பிஜேபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிஜேபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

திமுக இன்னும் மதசார்பற்ற கட்சி என மக்கள் நம்ப வேண்டுமா ? முதல்வர் ஸ்டாலினோடு முருகன் கைகோர்த்துள்ளார்” எனப் பேசுவது, தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை அவமதிக்கும் செயல் என பாஜக கடும் காட்டம்!!!

 முருகப் பெருமான் மீது நம்பிக்கையில்லாத முதல்வர் ஸ்டாலினோடு

முருகன் எப்படி கைகோர்ப்பார்?

தனது அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி வரும் உதயநிதி,

முழு உண்மைகளையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்

கடந்த 2022ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,

"நானும் ஒரு கிறிஸ்துவன் தான். கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் காதலித்து மணந்ததும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்தான்"

என்று வெளிப்படையாகக் கூறினார்.


thoothukudileaks


அந்த நேரத்தில் தனிப்பட்ட நம்பிக்கையாக கூறப்பட்ட இந்த கருத்து, தற்போது அரசியல் நிலைப்பாடாக மாறியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

"கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டுமே மனித நேயம், சமத்துவத்தை போதிக்கின்றன. சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக முடியும் என்பதை நிரூபித்தவர் இயேசு கிறிஸ்து"

என்று பேசியுள்ளார்.

கிறிஸ்தவ மதத்தையும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளையும் பாராட்டுவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அது வரவேற்கத்தக்கதே. ஆனால், “கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் வேறுபாடு இல்லை” என்ற கூற்றின் மூலம், திமுக ஒரு மதச்சார்பற்ற கட்சி என்ற அடையாளத்தை இழந்து வருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இதுவரை தங்களை நாத்திகர்கள் என்றும், மதச்சார்பற்றவர்கள் என்றும் கூறி வந்த திமுக தலைமையினர், இப்போது மத அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்களா? கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக தனது உண்மையான அடையாளத்தை வெளிக்கொணர்ந்து வரும் உதயநிதி ஸ்டாலின், மீதமுள்ள உண்மைகளையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவது நல்லது.

"சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக முடியும்" என்பது உண்மையேயான கருத்துதான். ஆனால், திமுகவில் அந்த வாய்ப்பு உண்மையில் இருக்கிறதா? கருணாநிதி குடும்பத்தைத் தவிர, தற்போது ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர, வேறு யாரும் தலைமை பதவியை கனவில்கூட நினைக்க முடியாத நிலை உள்ளது. ஸ்டாலின் குடும்பத்து ஆண் வாரிசுகளுக்கே தலைமை பதவி என்ற நிலை தொடரும் நிலையில், சாதாரண தொண்டன் தலைவர் ஆக முடியுமா என்ற கேள்விக்கு உதயநிதி பதில் சொல்ல வேண்டும்.

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் பி.கே. சேகர்பாபுவின் செயல்பாடுகள், இந்துக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. இந்து கோவில் மரபுகள், திருவிழாக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில், அதற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நடைமுறைப்படுத்த மறுப்பது, இந்து உணர்வுகளுக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகவே பார்க்கப்படுகிறது. கோவில் பணத்தை பயன்படுத்தி, கோவில்களுக்கு எதிராக வழக்குகள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவின் இந்து விரோதப் போக்கு வெளிப்பட்ட நிலையில், “முதல்வர் ஸ்டாலினோடு முருகன் கைகோர்த்துள்ளார்” எனப் பேசுவது, தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை அவமதிக்கும் செயல் ஆகும்.

முருகப் பெருமான் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள், அவரை அரசியல் விளம்பரத்திற்காக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்துக்கள் இன்று விழிப்புணர்வு பெற்றுள்ளனர். நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்து விரோதப் போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு, உரிய நேரத்தில் தக்க பதிலை வழங்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

— ஏ.என்.எஸ். பிரசாத்

செய்தி தொடர்பாளர்


செவ்வாய், 25 நவம்பர், 2025

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் நல அரசியலை செய்ய வேண்டும் தமிழக பாஜக

சென்னை:நவ 25

 மொழி, மத அரசியல் செய்வதை விட்டு மக்கள் நல அரசியலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் நடந்த புத்தக விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழ் மொழி மீது போலியான பாசம் காட்டுவதாகவும், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை திணிக்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சமஸ்கிருத மொழியை "செத்த மொழி" என்று விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள, இந்து மக்களின் புனித மொழியாக போற்றப்படும் சமஸ்கிருத மொழியை இவ்வாறு விமர்சிப்பது அரசியல் சாசன அவமதிப்பாகும். தேர்தலுக்காக மொழி அரசியல் நாடகம் அரங்கேற்றுவது துரதிஷ்டவசமானது.

உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும், இந்து மத வேதங்களை உருவாக்கிய தெய்வ மொழி சமஸ்கிருதம். கணிதவியல், வானவியல், மருத்துவ இயல், அரசியல் உள்ளிட்ட பல துறைகளில் உலகிற்கு வழிகாட்டும் இம்மொழியை இழிவாக பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஒரு மொழியை உயர்த்துவதாக சொல்லி மற்றொரு மொழியை தாழ்த்தி பேசுவது நியாயமா? தமிழை வளர்க்க ஏன் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழ் பல்கலைக்கழகங்களை திமுக அரசு உருவாக்கவில்லை?

கிறிஸ்தவர்களின் புனித நூல் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித நூல் அரபி மொழியில் எழுதப்பட்டது. அவற்றை செத்த மொழி என்று சொல்ல முடியுமா?

துணை முதல்வர் என்ற பதவியில் இருப்பவர் மதச்சார்பின்மையுடன், நடுநிலமையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த மதத்தையும், எந்த மொழியையும் தவறான முறையில் விமர்சிக்கக்கூடாது.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இனி எந்த மதத்தையும், எந்த மொழியையும் விமர்சித்து பேசக்கூடாது என்று தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்தி தொடர்புக்கு:

ஏ.என்.எஸ.பிரசாத்

thoothukudileaks

செய்தி தொடர்பாளர், தமிழக பாஜக

திங்கள், 17 நவம்பர், 2025

எஸ்.ஐ.ஆர் பணிகள் புறக்கணிப்பு : திமுக அரசின் திட்டமிட்ட சதி – வருவாய்த்துறை ஊழியர்கள் அறிவிப்பால் எழும் புதிய கேள்விகள். திமுக எதிர்ப்பு வாக்காளர்களை நீக்கவும், போலி வாக்காளர்களை சேர்க்கவும் இது ஒரு சதி” என தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கடும் குற்றச்சாட்டு

தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

சென்னை 18

தமிழகம் முழுவதும் நவம்பர் 4ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (SIR) சுற்றியுள்ள சர்ச்சை அதிகரித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள போலி பெயர்களை நீக்கி, தகுதியான புதிய வாக்காளர்களை சேர்ப்பது என்ற தேர்தல் ஆணையத்தின் முக்கிய முயற்சியை திமுக திட்டமிட்டே திசை திருப்ப முயல்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

மாடல் 


சட்டப்படி 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்நடவடிக்கையில், திமுக கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதிகாரப்பூர்வ அரசு ஊழியர்களுக்குப் பதிலாக வீடு வீடாக எஸ்.ஐ.ஆர் படிவங்களை வழங்குவதாக பல இடங்களில் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக திமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமே படிவங்கள் வழங்கப்படுகின்றன, திமுக எதிர்ப்பு வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதில் சிரமங்கள் உள்ளன என்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், வருவாய்த்துறை ஊழியர் சங்கங்கள் இன்று (18.11.2025) முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபடமாட்டோம் என்று வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல இடங்களில் திமுக நிர்வாகிகளே படிவப் பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில், வருவாய்த்துறை ஊழியர்களின் விலகல், எஸ்.ஐ.ஆர் முழுவதும் திமுகவின் கையில் சென்று விடும் அபாயத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

“இதற்கெல்லாம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறியாமல் நடப்பது இல்லை. திமுக எதிர்ப்பு வாக்காளர்களை நீக்கவும், போலி வாக்காளர்களை சேர்க்கவும் இது ஒரு சதி” என தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் நேரடி உத்தரவுகளை மீறுவது, குறிப்பாக அரசு ஊழியர்கள் மூலம் வாக்காளர் பணிகளை மறுப்பது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட முக்கிய குற்றச்சாட்டுகள்:

  • திமுக கடந்த 4 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கில் போலி வாக்காளர்களை சேர்த்து வைத்துள்ளது.
  • எஸ்.ஐ.ஆர் மூலம் இவை அனைத்தும் நீங்கிவிடும் என்பதால், திமுக தேர்தல் கமிஷனை தொடர்ந்து அவதூறு பரப்புகிறது.
  • பல்வேறு பகுதிகளில் திமுகவினரே படிவங்களை வழங்கி வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்கள்.
  • வருவாய்த்துறை ஊழியர்கள் எஸ்.ஐ.ஆர் பணிகளில் இருந்து விலகுவது, திமுக ஊக்குவிப்பால் ஏற்படும் மறைமுக மிரட்டல் நடவடிக்கை ஆகும்.
  • அரசு ஊழியர்கள் அரசியல் சார்பற்றவர்களாக இருக்க வேண்டியது அவசியம்; தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

பிரசாதின் கோரிக்கைகள்:

  • திமுக அரசு தேர்தல் ஆணையத்திற்கு விடுக்கும் மறைமுக அழுத்தத்துக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • போலி வாக்காளர்கள் இல்லாத தமிழகம் உருவாக மாநில அரசு தேர்தல் ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
  • முதலமைச்சர் ஸ்டாலின், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை குழப்பும் அவதூறு பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் நம்பகத்தன்மை மற்றும் சீர்திருத்த முயற்சியின் நியாயத்தன்மை குறித்து பொதுமக்களிடையே பெரும் கேள்விகள் எழுந்துள்ளன.

— தூத்துக்குடி லீக்ஸ்

சனி, 8 நவம்பர், 2025

நூறாண்டுகளை கடந்தும் சாதிக்கும் ஆர்.எஸ்.எஸ் தமிழக பாஜக பெருமிதம் .

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல்

தமிழகம் எங்கும் ஆர்.எஸ்.எஸ். 

இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. 

தூத்துக்குடி லீக்ஸ்


ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூறாண்டு கால பயணம் நாடு முழுவதும் உள்ள மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் தேசியச் சுடரை  ஏற்றி உள்ளது. 

ஆர்.எஸ்.எஸ்.ஸின் இல்லம் தேடி வரும் "வீட்டுத் தொடர்பு" நிகழ்ச்சியில் குடும்பத்துடன் இணைந்து மகிழ்வோம்

உலகின் தலைசிறந்த உன்னதமான சேவை இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாடுகள், கலாச்சார மறுமலர்ச்சி, சமூக நல்லிணக்கம், தேசபக்தி,  மனிதநேய செயல்பாடுகள் ஆகியவற்றை விளக்க கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நடைபெற்று வரும் "வீட்டுத் தொடர்பு" நிகழ்ச்சி மூலம் ஒவ்வொருவரின் இல்லத்திற்கு வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் மகத்தான ஆதரவளித்து வருகிறார்கள்.


ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இரண்டு மாபெரும் தலைவர்களான, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் இந்தியாவின் சிறந்த பிரதமர்களாகவும், உலகின் தலைசிறந்த தலைவர்களாகவும் போற்றப்படுகிறார்கள். 


நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்திற்கும் சரியான திசையைக் காட்டி, நாட்டு மக்களை ஒன்று திரட்டி, இளைஞர்களை வழிநடத்தி அழைத்துச் செல்வதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது. 


ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) 1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் துவங்கப்பட்டது. கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது 100 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 2026 விஜயதசமி வரை, ஓராண்டு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.


தமிழகம் முழுவதும், கடந்த அக்டோபர் மாதம் அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள், மாநகரங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்த தொண்டர்களின் சங்கமம் நடந்தது. 


தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த சீருடை சங்கமத்தில் சீருடை அணிந்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், சாதாரண உடைகளில் 50 ஆயிரம் பேரும் என சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த சங்கமத்தில் பங்கேற்றனர். இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் அனைத்து மாநிலங்களிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


கடந்த நவம்பர் இரண்டாம் தேதி வெற்றிகரமாக துவங்கி, வரும் நவம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் வீட்டுத் தொடர்பு இயக்கம் மூலம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., வி.எச்.பி., இந்து முன்னணி, ஏ.பி.வி.பி., உள்ளிட்ட 40 க்கும் அதிகமான அமைப்புகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, அவரவர் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று, மக்களைச் சந்தித்து, ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூறாண்டு பயணம், கொள்கைகள்,

சேவைப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி, நூற்றாண்டு விழா பிரசுரத்தை வழங்க இருக்கின்றனர். 


அதையொட்டி, வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சென்னை மாநகரில் பா.ஜ.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் வீட்டுத் தொடர்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தவுள்ளனர்.


உலகிலேயே திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் வெளிப்படையான அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மட்டுமே. தேசம் முதலில் என்பதுதான் அதன் கொள்கை. தேசத்திற்காக எதையும் கொடுக்கிற, தன்னையே இழக்கிற தன்னார்வலர்களை உருவாக்கி வரும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.


1947 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தான் பகுதியில் பல லட்சம் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஹிந்துக்களுக்காக குரல் கொடுத்து, அகதிகளாக இந்தியா வந்த ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளித்து நம்பிக்கையூட்டிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.


மகாத்மா காந்தி படுகொலையை காரணம் காட்டி நாட்டின் முதல் பிரதமர் நேரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்தார். மக்களுக்கான இயக்கம் என்பதால்தான் அந்த நெருக்கடியில் இருந்து மக்கள் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். மீண்டது.


இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சதி, அவதூறு பிரச்சாரங்களால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்து, அதன் செயல்பாடுகளை முடக்க நினைத்த அனைத்து முயற்சிகளும் மக்களின் பேராதரவில் முறியடிக்கப்பட்டது. 


1975 இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முடக்கினார். அப்போது இந்திராவின் அடக்குமுறைக்கு அனைவரும் அஞ்சிய நிலையில், ஜனநாயகத்தை காக்க தீரத்துடன் போராடியது ஆர்.எஸ்.எஸ். 


எதிர்க்கட்சிகளை ஜனதா கட்சி என்ற பெயரில் ஒருங்கிணைத்து, முதல் காங்கிரஸ் அல்லாத மத்திய அரசை அமைத்தது ஆர்.எஸ்.எஸ். தான்.


ராமஜென்ம பூமி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, அயோத்தியில் ராமர் ஆலயம் என்ற 500 ஆண்டுகள் கனவை நனவாக்கியதும் ஆர்.எஸ்.எஸ்.தான். 


தமிழ்நாட்டில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் பாறை அமைக்க ஏற்பட்ட தடைகளை உடைத்தெறிந்து அதை சாத்தியமாக்கியதும், வேலூர் கோட்டையில் உள்ள அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவரான சிவலிங்கத்தை மக்கள் ஆதரவுடன் பிரதிஷ்டை செய்ததும் ஆர்.எஸ்.எஸ். தான்.


கடந்த மாதம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று ஓலமிட்டார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை எதிர்த்து ராகுல் காந்தி செய்த அவதூறு பிரச்சாரங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டது. 


கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபடுபவர்கள் அரசுப் பணிகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள். 


முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல்


தமிழகம் எங்கும் ஆர்.எஸ்.எஸ். 


இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. 


தினசரி நடக்கும் சமூக விரோதச் செயல்கள், சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றைப் பற்றி கவலைப்படாமல், தேசியம், தேசபக்தி, ஆன்மீகம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தி, மக்களிடையே தேசியத்தையும் தெய்வீகத்தையும் மனிதநேயத்தையும் விதைத்து வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மிரட்டுவதிலும், மக்கள் ஆதரவைக் கட்டுப்படுத்துவதிலும் குறியாக செயல்படுகிறது.


ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது 100 ஆவது ஆண்டு விழாவைக் 

கொண்டாடுவதையொட்டி, கடந்த விஜயதசமி தினத்தன்று தமிழகமெங்கும் சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.

உரிய அனுமதி பெறாமல் நிகழ்ச்சி 

நடத்துவதாக கூறி ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த விஜயதசமி கொண்டாட்டம், குரு பூஜை மற்றும் சாகா பயிற்சி அமர்வை

தடை செய்ய கடும் அடக்கு முறையை மேற்கொண்டு, நிகழ்ச்சி நடத்தக் கூடாது. நடத்தினால் கைது என்று மிரட்டப்பட்டனர்.  


ஆனால் அந்தத் தடைகளை தகர்த்து, தமிழகமெங்கும் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது. 

சென்னை போரூரில் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 

நடத்தும் இடத்தில் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர்  47 பேர் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டனர்.


ஆனால், நீதிமன்ற துணையுடன், மக்கள் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தளராத சேவைப் பணி இன்றளவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதற்கு அடையாளமாக கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நடைபெற்ற வீட்டு தொடர்பு நிகழ்ச்சிக்கு தமிழக மக்கள் பேராதரவு அளித்து  வருகின்றனர்.


எனவே, இந்தத் தருணத்தில் இந்த வெற்றிகளுக்கு வித்திட்ட ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்களை நினைவு கூர்ந்து, இந்த நூற்றாண்டு விழாவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும், அதன் பணிகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.


ஏ.என்.எஸ்.பிரசாத்,

செய்தி தொடர்பாளர்,

தமிழக பாரதிய ஜனதா கட்சி,


வியாழன், 6 நவம்பர், 2025

தூத்துக்குடி ஆர்ப்பாட்டத்தில் பாஜக மகளிர்கள் பேசியது கண்டிக்கத்தக்கது. திமுக டென்ஷன்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

கோவை மாணவி மீதான பாலியல் வன்கொடூரம் கண்டித்து தூத்துக்குடியில் பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, நவம்பர் 6:
கோவை மாவட்டத்தில் 20 வயது கல்லூரி மாணவியை மூன்று காமகொடுரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவத்தை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி சார்பாக இன்று (06.11.2025) காலை 10.00 மணிக்கு 

12- வாசல் மையவாடி முன்புள்ள மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசே மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுந்தன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி தலைவி வெள்ளைத்தாய் தலைமையிலும், மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் முன்னிலையிலும்  கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக மகளிர் அணி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவை மாணவிக்காக நீதி கோரி குரல் எழுப்பினர்.

டாஸ்மாக் கடை தான் காரணம்!!!

ஆர்ப்பாட்டத்தில் ... திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு இல்லை டாஸ்மாக் தான் காரணம் என கொதித்தனர் 

இதில் மகளிர் அணி அனுசூயா உரையாற்றியபோது,
“முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் குறித்து சர்ச்சையாகவும் பேசினார்.

சர்ச்சையாக பேசிய வீடியோ பார்க்க ...

பாஜக மகளிர்கள் பேசியது கண்டிக்கத்தக்கது. 

திமுக டென்ஷன் 

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் அரசியலில் ஈடுபடவில்லை; அவர் ஒரு குடும்ப தலைவி. அவரை குறித்த சர்ச்சைக்குரிய ஆபாச கருத்துக்கள் காவல்துறை கவனிக்காமல் இருப்பது ஏன்?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.