வரவேற்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரவேற்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 ஜனவரி, 2025

தூத்துக்குடி பிரஸ் கிளப் இணைச் செயலாளர் சதீஸ்குமார் இல்ல திருமண விழா, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்தினார்கள்


தூத்துக்குடி பிரஸ் கிளப் இணைச் செயலாளர் சதீஸ்குமார் இல்ல திருமண விழா, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்தினார்கள்

தூத்துக்குடி.2025ஜனவரி17 

தூத்துக்குடி பிரஸ் கிளப் இணைச் செயலாளரும், வசந்த் டிவி மாவட்ட செய்தியாளருமான சதீஸ்குமார் - ரோஸ்மேரி தம்பதியரின் புதல்வன் மரிய ஜேசுராஜாரீமஸ் - மெஸ்டிகா ஆகியோரது திருமண வரவேற்பு விழா பூபால்ராயர்புரம் சத்யா திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. 



விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மணமகன் வீட்டார் சார்பில் சதீஸ்குமார் - ரோஸ்மேரி மற்றும் பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் வரவேற்றனர். 



மணமக்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் எம்எல்ஏ சுடணையாண்டி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் முரளிதரன், மாநில ஐ.என்.டி.யு.சி செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ராகவேந்திரா, நாம்தமிழர் கட்சி மாவட்டச்செயலாளர் வேல்ராஜ், மாநகர திமுக அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், சிறுபாண்மை அணி துணைச் செயலாளர் அந்தோணி, கவுன்சிலர் ஜெபஸ்டின் சுதா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், காங்கிரஸ் மண்டல தலைவர்கள் ஐசன் சில்வா, ராஜன், செயலாளர் ஜெபராஜ், பிரஸ்கிளப் செயலாளர் மோகன்ராஜ், துணைத்தலைவர் சிதம்பரம், கௌரவ ஆலோசகர்கள் அருண், ஆத்திமுத்து, பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் மாரிராஜா, குமார், முத்துராமன், ராஜன், இருதயராஜ், கண்ணன், செந்தில்முருகன், டேவிட்ராஜா, உறுப்பினர்கள் காதர் முகைதீன், முரளி, ஜாய்சன், இசக்கிராஜா, பாலகுமார், கற்பகநாதன், பத்திரிகை துறையைச் சேர்ந்த வசீகரன், ராஜாசிதம்பரம், அருள்ஒளி, பிரபாகரன், ஜெயக்குமார், சேக்மதர், செந்தில்குமார், மோகன், ராஜ், ஜெயக்குமார், காசிராமன், கனகராஜ், சுப்பிரமணியன், சுடலை மணி, குமார், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு துறை சேர்ந்த அலுவலர் முத்துச்சாமி, சூப்பி, ஆரோக்கியராஜ் உள்பட அரசுதுறை மற்றும் அரசியல் கட்சியை சார்ந்த பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திங்கள், 4 செப்டம்பர், 2023

மூத்த பத்திரிகையாளர் ஜெகதீஸ்வரன் இல்ல திருமண விழா அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு சி.த செல்லப்பாண்டியன் மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்பு

 thoothukudileaks 4-9-2023

news photos by arunan journalist 

மூத்த பத்திரிகையாளர் ஜெகதீஸ்வரன் இல்ல திருமண விழா 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள்  கடம்பூர் ராஜு சி.த செல்லப்பாண்டியன் மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்றனர்.


 




பரபரப்பு 

மூத்த பத்திரிகையாளரும் தூத்துக்குடி மாவட்ட நமது அம்மா நாளிதழ் நிருபராக பணியாற்றி வரும் ஜெகதீஸ் அவரது இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது . அப்போது வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ உடன் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் சந்திப்பு பரபரப்பு 




இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்ட நமது அம்மா நாளிதழ் செய்தியாளர் ஜெகதீஸ் அவரது புதல்வர் சந்தன ரமேஷ் திருமணம் கோவங்காடு  கிராமத்தில் மிக எளிய முறையில் இன்று 4-9-2023 காலை குடும்பத்தினர் மத்தியில் நடைபெற்றது.


வரவேற்பு


இன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி  டூவி புரம் தூத்துக்குடி நாடார்கள் மகமை  ksps  திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


மணமக்கள் சந்தண ரமேஷ் - ஆனந்தி வரவேற்பு நிகழ்ச்சியில்.. அதிமுக முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜு மணமக்களை நேரில் வந்து ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்தார் .




தூத்துக்குடி அதிமுக முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் வர அவரது காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர் மற்றும் 


முன்னாள் எம்பி நட்டர்ஜி எட்வின் பாண்டியன் பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.




வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு வை பார்த்ததும் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் நேரில் சிறிது நேரம்  மகிழ்ச்சி உடன் பேசிவிட்டு சென்றார்.



திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த அதிமுக  கட்சி பிரமுகர்கள் மற்றும் செய்தி யாளர்கள் அனைவருக்கும் மூத்த பத்திரிகையாளர் நமது அம்மா நிருபர் ஜெகதீஸ்வரன் உளமார்ந்த நன்றி தெரிவித்து கொண்டார்.

செவ்வாய், 7 மார்ச், 2023

ஜோயல்- அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில். முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

 thoothukudileaks 7-3-2023

photo news by Shanmuga Sundaram 

தூத்துக்குடி வாகைக்குளத்தில் விமானம் மூலம் சென்னை செல்ல வந்த முதல்வருக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவ புரத்தில்...

மாநில திமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு...



இது பற்றிய செய்தியாவது -

 தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மதுரை மற்றும் நாகர்கோவிலில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தூத்துக்குடி வாகைக்குளத்தில் விமானம் மூலம் சென்னை செல்ல வந்த முதல்வருக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவ புரத்தில்... திமுக மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

வரவேற்பு 


 நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், , கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், அனஸ், சுதாகர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச் செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், ஜெயக்குமார் ரூபன், சோபியா, பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், ஜெஸிபொன்ராணி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகப்பாண்டியன், செந்தில், ஒன்றிய செயலாளரும் பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார், 



ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இளையராஜா, சுரேஷ்காந்தி, ராமசாமி, இசக்கிபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஆஸ்கர், சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பா சங்கர், ரமேஷ், கோமதி, மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ் பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, துணை அமைப்பாளர் ஆறுமுகம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரகுராமன், பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், தர்மராஜ், செல்வகுமார், நாகராஜன், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபால கிருஷ்ணன், கூட்டுறவு வங்கி தலைவர் வி.பி.ஆர்.சுரேஷ், பகுதி துணை செயலாளர் மகேஷ்குமார், இளைஞரணி ராஜ்குமார், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பால்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஸ்டாலின், சண்முகநாராயணன், பரியேறும் பெருமாள், அனிட்டன், ஜெகன், கொம்பையா, மாசிலாமணி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் தங்கராஜ், அலெக்ஸ்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஸ்பாலன், தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் சைமன், சீலன், புதுக்கோட்டை பள்ளி ஆட்சி மன்ற குழுவை சேர்ந்த அருள், ஜாய்சன், பிரசன்னா, பிரதிநிதிகள் ஜோஸ்வா, தங்க செல்வன், மற்றும் பரமசிவம், வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 பின்னர் விமான நிலையத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் வழியனுப்பி வைத்தனர்.