ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 மார்ச், 2023

தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ்-ன் மேடை திறன் பேச்சு பயிற்சி

thoothukudileaks 24-3-2023

photo news by shanmuga sunthram

தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில் மேடை பேச்சு திறன் பயிற்சி நடைபெற்றது.

ஜேசி ஜெயக்குமார் முதன்மை ஆசிரியராகவும், கணேஷ் ராம்சுந்தர் இணை ஆசிரியராகவும் பணியாற்றினர். ஜேசிஐ தலைவர் வக்கீல் சுபாசினி வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மண்டல ஆசிரியை சுப்புலட்சுமி, மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், பட்டயத் தலைவர் ஜெர்லின் தினகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள். 

மண்டல அலுவலர் வளத்துறை வில்சன் அமிர்தராஜ், பியர்ல்; சிட்டி தலைவர் ராஜேஷ், செயலாளர் சுப்பிரமணியன், மற்றும் பொன்ராஜா, முகமது இப்ராகிம், ஜனார்த்தனன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் திட்ட இயக்குநர் சரண்யா, துணைத் தலைவர் மேலாண்மை மதுமிதா, பொருளாளர் முத்து லட்சுமி, துணைத் தலைவர் ரத்தினா பொன்ராஜா, இயக்குநர் வணிகம் சத்யா மற்றும் சங்கரி ஆகியோர் பங்கேற்றனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் ஆயிஷா இப்ராஹிம், துணைத் தலைவர் அஜிதா பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.

மூன்று சிறந்த பங்கேற்பாளர்கள் விருதும், இரண்டு சிறந்த பயிற்சி உருமாற்ற விருதுகளும் வழங்கப்பட்டன.  தனியார் நிறுவனங்களின் நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி சார்பில் வாழ்க்கை திறன் முகாம்

thoothukudileaks 20-2-2023

photo news by shanmuga Sundaram 

    தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் இரண்டு நாட்கள் வாழ்க்கை திறன் முகாம் நடைபெற்றது..

  இந்த இரண்டு நாள் திறன் முகாமை ஜேசிஐ செனட்டர் கார்த்திக் துவக்கி வைத்தார்.   ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் தலைமை ஆசிரியர் ரூபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



முதல்நாள் மண்டல பயிற்சியாளர்கள் சரவணகுமார், கவுசல்யா, பட்டயத் தலைவர் ஜெர்லின் தினகரன், ஜேசிஐ பேர்ல்சிட்டி குயின்பீஸ் தலைவர் வக்கீல் சுபாசினி ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் கீழ் லைஃப் ஸ்கில்  பயிற்சியை எடுத்தனர்.

இரண்டாம் நாள் இந்தியா போஸ்ட் வணிக நிருபர் ஆயிஷா இப்ராஹிம், ஹைடெக் பியூட்டி பார்லர் அஜிதா பிரபு, மண்டல துணைத் தலைவர் அன்பு தனபாலன், தற்காலிக மண்டலப் பயிற்சியாளர் அஜித்குமார்  பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி கொடுத்தனர். சுஹா பிரைடல்ஸ் சரஸ்வதி மற்றும் அவரது மகள் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஸ்ரீஹரிணி ஆகியோரின் கலாச்சார நிகழ்வு பாடலுடன் இரண்டு நாட்கள் வாழ்க்கை திறன் முகாம் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சுதா சாலமன் மற்றும் ஜேசிஐ குயின்பீஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட தலைவர்களான ரத்தினா பொன்ராஜா, முபாராஷா ஆகியோர் செய்திருந்தனர்.

வியாழன், 26 ஜனவரி, 2023

2023 ஜனவரி 26 குடியரசு தின விழா கொண்டாடிய தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ்

 thoothukudileaks 27-1-2023 

photo news by shanmuga Sundaram 

ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ்  குடியரசு தின விழா தூத்துக்குடியில் உள்ள விரிவாக்க நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.



இதுபற்றிய செய்தியாவது:-

ஜேசிஐ பேர்ல்சிட்டி குயின்பீஸ் தலைவர் JFM வழக்கறிஞர் V. சுபாசினி தேசிய கொடியை ஏற்றினார். கொடியேற்றம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 


தேசபக்தி நடனம், தேசபக்தி பாடல்கள், கட்டுரைப் போட்டி, சொற்பொழிவு மற்றும் வினாடி வினா போட்டிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 


இந்நிகழ்வுகளை விரிவாக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜி.ரமணி  ஏற்பாடு செய்திருந்தார். 

ஜேகாம் சார்டர் செயலாளர் JCI Sen எம். முகமது இப்ராகிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 



இந்நிகழ்ச்சியில் பியர்ல் சிட்டி குயின் பீஸ் செயலாளர் JC HGF அ. ஆயிஷா இப்ராஹிம் மற்றும் பொருளாளர் Jc M. லட்சுமி முத்துராமன மற்றும்  உறுப்பினர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் பங்குகொண்ட மாணவர்களுக்கு தலைவர் பரிசுகள் வழங்கினார்.