தமிழக பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஜூன், 2026

மத்திய மாநில உறவுகளை சீர்குலைக்க சதி செய்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு வெங்கடேசன் தமிழக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் பரபரப்பு அறிக்கை

சென்னை ஜுன் 22

தமிழக சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து முதன்மையாக ஒலிக்கப்பட்டதை, பெருமையுடன் ஏற்றுக் கொள்ளாமல், இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக வந்தே மாதரம்' பாடலை இழிவுப்படுத்தி பேசுபவர்கள் மீது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழக எதிர் கட்சிகள் முதல் ஆறு மாதங்களுக்கு தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சிக்காமல், அவதூறு பிரச்சாரம் செய்யாமல், தமிழகத்தின் வளர்ச்சிக்கு, தமிழக மக்களின் மகிழ்ச்சிக்கு உரிய ஆலோசனைகள் வழங்க முன் வர வேண்டும்.


தமிழக முதல்வரான பிறகு, முதல் பிறந்த நாளை கொண்டாடும் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

thoothukudileaks


தமிழக முதல்வராக திரு ஜோசப் விஜய் பதவி ஏற்ற பிறகு ,ஜுன் 18ம் தேதி துவங்கிய முதல் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு ஆளுநர் ரஜேந்திர அர்லேக்கர் அவர்கள் உரையாற்றினார். தேசிய கீதத்திற்கும் உரிய மரியாதை அளிக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது உலகெங்கும் வாழும் தமிழர்களையும் தேசிய சிந்தனை கொண்டவர்களையும் பெரு மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால், எதையும் குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய சிலர், இதிலும் தங்களது தேச விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தி உள்ளனர்.


எப்போதும், எல்லா பிரச்னைகளிலும் மக்களைப் பிரிக்கும் வகையில் பேசி வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழக சட்டமன்றத்தில் சுமூகமாக முடிந்த தமிழ் தாய் வாழ்த்து பாடல் பிரச்னையை பெரிதாக்கி தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்.


"தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது விமர்சனத்துக்குரியதல்ல. நம்முடைய நாட்டுப்பண்ணை எத்தனை முறையும் பாடலாம். ஆனால், நாட்டின் ஒற்றுமைக்கும் மதச்சார்பின்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் “வந்தே மாதரம்” பாடலைப் பாட மறுத்தது தான்  வரவேற்க வேண்டிய முக்கிய செயல்' என்று அவர் கூறியிருக்கிறார். அதுவும் இதை தமிழக அமைச்சர் நிர்மல்குமாரை வைத்துக் கொண்டே கூறியிருக்கிறார். இது தவறான முன்னுதாரணம். கடும் கண்டனத்துக்குரியது.


இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பல லட்சம் மக்களை கொண்டு வந்து சேர்த்த மந்திரச் சொல் 'வந்தே மாதரம்'. அதனால்தான் ஆங்கிலேயர்கள், 'வந்தே மாதரம்' என்ற சொல்லைக் கேட்டாலே அஞ்சினார்கள். ஆனால் இப்போது, 'வந்தே மாதரம்' என்று சொல்லைக் கேட்டு சு. வெங்கடேசன் ஏன் அஞ்சி நடுங்குகிறார் என்பது தெரியவில்லை. 'வந்தே மாதரம்' குறித்து சு. வெங்கடேசனின் கருத்து, சுதந்திரப் போராட்ட வீரர்களை நேரடியாக இழிவுபடுத்தும் செயல். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ள சு. வெங்கடேசன், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தேசிய பாடலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 'வந்தே மாதரம்' பாடலை இழிவுப்படுத்தி பேசுவது கிரிமினல் குற்றம்.


அரசியல் ரீதியாக பாஜகவுக்கு நேர் எதிராக நின்றாலும், மத்திய அரசுடன் இணக்கமான அணுகுமுறையை முதல்வர் ஜோசப் விஜய் பின்பற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். 



இந்தச்  சூழலில் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசன், 'வந்தே மாதரம்' பாடலை இழிவுபடுத்தி பேசியிருப்பது, மத்திய  - மாநில  உறவுகளை சீர்குலைக்கும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.


தமிழக முதல்வர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள்,நிதி ஆயோக் கூட்டத்திற்கு டெல்லி சென்ற போது,  பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்துப் பேசினார்.   30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம், மேகதாது அணை விவகாரம், தமிழக மாணவர்களுக்கு நீட்  தேர்விலிருந்து விலக்கு, தமிழக மீனவர்கள் பிரச்னை, தமிழகத்தில் டிஆர்டிஓ (DRDO) பாதுகாப்பு மையம் அமைப்பது

உள்ளிட்ட தமிழகத்தின் நலன் சார்ந்த பல முக்கிய கோரிக்கைகளை அடங்கிய மனுவை முதல்வர் அளித்துள்ளார் 


தமிழக முதல்வர், பாரத பிரதமரின் இந்த சந்திப்பு, தமிழக வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக, தமிழகத்தின் உட்கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது.  தமிழகத்தின் வளர்ச்சிக்கும், பாரதத்தின் வலிமைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் இலக்கணமான சந்திப்பாக இது அமைந்தது. அதைத் தொடர்ந்தே தமிழக சட்டமன்றத்தில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படு ஆளுநர் உரை சுமூகமாக நடந்து முடிந்தது. அனைவரது மனமும் குளிர்ந்தது. இது முதல்வர் விஜய்க்கு கிடைத்த வெற்றியாகும்.*


*மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனார், தீரர் சுப்பிரமணிய சிவா, வீரத்திருமகன் வாஞ்சிநாதன் பாடி மகிழ்ந்து தமிழகத்தில் விடுதலை தீயை ஊட்டி வளர்த்த 'பாரத தாயை வணங்குவோம்' என்கிற புனிதமான சுதந்திரத்தை பெற்று தந்த தேசபக்தி சுதந்திர பாடலுக்கு தமிழகத்தில் உரிய மரியாதையை முதல்வர் விஜய் அளிக்க வேண்டும்.இந்திய சுதந்திரப் போரில் தேசிய நீரோட்டத்தில் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கிய தமிழகம் பெருமை கொள்ளும் விதமாக தெளிவாக,  தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.


தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களும் சி.பி.எம் பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனின் தேச விரோத, பிரிவினைவாத கருத்துக்களுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். தேசம் முழுவதும் சுதந்திர தாகத்தை விதைத்து,இந்திய தேச விடுதலைக்கு காரணமான "வந்தே மாதரம்" தேசபக்தி பாடலில் அரசியல் செய்யக்கூடாது.


தமிழக எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொன்னது போல, தமிழகத்தின், உரிமை சார்ந்த பிரச்னைகளில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்று  பிரதமரை நேரில் சந்தித்து தீர்வு காண வேண்டும்.  இதுபோன்ற நேர்மறை அரசியலை அனைத்து கட்சி தலைவர்களும் பின்பற்ற வேண்டும்.


எந்த ஒரு அரசுக்கும் குறிப்பிட்ட கால அவகாசம் வேண்டும் எனவே முதல் ஆறு மாதங்களுக்கு தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராக திட்டமிட்டு செயல்படுவதையும்,   அவதூறு பரப்புவதையும் விட்டு விட்டு,  அரசுக்கு உரிய ஆலோசனைகளை எதிர்க்கட்சிகள் வழங்க வேண்டும்.


மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பிறகு, தமிழகத்தில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை  முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ளார்.


 பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசியல் நாகரிகத்திற்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.*


கடந்தா கால ஆட்சிகளில், சுயநல அரசியலுக்காக தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு,  அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்கேடுகள் அதிகமாகி, ஊழல் பெருகி,  ஆபத்தான கேன்சர் நோய் போல தமிழக வளர்ச்சி பாதிக்கப்பட்டு தமிழ் அன்னையை கடந்த ஆட்சி காலத்தில் படுத்த படுக்கையாக்கிவிட்டனர்.


பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அளித்த 14 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி திட்டங்களுக்கும்,  கணக்கு வழக்கு இல்லாமல், மத்திய அரசு என்ன செய்தது என்று அவதூறு பேசி, நடைபெற்ற  நிர்வாக சீர்கேடு காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு,  கடந்த ஆட்சிக் காலங்களில் முடக்கப்பட்டது. 


தமிழக நிதி அமைச்சரின் வெள்ளை அறிக்கை மிகத் தெளிவாக இதை விளக்கி உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் வெள்ளை அறிக்கை என்பது தமிழகத்தின் உண்மை நிலையை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளும் வகையில், தமிழகத்தின் இளம் மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் மக்கள் மன்றத்தில் வெளியிடப்பட்டதன் மூலம் ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வு தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.


*நிச்சயம் தமிழக வெற்றி கழக அரசு, மக்கள் நலம் சார்ந்த புதுமை திட்டங்களை நிறைவேற்றும் வகையில், மிகச் சிறப்பாக தொலைநோக்கு சிந்தனையுடன் சிறப்பாக திட்டமிட்டு, தொடர் முயற்சிகளால், கனிம வளம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் நிதி மேலாண்மையை மேம்படுத்தி, மக்கள் பாதிக்காத வரியில்லாத வருவாயை உருவாக்கும் விதத்தில் செயல்பட்டு, தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் படிப்படியாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு இருக்கிறது.


அதற்காக தமிழக அரசும் தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவும் ஆலோசனைகளும் வழங்குவதை விடுத்து, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை தமிழர்கள் மக்களால் அளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கொச்சைப்படுத்தி, குறுகிய காலத்தில் ஆட்சியை கவிழ்க்க மறைமுக செயல்களில் ஈடுபடக்கூடாது. தமிழக மக்களின் விருப்பத்துக்கு எதிராக, செயல்படும் சதி அரசியல் திட்டங்களில் ஈடுபடும் கட்சிகள் இனி தமிழக அரசியலில் மக்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள்.


ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் 

ansprasadbjp@gmail.com


வியாழன், 19 மார்ச், 2026

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைது விவகாரத்தில் அடுக்குஅடுக்காக பாஜக அண்ணாமலை கேள்விகள் ?

தூத்துக்குடி லீக்ஸ்2026 மார்ச் 19

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள வேடநத்தம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்றது முதல் பத்து நாட்கள் கடந்தும் குற்றவாளியை கைது செய்யாதது குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

thoothukudileaks


இந்த நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை கைது செய்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த கைது நடவடிக்கையைச் சுற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி எட்டயபுரம் அருகே 65 வயதான முதிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், 2022 ஆம் ஆண்டு தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார். 

thoothukudileaks


பின்னர், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

இதன் பின்னர், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு கொடூர குற்றத்தில் ஆயுள் தண்டனை பெற்ற நபருக்கு ஜாமீன் கிடைத்தது குறித்தும், அந்த வழக்கை அரசு முறையாக எதிர்கொள்ளாததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

மேலும், பல வழக்குகள் நிலுவையில் உள்ள குற்றப்பின்னணி கொண்ட நபர் ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அவரை காவல்துறை கண்காணிக்க தவறியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் கண்டதாக கூறப்படும் நிலையில், அந்த காட்சிகளை ஆய்வு செய்ய காவல்துறைக்கு பத்து நாட்கள் எடுத்தது ஏன் என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர் K. Annamalai தனது ஃபேஸ்புக் பதிவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். 

குற்றவாளி கைது செய்யப்பட்ட விதம், முன்னாள் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட சூழ்நிலை, மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உண்மை நிலை என்ன என்பதை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. காவல்துறைக்கு பொறுப்பான தமிழக முதலமைச்சர் M. K. Stalin இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

– தூத்துக்குடி லீக்ஸ்

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

திமுக இன்னும் மதசார்பற்ற கட்சி என மக்கள் நம்ப வேண்டுமா ? முதல்வர் ஸ்டாலினோடு முருகன் கைகோர்த்துள்ளார்” எனப் பேசுவது, தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை அவமதிக்கும் செயல் என பாஜக கடும் காட்டம்!!!

 முருகப் பெருமான் மீது நம்பிக்கையில்லாத முதல்வர் ஸ்டாலினோடு

முருகன் எப்படி கைகோர்ப்பார்?

தனது அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி வரும் உதயநிதி,

முழு உண்மைகளையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்

கடந்த 2022ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,

"நானும் ஒரு கிறிஸ்துவன் தான். கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் காதலித்து மணந்ததும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்தான்"

என்று வெளிப்படையாகக் கூறினார்.


thoothukudileaks


அந்த நேரத்தில் தனிப்பட்ட நம்பிக்கையாக கூறப்பட்ட இந்த கருத்து, தற்போது அரசியல் நிலைப்பாடாக மாறியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

"கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டுமே மனித நேயம், சமத்துவத்தை போதிக்கின்றன. சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக முடியும் என்பதை நிரூபித்தவர் இயேசு கிறிஸ்து"

என்று பேசியுள்ளார்.

கிறிஸ்தவ மதத்தையும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளையும் பாராட்டுவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அது வரவேற்கத்தக்கதே. ஆனால், “கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் வேறுபாடு இல்லை” என்ற கூற்றின் மூலம், திமுக ஒரு மதச்சார்பற்ற கட்சி என்ற அடையாளத்தை இழந்து வருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இதுவரை தங்களை நாத்திகர்கள் என்றும், மதச்சார்பற்றவர்கள் என்றும் கூறி வந்த திமுக தலைமையினர், இப்போது மத அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்களா? கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக தனது உண்மையான அடையாளத்தை வெளிக்கொணர்ந்து வரும் உதயநிதி ஸ்டாலின், மீதமுள்ள உண்மைகளையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவது நல்லது.

"சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக முடியும்" என்பது உண்மையேயான கருத்துதான். ஆனால், திமுகவில் அந்த வாய்ப்பு உண்மையில் இருக்கிறதா? கருணாநிதி குடும்பத்தைத் தவிர, தற்போது ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர, வேறு யாரும் தலைமை பதவியை கனவில்கூட நினைக்க முடியாத நிலை உள்ளது. ஸ்டாலின் குடும்பத்து ஆண் வாரிசுகளுக்கே தலைமை பதவி என்ற நிலை தொடரும் நிலையில், சாதாரண தொண்டன் தலைவர் ஆக முடியுமா என்ற கேள்விக்கு உதயநிதி பதில் சொல்ல வேண்டும்.

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் பி.கே. சேகர்பாபுவின் செயல்பாடுகள், இந்துக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. இந்து கோவில் மரபுகள், திருவிழாக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில், அதற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நடைமுறைப்படுத்த மறுப்பது, இந்து உணர்வுகளுக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகவே பார்க்கப்படுகிறது. கோவில் பணத்தை பயன்படுத்தி, கோவில்களுக்கு எதிராக வழக்குகள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவின் இந்து விரோதப் போக்கு வெளிப்பட்ட நிலையில், “முதல்வர் ஸ்டாலினோடு முருகன் கைகோர்த்துள்ளார்” எனப் பேசுவது, தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை அவமதிக்கும் செயல் ஆகும்.

முருகப் பெருமான் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள், அவரை அரசியல் விளம்பரத்திற்காக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்துக்கள் இன்று விழிப்புணர்வு பெற்றுள்ளனர். நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்து விரோதப் போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு, உரிய நேரத்தில் தக்க பதிலை வழங்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

— ஏ.என்.எஸ். பிரசாத்

செய்தி தொடர்பாளர்


செவ்வாய், 25 நவம்பர், 2025

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் நல அரசியலை செய்ய வேண்டும் தமிழக பாஜக

சென்னை:நவ 25

 மொழி, மத அரசியல் செய்வதை விட்டு மக்கள் நல அரசியலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் நடந்த புத்தக விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழ் மொழி மீது போலியான பாசம் காட்டுவதாகவும், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை திணிக்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சமஸ்கிருத மொழியை "செத்த மொழி" என்று விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள, இந்து மக்களின் புனித மொழியாக போற்றப்படும் சமஸ்கிருத மொழியை இவ்வாறு விமர்சிப்பது அரசியல் சாசன அவமதிப்பாகும். தேர்தலுக்காக மொழி அரசியல் நாடகம் அரங்கேற்றுவது துரதிஷ்டவசமானது.

உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும், இந்து மத வேதங்களை உருவாக்கிய தெய்வ மொழி சமஸ்கிருதம். கணிதவியல், வானவியல், மருத்துவ இயல், அரசியல் உள்ளிட்ட பல துறைகளில் உலகிற்கு வழிகாட்டும் இம்மொழியை இழிவாக பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஒரு மொழியை உயர்த்துவதாக சொல்லி மற்றொரு மொழியை தாழ்த்தி பேசுவது நியாயமா? தமிழை வளர்க்க ஏன் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழ் பல்கலைக்கழகங்களை திமுக அரசு உருவாக்கவில்லை?

கிறிஸ்தவர்களின் புனித நூல் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித நூல் அரபி மொழியில் எழுதப்பட்டது. அவற்றை செத்த மொழி என்று சொல்ல முடியுமா?

துணை முதல்வர் என்ற பதவியில் இருப்பவர் மதச்சார்பின்மையுடன், நடுநிலமையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த மதத்தையும், எந்த மொழியையும் தவறான முறையில் விமர்சிக்கக்கூடாது.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இனி எந்த மதத்தையும், எந்த மொழியையும் விமர்சித்து பேசக்கூடாது என்று தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்தி தொடர்புக்கு:

ஏ.என்.எஸ.பிரசாத்

thoothukudileaks

செய்தி தொடர்பாளர், தமிழக பாஜக

திங்கள், 17 நவம்பர், 2025

எஸ்.ஐ.ஆர் பணிகள் புறக்கணிப்பு : திமுக அரசின் திட்டமிட்ட சதி – வருவாய்த்துறை ஊழியர்கள் அறிவிப்பால் எழும் புதிய கேள்விகள். திமுக எதிர்ப்பு வாக்காளர்களை நீக்கவும், போலி வாக்காளர்களை சேர்க்கவும் இது ஒரு சதி” என தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கடும் குற்றச்சாட்டு

தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

சென்னை 18

தமிழகம் முழுவதும் நவம்பர் 4ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (SIR) சுற்றியுள்ள சர்ச்சை அதிகரித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள போலி பெயர்களை நீக்கி, தகுதியான புதிய வாக்காளர்களை சேர்ப்பது என்ற தேர்தல் ஆணையத்தின் முக்கிய முயற்சியை திமுக திட்டமிட்டே திசை திருப்ப முயல்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

மாடல் 


சட்டப்படி 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்நடவடிக்கையில், திமுக கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதிகாரப்பூர்வ அரசு ஊழியர்களுக்குப் பதிலாக வீடு வீடாக எஸ்.ஐ.ஆர் படிவங்களை வழங்குவதாக பல இடங்களில் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக திமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமே படிவங்கள் வழங்கப்படுகின்றன, திமுக எதிர்ப்பு வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதில் சிரமங்கள் உள்ளன என்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், வருவாய்த்துறை ஊழியர் சங்கங்கள் இன்று (18.11.2025) முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபடமாட்டோம் என்று வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல இடங்களில் திமுக நிர்வாகிகளே படிவப் பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில், வருவாய்த்துறை ஊழியர்களின் விலகல், எஸ்.ஐ.ஆர் முழுவதும் திமுகவின் கையில் சென்று விடும் அபாயத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

“இதற்கெல்லாம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறியாமல் நடப்பது இல்லை. திமுக எதிர்ப்பு வாக்காளர்களை நீக்கவும், போலி வாக்காளர்களை சேர்க்கவும் இது ஒரு சதி” என தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் நேரடி உத்தரவுகளை மீறுவது, குறிப்பாக அரசு ஊழியர்கள் மூலம் வாக்காளர் பணிகளை மறுப்பது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட முக்கிய குற்றச்சாட்டுகள்:

  • திமுக கடந்த 4 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கில் போலி வாக்காளர்களை சேர்த்து வைத்துள்ளது.
  • எஸ்.ஐ.ஆர் மூலம் இவை அனைத்தும் நீங்கிவிடும் என்பதால், திமுக தேர்தல் கமிஷனை தொடர்ந்து அவதூறு பரப்புகிறது.
  • பல்வேறு பகுதிகளில் திமுகவினரே படிவங்களை வழங்கி வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்கள்.
  • வருவாய்த்துறை ஊழியர்கள் எஸ்.ஐ.ஆர் பணிகளில் இருந்து விலகுவது, திமுக ஊக்குவிப்பால் ஏற்படும் மறைமுக மிரட்டல் நடவடிக்கை ஆகும்.
  • அரசு ஊழியர்கள் அரசியல் சார்பற்றவர்களாக இருக்க வேண்டியது அவசியம்; தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

பிரசாதின் கோரிக்கைகள்:

  • திமுக அரசு தேர்தல் ஆணையத்திற்கு விடுக்கும் மறைமுக அழுத்தத்துக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • போலி வாக்காளர்கள் இல்லாத தமிழகம் உருவாக மாநில அரசு தேர்தல் ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
  • முதலமைச்சர் ஸ்டாலின், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை குழப்பும் அவதூறு பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் நம்பகத்தன்மை மற்றும் சீர்திருத்த முயற்சியின் நியாயத்தன்மை குறித்து பொதுமக்களிடையே பெரும் கேள்விகள் எழுந்துள்ளன.

— தூத்துக்குடி லீக்ஸ்

சனி, 8 நவம்பர், 2025

நூறாண்டுகளை கடந்தும் சாதிக்கும் ஆர்.எஸ்.எஸ் தமிழக பாஜக பெருமிதம் .

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல்

தமிழகம் எங்கும் ஆர்.எஸ்.எஸ். 

இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. 

தூத்துக்குடி லீக்ஸ்


ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூறாண்டு கால பயணம் நாடு முழுவதும் உள்ள மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் தேசியச் சுடரை  ஏற்றி உள்ளது. 

ஆர்.எஸ்.எஸ்.ஸின் இல்லம் தேடி வரும் "வீட்டுத் தொடர்பு" நிகழ்ச்சியில் குடும்பத்துடன் இணைந்து மகிழ்வோம்

உலகின் தலைசிறந்த உன்னதமான சேவை இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாடுகள், கலாச்சார மறுமலர்ச்சி, சமூக நல்லிணக்கம், தேசபக்தி,  மனிதநேய செயல்பாடுகள் ஆகியவற்றை விளக்க கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நடைபெற்று வரும் "வீட்டுத் தொடர்பு" நிகழ்ச்சி மூலம் ஒவ்வொருவரின் இல்லத்திற்கு வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் மகத்தான ஆதரவளித்து வருகிறார்கள்.


ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இரண்டு மாபெரும் தலைவர்களான, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் இந்தியாவின் சிறந்த பிரதமர்களாகவும், உலகின் தலைசிறந்த தலைவர்களாகவும் போற்றப்படுகிறார்கள். 


நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்திற்கும் சரியான திசையைக் காட்டி, நாட்டு மக்களை ஒன்று திரட்டி, இளைஞர்களை வழிநடத்தி அழைத்துச் செல்வதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது. 


ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) 1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் துவங்கப்பட்டது. கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது 100 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 2026 விஜயதசமி வரை, ஓராண்டு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.


தமிழகம் முழுவதும், கடந்த அக்டோபர் மாதம் அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள், மாநகரங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்த தொண்டர்களின் சங்கமம் நடந்தது. 


தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த சீருடை சங்கமத்தில் சீருடை அணிந்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், சாதாரண உடைகளில் 50 ஆயிரம் பேரும் என சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த சங்கமத்தில் பங்கேற்றனர். இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் அனைத்து மாநிலங்களிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


கடந்த நவம்பர் இரண்டாம் தேதி வெற்றிகரமாக துவங்கி, வரும் நவம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் வீட்டுத் தொடர்பு இயக்கம் மூலம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., வி.எச்.பி., இந்து முன்னணி, ஏ.பி.வி.பி., உள்ளிட்ட 40 க்கும் அதிகமான அமைப்புகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, அவரவர் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று, மக்களைச் சந்தித்து, ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூறாண்டு பயணம், கொள்கைகள்,

சேவைப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி, நூற்றாண்டு விழா பிரசுரத்தை வழங்க இருக்கின்றனர். 


அதையொட்டி, வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சென்னை மாநகரில் பா.ஜ.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் வீட்டுத் தொடர்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தவுள்ளனர்.


உலகிலேயே திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் வெளிப்படையான அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மட்டுமே. தேசம் முதலில் என்பதுதான் அதன் கொள்கை. தேசத்திற்காக எதையும் கொடுக்கிற, தன்னையே இழக்கிற தன்னார்வலர்களை உருவாக்கி வரும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.


1947 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தான் பகுதியில் பல லட்சம் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஹிந்துக்களுக்காக குரல் கொடுத்து, அகதிகளாக இந்தியா வந்த ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளித்து நம்பிக்கையூட்டிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.


மகாத்மா காந்தி படுகொலையை காரணம் காட்டி நாட்டின் முதல் பிரதமர் நேரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்தார். மக்களுக்கான இயக்கம் என்பதால்தான் அந்த நெருக்கடியில் இருந்து மக்கள் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். மீண்டது.


இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சதி, அவதூறு பிரச்சாரங்களால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்து, அதன் செயல்பாடுகளை முடக்க நினைத்த அனைத்து முயற்சிகளும் மக்களின் பேராதரவில் முறியடிக்கப்பட்டது. 


1975 இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முடக்கினார். அப்போது இந்திராவின் அடக்குமுறைக்கு அனைவரும் அஞ்சிய நிலையில், ஜனநாயகத்தை காக்க தீரத்துடன் போராடியது ஆர்.எஸ்.எஸ். 


எதிர்க்கட்சிகளை ஜனதா கட்சி என்ற பெயரில் ஒருங்கிணைத்து, முதல் காங்கிரஸ் அல்லாத மத்திய அரசை அமைத்தது ஆர்.எஸ்.எஸ். தான்.


ராமஜென்ம பூமி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, அயோத்தியில் ராமர் ஆலயம் என்ற 500 ஆண்டுகள் கனவை நனவாக்கியதும் ஆர்.எஸ்.எஸ்.தான். 


தமிழ்நாட்டில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் பாறை அமைக்க ஏற்பட்ட தடைகளை உடைத்தெறிந்து அதை சாத்தியமாக்கியதும், வேலூர் கோட்டையில் உள்ள அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவரான சிவலிங்கத்தை மக்கள் ஆதரவுடன் பிரதிஷ்டை செய்ததும் ஆர்.எஸ்.எஸ். தான்.


கடந்த மாதம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று ஓலமிட்டார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை எதிர்த்து ராகுல் காந்தி செய்த அவதூறு பிரச்சாரங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டது. 


கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபடுபவர்கள் அரசுப் பணிகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள். 


முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல்


தமிழகம் எங்கும் ஆர்.எஸ்.எஸ். 


இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. 


தினசரி நடக்கும் சமூக விரோதச் செயல்கள், சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றைப் பற்றி கவலைப்படாமல், தேசியம், தேசபக்தி, ஆன்மீகம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தி, மக்களிடையே தேசியத்தையும் தெய்வீகத்தையும் மனிதநேயத்தையும் விதைத்து வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மிரட்டுவதிலும், மக்கள் ஆதரவைக் கட்டுப்படுத்துவதிலும் குறியாக செயல்படுகிறது.


ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது 100 ஆவது ஆண்டு விழாவைக் 

கொண்டாடுவதையொட்டி, கடந்த விஜயதசமி தினத்தன்று தமிழகமெங்கும் சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.

உரிய அனுமதி பெறாமல் நிகழ்ச்சி 

நடத்துவதாக கூறி ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த விஜயதசமி கொண்டாட்டம், குரு பூஜை மற்றும் சாகா பயிற்சி அமர்வை

தடை செய்ய கடும் அடக்கு முறையை மேற்கொண்டு, நிகழ்ச்சி நடத்தக் கூடாது. நடத்தினால் கைது என்று மிரட்டப்பட்டனர்.  


ஆனால் அந்தத் தடைகளை தகர்த்து, தமிழகமெங்கும் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது. 

சென்னை போரூரில் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 

நடத்தும் இடத்தில் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர்  47 பேர் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டனர்.


ஆனால், நீதிமன்ற துணையுடன், மக்கள் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தளராத சேவைப் பணி இன்றளவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதற்கு அடையாளமாக கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நடைபெற்ற வீட்டு தொடர்பு நிகழ்ச்சிக்கு தமிழக மக்கள் பேராதரவு அளித்து  வருகின்றனர்.


எனவே, இந்தத் தருணத்தில் இந்த வெற்றிகளுக்கு வித்திட்ட ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்களை நினைவு கூர்ந்து, இந்த நூற்றாண்டு விழாவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும், அதன் பணிகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.


ஏ.என்.எஸ்.பிரசாத்,

செய்தி தொடர்பாளர்,

தமிழக பாரதிய ஜனதா கட்சி,


வியாழன், 6 நவம்பர், 2025

தூத்துக்குடி ஆர்ப்பாட்டத்தில் பாஜக மகளிர்கள் பேசியது கண்டிக்கத்தக்கது. திமுக டென்ஷன்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

கோவை மாணவி மீதான பாலியல் வன்கொடூரம் கண்டித்து தூத்துக்குடியில் பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, நவம்பர் 6:
கோவை மாவட்டத்தில் 20 வயது கல்லூரி மாணவியை மூன்று காமகொடுரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவத்தை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி சார்பாக இன்று (06.11.2025) காலை 10.00 மணிக்கு 

12- வாசல் மையவாடி முன்புள்ள மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசே மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுந்தன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி தலைவி வெள்ளைத்தாய் தலைமையிலும், மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் முன்னிலையிலும்  கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக மகளிர் அணி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவை மாணவிக்காக நீதி கோரி குரல் எழுப்பினர்.

டாஸ்மாக் கடை தான் காரணம்!!!

ஆர்ப்பாட்டத்தில் ... திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு இல்லை டாஸ்மாக் தான் காரணம் என கொதித்தனர் 

இதில் மகளிர் அணி அனுசூயா உரையாற்றியபோது,
“முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் குறித்து சர்ச்சையாகவும் பேசினார்.

சர்ச்சையாக பேசிய வீடியோ பார்க்க ...

பாஜக மகளிர்கள் பேசியது கண்டிக்கத்தக்கது. 

திமுக டென்ஷன் 

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் அரசியலில் ஈடுபடவில்லை; அவர் ஒரு குடும்ப தலைவி. அவரை குறித்த சர்ச்சைக்குரிய ஆபாச கருத்துக்கள் காவல்துறை கவனிக்காமல் இருப்பது ஏன்?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.




வெள்ளி, 31 அக்டோபர், 2025

முதல்வர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் பீகார் மாநில தேர்தல் பிரச்சாரம் குறித்து திமுக திரித்து பிரதமர் மோடிக்கு எதிரான விமர்சனம் தவறு - பா.ஜ.க கண்டனம்

தூத்துக்குடி, நவம்பர் 1 - 

பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையை திரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்புவதாக பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

thoothukudileaks




இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:

"பிரதமர் மோடிக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் தொப்புள் கொடி உறவை யாராலும் பிரிக்க முடியாது. தமிழகத்தில் பீகார் மக்கள் தி.மு.க.வினரால் துன்புறுத்தப்படுகின்றனர் என்று பிரதமர் மோடி பேசிய உண்மையை திரித்து முதல்வர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார்.

கடந்த காலங்களில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி பிரிவினைவாதம் பேசியதை மக்கள் அறிவார்கள். இதை பிரதமர் சுட்டிக்காட்டியவுடன், தமிழர்களுக்கு எதிராக பிரதமர் பேசியதாக முதல்வர் அவதூறு கூறுகிறார்.


தமிழின் தொன்மையை, திருக்குறளின் மகத்துவத்தை, செங்கோலின் பெருமையை உலகெங்கும் கொண்டு சென்ற பிரதமர் மோடி தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் வீற்றிருக்கிறார்.

தற்போது நகராட்சி நிர்வாகத் துறையில் ₹888 கோடி ஊழல் வெளியானவுடன், அதை மறைக்க தி.மு.க. இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறது. ஊழல், அரசியல் படுகொலைகள், விலைவாசி உயர்வு, போதை கலாச்சாரம் என சமூக விரோத செயல்கள் அதிகரித்து மக்கள் கோபப்படும் நேரத்தில், மக்களைத் திசை திருப்ப பிரிவினையைத் தூண்டுகிறது தி.மு.க.

மன்னிப்பு கேட்க வேண்டும்!!!

பிரதமர் மோடி மீது அவதூறு பேசியதற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பிரதமர் மோடி வீற்றிருப்பதை யாராலும் தடுக்கவும் பிரிக்கவும் முடியாது" என்றார்.

தொடர்புக்கு: ஏ.என்.எஸ்.பிரசாத், செய்தித் தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி 

வியாழன், 2 அக்டோபர், 2025

செந்தில் பாலாஜி ஊழல் அரசியலை மறைக்க முடியாது – பாஜக ஏ.என்.எஸ். பிரசாத் கரூர் சம்பவம் சிபிஐ விசாரணை !!!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி:அக்2

கரூரில் 41 பேர் பலியான கொடிய சம்பவம் தொடர்பாக, தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:


“முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது சட்டவிரோதமான பத்திரிகையாளர் சந்திப்பில், மக்கள் விரோதமான செயல்பாடுகளை மறைக்கும் வகையில் பொய்யான விளக்கங்களை அளித்துள்ளார்.

 ஊழல், பண பலம், சதி அரசியலால் நீதியை குழி தோண்டி புதைக்க முடியாது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்.

கரூரில் ஏற்பட்ட பெரும் உயிரிழப்பின் பின்னணியில் அரசியல் சதி உள்ளதாக பொதுமக்களிடையே சந்தேகம் நிலவுகிறது. 

அதற்கு உடனடியாக சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும். 6 கோடி தமிழர்களின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் முதல்வர் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக இயக்கம் ஊழலை எதிர்க்க உருவாக்கப்பட்டதாக பெருமை பேசிக்கொண்டிருந்த நிலையில், இன்று முழுக்க முழுக்க ஊழலுக்கு துணை போகும் ‘ஐந்து கட்சி அமாவாசை கூட்டணியோடு’ இணைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி, விபத்தின் காரணத்தை நடிகர் விஜயின் வருகை நேரத்துடன் தொடர்புபடுத்தி கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. 

தன்னுடைய ஊழல் அரசியலை மறைக்க, போலியான கேள்வி–பதில் வடிவில் தன்னைத் தானே காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவத்தில் பாஜக எம்பிக்கள் குழு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாதீனமான விசாரணை நடந்து உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.

சிபிஐ விசாரணை தேவை!!

முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், மக்களின் நலனுக்காக சிபிஐ விசாரணையை அறிவிக்க வேண்டும். 


பாஜக, உண்மை வெளிப்படவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் கடைசி வரை போராடும்,” என்று பிரசாத் தெரிவித்துள்ளார்.

– 



செவ்வாய், 30 செப்டம்பர், 2025

நீதி கிடைக்க பாஜக எம்பிக்கள் குழுவுடன் விஜய் இணைந்து செயல்பட வேண்டும் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக நேரில் கேட்டறிய, முழுமையாக கள ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிய தமிழகம் வந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி என்.டி.ஏ சார்பில் குழு பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையிலான எட்டு பேர் கொண்ட என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்கள் உண்மை அறியும் குழுவை தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் சந்தித்துப் பேச வேண்டும். நீதி கிடைப்பதற்கு துணை நிற்க வேண்டும்.

தூத்துக்குடி லீக்ஸ்





தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நடந்து முடிந்த ஒட்டுமொத்த கோர சம்பவத்தின் சூத்திரதாரியாக திமுக அரசின் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இருந்தது என்பது உள்பட திமுக அரசின் மீது தமிழக அரசின் மீது வைக்கப்பட்ட வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்? மற்றும் 41 பேர் உயிரோட சம்பவத்தில் அரசியல் சதி உள்ளது மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் தலையிட்டுள்ளனர் என்கிற படு பயங்கரமான குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களை, முழுமையான தகவல் விவரங்களை அளித்து உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான முழு முயற்சியை நடிகர் விஜய் எடுக்க வேண்டும்.


இந்த கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம், மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது. இதே போல, தமிழக ஆளுநர் ஆர். என். ரவியும் விரிவான அறிக்கையை கேட்டார். 



இதனிடையே, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் நேற்று கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர், வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.


இந்த சூழ்நிலையில் தமிழக வெற்றி கழக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க தேசிய பாஜக கூட்டணி எம்பிக்களின் உண்மை அறியும் குழு இன்று கரூர்  வேலுசாமிபுரத்தில் ஆய்வு செய்ய வருகிறது.  பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆலோசனைபடி 8 பேர் கொண்ட பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு ஹேமமாலினி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி,ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


தமிழக மக்களுக்கு கரூர் 41 பேர் பலியான சம்பவம் குறித்த உண்மைகள் தெரிய வேண்டும்.

சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு, காயமடைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேசிய பாஜக முழுமையான விசாரணை மேற்கொள்ள உள்ளது. இந்த சம்பவத்தில் அரசியல் சதி உள்ளதா? 

தமிழக அரசின் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் நிர்வாக சீர்கேடுகள் தான் இதற்கு காரணமா?

தமிழக வெற்றி கழகத்தின் ஏற்பாடுகளில் குறையுள்ளதா உள்ளிட்ட அனைத்து விஷயங்களை

பாஜக எம்பிக்கள் குழு ஆய்வு செய்து உண்மை விவரங்களை சேகரிக்க உள்ளது.


இந்தக் குழு  கரூரில் கூட்ட நெரிசல் நடைபெற்ற பகுதியில் இன்று ஆய்வு  செய்கிறது. கரூரில் உள்ள  மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நடந்த கோர சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரிக்க உள்ளது.


 மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, இந்த சம்பவம் தொடர்பான முழுமையான கள ஆய்வுகளை மேற்கொண்டு இது தொடர்பாக அறிக்கையை பாஜக தலைமைக்கு தாக்கல் செய்ய உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும், தமிழக வெற்றி கழகம் அரசியல் சதி உள்ளது என்று கூறியுள்ள குற்றச்சாட்டின் உண்மை தனிமை குறித்தும்  பாஜக முழுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்...


"கரூரில் 41வது பேர் உயிரிழந்த கோர சம்பவம் தொடர்பான உண்மை அறியும் தேசிய பாஜக குழுவை தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் சந்திக்க வேண்டும். அந்த குழுவினருக்கு தேர்தல் பிரச்சாரத்தின் இந்த கோர விபத்து ஏற்பட்ட போது,  என்ன நடந்தது என்பது  குறித்து முழுமையாக களத்தில் நடந்த உண்மை நிலவரங்களை விஜய் அளிக்க வேண்டும்."


ஏனென்றால் களத்தில் அந்த கோர சம்பவம் நடந்த நடந்த விஷயங்களை நேரில் நின்று பார்த்தவர் மற்றும் இந்த நிகழ்ச்சியின் நடுநாயகமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக,  முதல் சாட்சியாக அறியப்படுபவர் நடிகர் விஜய். 


பாஜக குழுவினர் மக்களிடம் விசாரணை நடத்தினாலும் தமிழக அரசு காவல்துறை, அதிகாரிகளும் கேட்டு தெரிந்து கொண்டாலும் நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றி கழக கட்சியினர், நிர்வாகிகள் அளிக்கக்கூடிய தகவல்கள் செய்திகள், உண்மைகளை தெளிவாக எடுத்து கூறக்கூடியதாக கருதப்படுவதால், நடிகர் விஜய் உடனடியாக, தேசிய பாஜக கரூர் சம்பவம் உண்மை அறியும் குழுவினரை தன்னுடைய நிர்வாகிகளுடன் சந்தித்து இது சம்பந்தமாக தன்னுடைய  கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.


இன்றைக்கு தமிழகத்தில்  மக்கள் விரோத, சட்டங்களை மதிக்காத கொடிய ஆட்சி நடக்கிறது.தமிழக மக்கள் இன்றைக்கு திமுக ஆட்சிக்கு எதிராக பேசினால், கருத்து தெரிவித்தால், உண்மைகளை வெளிப்படுத்தினால், தமிழக அரசின் ஏவல் துறையாக விளங்கும் காவல் துறையால் வழக்குகள் தொடுக்கப்படலாம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக படுகொலைகள் நடக்கும் தமிழகத்தில் தாங்களும் கொல்லப்படலாம் , மிரட்டப்படலாம் என்ற அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் உண்மைகளை பேசுவதற்கு கரூர் நகர மக்கள் தயக்கம் காட்டுவார்கள்.


*ஆனால் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்க்கு அப்படி இல்லை. விஜய் திமுகவை எதிர்த்து தான் அரசியல் செய்கிறேன். திமுகவை வீழ்த்துவது என் லட்சியம் என்று கூறி அரசியல் செய்யும்பொழுது இந்த கோர சம்பவத்தில் 41 பேர் தன்னுடைய உயிரினும் மேலான கட்சித் தொண்டர்கள், உயிருக்கு உயிரான ரசிகர்கள், ஆதரவளித்த தமிழக மக்கள் உயிர் இழப்புக்கு காரணமான  சம்பவத்தில் உண்மைகளை சொல்ல வேண்டியதும் உண்மைகளை விழிப்புணர் வேண்டியதும் வேண்டியதும் நடிகர் விஜய் அவருடைய மிக முக்கிய பொறுப்பும் தலையாயக் கடமை ஆகும்.


எனவே நடிகர் விஜய் அரசியலுக்கு அப்பாற்பட்டு, தேச நலனை மக்கள் நலனை தமிழக நடனை கருத்தில் கொண்டு தேசிய பாஜக அமைத்துள்ள உண்மை அறியும் குழுவுடன் இணைந்து கரூர் சம்பவத்தின் பின்னணி குறித்த விவரங்களை வெளிக்கொணர 

முழு முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுக்கொள்கிறது. 


ஏ என் எஸ் பிரசாத் 

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்

இவ்வாறு தெரிவித்துள்ளார் 

திங்கள், 29 செப்டம்பர், 2025

கரூர் விபத்து: சிபிஐ விசாரணை அறிவிக்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல் நடிகர் விஜய்க்கு திமுக அரசோடு இணக்கமாக செல்ல அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு விஜய்க்கு பாஜக ஆதரவு அறிவுரை

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

சென்னை செப்டம்பர் 29, 2025

கரூர் தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார். 





இந்த சம்பவத்தில் அரசியல் சதி இருப்பதாக சந்தேகம் எழுப்பப்படுவதால், முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை பலனளிக்குமா ? என்று அவர் தெரிவித்துள்ளார்.


## முக்கிய கோரிக்கைகள்

## உடனடி சிபிஐ விசாரணை


6 கோடி தமிழக மக்களின் கேள்விக்கு விடை காண முதல்வர் ஸ்டாலின் சிபிஐ விசாரணையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார். 

திமுக அரசு நியமித்துள்ள குறுகிய கால அவகாச விசாரணையால் எந்த பயனும் இல்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


### போஸ்ட்மார்ட்டம் வெளிப்படைத்தன்மை


இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் தமிழக அரசு முழு வெளிप்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என பிரசாத் வலியுறுத்தியுள்ளார். அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு போஸ்ட்மார்ட்டம் நடைபெற வேண்டும் என்றும், அது முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


### ஐஜி தலைமையில் விசாரணை


சிபிஐ விசாரணைக்கு முன்பாக, ஐஜி அந்தஸ்தில் உள்ள நேர்மையான காவல்துறை அதிகாரி தலைமையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரசாத் கோரியுள்ளார். எத்தனை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், மாவட்ட காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, ஆயுதப்படை காவலர்கள் எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர் என்பது உள்பட அனைத்து கோணங்களிலும் முழுமையான கள ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


## அரசியல் சதி குற்றச்சாட்டு


தமிழக வெற்றி கழகத்தின் நீதிமன்ற மனுவில் கூறப்பட்டுள்ள சந்தேகப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரசாத் வலியுறுத்தியுள்ளார். 


இந்த கோர குற்றச்செயலில் அரசியல் பின்னணி இருக்கிறதா, உள்ளூர் அரசியல்வாதிகளின் சதி இருக்கிறதா என்பதை தயவு தாட்சண்யம் இல்லாமல், பாரபட்சமில்லாமல் விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.


எவ்வளவு பெரிய அரசியல் சக்தியாக இருந்தாலும், ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளியாக இருந்தாலும், சந்தேகம் எழுப்பப்பட்ட நபர்களுக்கு சம்மன் அளித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். மின்சார வாரியம், உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள், உள்ளூர் தாசில்தார் வரை அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.


## விசாரணை அதிகாரி மாற்றம் சந்தேகம்


முன்னதாக கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளது 

தமிழக அரசின் அக்கறை இன்மையையும், விசாரணையில் போதிய முன்னேற்றத்தை துரிதமாக எடுத்துச் செல்வதில் ஆர்வம் இல்லாததையும் காட்டுகிறது என பிரசாத் குற்றம்சாட்டினார்.



## ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு


மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் விஜய்க்கு ஆறுதல் கூறியதாக கூறப்பட்டாலும், திமுக அரசோடு இணக்கமாக செல்லுமாறு அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன என பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.


நேற்று ராகுல் காந்தி யார் யாரிடம் என்ன பேசினார் என்பதை நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும், தமிழக காவல்துறையும் விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். 


கரூர் கோர சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாகவும், உண்மைகளை மறைக்க ராகுல் காந்தி மறைமுக முயற்சி எடுத்து வருவதாகவும் பிரசாத் குற்றம்சாட்டினார்.


## விஜய்க்கு அறிவுரை


தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆலோசனைகளை தவிர்க்க வேண்டும் என பிரசாத் வலியுறுத்தியுள்ளார். 


தன்னைக் காண வந்து உயிரிழந்த 41 பேருக்கு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தும் வகையில், அந்த குடும்பங்களுக்கு நம்பிக்கை அளித்து, எந்தவித சமரசமும் இல்லாமல், திமுக அரசின் மிரட்டலுக்கும் அடிபணியாமல், வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


## பாஜக ஆதரவு


தமிழக பாஜக இந்த கோர சம்பவத்தின் விசாரணை விவகாரத்தில் தமிழக அரசுக்கும், நடிகர் விஜய்க்கும், தமிழக மக்களின் எண்ணத்தின்படி உண்மைக்கும், நியாயமான விசாரணைக்கும் முழுமையாக துணை நிற்கும் என பிரசாத் உறுதியளித்துள்ளார்.

- ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்

புகைப்படம் வீடியோ செயற்கை தொழில்நுட்பம் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது 

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தனியாக சிக்கிய பிஜேபி பிரமுகர் போட்டு புரட்டி எடுத்த காம்ரேட்டுகள்!!! தூத்துக்குடியில் டிஷ்யூம் டிஷ்யூம் ஃபைட் சம்பவ இடத்தில் வெகு நேரமாக வராமல் தாமதமாக வந்த காவல் துறை!! நடந்தது என்ன முழு விவரம் !

Tamil Nadu updates 5-9-2025

செய்தி புகைப்படங்கள் 

அருணன் செய்தியாளர்


தூத்துக்குடி செப் 5

தூத்துக்குடி மண்ணின் மைந்தர் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் ஜயா வின் 154 வது பிறந்த நாள் செப் 5 இன்று தமிழகம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது 


மேலும் தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் ஏகமாக இந்த தடவை இந்திய சுதந்திர போராட்ட போராளி வ உ சிதம்பரனார் ஜயா பிறந்த நாளை வழக்கத்தை விட வெகு உற்சாகமாக கலந்து கொண்டு கொண்டாட.... 


பிறகென்ன??? 

 தூத்துக்குடியில் பிஜேபி கட்சி கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் சரமாரியாக மோதி சண்டையில் போய் முடிந்ததுள்ளது


இன்று காலை 9 மணி ஆரம்பத்திலே திமுக அதிமுக மற்றும் சமுக அமைப்புகள் சாதி சங்கங்கள் வ உ சி ஜயா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு லட்டு வழங்கி சென்று விட்டார்கள் 

டிஷ்யூம் - டிஷ்யூம்!!!

அடுத்து வந்த சிஐடியூ மாவட்ட செயலாளர் ரசல் தலைமையில் வந்த கம்யூனிஸ்ட் தோழர்கள் தங்களது பிரச்சார வாகனத்தில் 25 க்கும் மேற்பட்டோர் வந்து இறங்கினார்கள்

Thoothukudileaks


வ உ சி சிலைக்கு இடத்திற்கு முன்பாக பேனர் கொடி ஏந்திய வாறு    தங்களுடன் கொண்டு வந்த மைக் பிடித்து சிஐடியூ மாவட்ட செயலாளர் ரசல்  மகாகவி பாரதியார் சுதேசி கொள்கையாளர் வ உ சிதம்பரனார் பற்றி பேச தொடங்கினர்

 அவர் பேசுகையில்...

இந்த மக்கள் ஒற்றுமை பிரச்சாரம் இயக்கம்  

பாரதியாரும் வ உ சிதம்பரனாரும்  மத வெறி சாதி வெறி எதிராக  களமாடிய இந்த மண்ணில் 

வ உ சிதம்பரனார் பிறந்த நாள் இன்று தொடங்கி பாரதியார் நினைவு நாள் செப் 11 தேதி வரை மாவட்ட முழுவதும் பிரச்சாரம் தொடங்கி இருக்கிறோம்.

மாவட்ட முழுவதும் மத வெறி சாதி வெறி தலை விரித்து ஆடுகிறது முடிவு கட்ட வேண்டும் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்


"இந்திய பொருளாதாரத்தை காப்ரேட் நிறுவனங்கள் இடம் அடகு வைக்கும் கொள்கைக்கு எதிராக யுத்த களமாக உள்ள நாடு மாறுவதற்கு மகாகவி பாரதியாரும் வ உ சிதம்பரனாரும் மிக பெரிய ஆதர்சனமாக விளங்குகிறார்கள்


இன்றைக்கு...

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவின் பொருளாதாரத்தை காவு கேட்டு கொண்டிருக்கிற இந்த நிலையில்....?


இந்தியா வின் ஆளும் வர்க்கம் அவர்களுக்கு அடி பணிந்து கொண்டு இருக்கும் நிலையில்...."


என ரசல் பேசி கொண்டு இருக்கும் போதே....

பேசுவதை  சகித்துக் கொள்ள முடியாமல் ரசல் அருகே 

ஒடி வந்தார் பிஜேபி கட்சி சொக்கலிங்கம்  ....?


பின்னர் என்ன நடந்தது என்றால்???

 பிஜேபி கட்சி பிரமுகர் சொக்கலிங்கத்தை காம்ரேட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனைவரும் சேர்ந்து கன்னத்தில் கும்மாங்குத்து அடித்து துரத்த தொடங்கினர் 



விஷயறிந்து பாஜக மாநில துனை செயலாளர் சசிகலா புஷ்பா பாஜக தொண்டர்கள் படையுடன் களத்தில் இறங்கி மல்லு கட்ட தொடங்கினார்.


சம்பவ நடந்த போது ஸ்பாட்டில் ஒரு போலீஸ் கூட அங்கு இல்லை  தாமதமாக தான் போலீஸ் வந்து சேர்ந்தது.


ஒரு வழியாக காம்ரேட் -களை சமாதான படுத்தி வழி அனுப்பி வைத்தனர் 


கடுங் கோபத்தில் இருந்த பாஜக கட்சியினர் மாநில துனை செயலாளர் சசிகலா புஷ்பா தலைமையில் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பாரத் மாதா கி ஜெ கர கோஷம் எழுப்பினர்.

பாஜக மாநில துனை செயலாளர் சசிகலா புஷ்பா தலைமையில் வ உ சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த வீடியோ 


இது குறித்து மத்திய காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சொக்கலிங்கம் புகார் மனு கொடுத்திருப்பதாக தகவல்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

தமிழக காவல்துறையில் முழுமையான சீரமைப்பு – ஐந்தாவது காவல் ஆணைய பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : பாஜக




சென்னை: ஆகஸ்ட் 26
தமிழக காவல்துறையை உலகளவில் மதிக்கப்படும் முன்னோடியான அமைப்பாக மாற்ற வேண்டும் என்று, தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளார்.



அவர் தனது கடிதத்தில்,
“தமிழகத்தில் 6.5 கோடி மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், மனிதநேயம், நேர்மை, தொழில்முறைத் தன்மையுடன் செயல்படும் காவல்துறையை உருவாக்க வேண்டும். அதற்காக ‘தமிழக காவல் ஆணையம் – 2025’ என்ற பெயரில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இந்த ஆணையம் பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக அமைப்புகள், காவலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கருத்துகளை பெற்று சீரமைப்பு பரிந்துரைகளை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காவல்துறையில் நிர்வாக சீர்கேடுகளை களைவதற்காக அனைத்து கட்சிகளின் ஆலோசனையையும் அரசாங்கம் பெற வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு,

  • ஐந்தாவது காவல் ஆணைய பரிந்துரைகள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.
  • அதிகார துஷ்பிரயோகத்துக்கு கடுமையான ஒழுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • காவல் நிலைய மரணங்கள் குறித்து சி.ஐ.டி.க்கு உடனடி விசாரணை ஒப்படைக்க வேண்டும்.
  • உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப கைதுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை கொண்ட மேற்பார்வை குழு அமைக்கப்பட வேண்டும்.
  • உடல் கேமரா, டாஷ்போர்டு கேமரா போன்ற தொழில்நுட்பங்கள் காவல்துறையில் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
  • ஊடக தொடர்பு பிரிவை மேம்படுத்தி, காவல்துறையின் நேர்மறையான பிம்பத்தை உருவாக்க ‘ஊடகக் கொள்கை’ வகுக்கப்பட வேண்டும்.

“தமிழகத்தின் முதலமைச்சராகவும் காவல்துறை அமைச்சராகவும் உள்ள தங்களின் தலைமையில் இந்த சீரமைப்புகள் முன்னெடுக்கப்பட்டால், சட்டத்தின் ஆட்சியும் மக்களின் நம்பிக்கையும் வலுப்பெறும். தமிழக காவல்துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாக மாறும்” என பிரசாத் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


👉 ?

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணத்தை ஊழல் கொம்பன்களும், அரசியல் சகுனிகளும் தடுக்க முடியாது என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.



தூத்துக்குடி லீக்ஸ்
திருநெல்வேலி, ஆகஸ்ட் 24

அமித்ஷா பயணத்தை தடுக்க முடியாது – பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கண்டனம்

திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக முதல் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணத்தை ஊழல் கொம்பன்களும், அரசியல் சகுனிகளும் தடுக்க முடியாது என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.



திருநெல்வேலியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாவட்டம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பாஜக கட்சியினரும், பொதுமக்களும் உற்சாகமாக பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியவுடன் “பாரத மாதா கி ஜெய்”, “என எழுந்த கோஷங்கள் மண்டபத்தை முழுவதும் அதிர வைத்தன.


அமித்ஷா பேச்சு  

 உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த கட்சி திமுக தான். ஊழலை  வேரோடு பிடுங்குவோம்

மாநாட்டில் பேசுகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த கட்சி திமுக தான். மக்கள் எதிர்ப்பு உச்சத்தை எட்டியுள்ள இந்த ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம்.


 பிரதமர் நரேந்திர மோடி தமிழக வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அளித்தும், திமுக அரசு அதை மக்களிடம் சென்றடைய விடவில்லை” எனக் கூறினார்.

அவரது உரைக்குப் பெரும் கைதட்டல்கள் எழுந்தன. தமிழகத்தில் தாய்மார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில்  வரவேற்பு எழுந்து வருகின்றனர்.


பாஜக மாநில செய்தி தொடர்பாளர் விளக்கம்

இந்த உரையின் பின்னணியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், 

“அமித்ஷா ஊழல் ஆட்சியை ஒழிப்போம் எனக் கூறியவுடன், திமுக தலைவர்களும் கூட்டணிக் கட்சிகளும் பரபரப்பாக எதிர்வினை தெரிவிக்கத் தொடங்கினர். இது அவர்களின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது” என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் சமீபத்திய பேச்சை கண்டித்த அவர், “திருக்குறளை வைத்து வாக்கு திருட முடியாது என்று கூறுவது பிரதமரை அவமதிப்பதோடு மட்டுமல்லாமல் தமிழர் பாரம்பரியத்தையே கெடுக்கும் முயற்சி. இதற்கு முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கடுமையாக சாடினார்.


ஒட்டு திருடர்கள் யார்?

“அமித்ஷா ஆயிரம் முறை வந்தாலும் பாஜக காலூன்ற முடியாது” என காங்கிரஸ் தலைவர் பேசியதையும் அவர் சாடினார்.

 “மகாபாரதத்தில் கௌரவர்கள் அழிவை சந்திக்க வைத்த தீய எண்ணம் போல, இன்று திமுக கூட்டணியினர் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் ‘ஓட்டு திருடர்கள்’ என்று அவதூறு பேசுகிறார்கள். 

இதை ரசித்து ஸ்டாலின் அமைதியாக இருந்தால் அதே நிலை திமுக கூட்டணிக்கும் நேரிடும்” என எச்சரித்தார்.

அதேபோல், “திமுகவிற்கு போட்டியே கிடையாது” என அமைச்சர் நேரு கூறியதையும் அவர் பரிகசித்தார்.


ஊழல் வழக்குகள் – ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்

“எட்டு மாதங்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி போன்றவர்கள் இனி தமிழக அரசியலில் இடம்பிடிக்க முடியாது. 130 சட்ட திருத்த மசோதாவை திமுக அரசு கருப்பு மசோதா என விமர்சிக்கிறது. 


ஆனால் உண்மையில் அது ஊழல் அரசியல்வாதிகளை தடுக்கவே கொண்டு வரப்பட்டது


எனவே அமித்ஷாவின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.


2026 தேர்தல் –


தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 
 தலைமையில் வலுவாக உள்ளது. 


"திமுக கூட்டணி கட்சிகளும், மிஷனரி நடிகர்களும், தங்களது வருமானத்திற்காவே அரசியல் பிழைப்பு நடத்தும் செபாஸ்டின் சீமான் போன்ற பிரிவினைவாதிகளும் தமிழகத்தில் சலசலப்பை மட்டுமே உருவாக்கலாம் ஒழிய மக்கள் மனதில் இடம் பிடித்து ஜெயிக்க முடியாது."

பாரத பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலிலும், அமித்ஷா அரசியல் நெறியிலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும்” என பிரசாத் உறுதியளித்தார்.


ஏ.என்.எஸ். பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்


👉 

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

நடிகர் விஜய் – அரசியல் நடிகராக அல்ல, மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும் : பாஜக

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

சென்னை : ஆகஸ்ட் 23

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில்,

“நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர் மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும்.

அரசியல் நடிப்பு!!!

 ‘தனி ஆள் இல்லை, கடல் நான்’ என்ற வாசகத்துடன் செல்பி பகிர்ந்த விஜய் முதலில் திருக்குறள், டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, இந்திய அரசியல் சாசனம், மாணவ தர்ஷன் இலக்கணம் ஆகிய நூல்களைப் படித்து புரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் அவரது தற்போதைய அரசியல் நடிப்பு மக்களுக்கு பயனுள்ளதாக மாறும்” என தெரிவித்துள்ளார்.



மேலும்,
“மதுரை மாநாட்டில் விஜய் வைத்த உரை அரசியல் திரைப்பட உரை போல் இருந்தது. மக்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்லதே. ஆனால் விஜய் தேர்தல் வாக்கு வங்கி நோக்கத்துடன் செயல்படுகிறார். திமுக அரசின் தவறுகளை வெளிப்படுத்தாமல் விளம்பர அரசியலில் மூழ்கியுள்ளார்.


 ‘மிஸ்டர் -பி.எம்’, ‘அங்கிள்’ எனும் பேச்சுகள் அரசியலின் தரத்தை தாழ்த்துகின்றன. கடந்த காலத்தில் அரசியல் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்த விஜய், இப்போது மக்களை ஏமாற்றும் விதத்தில் நடந்து கொள்கிறார்” என்றும் விமர்சித்துள்ளார்.

அதோடு,....
“முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஊழல், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு ஆகிய பிரச்சினைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவற்றை எதிர்த்து குரல் கொடுக்கும் நிலைப்பாட்டில் விஜய் செயல்பட வேண்டும். 


ஒன்றரை ஆண்டுகளில் கட்சி தொடங்கி திடீர் முதல்வர் கனவில் மூழ்குவது பொருத்தமல்ல. மக்களின் நலனுக்காக செயல்படுவதே ஒரு உண்மையான அரசியல்வாதியின் கடமை” என்று கூறியுள்ளார்.

இறுதியாக,...
“தமிழக வெற்றிக்கழக தொண்டர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில், தீய சக்தியான திமுகவை வீழ்த்தும் பணியில் விஜய் ஈடுபட வேண்டும்
.

 அப்போதுதான் அவர் தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் நம்பிக்கைக்குரிய தலைவராக உயர வாய்ப்புண்டு” என பிரசாத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி லீக்ஸ்



செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

திருநெல்வேலியில் அமித்ஷா பங்கேற்கும் முதல் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாடு – தமிழக அரசியலில் திருப்புமுனை!

திருநெல்வேலி, ஆக.20 –

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,.. திருநெல்வேலியில் நடைபெற உள்ள முதல் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழக அரசியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.





ஆகஸ்ட் 22-ல்...

இந்த மாநாடு ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர், அரசியல் சாணக்கியர் என போற்றப்படும் அமித்ஷா  நேரில் பங்கேற்கிறார்.


 மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில்,.. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் தொடர்பான சிறப்பு பயிற்சியை பெற உள்ளனர்.


நெல்லை உள்பட தென் மாவட்டங்களில் உள்ள 5 மக்களவைத் தொகுதிகள், 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 8,595 பூத் கமிட்டிகளின் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வர்.

பயிற்சி!!!

 வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றியை இலக்காகக் கொண்டு, வாக்குச்சாவடி மட்டத்தில் மக்கள் தொடர்பு, தேர்தல் மேலாண்மை, திமுக அரசின் ஊழல் மற்றும் மக்கள் விரோத ஆட்சியை வெளிச்சமிட்டு காட்டும் பிரச்சார முறைகள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் உத்திகள் குறித்து விரிவான பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ஏ.என்.எஸ். பிரசாத் தனது அறிக்கையில்,...
“தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். திமுகவின் ஊழல், கள்ள ஓட்டு, பண விநியோகம் போன்ற அராஜக தேர்தல் முறையை வீழ்த்தி, ஒவ்வொரு பூத்திலும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று பாஜக தொண்டர்கள் வெற்றியை உறுதி செய்வார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


அதோடு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்கிய மக்கள் நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட பங்களிப்புகள் குறித்து இந்த மாநாட்டின் மூலம் வீடு தோறும் எடுத்துச் செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாநாட்டைத் தொடர்ந்து...

, செப்.13-இல் மதுரை, அக்.26-இல் கோவை, நவ.23-இல் சேலம், டிச.21-இல் தஞ்சாவூர்,2026 ஜன.4-இல் திருவண்ணாமலை, 2026ஜன.24-இல் திருவள்ளூர் ஆகிய இடங்களிலும் மாநாடுகள் நடைபெறவுள்ளன.

திருநெல்வேலி மாநாட்டில்... பாஜகவின் முன்னாள் தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர்ராஜன், அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.



அமித்ஷா அவரின் வருகை...

 தமிழக பாஜக தொண்டர்களில் மிகப்பெரிய எழுச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றும் அடித்தளமாக இந்த மாநாடு அமையும்” என அறிக்கையின் மூலம் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.


👉 

வியாழன், 10 ஜூலை, 2025

ஊடகத்தினர் மீது மதிமுக கொடூர தாக்குதல் ஊடக சுதந்திரம் தக்கவைக்கப்படும் வரை போராடுவோம் – பத்திரிகையாளர்கள் மீது வைகோவின் மதிமுக கட்சியினர் தாக்குதலுக்கு பாஜகவின் கடும் கண்டனம்"



தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
விருதுநகர் மாவட்டம் – 10 ஜூலை 2025

பத்திரிகையாளர் பாதுகாப்பு மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து தமிழக பாஜக மாநில பேச்சாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள கடும் கண்டன அறிக்கை:

“ஊடக சுதந்திரம் ஜனநாயகத்தின் நான்காவது தூண். அதை தாக்குவோர் ஜனநாயகத்தை முற்றிலும் நிராகரிப்பவர்களே. பத்திரிகையாளர்களை தாக்கிய எம்.டி.எம்.கே. தலைவர் வைகோ சட்டத்தின் முன்னால் கண்டிக்கப்படவேண்டும்” என பாஜக மாநில பேச்சாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

மாடல் மாதிரி படம் 


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற எம்.டி.எம்.கே. கூட்டத்தில், நிகழ்வில் காலியாக இருந்த நாற்காலிகளை புகைப்படமாக எடுத்த பத்திரிகையாளர்களை கட்சியினரால் தாக்கிய சம்பவம் குறித்து  தமிழக பாஜக மாநில பேச்சாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



“இந்த தாக்குதல் திட்டமிட்டு செய்யப்பட்டதாகவும், அதற்குத் தாயாராக்கியவர் நேரடியாக வைகோவாகவே இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது வேடிக்கையாக அல்ல, வெட்கமாக இருக்க வேண்டிய செயல்” என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் பத்திரிகையாளர்கள்

  • மனிவண்ணன் (பாலிமர் டிவி)
  • ஜெயராமன் (தமிழ் ஜனந் டிவி)
  • கருப்புசாமி (தந்தி டிவி)
  • பாலா (நியூஸ் தமிழ் டிவி)
    தாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இந்த தாக்குதலை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசு மீது பரபரப்பான விமர்சனங்களை அவர் எழுப்பினார்.

“திமுக அரசு ஊடகங்களை ஆளும் ஆட்சி மீது விமர்சனங்கள் கூறக்கூடாது என்ற பாணியில் செயல்படுகிறது. 

இது ஒரு அதிநவீன பார்ப்பனீய, பாசிச போக்கு. வைகோவின் கட்சி, தங்களது முக்கியத்துவத்தை இழந்த நிலையில், திமுகவின் கருணையிலேயே உயிர் வாழும் ஒரு ‘லெட்டர்பேட் கட்சி’யாகவே மாறி விட்டது. அதற்கான சாட்சியே பத்திரிகையாளர்களை தாக்கும் வன்முறைக் காட்சி” என அவர் விமர்சித்தார்.

பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“நாடு மற்றும் மாநிலத்தில் சிக்கல்கள், குற்றங்கள் குறித்து ஒளிரவைக்கும் பத்திரிகையாளர்கள் அடிக்கடி தாக்கப்பட்டு வருகின்றனர்.


 மணல் கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களை வெளிக்கொணர முயற்சிக்கும் ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்களை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை. 


இது ஒரு அபாயகரமான சூழ்நிலையை உருவாக்குகிறது. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடக்கக்கூடியதென்று உணர்ந்து, அதில் தண்டனை கிடைக்காத அளவுக்கு அரசியலமைப்பு செயல்படாது என்றால், அது ஜனநாயகத்தின் வீழ்ச்சியின் அறிகுறி" எனக் கூறினார்.

வைகோவின் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், “CrPC சட்ட பிரிவுகளின் கீழ் முதன்மை குற்றவாளியாக அவர் கைது செய்யப்பட வேண்டும். அவரும், தாக்குதலில் ஈடுபட்ட எம்.டி.எம்.கே. நிர்வாகிகளும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை புறக்கணித்து வருவதாகவும், ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டிய பொறுப்பை தவிர்த்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

“அரசியல்வாதிகள் மீதான விமர்சனங்களுக்கு ஊடகங்கள் உரிமை உடையவை. அதனை அடக்கிச் செல்லும் எண்ணமே ஜனநாயகத்திற்கு எதிரானது. ஊடகங்கள் மீது கை வைக்கும் அரசு, எதிர்கால ஜனநாயகத்தின் மீது குத்துவைத்தது போல் தான்” எனவும் அவர் கூறினார்.


“உண்மையை எழுதும் பத்திரிகையாளர்கள் எப்போதும் அச்சுறுத்தப்படுகிறார்கள். ஆனால் உண்மை கூறுவதை நின்றுவிட மாட்டோம். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும்” என பாஜக மாநில பேச்சாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உறுதி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி லீக்ஸ்
உண்மை பேச்சும், நேர்மையான செய்திகளும்.