கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 பிப்ரவரி, 2026

சாயர்புரம் செயிண்ட் மேரீஸ் பள்ளி 24ஆம் ஆண்டு விழா

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: பெ27

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் இயங்கி வரும் செயிண்ட் மேரீஸ் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியின் 24ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் டி. சிதம்பரநாதன் தலைமை தாங்கினார்.

thoothukudileaks


Bishop Jebaraj தொடக்க ஜெபத்தை நடத்தினார். பள்ளி முதல்வர் அக்னஸ் ஜெயலின் வரவேற்புரை வழங்கி ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

சாயர்புரம் பாஸ்டரேட் தலைவர் ஜே. மனோகரும், மாவட்ட நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்க செயலாளர் ஏ. ஜோசப்பும் சிறப்புரையாற்றினர். Pope Memorial Higher Secondary School தலைமையாசிரியர் சி. எட்வர்ட் ஜான்சன் பால் மற்றும் St. Mary's Girls Higher Secondary School தலைமையாசிரியர் ஆர். ஹெப்சிபா புவேலா மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் நடனம், நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாயர்புரம் நகர பஞ்சாயத்து கவுன்சிலரும், மாவட்ட திமுக துணைச் செயலாளருமான ஜே. ஜெபா தங்கம் பிரேமா உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர். சிஎஸ்ஐ மறைமாவட்ட உறுப்பினர்கள் அலய்மணி, ஜெயகுமார் மற்றும் பலரும் பங்கேற்றனர்.

இறுதியாக உதவி தலைமையாசிரியர் அருள் மேரி நன்றியுரை வழங்கினார்.

விழா உற்சாகமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.

வியாழன், 22 ஜனவரி, 2026

தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி மகளிர் பூப்பந்தாட்ட அணி மீண்டும் சாம்பியன்

tamil nadu news update photo news by Arunan journalist 

தூத்துக்குடி: ஜன 23

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் பூப்பந்தாட்ட போட்டியில் புனித மரியன்னை கல்லூரி (St. Mary's College) மாணவிகள் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டனர்.

thoothukudileaks

thoothukudileaks


தூத்துக்குடி A.P.C.V. மகாலக்ஷ்மி கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில், கடந்த ஆண்டு கோப்பையை வென்ற புனித மரியன்னை கல்லூரி அணி, இம்முறையும் ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் பரிசை கைப்பற்றியது.

காணொளி 

பயிற்சியாளர் பாலசிங் அவரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ், கேப்டன் செல்வி மாளவிகா தலைமையில் சசி, அனி, முவேதா, உமா மகேஸ்வரி, மாலதி, கயல்விழி, ஸ்ரீமாரி தங்கம் மற்றும் பவித்ரா ஆகியோர் அடங்கிய அணி சிறப்பான கூட்டணி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற்ற அணியினரை பாராட்டிய புனித மரியன்னை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெசி பர்ணாந்து, வீரர்களின் கடின உழைப்பு மற்றும் பயிற்சியாளரின் அர்ப்பணிப்புக்கு பெருமை தெரிவித்தார்.

பயிற்சியாளர் பாலசிங் பேசுகையில், "கேப்டன் மாளவிகா தலைமையில் அனைத்து வீரர்களும் அயராது பயிற்சி செய்த பலனே இந்த வெற்றி" என்று கூறினார்.

அணித் தலைவர் மாளவிகா தனது பேட்டியில்

"கல்லூரி முதல்வரின் ஊக்கமும், பயிற்சியாளர் பாலசிங் - சிறந்த பயிற்சியும் எங்களது வெற்றிக்கு வழிவகுத்தது. 

அனைத்து வீரர்களும் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுത்தியதால் இது சாத்தியமானது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


இந்த தொடர் வெற்றி புனித மரியன்னை கல்லூரியின் விளையாட்டு சிறப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.


புகைப்பட வீடியோ வில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

புதன், 25 ஜூன், 2025

100% தேர்ச்சி சாதனை: ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம், கொம்மடிக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வித் தரத்தில் தொடர்ந்தும் சாதனை படைத்து வருகிறது.



இக்கல்லூரியில் 2023 - 2025 கல்வியாண்டில் முதுகலை வணிகவியல் (M.Com) படிப்பை பயின்ற மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த மாணவர்களின் உழைப்பையும், பேராசிரியர்களின் முழுமையான வழிகாட்டலையும் கல்லூரி முதல்வர் டாக்டர். அருள்ராஜ் பொன்னுதுரை மற்றும் துணை முதல்வர் டாக்டர். மகேஷ் குமார் சிறப்பாக பாராட்டினர்.

2025 - 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவலுக்கு 99655 09113 மற்றும் 99524 88989 என்ற எண்ணங்களில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.



சனி, 5 அக்டோபர், 2024

12 கல்லூரிகளில் ஒரே நாளில் 800 மாணவிகளுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

12 கல்லூரிகளில் ஒரே நாளில் 800  மாணவிகளுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி அளிக்க ப்பட்டது 



இது பற்றிய செய்தியாவது:-

தவப்புதல்வி கிராமப்புற பெண்களின் திறன் மேம்பாட்டு வளர்ச்சி பனியின் ஓர் அங்கமாக 18 இடங்களில் 18 க்கும் மேற்பட்ட ஜே சி ஐ பயிற்சியாளர்கள் கொண்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியர் சார்பாக 12 கல்லூரிகளில் நடைபெற்றது.

உலக சாதனை!!!

 முன்னதாக கிராமப்புற தையல் கலைஞர்களை கொண்டு 20 நாட்களில் 2024 வண்ணமயமான மேலங்கி தயாரித்து கல்லூரி மாணவிகள் பெருமளவில் அணிந்து குளோபல் உலக சாதனையில் பங்குபெற்ற நிகழ்வை  தொடர்ந்து நேற்று கல்லூரி மாணவிகளுக்கு கிராமப்புற பெண்களின் உற்பத்தியை சந்தைப்படுத்த உறுதுணையாக மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப வாயிலாக சந்தைப்படுத்தும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 

மகிழ்ச்சி!!!

 எங்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் பெண்களின் பொருளாதார வளர்ச்சியில் உதவிடவும் எங்களுடைய இந்த பயிற்சி பெருமளவில் பங்களிக்கும் என மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெவித்தது இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான தொலைநோக்கு பார்வையை வெளிப்படுத்துகிறது 


சந்தைப்படுத்தல்!!!

 இணையவழியில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பொருட்கள் உருவாக்குதல், விளம்பரப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தலுக்கான பயிற்சி தவப்புதல்வி சார்பாக அளிக்கப்படும் எனவும் என தவப்புதல்வி தனியார் திட்டத்தின் அமைப்பாளர் மற்றும் ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியரின் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை தெரிவித்தார்.

உற்சாகம் 

 மாணவிகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியில் உற்சாகமாக பங்கேற்றது மேலும் பல மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ஊக்கமளிப்பதாக பயிற்றுனர்கள் தெரிவித்தனர்.

வெள்ளி, 4 அக்டோபர், 2024

முத்தமிழ் முத்துக்கள் முத்தரங்கம்

முத்தமிழ் முத்துக்கள் முத்தரங்கம்

தூத்துக்குடி ஐந்தாவது புத்தக திருவிழாவில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்துள்ள   செந்தமிழ் சிற்பிகள் அரங்கம் போன்று 5வது புத்தகத் திருவிழாவிலும் தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்கள் கவிஞர்களின் புகைப்பட அரங்கம்

முத்தமிழ் முத்துக்கள் என்னும் தலைப்பில் முத்து அரங்கத்தில் வரிசைப்படுத்தப்பட்டு அவர்கள் குறித்த புத்தகங்களும் வாசிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது..



வாழ்க்கைக்கு பயனுள்ள  அறிஞர்களின் நூல்கள்!!

 கல்லூரி மாணவர்கள் இப்பகுதியினை அதிக அளவில் பயன்படுத்தி கால்டுவெல் ஜி யு போப்

 வ உ சி ,சாத்தூர் பிச்சை குட்டி சோ தர்மன் 

கி ராஜநாராயணன் பூமணி, இளம்பாரதி சாத்தான்குளம் சீனிவாசன் சீ பா  ஆதித்தனார் ,

ஜி யு போப் வீரமாமுனிவர் முத்துசாமி தீட்சிதர் சங்கரதாஸ் சுவாமிகள் விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள் காருக்குறிச்சி அருணாசலம் என அனைவரது புகைப்படங்களும் அவர்களுடைய நூல்களும் இந்த அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன.


 கல்லூரி மாணவர்கள் இந் நூல்களை படித்து அது குறித்து விமர்சனங்களையும் ஆய்வுகளையும் வழங்கி வருகிறார்கள்..


 கல்லூரி மாணவர்கள் மிகவும் கவர்ந்த அரங்கமாக முத்தமிழ் முத்துக்கள் முத்தரங்கம் இருக்கின்றது.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

1930 சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பேரணியில் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் : 17.02.2024

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


இது பற்றிய செய்தியாவது:-


சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (17.02.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.


 இந்த விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் இருந்து தொடங்கி குரூஸ் பர்னாந்து சிலை வரை சென்று நிறைவடைந்தது.



இப்பேரணியின் போது கிரெடிட் கார்டு சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றுபவர்கள், ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்பவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நமது நண்பர்கள் போன்று அல்லது பிரபலமானவர்கள் போன்று போலி கணக்குகளை துவங்கி நம்மிடம் பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஆன்லைனில் பம்பர் பரிசு விழுந்திருப்பதாக கோரி உங்கள் விபரங்களை திருடி அதில் எஸ்.எம்.எஸ் அனுப்பி பண மோசடி செய்பவர்கள் மற்றும் தங்கள் நிலம் அல்லது வீட்டின் மீது செல்போன் டவர் அமைத்து தந்து மாத வாடகை அதிக அளவில் தருவதாக கூறி நம்ப வைத்து மோசடி ஈடுபடுபவர்கள் ஆகியோர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் பதாகைகள் ஏந்தி பள்ளி மாணவ மாணவிகள் பேரணியில் முழக்கமிட்டு சைபர் குற்றம் குறித்து புகார் தெரிவிக்கும் இலவச தொலைபேசி எண்ணான 1930 பொறித்த பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர்.


இப்பேரணியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி துணை முதல்வர் முனைவர்  அருணாச்சல ராஜன், தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்ற பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி, தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர்  ஷோபா ஜென்சி உட்பட காவல்துறையினர் மற்றும் காமராஜ் கல்லூரி, சுப்பையா வித்யலாயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிரசெண்ட் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

வியாழன், 23 மார்ச், 2023

தூத்துக்குடி கல்லூரி மாணவிகளுக்கு கல்விஉதவிதொகை

 thoothukudileaks 24-3-2023

photo news by shanmuga sunthram 

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவியருக்கு ஏ.பி.சிமகாலட்சுமி அம்மாள் நினைவுகல்வி உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. 

நேற்று 23-3-2023ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவியருக்கு கல்விதொகை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி யில் நடைபெற்றது.



இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் கல்வி உதவித்தொகையாக மாணவியருக்கு 7.40,700 ரூபாயை வழங்கியது. 

கல்லூரித் தாளாளர் சொக்கலிங்கம், செயலாளர் சுப்புலட்சுமி, முதல்வர் பாலசண்முகதேவி ஆகியோர் மாணவியருக்கு உதவித் தொகையைப் பெற்றுத் தந்தனர்.

    நிகழ்ச்சியில் கணினித்துறைத் தலைவர் ஷியாமலாசூசன் வரவேற்புரையாற்றினார். முதல்வர். பாலஷண்முகதேவி வாழ்த்துரை வழங்கினார். விற்பனை மேலாளர் மோகன்  பிரவீணா, ஹைமாஸ்டீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். 

இந்துஸ்தான் நிறுவனத்தின் மதுரை மண்டல பொதுமேலாளர் செல்ல பிரபு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவியருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி சிறப்புரை ஆற்றினார். சுயநிதிப் பிரிவு வணிகவியல்துறை, கணிதத்துறை, இயற்பியல்துறை, கணினி அறிவியல்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த 118 மாணவியர் கல்வி உதவித்தொகையைப் பெற்றனர். 


மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை மாணவியருக்கு வழங்கப்பட்டது. இந்துஸ்தான் நிறுவனத்தைச் சார்ந்த பரமசிவம், கீர்த்தி, சிவகுமார், பிரபாகரன், ஆனந்தகீதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    கல்வி உதவித்தொகை வழங்கும் இந்நிகழ்ச்சி குறித்து மாணவியர் பின்னூட்டம் வழங்கினர். மாணவியர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆசிரியர்களும் ஆசிரியர், அலுவலர். ரேவதி உறுதுணையாக இருந்தனர். வணிகவியல் துறைத் தலைவர் சித்ரா செல்லம் நன்றியுரையாற்றினார்.

வியாழன், 16 மார்ச், 2023

தூத்துக்குடி தூய மாியன்னை கல்லூரி தன்னாட்சி வரலாற்றுத்துறை நிகழ்ச்சி பங்களாதேஷின் வரேந்தரா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப்பேராசிாியா் டாக்டா் ராவ்னக் ஆரா பா்வின் பங்கேற்பு

 thoothukudileaks 16-3-2023

photo news by tamilan Ravi 

தூத்துக்குடி தூய மாியன்னை கல்லூரி தன்னாட்சி  வரலாற்றுத்துறை  சாா்பில்  நேற்று (15.03.2023)  வரலாறு மற்றும் ஆய்வு நெறிமுறைகள்  என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு நிகழ்ச்சி நடத்தப்பட்டது .

  

பங்களாதேஷ் டாக்டா் ராவ்னக் ஆரா பா்வின்  பங்கேற்பு 

இதுபற்றிய செய்தியாவது:- 

தூத்துக்குடி தூய மாியன்னை கல்லூரி தன்னாட்சி  வரலாற்றுத்துறை  ஆய்வு நெறிமுறை கள் நிகழ்ச்சி வரலாற்றுத்துறை தலைவா் டாக்டா்  மாலினி அப்ஸலா  மற்றும் வரலாற்றுத்துறை பேராசிாியா்கள்  இனைந்து நடத்தினா்

 இந்நிகழ்ச்சியில்...

                    பங்களாதேஷின் வரேந்தரா  பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப்பேராசிாியா்  டாக்டா் ராவ்னக் ஆரா பா்வின்  

கா்நாடகா  பெங்களூரு தூய பிரான்சிஸ் டி சேல்ஸ் கல்லூாியின் சமூகவியல் உதவிப்பேராசிாியா்  ஜே பெனட்  ராஜதுரை  தூய ஜோசப் கல்லூாி  திருச்சிராப்பள்ளி வரலாற்று துறை உதவி பேராசிாியா்  டாக்டா் ஜே சந்தோஷ் குமாா்  மற்றும் பச்சையப்பா கல்லூாி சென்னை உதவி பேராசிாியா்  மற்றும்  தலைவா்  வரலாற்றுத்துறை  டாக்டா்  சரவணன்  ஆகியோா் சிறப்பு  விருந்தினா்களாக  கலந்து கொண்டனா்.

   

 கல்லூாி  முதல்வா்  அருட்சகோதாி  டாக்டா்  லூசியாரோஸ்  செயலாளா்  அருட்சகோதாி டாக்டா்  ஷிபானா . சுயநிதிப்பிாிவு  இயக்குனா் அருட்சகோதாி  ஜோஸ்பின் ஜெயராணி  .மொழி மற்றும் கலாச்சார புலத்தலைவா்  டாக்டா்  ஜாக்குலின் வியோ . ஆகியோா்கலந்து கொண்டு  சிறப்பித்தனா்.



  இந் நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூாிகளைச் சோ்ந்த பேராசிாியா்கள்  ஆராய்ச்சியாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

வரலாற்றுத்துறை தலைவா் டாக்டா்  மாலினி அப்ஸலா  மற்றும் வரலாற்றுத்துறை பேராசிாியா்கள்  இனைந்து நடத்தினா்

திங்கள், 6 மார்ச், 2023

தூத்துக்குடியில் HISTO EXPO 2023. பழங்கால பொருட்கள் கண்காட்சி

 thoothukudileaks 7-3-2023

Photo news by tamilan Ravi 


தூத்துக்குடி  தூய மாியன்னைக் கல்லூாியில்  (  தன்னாட்சி   )  வரலாற்றுத்துறை  சாா்பாக  HISTO  EXPO   2023.   பழங்கால  பொருட்கள்  கண்காட்சி  நடைபெற்றது .



      இதுபற்றிய செய்தியாவது;-

              தூய மாியன்னைக் கல்லூாியில்  வரலாற்றுத்துறை  சாா்பாக  HISTO  EXPO   2023.  மாபெறும்  பழங்கால  பொருட்கள்  கண்காட்சி  நேற்று 6-3-2023 நடைபெற்றது.



   இக் கண்காட்சியில்  1947  ஆம்  ஆண்டு  முதல்  தற்போது  வரையிலான   இந்திய  மற்றும்  வெளிநாட்டு  தபால் தலை  வகைகள்  . பண்டைய கால நாணயங்கள்  காகித ரூபாய் நோட்டுகள்  .மிகத்தொன்மையான  அறிய  பல  பொருட்கள்  காட்சிப்படுத்தப்பட்டது  .


 இராதாகிருஷ்ணன்  .ஜெபின்  . செல்வம் .  செந்தில்நாதன் . சண்முகசந்தா்ராஜ் . மற்றும்  கலைவேந்தன் . தபால் தலை  நாணயவியல்  சேகாிப்பாளா்கள்  இப் பொருட்களை  காட்சிபடுத்தினா்.


  

                       கண்காட்சியை  கல்லூாி முதல்வா்  அருட்சகோதாி  லூசியாரோஸ்    துவக்கி வைத்தாா்கள்   வரலாற்றுத்துறை உதவி  பேராசிாியை  கெயின் டி  அல்மெய்டா   அனைவரையும்  வரவேற்றாா்கள்.



  இக் கண்காட்சியை  கல்லூாியின் அனைத்துதுறை  மாணவிகள் பேராசிாியைகள் மற்றும்  தூத்துக்குடி  அன்னம்மாள் கல்லூாியை சாா்ந்த  மாணவிகள் பேராசிாியைகள்  பங்கு  பெற்றனா் . 

                          கல்லூாி  முதல்வா் அவா்கள்  தொன்பொருள் படைப்பாளா்களுக்கு   முன்னதாக  நினைவு பாிசு வழங்கி பாராட்டினாா்கள்  

 

  வரலாற்றுத்துறை  தலைவா்  மாலினி அப்சலா ஒருங்கினைத்து  வழிநடத்தினாா்கள்.   வரலாற்றுத்துறை  உதவி  பேராசிாியை  அனுஜா   தொகுத்து  வழங்கினாா்கள்

சனி, 18 பிப்ரவரி, 2023

தூத்துக்குடியில் 6, 7 8ம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நிகழ்ச்சி க்கு வராமல் புறக்கணித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரபரப்பு

 thoothukudileaks 18-2-2023

photo news by Arunan 

தூத்துக்குடியில் 

6, 7 8ம் வகுப்பு

மாணவர்களுக்கான

ஓவியப்போட்டி

முதல் பரிசு தட்டி சென்ற சுப்பையா வித்தியாலயம் மாணவி காயத்ரி தேவி க்கு பாராட்டு தெரிவித்தார்கள்.



இதுபற்றிய செய்தியாவது;-

18-2-2023 இன்று நடைபெற்ற பள்ளி குழந்தைகளுக்கான ஒவிய போட்டி  நிகழ்ச்சி தலைமை தாங்கி நடத்துவதாக அழைப்பிதழ்  அச்சிட்டு இருந்தார்கள்.

அழைப்பிதழ் பார்க்க 



 ஆனால் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பாலதண்டாயுத பாணி நிகழ்ச்சி வரவில்லை?  புறக்கணிப்பு செய்துள்ளார்..என் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அங்கு வந்து பள்ளி மாணவ மாணவிகளை திறன் வளர்ச்சி பாராட்டி பரிசு வழங்குவார் என்றிருந்த அனைவர்க்கும் ஏமாற்றத்தை தந்துவிட்டது.

இத்தனைக்கும் தனியார் பள்ளிகள் விட அரசு பள்ளிகளை சேர்ந்த அதிகம் மாணவர்கள் கலந்து கொண்டு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளே ஒவிய போட்டியில் அதிக அளவில் வெற்றி பெற்றுஇருக்கிறார்கள்.

உற்சாகம் படுத்த வேண்டிய CEO இதுபோன்ற நிகழ்வுகளில்  கலந்து கொள்ளாமல் சென்றது ஏனோ??? இந்நிகழ்ச்சி வந்துள்ளவர்களும் ஆசிரியர்கள் ஆதங்கம் அடைந்தார் கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் கே.பாலதண்டாயுதபாணி போட்டோ உருவம் பதித்த அவருக்கு நினைவு பரிசு வழங்க ஷீல்டு கூட ஒரமாக கிடந்தது நிகழ்ச்சி நடத்தியவர் ரொம்ப வேதனை யுடன் பரிதாபமாக வைத்து கொண்டிருந்தார்.


தூத்துக்குடியில் கல்வி செய்திகள் மாத இதழ் நடத்திய 6வகுப்பு 7வகுப்பு 8வகுப்பு படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு தூத்துக்குடியில் 

6, 7 8ம் வகுப்பு

மாணவர்களுக்கான

ஓவியப்போட்டி

தலைப்பு 

1 பெண்மை போற்றுவோம்


2 எனது கனவு தூத்துக்குடி


3 சுற்று சூழலை பாதுகாப்போம்.


- மேற்கண்ட மூன்று தலைப்புகளில் ஓவிய போட்டி தூத்துக்குடி ஏபிசி வீரபாகு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி  இன்று 18-2-2023 காலை 11மணியவில் நடைபெற்றது.



இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 27 பள்ளிகளில் இருந்து 135 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

video 

முதல் பரிசு தட்டி சென்றார் சுப்பையா வித்தியாலயம் மாணவி காயத்ரி தேவி 

மற்றும் 20 மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கினார்கள் 



அடுத்து ஒவிய போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி குழந்தைகளுக்கு ம் பரிசு சிறப்பு விருந்தினர் சொ.வீரபாகு வழங்கி பாராட்டினார் கள்

இந்நிகழ்ச்சி ஏற்பாடு பொன்.பலவேசராஜா சிறப்பாக செய்திருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி அவருக்காக வைக்க பட்டிருந்த வாசல் நுழைவு பெரிய பேனர்


 



வியாழன், 16 பிப்ரவரி, 2023

2023-ல் கல்வி செய்திகள் நடத்தும் ஒவிய போட்டி தூத்துக்குடி மாவட்ட 27 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு

 thoothukudileaks 16-2-2023

photo news by Roja arunan 

2023-ல் கல்வி செய்திகள் நடத்தும் ஒவிய போட்டி  தூத்துக்குடி மாவட்ட 27 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.



இது பற்றிய செய்தியாவது .-

கல்வி செய்திகள் மாத இதழ் தொடர்ந்து நம் மாவட்டத்தில் பல்வேறு  கல்வி பணிகள் பள்ளி குழந்தைகள் நலன் குறித்தும்  பள்ளி வளர்ச்சி மாணவ மாணவிகளின் திறமை வெளிபடுத்தி விளையாட்டு நினைவாற்றல் போன்றவற்றை ஊக்கப்படுத்தி வருகின்றது

 நம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி நிகழ்வு செய்தி தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து நற்பணி செய்து வருகிறது.


வருகின்ற 18-2-2023 சனிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் ஓவிய போட்டி கல்வி செய்திகள் மாத இதழ் நடத்துகின்றது.


இடம்:- ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிக் லேசன் மேல்நிலைப் பள்ளி தூத்துக்குடி 

தேதி 18-2-2023

காலை 11 am to 12.15  வரை ஒவிய போட்டி நடைபெறும்.

மதியம் 2 மணியளவில்  வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு சான்றிதழ்கள் வழங்குகின்றன.

தலைப்பு

1 பெண்மை போற்றுவோம்

2 எனது கனவு தூத்துக்குடி

3 சுற்று சூழலை பாதுகாப்போம்.


- மேற்கண்ட மூன்று தலைப்புகளில் ஓவிய போட்டி நடைபெறுகிறது.

இதில் மாவட்டத்தில் 27 பள்ளிகளில் இருந்து 135 மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.



இந்நிகழ்ச்சி ஏற்பாடு கல்வி செய்திகள் மாத இதழ் பொன்.பலவேசராஜ் செய்து வருகிறார்.



புதன், 15 பிப்ரவரி, 2023

ரயில் நிலையம் செயல்படும் விதத்தை முழுமையாக கற்றுக் கொடுத்தல்தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

 thoothukudileaks:- 16-2-2023

news Photo by tamilan Ravi  

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார்

மேல்நிலைப்பள்ளி.

மாதிரி ரயில் நிலையம்
( மாணவர்களுக்கான கற்றல்
செயல்பாடுகள்)
நாள்: 16-02-2023
வியாழக்கிழமை
நேரம் : 9:30 am to 04:00 pm
நோக்கம்:
- ரயில் பயண சீட்டு முன்பதிவு
மற்றும் ரயில் நிலையம்
செயல்படும் விதத்தை
முழுமையாக கற்றுக் கொடுத்தல்.
மாணவர்களுக்கான இந்த
நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாதிரி ரயில்வே படங்கள் 


இது பற்றிய செய்தியாவது :-

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக  மாணவர்களுக்கு  ரயில் முன்பதிவு மாதிரி தத்ரூபமாக செய்து கண்பிக்கப்பட்டது .





ரயில் நிலையம் முன்பதிவு சீட்டு பயண எண் புறப்படும் நேரம் சேரும் நேரம் போன்ற அமைப்புகள் விளக்கப்பட்டன .




பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோ ஆரோக்கிய தாஸ் தாளாளர் அருட்தந்தை அகஸ்டின் உதவி தலைமையாசிரியர் அருட்தந்தை விக்டர் மற்றும் லசால் குருஸ்புரம் தஸ்நேவிஸ் பள்ளி தலைமையாசிரியாகள் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சியை ஆசிரியர் லூர்து சாமி ஏற்பாடு செய்திருந்தார்.



வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

தூத்துக்குடியில் 34 மணி நேர சுருள் வாள் சுற்றும் சாதனை நிகழ்ச்சி

 thoothukudileaks 11-2-2023

photo news by Ravi 

தூத்துக்குடி தேவராஜ் வாஸ்தாவி  சிலம்பாட்ட கழக நடத்தும்  போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு   34 மணி நேர சுருள் வாள் சுற்றும் சாதனை நிகழ்வு நடைபெறுகிறது.



இதுபற்றிய செய்தியாவது

தூத்துக்குடி சவேரியார் புரத்தில் உள்ள தேவராஜ் வாஸ்தாவி சிலம்பாட்ட கழகம் நடத்தும்  போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு  உலக சாதனைக்காக சுருள்வாள் 34 மணி நேரம் சாதனை படைக்க இருக்கும் 12 ஆம் வகுப்பு  படிக்கும் மாணவன் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த சத்தியநாதன் பத்மா தம்பதியரின் மகன் ஹரிஷ் பாக்கியராஜ் தூத்துக்குடி சவேரியார் புறத்தில் உள்ள தேவராஜ் வாஸ்தாவி  சிலம்பாட்ட கழகம் பயிற்சி கூடத்தில் ஜாக்கி புக் ஷாப் ரெக்கார்ட் சாதனைக்காக 34 மணி நேரம் சுருள் வாள் சுற்றும் சாதனை நிகழ்வை சவேரியார் புறம் ஊர் நிர்வாகி பிரான்சிஸ் மற்றும் நிக்கோலஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை 10 2 2023 இரவு 10 மணிக்கு துவக்கி வைத்தனர் .



இன்று 11 2 20 23 சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பியர்சன் இன்று இரவு 7 மணி வரை வேல் கம்பு சுற்றுகிறார்.


 12 மணி சாதனை நிகழ்ச்சிக்காக இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவராஜ் வாஸ்தாதி  சிலம்பாட்ட கழகம் ஒருங்கிணைப்பாளர் அருள் அந்தோணி செய்திருந்தார்.

புதன், 8 பிப்ரவரி, 2023

ஆசிரியர்களுக்கு ஆப்பு வைச்சுட்டாங்க !!!!!!

𝕥𝕙𝕠𝕠𝕥𝕙𝕦𝕜𝕦𝕕𝕚 𝕝𝕖𝕒𝕜𝕤

𝟠-𝟚-𝟚𝟘𝟚𝟛

தமிழகத்தில் இனி ஆசிரியர்கள் ப்ளே ஸ்டோர் ல உள்ள App மூலமே  லீவ் எடுக்க முடியும் என  புதிய செயலி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  

அதனால் ஆசிரியர்கள் 'ஆப்' மூலமே  லீவ் எடுக்க முடியும் கல்வித்துறை அறிவித்துள்ளது.


இது பற்றிய செய்தியாவது:-

 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், விடுப்புக்கு விண்ணப்பிக்க வசதியாக புதிய செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.



தமிழ்நாட்டில் 35 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2 லட்சம் பல நிலையிலான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆரம்பத்தில், பதிவேடுகள் மூலம் வருகை பதிவேடுகளில் ஆசிரியர்கள் கையொப்பமிட்டனர்.


இந்நிலையில், பதிவேடு நடைமுறைகள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யும் முறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக் கல்வித்துறையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் அனைத்து பதிவுகளையும் இந்த கணினி மூலம்தான் செய்ய வேண்டும். இந்நிலையில், ஆசிரியர்களுக்கென தனியாக ஒரு செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலிக்கு விடுப்பு நிர்வாக நடைமுறை (லீவ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியை ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதன்மூலம் தங்களுக்கு தேவைப்படும் போது விடுப்புகளை செயலியில் பதிவு செய்ய வேண்டும். அப்போது அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கணினியின் மூலம் அதை சரிபார்த்து ஆசிரியர் எடுக்கும் விடுப்புக்கு ஒப்புதல் அளிப்பார்.


இந்த செயல்முறைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். பின்னர் இந்த விவரங்கள் சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறையின் பள்ளிகள் நிர்வாக நடைமுறையின் மூலம் கண்காணிக்கப்படும். ஆசிரியர்கள் விடுப்புக்கான இந்த புதிய செயலி(TN-SED Schools App) மூலம் ஆசிரியர்களுக்கு மீதம் இருக்கின்ற விடுமுறை நாட்கள், மருத்துவ விடுப்பு நாட்கள் எத்தனை இருப்பு இருக்கிறது. சாதாரண விடுப்பு நாட்கள் எத்தனை இருக்கிறது உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர்களே தெரிந்து கொள்ள முடியும்.


ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும் போது சாதாரண விடுப்பு நாட்கள் எத்தனை இருக்கிறது( அதிகபட்சம் 13 நாட்கள்) என்பதையும் பதிவு செய்ய வேண்டும். வரையறை செய்யப்பட்ட விடுப்பு நாட்கள் (அதிக பட்சம்3), ஈடு செய்யும் விடுப்பு நாட்கள்( அதிகபட்சம் 20 நாள்கள்), ஈட்டிய விடுப்பு நாட்கள்(அதிகபட்சம் 240 நாட்கள்) ஆகியவற்றையும், ஈட்டிய விடுப்பு அல்லாத மருத்து சான்றுடன் கூடிய விடுப்பு நாட்கள் ஆகியவற்றையும் ஆசிரியர்கள் இந்த புதிய செயலியில் பதிவு செய்ய வேண்டும்.விடுப்புகளை, ஆசிரியர்கள் இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். விடுப்பில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அந்த அதிகாரியைத்தான் ஆசிரியர்கள் அணுகி ஒப்புதல் வழங்கும் போது அதை திருத்தம் செய்ய முடியும்.

புதன், 1 பிப்ரவரி, 2023

தூத்துக்குடி யில் இன்னும் 2023 ஜனவரி மாதம் சம்பளம் வழங்காமல் இழுத்துயடித்து வரும் ?! தமிழ்நாடு அரசினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 thoothukudileaks 1-2-2023

photo news by Rav

தூத்துக்குடி யில் இன்னும் 2023 ஜனவரி மாதம் சம்பளம் வழங்காமல் இழுத்துயடித்து வருகின்ற ?! தமிழ்நாடு அரசினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:-


அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கான ஜனவரி மாத சம்பளம் இன்னும் தங்களுக்கு வழங்கப்படவில்லை. 2023 ஜனவரி மாத சம்பளம் உடனடியாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

இக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று 1-2-2023 காலையில் 11மணியளவில்...

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நுழைவு வாயில் முன்பு மூட்டா மற்றும் டான்சாக் கிளைகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இவ் ஆர்ப்பாட்டம் 

பி.செரினா மார்கரட்

மூட்டா கிளைச் செயலாளர் தலைமையில் பி. அந்தோணி உதயகுமார் நிக்சன்  

டான்சாக் கிளைச் செயலாளர் முன்னிலையில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி முனபாக நடைபெற்றது.


ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திங்கள், 30 ஜனவரி, 2023

தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணி திட்டம்

 thoothukudileaks 30-1-2023

Photo news by shanmuga Sundaram 

தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணி திட்டம் மற்றும் ஆங்கிலத்துறை சார்பில் தூத்துக்குடி பிரையண்ட் நகர் நல்லாயன் செவித்திறன் குன்றியோர் மேல்நிலைப்பள்ளியில் சர்வோதயா தினத்தினை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு நன்கொடை வழங்கப்பட்டது. 



இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் டேவிட் ஜெயசேகர் வரவேற்று பேசினார். 


நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியருமான சண்முகப் பிரியா, பேரா.யோகேஸ்வரி நித்யா மற்றும் பேரா.கலையரசி ஆகியோர் கலந்து கொண்டு நன்கொடைகள் வழங்கினர். இந்நிகழ்வில் நாட்டுநலப்பணி திட்ட மாணவிகள் மற்றும் செவித்திறன் குன்றிய மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

வியாழன், 26 ஜனவரி, 2023

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் கிராமத்தில் குடியரசு தின சிறப்பு பயிற்சி உன்னத் பாரத் அபியான்/சமூக மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி வணிகவியல் துறை யினர் நடத்தினார்கள்

 thoothukudileaks 26-1-2023

photo news by Ravi 

குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி, உன்னத் பாரத் அபியான்/சமூக மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி வணிகவியல் துறை ஆகியவை இணைந்து 26 ஜனவரி 2023 இன்று ஆரோக்கியபுரம் கிராமத்தில் நடைபெற்றது.



 இந்நிகழ்ச்சியில் ஆரோக்கியபுரம் நகர நிர்வாகி ஆரோக்கிய ராஜ் கலந்து கொண்டு கிராம மக்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஊக்குவித்தார்.

வணிகவியல் துறையின் (SSC) மாணவர்கள் கிராம மக்களின் திறமையை வளர்ப்பதற்கும், அவர்களின் வருமானத்துக்கும் உதவியாக பயிற்சி அளித்தனர். 




நகைகள் தயாரித்தல், ஆரி வேலைப்பாடு, கண்ணாடி ஓவியம், டிசைனிங், ஆங்கிலம், நாட்டுப்புற, மேற்கத்திய மற்றும் பாரம்பரிய நடனம், ஹேர் டூ, மெஹந்தி போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு, கபடி, கோகோ போன்ற விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிகழ்ச்சியில் கிராம பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.



செயின்ட் மேரிஸ் கல்லூரியின் வணிகவியல் துறையால் (SSC) ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. வணிகவியல் துறையின் (SSC) ஒருங்கிணைப்பாளர் டாக்டர். பி. மரியா சஹாயா ரோசியானா மற்றும் வணிகவியல் உதவிப் பேராசிரியரான டாக்டர். ஜே. ஏஞ்சல் பியூலா கிரேசலின் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மொத்தம் 48 துறை மாணவர்கள் சமூக மேம்பாட்டுத் திட்டத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தினர். 


(SSC). இந்த நிகழ்ச்சியை கிராமத்தில் நடத்த உறுதுணையாக இருந்த ஆரோக்கியபுரம் நகர நிர்வாகி ஆரோக்கியராஜுக்கு  நன்றி தெரிவித்தனர்.

திங்கள், 23 ஜனவரி, 2023

தூத்துக்குடியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் பேரணி

thoothukudileaks 24-1-2023

photo news by shanmuga Sundaram 

தேசிய பெண் குழந்தைகள் தினம் பேரணி தூத்துக்குடியில் இன்று 24-1-2023 காலை நடைபெற்றது.



இதுபற்றிய செய்தியாவது:-

பெண் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும், அவர்கள் வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை எடுத்துரைப்பதற்கும் ஜனவரி 24 இன்று  இந்தியாவில் கொண்டாடப்படுகிறது


தூத்துக்குடி மாநகரில் முக்கிய வீதிகளில் இன்று (24-1-2023)ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் தேசிய பெண் குழந்தைகள் தின பேரணி தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் இருந்து 200 மாணவிகளுடன் பேரணி தொடங்கியது.


பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளை காப்பது, ஒரு தலைமுறையை காப்பது ஆகும் போன்ற கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக வந்து குருஸ் பர்னாந்து சிலை அருகில் முடிவடைந்தது. 


ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி முதல்வர் Rev. Sis.  ரூபாவும் பேரணியில் கலந்து கொண்டார்.


JCI Pearlcity QueenBees -ன் தலைவர் JFM வழக்கறிஞர் வி. சுபாசினி பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்கள் மீது ஏவப்படும் துஷ்பிரயோகத்தை எப்படி ? தடுக்கலாம் என்பது பற்றியும் பெண் எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தினர். 



இந்நிகழ்ச்சியில்  செயலாளர் Jc HGF. அ. ஆயிஷா இப்ராஹிம் மற்றும் துணைத் தலைவர் நிகழ்ச்சி Jc டி. சுதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 

ஜேசிஐ பேர்ல்சிட்டி தலைவர் ஜேசி ஏ ராஜேஷ், மண்டல அதிகாரி ஜேசிஐ செனட்டர் ஆர்.ஸ்ரீதரன், மண்டல எஸ்எம்ஏ ஒருங்கிணைப்பாளர் ஜேசிஐ. செனட்டர் முத்துராமன் மற்றும் 

 பியர்ல் சிட்டி குயின் பீஸ் பட்டயத் தலைவர் Jc HGF  டி.ஜெர்லின் தினகரனும் துணைத் தலைவர் பயிற்சி JFM R. அஜிதா பிரபு, துணைத் தலைவர் மேலாண்மை Jc HGF A. மதுமிதா, துணைத் தலைவர் வர்த்தக Jc கிரேஸ் மற்றும் இயக்குநர்கள் Jc அ. பயஸ் ஷபிர், Jc அ. டிஸ்னி அன்டனி, Jc முபாராஷா  ஜேசிஐ பேர்ல்சிட்டி  பொன்ராஜா, பாலகிருஷ்ணன் 

ஹோலி கிராஸ் ஹோம் கல்லூரி இணைப் பேராசிரியர் டாக்டர் மதுரவள்ளி, பேராசிரியை கிருஷ்ணவேணி ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தனர்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் வரலாறு 

 இந்திய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும், பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பெண் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் ஜனவரி 24 இன்று அனுசரிக்கப்படுகிறது. 

பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை எடுத்துரைப்பதும், பெண் குழந்தைகளின் உரிமைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் முக்கியத்துவம் உள்ளிட்ட விழிப்புணர்வை மேம்படுத்துவதும் இதன் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கமாகும். 


தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதன் பின்னணியில் உள்ள நோக்கம், இந்திய பெண்களுக்கு ஆதரவையும் வாய்ப்புகளையும் வழங்குவதாகும். 


இந்தியாவில் நாம் அறிந்தபடி, பாலின சமத்துவமின்மை என்பது கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும், மேலும் இது சட்ட உரிமைகள், கல்வி, மருத்துவம், திருமணம் போன்ற பல துறைகளில் உள்ளது. 



பெண் சிசுக்கொலை என்பது மற்றுமொரு முக்கிய பிரச்சினையாகும். 

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதற்கான இந்திய அரசின் நடவடிக்கை இளம் பெண்களுக்கான முன்னேற்றம் மற்றும் குழந்தை பருவத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவது என்பதில் சந்தேகமில்லை.


இந்தியா வில் தேசிய பெண் குழந்தைகள் தினம் முதன்முதலில் 2008 இல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.




 

வெள்ளி, 20 ஜனவரி, 2023

சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி 22வது ஆண்டு விழா

thoothukudileaks 21-1-2023

photo news by shanmuga Sundaram 


தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி 22வது ஆண்டு விழா நேற்று (20-1-2023) நடைபெற்றது 



இதையொட்டி சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு ஊக்கத்தொகை மற்றும் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்ளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். 




ராதாபுரம் பங்குதந்தை ராபின், நீம் பவுன்டேசன் இயக்குநர் லூயிஸ் ராஜ்குமார், சிலுவைப்பட்டி ஆர்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் ஹெரால்டு வில்சன், ஊர் தலைவர் அந்தோணி ஜேசுராஜன், தாளமுத்துநகர் பள்ளியின் தாளாளர் பங்குதந்தை நெல்சன் ராஜ், உதவி பங்குதந்தை வின்சன்ட், மற்றும் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பாலம்மாள், கிளைச்செயலாளர் அன்பு மற்றும் அந்தோணி செல்வராஜ், ஜெயசீலன், கௌதம் உள்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் தலைமை ஆசிரியர் ஜேக்கப் நன்றியுரையாற்றினார்.

வியாழன், 19 ஜனவரி, 2023

தூத்துக்குடியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

 thoothukudileaks 20-1-2023

Photo news by Ravi

டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தில் நடைபெற்றது .


இது பற்றிய செய்தியாவது -

தூத்துக்குடி  விவிடி மேல்நிலைப் பள்ளியில் என்சிசி சார்பில் இன்று 20-1-2023     காலை 10 மணியளவில்  டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.



முன்னதாக என்சிசி மாணவிகளின் இறைவணக்கம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து உடன் ஆரம்பமானது.

. கருத்தரங்கு நிகழ்ச்சியில் 

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கனகரத்தின மணி தலைமை தாங்கினார் .



மாப்பிள்ளை யூரனி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார், மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுக நயினார் டெங்கு காய்ச்சல் பற்றி டெங்கு எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றியும் மாணவ மாணவிகள் விழிப்புடன் இருந்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கருத்துக்கள் வழங்கினார்கள். 


டாக்டர் ரேணுகா (தூத்துக்குடி மாவட்ட புகையிலை தடுப்பு அதிகாரி ) டெங்கு காய்ச்சல் பற்றி மாணவ மாணவிகளுக்கு எப்படி நாம் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் நமது பக்கத்து வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த கூறினார்.


 சமூகப் பணியாளர் ரோசாரி பாத்திமா சிறப்பு அழைப்பாளர்களாக பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஸ்டாலின். பாரதிராஜா. அருண்குமார் சுரேஷ் பள்ளி செயலாளர் நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீது உட்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .

நிகழ்ச்சி முடிவில் தமிழ் ஆசிரியை செல்வ முத்துலட்சுமிநன்றியுரை ஆற்றினார்.

இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  என் சி சி ஆசிரியர் ஆல்பன்   செய்திருந்தார்