இஸ்லாமியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாமியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 ஜனவரி, 2022

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அதிரடி அறிவிப்பு அமைச்சர் கீதாஜீவன் தொடர்ந்து தங்களை புறக்கணித்து அவமதிப்பு செய்வதாக குற்றச்சாட்டு

 தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி மாநகர , மாவட்ட செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. 


கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில்  திமுக கூட்டணியில் அங்கம் வகித்து இரண்டு தொகுதிகளில் வெற்றிப்பெற்று கூட்டணி கட்சியான திமுக விற்கு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு  கடுமையாக உழைத்து சட்டமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களை கொண்ட தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் , அமைச்சருமான கீதாஜீவன்   தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.



2022-ல் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகரம் பகுதியில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுவதற்கு ஒரு இடம்கூட வழங்காமல் தொடர்ந்து புறக்கணித்தும் தூத்துக்குடி மாநகரத்தின் சார்பில் மாநகர நிர்வாகிகளை அழைத்து பேசாமலும் அவமதித்து வருகிறார்.


அதனால் இந்த தேர்தலில் தூத்துக்குடி மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலை தூத்துக்குடி மாநகரத்தில் புறக்கணிப்பதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.


30.01.2022 இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்ற  மசூராவில் முடிவெடுக்கப்பட்டது இதில் மாவட்ட மாநகர கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


இவன்

தமுமுக மற்றும்

மனிதநேய மக்கள் கட்சி

தூத்துக்குடி மாநகரம்

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

ஆர் எஸ் எஸ் - பிஜேபில் யில் இருக்கும் இஸ்லாமியர்களை ஊரை விட்டு ஓதுக்க நினைக்கும் இஸ்லாமியர்களுக்குகாயல் அப்பாஸ் பதிலடி!!! !

thoothukudileaks 26-09-2021


ஆர் எஸ் எஸ் , பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்களை ஊரை விட்டு ஓதுக்க நினைக்கும் இஸ்லாமியர்களுக்கு முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.



 ஆர் எஸ் எஸ், சிறுபான்மை அமைப்பான முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்திய பாரத நாட்டுக்காகவும், மக்கள் நலனுக்காவும் மிகவும் சிறப்பாக பணிகளை அனைவரும் செய்து வருகிறோம் . 


இந்த நிலையில் மத வெறி பிடித்த இஸ்லாமியர்கள் ஆர் எஸ் எஸ் , பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்களை கடுமையான விமர்சனம் செய்து வருகீறீர்கள் என்பதை அறிய முடிகிறது. உங்களின் விமர்சனத்திற்கு நாங்கள் ஓரு போது கவலை பட போவதில்லை. ஏனென்றால் நாங்கள் இதை எல்லாம் கடந்து வந்து விட்டோம் ஆகவே உங்களின் இது போன்ற விமர்சனம் எங்களை ஓரு போதும் அடக்கி விட முடியாது ?


ஆர் எஸ் எஸ், பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று எந்த அடிப்படையில் விமர்சனம் செய்து வருகிறீர்கள். ஆர் எஸ் எஸ், பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்கிறாதா இல்லை ?அப்படி இருக்க இஸ்லாமியர்கள் ஆகிய நீங்கள் சொல்வது இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான சொல் என்று உங்களுக்கு தெரியுமா - தெரியாதா ? 


ஆர் எஸ் எஸ் , பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்களை ஊரை விட்டு ஓதுக்கி வைக்க நினைக்கும் இஸ்லாமியர்களுக்கு நாங்கள் கேட்கும் கேள்வி எங்களது குடும்பதார்களை ஊரை விட்டு நீங்கள் ஓதுக்கி வைப்பதற்கு நாம் ஓன்று இஸ்லாமிய மன்னர் நாட்டில் குடியிருக்க வில்லை மற்றும் வாழ வில்லை ஏனென்றால் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது இந்தியா என்கின்ற ஜனநாயக நாட்டில் எந்த ஊரையும் எனது ஊர் என்று சொல்லி கிடலாம் தவிற யாரும் சொந்தம் கொண்டாட. முடியாது ? அப்படி இருக்க எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க உங்களுக்கு என்ன உரிமை மற்றும் அதிகாரம் இருக்கிறது ? இது போன்ற பேச்சுக்கள் உங்களின் அறியாமையை காட்டுகிறது . 


ஆர் எஸ் எஸ் , பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்களை ஊரை விட்டு ஓதுக்க வேண்டும், ஜமாத்தை விட்டு நீக்க வேண்டும் என்று சொல்லும் இஸ்லாமியர்கள் உங்களால் முடிந்தா? உங்க ஊரின் தலைமை ஜமாத் லட்டர் பேட்டில் ஆர் எஸ் எஸ் , பிஜேபி யில் இருக்கும் எங்களை ஊரை விட்டு ஓதுக்கிறோம் என்றும் ஜமாத்தை விட்டும் நிக்கு கிறோம் என்று ஜமாத் நிர்வாகிகள் அனைவரும் கை எழுத்துயிட்டு எங்களிடம் கொடுத்தால் நாங்கள் எந்த வித மறுப்பு தெரிவிக்காமல் ஜமாத் நிர்வாகிகள் ஆகிய நிங்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டு படுகிறோம் ? 


இதை எல்லாம் விட்டு விட்டு ஊரை விட்டு ஓதுக்கி வைக்கிறோம், ஜமாத்தை விட்டு நீக்கிறோம் , என்று இந்திய சட்டத்திலும் இஸ்லாமிய மார்க்கத்திலும் இடம் இல்லாத ஓன்றை நீங்கள் செய்வதன் மூலம் ஆர் எஸ் எஸ் , சேர்ந்த இஸ்லாமியர்கள் யாருயேனும் பாதிக்க பட்டால் இதில் சம்பந்த பட்ட அனைவரும் மீதும் சட்ட ரீதியாக கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிட படுவீர்கள் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்து கொள்கிறோம். 


இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் ஆதாயம் தேடுவதற்க்காக வேண்டி ஆர் எஸ் எஸ் பிஜேபி யில் யில் இருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று அப்பாவி இஸ்லாமிய மக்களிடையே எங்களை போன்ற சமுதாய வாதிகளை சித்தரித்து அவதூறுகளை பரப்பி அதன் மூலம் ஆதாயம் தேடி வருகிறார்கள். நாங்கள் எதிரானவர்கள் தான் யாருக்கு என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் இந்து முஸ்லிம் ஓற்றுமை சீர் குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளுக்கும் , இஸ்லாமிய சமுதாய பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுவர்களுக்கும், சட்ட.த்திற்கு விரோதமாக தொழில் செய்து வருவோர்களுக்கும், நம் இந்திய பாரத நாட்டில் இருந்து கொண்டு அன்னிய நாட்டுக்கு ஆதரவாக பேசுவோர்களுக்கும் , நாங்கள் எப்போதும் எதிரானவர்கள் தான் அதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை . ஆனால் இஸ்லாமிய மார்க்கத்திற்க்கும் , ஓட்டு மொத்தம் இஸ்லாமியர்களுக்கும் ஓரு போதும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை . ஓரு சில இஸ்லாமியர்கள் செய்யும் தவறுகளை சுட்டி காட்டிருகின்றோம் .இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.