ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 ஆகஸ்ட், 2026

ஒன்றிய அரசை கண்டித்து. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும்: சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம 

தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையில் சமரசம் கூடாது – டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தல்

தூத்துக்குடி, ஆக. 2:

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பை கர்நாடக அரசு முழுமையாக மதித்து அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று (01.08.2026) காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநகர செயலாளர் தோழர் ஜி. தனலெட்சுமி தலைமை வகித்தார்.


ஆர்ப்பாட்டத்தில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது, காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை கர்நாடக அரசு முழுமையாக மதித்து செயல்படுத்த வேண்டும், டெல்டா பாசனப் பகுதிகளில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் என். பெரியசாமி கண்டன உரையாற்றினார். 


மேலும், சிபிஐ மாவட்ட செயலாளர் தோழர் பி. கரும்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

thoothukudileaks



புகைப்பட விளக்கம்: தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே, மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சிக் கொடிகளை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

திங்கள், 13 ஜூலை, 2026

பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கட்டுப்பாட்டில் தவறியதாக குற்றச்சாட்டு தவெக அரசை கண்டித்து ஜூலை 18 ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

Tamil Nadu update 

சென்னை, ஜூலை 13:

பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாததையும், போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தவெக அரசை கண்டித்தும், ஜூலை 18-ஆம் தேதி புள்ளம்பாடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

thoothukudileaks


இந்தக் குற்றச்சாட்டுகளை வலியுறுத்தும் வகையில், புள்ளம்பாடியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

திங்கள், 1 ஜூன், 2026

கத்தி" பட வசனத்தை மேற்கோள் காட்டி வழக்கறிஞர் மு.பேச்சிமுத்து ஆவேச உரை!

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

​நெல் கொள்முதல் தொகையை வழங்கக்கோரி நெல்லையில் விவசாயிகள் அதிரடி ஆர்ப்பாட்டம்!

​"கத்தி" பட வசனத்தை மேற்கோள் காட்டி வழக்கறிஞர் மு.பேச்சிமுத்து ஆவேச உரை!

நெல்லை, ஜூன் 01:

திருநெல்வேலி வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலத்தின் கீழ் இன்று (01.06.2026) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

​விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையை, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வழங்காமல் இழுத்தடித்து வரும் NCCF (தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு) நிர்வாகத்தை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தாமதமாகும் நெல் தொகையை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

thoothukudileaks


​கத்தி பட வசனத்தால் அதிரடி:

​இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கீழப்பாட்டம் மு.பேச்சிமுத்து (வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்) கலந்துகொண்டு விவசாயிகளின் நிலையை எடுத்துரைத்து ஆவேசமாக பேசினார். 

​அப்போது அவர் பேசுகையில், திரையுலகில் இருந்து அரசியல் களத்திற்கு வந்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள், தனது 'கத்தி' திரைப்படத்தில் பேசிய புகழ்பெற்ற வசனத்தை மேற்கோள் காட்டினார்.

​"நமக்கு சோறு போடுற விவசாயி பசியில அழும்போது, நாம சாப்பிடுற ஒவ்வொரு பருக்கை சோறும் ரத்தம்..."

thoothukudileaks


​என்ற ரீதியில் அமைந்த அந்த அழுத்தமான வசனத்தை சுட்டிக்காட்டி, 3 மாத காலமாக தங்களது உழைப்பிற்கான காசு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகளின் வலியை அதிகாரிகளுக்கு உணர்த்தும் வகையில் முழங்கினார்.


​கோரிக்கைகள்:

  • ​3 மாதமாக முடக்கி வைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் தொகையை வட்டியுடன் உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
  • ​NCCF நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை மத்திய, மாநில அரசுகள் தட்டிக்கேட்க வேண்டும்.
  • ​விவசாயிகளின் உழைப்பை சுரண்டும் இத்தகைய தாமதங்கள் இனிமேல் தொடரக் கூடாது.

​இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர். செல்லபாண்டியன் மேம்பாலத்தின் கீழ் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடியில் 7 கல்லூரிகளை சேர்ந்த 150 பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் பரபரப்பு

Tamil Nadu updates  photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்.13:

அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டிற்கான ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடியிலும் இன்று பரபரப்பான போராட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


கல்லூரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டிற்கான அரசாணை எண் 5 கடந்த 11.01.2021 அன்று வெளியிடப்பட்டது. 


இதன்படி அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் கடந்தும், பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்ட நிலையிலும், ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் வாய் மொழி உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

thoothukudileaks


கடந்த டிசம்பர் மாதம் உயர்கல்வித்துறை அமைச்சரை சந்தித்தபோது, ஜனவரி மாத ஊதியத்தில் தொகை சேர்க்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், ஜனவரி மாத சம்பளத்தில் அது சேர்க்கப்படவில்லை. இதனை கண்டித்து மூட்டா மற்றும் ஏயூட்டி அமைப்புகளின் சார்பில் கடந்த 16 நாட்களாக தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

thoothukudileaks


இதனையடுத்து, 05.02.2026 அன்று உயர்கல்வித்துறை அமைச்சர் சங்க பொறுப்பாளர்களை அழைத்து பேசி, பிப்ரவரி மாத சம்பளத்தில் தொகை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு வாரம் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் மூட்டா மூன்றாம் மண்டல பொருளாளர் லெனின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. TNGEA மாநில துணைத் தலைவர் முருகன் தொடக்க உரையாற்றினார். மூட்டா மத்திய இணைப் பொதுச் செயலாளர் சிவஞானம் ஆர்ப்பாட்டத்தின் நோக்க உரையாற்றினார்.

TNPTF மாவட்ட செயலாளர் ஆனந்தி, TANSTAC மண்டல செயலாளர் கணேசன், SFI மாவட்ட செயலாளர் ராம்குமார் ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். TNGEA மேனாள் இணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் நிறைவுரையாற்றினார். மூன்றாம் மண்டல செயற்குழு உறுப்பினர் வேல்குமார் நன்றியுரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 கல்லூரிகளைச் சேர்ந்த 150 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்குவதோடு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வெள்ளி, 30 ஜனவரி, 2026

ஓய்வூதியர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் ஜி.எம். அலுவலகம் முன்பு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜனவரி 31:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு (REWA) சார்பில், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவை பணபலன்கள் மற்றும் பென்ஷன் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி ஜி.எம். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


thoothukudileaks


thoothukudileaks


“தமிழக அரசே… நிர்வாகமே…! நீதிமன்ற தீர்ப்புப்படி பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு இணையான DA-வை நிலுவையுடன் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அன்றே அனைத்து பணபலன்களையும் வழங்க வேண்டும். ஒப்பந்த உயர்வை பென்ஷனில் சேர்த்து வழங்க வேண்டும். மருத்துவப் படி ரூ.300 வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். வாரிசு வேலை கல்வித் தகுதிக்கேற்ப தாமதமின்றி வழங்க வேண்டும்.


 2024 ஆகஸ்ட் முதல் வழங்க வேண்டிய பணபலன்களை 18% வட்டியுடன் வழங்க வேண்டும். ஓய்வூதியர் மரணமடைந்தால் குடும்பத்தினருக்கு ஈமக்கிரிய நிதி ரூ.50,000 வழங்க வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகள் முழங்கின.

கோரிக்கை மனு வழங்கல்

ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு (REWA) சார்பில்,

உயர்திரு போக்குவரத்து அமைச்சர் அவர்களுக்கு

(தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – தூத்துக்குடி மண்டலம்) கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

அதில்,

ஓய்வு பெற்ற தினத்தன்றே அனைத்து பணபலன்களையும் வழங்க வேண்டும்.

2024 ஆகஸ்ட் முதல் நிலுவைத் தொகைகளை 18% வட்டியுடன் வழங்க வேண்டும்.

பணி விடுப்பு ஊதியம் (EL சரண்டர்) ஓய்வு நாளிலேயே வழங்க வேண்டும்.

பணி ஓய்வு ஊதிய ஆடரை (Retirement Order) ஒரு ஆண்டுக்குள் முழுமையாக வழங்க வேண்டும்.

கிராஜுவிட்டி ஆடரை ஓய்வு நாளிலேயே வழங்க வேண்டும்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பணியின் போது இறந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு கல்வித் தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும்.

ஓய்வூதியர் குறை தீர்ப்பு கூட்டத்தை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடத்த வேண்டும்.

பணமில்லா மருத்துவ வசதி அமல்படுத்த வேண்டும்.

31.09.2019 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு தாமதமாக வழங்கப்பட்ட ஓய்வூதியத்தால் ஏற்பட்ட கிராஜுவிட்டி மற்றும் EL சரண்டர் வித்தியாசத் தொகைகளை வழங்க வேண்டும்.

ஓய்வூதியர் மரணத்திற்கு பின் சான்றிதழ் தாமதம் காரணமாக வாரிசுக்கு வழங்கப்படாத பென்ஷனை உடனே வழங்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் PRWS வழக்கில் உத்தரவிட்டதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

என வலியுறுத்தப்பட்டது.

தலைமை – உரைகள்

ஆர்ப்பாட்டத்திற்கு தானுமூர்த்தி தலைமை வகித்தார்.

முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

எட்டப்பன் (மாநில குழு உறுப்பினர்), தானுமாலையான் (கிளை பொருளாளர்), சின்னதம்பி (இறை செயலாளர்), செல்வம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

மேலும் மது சேகர், பழனி, பொன்ராஜ், சிங்கராஜ், செல்வராஜ், சிவதானுதாஸ் (மாநில உதவி செயலாளர்), பெலிக்ஸ் (கிளை தலைவர்), சகாயராஜ், மாரிமுத்து, சுப்பையா, செல்வபெருமாள், மாணிக்கம், ஜானகென்னடி, பால்ராஜ், சண்முகராஜன், சுபேர், வீரப்பன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.