Thoothukudi news," "Tamil Nadu updates," "Thoothukudi cyclone updates"
தமிழக ஆளுநர் மாளிகையில் 2024 டிசம்பர்-13 தேதி தூத்துக்குடி பாண்டியாபதி தேர்மாறன் 272வது ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது..!!
தூத்துக்குடி மண்ணின் மாமன்னன் பாண்டியாபதி தேர்மாறன்
வீர வரலாறு!!!
முத்துகுளித்துறை என அழைக்கப்படும் தூத்துக்குடியில் ...
மாமன்னர் தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன்
டிசம்பர் மாதம் 1753 இல் தூத்துக்குடியில் பிறந்தார்.
கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் வரையிலான கடலோர பகுதியின்
16 ஆவது மன்னராக இருந்துள்ளார்.
பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியவர்!!!
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போரிட்ட பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்
வீரபாண்டிய கட்டபொம்மனுடன் தொடர்பு கொண்டு மன்னர் தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன் அவருக்கு உதவி புரிந்து உள்ளார்.
அப்போது...
இவரது கப்பல் மூலம் தான் வீரபாண்டிய கட்டபொம்மன் கடல் வழிப் பயணத்தை
மேற்கொண்டு உள்ளார்.
கப்பல் -ஆயுதம்!!!
ஆங்கிலேயரிடமிருந்து பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பித்த ஊமைத்துரை
பாண்டியாபதி தேர்மாறனை சந்தித்தார் ஊமைத்துரையை கடற்கரை தீவில் வைத்துப் பாதுகாத்தார்
பின்னர் காடல்குடியில் நடைபெற்ற இரகசியக் கூட்டத்தில் கலந்து கொண்டு
ஆயுதம் வழங்கும் பொறுப்பையும் ஏற்றார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள், ஊமைத்துரை போரிட்ட போது தனக்குச்
சொந்தமான கப்பல் மூலம் வெடிமருந்துகளையும், ஆயுதங்களையும் வழங்கி
பாண்டியாபதி தேர்மாறனும் போரில் பங்கேற்றுள்ளார்.
தூத்துக்குடியில்..
பனிமய மாதாவுக்கு தங்க தேர்
அந்த போரில் அவர் உயிர் பிழைத்தமைக்கு நன்றியாகப் தூத்துக்குடி பனிமய மாதா கோவிலுக்குத்
தங்கத்தேர் செய்து கொடுத்துள்ளார்.
போரில் ...
எனவே, இவர் பாண்டியபதி தேர்மாறன் என்று அழைக்கப்பட்டார்.
இறுதிவரை ஆங்கிலேயரிடம் சரணடையாமல் ... இருந்தார்.
இறப்பு!!!
மணப்பாட்டில்
21 ஜனவரி 1808 இல் இறந்தார்.
இந்திய சுதந்திர போராட்ட வீரரும், கொழும்பு முதல் கன்னியாகுமரி
வரை உள்ள முத்துக்குளித்தறையின் 16வது மன்னரும், பரத குல சாதி தலைவருமாகிய தென் கபிரியேல் தெக் குருஸ் வாஸ் கோமஸ் என்ற பாண்டியாபதி தேர்மாறன் டிசம்பர் 13ம் தேதி 272வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது
வருகின்ற 2024 டிசம்பர் 13ம் தேதியன்று காலை 11மணியளவில் தமிழக ஆளுநர் மாளிகையில் மேதகு தமிழக ஆளுநர் தலைமையில் கொண்டாடப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பாண்டியாபதி வாரிசுகள் மற்றும் சமுதாய முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு, தமிழக ஆளுநர் ரவி இடம் முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
தூத்துக்குடி லீக்ஸ் -க்காக
ரோஜா அருணன்
தகவல்:- தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு

