வியாபாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாபாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 அக்டோபர், 2025

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கி வியாபாரிகள் விரக்தி

தூத்துக்குடி, அக்.22:

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்து வரும் நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் சரியாக வடியாமல் தேங்கி நிற்பதால் வியாபாரிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி பிரெஞ்சு சாப்பல் சாலையில் தீவிர பாதிப்பு

மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட பிரெஞ்சு சாப்பல் சாலையில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மொத்த வியாபாரிகளின் கடைகள் அதிகம் அமைந்துள்ள இந்த சாலையில் நான்கு பள்ளிகளும், ஒரு தேவாலயமும் உள்ளன.

thoothukudileaks


மழைநீர் தொடர்ந்து தேங்கி நிற்பதுடன், நீர் வடிந்த பின்னரும் சாலையில் கழிவுகள் குவிந்து கிடப்பதால் நடந்தோ, வாகனங்களிலோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வியாபாரமும் கல்வியும் பாதிப்பு

சிறு வியாபாரிகள் சரக்குகள் வாங்க வருவதற்கு தயங்கும் நிலை உருவாகியுள்ளது. பள்ளிச் செல்லும் குழந்தைகள் சேறு சகதியில் நடக்கும்போது கீழே விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

வியாபாரிகளின் கோரிக்கை

வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்து, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

"வரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். தற்போதைக்கு குறைந்தபட்சம் சாலையில் குவிந்துள்ள சேறு சகதிகளை அப்புறப்படுத்த வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையையும், வியாபாரத்தையும் கடுமையாக பாதித்துள்ள இந்த பிரச்சினைக்கு மாநகராட்சி நிர்வாகம் விரைந்து தீர்வு காண வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


திங்கள், 9 டிசம்பர், 2024

மத்திய-மாநில அரசை கண்டித்து வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று நெல்லையில் ரெயில்வே நிலையம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tamil Nadu updates,

செய்தி:-அருணன் 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நெல்லை தூத்துக்குடி வியாபாரிகள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதுபற்றி செய்தியாவது:-


மத்திய மாநில அரசுகளை கண்டித்து!!!

கடை வாடகைக்கு மத்திய அரசு 18% ஜிஎஸ்டி
விதித்திருப்பதையும் மாநில அரசு தொழில் உரிமை
கட்டணத்தை உயர்த்தி இருப்பதையும், மத்திய மாநில அரசுகள்
ஆன்லைன் வர்த்தகத்திற்கு சாதகமாகவும்சில்லறை வணிகத்திற்கு
எதிராக செயல்படுவதை கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இன்று... 

(10.12.2024 )திருநெல்வேலி இரயில் நிலையம் காமராஜர் சிலை முன்பு காலை 10 மணியளவில் நெல்லை மற்றும் தூத்துக்குடி சங்க வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

M.பத்ரு ஜமால்
நெல்லை மாவட்ட தலைவர் 

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் தலைவர் தெர்மல் ராஜா செயளாலர்  ஜவகர் பொருளாளர் திரு நவமணி தங்கராஜ் இனைச் செயளாலர் தளபதி செபஸ்தியான்   தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தின் பொருளாளர்  விக்னேஷ் மற்றும் கிளைச் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


 






 ஆர்ப்பாட்டத்தில்...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சங்க வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் 

ஞாயிறு, 10 நவம்பர், 2024

தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய வியாபார சங்க நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

thoothukudileaks 10-11-2024

Photo news by

Arunan journalist 

கடந்த வாரம் தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய வியாபார சங்க நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தனர்.



இது பற்றிய செய்தியாவது:-

பொதுக்குழு கூட்டம் 

தூத்துக்குடி மாநகர வர்த்தகர்களின் மத்திய சங்க தேர்தல் மற்றும் வருடாந்திர பொதுக்குழுகூட்டம் 

10.11.2024 ஞாயிறு 4.00 மணிக்கு மத்திய சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

புதிய நிர்வாகிகளை வாழ்த்தி முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் சால்வை அணிவித்தார்.



 இக் கூட்டத்தில் கடந்த 4-11-2024 அன்று தூத்துக்குடி மத்திய சங்க வியாபாரிகள் தேர்தல் நடைபெற்றது இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார் கள்


அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!!

வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளை எம்.சொக்கலிங்கம் B.Sc.,B.L. 

தேர்தல் அலுவலர் / சங்க சட்ட ஆலோசகர் 


"மத்திய சங்க தலைவர், ஜவஹர் பொதுச்செயலாளர் தெர்மல் ராஜா மற்றும் பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்ற தாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்"


இந்நிகழ்ச்சியில்... முன்னாள் தலைவர் விநாயகமூர்த்தி மற்றும் கிளை சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




சிறப்பு அழைப்பாளாராக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அதன் பின்னர் சங்க வரவு செலவு கணக்கு சங்க கட்டிடம் பத்திரம் ஆகியவற்றை முன்னாள் தலைவர் விநாயகமூர்த்தி புதியதாக தேர்வு செய்ய பட்ட நிர்வாகிகள் இடம் ஒப்படைத்தார்.

ஒப்படைப்பு 


சங்க கட்டிடம் மேல் மாடி எழுப்ப வேண்டுகோள்!!!

புதிய நிர்வாகிகளான தலைவர் செயலாளர் பொருளாளர் உங்களின் கடமையாக  நீங்கள் சங்க கட்டிடத்தில் மேல் மாடியில் கட்டிடம் கட்ட வேண்டும்  அதற்கான முயற்சியில் இப்போதிருந்தே ஈடுபடுங்கள் இதில் நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் தான் 9 வருடம் பதவியில் இருந்த போது என்னால் முடிந்ததை செய்து முடித்தேன் என கேட்டுக் கொண்டார்.

மாநில தலைவர் வெள்ளையன் மறைவுக்குப் மவுன அஞ்சலி





பொதுக்குழு கூட்டம் ஆரம்பித்ததும்

முன்னதாக தன்னிநிகரில்லா மாநில வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் 

வெள்ளையன் மறைவுக்குப் மூன்று நிமிடங்கள் அனைவரும் எழுந்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

நன்றி தெரிவிப்பு 

கூட்டம் நிறைவில் நெகிழ்ச்சி உடன் மத்திய வியாபாரிகள் சங்கம் பொது செயலாளர் தெர்மல் ராஜா பொதுக்குழு கூட்டத்தில்  கலந்து கொண்ட கிளை சங்க நிர்வாகிகள் வியாபார சங்க உறவு கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.












திங்கள், 4 நவம்பர், 2024

பரபரப்பாக நடைபெற்ற தூத்துக்குடியில் வியாபாரிகள் சங்கம் தேர்தல் பொது செயலாளராக தெர்மல்நகர் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெர்மல் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்

தூத்துக்குடி லீக்ஸ்

5-11-2024 

 photo news by

Arunan journalist 

தூத்துக்குடியில் உள்ள 60  வியாபாரிகள் சங்கங்கள் கொண்ட ஒருங்கிணைத்த சங்கமான தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்திட நேற்று 04.11.24 காலை 10 மணிமுதல் மதியம் வரை சட்ட ஆலோசகர் . M. சொக்கலிங்கம்  அறிவிப்பு கொடுத்திருந்தார்.




பரபரப்பு!!!

தூத்துக்குடியில் வியாபாரிகள் நிர்வாகிகள் அப் பகுதியில் வர தொடங்கியதும் ...

காலை 9.30 மணிமுதல் மணி நகரில் உள்ள தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் பரபரப்பு ஏற்பட்டது.



இரு அணிகளும் மோதல்!!!

இரண்டு அணிகளாக வந்து தேர்தல் போட்டியில் களம் இறங்கினார் கள் இரு நாட்களாக முன்பாக வியாபாரிகள் மத்தியில்  ஆதரவு கேட்டு ஒரு வித பரபரப்பு உருவாகியது.

 

 இதில் தெர்மல் ராஜா  அணியான  வெற்றி அணியின் தலைவராக . ஜவஹர் , பொது செயலாளராக தெர்மல் ராஜா பொருளாளராக விக்னேஷ் 

தூத்துக்குடியில் 48 கிளை சங்கங்கள் வேட்பு மனு தாக்கல்!!!

தெர்மல் ராஜா  அணி இவர்களுக்கு ஆதரவான  48 கிளை சங்க நிர்வாகிகளும் பெரும் திரளாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்கள்.

அமைதியாக வாபஸ் 

 ஏற்கனவே பொறுப்பில் இருக்கும் விநாயகமூர்த்தி  அணி அதனை பார்த்ததும் அமைதியாக மனு தாக்கல் செய்யாமல் அங்கிருந்து சென்றனர்.   


வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளான நேற்று வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத காரணத்தால்...

தலைவர் 


தலைவர் ஜவஹர் 

 புதிய தலைவராக பாளை ரோடு முனிசிபல் காம்ப்ளெக்ஸ் 

சங்க செயலாளர் ஜவஹர் 


செயலாளர் தெர்மல் ராஜா 


செயலாளர் 

தெர்மல் ராஜா 

 பொது செயலாளராக  தெர்மல்நகர் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெர்மல் ராஜா 

பொருளாளர் விக்னேஷ் 



பொருளாளர் விக்னேஷ் 

  பொருளாளராக அண்ணா பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் விக்னேஷ்  போட்டியின்றி தேர்ந்தெடுக்க பட்டார்கள். 



இவர்களுக்கு அனைத்து கிளை சங்க நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தார்கள். 

தேர்தல் சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம் 


தேர்வு பெற்ற நிர்வாகிகள் அனைவருக்கும்  தூத்துக்குடி லீக்ஸ் சார்பில் அவர்களின் மக்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!!! 



வியாழன், 24 அக்டோபர், 2024

30 ஆயிரம் கொடுத்து மூன்று கிடா ஆடுகளை வாங்கிய அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி அருகே புதிதாக ஆடு சந்தை ஆரம்பம்

 ▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃

24--10-2024  

photo news 

by sunmugasunthram Reporter 


தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடு விற்பனை செய்யும் சந்தைகள்  எட்டையாபுரம்,   மற்றும் புதியம்புத்தூர், நாசரேத், ஏரல் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. 




தூத்துக்குடி, விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் ஆடுகள் வாங்குவதற்கு எட்டையாபுரம் மற்றும் புதியம்புத்தூர் செல்கின்றன.???


புதிய ஆட்டு சந்தை !!!

     தற்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி இசிஆர் சாலை கோமஸ்புரம் பகுதியில் புதிதாக ஆடு ,நாட்டுகோழி, விற்பனை சந்தை உருவாக்கப்பட்டது .

அமைச்சர் கீதா ஜீவன்!!!

புதியதாக உருவான ஆட்டு சந்தையை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி வைத்து சந்தையை துவக்கி வைத்தார்.

மூன்று கிடா ஆடுகளை வாங்கிய அமைச்சர் கீதா ஜீவன்!!!!

 இதில் தொடர்ந்து ஆட்டு வியாபாரிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சந்தையில் ரூ 8500, ரூ.10,500, ரூ. 11,000 ஆகிய 3 கிடா ஆடுகளை 30 ஆயிரம் விலைக்கு ஆடுகளை வாங்கினார் அமைச்சர் கீதாஜீவன் . 



ஆட்டுச் சந்தையின் திறப்பு விழாவிற்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை வகித்தார். 


ஆடு இறைச்சி வியாபாரிகள் கருத்து !!!

புதன் மற்றும் வெள்ளிகிழமை வாரத்தில் இரண்டு நாட்கள் செயல் படும் 

சுமார் ஒன்றரை ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சந்தை வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதன் மூலம் தூத்துக்குடி விளாத்திகுளம் குளத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்தும் வாடகைக்கு வண்டி பிடித்து பிற இடங்களுக்கு கொண்டு செல்லக்கூடிய கால சூழல் பண விரையம் ஆகியவை தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது என ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.


 முதல் நாளில் ஏராளமான வியாபாரிகள் ஆடு, நாட்டுகோழி, சேவல் போன்றவற்றை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டனர். 

 

ஆட்டுச் சந்தையின் உரிமையாளர் அம்பாசங்கர் !!!!

 தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் மட்டுமின்றி திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களுக்கு ஆட்டு இறைச்சி வாங்குவோர் நீண்ட தூரம் செல்லக்கூடிய சூழல் தவிர்க்கப்படும் எனவும் இச்சந்தையில் விரைவில் ஆட்டு வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவுள்ளது என ஆட்டுச் சந்தையின் உரிமையாளர் அம்பாசங்கர் தெரிவித்தார்.

இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, கவுன்சிலர் தெய்வேந்திரன், சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் வினோத், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மாநகர இறைச்சி கடை உாிமையாளர்கள் சங்க தலைவர் வேல்சாமி, செயலாளர் பொன்ராஜ், திமுக தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் மாாிச்செல்வம், மாணவரணி ரமேஷ், கணபதி நகா் கார்த்திசன், கிளைச்செயலாளர்கள் உலகநாதன், ராமசந்திரன், ஆசைதம்பி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.





செவ்வாய், 1 அக்டோபர், 2024

புதிய நிர்வாகிகள் தேர்வு தூத்துக்குடி பிரையன்ட் நகர் வியாபாரிகள் நல சங்கம் பொதுக்குழு கூட்டம்

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

2-10- 2024 

photo news 

Arunan journalist 

தூத்துக்குடி பிரையன்ட் நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இது பற்றிய செய்தியாவது:-

பொதுக்குழு கூட்டம் 

தூத்துக்குடி  பிரையண்ட் நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் 

நேற்று 01.10.2024 அன்று பிரையண்ட் நகர் OMM மஹாலில் நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள் தேர்வு!

தூத்துக்குடி பிரையண்ட் நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின்

பொதுக்குழு கூட்டத்தில் அப் பகுதி வியாபாரிகள் நலச்சங்கத்தில் புதிய தலைவர் செயலாளர் பொருளாளர் புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

m s a ஞான செல்வன் எம்.ஏ
தலைவர் 



K k S அழகு மந்திரி
செயலாளர் 


K N மாரியப்பன் 
பொருளாளர் 

நன்றி தெரிவிப்பு!!

புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்ய பட்ட தலைவர் M.S.A.ஞானசெல்வன் MA., 
செயலாளர் K.K.S.அழகுமந்திரி

பொருளாளர் K.N.மாரியப்பன் ஆகியோர் 

தூத்துக்குடி பிரையண்ட் நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தில்..

எங்களை ஒரு மனதாக தேர்ந்து எடுத்த

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும்

நன்றி தெரிவித்தனர்.






புதன், 3 ஜூலை, 2024

தொடர் திருட்டு தூத்துக்குடி காவல்துறை திருடனை கண்டு பிடிக்க அப்பகுதி வியாபாரிகள் வேண்டு கோள்!!

 

தூத்துக்குடியில் ஒரே பகுதியில் தொடர் திருட்டு  சம்பவங்கள் தூத்துக்குடி காவல்துறை திருடனை கண்டு பிடிக்க அப்பகுதி வியாபாரிகள் வேண்டு கோள்!!

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் மெயின் ரோட்டில் உள்ள சிவதர்ஷிகா பிராய்லர் கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை திறந்து ரொக்கப்பணம் 3500/- ரூபாயை திருடி சென்று உள்ளார்கள்.



 சென்ற 15 நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் பழக்கடையில் திருட்டு சம்பவம் நடந்தது குறித்து விசாரணை நடந்து வரும் நேரத்தில் மற்றொரு திருட்டு சம்பவம் நடந்தது


 வியாபாரிகள்,வணிகர்கள், பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது


 இந்த இரண்டு கொள்ளை சம்பவத்திற்கு உரியவர்களை காவல்துறையினர்கள் விரைவில் கைது செய்ய வியாபாரிகள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.

ஞாயிறு, 9 ஜூன், 2024

தூத்துக்குடியில் சிகரெட் திருடன் நள்ளிரவில் ஜுஸ் பார்க் கடையை உடைத்து திருட்டு தூத்துக்குடி காவல்துறை அதிகாரியிடம் புகார்

▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 8-6-2024

தூத்துக்குடியில் சிகரெட் திருடன் நள்ளிரவில் ஜுஸ் பார்க் கடை பூட்டை உடைத்து திருட்டு தூத்துக்குடி காவல்துறை அதிகாரியிடம் புகார் 



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில்  சிகரெட் திருடன் ஜுஸ் பார்க்ல புகுந்து திருடியதாக காவல்துறையில் புகார் 

தூத்துக்குடி மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் நல சங்க உறுப்பினர் K.S.புரூட்ஸ் & ஜூஸ் பார்க் உரிமையாளர் சதீஷ்குமார் சின்னகன்னுபுரத்தில்  ஜுஸ் பார்க் கடைநடத்தி வருகிறார் 

நள்ளிரவில் திருட்டு!!

நேற்று நள்ளிரவில் 08.06.24

   அவரது ஜுஸ் பார்க் கடையில் புகுந்து சிகரெட் பாக்கெட்களை அள்ளி சென்று உள்ளான்

 திருடப்பட்ட சிகரெட் மதிப்பு ரூபாய் 2400  மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 4000 திருடி சென்றுள்ளான்.

அதிர்ச்சி!!!

மறுநாள் காலையில் கடை திறக்க வந்த கடை உரிமையாளர் சதீஷ் குமார் தனது கடை பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சிகரெட் மற்றும் பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.


இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் அளித்தார்



 தூத்துக்குடி மத்திய சங்கத்திற்கு தகவல் கிடைத்தவுடன் மத்திய சங்க இணைச்செயலாளர் தெர்மல் சொ.ராஜா சம்பவ இடத்திற்கு  வந்தார்.  


தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது 

   தூத்துக்குடி மத்திய சங்க இணைச் செயலாளரும் மாநில இளைஞரணி அமைப்பாளருமான  தெர்மல் சொ. ராஜா, புது பஸ் ஸ்டாண்ட் சங்க செயலாளர் தளபதி செபஸ்தியான் மற்றும் அண்ணா பேருந்து நிலைய சங்க பொருளாளர் விக்னேஷ் மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் நல சங்கம்செயலாளர்பா.காளிதுரை  மீளவிட்டான் சங்க பொருளாளர் ஏனோஸ் ஆகியோர் உடன் சென்றனர் 



தற்போது தூத்துக்குடி காவல்துறை சிகரெட் திருடனை வலை வீசி தேடி வருகின்றனர்.


 


                                  

ஞாயிறு, 2 ஜூன், 2024

தூத்துக்குடி மீளவிட்டான் வியாபாரிகள் நல சங்க ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மீளவிட்டான் வியாபாரிகள் நல சங்க ஆலோசனை கூட்டம்




இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மீளவிட்டான் மெயின் ரோடு சுற்று வட்டார வியாபாரிகள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சங்க நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ள 

நேற்று 2-6-2024 மாலை நடைபெற்றது .


இக் கூட்டத்தில் 

தலைவர் ரவி சேகர், துணை தலைவர் அந்தோணி  தலைமையில் பொது செயலாளர் காளி துரை,பொருளாளர் ஏனோஸ்,சட்ட ஆலோசகர் அகஸ்டின்   ஆகியோர் வந்து இருந்தனர் 


கூட்டத்தில் சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்தார்கள்.

               🙏

வெள்ளி, 31 மே, 2024

சமீப காலமாக நமது வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.அதிமுக முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் ஆதங்கம்

 

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 1-6-2024

செய்தி புகைப்படங்கள்  

த.சண்முகசுந்தரம்

முத்த பத்திரிகையாளர் 


சமீப காலமாக நமது வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். 

ஆகவே...

வியாபாாிகள் அனைவரும் ஓற்றுமையாக இருக்க வேண்டும். தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.



இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி மாநகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிா்வாக கமிட்டி கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

நகர வர்த்தகர்களின் சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார்

. வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாாிகள்சங்க செயலாளரும் பாளைரோடு முனிசிபல் காம்பளக்ஸ் சுற்றுவட்டார ஐக்கிய சங்க தலைவரும் தூத்துக்குடி நகர வா்த்தகர்களின் மத்திய சங்க கௌரவ ஆலோசகரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார் கூட்டத்தில் அவர் பேசுகையில்... 

     இந்த சங்கம் மிகவும் பாரம்பாிய பழைமையான சங்கமாகும்இதில் உள்ளடக்கிய 60க்கும் மேற்பட்ட கிளைசங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.


 இவற்றையெல்லாம் ஓருங்கிணதை்து நல்லமுறையில் எல்லோரும் பணியாற்றி வருகிறோம்.


 ஓவ்வொரு பகுதியிலும் ஓவ்வொரு வகையில் சமீப காலமாக நமது வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.  


அதற்கு நாமும் உதவி கரமாக இருந்து வருகிறோம்.


 ஓரு சிலர் அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக கருத்து வேறுபாடோடு இருந்தாலும்  நாம் அனைவரும் வியாபாாிகள் என்பதை கருத்தில் கொண்டு ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும். 


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்வார்கள் அதற்கேற்றால் போல் நம்முடைய பணிகளும் செயல்களும் அமைய வேண்டும்.


 இப்போது உள்ள காலக்கட்டத்திற்கு ஏற்றால் போல் நாமும் இருக்க வேண்டும். 


எல்லா வகையிலும் சங்கத்தின் வளர்ச்சிக்கும் சிறுமற்றும் நடுத்தர என அனைத்து தரப்பு வியாபாாிகளுக்கும் எப்போதும் நான் துணையாக இருப்பேன். என்று 

சி த செல்லப்பாண்டியன் பேசினார். 

மாநில துணைச்செயலாளர் தினகரன், சங்க செயலாளர் பாஸ்கா், இணைச்செயலாளர் தெர்மல்ராஜா, பொருளாளர் ராஜலிங்கம், பல்வேறு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் முத்துக்கனி, மாாியப்பன், வேல்முருகன், உள்பட பலசங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

ஞாயிறு, 5 மே, 2024

தூத்துக்குடியில் குறிஞ்சிநகர் சுற்றுவட்டார சிறுதொழில் மற்றும் வணிகர் நலச்சங்கம் வணிகர் தின விழா சிறப்பு பொதுக்கூட்டம்

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

5-5-2024

தூத்துக்குடி குறிஞ்சிநகர் சுற்றுவட்டார சிறுதொழில்

மற்றும் வணிகர் நலச்சங்கம் வணிகர் தின விழா சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:- 


மே 5 வணிகர் தினவிழா

சிறப்பு பொதுக்குழு கூட்டம்

வணிகர் தின விழாவை முன்னிட்டு சங்கத்தின் சிறப்பு

பொதுக்குழுகூட்டம்   05.05.2024 இன்று

மாலை

6மணியளவில்  

தூத்துக்குடி குறிஞ்சிநகர் சுற்றுவட்டார சிறுதொழில்

மற்றும் வணிகர் நலச்சங்க அலுவலகத்தில் வைத்து

நடைபெற்றது.




சங்கத்தலைவர் S.அமல்ராஜ் தலைமையில் சங்கச் செயலாளர் தங்கமணி முன்னிலையில் பொருளாளர் தேன்ராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்





சங்க தலைவர் அமல்ராஜ் பேசுகையில் தங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் சங்கம் திறன் பட செயல்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் 

பின்பு சங்கச் செயலாளர் தங்கமணி கோடைகால சிறப்பு சுற்றுலா ஏற்பாடு பண்ணி உள்ளது பற்றியும் அவர்கள் கருத்துக்களை கேட்டுறிந்தார்.



பின்பு வந்திருந்த சங்க உறுப்பினர்கள் சங்க வளர்ச்சிக்கு தங்கள் மேலான கருத்துக்களையும், எடுத்துரைத்தனர்




இந்நிகழ்ச்சியில்..


துணைத்தலைவர்கள்

ஜாண் நவமணி டேவிட்

D. முருகேசன்

S. சந்திரசேகர்

L. ரவீந்திரன்

துணைச்செயலாளர்கள்

P. துரைமுருகன்

M. ரவிசங்கர்

S.மாரியப்பன்

 S. முத்துச்செல்வி மற்றும் ஏராளமான சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் 

நிகழ்ச்சியில் நிறைவாக துனைத்தலைவர் ஜான் நவமணி டேவிட்  நன்றியுரையாற்றினார் 

சஙக சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு விருந்து ஏற்பாடு செய்ய ப்பட்டிருந்தது.



வியாழன், 25 ஏப்ரல், 2024

தூத்துக்குடியில் வியாபாரிகள் நலச்சங்கம்சார்பில் பயணிகள் நிழல்பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் பொது மக்கள் வாழ்கின்றனர்தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இளைஞரணி அமைப்பாளருமான தெர்மல் சொ. ராஜா பங்கேற்பு

▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 26-4-2024

News by arunan journalist 

தூத்துக்குடியில் வியாபாரிகள் நலச்சங்கம்சார்பில் பயணிகள் நிழல்பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் பொது மக்கள் வாழ்கின்றனர்தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இளைஞரணி அமைப்பாளருமான தெர்மல் சொ. ராஜா பங்கேற்றார் .



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடுமையான வெயில் தாக்கம் பொதுமக்களை ரொம்ப வாட்டி வருகிறது 

சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் குடி தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை 

நம் மக்கள் நலனுக்காக அங்காங்கே அரசியல் கட்சிகள் குடி தண்ணீர் பந்தல் திறந்தபடி உள்ளார்கள்.

அதேபோல் தூத்துக்குடி வியாபாரிகளும் தங்கள் பகுதியில் குளிர்ந்த தண்ணீர் மண் பானை வைக்க தொடங்கி உள்ளார்கள்.இது ரொம்ப வரவேற்க தக்கது.



நம் நகர் வியாபாரிகள்!!

 தூத்துக்குடியில் 

 எம் சவேரியார் புரம் ஸ்ரீ கணேஷ் நகர் ராஜீவ்நகர் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக

எம் சவேரியார் புரம் பேருந்து நிறுத்தத்தில்

தண்ணீர் பந்தலும் பயணிகள் நிழல் பந்தலும் அமைக்கப்பட்டு

இன்று 25 வது நாள்

 அதை முன்னிட்டு 25-4-2024 காலை 9 மணியளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சங்கத் தலைவர் பெ வேல்முருகன்  தலைமையில்  மத்திய சங்க செயல் வீரரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இளைஞரணி அமைப்பாளருமான தெர்மல் சொ. ராஜா  முன்னிலையில் பங்குத்தந்தை 

தா. செல்வசார்சு அவரால் மேலும் குளிர்பானங்கள் தண்ணீர் மண் பானை கள் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில்

சங்க பொருளாளர் மணி, இணைச்செயலாளர் R.மணிகண்டன் 

செயற்குழு உறுப்பினர்கள்

சுடலைமணி, சேர்மதுரை, ஜெயபால் ராஜ், இருதயராஜ், கணேசன், முருகன், வீரப்பதாஸ், சாமுவேல்

ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு

குளிர்பானங்கள்

தர்பூசணி பழங்கள்

வழங்கினார்கள். 

வெள்ளி, 3 நவம்பர், 2023

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் தலைவராக சி.த.சு.ஞான்ராஜ் பதவியேற்றார்

thoothukudileaks 4-11-2023

photo news by sunmugasunthram 

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் தலைவராக சி.த.சு.ஞான்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.






     தூத்துக்குடி மாநகராட்சி மையப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் தனியார் காமராஜர் காய்கனி மார்க்கெட் தலைவராக சி.த.சுந்தரபாண்டியன் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.

     இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர்   இயற்கை எய்தினார் 

அதையொட்டி நேற்று 3-11-2023 அன்று 

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் இயக்குநர்கள் கூட்டம் நடைபெற்றது

இதில் மறைந்த சுந்தரபாண்டியன் மகன் சி.த.சு. ஞான்ராஜ் தலைவராகவும், சி.த.சு மணிராஜ் செயலாளராகவும், செபத்தையாபுரம் பிடி பரமசிவன் பொருளாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



பினபு முன்னாள் தலைவர் சி.த.சுந்தரபாண்டியன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் புதிய நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு கம்பெணியின் இயக்குநர்கள் பங்குதாரர்கள் வாழ்த்து தெரிவித்தார் கள்.


 இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர் சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ், மார்க்கெட் மேலாளர் நியூட்டன், துணை மேலாளர் ரவி, தொழிலதிபர்கள் பொ.தி பொன்ராஜ், பிரேம் ஆனந்த், பிச்சமுத்து, பிரபாகர், செல்வகுமார், ஜெயபாண்டி, ஜெயராஜ், மற்றும் ரவி, ராஜன், தாளமுத்து, ஜெபஸ்டின், கோயில்ராஜ், ராதா, சந்தோஷ், ஜெஸ்வின், சாம், உள்பட வியாபாரிகள் தொழிலாளர்கள் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

திங்கள், 30 அக்டோபர், 2023

வியாபார கடைகள் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் ஆதரவு உடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் வியாபார கடைகள் ஏலம் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் பார்வையாளாராக பரபரப்புடன் வியாபாரிகளும் கலந்து கொண்டதால் பரபரப்பு

 thoothukudileaks 30/10, 2:21 PM] 

அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் இன்று (30-10-2023) காலை 11 மணியளவில் நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:-

வியாபார கடைகள் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் ஆதரவு உடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் வியாபார கடைகள் ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் பார்வையாளாராக  வியாபாரிகளும் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

ந.க.எண் எச்1/1240/2023

15) தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றத்தின் 30.06.2023ம் தேதிய 342 ஆம் எண் தீர்மானத்தில்,

சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்துநிலையத்தில்

(பழைய பேருந்து நிலையம்) கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகளுக்கான குத்தகை

உரிமத்திற்கு (உரிமம் ஒப்படைக்கும் நாள் முதல் மூன்றாண்டு காலத்திற்கு) பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி கோர அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 09.10.2023 அன்று பொது ஏலம்

மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடைபெறும் என தெரிவித்து அறிவிப்பு தினசரி நாளிதழில் 24.09.2023 அன்று வெளியிடப்பட்டது.

அதன்பேரில் 09.10.2023 ( திங்கள்கிழமை ) அன்று மாலை 2 மணி முதல் 3.00

மணி வரை மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏலம்

கோர எந்த நபரும் விண்ணப்பிக்காத நிலையில் மாலை 3.30மணியளவில்

ஒப்பந்தப்புள்ளிதாரர்கள் முன்னிலையில் வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகள் துணை ஆணையர் அவரால் திறக்கப்பட்டது. மேற்படி ஒப்பந்தப்புள்ளிகள்  கடைகளுக்கு வரப்பெற்றுள்ளது.

திமுக கவுன்சிலர்கள் 

அதிமுக கவுன்சிலர்கள் 


தூத்துக்குடியில் புதியதாக கட்டப்பட்ட ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் 120 கடைகள்  

அண்ணா பேருந்து நிலையத்தில் (பழைய பேருந்து நிலையம்) தரை தளம் மற்றும்

மூன்று தளத்துடன் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாக கடை உரிமத்திற்கு 

ஒப்பந்தப்புள்ளி வரப்பெற்றுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியால்

நிர்ணயம்

செய்யப்பட்ட ஏலம்

மற்றும்

ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டது 

ஆரம்ப மாத வாடகை

வரப்பெற்ற

ஒப்பந்தப்புள்ளியில்

குறிப்பிடப்பட்டுள்ள

மாத வாடகை தொகை மற்றும் ரூ.காப்புத்தொகை செலுத்திப் ஒப்பந்தப்புள்ளி வழங்கியவர்

விவரம் தீர்மானத்தில் சமர்ப்பிக்கப்பட்டது 

 மேலும் மேற்படி 1 முதல் வரிசை எண்.46 வரையிலான (வரிசை எண்.12ஐ

தவிர்த்து) கடைகளின் உயர்ந்தபட்ச கேள்விதாரர்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக

மாமன்ற அனுமதி பெற்று எடுக்கப்படும் நடவடிக்கைக்கான கால விரயத்தை தவிர்க்கும் விதமாகவும், கால விரயத்தால் ஏற்படக்கூடிய நிதி இழப்பினை தவிர்க்கும் விதமாகவும்,

பேருந்து நிலையம் 08.10.2023 அன்று திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவும், அவசர அவசியம் கருதி இம்மாநகராட்சி வருவாயை கருத்தில் கொண்டு

மாமன்றத்தின் அனுமதியை எதிர்நோக்கி மாண்புமிகு மேயர் அவரிடம் முன்அனுமதி‌ பெற்று நடவடிக்கை மேற்கொண்டதை மாமன்றம் அங்கீகரித்துள்ளது எனவும் மேற்படி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் (பழைய பேருந்து

நிலையம்) உள்ள வணிக வளாக கடைகளில் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி

கோரியது போக மீதம் உள்ள கடைகளுக்கு ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி கோர மாமன்றத்தின் அனுமதி வேண்டப்பட்டு நிறைவேற்ற படுகிறது.

மேற்படி G2,G3,G4ஆகிய கடைகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிலையில்

மேற்படி கடைகள் முன்பு அமைந்துள்ள காலி இடத்தை உரிமம்தாரர்கள் பயன்படுத்திட

வழிவகை இருப்பதால் மேற்படி காலி இடத்தின் அளவிற்கேற்ற வாடகை மற்றும்

ஒப்பந்தப்புள்ளி வாடகை தொகை சேர்த்து மேற்படி கடைகளுக்கு மாத வாடகை நிர்ணயம்

செய்திட மாமன்றத்தின் அனுமதி . கோரப்பட்டு அனைத்து கவுன்சிலர்கள் எந்தவித ஆட்சேபமின்றி ஏகமனதாக நிறைவேற்ற பட்டது.

வியாபாரிகள் நன்றி தெரிவிப்பு !!!

இதனால் தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் கடைகள் ஏலம் எடுத்திருந்த  வியாபாரிகள் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் கவுன்சிலர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.

ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் மினிபஸ் உள்ளே அனுமதியா?

இது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்...

மினிபஸ் உள்ளே இருந்து செல்ல அனுமதி இல்லை

ஆயினும் சிறப்பு தீர்மானமாக அனைத்து மினிபஸ்கள் நிற்க கூடாது மற்ற பஸ்கள் மற்றும் பொதுமக்கள் இடைஞ்சல் இல்லாமல்...பேருந்து நிலையத்தில் ஒன்றிரண்டு மினிபஸ் கள் உள்ளே வந்து உடன் செல்லலாம் அதற்கு மாநகராட்சி கட்டணம் வசூலிக்கும் என்று இருக்கிறோம் என்றார்.