நடவடிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடவடிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 பிப்ரவரி, 2025

நடந்தது என்ன?அதிரடி நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவனைப் பொதுமக்கள் பாராட்டினர்

TamilNadu updates 20-2-2025

Photo news by Arunan journalist 

அதிரடி நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவனைப் பொதுமக்கள் பாராட்டினர்

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய அண்ணா பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது.


 அதேபோல், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியிலும் பல்வேறு புதிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. 


குறிப்பாக, ஆம்னி பஸ்கள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் இடமிருந்து பாராட்டுக்கள் 



இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே வடபகுதியில் கடந்த சில மாதங்களாக மதுரை திருச்சி திருப்பூர் கோவை சென்னை செல்லும் பஸ்கள் உரிய நடைமேடையில் விட்டு பயணிகளை ஏற்றிச் செல்லாமல்...‌‌???

நடைமேடை நின்று பயணிகளை ஏற்றிச் செல்லாமல்... நுழைவாயில் நின்று கொண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் அவலம்!!!!


நடைமேடையில் கார்கள் டூவீலர் வாகனங்கள் 

மக்ரோனுக்கு ஆசைப்பட்டு முகப்புல பஸ்கள் நின்று.. பயணிகள் ஏற்றி.??
வெறிச்சோடி கிடக்கும் நடைமேடை கவுண்டர்கள்.. பார்க்க 



கடந்த சில மாதங்களாக இப்படி தான் நின்று பஸ்ல பயணிகள் ஏற்றப்பட்ட னர்


வழிப்பாதையில் குறுக்கு நெடுக்காக நின்று பயணிகளை தினம் அவசரமாக பதற வைத்து ஏற்றி சென்று விட்டு போகும் வழியில் தனியார் உணவு விடுதிகள் முன்பு 15 நிமிடத்திற்கு மேலாக மெதுவாக நின்று சென்றனர்

இத்தனைக்கும் அப்பகுதியில் இலவச குடிநீர் வசதி கூட கிடையாது..


இஃது குறித்து பொதுமக்கள் மற்றும் குறிப்பாக தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் தெர்மல் ராஜா உட்பட பலர் குற்றச்சாட்டு வைத்தும்  புகார் மனுயெல்லாம் குப்பையில் விசி புறக்கணிக்க ப்பட்டது.

தமிழக அரசுக்கு கெட்ட பெயர் !!!

பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் வர வேண்டும் எண்ணத்தில் நகர மற்றும் புறநகர் போக்குவரத்து அதிகாரிகள் நடந்து கொண்டார்கள்..


இது குறித்து.....

சமுக நலன் மற்றும் உரிமை தொகை அமைச்சர் கீதா ஜீவன் பார்வைக்கு நாம் கொண்டு சென்றோம்


நேற்று முக்கிய பணியில் இருந்தவர் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பு கொண்டு ..

முன்பு போல்  

 தூத்துக்குடி பொதுமக்கள் பயணிகள் வசதியாக நடைமேடை நின்று ஏற்றி செல்ல அறிவுறுத்தல்கள் செய்தார். 

அவரின் உத்தரவின்படி, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடையில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


இன்று....


இன்று 

இன்று....
இன்று சீரமைப்பு பணியில்...டிப்போ மேனேஜர் மற்றும் ஊழியர்கள் 


பொதுமக்கள் பாராட்டு !!!


இந்த தகவல் பொதுமக்களுக்கு வந்ததும், அவர்கள் அமைச்சர் கீதா ஜீவனின் உடனடி நடவடிக்கையை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

நிகழ்வின் மீது அரசின் உடனடி நடவடிக்கை எடுத்தமை பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே டூவீலர் வாகனங்கள் அதிகம் நிறைந்துள்ளது அருகில் வாகன காப்பகம் செயல் படுகிறது அங்கு சென்று நிறுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்திட வேண்டும்.

மேலும் தகவல்கள் வரவேற்கத்தக்கது!


வியாழன், 2 ஜனவரி, 2025

செம்மரக் கடத்தலில் RMV International Traders மீது புகார்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

செம்மரக் கடத்தலில் RMV International Traders மீது புகார்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை


சென்னை:2025 ஜனவரி 3


ஆவடி பூம்பொழில் நகரை மையமாக கொண்டு செயல்படும் RMV International Traders நிறுவனம், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து செம்மரங்களை (செஞ்சந்தனம்) சட்டவிரோதமாக சேகரித்து அரேபிய நாடுகள், சீனா, நேபாளம், ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது என்ற புகார் எழுந்துள்ளது.



தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள விவசாய நிலங்களில் வளர்க்கப்பட்ட 190 செம்மரங்களில், கடந்த மாதம் சுமார் 20 மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளன.


 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இதற்கான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



இந்த நிலப்பகுதிகள் தனியார் நிறுவனமான Amazo Solar-க்கு விற்பனை செய்யப்பட்ட பின்னரும், மரவெட்டுத் திட்டங்களுக்கு எந்த விதமான அனுமதிகளும் பெறப்படவில்லை. இதனால், சுமார் ₹3 கோடி மதிப்பிலான செம்மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.


இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன், விவகாரத்தை மையமாகக் கொண்டு, தடை உத்தரவை (ந.க.எண்: கு/7074/2024) பிறப்பித்துள்ளார்.


சுங்கத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடத்திய ஆய்வுகள் மூலம், RMV International Traders நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்காக காத்திருக்கின்றனர்.


இவ்வகையான சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து, அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை பாதுகாக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்

அக்ரி பரமசிவன்,

தூத்துக்குடி. 



வியாழன், 14 நவம்பர், 2024

தூத்துக்குடி போக்குவரத்துறை RTO, டிராபிக் காவலர் கும்பகர்ண தூக்கம் களையுமா?

தூத்துக்குடி

போக்குவரத்துறை

RTO, டிராபிக் காவலர்கள் கும்பகர்ண தூக்கம் களையுமா? என்கிறார்கள்.

         

        தூத்துக்குடி மாநகரில் ஷேர் ஆட்டோ, மினி பேருந்துகள் அரசு விதிகளை மீறி செயல்படுகிறது.

2கிமீ 5 ரூபாய் தான் டிக்கெட் அது இங்கு இல்லை ஏன்?

       அரசு 2 கி.மீ தூரம் செல்ல 5 ரூபாய் கட்டணம் வசூலிக்க உத்திரவு வழங்கி உள்ளது.

ஆனால் இங்கு 10 ரூபாய் குறைந்து டிக்கெட் வழங்க மாட்டார்கள் ?

       தூத்துக்குடி மாநகரில் அரசு விதிகளை ஷேர் ஆட்டோ, மினி பேருந்துகள் தூக்கி எறிந்து செயல்படுகிறது.



      ஷேர் ஆட்டோவில் 5 பயணிகள், மினி பேருந்தில் 25 பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆடுமாடு போல மனுஷங்களை அடைத்து செல்லும் அவலம்!!!

        ஷேர் ஆட்டோ, மினி பேருந்தில் பயணிகளை ஆடு,மாடுகளை போல ஏற்றி அடைத்து செல்லப்படுகிறது.


இஷ்டம் போல வழித்தடம்!!!

       தூத்துக்குடியில் 25 மினி பேருந்துகள் செயல்படுகிறது. இந்த பேருந்துகள் அரசு அனுமதித்த வழித்தடம் செல்வதில்லை.

இட நெருக்கடி 

       அது போல தூத்துக்குடி அண்ணா பேருந்தில் RTO அனுமதி பெறாமல் மினி பேருந்துகள் செயல்படுவதோடு, தனி இடவசதி செய்யப்படுகிறது.


       இந்த அதிக எண்ணிக்கையில் தாறுமாறாக நிற்கும் மினி பேருந்துகளால் அண்ணா பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டு, விபத்துகள் உண்டாகுகிறது

       ஷேர் ஆட்டோக்களும் இது போலதான் செயல்படுகிறது. 

வழித்தடம் - போக்குவரத்து விபத்து ?


25 ஷேர் ஆட்டோ உரிமைதாரர்களுக்கு வழித்தடம் தேர்வு செய்யாததால்,....? போக்குவரத்து நெருக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது.

அனைத்தும் ஒரே இடத்தில் இருந்து கிளம்ப வேண்டுமா அதிகாரிகள் தூங்கி விட்டார்களா ?

தூத்துக்குடி வடபகுதியில் மற்றும் குறிப்பாக தூத்துக்குடி புதிய பேருந்து 

நிலையம் அங்கு இருந்து வழித்தடம் ஒன்று கூட இல்லையே ஏன்?



கனி ஹோட்டல் எதிரே அனுமதி வழங்காமலே ஷேர் ஆட்டோ நிறுத்துங்கள் 

     தூத்துக்குடி பால விநாயகர்கோவில்தெரு போக்குவரத்து நிறைந்த பகுதி, மேலும் பிரபல ஹோட்டல்கள், தங்கும் விடுதி, பள்ளி மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த இடத்திற்கு வந்து, செல்ல டிராபிக் (போக்குவரத்துறை) அனுமதி வழங்கவில்லை. 



இடையூறு!!!

ஆட்டோ நிறுத்தும் இடத்தில் ஷேர் ஆட்டோ ???

இந்த ஷேர் ஆட்டோ, ஆட்டோ நிறுத்துமிடத்தில் நிறுத்துவதோடு, விபத்து ஏற்படுத்தும் அபாய நிலை உண்டாக்குகிறது.

பேருந்து நிலைய வாயிலில் முன்பே ஷேர் ஆட்டோ ஏற்றி இறக்கி விடுவதால் ?

இதனால் அரசு பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் உள்ளே போக இடையூறு ஏற்படுகின்றன.

பொதுமக்கள் அவதி!!!

       தூத்துக்குடி போக்குவரத்துறை RTO, டிராபிக் போலீசார் தேவையற்ற வசதி ஏற்படுத்தி  தருவதால் பொதுமக்கள், பயணிகள் சொல்லமுடியாத அவலத்தை சந்தித்துவருகின்றனர்.

  தூத்துக்குடி போக்குவரத்துறை RTO, டிராபிக் போலீசாரின் கும்பகர்ண தூக்கம் கலைத்து விட்டு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.