கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 ஜூன், 2026

ஜூலை 1 முதல் திருக்கோயில்களில் கைபேசி பயன்பாட்டிற்கு தடை திருச்செந்தூரில்..?

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

அருணன் செய்தியாளர் 


திருச்செந்தூர், ஜூன் 18:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கைபேசி பயன்படுத்துவதற்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது பற்றிய செய்தியாவது ;-

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தற்போது!!!

ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் திருக்கோயில்களில் கைபேசி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளன.

thoothukudileaks


சேவைகள்!!!

பக்தர்களின் அவசர பயன்பாட்டிற்காக கோயில் வளாகத்தில் பொதுஅறிவிப்பு (Public Addressing System) வசதி, ஒலிபெருக்கிகள், மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மொபைல் டெபாசிட் கவுண்டர்!!!

மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக ஒப்படைத்து வைக்க கோயில் வளாகத்தில் சிறப்பு மொபைல் டெபாசிட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மொபைல் வைக்க கட்டணம் ரசீது !!!

கைபேசி ஒப்படைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பக்தர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக ஒப்படைத்து, சுவாமி தரிசனத்தை அமைதியான முறையில் மேற்கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

புதிய நடைமுறை ஜூலை 1, 2026 முதல் முழுமையாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks
தூத்துக்குடி லீக்ஸ் க்காக

செய்தியாளர் அருணன் 

சனி, 30 மே, 2026

தூத்துக்குடி திரவியபுரம் பத்திரகாளியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது


தூத்துக்குடி, மே 31:

தூத்துக்குடி அருகே உள்ள திரவியபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவிலின் 21-வது ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் மகா கும்பாபிஷேக ஆண்டு நிறைவு விழா வரும் ஜூன் 4-ம் தேதி (வியாழக்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளது.

thoothukudileaks


விழாவை முன்னிட்டு அதிகாலை 7.35 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, வேதிகார்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ துர்கா லட்சுமி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் மகா அபிஷேக நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

thoothukudileaks


காலை 10.30 மணி முதல் 11 மணி வரை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் தர்மகர்த்தா V.செல்வராஜ் நாடார், ....

காரியதரிசி A.பெரியசாமி நாடார், பொருளாளர் R.சிந்தாமணி நாடார், சந்தனகுமார் நாடார் உதவி தர்மகர்த்தா R.அருணாசலம் நாடார், S.பாலசுப்பிரமணியன் நாடார்,& உதவி காரியதரிசி D.முத்துராஜ் நாடார், L.N.கனகராஜ் நாடார் ஆகியோர் தலைமையில் செய்து வருகின்றனர்.

மேலும், ஆலோசகர்களாக M.தீபேந்திர ராஜா நாடார், S.வேல்சாமி நாடார், P.இளையபெருமாள் நாடார், V.பட்டுராஜ் நாடார், R.மாரியப்பன் நாடார், A.ஜெயராஜ் நாடார்,ஏ.சேர்மத்துரைநாடார்  L.தர்மலிங்கம் நாடார் ஆகியோரும், கமிட்டி உறுப்பினர்களாக I.முனியசாமி நாடார், S.சக்திவேல் நாடார், V.பொன்னராஜா நாடார், J.தமிழ்செல்வன் நாடார், N.L.பெருமாள்ராஜ் நாடார், B.சரவணகுமார் நாடார் ஆகியோரும் விழா ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

– தூத்துக்குடி லீக்ஸ்

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

சின்னகண்ணுப்புரம் லட்சிய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

 📰 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்திகள்

தூத்துக்குடி சின்னகண்ணுப்புரம் லட்சிய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 

தூத்துக்குடி சின்னகண்ணுப்புரம் அருள்மிகு ஶ்ரீ லட்சிய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது.



இவ்விழாவை ஆலய பொறுப்பாளர் காளிதுரை  துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஆலய நிர்வாகிகள் கருப்பசாமி, பால சுப்பிரமணியன், கோவிந்த ராஜ், பழனிக்குமார், காளி முத்து, சுரேஷ், நடராஜன், கண்ணன், பால குமார், பரமசிவம், மாரிசெல்வி, ஜீவா, பாக்யலக்ஷ்மி, பூ இசக்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதனுடன் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு விநாயகரின் அருளைப் பெற்றனர்.

வெள்ளி, 4 ஜூலை, 2025

போக்குவரத்து மாற்றம் – போலீஸ் அறிவிப்பு திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழா



📰 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்
📅 05 ஜூலை 2025 | தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வரவுள்ளதால், ஜூலை 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மாவட்ட காவல்துறையால் வாகன போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



🚧 மாற்றப்பட்ட போக்குவரத்து வழித்தடங்கள்:

  • தூத்துக்குடி, ஆறுமுகநேரி, குரும்பூர், கன்னியாகுமரி, சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு மார்க்கங்களில் இருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் வாகனங்கள், திருச்செந்தூரை தவிர்த்து மாற்று வழித்தடங்களில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • முக்கிய வழித்தடங்கள்: DCW Jn – நல்லூர் V Jn – ராணிமஹாராஜபுரம் – காந்திபுரம் – காயாமொழி – பரமன்குறிச்சி – உடன்குடி.

🚌 அரசு சிறப்பு பேருந்துகள் – தற்காலிக நிறுத்தங்கள்:

  1. தூத்துக்குடி மார்க்கம் – சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிரே தற்காலிக பேருந்து நிலையம்.
  2. திருநெல்வேலி மார்க்கம் – ஷபி டிரேடர்ஸ் எதிரே தற்காலிக நிறுத்தம்.
  3. பரமன்குறிச்சி சாலை – FCI குடோன் அருகே தற்காலிக நிறுத்தம்.

இவற்றில் இருந்து கோவிலுக்கு செல்ல சுற்றுப்பேருந்துகள் (Shuttle buses) இயக்கப்படும். பக்தர்களுக்கான வசதிக்காக முக்கிய சாலை வழியாக சுழற்சி பேருந்துகள் இயக்கப்படும்.


🚗 தனியார் வாகனங்கள் – வாகன நிறுத்த இடங்கள் (19 இடங்கள்):

  • தூத்துக்குடி சாலை: JJ நகர், ஆதித்தனார் கல்லூரி, அரசு தொழிற் பயிற்சி பள்ளி (ITI), பிரசாத்நகர்.
  • திருநெல்வேலி சாலை: வியாபாரிகள் சங்கம், அன்புநகர், குமாரபுரம், கிருஷ்ணாநகர்.
  • பரமன்குறிச்சி சாலை: பால்பாயாசம் அய்யர் டண்ட், சுந்தர் டண்ட், செந்தில்குமரன் பள்ளி.
  • TB சாலை, பகத்சிங் பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்கள்.

⚠️ பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்:

பக்தர்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் அல்லது அனுமதி இல்லாத இடங்களில் நிறுத்த வேண்டாம். காவல்துறையின் வழிகாட்டுதல்படி ஒழுங்காக வாகனங்களை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடைபிடித்து திருவிழாவை அமைதியாக அனுபவிக்க அனைவரும் ஒத்துழைய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


.

புதன், 12 மார்ச், 2025

மாசிமக திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான விழாஅனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் அன்னதானம்

Tamil Nadu updates12-3-2025

 மாசிமக திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான விழா

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமக திருத்தேர் திருவிழா இந்த வருடமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர்.



இந்த திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அன்னம் பெற்றுச் சென்றனர்.



விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக வாழைக்காய் வியாபாரி சேட் மற்றும் சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி கலந்து கொண்டு அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்தனர்.



இந்த மாபெரும் அன்னதான விழாவின் ஏற்பாடுகளை சங்கத்தின் பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், தியானேஷ்வரன், கருணாநிதி, வெங்கடேஷ், மதியழகன், அர்ச்சகர் மஹா விஷ்ணு, சந்தோஷ், வினோத், கோபி, சரவணன், சக்தி, முகிலன், செந்தில் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில் பக்தர்கள் ஆரவாரத்துடன் கலந்து கொண்டு இறையருளைப் பெற்றனர்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

பாதயாத்திரையாக நடந்து வருபவர்களுக்கு திருச்செந்தூர் கோயிலில் உள்ளே செல்ல தனி வழி

திருச்செந்தூர் தைப்பூச விழா - பாதயாத்திரை பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தூத்துக்குடி, பிப்ரவரி 8, 2025


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

தனி வழி !!!

வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தனி வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.



 மேலும், பக்தர்களின் வசதிக்காக பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:


- 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம்

- 800 காவலர்கள் பாதுகாப்பு பணி

- பக்தர்களுக்கான அடையாள டேக் வழங்கும் திட்டம்

- அவசர மருத்துவ முகாம் அமைப்பு

- தற்காலிக வாகன நிறுத்துமிடம்


இக்கூட்டத்தில் கோயில் இணை ஆணையாளர் ஞானசேகரன், நகராட்சி ஆணையர் கண்மணி, வட்டாட்சியர் பாலசுந்தரம், அரசு தலைமை மருத்துவர் பாவநாச குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பர்வீன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.


இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திங்கள், 9 செப்டம்பர், 2024

லட்சிய விநாயகர் ஆலயத்தில் அன்னதானம்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

10-9-2024 photo news 

தூத்துக்குடி  சின்னகண்ணுபுரம் அருள் மிகு ஶ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெற்றது 


சதுர்த்தி முன்னிட்டு நேற்று மதியம் 12-00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது .


 அன்னதானம்!!!!

சிறப்பு பூஜை தொடர்ந்து அன்னதானத்தை ஆலய பொறுப்பாளர்

 14 வது வார்டு திமுக வட்ட செயலாளர் காளிதுரை, மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்க து.தலைவர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார்கள்.



உடன் கோவிந்த ராஜ்,தங்கராஜ், பெரியசாமி,மீனாட்சி சுந்தரம், ஆறுமுகம்,சுரேஷ்,சோலை மணி,கண்ணன், வைரவேல்,பழனிகுமார்,காளி முத்து,நடராஜன்,பால்ராஜ்,குமார் மகளிரணி ஜீவா,மாரி செல்வி,பாக்கிய லட்சுமி, பூ இசக்கி, ஜேசு,கனிஷா,கனிகா இளைஞரணியினர்கள் கண்ணன்,செல்வராஜ்,விஷால், சந்தோஷ்,சஞ்சய், பால சரவணன்,காமராஜ் மற்றும் பொதுமக்கள்,பக்தர்கள்,வியாபாரிகள் கலந்து கொண்டார்கள்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடியில் கிருஷ்ணன் ராதை போட்டி ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பெருமாள் ஆலயத்தில் சேவா பாரதி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

26-8-2024 photo news 

by sunmugasunthram Reporter 

தூத்துக்குடியில்...

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி கதிர்வேல் நகர் ராதா கிருஷ்ண பெருமாள் ஆலயத்தில்  குழந்தைகளுக்கான கிருஷ்ணன் -ராதை வேடம் அணிந்து போட்டி நடைபெற்றது .




கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது


 கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி கதிர்வேல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பெருமாள் ஆலயத்தில் சேவா பாரதி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது 



இதையொட்டி குழந்தைகளுக்கான கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் புனைதல் போட்டி நடைபெற்றது.


 இந்த போட்டியில் 10 மாத குழந்தை முதல் 10 வயது வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து போட்டியில் கலந்து கொண்டனர்.




 இதேபோன்று ஓவிய போட்டியும் நடைபெற்றது 



இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. 


செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடி செய்தியாளர்களின் தந்தை 50-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிவன் கோவிலில் அன்னதானம் வழங்கினார்கள்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

6-8-2024 

photo news by arunan journalist 

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து மற்றும் மகன் கனகராஜ், ,வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைச் செயலாளர் உத்திரபாண்டி ஆகியோரின் தந்தையும், செய்தியாளர் ரேகா-வின் மாமனாருமான ஆ.தங்கமணி நாடாரின்  50-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.



இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் பாகம்பிரியாள் உடனுறை சிவன் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. 



மேலசண்முகபுரம் ஆ.தங்கமணி நாடாரின்  50-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து நடைபெற்ற அன்னதானத்தை அவரது மகள் மல்லிகா, மகன் கனகராஜ், மகள் ஜெயலெட்சுமி, மருமகன்கள் மாசிலாமணி, அஜய்கோஷ், மருமகள்கள் பிரேமா, ஹேமா ஆகியோர் துவக்கி வைத்தனர். 




கோவில் பூஜை வீடியோ பார்க்க!!!

அடுத்ததாக தூத்துக்குடி சிவன் கோயிலில் இவர்களது குடும்பம் சார்பில் அங்குள்ள வர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். 

இந்நிகழ்வில் மகன்கள், மகள்கள், மருமகள்கள்;, மருமகன்கள், பேரன்கள், பேத்திகள் உள்பட குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

மிளகாய் வற்றல் மஹா யாக வழிபாடு தூத்துக்குடிசித்தர் பீடத்தில் ஆடி மஹாளாய அமாவாசை சிறப்பு மஹா யாகம் நடைபெற்றது

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

5-8-2024 photo news 

by sunmugasunthram Reporter 

சித்தர் பீடத்தில் ஆடி மஹாளாய அமாவாசை லட்சார்ச்சனையுடன் கூடிய மிளகாய் வற்றல்  மஹா யாக வழிபாடு நடைபெற்றது.



      தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடத்தில் "ஆடி மஹாளய அமாவாசை"யை முன்னிட்டு லட்சார்ச்சனையுடன் மிளகாய் வற்றல் சிறப்பு மஹா யாகம் 


சற்குரு சீனிவாச சித்தர் காலை 8.10மணிக்கு மஹா யாகத்திற்கான வழிபாடுகளான கணபதி, நவக்கிரக ஹோமம், மஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் ஹோமத்துடன் தொடங்கி வைத்தார்.



   அதனைத் தொடர்ந்து, காலை முதல் இரவு வரை லட்சார்ச்சனை தொடர்ந்து நடைபெற்றது.


 காலை 10.20மணிக்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கு மிளகாய் வற்றல் மஹா யாகம் தொடங்கியது. 


இன்று 5-8-2024 மதியம் 12மணிக்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கும், மஹா காலபைரவருக்கும் மஞ்சள், பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர், தேன், விபூதி, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 16வகையான அபிஷேகமும் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் மதியம் 1.20மணிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. 

    இதில், பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன்தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் முற்றிலுமாக நீங்கிடவும், இல்லத்தில் பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், திருமண வரன், குழந்தை பாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கேற்ப அரசு வேலை கிடைத்திடவும், தொழில் விருத்தியாகிடவும், பருவமழை பெய்து விவசாயம் சிறப்பாக நடைபெறவும், உலகில் இயற்கை பேரிடர்கள் இல்லாமல் போகிட வேண்டியும் மஹா யாக வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் திரளாக வந்து வழிபட்டு மகிழ்ந்தனர்.


   தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு மஹா தீபாராதனையுடன் மஹா யாக வழிபாடுகள்.

   மஹா யாக வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சித்தர்பீடம் வழிபாட்டுக் குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளார் கள்.

செவ்வாய், 16 ஜூலை, 2024

காமராஜர் பிறந்த நாள் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பத்திரகாளியம்மன் கோவில் பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பத்ரகாளியம்மன்

கோவிலில் நேற்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அன்னதானம் நடைபெற்றது.

  அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.



இது பற்றிய செய்தியாவது:-

      தூத்துக்குடி காமராஜர் 122வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.


 பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் துவக்கி வைத்தார்.


    உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் அந்தோணி கண்ணன், மாவட்ட பிரதிநிதி சேர்மபாண்டியன், கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்சலின், வட்டச்செயலாளர் அசோக்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கா்,  மற்றும் கோவில் தர்மகர்த்தா ஆறுமுக பாண்டியன் காரியதரிசி தங்ககுமார் மற்றும் மணி, அல்பட், உள்பட பலா் உடனிருந்தனர்.

சனி, 1 ஜூன், 2024

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வருஷாபிஷேக விழா

 ▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 2-6-2024

செய்தி புகைப்படங்கள்  

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர் 


முத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.



        தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில் விநாயகர், ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, ஸ்ரீமஹா-காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், ஸ்ரீவாராஹி அம்மன், மங்களம் தரும் சனீஸ்வரர், தியான ஆஞ்சநேயர், மஹாசரஸ்வதி, மஹாலெட்சுமி உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 

  இக்கோயிலில் வருஷாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மஹா பூர்ணாகுதியும், மஹாபிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், மஹாசரஸ்வதி, மகாலெட்சுமி, குருமகாலிங்கேஸ்வரர் உள்ளிட்ட பரிவாரதேவதா சமேத தெய்வங்கள் மற்றும் மூலஸ்தான வருஷாபிஷேக விழா சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது. 

    தொடர்ந்து, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா-காலபைரவருக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், புனுகு உள்ளிட்ட 16வகையான அபிஷேகம், யாகம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

     விழாவில் மலேசியா தொழில்அதிபர்கள் சேகர், ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் பக்தர்களுக்கு அன்னதானத்தை தொாடங்கி வைத்தனர். 

     விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தின் விழாக் குழுவினர், மகளிர் அணியினர் செய்திருந்தனர்.

வியாழன், 30 மே, 2024

தூத்துக்குடி பேச்சியம்மன் கோவிலில் அஷ்ட பந்தன மஹாகும்பாபிஷேக விழா

 ▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

31-5-2024

செய்தி புகைப்படங்கள்  

த.சண்முகசுந்தரம்

முத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடி 3ம் மைல் பேச்சியம்மன் கோவிலில் ஜீன் 2ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது 

இது பற்றிய செய்தியாவது:-

      தூத்துக்குடி 3ம் மைல் பசும்பொன்நகாில் அமைந்துள்ள பேச்சியம்மன் கோவிலில் அஷ்ட பந்தன மஹாகும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.



  இன்று 31ம் தேதி காலையில் விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், தனபூஜை, மகா கணபதி ேஹாமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை தீபாரதனை நடைபெற்றது. 


மாலையில் மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், புனிதநீர் எடுத்து வருதல், விக்னேஸ்வர பூஜைகள் நடைபெறுகிறது. வரும் 1ம் தேதி நாளை காலை திருமுறை பாராயணம், உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. மாலை விக்னேஸ்வரர் பூஜை, உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. ஜீன் 2ம் தேதி காலையில் மங்கள வாத்தியம், நான்குகாலை பூஜைகள் பேச்சியம்மாள் விமான கோபுரங்கள், செல்வசக்தி விநாயகா், பிரம்மசக்தி அம்மன், சந்தனமாாியம்மன், கருப்பசாமி, வைரவசாமி, ஆகிய பாிவாரமூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று காலை 11மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. 



விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக கமிட்டியினர் செய்துள்ளனர்

1000 ஆண்டு பழமையான ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயில் குளித்தலை ஆஞ்சநேயர் கோயில் அருகே நகராட்சி நிர்வாகம் கட்டும் கழிப்பறைக்கு நிரந்தர தடை விதிக்க தமிழக அரசிற்கு இந்து சேனா கோரிக்கை

குளித்தலை ஆஞ்சநேயர் கோயில் அருகே நகராட்சி நிர்வாகம் கட்டும் கழிப்பறைக்கு நிரந்தர தடை விதிக்க தமிழக அரசிற்கு இந்து சேனா கோரிக்கை விடுத்துள்ளனர்.

1000 ஆண்டு பழமையான ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயில் 


இது பற்றிய செய்தியாவது:-

கரூர் மாவட்டம் குளித்தலையில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட 1000 ஆண்டு பழமையான ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயில் மற்றும் உப சன்னதி ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது.



 இந்தக் கோயில்களுக்கு குளித்தலை சுற்றுவட்டாரத்தில் மட்டும் இல்லாமல் மற்ற பகுதிகளில் இருந்தும் இந்து சமயத்தை சார்ந்த பக்தர்கள் இந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்.


இந்த ஆஞ்சநேயர் திருக்கோயில் மிக விரைவில் முழு திருப்பணிகள் நடைபெற உள்ளது‌.


மேலும் குளித்தலை ஆஞ்சநேயர் பகவானுக்கு என்று இந்த ஒரு தனி ஆலயம் தான் உள்ளது.


இந்த ஆலயத்தின் அருகில் குளித்தலை நகராட்சி நிர்வாகம் ஆலயத்தை ஒட்டி ஏற்கனவே உள்ள வடிகால் கால்வாய் மீது கழிப்பறை ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறது.


 திருக்கோயிலுக்கு வருகின்ற பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கிருமி தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.


தேர் திருவிழா மற்றும் விஷேச காலங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகம் திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள்.


 அவர்களுக்கு பல்வேறு வகையான கிருமி தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு உடனே தமிழக அரசு குளித்தலை நகராட்சி நிர்வாகத்தின் இந்த கழிப்பறை கட்டும் பணிகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக இந்து சேனா தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கிறது.



செவ்வாய், 5 மார்ச், 2024

2024 மார்ச் 8 -ல் தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா இரவு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் பட்டிமன்றங்கள் ஆன்மீக இன்னிசை கச்சோி, என பல்வேறு நிகழ்ச்சிகள் நனட பெறுகின்றன.

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂

photo news by

 சண்முகசுந்தரம்

தூத்துக்குடி மூத்த செய்தியாளர்

தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி வருகின்ற 8ம் தேதி இரவு முழுவதும் நடைபெறுகிறது. தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தகவல்



 இது பற்றிய செய்தியாவது :-

     தூத்துக்குடி சிவன் கோவிலில் வரும் 8-ம் தேதி சிவராத்திரி விழா மற்றும்  பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.


 தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரி திருவிழா வரும் மார்ச் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.


    மாசி மாதத்தின் பிரதோஷமும் மகா சிவராத்திரியும் இந்த ஆண்டு ஒரே நாளில் வருகிறது.


மார்ச் 8ம் தேதி வரும் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்வது நல்லது. அதே நாள் வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரியும் வருகிறது.


இந்த இரண்டும் ஒரே நாட்களில் வருவதால் சிவன் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் கலந்து கொண்டு தாிசனம் செய்வது மிக சிறப்புடையதாக இருக்கும்.


இந்த மகா சிவராத்திரிப் பெருவிழா நாளில் கோவில் இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்.


  பிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஒரே நாளில் வருவதையொட்டி பக்தர்களின் நலன்கருதி அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்து, சிவன் கோவில் உள் அரங்கத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.


 பின்னர், கோவில் நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் கல்யாண சுந்தரம் (எ) செல்வம் பட்டர் ஆகியோர்  அளித்த பேட்டியில்:


    பிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஆகிய இரு நிகழ்வுகள் ஒரே நாளில் வருவது மிகவும் சிறப்பானதாகும்.


 இதனையொட்டி வழக்கம் போல் நடைபெறும் பிரதோஷ வழிபாடு மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, 5 மணிக்குள் நிறைவு பெறும். அதன் பின் சிவராத்திரி நிகழ்வையொட்டி கோவிலுக்கு ஓம் நமச்சிவாய எழுத வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கட்டமைப்பு பணிகளும் முழுமையாக செய்து கொடுக்கப்படும்.


 அன்று இரவு 10, 12, 2, 5 என நான்கு கால பூஜைகள் நடைபெறும் தொடர்ந்து அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் எளிதில் வந்து தரிசனம் செய்து கொள்வதற்கான உள்கட்டமைப்புகளையும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.


 உள்ளே வந்து, வெளியே செல்வதற்கான போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்து காவல்துறை மூலம் சீர்செய்யப்படும். இந்துசமய அறநிலையத்துறையும் அறங்காவலர் குழுவும் இணைந்து பக்தர்களின் நலன் கருதி இரவு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் பட்டிமன்றங்கள் ஆன்மீக இன்னிசை கச்சோி, என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


 2024 இந்தாண்டு சிறப்பான முறையில் இரு நிகழ்வுகளையும் பக்தர்கள் வசதிக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 அனைத்து தரப்பினரும் பிரதோஷம், சிவராத்திரியை முன்னிட்டு அச்சமின்றி வந்து செல்வதற்கு காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


சிவராத்திரி திருவிழாவை பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் கோவில் வளாகத்தில் நான்கு இடங்களில் பெரிய அகன்ற எல்ஈடி திரை மூலம் அபிஷேகம், பூஜைகள் ஒளிபரப்பும் வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.


 கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை, கோவில் பின்புறம் தனியார் பள்ளி இருக்கும் சாலை ஓரங்களில் நிறுத்த கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்கள்.


பின்னர் பெருமாள் கோவில் அறங்காவல்குழு தலைவர் செந்தில்குமார் பேசுகையில்....

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கல்மண்டபத்துடன் கட்டுமான பணிகள் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிவுரையின் படி நல்லமுறையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.


பக்தர்கள் வழக்கம் போல் வந்து செல்லும் நிலை இருக்கிறது. இந்த கும்பாபிஷேக பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக நடைபெறுகின்ற கட்டுமான பணிகளையும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் ஞாயிற்றுகிழமை முதல் வௌியில் நின்று சாமி தாிசனம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டள்ளது.


 பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் கட்டுமான பணி நடைபெறும் வரை பக்தர்கள் முழுமையான ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.


   பெருமாள் கோவில் அறங்காவல்குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில் அறங்காவல்குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன், சிவன் கோவில் அறங்காவலர்கள் ஆறுமுகம், சாந்தி, ஜெயலெட்சுமி, பெருமாள் கோவில் அறங்காலர்கள் முருகேஷ்வரி, ஜெயபால், பாலசங்கர், மந்திரமூர்த்தி, மற்றும் மாாிமுத்து, அர்ச்சகர்கள் சண்முகசுந்தரம் பட்டர், சோமசுந்தரம் பட்டர் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

இந்து சேனா மாநில தலைவர் அதிரடி கோரிக்கை போதைப்பொருள் கடத்தல் ஜாபர் சாதிக் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

 இந்து சேனா மாநில தலைவர் அதிரடி கோரிக்கையாக .... போதைப்பொருள் கடத்தல் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்  மீதும் அவரது கூட்டாளிகள்  தொடர்பு உள்ள வர்கள் மீீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை விடுத்துள்ளார்.



இது பற்றிய செய்தியாவது:-

போதைப்பொருள் கடத்தல்  ஜாபர் சாதிக் தொடர்பு உடையவர்கள் மீது உடனே நடவடிக்கை தேவை தாமதிக்க கூடாது என  இந்து சேனா மாநில தலைவர் அருள்வேலன் ஜி கேட்டு கொண்டுள்ளார்.

மேலும்....

ஏற்கனவே சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு நீதிமன்ற தண்டனைக்கு உட்பட்டு மீண்டும் தொடர்ந்து சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல் தொழில் ஈடுபட்ட  ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்த அனைவரையும் உடனே விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென இந்து சேனா மாநில தலைவர் அருள்வேலன் ஜி வலியுறுத்தல் செய்துள்ளார்.

புதுச்சேரி அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் ஆன்மீக சேவை பாராட்டு ழா

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂

 அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக  ஆன்மீக சேவை செய்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:- 


புதுச்சேரி  அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் ஆன்மீக சேவை செய்தவர்களுக்கு பாராட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது

.இந்நிகழ்ச்சியில்... உறுப்பினர்கள், சங்க பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டனர்.


 சிறப்பு அழைப்பாளர்களாக  லாசுப்பேட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தலைவர் சதாசிவம் , பொருளாளர் மோகன், ஓதுவார் அனந்த வேல், கமிட்டி உறுப்பினர் தண்டபாணி, ஆனந்தன் பழனிசாமி மற்றும் லயன் கணேசன் , தணிகாசலம் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். 

கடந்த  ஒரு ஆண்டாக சேவை செய்யாதவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாநில தலைவர் சடாட்சர மூர்த்தி, மாநில செயலாளர் இராகவேந்திர சிவம் , மாநில மகளிர் அணி தலைவி பிரியா சந்திரசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.


 

வியாழன், 23 நவம்பர், 2023

தூத்துக்குடி பெருமாள் கோவில் கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுவும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்

thoothukudileaks 24-11-2023

தூத்துக்குடி பெருமாள் கோவில் கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுவும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.


இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில் புகழ்பெற்ற பழமையான பெருமாள் கோவில் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இத்திருக்கோயிலில் 2000ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


 அதன்பின் கும்பாபிஷேக பணிகள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் பெருமாள் கோவிலுக்கு சுமார் 6 கோடி மதிப்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


அதற்கான பணிகளை இப்போதே துவங்கப்பட்டு நல்லமுறையில் நடைபெற்று வருகின்றன. 


இந்த கோவிலில் 63 கல் தூண்களுடன் 35 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பாரம்பரிய சாஸ்திர முறைப்படி பணிகள் நடைபெறுகிறது.

தற்போது பெருமாள் கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு, சாமி தரிசனம் செய்து, கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுவும் பணியை துவக்கி வைத்து, பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகிய கோவில் கட்டுமானப் பணியையும் தொடங்கி வைத்தார். 



பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிகள் அடுத்த ஆண்டு சிறப்பாக நடைபெற உள்ளது.

 அதனையொட்டி கல்மண்டபத்திற்கான கல் தூண் அமைக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளோம். இந்த கட்டுமான பணிகள் இனி வேகமாக நடைபெறும். பல தொழிலதிபர்கள் பங்களிப்புடன் கட்டுமான பணிகள் நடைபெறும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பல கோடி மதிப்புள்ள திருக்கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.


 இதுவரை 1400க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது, என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல்அலுவலர் தமிழ்செல்வி, ஆய்வாளர் ருக்குமணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில் அறங்காவல் குழு தலைவர் கந்தசாமி, தெப்பகுளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா அறிவழகன், ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் அறங்காவலர் இளங்குமரன், சிவன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் ஆறுமுகம், ஜெயலெட்சுமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி, முருகேஸ்வரி, ஜெயபால், பாலசங்கர், பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பொதுகுழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், வட்டச் செயலாளர் கங்காராஜேஷ், வட்டபிரதிநிதி பாஸ்கர், தொழிலதிபர்கள் அழகர் ஜுவல்லர்ஸ் ஜெயராமன், கமலஹாசன் ஜுவல்லர்ஸ் கமலஹாசன், வேலவன் ஹைபர் மார்க்கெட் மேலாளர் சங்கர், முருகன் யாதவ், அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, மற்றும் கருணா, மணி, வேல்பாண்டி, அற்புதராஜ், அல்பர்ட், நெல்லையப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் பிள்ளையார் கோவில் வைக்க வேண்டும் தூத்துக்குடி பாஜக வினர் ஆணையரிடம் அவசர கோரிக்கை மனு அளித்தனர் பரபரப்பு

thoothukudileaks 29- 9-2023

Photo news by arunan journalist 

தூத்துக்குடியில் ...அண்ணா பழைய பேருந்து நிலையம் பிரதமர் நரேந்திர மோடி ஜியின் மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா பழைய பேருந்து நிலையம் ஆனது புனரமைக்கப்பட்டு 57கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு...  தயார் நிலையில்..பேருந்து நிலையம்  இப்போது திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்

ஆனையர் இடம் இன்று மனு...

 29-9-2023 இன்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரை தூத்துக்குடி தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி  ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு பாஜாகா வினர் தூத்துக்குடி மாநகராட்சி ஆனையர் தினேஷ் குமார் அவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் .



இது பற்றிய செய்தியாவது:-

ஏற்கனவே இந்த தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் இருக்கும்போது வெற்றி விநாயகர் ஆலயம் பேருந்து நுழைவு வாயில் பகுதியில் பல ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட்டுக் கொண்டிருந்தனர்.

வாக்குறுதி

அந்த வெற்றி விநாயகர் ஆலயத்தை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் ஆனது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதியதாக பேருந்து நிலையம் அமைப்பதற்கு அப்புறப்படுத்தி புதியதாக பேருந்து நிலையம் திறக்கப்படும் போது மீண்டும் அதே இடத்தில் வெற்றி விநாயகர் ஆலயம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனர்.

தீடீர் மாயம் 

அதன் படி புதிய தாக கட்டியிட பணி நடைபெற்று கொண்டு இருக்கும் போது கூட  இடம் ஒதுக்கி அப்போது கிழக்கு பகுதியில் பிள்ளையார் கோயில் முன்று ஆண்டுகளாக இருந்தது இப்போது காணவில்லை.

 இந்நிலையில் அந்த ஆலயமானது இன்னும் அமைக்கப்படாமல் பேருந்து நிலையம் ஆனது திறக்கப்பட உள்ளது 



பழையபடி மீண்டும் வெற்றி விநாயகர் ஆலயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று மாநகராட்சி ஆணையரை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .

கறுப்பு கொடி !!!

பாஜக வின் இந்த கோரிக்கையை பரிசலிக்கப்படாவிடில் பேருந்து நிலையம் திறக்கும் நேரத்தில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தும் மேலும் அறப்போராட்டங்கள் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை எடுத்துள்ளோம் என்கிறார்கள்.

கருப்பு கொடி காட்டுவோம் பரபரப்பு வீடியோ பார்க்க....!!! 

இதுபற்றி தூத்துக்குடி செய்தியாளர்கள் இடம் பேட்டி அளித்துள்ளார்கள் . 

இதில் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு தலைவர் ஓம் பிரபு, மனு அளித்தார்.

இந்நிகழ்ச்சியில்....

விவேகம் ஜி ரமேஷ் மாநில ஓபிசி அணி  செயலாளர், வேல்முருகன் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரிவு & சக்தி கேந்திர பொறுப்பாளர், குமரி சத்தியசீலன் மாவட்ட செயலாளர், ராஜேஷ் கனி கிழக்கு மண்டல தலைவர் மற்றும் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சனா. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட இந்து ஆலய பாதுகாப்பு கமிட்டி அணி தலைவர் அமைப்பாளர். மாரியப்பன் . . ஆலைய பாதுகாப்பு குழு மாவட்ட செயலாளர் ஐயப்பன் மற்றும் நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் வழக்கமான விஷயம் !!!

தூத்துக்குடி யில்‌ அண்ணா பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் பஸ் நுழைவு வாயில் பகுதியில் பிள்ளையார் கோயில் வழக்கமாக இருக்கிறது.!!!

பரபரப்பு ...

தற்போது .. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் 2019 ஆண்டு இடிக்கப்பட்டு  மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநில அரசு 

4 1/2ஆண்டுக்கு மேலாக...

 கட்டி முடிக்கப்பட்டு திறக்கும் தருவாயில் 

ஏற்கனவே இருந்த பிள்ளையார் கோயில் அங்கே இல்லை பிள்ளையார் கோவில் வைக்க வேண்டும் என கூறி தூத்துக்குடி பாஜாகா கட்சி யினர் கொடி பிடித்துள்ளது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 


புதன், 27 செப்டம்பர், 2023

திருச்செந்தூர் கோவில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு அக்டோபர் 4- தேதி சாலை மறியல் அறிவிப்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது திருச்செந்தூர் தொகுதி பற்றி கண்டு கொள்ளாத திமுக அமைச்சர்?!!!

 தூத்துக்குடி லீக்ஸ் 27-9-2023

த.சண்முகசுந்தரம் 

மூத்த பத்திரிகையாளர் 

பாக்ஸ் நியூஸ் அருணன்

திருச்செந்தூர் கோவில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு  தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் அறிவிப்பு செய்துள்ளார்கள்.



இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி மாவட்டத்தில் ...திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றன. 


நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருச்செந்தூர் கோவிலில் எடுக்கப்படும் ஒப்பந்தமுறை குப்பைகளை கையாள்வது கோவில் நிர்வாகத்தினருக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. 

கொட்டி கிடக்கும் குப்பைகள்


குறிப்பாக, பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் சுகாதார வசதிகளை பேணுவதற்கு மிகுந்த சிரமாகவே உள்ளது. 


அதிலும் குறிப்பாக பக்தர்கள் ஆங்காங்கே விட்டுச் செல்லும் பல்வேறு கழிவு பொருட்கள் மற்றும் கோவிலில் இருந்து வரும் கழிவு பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொண்டு சென்று தரம் பிரிக்காமல், ஆறுமுகநேரி அருகே உள்ள இராணிமகாராஜபுரம் கிராம பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. 


அதை தரம் பிரித்து தேவையற்ற கழிவுகளை தீயிட்டு அழிப்பதால், அதன் மூலம் வெளியேறும் புகை மண்டலம் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் பரவுவதால் பொதுமக்கள் பலருக்கு மூச்சு திணறல், நுரையீரல் சார்ந்த பல்வேறு நோய்கள் உருவாகி பாதிக்கப்படுகின்றன. 

இதை முறைப்படுத்த வேண்டும் என்று இராணிமகாராஜபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் தலைமை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு ஆணையம், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். 


இந்த நிலையில், திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தினர் தங்கள் ஊர் பகுதிகளில் குப்பைகளை கொட்டி வருவதை கண்டித்து அக்டோபர் 4ம் தேதி திருச்செந்தூர் பிரதான சாலையில் இராணிமகாராஜபுரம் ஊர் நிர்வாக கமிட்டி தலைவர் ரெங்கநாதன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 


திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக அருகில் உள்ள ஊர் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.


திருச்செந்தூர் தொகுதி பற்றி கண்டு கொள்ளாத திமுக அமைச்சர்?!!!



திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ 

 மீன் வளதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.