ஆலோசனை கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலோசனை கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 மார்ச், 2026

ஓ.பன்னீர்செல்வம் முடிவுக்கு எதிர்ப்பு கூண்டோடு விலகிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் எஸ் ஏசாதுரை தலைமையில் இன்று தூத்துக்குடியில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடந்தது என்ன?

Tamil Nadu updates,

 photo news by Arunan journalist 1-3-2026

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மார்ச் 1 

தூத்துக்குடியில் ஒபிஎஸ் அணியில் பரபரப்பு நிலவி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகல் அறிவித்து அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

thoothukudileaks


அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்களை கொண்டு தனித்த அணியை நடத்தி வந்த ஓபிஎஸ், அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை  சந்தித்து திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த முடிவை கடுமையாக எதிர்த்த 12 மாவட்ட செயலாளர்கள் கொதித்து எழுந்துள்ளனர்.

தூத்துக்குடியில் மா செ ஏசாதுரை தலைமையில் ரகசிய ஆலோசனை கூட்டம்!!!

இந்நிலையில், இன்று (01-03-2026) மாலை 5 மணியளவில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பிலுள்ள கனி ரெஸ்டாரன்ட் கூட்டரங்கில், மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

thoothukudileaks



thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், “புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் தீய சக்தி என உரக்கக் கூறிய திமுகவுடன் இணைந்ததை ஏற்க முடியாது” எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பலர், “நமக்கு உரிய மரியாதை கிடைத்தால் அதிமுகவில் மீண்டும் இணையலாம்” என கருத்து தெரிவித்தனர். சிலர் “சின்னம்மா சசிகலா அணியுடன் இணையலாம்” எனவும் முன்மொழிந்தனர்.

thoothukudileaks


மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தனது உரையில்,

 “உங்கள் கருத்தே என் எண்ணமும் செயலுமாகும். ஜெயலலிதா அவர்கள் தீய சக்தி என குறிப்பிட்ட திமுகவில் ஒபிஎஸ் இணைந்ததை ஒருபோதும் ஏற்க முடியாது. அது மிகுந்த வேதனையை அளிக்கிறது. 

ரகசிய ஆலோசனை கூட்டம் என்பதால் தங்கள் இடம் தெரிவிக்கிறேன்  தற்போது அதிமுக எடப்பாடி தரப்பிலும், சின்னம்மா தரப்பிலும் இருந்து அழைப்புகள் வந்துள்ளன. நமக்கு மரியாதை தருபவர்களுடன் இணைவது குறித்து இன்னும் இரண்டு நாளில் தீர்மானிக்கலாம்” என தெரிவித்தார்.

இதற்கு கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் பலத்த கைதட்டலுடன் ஆதரவு தெரிவித்தனர். தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் இந்த ரகசிய ஆலோசனை கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks





செவ்வாய், 10 டிசம்பர், 2024

தூத்துக்குடியில்மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்தும் மானிட உரிமைக் கருத்தரங்கு

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தூத்துக்குடியில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்தும் மானிட உரிமைக் கருத்தரங்கு நடைபெற்றது



இது பற்றிய செய்தியாவது:-

மானிட உரிமை சாசனம் 

கடந்த 10.12.1948 இல் மானிட உரிமை சாசனத்தை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டது.

இந்நாளை நினைவு கூர்ந்து, நியாயமான மனித உரிமைகளை மீட்டெடுக்க ஏதுவாக மக்கள்

சிவில் உரிமைக் கழகம் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

தூத்துக்குடி  -தெற்கு புதுத்தெரு. ஜாமியா பள்ளி வாசல் இஸ்லாமிய சமுதாயக் கூட்டரங்கில் 

10.12.2024 (செவ்வாய் கிழமை), நேரம் மாலை 5.30 மணியிலிருந்து 7.00மணி வரை நடைபெற்றது.


தலைமை -

 ச.தே. செல்வராசு 

 PUCL தூத்துக்குடி மாவட்ட தலைவர்.

சிறப்பு விருந்தினர் முன்னாள்  சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் மு. அப்பாதுரை 


கருத்துப் பகிர்வு

 

.அரசியல் சாசனமும் மானிட உரிமைகளும் - பற்றி

 S. ராஜா  PUCL செயலர் பேசினார்




பெண்கள் உரிமை -  சுபேதா 

துப்புரவுத் தொழிலாளர்கள் உரிமை -.பற்றி 

துப்புரவுத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் சகாயம் பேசினார்

அப்போது நெய்தல் அண்டோ 

இப்பொதெல்லாம் தூய்மை பணியாளர் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் படுத்துபவர் என அலெட்சியமாக அழைத்து கொச்சை படுத்தி வருகிறார்கள் கஷ்டப்படும் அவர்களை இனி அப்படி அழைக்காமல்...

மக்கள் நல்வாழ்வு பணியாளர்

மக்கள் நல்வாழ்வு பணியாளர் என அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

அதை அமல் படுத்த pucl  உறுதி யாக முன்னெடுக்கும் என செயலர் ராஜா மற்றும் போராசியை பாத்திமா பாபு சகாயம் ஆகியோர் பேசினர்.

குடிமைச் சமூகம், உரிமைகள் கோரும் தளம் - PUCL, தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

முன்னிலை

அருள்பணி. ஜேம்ஸ் விக்டர், பேராசிரியர் பாத்திமாபாபு  . 

மனித உரிமை புது லோகோ 





அண்ணா சங்குகுழி சங்கத் தலைவர் இசக்கிமுத்து மற்றும் 

, அமல் ஜார்ஜ் சாஜகான் 

தூத்துக்குடி

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர், 

ஜெ. ரிக்டா ஆர்தர் மச்சாது 

அம்ஜித்  (பொருளாளர்)

டாக்டர் ச. ஆர்தர் மச்சாது

S.M. சம்சுதீன் 

நெய்தல் யூ அண்டோ 

S. செபஸ்தியான்

. N. அப்துல் அஜீஸ் 

அசோக்

அமீர்தராஜ் 

 ராபின் விக்டோரியா

ஜெயராமன் 

P. மாரிசெல்வம்


 M.A. கிதர் பிஸ்மி 

M. ஜெயராஜ் 

ச.மு. காந்தி 

P. விக்னேசு 

J. அரிராமன் 

குழந்தை சேசு 

. ரீகன் 

 பெனோ

 தமிழ்ச்செல்வன் 

சிராஜ் 

 தளபதி செபஸ்தியான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் 

மணிப்பூர் சம்பவங்கள் நிகழ்வு கண்டனம் தெரிவித்தனர் 



நன்றியுரை

நவமணி தங்கராஜ்  தெரிவித்தார்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுகசெயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக 

செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .