முஸ்லீம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முஸ்லீம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 ஜூன், 2024

தூத்துக்குடியில் மஸ்ஜித் ரஹ்மானில் ஹஜ் பெருநாள் தொழுகை

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ arunan 

17-6-2024 

தூத்துக்குடியில் மஸ்ஜித் ரஹ்மானில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது .



இது பற்றிய செய்தியாவது;-

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம்

மஸ்ஜித் ரஹ்மானில் ஹஜ் பெருநாள் தொழுகை நேற்று (16/06/2024) ஞாயிறு காலை 7 மணியளவில் நடைபெற்றது



ஹாபிழ் சியாத் தொழுகை நடத்தினார்


இஸ்லாமிய பரப்புரையாளர் இஸ்மாயில் சொற்பொழிவு நிகழ்த்தினார்


அன்பளிப்பு 

தொடர்ச்சியாக மக்தப் மதரஸாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வந்த மாணவர்களுக்கும் 



அவர்களது பெற்றோர்களுக்கும் ஊக்கப்படுத்தும் விதமாக அன்பளிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது .


மஸ்ஜித் ரஹ்மான்

பொறுப்பாளர்கள்

சுலைமான், முகம்மது, நவாஸ், அண்ணல்,ரஃபீக் மற்றும் யஹ்யா, ஜமாஅத் சகோதரர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்


அகமது இக்பால் 

தலைவர் 

மஸ்ஜித் ரஹ்மான்

தூத்துக்குடி

ஞாயிறு, 10 ஜூலை, 2022

பக்ரீத் தியாகத் திருநாள் வரலாறு

 ஒவ்வொரு பண்டிகையும் ஒருவித அர்த்தம் தோய்ந்தே இருக்கின்றன. இஸ்லாமியர்களின் மற்றைய பெருநாட்களை விட, இந்த ‘ஹஜ்’ திருநாள் கொண்டாட்டத்தில் கூடுதல் அர்த்தம் பொதிந்திருக்கிறது. இறைக்கட்டளைக்கு பணிந்து பெற்ற மகனையே பலியிடத் துணிந்த இப்ராகிம் நபிகளாரின் தியாகம் இத்திருநாளில் நினைவு கூறப்படுகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் இறைவன் வழங்கிய அருட்கொடைகளை நினைவு கூர்ந்து, இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் இத்திருநாள் இருக்கிறது.ஏழை, எளியோர், தேவையுடையோருக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்த நிறைவில் மனம் மகிழ்ந்து கொண்டாடும் மகத்தான நாளாகவும் இப்பண்டிகை நாள் இருக்கிறது.



இந்தியாவில் ஹஜ் பெருநாளை ‘பக்ரீத்’ என்கிறோம். ‘பக்ரி’ என்றால் ‘ஆடு’ பொருள் தருகிறது. இவ்வகையில் ஆட்டை அறுத்து குர்பானி தரப்படுவதால், இந்த பெருநாளை ‘பக்ரீத்’ என்றழைப்பது வழக்கமாகி இருக்கிறது. இறைவன் அளித்த உயிர், உடமை, நேரம் என அனைத்தையும் எச்சூழலிலும் தியாகம் செய்கிற உன்னத உணர்வின் ஆணி வேராகவே ‘குர்பானி’ விளங்குகிறது.


உலகின் அத்தனை இஸ்லாமிய மக்களையும் ஓரிடத்தில் திரளச் செய்கிற அற்புத ஒற்றுமை மாநாட்டை ஹஜ் கடமை தருகிறது. வசதி படைத்தோர், வாழ்நாளில் குறைந்தது ஒருமுறையேனும் அரேபிய நாட்டுக்குச் சென்று, ஐம்பெரும் இஸ்லாமிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும். கலிமா (இறை உறுதி), தினமும் ஐந்து வேளை தொழுகை, ரமலான் மாதம் நோற்கும் நோன்பு, கூடுதல் வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஏழைகளுக்கு வழங்கும் ஜக்காத் என்ற கடமைகளின் தொடர்ச்சியாக ஐந்தாம் கடமையான ஹஜ் நிறைவேற்றப்படுகிறது.


‘ஹஜ்’ என்றால் ‘புறப்படுதல்’ அர்த்தம் தருகிறது. அரேபிய மண்ணிற்கு புறப்பட்டு அங்கு பல்வேறு வழிபாடுகளை முடித்து திரும்புகின்றனர். பாவங்கள் போக்கும் நாட்களாக மட்டுமல்ல... தியாகத்தின் மேன்மை உணர்ந்து இறையச்சத்த்தில் அன்று பிறந்த பாவமற்ற பாலகராக மாறும் அதிசயத்தையும் இஸ்லாமியர்களுக்கு இந்த ‘ஹஜ்’ தருகிறது. இப்பண்டிகை நாளில் ஆட்டை அறுத்து நிறைவேற்றும் குர்பானி நிகழ்வானது, இறைவனின் நெருக்கத்தை, இறையச்சம் அதிகப்படுத்துதலை வழங்குகிறது.

தியாகத் திருநாள் வரலாறு



இப்ராஹிம் நபிகளார் தன் காலத்தில் ‘இறைவன்தான் எல்லாமும்.. அவனுக்கு இணை ஏதும் இல்லை’ எனும் இறைப்பற்றுடன் வாழ்ந்திட்டார். அவருக்கு குழந்தைப் பேறு இல்லை. புத்திர பாசம் கிடைக்காத ஏக்கத்தில் தவித்த இப்ராகிமை மகிழ்வுக்கு ஆளாக்கும் வகையில், அவரது மனைவி ஹாஜரா அம்மையாருக்கு நபி இஸ்மாயில் பிறந்தார்.


இப்ராகிம் நபிகளாரின் வாழ்க்கை இதன்பிறகு மேலும் இன்பமயமானதுடன், இறைவன் மீதான பற்றும் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டு போனது. ஒருநாள் நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நபிகளார் இப்ராகிம், தன் மகனை தானே இறைவனுக்காக குர்பானி செய்வதாக கனவு கண்டார். இதன் பிறகு கவலையில் ஆழ்ந்து போன அவர், தம் அன்பு மகனிடமும் இதுகுறித்து தெரிவித்தார்.


மகனோ, ‘கனவில் வந்த இறைக் கட்டளையை ஒருபோதும் தாமதப்படுத்தாமல், உடனே நிறைவேற்றுங்கள் தந்தையே!’ என்று நபி இஸ்மாயில் பணிந்தார். பிள்ளை பாசத்தால் தந்தை மனம் மாறிடக்கூடாதே என்றெண்ணிய இஸ்மாயில், தன் தந்தையின் கண்களைத் துணியால் கட்டி, பெரிய வாள் ஒன்றினையும் அவரே கொண்டு வந்து தந்தை கரத்தில் தந்தார். வெட்டும் அரிவாள் தந்தையிடம், வாளின் முனையில் மகனின் கழுத்து... அப்போதுதான், ‘ஜிப்ரயீல்’ எனும் வானவரை அனுப்பி இறைவன் அந்த குர்பானியைத் தடுத்தான். அங்கே ஓர் ஆட்டை இறக்கிவைத்து, இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்துப் குர்பானியிடுமாறு இபுராஹிமுக்குக் கட்டளையிட்டான்.


இறைவனுக்காக, மகனின் உயிரையே பலி கொடுக்க துணிந்த தந்தையின் தியாகம் மகத்தானது. நரபலியை அல்லாஹ் தடுத்து நிறுத்தினான். இச்சம்பவத்தின் நினைவாகவே இஸ்லாமியர்கள் ஹஜ் பெருநாள் என்ற தியாகத் திருநாளில், குர்பானி நிறைவேற்றுகின்றனர். 


இந்நாளில் குர்பானியிட்ட விலங்கின் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து... ஒரு பங்கை, அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு... மூன்றாவது பங்கை, அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

ஆர் எஸ் எஸ் - பிஜேபில் யில் இருக்கும் இஸ்லாமியர்களை ஊரை விட்டு ஓதுக்க நினைக்கும் இஸ்லாமியர்களுக்குகாயல் அப்பாஸ் பதிலடி!!! !

thoothukudileaks 26-09-2021


ஆர் எஸ் எஸ் , பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்களை ஊரை விட்டு ஓதுக்க நினைக்கும் இஸ்லாமியர்களுக்கு முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.



 ஆர் எஸ் எஸ், சிறுபான்மை அமைப்பான முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்திய பாரத நாட்டுக்காகவும், மக்கள் நலனுக்காவும் மிகவும் சிறப்பாக பணிகளை அனைவரும் செய்து வருகிறோம் . 


இந்த நிலையில் மத வெறி பிடித்த இஸ்லாமியர்கள் ஆர் எஸ் எஸ் , பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்களை கடுமையான விமர்சனம் செய்து வருகீறீர்கள் என்பதை அறிய முடிகிறது. உங்களின் விமர்சனத்திற்கு நாங்கள் ஓரு போது கவலை பட போவதில்லை. ஏனென்றால் நாங்கள் இதை எல்லாம் கடந்து வந்து விட்டோம் ஆகவே உங்களின் இது போன்ற விமர்சனம் எங்களை ஓரு போதும் அடக்கி விட முடியாது ?


ஆர் எஸ் எஸ், பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று எந்த அடிப்படையில் விமர்சனம் செய்து வருகிறீர்கள். ஆர் எஸ் எஸ், பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்கிறாதா இல்லை ?அப்படி இருக்க இஸ்லாமியர்கள் ஆகிய நீங்கள் சொல்வது இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான சொல் என்று உங்களுக்கு தெரியுமா - தெரியாதா ? 


ஆர் எஸ் எஸ் , பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்களை ஊரை விட்டு ஓதுக்கி வைக்க நினைக்கும் இஸ்லாமியர்களுக்கு நாங்கள் கேட்கும் கேள்வி எங்களது குடும்பதார்களை ஊரை விட்டு நீங்கள் ஓதுக்கி வைப்பதற்கு நாம் ஓன்று இஸ்லாமிய மன்னர் நாட்டில் குடியிருக்க வில்லை மற்றும் வாழ வில்லை ஏனென்றால் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது இந்தியா என்கின்ற ஜனநாயக நாட்டில் எந்த ஊரையும் எனது ஊர் என்று சொல்லி கிடலாம் தவிற யாரும் சொந்தம் கொண்டாட. முடியாது ? அப்படி இருக்க எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க உங்களுக்கு என்ன உரிமை மற்றும் அதிகாரம் இருக்கிறது ? இது போன்ற பேச்சுக்கள் உங்களின் அறியாமையை காட்டுகிறது . 


ஆர் எஸ் எஸ் , பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்களை ஊரை விட்டு ஓதுக்க வேண்டும், ஜமாத்தை விட்டு நீக்க வேண்டும் என்று சொல்லும் இஸ்லாமியர்கள் உங்களால் முடிந்தா? உங்க ஊரின் தலைமை ஜமாத் லட்டர் பேட்டில் ஆர் எஸ் எஸ் , பிஜேபி யில் இருக்கும் எங்களை ஊரை விட்டு ஓதுக்கிறோம் என்றும் ஜமாத்தை விட்டும் நிக்கு கிறோம் என்று ஜமாத் நிர்வாகிகள் அனைவரும் கை எழுத்துயிட்டு எங்களிடம் கொடுத்தால் நாங்கள் எந்த வித மறுப்பு தெரிவிக்காமல் ஜமாத் நிர்வாகிகள் ஆகிய நிங்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டு படுகிறோம் ? 


இதை எல்லாம் விட்டு விட்டு ஊரை விட்டு ஓதுக்கி வைக்கிறோம், ஜமாத்தை விட்டு நீக்கிறோம் , என்று இந்திய சட்டத்திலும் இஸ்லாமிய மார்க்கத்திலும் இடம் இல்லாத ஓன்றை நீங்கள் செய்வதன் மூலம் ஆர் எஸ் எஸ் , சேர்ந்த இஸ்லாமியர்கள் யாருயேனும் பாதிக்க பட்டால் இதில் சம்பந்த பட்ட அனைவரும் மீதும் சட்ட ரீதியாக கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிட படுவீர்கள் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்து கொள்கிறோம். 


இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் ஆதாயம் தேடுவதற்க்காக வேண்டி ஆர் எஸ் எஸ் பிஜேபி யில் யில் இருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று அப்பாவி இஸ்லாமிய மக்களிடையே எங்களை போன்ற சமுதாய வாதிகளை சித்தரித்து அவதூறுகளை பரப்பி அதன் மூலம் ஆதாயம் தேடி வருகிறார்கள். நாங்கள் எதிரானவர்கள் தான் யாருக்கு என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் இந்து முஸ்லிம் ஓற்றுமை சீர் குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளுக்கும் , இஸ்லாமிய சமுதாய பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுவர்களுக்கும், சட்ட.த்திற்கு விரோதமாக தொழில் செய்து வருவோர்களுக்கும், நம் இந்திய பாரத நாட்டில் இருந்து கொண்டு அன்னிய நாட்டுக்கு ஆதரவாக பேசுவோர்களுக்கும் , நாங்கள் எப்போதும் எதிரானவர்கள் தான் அதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை . ஆனால் இஸ்லாமிய மார்க்கத்திற்க்கும் , ஓட்டு மொத்தம் இஸ்லாமியர்களுக்கும் ஓரு போதும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை . ஓரு சில இஸ்லாமியர்கள் செய்யும் தவறுகளை சுட்டி காட்டிருகின்றோம் .இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் திருச்சி மாவட்ட தலைவராக மும்தாஜ் நியமனம்!!!

தூத்துக்குடி லீக்ஸ் :-31-08-2021 

நேரம் : 5.26. am

திருச்சி மாவட்ட தலைவராக மும்தாஜ் நியமனம் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின்  தமிழக மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். 



இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.


முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் தமிழக மாநில தலைவர் பாத்திமா அலி அவர்களின்  ஓப்புதலோடு திருச்சி , சேந்தானீர் புரத்தை சேர்ந்த கே.மும்தாஜ் இன்று முதல் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் இயக்கத்தின் மாவட்ட தலைவராக  நியமிக்கபட்டுள்ளார். 


மேலும் கே .மும்தாஜ் தலைமையில் இயக்கத்தின் உறுப்பினராக மகளிர்கள்  பலரும்  இனைந்துள்ளதை முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது . 


பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் , இயக்கத்தின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் ,  இயக்கத்தின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .


மேலும் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் திருச்சி மாவட்ட தலைவராக நியமிக்க பட்டுள்ள கே. மும்தாஜ் அவருக்கு இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறோம்  . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.