வெள்ளி, 31 மே, 2024

சமீப காலமாக நமது வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.அதிமுக முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் ஆதங்கம்

 

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 1-6-2024

செய்தி புகைப்படங்கள்  

த.சண்முகசுந்தரம்

முத்த பத்திரிகையாளர் 


சமீப காலமாக நமது வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். 

ஆகவே...

வியாபாாிகள் அனைவரும் ஓற்றுமையாக இருக்க வேண்டும். தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.



இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி மாநகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிா்வாக கமிட்டி கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

நகர வர்த்தகர்களின் சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார்

. வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாாிகள்சங்க செயலாளரும் பாளைரோடு முனிசிபல் காம்பளக்ஸ் சுற்றுவட்டார ஐக்கிய சங்க தலைவரும் தூத்துக்குடி நகர வா்த்தகர்களின் மத்திய சங்க கௌரவ ஆலோசகரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார் கூட்டத்தில் அவர் பேசுகையில்... 

     இந்த சங்கம் மிகவும் பாரம்பாிய பழைமையான சங்கமாகும்இதில் உள்ளடக்கிய 60க்கும் மேற்பட்ட கிளைசங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.


 இவற்றையெல்லாம் ஓருங்கிணதை்து நல்லமுறையில் எல்லோரும் பணியாற்றி வருகிறோம்.


 ஓவ்வொரு பகுதியிலும் ஓவ்வொரு வகையில் சமீப காலமாக நமது வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.  


அதற்கு நாமும் உதவி கரமாக இருந்து வருகிறோம்.


 ஓரு சிலர் அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக கருத்து வேறுபாடோடு இருந்தாலும்  நாம் அனைவரும் வியாபாாிகள் என்பதை கருத்தில் கொண்டு ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும். 


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்வார்கள் அதற்கேற்றால் போல் நம்முடைய பணிகளும் செயல்களும் அமைய வேண்டும்.


 இப்போது உள்ள காலக்கட்டத்திற்கு ஏற்றால் போல் நாமும் இருக்க வேண்டும். 


எல்லா வகையிலும் சங்கத்தின் வளர்ச்சிக்கும் சிறுமற்றும் நடுத்தர என அனைத்து தரப்பு வியாபாாிகளுக்கும் எப்போதும் நான் துணையாக இருப்பேன். என்று 

சி த செல்லப்பாண்டியன் பேசினார். 

மாநில துணைச்செயலாளர் தினகரன், சங்க செயலாளர் பாஸ்கா், இணைச்செயலாளர் தெர்மல்ராஜா, பொருளாளர் ராஜலிங்கம், பல்வேறு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் முத்துக்கனி, மாாியப்பன், வேல்முருகன், உள்பட பலசங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக