ஸ்டெர்லைட் thoothukudinews லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்டெர்லைட் thoothukudinews லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 ஜூலை, 2025

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – மக்களுக்கான நியாயக் குரலை அடக்க நினைக்கும் ஆபத்தான முயற்சி!

Tamil Nadu updates, photo news by Arunan journalist 


🟥 

தூத்துக்குடி, ஜூலை 27:
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி G.R. சுவாமிநாதன் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தொடர்ந்திருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீக்கப்பட வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி லீக்ஸ்


இதே நேரத்தில், நீதிபதி சுவாமிநாதன் மீதான வாஞ்சிநாதன் அளித்த புகாரை உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரிக்க வேண்டுமெனவும் உறுதி கூறப்பட்டுள்ளது.

🔹 மக்களின் உரிமைக்காக நிலைத்து நிற்கும் வாஞ்சிநாதன்
சாதி, மத, பாசிச, கார்ப்பரேட் நலன்களை மீறி மக்களுக்கான உரிமைகளை உரக்க பேசியவரே வாஞ்சிநாதன்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் வழிபட உரிமை, கூடங்குளம் அணுமின் திட்ட எதிர்ப்பு, வைகுண்ட ராஜனின் VV தாது மணல் கொள்ளை, போலீஸ் லாக்கப் டெத், நீதிமன்ற ஊழல், அனைத்து சாதி அர்ச்சகர் உரிமை, தூத்துக்குடி டோல் கட்டண கொள்ளை, மதநல்லிணக்கத்திற்கான கூட்டமைப்புகள் எனப் பல பரப்பளவுகளில் நீதி, சமத்துவத்தின் குரலாக செயல்பட்டவர்.

🔹 ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒரு தூணாக நின்றவர் 


24.03.2018 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில், மக்கள் கூட்டத்திற்கு நீதிமன்ற அனுமதி பெற்றுத்தந்தும், மேடையில் உரையாற்றியதுமாக வாஞ்சிநாதன் அடையாளம் பெற்றார்.


பின்னர் பல ஊர்களை ஒருங்கிணைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம மக்கள் கூட்டமைப்பை உருவாக்கி, 25,000 பேருடன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பேரணி நடத்த ஆலோசனையளித்தார்.

🔹 60 வழக்குகள் – சிறை அனுபவம் – திரும்பிப் பார்க்காத சேவை
22.05.2018 அன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறிவைக்கப்பட்டு, 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி லீக்ஸ்


 பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு குடும்பத்தோடு வாழும் உரிமையை துறந்து மக்களுக்காக துயரத்தை ஏற்றுக் கொண்டவர்.

🔹 மக்களுக்கு இலவச சட்ட உதவி
மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முடியாதவர்களுக்கு, அவர் ஜாமீன் பெற்றுத்தந்து, ஒரு காசும் பெறாமல் சமூக நலனுக்காக வழக்குகளில் ஆஜராகி வந்துள்ளார்.
இன்று வரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகராக உள்ளார்.

🔹 அதிரும் குரல் – அடக்க முயற்சிகள்
அவரைப் போல மக்கள் சார்ந்த வழக்கறிஞர் நீதிமன்றங்களில் இருப்பது சில சக்திகளுக்கு வருத்தமாக இருக்கலாம். அவரை "அவமதிப்பு" என்ற பெயரில் சட்டத்திலிருந்து வெளியேற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.
இது ஒரு தனிப்பட்ட தாக்குதலல்ல – இது மக்கள் நீதிக்கு எதிரான தாக்குதல்!

📣 மக்களே! வாய்மையை காக்க குரல் கொடுப்போம்!
வாஞ்சிநாதனை கரங்களை உயர்த்தி ஆதரிப்போம்!
சமூக வலைதளங்களிலும், மக்கள் சந்திப்புகளிலும் இவருக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்!


✍️ இப்படிக்கு,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு



வியாழன், 26 செப்டம்பர், 2024

திமுக அரசு எத்தனை தடைகள் போட்டாலும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது".தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை

திமுக அரசு எத்தனை தடைகள் போட்டாலும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது".




இது பற்றிய செய்தியாவது:-

திமுக முயற்சி!!!

விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்தை  தடை செய்ய முயற்சிக்கும் திமுக அரசின் செயல்  இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

மக்களின் ஒருமித்த ஆதரவு 

உலகத்தின் தலைசிறந்த சேவை இயக்கம் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேகவ சங்கம்’ (ஆர்.எஸ்.எஸ்)

1925-ம் ஆண்டு  தொடங்கப்பட்டது முதல் இன்று வரை பல தடைகளை தகர்த்து மக்களின் ஒருமித்த ஆதரவுடன் ஒரு நூற்றாண்டை  2025- ம் ஆண்டில் வெற்றியோடு கொண்டாட உள்ளது


மேலும் ஆர் எஸ் எஸ் இயக்கம் உலக மக்களின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் மனித நேயத்திற்கும் வழிகாட்டும் விதமாக "ஏகாத்ம மாணவ தர்ஷன்" என்கிற உலகின் மிகச்சிறந்த

வாழ்வியல் தத்துவத்தை 

வழங்கி உள்ளது.

தடையை நீக்கியது மத்திய அரசு!!!

ஆர் எஸ் எஸ் நடவடிக்கைகள் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கிய பிறகு இந்த ஆண்டு விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த பேரணி மிகவும் 

சிறந்த முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது



திமுக வின் அடக்குமுறை

*திமுக அரசு தமிழகத்தில் பதவி ஏற்றதிலிருந்து 

இந்து மதத்திற்கு எதிராக, இந்து இயக்கங்களுக்கு எதிராக, இந்து மக்களின் உணர்வுகளுக்கு எதிராக

இந்து கடவுள்களை இகழ்ந்தும், கோவில்களை இடித்தும் தொடர்ந்து அடக்கு முறையை ஏவி விட்டு வருகிறது.  


குறிப்பாக இந்து  அமைப்புகளின் வளர்ச்சியை தடை செய்யும் நோக்கத்துடன்,

திமுக அரசின் காவல்துறை, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த  அனுமதிக்கவில்லை


காவல்துறையின் ஆணவப் போக்கை சுட்டிக்காட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகே பல்வேறு கட்டுப்பாடுகளை 

விதித்து ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. 

அக்டோபர் 6- ல் பேரணி பொதுக்கூட்டம் 

ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைதியாக நடந்து வந்த சூழ்நிலையில் 

வருகிற..

 அக்டோபர் 6-ம் தேதி தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த அந்தந்த மாவட்ட காவல்துறை தடை விதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும் 


மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர்களிடம் அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ்  விண்ணப்பித்தும் உள்நோக்கத்தோடு திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை வேண்டுமென்று ஊர்வலம், பேரணிக்கு அனுமதி தராமல் வேண்டுமென்று தாமதம் செய்து வந்தது அரசியல் அடக்குமுறை.


கடந்த இரண்டு ஆண்டுகளும் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து,  தடை செய்ய முயற்சி செய்தது போல் இந்த ஆண்டும் திட்டமிட்டு காவல்துறை

ஆர்எஸ்எஸ் பேரணியை தடுக்க திட்டமிடுவதின் மூலம் தமிழக அரசின் சதி மக்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

உரிமை பறிப்பு!!!

இதுவரை நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புகள் அனைத்தும் எந்தவித 

அசம்பாவிதம் இன்றி 

மிகுந்த அமைதியாக நடந்து முடிந்துள்ளது.  


மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்

என்று பொய்யாக வீர வசனம் பேசும் மக்கள் விரோத திமுக அரசு, மறு பக்கம் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை

பறிக்கும் வகையில் செயல்படும் ஏதேச் சதிகாரமான போக்கு கண்டனத்திற்குரியது.


ஆர் எஸ் எஸ் நடவடிக்கைகள் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கிய பிறகு இந்த ஆண்டு விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த பேரணி மிகவும் 

சிறந்த முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மக்கள் சேவைகள் 

தற்பொழுது தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கம்  தமிழகத்தின் அனைத்து  பகுதிகளிலும் செய்யும் மக்கள் சேவையால்  மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று ஏராளமான மக்கள் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கு கொள்கின்றனர்.

மக்கள் ஆதரவு 

குறிப்பாக கொரோனா நோய் தொற்று காலத்தில், தமிழகத்தில் மிகப்பெரிய வெள்ள அபாயம் ஏற்பட்ட சூழ்நிலையில் மக்களுக்காக ஆயிரக்கணக்கான ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இரவு பகலாக சேவை செய்து மக்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்து வந்தனர்.


வலிமை!!!

தேசத்தின் வளர்ச்சிக்கும், இந்துக்களின் ஒற்றுமைக்கும்  பாடுபட்டு வரும் வலிமையான ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை கண்டு பதம் வரைக்கும் திமுக அரசு, ஆர்எஸ்எஸ் எழுச்சியை இனி தமிழகத்தில் தடுத்து அணை போட முடியாது என்பதை உணர வேண்டும்.


வரும் அக்டோபர் 6-ம் தேதி நடக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு முட்டுக்கடை போடுவது நிறுத்தி, தமிழக காவல்துறையின் பொய்காரணங்கள் அவதூறு பிரச்சாரங்களுக்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும். 


காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் இதில் தலையிட்டு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு தெரிவித்துள்ளார் 

ஏ.என்.எஸ்.பிரசாத் 

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் 


திங்கள், 29 ஜூலை, 2024

ஆணவத்தை வெளிப்படுத்திய ராகுல் காந்தி

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது:-


அதானி, அம்பானியை பார்த்து பொறாமைப்படும் ராகுல் காந்தி, - நேஷனல் ஹெரால்டு ஊழல் பணம் 5000 கோடியில் தொழில் தொடங்கட்டும்


மக்களவையில் பட்ஜெட் விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட் குறித்து ஆரோக்கியமான விமர்சனத்தை முன்வைக்காமல் பாஜக மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் வெறுப்பை கக்கியுள்ளார்.



75 ஆண்டுகளாக காங்கிரஸை கட்டுக்குள் வைத்திருக்கும் குடும்பத்தின் வாரிசான ராகுல் காந்தி, பாஜகவையும், மத்திய அரசையும் பிரதமர் நரேந்திர மோடி கட்டுக்குள் வைத்திருப்பதாக விமர்சித்துள்ளார்.



 பிரதமர் மோடி யாருடைய வாரிசும் அல்ல. 


அவரது தந்தையோ, தாத்தாவோ அரசியலில் இருந்ததில்லை. 


தனது திறமையால், கடின உழைப்பால் மக்கள் ஆதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகியிருக்கிறார். 


நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்றுதான் நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்.


காங்கிரஸ் கட்சிக்குள் எந்த முடிவையும் நேரு குடும்பம்தான் எடுக்க முடியும். 


நேரு குடும்ப உறுப்பினர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் அவர்களுக்கு அடிமைதான்.

ஆணவம்!!!

 மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவின் நகலை, பத்திரிகையாளர் சந்திப்பின்போது கிழித்தெறிந்து தனது ஆணவத்தை வெளிப்படுத்தியவர் ராகுல் காந்தி.


தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முடியாமல் படுதோல்வி அடைந்தும் அந்த ஆணவம் போகவில்லை. ஆதிக்க மனப்பான்மை தொடர்கிறது என்பதை ராகுலின் பட்ஜெட் விவாத பேச்சு உறுதி செய்கிறது.


அம்பானியும், அதானியும் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வளர்ந்தவர்களா? இந்திரா காந்தி காலத்திருந்து அம்பானியும், ராஜிவ் காந்தி காலத்திலிருந்து அதானியும் தொழில்துறையில் உள்ளனர். தொலைத் தொடர்புத் துறை காங்கிரஸ் ஆட்சியிலும் அம்பானியிடம் தான் இருந்தது.


பொய் மூட்டை அவிழ்த்து விடும் ராகுல்!!!

 துறைமுகங்களை அதானி குழமத்திடம் கொடுத்ததே காங்கிரஸ் ஆட்சியில்தான். இந்த உண்மைகளை மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்து விருப்பம்போல பொய் மூட்டைகளை ராகுல் அவிழ்த்து விட்டுள்ளார்.




ராகுல் காந்திக்கு இந்திய மக்களின் நலத்தை விட 24 மணி நேரமும் அம்பானியை பற்றியும் அதானி பற்றியும் சிந்தித்து கவலை கொண்டுள்ளார்.


அவர்களைப் போன்று கோடி கோடியாக சம்பாதிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தால் , நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் கொள்ளையடித்த 5000 கோடி ரூபாய் பணத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலே முதலீடு செய்து தொழில் தொடங்குவதை விட்டுவிட்டு இந்தியாவின் சிறந்த தொழிலதிபர்களை ஆதாரமில்லாமல் கண்ணியமிக்க பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டி அவமானப்படுத்துவது அருவருக்கத்தக்கது.


 பாராளுமன்றத்திலே பாரத் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் பாஜக கட்சிக்கும் மக்களிடையே அவப்பெயரை உருவாக்குவதற்காக, 

ராகுல் காந்தி தொடர்ந்து திட்டமிட்டு கூச்சலிடுவது குழப்பத்தை விளைவிப்பது தவறான தகவல்களை அளிப்பது உண்மைகளை மறைத்து பொய் பேசுவது என்பதையே வழக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.
 


இவர் பேச்சின் பின்னணி குறித்தும் தொடர்ந்து பாராளுமன்றத்திலேயே மதப் பிரிவினை உண்டாக்கும்  வகையிலும், 

மத மோதல்களை ஊக்குவிக்கும் வகையிலும் பேசி வரும் பின்னணியில் ஏதேனும் வெளிநாட்டு சதி உள்ளதா என்று சிந்திக்கின்ற வரையிலே அவர் செயல்பட்டு வருகிறார் என்று கூறினால் அது மிகை இல்லை.



2004 முதல் 2014 வரை பத்தாண்டு கால பொம்மை பிரதமரின் ஆட்சியில்,  சீனா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கு அடிமைப்பட்ட ஒரு கட்சியின் ஆட்சியாக காங்கிரஸ் ஆட்சி இருந்தது. 


உலக கார்ப்பரேட் நிறுவனங்களில் வசதிக்காக இந்திய பொருளாதார கொள்கை உருவாக்கப்பட்டு கடன் மிகுந்த நாடாக இந்தியா இருந்ததை மாற்றி 

கடன்களை அடைத்து வல்லரசு நாடாக, உலகத்தின் தலைசிறந்த பொருளாதார வளர்ச்சி நாடாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசிலே இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.


இத்தாலி இளவரசர் ராகுல் காந்தி, இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் கிராமப்புற விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்கள் அனைவருக்கும் உயர்வை அளிக்கக்கூடிய, மோடி அரசின் மக்கள் நல திட்டங்களை பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் பேசுவதோடு, மிக முக்கியமான ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை முழுவதும் தெரிந்து கொள்ளாமல், எழுதிக் கொடுத்ததை வைத்து படித்து, நடித்து, உலக ஜனநாயகத்தின் ஊன்றுகோலாக திகழும் கண்ணியமிக்க இந்திய  பாராளுமன்றத்தின் 

இறையாண்மைக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க முயலும் விபரீத வேடிக்கை மனிதராக அடையாளம் காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 


ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக பாஜக 

மாநில செய்தி தொடர்பாளர் 



வெள்ளி, 5 ஜூலை, 2024

தூத்துக்குடியில் செல்போன்உடைந்தற்காக ? அடித்து குழி தோண்டி புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு

 ▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 5-7-2024

news photo by sekar 

தூத்துக்குடியில் செல்போன் தகராறில் இளைஞர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தூத்துக்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரி செல்வம் (எ) அசால்ட் (24). மீனவர். கடந்த 20ம் தேதி மாரிசெல்வத்திற்கும், மேட்டுப்பட்டியை சேர்ந்த 4 சிறுவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 


இதில் ஒருவர் மாரிசெல்வத்தின் செல்போனை உடைத்துவிட்டார்.


 இதனால் ஆத்திரமடைந்த மாரிசெல்வம், பிரபு என்பவரது செல்போனை பறித்து கடலில் வீசியுள்ளார்.


 இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அன்றிரவே மாரி செல்வத்தின் வீட்டிற்கு சென்ற சிலர், அவரை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். 


இந்நிலையில், கடந்த 21ம் தேதி முதல் மாரிசெல்வத்தை காணவில்லை என தாளமுத்துநகா் காவல் நிலையத்தில் அவரது பெற்றோா் புகாா் அளித்தனா். 


ஆனால் தாளமுத்துநகர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.


 இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவகத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அவரது பெற்றோர் மனு அளித்தனா்.


இதையடுத்து, தனிப்படை போலீசார் சந்தேகத்தின்பேரில் மேட்டுப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர்.


 அப்போது ...

 மாரிசெல்வம் என்ற அசால்ட், கடந்த 21ம் தேதி திரேஸ்புரம் உப்பு சங்க அலுவலகம் பின்புறம் வந்து கொண்டிருந்தபோது 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கியுள்ளது. 


அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பியோடி உள்ளார். 


இருப்பினும் கும்பல் அவரை ஓட ஓட விரட்டி செங்கலால் தாக்கியுள்ளது. 


இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.


 இதையடுத்து அந்த கும்பல் அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி அங்கேயே குழிதோண்டி புதைத்து விட்டது தெரிய வந்துள்ளது.



 இதையடுத்து மாரிசெல்வம் புதைக்கப்பட்ட லூா்தம்மாள்புரம் கோட்டை சுவா் பகுதியில் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தை சிறுவன் அடையாளம் காட்டினான். 


அந்த பகுதியில் இளைஞா் உடல் புதைக்கப்பட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டது.


 புதைக்கப்பட்ட இளைஞர் உடலை விஏஓ முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்படுகிறது.

 இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பரபரப்பாக காணப்படுகிறது.

திங்கள், 10 ஜூன், 2024

தூத்துக்குடியில் ஆதார் பதிவு செய்யும் முகாம அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 11-6-2024

photo

News by sunmugasunthram Reporter 

தூத்துக்குடியில் ஆதார் பதிவு செய்யும் முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். 



தூத்துக்குடி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கு ஆதார் பதிவு செய்யும் முகாமை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

     உடன் முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, பள்ளி தலைமை ஆசிரியை பெர்சியா ஞானமணி,  மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப் உள்பட பலர் உள்ளனா்.

வெள்ளி, 7 ஜூன், 2024

எம்ஜிஆர், ஜெயலலிதாவை பின்பற்றுபவர்கள் இனி பாஜக பக்கம் 2026 - சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை விடுத்துள்ளார்

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 8-6-2024

photo news Roja arunan journalist 

எம்ஜிஆர், ஜெயலலிதாவை பின்பற்றுபவர்கள் 

இனி ....

பாஜக பக்கம் திரும்புவார்கள் 

2026 - சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை விடுத்துள்ளார் 



இது பற்றிய செய்தியாவது:-

எம்ஜிஆர், ஜெயலலிதாவை பின்பற்றுபவர்கள் இனி பாஜக பக்கம் திரும்புவார்கள். 2026 - சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்.... 


திமுகவை வீழ்த்த பாஜகவால் மட்டுமே முடியும் என்பது தான் இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி*


பாராளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற 11.24 சதவீத வாக்குகள் தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கு வித்திடப் போகிறது


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக, 11.24 சதவீதம் அதாவது 48 லட்சத்து 80 ஆயிரத்து 954 வாக்குகளைப் பெற்று, திமுக, அதிமுகவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

 

இது பலரின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.



ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2019 மக்களவைத் தேர்தல்,  2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தது. இந்த இரண்டு தேர்தல்களிலும் கிடைத்த தோல்விக்கு, பாஜகவுடன் கூட்டணி வைத்ததே காரணம் என்று அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்கள்.


 ஆனால், உண்மையான காரணம் அதுவல்ல என்பதை இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கிறது. 


பாஜக உடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்ட அதிமுக வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்திருக்கிறது.


 10 மக்களவைத் தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்திருக்கிறது. 


அதிமுக என்ற அரசியல் கட்சியே, 'திமுக எதிர்ப்பு' என்ற ஒற்றைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. 


திமுக எதிர்ப்பு என்ற தூணின் தான் அதிமுக நின்று கொண்டிருக்கிறது.


 அதனால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் திமுக எதிர்ப்பில் அவ்வளவு தீவிரம் காட்டினர்.



 திமுகவினரிடம் பேசினாலே கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா.


ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவினர், திமுகவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டனர். 


 "தமிழகம் திராவிட பூமி. இங்கு திமுக, அதிமுக என்று மாறி மாறி தான் ஆட்சிக்கு வரவேண்டும். மற்றவர்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்று அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான செங்கோட்டையன், கே.பி.முனுசாமி ஆகியோர் சட்டமன்றத்திலேயே  பேசினார்கள்.


 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல்களில் ஒரு சில தொகுதிகளை தவிர, பாஜகவுக்கு ஆதரவாக அதிமுகவினர் வேலை செய்யவில்லை.


 பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற திமுகவின் திட்டத்திற்கு அதிமுகவினர் உடந்தையாக இருந்தனர். 


இந்த தேர்தலில் கூட்டணி வைத்திருந்தாலும், இந்த உள்ளடி வேலையைத் தான் செய்திருப்பார்கள்.


இதையெல்லாம் புரிந்து கொண்டு தான், உண்மையை மேலிடத்திற்கு எடுத்துச் சொல்லி, அதிமுக கூட்டணி வேண்டாம். 



அது பாஜகவின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது என்று தனி கூட்டணி அமைத்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.


 அதற்கு இன்று பெரும் பலன் கிடைத்துள்ளது. 

அதிமுக, திமுக என்ற இருபெரும் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, நாம் தமிழர் போன்ற கட்சிகளின் போட்டிகளுக்கு இடையில், திமுக அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது பெரிய சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது.


கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு,, "அதிமுக கூட்டணியின் தோல்விக்கு பாஜக தான் காரணம்" என்று விவாதம் நடத்தியவர்கள் இன்று "பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது எப்படி?" என்று விவாதம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.


அன்று, "அதிமுகவின் தோல்விக்கு பாஜக தான் காரணம்" என்றவர்கள் இன்று,"பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் தோல்வி அடைந்தோம்" என்று

சொல்கிறார்கள். இதுதான் பாஜகவின் வெற்றி. 


தமிழகத்தில் பாஜக பெற்றிருக்கும் 11.24 சதவீதம், மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வித்திடப் போகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா இரு பெரும் தலைவர்களின் வழி வந்தவர்கள், அவர்களை பின்பற்றுபவர்கள் இனி பாஜக பக்கம் திரும்புவார்கள்.

எம்ஜிஆர் ஜெயலலிதா இரு பெரும் தலைவர்களின் மீதும் பிரதமர் நரேந்திர மோடி பெருமதிப்பு கொண்டவர். தேர்தல் பிரசாரத்தின் போதும் அந்த இரு பெரும் தலைவர்களின் சாதனைகளை, அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்தார்.


 ஜெயலலிதாவின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. கடும் எதிர்ப்புகளையும் மீறி, 2002, 2007, 2012 ஆகிய மூன்று முறை குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு சென்று வாழ்த்தியவர்

ஜெயலலிதா

2008 ஜனவரியில் துக்ளக் வார இதழ் ஆண்டு விழாவுக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி வந்தபோது, தமிழகத்தில் பலர் போராட்டம் நடத்தினார்கள். அப்போது மோடியை  தனது இல்லத்திற்கு அழைத்து அறுசுவை விருந்து வைத்தவர்.ஜெயலலிதா. 


இதனால்தான் அதிமுகவினர் பதறுகிறார்கள். கதறுகிறார்கள். 


திமுகவின் தேசிய அணியாக காங்கிரஸ் மாறிவிட்டது.


 இப்போது அதிமுக  திமுகவின் கிளைக் கழகம் போல மாறிக்கொண்டிருக்கிறது. திமுகவை வீழ்த்த வேண்டுமானால் அது பாஜகவால்தான் முடியும் என்கிற நிலையை நோக்கி தமிழக அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.


 இந்த மக்களவைத் தேர்தல் உணர்த்தும் உண்மை இதுதான்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் 

ஏ.என்.எஸ்.பிரசாத் 

தமிழக பாஜக 

மாநில செய்தி தொடர்பாளர்


சனி, 1 ஜூன், 2024

தூத்துக்குடியில் காணொளி காட்சி மூலம் நடந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 2-6-2024

செய்தி புகைப்படங்கள்  

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடியில் காணொளி காட்சி மூலம் நடந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு



      தூத்துக்குடி காணொளி காட்சி மூலம் நடந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் அனைத்து முகவர்களும் கலந்து கொண்டனர்.

     திமுக அமைப்புச் செயலாளர் பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் இளங்கோவன், மாநில வழக்கறிஞர் அணி அமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளங்கோ ஆகியோர் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவுள்ள திமுக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  

    இதில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் அனைத்து முகவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் காணொளி காட்சி மூலம் விளக்கி கூறினர்.

      இதில்,  மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தலைமை தேர்தல் முகவர் வழக்கறிஞர் சுரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றியச் செயலாளர்கள் சின்னபாண்டியன், முருகேசன், நவநீதக்கண்ணன், அன்புராஜன், ராதாகிருஷ்ணன், பேரூர் செயலாளர் வேல்சாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துைண அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர வக்கீல் அணி தலைவர் நாகராஜன், துணை அமைப்பாளர் ரூபராஜா, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், மாவட்ட பிரதிநிதிகள் மாாிச்சாமி, நாராயணன், வட்டச்செயலாளர்கள் ரவிசந்திரன், சுரேஷ், செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.




வியாழன், 2 மே, 2024

பொய் செய்தி டிவி சேனலுக்கு தூத்துக்குடி எஸ்.பி கண்டிப்பு அறிக்கை!!!உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம்  : 03.05.2024.

 


பொய் செய்தி வெளியிட்ட  டி வி சேனலுக்கு  தூத்துக்குடி எஸ்.பி கண்டிப்பு அறிக்கை வெளியிட்டு உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

!!!

இதுபற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நக்கலக்கோட்டை கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஒரு சிலர் மதுபோதையில் இறுதி ஊர்வலத்தில் நடனமாடி ஆர்ப்பாட்டம் செய்ததை தட்டிக்கேட்டவரை தாக்கியதில் 3 பேர் காயமடைந்ததை ஒரு தொலை காட்சி ஊடகம் உண்மைக்கு புறம்பாக 2 பெண்கள் உட்பட 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டதாக தேவையில்லாமல் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது


இதற்கு மறுப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.



தூத்துக்குடி மாவட்டம் நக்கலக்கோட்டை கிராமத்தில் கடந்த 28.04.2024 அன்று கணபதி அம்மாள் என்பவர் இறந்த இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த உறவினர்களில் ஒரு சிலர் மதுபோதையில் இறுதி ஊர்வலத்தின் முன்பு நடனமாடி கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தவாறு சென்றனர். 


மேற்படி கிராமத்தின் தர்ம கர்த்தாவான கந்தசாமி என்பவர் தட்டிக்கேட்டுள்ளார்.


இந்நிலையில் 30.04.2024 அன்று மேற்படி இறந்த கணபதி அம்மாளின் 3ம் நாள் நிகழ்ச்சிக்கு வந்த கயத்தாறு ஊரைச் சேர்ந்த மஹாராஜா (40), வெள்ளைச்சாமி (29) மற்றும் இளஞ்சிறார் இருவர் உட்பட சிலர் அங்குள்ள சத்திய பவானி என்ற பெண்ணை அவதூறாக பேசியுள்ளனர். 


இதை தட்டிக்கேட்ட கந்தசாமி மற்றும் குமார் கண்ணம்மாள் என்பவரையும் தாக்கியுள்ளனர். 


இதில் காயமடைந்த மேற்படி கந்தசாமி மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், 


குமார் கண்ணம்மாள் மற்றும் சத்திய பவானி ஆகியோருக்கு சிறிய காயம் என்பதால் சிகிச்சையளிக்கப்பட்டு உடனே வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து உடனே எட்டயாபுரம் காவல் நிலைய போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதில் சம்மந்தப்பட்ட எதிரிகளை விளாத்திக்குளம் டி.எஸ்.பி ராமகிருஷ்ணன்  மேற்பார்வையில் எட்டயாபுரம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்தனர்.


இதில் காயம்பட்டவர்கள் 2 பெண்கள் உட்பட 3 நபர்கள், இதில் 2 பெண்களுக்கு சிறிய காயம் என்பதால் சிகிச்சையளிக்கப்பட்டு உடனே வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


இதை ஒரு தொலைக் காட்சி செய்தி தனது முகநூல் பக்கத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை என ஆங்கிலத்தில் "Tuticorin District : Three persons including two women, were hacked to death due to a dispute over the bursting of fire crackers at a funeral in the Ettayapuram area" என்று குறிப்பிட்டுள்ளது. 


இது பொதுமக்களிடத்தில் ஒரு பதட்டத்தையும், பீதியையும் ஏற்படுத்துவதாக உள்ளது. 


இதுபோன்று உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

புதன், 1 மே, 2024

காங்கிரஸ் படு தோல்வி உறுதி என்பதால் போலி வீடியோ ராகுல் காந்தியின் திட்டமிட்ட சதி!!! தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பரபரப்பு அறிக்கை

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.



அதில் தெரிவித்துள்ளதாவது:-


மக்களவைத் தேர்தலில் படுதோல்வி உறுதி என்பதால் பாஜகவுக்கு எதிராக போலி வீடியோக்களை பரப்பும் காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்


அமித்ஷா பேசுவது போன்ற போலி வீடியோ ராகுல் காந்தியின் திட்டமிட்ட சதி


நடந்து வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 400-க்கும் அதிகமான இடங்களைப் பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி  அமைக்க போவது உறுதியாகி உள்ளது.


 என்ன செய்தாலும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சியினர், பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றனர். 


அதில் ஒன்றுதான், 'இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா பேசுவது போன்ற ஒரு போலி வீடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.


 இதை காங்கிரஸ் ஆளும் தெலங்கானா மாநில  முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் பகிர்ந்துள்ளார்.


 அப்படியெனில் இந்த போலி வீடியோ உருவாக்கம் காங்கிரஸ் மேலிடம் அதாவது ராகுல் காந்தி செய்த சதி என்பது உறுதியாகிறது. 


ராகுல் காந்தியின் ஒப்புதல் இல்லாமல் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இது போன்ற பாதகச் செயலை, அயோக்கியத்தனத்தை செய்ய துணிந்திருக்க மாட்டார்.


பட்டியலின (SC), பழங்குடியின (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) இட ஒதுக்கீடு தொடர வேண்டும். தேவைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும் என்பது பாஜகவின் உறுதியான நிலைப்பாடு. இதில் ஒரு நாளும் பாஜக மாறுபட்டதில்லை. பாஜகவின் இருபெரும் தலைவர்களான வாஜ்பாயும், அத்வானியும் இடம் பெற்ற ஜனதா கட்சி ஆட்சியில் தான், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க 'மண்டல் ஆணையம்' அமைக்கப்பட்டது. பாஜக ஆதரவுடன் 1989-ல் மத்தியில் அமைந்த ஆட்சியில் தான் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டை பல ஆண்டுகள் காலம் தாழ்த்தியதுதான் காங்கிரஸ் கட்சியின் சாதனை.


நரேந்திர மோடி அவர்கள் பிரதமரான பிறகு தான், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டது. அதற்கு முன்பு எந்த அதிகாரமும் இல்லாத வெற்று ஆணையமாகவே அது இருந்தது. மருத்துவ உயர்கல்வி உட்பட அனைத்து மட்டங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பிவருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுதான். 


75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் தான், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மிக அதிக அளவில் உள்ளனர். அதாவது பட்டியலின, பழங்குடியின,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உண்மையிலேயே அரசியல் அதிகாரத்தை வழங்கியிருப்பது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தான். ஏனெனில் அரசியல் அதிகாரம் தான் உண்மையான அதிகாரம். அரசியல் அதிகாரம் கிடைத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு தேவையானதை தாங்களே எடுத்துக் கொள்ள முடியும். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களை வாங்கும் இடத்திலேயே வைத்திருந்தது. அவர்களை கொடுக்கும் இடத்திற்கு மாற்றி இருக்கிறது பாஜக அரசு. இதுதான் உண்மையான சமூகநீதி.


 அதனால்தான் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் பாஜகவுக்கு முழு ஆதரவை வழங்கி வருகிறார்கள். அதனால் தான் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மூன்றாவது முறையும் ஆட்சி அமைக்க இருக்கிறது.


இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் உள்ளிட்ட உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சியினர் பாஜகவுக்கு எதிராக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். இது தகவல் தொழில்நுட்ப யுகம்.  உண்மை ஒரு நொடியில் அம்பலமாகிவிடும்.  எது உண்மை, எது போலியானது என்பதை மக்கள் நன்கறிவார்கள். பிரிட்டிஷாரின் பிரித்தாலும் சூழ்ச்சியை கையாண்டு 55 ஆண்டு காலம் இந்த நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் இனி ஒருபோதும் வெற்றி பெறாது. குறுக்கு வழியில் வெற்றி பெற நினைக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சிகளுக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். எப்போதும் வாய்மையே வெல்லும்.


ஏ.என்.எஸ். பிரசாத் 

தமிழக பாஜக 

மாநில செய்தி தொடர்பாளர்

கைபேசி : 9840170711

தூத்துக்குடியில் மருத்துவ காப்பீடு திட்ட கார்டு பெறும் சிறப்பு முகாம்

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

1-5-2024

தூத்துக்குடியில் மருத்துவ காப்பீடு திட்ட கார்டு பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:-

மத்திய,தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்ட கார்டு பெறும் சிறப்பு முகாம் தூத்துக்குடி சின்னுக்கன்னு புரம் சத்துணவு மையத்தில் வைத்து இன்று1-5-2024 நடைபெற்றது.

 

 சிறப்பு முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



 தூத்துக்குடி மாநகராட்சி 14 வது வார்டு சின்னகண்ணுபுரம் சத்துணவு மையத்தில் வைத்து நடைபெற்ற மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு திமுக வட்ட செயலாளர் பா.காளி துரை தலைமையில்  அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது.

உப்பள தொழிலாளர் களுடன் மே தினம் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அசத்தல்!!!

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

1-5-2024

Photo Arunan 

news by sunmugasunthram Reporter 

2024 இன்று 1 மே தினம் உப்பள தொழிலாளர் கள் சங்கத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் இருக்கிறார்கள்.

இன்று... உப்பள தொழிலாளர்களுடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மே தினம் கொண்டாடி தொழிலாளர்களை மகிழ்ச்சி அடைய செய்தார்.

உப்பள தொழிலாளர்களுடன் மே தினத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அசத்தல்!!! 
அடுத்து...

தூத்துக்குடியில் திமுக சார்பில் இரண்டு இடங்களில் நீர் மோர் பந்தல்  திறந்து வைத்து பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பொியசாமி குளிர்பானங்கள் வழங்கினார்.



      தூத்துக்குடி கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.

     அதன்படி 60வது அடி சாலை பொிசன்பிளாசா மற்றும் போல்பேட்டை கீதாஹோட்டல் அருகில் ஆகிய இடங்களில் தூத்துக்குடி திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பொியசாமி திறந்து வைத்து மோர், சர்பத், பழரசம், ரோஸ்மில்க், இளநீர், எலுமிச்சை ஜூஸ், ரஸ்னா, நொங்கு, பதநீர், உள்ளிட்ட குளிர்பானங்கள், மற்றும் தர்பூசணி பழம், வாழைப்பழம், செவ்வாழை, அண்ணாசிபழம், வௌ்ளாிக்காய், போன்ற பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.



தூத்துக்குடி கீதா ஹோட்டல் முன்புறம் உள்ள குடிநீர் பந்தல் 

       நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ஜான் அலெக்ஸாண்டர், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ஜான்சிராணி, ாிக்டா, விஜயலட்சுமி, தெய்வேந்திரன், முன்னாள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துதுரை, வட்டசெயலாளர் ரவீந்திரன், வட்டப்பிரதிநிதிகள் துரை, பிரபாகர், அருணகிாி, அரசு வழக்கறிஞர் மாலாதேவி, முன்னாள் கவுன்சிலர்கள் இசக்கிமுத்து, பொியசாமி, முன்னாள் வட்டச்செயலாளர் மாாியப்பன், முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, மற்றும் ஜோஸ்பா், குமாா், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

கழிவு மீன் தொழிலகங்களை இழுத்து மூட வேண்டும் தமிழர் அமைப்புகள் கூட்டறிக்கை

மண்ணுக்கும் மக்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் கழிவு மீன் தொழிலகங்களை  இழுத்து மூட வேண்டும்

 இக்கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிற பொட்டலூரணி மக்கள் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை கைவிட வேண்டும்!!

தமிழர் அமைப்புகள் கூட்டறிக்கை

____________________




மத்திய மாநில அரசுகள் வளர்ச்சி என்ற பெயரில் மண்ணுக்கும் மக்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் தொழிலகங்களை மக்கள்  செறிவாக வாழக்கூடிய பகுதிகளில் நிறுவி வருகின்றன. மக்களின் உயிர் வாழும் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மக்களின் கருத்துக்களுக்கும் விருப்பத்திற்கும் மாறாகப் பெருங்கேடு விளைவிக்கும் தொழிலகங்கள் செயல்பட்டு வருகின்றன.  

 தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர ஆலை என்னும் நாசகார ஆலை இயங்கி மண்ணுக்கும் மக்களுக்கும் பெருந்தீங்கு விளைவித்து வந்த நிலையில், தூத்துக்குடி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து 13 உயிர்களைப் பலி கொடுத்து  நாசகர ஸ்டெர்லைட் தாமிர ஆலையை இழுத்து மூட வைத்தனர்.


 இன்று அதே போல் ...தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே கழிவு மீன்களில் இருந்து மீன் எண்ணெய் கால்நடை தீவனம் முதலியவற்றை உற்பத்தி செய்யும் கழிவு மீன் தொழிலகங்கள் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் செயல்பட்டு பெருந்தீங்கு விளைவித்துக் கொண்டு இருக்கின்றன.  


இவ்வகையான தொழிலகங்களின் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைவதோடு காற்றில் துர்நாற்றம் பரவி, மக்கள் பல்வேறு உடலியல் உயிரியல் சிக்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். 


 கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், எல்லை நாயக்கன்பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி என்.பி.எம் என்ற கழிவு மீன் தொழிலகமும், வடக்கு காரிசேரி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பொட்டலூரணி விவசாய நிலப்பகுதியில் மார்க்ஸ்மென், ஜெனிபா இண்டியா என இரு கழிவு மீன் தொழிலகமும் செயல்பட்டு வருகின்றன.



இம்மூன்று கழிவு மீன் தொழிலகங்களில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையினால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மக்களால் வீடுகளில் குடியிருக்க முடியவில்லை. விவசாய நிலத்தில் வேலை பார்க்க முடியவில்லை. மேலும் தொழிலகங்களில் நச்சுக் காற்றினை தேக்கி வைத்துக் கொண்டு இரவு நேரத்தில் திறந்து விடுகின்றனர். இதனால் குழந்தைகள் முதியவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மேலும் கழிவு மீன் தொழிலகங்களில் உருவாகும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பெரிதும் பாதிப்படைகிறது. மட்டுமல்லாமல் டேங்கர் லாரிகளில் கழிவு நீரை எடுத்து வந்து விவசாய நிலத்திலும் நீரோடையிலும் கொட்டி அப்பகுதியில் பெறும் சீர்கேட்டை உருவாக்குகிறார்கள். 

கழிவு மீன் தொழிலகங்கள் தொடங்கப்பட்ட காலத்தில் அதனால் ஏற்படும் பெருந் தீங்கை உணராத பொட்டலூரணி பொதுமக்கள் நாட்கள் செல்லச் செல்ல ஊரைச் சுற்றி உருவாகி வந்த நச்சு வளையத்தை உணரத் தொடங்கினர். இந்த ஆபத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள கடந்த மூன்று ஆண்டு காலம் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கைகள் அனைத்தும் குப்பை கூடைக்குப் போன நிலையில் அறவழியில் போராட்டங்களை நடத்தினர். வழக்கம்போல அரசும் மாவட்ட நிர்வாகமும் மக்களுடைய கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டன.

அறவழிப் போராட்டங்களுக்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் மதிப்பளிக்கத் தவறிய நிலையில் பொட்டலூரணிப் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்கும் உரிமையைப் பணயம் வைத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என ஒருமித்து முடிவெடுத்தனர். தேர்தல் புறக்கணிப்பு குறித்து தேர்தல் ஆணையத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் முறைப்படி தெரிவித்தனர். வழக்கம்போல அரசும் அதன் அதிகாரத்தில் இருப்பவர்களும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாக காரியம் சாதிக்கும் உத்தியைப் பயன்படுத்தி  பொட்டலூரணி பொதுமக்களில் ஒருசிலரை மட்டும் தேர்வுசெய்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. அரசு காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தள்ளிப் போடுவதில் குறியாக இருந்தது. மாவட்டத் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழுவினரோடு நடைபெறுகிற பேச்சு வார்த்தையில் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற முடிவில் பொட்டலூரணி பொதுமக்கள் உறுதியாக இருந்தனர். 

அரசின் அதிகாரத்தில் இருப்பவர்களும் தொடர்ந்து மண்ணுக்கும் மக்களுக்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் தொழிலகங்களுக்குச் சாதகமாக காய்களை நகர்த்துவதை புரிந்து கொண்ட பொட்டலூரணி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யக் கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். 

எப்பாடுபட்டாவது தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை முறியடிப்பதற்கு  திமுக அமைச்சர் அனிதா இராதாகிருட்டிணன் தனது படை பரிவாரங்களோடு பொட்டலூரணிக்கு வந்தார். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் உங்களோடு பேச முடியும் என்று பொதுமக்கள் வந்த வழியே அவரைத் திருப்பி வழியனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து வெளியூரிலிருந்து ஆயுதம் தாங்கிய இரவுடிகள் களத்தில் இறக்கப்பட்டனர். இரவுடிகளை கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

உயிர் வாழும் உரிமையை நிலைநாட்ட, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மூன்றாண்டு காலம் சமரசமின்றி தொடர்ந்து போராடி வருகிற பொட்டலூரணி பொதுமக்களின் மீது தற்போது புதுக்கோட்டை காவல் நிலைய குற்ற எண்: 105/2024 இ.த.ச.  147,353, 171(C), 171 (F) IPC & 132 RP Act   ஆகிய பிரிவுகளில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 40 ஆண்கள், 10 பெண்கள் மீது ஒரு வழக்கும், குற்ற எண்: 106/2024 இ.த.ச.147,341,353, 506 (i), IPC & (1) of TNPPDL Act ஆகிய பிரிவுகளில் காவல்துறையின் சொத்தை சேதப்படுத்தியதாக 50 ஆண்கள் 20 பெண்கள் மீது ஒரு வழக்கும் இரண்டு வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சாதி, மதம், வர்க்கம் கடந்து மனித நேயத்தோடு அறவழியில் போராடிவருகிற பொட்டலூரணி பொதுமக்கள் மீது  இரண்டு பொய் வழக்குகள் புனைந்துள்ளது காவல் துறை.  இதனால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று அம்மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இருந்த போதிலும் தம் உயிர் வாழும் உரிமையை நிலைநாட்ட எந்த விலையையும் கொடுப்பதற்கு அணியமாகவே அவர்கள் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்பது தம் கடமையென தமிழர் கழகம், மள்ளர் பேராயம், தமிழர் வணிகர் சங்கம் உள்ளிட்ட தமிழர் அமைப்பினராகிய நாங்கள் கருதுகிறோம்.

அவ்வகையில் பொட்டலூரணி மக்களின்கோரிக்கைகளூக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்றும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.


1. *உடனடியாக மாசு ஏற்படுத்தும் மீன் கழிவு ஆலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.*

2. *கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு தேர்தல் நாள் முழுவதும் பணியாற்றிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்*

3.*மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் என்ற இரு பொறுப்புகளையும் சரிவர செய்யாத மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்*

4. *பொட்டலூரணி மக்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை கைவிட வேண்டும்*

தேர்தலில் வாக்களிப்பது மட்டுமல்ல வாக்களிக்க மறுப்பதும் மக்களின் உரிமை என்பதையும் உரிமையை நிலைநாட்ட அமைதிப் போராட்ட வடிவங்களில் மிக வலிமையானது என்பதையும் ஆள்வோர் உணர்ந்து கொண்டு மக்களின் கொதி நிலை அடுத்த கட்டத்திற்குத் தள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.


29/04/2024


தமிழர் அமைப்புகள்

அரசு விழாவாக முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாள் கடைப்பிடிக்க படுமா ? தமிழக அரசின் பதில் என்ன ???

▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 28-4-2024

news by arunan journalist

அரசு விழாவாக முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன்  பிறந்தநாள்  கடைப்பிடிக்க படுமா ? தமிழக அரசின் பதில் என்னவாகும் என எதிர்பார்ப்பு???

இது பற்றிய செய்தியாவது:-

தமிழக அரசு மறைந்த தேசிய தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரது பிறந்தநாளை அரசு விழாவாக அன்று கொண்டாடப்படுகிறது.




முன்னாள் முதல்வர்

அன்னை ஜானகி ராமச்சந்திரன்

பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாட பட வேண்டும் என நீண்ட வருடங்களாக எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து..

தூத்துக்குடி மனிதநேய பண்பாளர் எம்.ஜி.ஆர்மன்றம்

செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் தகவல் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

அதற்கான பதிலும் தமிழக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் பதிலும் அனுப்பி வைத்துள்ளார் கள்

முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப்படம் குறித்து சட்டமன்றத்தில்  தங்களது கடிதம் சட்டமன்ற பேரவைச் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

. மேலும் விவரமாவது 

        முன்னாள் முதல்வர் அன்னை ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவேண்டுதல் அரசின் கொள்கை முடிவாகும் என்று தூத்துக்குடி மனிதநேய பண்பாளர் எம். ஜி.ஆர் மன்ற செயலாளர் சத்யா இலட்சுமணனுக்கு செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் பதில் 

தூத்துக்குடி

கீழச்சண்முகபுரம் பிராப்பர் தெரு மனிதநேய பண்பாளர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சத்யா இலட்சுமணன் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு இயக்குநருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார்.

       அதில் கூறியுள்ளதாவது...... தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அன்னை ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளான நவம்பர் 30ந்தேதியை அரசு விழாவாக அறிவிக்கவும், சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படத்தை திறந்துவைக்கவும் கேட்டுக்கொண்டார்.

        அந்த மனுவிற்கு  இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புமற்றும் அரசு துணைச்செயலாளர் அலுவலரால்அளிக்கப்பட்ட பதிலில் முன்னாள் முதல்வர் அன்னைஜானகி ராமச்சத்திரன் பிறந்தநாளான நவம்பர் 30ம் தேதியை அரசு விழாவாக அறிவிப்பது அரசின் கொள்கை முடிவாகும், என்ற விபரமும், அன்னை ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப்படத்தை சட்டமன்றத்தில் திறந்துவைக்கும் தங்களது கோரிக்கை சட்டமன்றத்தைச் சார்ந்ததால், தங்களது கடிதம் சட்டமன்ற பேரவைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  விபரத்தை தெரிவித்தது.

தமிழக அரசு மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப்படம் சட்டமன்றத் வளாகத்தில் நிறுவ படுமா மற்றும் அரசு விழாவாக முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாள் அறிவிக்கப்படுமா எதிர்பார்க்கிறார்கள்.

இந்து மதத்திலிருந்து...கிறிஸ்துவ மதம் மாறினால் 10 கோடி?!! ரூபாய் 5 லட்சம் மோசடி செய்து ஏப்பம் விட்ட பலே ஆசாமி தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அதிரடி கைது நடவடிக்கை!!!

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

26-4-2024

Police news  


தூத்துக்குடி  கோவில்பட்டி யில் கிறிஸ்தவ மதம் மாறினால் ரூபாய் 10 கோடி ???

  சுமார் 5 லட்சம் பணம் மோசடி செய்தவர் கைது - சைபர் குற்ற பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை.

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு IMO என்ற செயலி மூலமாக



 சொக்கநாதன் என்ற IDல் இருந்து தொடர்பு கொண்டு பேசியவர்..!!!

 அவரிடம் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால்...

 ரூபாய் 10 கோடி பெற்று தருகிறேன் அதற்கு அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்? வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டடுள்ளார்.பலே ஆசாமி?


இவரும் இதனை உண்மை என்று நம்பி   தூத்துக்குடி கோவில் பட்டி இளைஞர் தனது ரூபாய் 4,88,159/- பணத்தை Gpay மூலம் அனுப்பியுள்ளார்.


பின்னர் தான் ஏமாற்றப்பட்டு பணம் ரூபாய் 5 லட்சம் மோசடி ஆனதை உணர்ந்தார்.


 உடனே மேற்படி இளைஞர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.


மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர்

ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

கைதான ராஜவேல்

தூத்துக்குடி மாவட்டம் சைபர் க்ரைம் டீம் தேடலில் சிக்கினான் 

 தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு, ஆனந்தம் நகர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (31) என்பவர் மேற்படி பாதிக்கபட்ட இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதனையடுத்து மேற்படி போலீசார் நேற்று முன்தினம் (26.04.2024) தஞ்சாவூர் சென்று மேற்படி ராஜவேலின் வீட்டருகே வைத்து அவரை கைது செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டார்.

சிறையில் அடைப்பு 

அதன் பிறகு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர்.


 மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 25 ஏப்ரல், 2024

அழகி போட்டியில் இரண்டாம் இடத்தில் தூத்துக்குடி திருநங்கை மேகா தேர்வு இந்த நிகழ்ச்சியில் சினிமா நடிகைகள் அமைச்சர் பொன் முடி பங்கேற்பு பாராட்டு தெரிவித்துள்ளார்

  ▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

26-4-2024

news by arunan journalist 

தமிழகம் 2024 மிஸ் கூவாகம் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தில் தூத்துக்குடி திருநங்கை மேகா தேர்வு 

அமைச்சர் பொன் முடி வாழ்த்து தெரிவித்தார்.



இது பற்றிய செய்தியாவது :-

விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் வழிபாட்டு திருவிழா வருடந்தோறும் சித்திரை மாதம் நடைபெறும்.


இவ்விழாவில் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து திருநங்கை கள் கலந்து கொண்டு கூத்தாண்டவரை வழிப்பட்டு செல்கின்றன.

மிஸ் கூவாகம் அழகி போட்டி யில் கலந்து கொண்டோர்....

தென்னிந்திய திருநங்கையர்

கூட்டமைப்பு சமுக நலத்துறை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடந்த மிஸ் கூவாகம்-2024 அழகி

போட்டி இந்த ஆண்டும் 22-4-2024 அன்று  நடைபெற்றது

 


அழகி போட்டியில் குறிப்பாக இளம் வயது திருநங்கை கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர் 


தங்கள் செயல் அறிவுதிறன் நடை உடை பாவனை களை செய்து காண்பித்தனர் 



முதலிடம் !!!

அழகி போட்டியில் 

ஈரோடு ரியா முதலிடம் பிடித்து பரிசு தொகை50 ஆயிரம் தட்டி சென்றார்.


இரண்டாம் இடம் துாத்துக்குடி அமுதா நகர்

மேகா தேர்வு பெற்றார் அவருக்கு 25 ஆயிரம் வழங்கப்பட்டது.

முன்றாம் இடம் 


சென்னையை சேர்ந்த யுவாஞ்சலி தேர்வு பெற்றார் அவருக்கு 11 ஆயிரம் வழங்கினார்கள் 

தமிழக அமைச்சர் 

பொன் முடி!!! 

விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்ற அழகி போட்டி மிஸ் கூவாகம் 2024 மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொன் முடி தேர்வு பெற்றவர்களை வாழ்த்தியும் வந்திருந்த திருநங்கைகள் அனைவரையும் பாராட்டி பேசினார்.

சினிமா நடிகைகள்!!!

2024 மிஸ் கூவாகம் அழகி போட்டி நிகழ்ச்சியில் சினிமா நடிகை கள் 


ரெபெக்கா, பிரமிளா, எதிர்

நீச்சல் திரைப்படம் காயத்ரி முன்னிலை

வகித்தனர்.



இறுதி சுற்றுக்கான

முதல் சுற்று போட்டி

யில் துாத்துக்குடி மேகா,

கோவை எமி. தஞ்சை

ஜொஸ்மா,

விருதுநகர்

ரேணுகா, ஈரோடு ரியா,

சென்னை யுவாஞ்சலின்,

சேலம் கதிஜா ஆகிய 7

பேர் தேர்வாகினர்.


 இறுதி யாக ...

கேள்வி ?பதில்!!!

 சுற்று போட்டி

நடந்தது.



அதில்,

ஈரோடு ரியா

மிஸ் கூவாகமாக தேர்வு

செய்யப்பட்டார்.



2ம் இடத்தை துாத்துக்

குடி மேகா, 


3ம் இடத்தை

சென்னை யுவாஞ்சலின்

பிடித்தனர். 


முதல் பரிசு

ரூ.50 ஆயிரம், 2ம் பரிசு

ரூ.25 ஆயிரம், 3ம் பரிசு

- ரூ.11 ஆயிரம் வழங்கப்

பட்டது. 


பின்புமூன்று பேருக்கும்

கிரீடம் சூட்டி வாழ்த்து

தெரிவிக்கப்பட்டது.



தென்னிந்திய திருநங்

கைகள் கூட்டமைப்பு

தலைவர் மோகனாம்பாள்

வரவேற்றார். அருணா,

சுபிக்ஷா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

துணை

தலைவர்

விமலா நன்றி கூறினர்.



2024 மிஸ் கூவாகம் டூ அழகி மேகா தூத்துக்குடியில் உள்ள நட்புறவு உடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.