னாள் மாவட்ட நீதிபதி ராமலிங்கம்

தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் தாளை முத்தரசு

முன்னாள் மாவட்ட பதிவாளர்,*முனைவர் பாலு சுப்பிரமணி... ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக வந்து கலந்து கொண்டனர். 


முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் அதிகார மீட்பு மாநாட்டு தீர்மானங்கள்.!


தமிழர் விடுதலைக் களத்தின் நிறுவனர், இளம் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற தேவேந்திர குல வேளாளர் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:


1.தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்சி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். 


2. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், தியாகி இமானுவேல் சேகரனார்அவர்களுக்கு அரசு விழா அறிவிக்க வேண்டும்.

இந்திய விடுதலை போராட்ட வீரர், மாவீரர் வெண்ணிகாலாடி நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.


3.தமிழக அமைச்சரவையில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு உரிய அமைச்சர் பதவி பிரதிநிதித்துவம்வழங்கிட வேண்டும். 


4.நீதிபதி நியமனங்களில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும், 


5.தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நிர்வாக முக்கியத்துவம்வாய்ந்த பதவி பொறுப்புகளை வழங்க வேண்டும். 


6. நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீட்டிலும், மேயர் பதவி ஒதுக்கீட்டிலும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கிட தமிழக அரசை வலியுறுத்துகிறோம். 


7. உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்திட வேண்டும். 


8.தென் மாவட்டங்களில் ஏற்படுகின்ற சாதி மோதல்களை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை, வருவாய்த்துறை, அனைத்து சமுதாய பெரியவர்களை கொண்ட நல்லிணக்க குழுவைஏற்படுத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும். 


9.வேலைவாய்ப்பு அளித்து சாதி மோதல்களை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கங்கைகொண்டான் சிப்காட்டில் வடமாநில தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். திருநெல்வேலி பகுதியை சுற்றியுள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு கங்கை கொண்டான் சிப்காட்டில் வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும்.


10.ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகள் கருங்குளம் ஊராட்சி, புளியங்குளம் கிராமத்தை சேர்ந்ததாகும். ஆட்சியாளர்களும், அகழாய்வாளர்களும் புளியங்குளம் கிராமத்தை திட்டமிட்டு மறைத்து,போலியான தகவல்களை அளித்து வருகின்றனர். 


11. சாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். 


12.காவிரி நீர் வராத காரணத்தினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

காவிரி நீரை முறையாக பெற்று தர வேண்டும்.


13. தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் பகுதிக்கு உட்பட்ட செண்பக கால்வாய் அணை மற்றும் தலையணைஆகிய அணைகளை போர்க்கால அடிப்படையில் சீர்படுத்த வேண்டும். 


14.தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரத்தில் மாவீரர் சுந்தரலிங்க தேவேந்திரருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும். 


15. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும்.! 


மேற்கண்ட முக்கியத்துவம் மிக்க 15 தீர்மானங்கள் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு நன்றி யுரை

அரசியல் அதிகார மீட்பு மாநாட்டில் அலைகடலென கலந்து கொண்ட  தேவேந்திர குல வேளாளர் சமூக உறவுகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசியல் அதிகார மீட்பு மாநாடு வெற்றி பெறுவதற்காக இரவு பகலாக அயராமல் உழைத்திட்ட தமிழர் விடுதலைக் களத்தின் மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும், பொறுப்பாளர்கள் அனைவருக்கும்உலகமெங்கும் வாழுகின்ற தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.!

இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.

தகவல் 

ஊடகப் பிரிவு,

தமிழர் விடுதலைக் களம்,

தமிழர் நாடு,

29.09.2023