முற்றுகை போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முற்றுகை போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 அக்டோபர், 2024

அசால்டாக இருக்க கூடாதுஇலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம் பாமக மாநில பொருளாளர் திலகபாமா மீனவர்கள் மத்தியில் பேச்சு

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று(1-10-2024) நடைபெற்ற தருவைகுளம் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில்  பாமக கட்சியின் மாநில பொது பொருளாளர் திலகபாமா  அசால்டாக இருக்க கூடாதுஇலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம் என ஆவேசமாக பேசினார்.



இது பற்றிய செய்தியாவது:-

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருவைகுளம் மீனவர்களை  அழைத்துக் கொண்டு  சென்று 22 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள்   விடுவிக்கப்படும் வரைக்கும்   முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொது பொருளாளர் திலகபாமா  தருவை குளத்தில் இன்று நடந்த 22 மீனவர்கள்  குடும்பத்தினரிடம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.



ஆறுதல்!!!

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 22 மீனவர்கள் கடலோர இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில் அந்த 22 மீனவ குடும்பங்களை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா நேரில் சென்று ஆறுதல் கூறினார் .


முற்றுகை!!!

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தருவை குளத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடத்தினார்கள்.



இதில் கலந்துகொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா கூறும் போது...

" நீங்கள் எல்லோரும் என்னோடு ஒத்துழைத்து வருகிற திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமைக்குள் ஒரு நாளை குறித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம்"

 

அசால்டாக இருக்க கூடாது?

இதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் முக்கியம் அனைவரும் வரவேண்டும் 

"நான் போகவில்லை என்றால் என்ன என்று அசால்டாக ஒருவரும் இருக்கக் கூடாது நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து போராட வேண்டும்" 


நான் தயார்!!!

22 மீனவர்களும் வெளியே வரும் வரைக்கும் ... இலங்கை தூதரகம் வாயிலில்  உட்காருவதற்கு நான் தயாராக இருக்கிறேன் உங்களுடைய ஒத்துழைப்பு எனக்கு தேவை 


ஏற்கனவே மூன்று மாதங்கள் ஆகிவிட்டது சாப்பாடு இல்லாமல் நாம் பட்டினியோடு இருக்கின்றோம்.


 இதுவரை  மாநில அரசு மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை 


எனவே இந்த போராட்டத்திற்கு நீங்கள் வருவீர்களா என்று கேள்வி கேட்டார்?

கண்ணீர்!!!

 அனைவரும் நாங்கள் வருகிறோம் நீங்கள் கூப்பிடுகிற இடத்திற்கு நாங்கள் வருகிறோம் என்று கண்ணீருடன் உறுதி அளித்தனர் 

பாமக மறந்து விடுங்கள்!

எங்களது கட்சியை எல்லாம் மறந்து விடுங்கள் நாளை தமிழகத்தில் எந்த மூளை முடுக்கிலும் உள்ள மீனவர்கள் பாதிக்கப்படக்கூடாது இந்தக் கடல் இலங்கை மீனவர்களுக்கும் சொந்தமாக இருக்க வேண்டும் தருவை குளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு தீர்வு வந்ததாக இருக்க வேண்டும் .


இந்த  போராட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்கிறோம் .


நீங்கள் வந்தால் மட்டும் போதும் உங்களை அழைத்து செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நாங்கள் செய்கிறோம் நமக்கு  தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் பேசினார்

கை தட்டல்!!!

 கூட்டத்தில் கலந்து கொண்ட தருவைகுளம் கிராம மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்கள் கைகளை  தட்டி  ஆதரவு தெரிவித்தனர்




பின்னர் ... திலகபாமா  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்....!


எங்களைப் போன்று தான் இலங்கையில் உள்ள மீனவர்களும் எனவே அவர்களுடைய பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும் .


எங்கள் இரண்டு பேருக்கும் ஆன பிரச்சனைகளை தீர்த்து நாங்கள் சுமுகமாக வாழ்வதற்கு  வழிவகை செய்யுங்கள் 


முதலில்  22 மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் அந்த 22 மீனவர்களுடைய குடும்பத்திற்கும் முதல்வர் பதில் சொல்ல வேண்டும்



 முதல்வர் இந்த பிரச்சனைக்கு தீர்வை நாங்கள் வாங்கித் தருகிறோம் என்று பதில் சொல்ல வேண்டும்


 இல்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து மீனவ இயக்கங்களையும்  இணைத்து தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்களாக மதிக்கப்பட வேண்டும்

அடுத்த வாரம்!

 அதற்கான தீர்வு காணப்பட வேண்டும்  என்பதை வலியுறுத்தி 

அடுத்த வாரம் இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும்.

முற்றுகை போராட்டம் அறிவிப்பு!!!

 இந்த அறிவிப்பை பாமக தலைமை அறிவிக்கும் ?

மத்திய அரசுக்கும் மாநில  அரசிற்கும் அன்போடு எடுத்துச் செல்கிறோம் 


எங்களது இயலாமையில் காரணமாக பேசுகின்றோம்.!


 அரசு தயவு செய்து இந்த விஷயத்தில் தலையிட்டு 22 பேரை விடுதலை செய்து தர வேண்டும் 


அடுத்து வரும் காலங்களில் மீனவர்கள் பிரச்சினை தீர்வு காணப்பட வேண்டும்


 கண்டும் காணாமல் உள்ள அரசுகளுக்கு இந்த மீனவர்களின் குரல் கேட்கப்பட வேண்டும் மத்திய அரசின் மானிய விலையில் வழங்கப்பட்ட படகும் இந்த இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது


 இதனை வன்மையாக கண்டிக்கிறோம் 


புதிதாக பதவி ஏற்றுள்ள ஜனாதிபதி அவர்கள் மீனவர்களின் பிரச்சனை குறித்து மீனவர்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் 


இந்திய அரசும் இலங்கை அரசும் உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் 


இல்லை எனில் இலங்கை தூதரகம் முன்பு கிடப்பதற்கு தயாராக இருக்கிறோம் எங்களுக்கு தீர்வு சொல்லுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்


இந்த பேட்டியின் போது தருவைகுளம் ஆலய பங்குத்தந்தை வின்சென்ட், ஊர் கட்டளைதாரர் மகாராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊர் நிர்வாகிகள் 22 மீனவர்களின் குடும்பத்தினர் என அனைவரும் கலந்து கொண்டனர்

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடியில் சிங்கள ‘தம்ரோ பர்னிச்சர்' கடைகள் முற்றுகைப் போராட்டம்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

13-8-2024 photo news 

by Arunan journalist 

தூத்துக்குடியில் சிங்கள ‘தம்ரோ பர்னிச்சர்'  கடைகள் முன்பு 

முற்றுகைப் போராட்டம்

இது பற்றிய செய்தியாவது:-


தமிழக மீனவரை கொலை செய்வதை கண்டித்து

இலங்கை மீது பொருளாதார தடை செய்ய வலியுறுத்தி 

தமிழகம் முழுவதும் உள்ள

சிங்கள ‘தம்ரோ பர்னிச்சர்' கடைகள் முன்பு 

முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது.



தமிழகம் முழுவதுமுள்ள தம்ரோ கடைகளை இழுத்து மூடுவோம்.

தூத்துக்குடியில்

ஆகஸ்டு 13 2024 செவ்வாய்கிழமை காலை 10.30 மணி | குரூஸ் சிலை அருகில், 

தலைமை:

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்

 பாத்திமா பாபு 


மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி


தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை எஸ்.ஆர்.பாண்டியன்

 எஸ்டிபிஐ கட்சி ஷேக் ஹஸ்ரப் அலி 


தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆ.பிரசாந்த்



தமிழ்ப்புலிகள் கட்சி ஆட்டோ சரவணன்

தோழர்

புருசோத்தமன்

மே பதினோறு இயக்கம்

தோழர்

தமிழர் விடியல் கட்சி

 சந்தனராஜ் பாண்டியன்|

 ஆதித்தமிழர் கட்சி

நம்பிராஜ் பாண்டியன் மக்கள் அதிகாரம் செல்வகுமார்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

 தாழை.உமர் பாரூக்

ஆகிய கட்சி கட்சி அமைப்புகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து தூத்துக்குடி மாநகர் முழுவதும் போஸ்டர் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை இழுத்து சென்ற போது...


முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள சம்பவ இடத்திற்கு முதலில் கறுப்பு சட்டையணிந்து ஜந்து பேர் அப்பகுதியில் நின்றதும் அவர்களை காவல்துறை கபக் கென்று பிடித்து இழுத்து சென்றது அவர்கள் மே17இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி க்காக காத்து கொண்டு இருக்கிறோம்.என்ற சொல்லியும் காவல் துறை கேட்காமல் இழுத்து சென்றது 

இதனால் சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன் காந்தி எஸ்ஆர் பாண்டியன் போராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் டென்ஷன் ஆனார்கள் ஏன் இப்படி காவல்துறை செய்கீறீர்கள் என கேள்வி எழுப்பினார்.





பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களுக்கு பேராசிரியை ஃபாத்திமா பாபு பேட்டி அளித்தார்.

எந்த ஆட்சி வந்தாலும் மீனவர்கள்  நிலை மாறாமல் இப்படி தான் இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டும் கொதித்து போனார்

அதன் பின்னர் திருமுருகன் காந்தி பேட்டி அளித்தார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



தம்ரோ பர்னிச்சர்' கடை திறப்பு!!!

முற்றுகை போராட்டம் என்றதும் காவல் துறை பலத்த பாதுகாப்பு உடன் தம்ரோ பர் னிச்சர் கடை காலை வேளையில் அடைக்கப்பட்டு இருந்தன 

பின்னர் மதியம் 2 மணியளவில் தம்ரோ பர் னிச்சர் கடை திறக்க ப்பட்டது.



 

ஞாயிறு, 5 நவம்பர், 2023

மாபெரும் முற்றுகை போராட்டம் தூத்துக்குடி தமிழர் விடுதலை களம் அறிவிப்பு

தூத்துக்குடி லீக்ஸ் 6-11-2023

செய்தி புகைப்படங்கள் 

அருணன் செய்தியாளர் 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என விவசாய நிலங்களை அரசு அதிகாரிகள்

மற்றும் அரசியல் கட்சியினர் போலியான ஆவணங்கள்

மூலம் கையகப்படுத்தி உள்ளார்கள் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயம் செய்யவிடாமல் ..தடுப்பதாக புகார் 

தமிழர் விடுதலைக் களம்

சட்டம் மற்றும் அரசியல் பயிற்சியரங்கம் கூட்டத்தில் பரபரப்பு ...



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில்  

தமிழர் விடுதலைக் களம் சார்பில் நேற்று 5-11-2023
விளாத்திகுளம் ஆர்த்தி மஹால், சட்டம் மற்றும் அரசியல் பயிற்சியரங்கம் நடைபெற்றது.

தலைமை : வழக்கறிஞர் வே.காளிராஜ்
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் [வ]
சிறப்புரை : வழக்கறிஞர் . ப.ராஜ்குமார்
தலைவர் - நிறுவனர் தமிழர் விடுதலைக்களம் கலந்து கொண்டார்.

அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு உடன் இங்கு உள்ள அரசியல் வாதிகள் விவசாய நிலங்கள் நீர்நிலை ஓடைகள் ஆக்ரமிப்பு!!!!

நிறைவேற்றப்பட்ட பரபரப்பு தீர்மானங்கள் !!

வானம் பார்த்த பூமியாக விளங்கும் விளாத்திகுளம் தொகுதியில் மழையினை
மட்டும் நம்பி விவசாயம் செய்யும் பூமியாகும், விளாத்திகுளம் வைப்பாற்று
பகுதியில் நீர்நிலை ஓடைகள் மற்றும் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து காற்றாலை
மற்றும் சோலார் நிறுவனங்களின் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றனர்.



காற்றாலை சோலார் நிறுவனங்களின் மின்கம்பங்கள் கொண்டு செல்லும்
வழிதடங்கள் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றனர்.

விவசாயம் செய்யவிடாமல் தடுப்பதாக
புகார் !!!


1980 ஆண்டுகளுக்கு முன்பே வறட்சிப்பகுதியாக அறிவிக்கப்பட்ட பூமி ஆகும்.
இந்த விளாத்திகுளம் தொகுதி மக்களின் விவசாய நிலங்கள் மற்றும்
நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்யவிடாமல் தடுப்பதாக
புகார் தெரிவித்து வருகின்றனர்.



தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் விவசாய நிலங்களை அரசு அதிகாரிகள்
மற்றும் அரசியல் கட்சியினர் போலியான ஆவணங்கள்
மூலம் கையகப்படுத்தி உள்ளனர்.
விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை
எடுக்கபடவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு பரபரப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கூட்டத்தில் 
தமிழர் விடுதலைக் களம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் சோ.சரவணக்குமார் 

நன்றியுரை செய்தார்.

பயிற்சி யரங்க கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கொண்டார்கள் .