துவக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துவக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 அக்டோபர், 2024

30 ஆயிரம் கொடுத்து மூன்று கிடா ஆடுகளை வாங்கிய அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி அருகே புதிதாக ஆடு சந்தை ஆரம்பம்

 ▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃

24--10-2024  

photo news 

by sunmugasunthram Reporter 


தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடு விற்பனை செய்யும் சந்தைகள்  எட்டையாபுரம்,   மற்றும் புதியம்புத்தூர், நாசரேத், ஏரல் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. 




தூத்துக்குடி, விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் ஆடுகள் வாங்குவதற்கு எட்டையாபுரம் மற்றும் புதியம்புத்தூர் செல்கின்றன.???


புதிய ஆட்டு சந்தை !!!

     தற்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி இசிஆர் சாலை கோமஸ்புரம் பகுதியில் புதிதாக ஆடு ,நாட்டுகோழி, விற்பனை சந்தை உருவாக்கப்பட்டது .

அமைச்சர் கீதா ஜீவன்!!!

புதியதாக உருவான ஆட்டு சந்தையை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி வைத்து சந்தையை துவக்கி வைத்தார்.

மூன்று கிடா ஆடுகளை வாங்கிய அமைச்சர் கீதா ஜீவன்!!!!

 இதில் தொடர்ந்து ஆட்டு வியாபாரிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சந்தையில் ரூ 8500, ரூ.10,500, ரூ. 11,000 ஆகிய 3 கிடா ஆடுகளை 30 ஆயிரம் விலைக்கு ஆடுகளை வாங்கினார் அமைச்சர் கீதாஜீவன் . 



ஆட்டுச் சந்தையின் திறப்பு விழாவிற்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை வகித்தார். 


ஆடு இறைச்சி வியாபாரிகள் கருத்து !!!

புதன் மற்றும் வெள்ளிகிழமை வாரத்தில் இரண்டு நாட்கள் செயல் படும் 

சுமார் ஒன்றரை ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சந்தை வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதன் மூலம் தூத்துக்குடி விளாத்திகுளம் குளத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்தும் வாடகைக்கு வண்டி பிடித்து பிற இடங்களுக்கு கொண்டு செல்லக்கூடிய கால சூழல் பண விரையம் ஆகியவை தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது என ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.


 முதல் நாளில் ஏராளமான வியாபாரிகள் ஆடு, நாட்டுகோழி, சேவல் போன்றவற்றை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டனர். 

 

ஆட்டுச் சந்தையின் உரிமையாளர் அம்பாசங்கர் !!!!

 தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் மட்டுமின்றி திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களுக்கு ஆட்டு இறைச்சி வாங்குவோர் நீண்ட தூரம் செல்லக்கூடிய சூழல் தவிர்க்கப்படும் எனவும் இச்சந்தையில் விரைவில் ஆட்டு வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவுள்ளது என ஆட்டுச் சந்தையின் உரிமையாளர் அம்பாசங்கர் தெரிவித்தார்.

இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, கவுன்சிலர் தெய்வேந்திரன், சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் வினோத், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மாநகர இறைச்சி கடை உாிமையாளர்கள் சங்க தலைவர் வேல்சாமி, செயலாளர் பொன்ராஜ், திமுக தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் மாாிச்செல்வம், மாணவரணி ரமேஷ், கணபதி நகா் கார்த்திசன், கிளைச்செயலாளர்கள் உலகநாதன், ராமசந்திரன், ஆசைதம்பி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.





புதன், 13 மார்ச், 2024

தூத்துக்குடி 14-வது வார்டில் ரூ. 12.90 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சி 14-வது வார்டில்   ரூ. 12.90 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய்,மழைநீர் வடிகால் அமைக்கும் அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

இது பற்றிய  செய்தியாவது:-



தமிழ் நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்   கீதா ஜீவன் M. COM, B.ED

14 வது வார்டு சின்னக்கண்ணுபுரம் பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.90 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய்,மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில்...

மாநகர திமுக செயலாளர்  ஆனந்தசேகரன்,பகுதி செயலாளர் ஜெயகுமார், மாவட்ட கழக உதவியாளர்கள் மணி,செந்தில்,ஆல்பர்ட் வட்டச் செயலாளர்  காளிதுரை வட்டப்பிரதிநிதிகள் கோவிந்த ராஜ்,மீனாட்சி சுந்தரம்,நடராஜன், அந்தோணி,மகேஷ்,செல்வம்,குமார், பாலசுப்பிரமணியன் இளைஞரணி செயலாளர் கண்ணன் மற்றும் சரத்குமார்,மோகன் மகளிரணி செயலாளர் மாரி செல்வி மற்றும் சுமதி,நந்தினி,சுடலி தங்கம்,ஆனந்தி,செல்வி,சாந்தி மேலும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

புதன், 23 ஆகஸ்ட், 2023

திருவைகுண்டம் பெருங்குளம் பேரூராட்சியில் 28லட்ச ரூபாய் மதிப்பில் படித்துறை அதிமுக பேரூராட்சி மன்ற தலைவர் டாக்டர் எஸ் புவனேஸ்வரி சண்முகநாதன் தொடங்கி வைத்தார்

 thoothukudi leaks 23-8-2023

photo news by sofan


தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பெருங்குளம்  பேரூராட்சியில்  28லட்ச ரூபாய் மதிப்பில்   படித்துறை அமைத்தல் பணியை  அதிமுக பேரூராட்சி மன்ற தலைவர் டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் தொடங்கி வைத்தார் .

அதிமுக பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் டாக்டர் எஸ் புவனேஸ்வரி சண்முகநாதன்


இது பற்றிய செய்தியாவது:-

             தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் பெருங்குளம் பேரூராட்சியில் அமைந்துள்ள    பண்ணை விளை பங்களா சுடலை மாடசாமி கோவில்  பகுதியில்  பெருங்குளம் இருக்கிறது.

பெருங்குளம் பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூபாய்  28லட்சம் மதிப்பில்   பொதுமக்கள் பயன்பாட்டிற்காக  குளத்தில்   படித்துறை அமைத்தல்  பணி நடைபெறுகிறது. 



இன்று 23-8-2023 பெருங்குளம் படித்துறை அமைக்கும் இப்பணியை அதிமுக பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர்  டாக்டர் எஸ் புவனேஸ்வரி சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.



  இந்நிகழ்ச்சியில்    பெருங்குளம் பேரூராட்சி  செயல் அலுவலர் ரமேஷ் பாபு,பெருங்குளம் நகர அதிமுக   செயலாளர்  மற்றும் கவுன்சிலர்  வேதமாணிக்கம்,  மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்   எப்ராயீம்,  பெருங்குளம் பேரூராட்சி     கவுன்சிலர்கள்    காமராஜ், சுப்பிரமணியன்,   வத்சலா மாணிக்கம்  சௌந்தர்யா மாவட்ட  வர்த்தக அணி தலைவர்    திருத்துவசிங், வெள்ளையா  உட்பட பலர் கலந்து கொண்டனர்