thoothukudileaks 4-9-2023
news photos by arunan journalist
மூத்த பத்திரிகையாளர் ஜெகதீஸ்வரன் இல்ல திருமண விழா
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு சி.த செல்லப்பாண்டியன் மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்றனர்.
பரபரப்பு
மூத்த பத்திரிகையாளரும் தூத்துக்குடி மாவட்ட நமது அம்மா நாளிதழ் நிருபராக பணியாற்றி வரும் ஜெகதீஸ் அவரது இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது . அப்போது வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ உடன் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் சந்திப்பு பரபரப்பு
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்ட நமது அம்மா நாளிதழ் செய்தியாளர் ஜெகதீஸ் அவரது புதல்வர் சந்தன ரமேஷ் திருமணம் கோவங்காடு கிராமத்தில் மிக எளிய முறையில் இன்று 4-9-2023 காலை குடும்பத்தினர் மத்தியில் நடைபெற்றது.
வரவேற்பு
இன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி டூவி புரம் தூத்துக்குடி நாடார்கள் மகமை ksps திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மணமக்கள் சந்தண ரமேஷ் - ஆனந்தி வரவேற்பு நிகழ்ச்சியில்.. அதிமுக முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜு மணமக்களை நேரில் வந்து ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்தார் .
தூத்துக்குடி அதிமுக முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் வர அவரது காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர் மற்றும்
முன்னாள் எம்பி நட்டர்ஜி எட்வின் பாண்டியன் பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு வை பார்த்ததும் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் நேரில் சிறிது நேரம் மகிழ்ச்சி உடன் பேசிவிட்டு சென்றார்.
திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த அதிமுக கட்சி பிரமுகர்கள் மற்றும் செய்தி யாளர்கள் அனைவருக்கும் மூத்த பத்திரிகையாளர் நமது அம்மா நிருபர் ஜெகதீஸ்வரன் உளமார்ந்த நன்றி தெரிவித்து கொண்டார்.










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக