வியாபாரி சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாபாரி சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 ஜூன், 2026

வளர்ச்சி நிதி குலுக்கல் திட்ட முதல் பரிசு கார் பெற்ற தூத்துக்குடி வியாபாரிக்கு சிறப்பு பாராட்டு

 Tamil Nadu updates news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 18:

சுதேசி நாயகன் த.வெள்ளையன் உருவாக்கிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, வியாபாரிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 

thoothukudileaks


ஆன்லைன் வர்த்தக கட்டுப்பாடு, அந்நிய பொருட்களுக்கு எதிர்ப்பு மற்றும் சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கொள்கைகளை முன்னிறுத்தி, உள்ளூர் வணிகர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பணியில் பேரவை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

த.வெள்ளையன் மறைவுக்குப் பின்னரும் அவரது வழிகாட்டுதலின்படி பேரவை தனது பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.


 இதன் ஒரு பகுதியாக கடந்த மே 5ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற 43வது மாநில மாநாடு மாநிலத் தலைவர் எஸ்.சௌந்தர்ராஜன், மாநில பொதுச் செயலாளர் மெஸ்மர் காந்தன் வெள்ளையன் மற்றும் மாநில பொருளாளர் எஸ்.பீர் முகமது ஆகியோரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

முதல் பரிசு கார் !!!

அம் மாநாட்டையொட்டி அறிவிக்கப்பட்ட வளர்ச்சி நிதி குலுக்கல் திட்டத்தின் முதல் பரிசான கார், தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் கிளை வியாபாரிகள் சங்க உறுப்பினரும் சிறு ஹோட்டல் தொழிலதிபருமான வி.ரவிக்குமாருக்கு கிடைத்தது.


இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஜூன் 18) காலை தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

thoothukudileaks


, மாநில துணைத் தலைவர் பொன்.தனகரன், த.பாஸ்கர், மாநில இணைச் செயலாளர் எச்.வில்லியம்ஸ் மஸ்கர்னாஸ், ஜெ.ஜவஹர் மற்றும் ஆர்.விக்னேஷ் ஆகியோர் முன்னிலையில் வி.ரவிக்குமாருக்கு முதல் பரிசுக்கான கார் வழங்கப்பட்டது.

thoothukudileaks


நிகழ்ச்சியில் மில்லர்புரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆனந்தசேகரன், ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் சின்னதங்கம், பர்னிச்சர் சங்கத் தலைவர் ரத்னா தர்மராஜ், வட்டத்தெப்பம் பகுதி வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணமூர்த்தி, பாளை ரோடு பாதுகாப்பு சங்கத் தலைவர் பாக்யா மணி, ஜவுளி மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் சங்க செயலாளர் ஜெயசுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தெர்மல் நகர் வியாபாரிகள் சங்க செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார். சங்க பொருளாளர் அங்குசாமி, துணைச் செயலாளர் தேவ ஆனந்த், துணைத் தலைவர் முஸ்தபா மற்றும் ஏராளமான வியாபாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

thoothukudileaks



இந்நிகழ்வைத் தொடர்ந்து ...

மாவட்டத் தலைவர் தெர்மல் சொ.ராஜா பேசுகையில், 


“சுதேசி நாயகன் த.வெள்ளையன் உடலால் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர் காட்டிய பாதையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தொடர்ந்து செயல்பட்டு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அரணாகவும், சொன்னதைச் செய்யும் அமைப்பாகவும் திகழ்கிறது” என்றார்.

thoothukudileaks

thoothukudileaks


வெள்ளி, 22 மே, 2026

தூத்துக்குடி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா IPS சந்தித்து பரபரப்பு கோரிக்கை வைத்த தூத்துக்குடி வியாபாரிகள்

Tamil Nadu updates

photo news by Arunan journalist 

தூத்துக்குடி:மே 22

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ்  அவரை இன்று( 22-5-2026 ) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, வியாபாரிகளின் பாதுகாப்பு குறித்தும், சமூக வலைத்தளங்களில் உணவகங்கள் மீது பரப்பப்படும் அவதூறுகள் குறித்தும் முக்கிய கோரிக்கை மனுவை அளித்தனர்.

thoothukudileaks


இது பற்றி செய்தியாவது...

காவல் கண்காணிப்பாளருடன் சந்திப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தெர்மல். சொ. ராஜா தலைமையில், தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவர் ஜவஹர் -பொருளாளர் விக்னேஷ் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருளாளர் நவமணி தங்கராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்தனர்.

thoothukudileaks


நிர்வாகிகளின் முக்கிய கோரிக்கைகள்

 அச்சமற்ற வணிகச் சூழல்: தூத்துக்குடியில் உள்ள வியாபாரிகள் எவ்வித பயமும், அச்சுறுத்தலும், பிரச்சனைகளும் இல்லாமல் நிம்மதியாக வணிகம் செய்திட தேவையான பாதுகாப்பு சூழலை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.

 காவல்துறைக்கு ஒத்துழைப்பு:

 வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், சட்ட ஒழுங்கை பராமரிக்க வணிகர்கள் தரப்பில் இருந்து காவல்துறைக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

 அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை:

 கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் (Social Media) திட்டமிட்டு உணவகங்களை (ஹோட்டல்களை) பற்றி அவதூறு பரப்பி, வணிகர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்க முயலும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா IPS உறுதி:

 வணிகர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வியாபாரிகளின் பாதுகாப்பிற்கு காவல்துறை என்றும் துணையாக இருக்கும் எனத் தெரிவித்தார். 

மேலும், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டம் பாயும் எனக் குறிப்பிட்ட அவர், வணிகர்களின் கோரிக்கைகள் குறித்து கண்டிப்பாக உரிய ஆவண (நடவடிக்கை) செய்கிறேன்"என உறுதியளித்தார்.

thoothukudileaks


இந்த சந்திப்பின் போது வணிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் மற்றும் வர்த்தகர்கள் பலர் உடனிருந்தனர்.


திங்கள், 5 மே, 2025

தமிழக அரசு உடனடியாக வணிகர் பாதுகாப்பு நலச் சட்டம் இயற்ற வேண்டும்தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் 2வது மாநில மாநாடு:

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

#தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் 2வது மாநில மாநாடு:

தமிழக அரசு உடனடியாக வணிகர் பாதுகாப்பு நலச் சட்டம் இயற்ற வேண்டும் மாநில தலைவர் காமராசு வலியுறுத்தல்.


தூத்துக்குடி, மே 5:

 தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் 2வது மாநில மாநாடு தூத்துக்குடி கனி பேலஸ் கூட்டரங்கில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. மாநில தலைவர் காமாராசு தலைமையில் நடைபெற்ற இம்மாநாடு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.




42வது வணிகர் தினத்தை முன்னிட்டு "வணிகர்கள் பாதுகாப்பு மாநாடு" என அறிவிக்கப்பட்ட இந்நிகழ்வில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:



1. தமிழக அரசு உடனடியாக வணிகர்கள் பாதுகாப்பு நலச் சட்டத்தை இயற்ற வேண்டும். தற்போது தமிழகம் எங்கும் வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லை, வணிகர்கள் கொலை செய்யப்படுகிறார்கள், கடைகள் சூறையாடப்படுகின்றன.


2.திருச்செந்தூர் முருகப் பெருமானின் திருக்கோவிலில் பரம்பரை பரம்பரையாக வியாபாரம் செய்யும் வணிகர்களின் கடைகள் எவ்வித அறிவிப்பும் இன்றி அகற்றப்பட்டுள்ளன.


 அறநிலையத்துறை இங்கு வியாபாரம் செய்த பழைய வணிகர்களுக்கு முருகன் கோவில் கடை வீதிகளில் முன்னுரிமைப்படி கடைகள் ஒதுக்கி கொடுக்க வேண்டும். அதுவரை தற்காலிகமாக மாற்றுக் கடைகள் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.


3.திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்யும் சிறு, குறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் ஆகியோரை கோவில் வளாகத்திலிருந்து ரவுடிகள் போல் அகற்றிய நிர்வாகத்தை கண்டிப்பதோடு, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும்.


4.திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவில் எதிர்புறம் தனியார் கட்டடத்தில் பரம்பரை பரம்பரையாக வியாபாரம் செய்யும் சிறு வணிகர்கள் 20 பேருக்கு மட்டும் கட்டிட ரசீது கொடுத்து, பிற கடைகளுக்கு கொடுக்காத நகராட்சி நிர்வாகம் உடனடியாக அனைத்து கடைகளுக்கும் கட்டிட ரசீது கொடுக்க வேண்டும்.


5.தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை பழுதடைந்து காணப்படுவதால், உடனடியாக போர்கால அடிப்படையில் சாலையை சீர் செய்து தர வேண்டும்.


6.திருச்செந்தூரிலிருந்து பிற இடங்களுக்கு போக்குவரத்து மேம்படுத்த, தென்னக ரயில்வே ஒரு வந்தே பாரத் ரெயிலும், ஒரு விரைவு ரெயிலும் சென்னை-திருச்செந்தூர் இடையே இயக்க வேண்டும்.


7.நாசரேத் மையமாகக் கொண்டு சிட்கோ தொழிற்சாலை அமைக்க அரசு அனைத்து நிர்வாக செயல்களையும் முடித்துள்ளதால், விரைவில் தொழிற்சாலையை நிறுவி சுற்றுவட்டார மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.


8.ஆறுமுகநேரியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். தற்போது ஆறுமுகநேரி ரெயில்வேகேட் எப்பொழுதும் மூடியே இருப்பதால் பொதுமக்கள் அதிகம் சிரமப்படுகின்றனர்.









9.தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் முடிந்து, புதிய விமான நிலையத்துக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட வேண்டும்.


10.குலசேகரப்பட்டின அனல்மின் நிலைய பணியை விரைவாக முடித்து திறந்து, சுற்றுவட்டார மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.


11.மாற்றுத்திறனாளி வணிகர்களுக்கு உபகரணங்கள் அரசு வழங்க வேண்டும்.


12.மாற்று திறனாளி வணிகர்களுக்கு GST-லிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.


13 அனைத்து வணிகர்களுக்கும் 28%, 18% என உள்ள GST-யை 5% ஆக குறைக்க வேண்டும்.


14. அனைத்து வணிகர்களின் குழந்தைகளும் கல்வி கற்க, கல்வி கட்டணத்திலிருந்து முழு விலக்களிக்க வேண்டும்.


15. வணிகர்களின் தினமான மே 5-ஐ அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்.


16.தமிழக அரசு சமீபத்தில் உள்ளாட்சி மன்றம், நகராட்சி, மாநகராட்சிகளில் ஏற்றியுள்ள மின்கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை வரி, பாதாள சாக்கடை கட்டணங்களை வணிக நிறுவனங்களுக்கு முழுமையாக குறைக்க வேண்டும்.


17.கோவில் இடங்களில் வணிகம் செய்யும் வர்த்தக நிறுவனங்களிடம் 1999-ம் ஆண்டு முதல் வாடகை நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும். குத்தகை கட்டணம் வாடகை வசூலிப்பதை கைவிட்டு சதுரஅடிக்கு ரூ.1 கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும்.


18.பட்டா இடங்களை கோவில் இடங்கள் என கூறி அதிகாரிகள் போர்டு வைப்பதை கைவிட வேண்டும். இடத்தை ஜப்தி செய்வதை கைவிட வேண்டும். அந்த இடங்களில் பட்டா இருந்தால் தனி பட்டா வழங்க வேண்டும்.


19.மளிகை, ஹோட்டல், பேக்கரி கடைகளில் ஆய்வு என்ற பெயரில் பாலிதீன் பையை பறிமுதல் செய்வதையும், அதற்கு அபராதம் விதிப்பதையும் தடுக்க வேண்டும். வணிகர்களை விட்டுவிட்டு பாலிதீன் பை தயாரிப்பாளர்களை தடை செய்ய வேண்டும்.


20. வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய மாநில அரசுகள் முற்றிலும் தடை செய்ய வேண்டும்.


மாநாட்டில் மேற்கண்ட அனைத்து தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக மாநில தலைவர் காமாராசு தெரிவித்தார்.



ஞாயிறு, 4 மே, 2025

அண்ணண் தெர்மல் சொ. ராஜா தலைமையில், ..சென்னை மாநாட்டுக்குத் தூத்துக்குடி வணிகர்கள் வெகு விமரிசையாக புறப்பட்டனர்


தூத்துக்குடி, மே 4:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 42வது வணிகர் தின மாநில மாநாடு நாளை (05.05.2025) சென்னை படப்பையில் நடைபெறுகிறது. 



இதில் கலந்து கொள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட வணிகர் சங்க உறுப்பினர்கள் இன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் அண்ணண் தெர்மல் சொ. ராஜா  தலைமையில், ..

அண்ணா நகர் 7வது தெருவில் இருந்து இரவு 7 மணிக்கு வணிகர் குழுவினர் புறப்பட்டனர்.


 இந்த குழுவை மாநில துணைத்தலைவர்கள் . பொன். தனகரன், பாஸ்கர் மற்றும் சிவந்தாகுளம் வியாபாரிகள் சங்க தலைவர்  சந்திரசேகர் ஆகியோர் கொடி அசைத்து வழியனுப்பினார்கள்.



விழாவில் அண்ணா நகர் வியாபாரிகள் சங்க தலைவர்  ஜெயமுருகன், செயலாளர்  நவமணி தங்கராஜ், மாப்பிள்ளையூரணி சங்க செயலாளர் ரத்தினகுமார், தெர்மல் நகர் சங்க செயலாளர் . மூர்த்தி, முள்ளக்காடு M. சவேரியார்புரம் சங்க செயலாளர் திரு. முத்துராஜ், ஸ்பிக்நகர் வட்டார முன்னாள் செயலாளர்  பவித்ரா முருகேசன், பூபால்ராயபுரம், S.S. பிள்ளை மார்க்கெட், ஜவுளி சங்கங்கள், அண்ணா பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி நகர மத்திய சங்க பொருளாளர்  விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர

ஞாயிறு, 16 மார்ச், 2025

சுதேசி நாயகன் த.வெள்ளையன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

 Tamil Nadu updates 17-3-2025

தூத்துக்குடி லீக்ஸ் – வணிகச் செய்தி

சுதேசி நாயகன் த.வெள்ளையன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை, மார்ச் 16, 2025 – மே 17 இயக்கத்தின் சார்பாக இன்று சென்னை சைதாப்பேட்டை திறந்தவெளி திடலில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிறுவனர் தலைவர் த.வெள்ளையன் அவர்களுக்கு தமிழர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.



இவ்விருதை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வழங்க, பேரவையின் மாநில தலைவர் S. சௌந்தரராஜன் (ராஜா) மற்றும் மாநில பொதுச் செயலாளர் V. மெஸ்மர்காந்தன் வெள்ளையன், சுதேசி நாயகனின் மகள்கள் அனு பாரதி மற்றும் அர்ச்சனா தேவி ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

விழாவில், திருமுருகன் காந்தி அவர்களும், பேரவையின் மாநிலத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோரும் த.வெள்ளையன் அவர்களின் தமிழ் மீது கொண்ட பற்றையும், வணிகர்களை ஒருங்கிணைத்து பாதுகாத்த பணியினையும் பாராட்டி புகழஞ்சலி செலுத்தினர்.

வீடியோ பார்க்க 

இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில அமைப்பாளர் L.M. டேவிட்சன், செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மணலி சண்முகம், விழுப்புரம் மாவட்ட தலைவர் செஞ்சி கண்ணன், பழம்பொருள் அணித் தலைவர் பூவை ஜெயக்குமார், மத்திய சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகி செல்லப்பாண்டி, கமலக்கண்ணன், சுரேஷ், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, த.வெள்ளையன் அவர்களின் பெயரைச் சுமக்கும் வகையில், அவர் வாழ்ந்த இல்லத்தின் அருகிலுள்ள சாலைக்கு "வெள்ளையன் சாலை" என்று பெயரிட அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

- A. ஆல்பர்ட் அந்தோணி

மாநில செய்தி தொடர்பாளர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை


 தகவல் செய்தி 

தெர்மல் ராஜா  மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் 

தூத்துக்குடி 

திங்கள், 9 டிசம்பர், 2024

மத்திய-மாநில அரசை கண்டித்து வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று நெல்லையில் ரெயில்வே நிலையம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tamil Nadu updates,

செய்தி:-அருணன் 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நெல்லை தூத்துக்குடி வியாபாரிகள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதுபற்றி செய்தியாவது:-


மத்திய மாநில அரசுகளை கண்டித்து!!!

கடை வாடகைக்கு மத்திய அரசு 18% ஜிஎஸ்டி
விதித்திருப்பதையும் மாநில அரசு தொழில் உரிமை
கட்டணத்தை உயர்த்தி இருப்பதையும், மத்திய மாநில அரசுகள்
ஆன்லைன் வர்த்தகத்திற்கு சாதகமாகவும்சில்லறை வணிகத்திற்கு
எதிராக செயல்படுவதை கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இன்று... 

(10.12.2024 )திருநெல்வேலி இரயில் நிலையம் காமராஜர் சிலை முன்பு காலை 10 மணியளவில் நெல்லை மற்றும் தூத்துக்குடி சங்க வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

M.பத்ரு ஜமால்
நெல்லை மாவட்ட தலைவர் 

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் தலைவர் தெர்மல் ராஜா செயளாலர்  ஜவகர் பொருளாளர் திரு நவமணி தங்கராஜ் இனைச் செயளாலர் தளபதி செபஸ்தியான்   தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தின் பொருளாளர்  விக்னேஷ் மற்றும் கிளைச் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


 






 ஆர்ப்பாட்டத்தில்...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சங்க வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் 

வியாழன், 21 நவம்பர், 2024

பதவிப்பிரமாணம் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

பத்திரிக்கை செய்தி

20.11.2024 அன்று மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தூத்துக்குடி நாடார்கள் மகமை K.S.P.S திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. 





விழாவிற்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில துணைத்தலைவரும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தின் வழிகாட்டியுமான பொன் தனகரன் தலைமை உரையாற்றினார்கள்.

மாநில தலைவர் த. வெள்ளையன் மறைவுக்குப் வீர வணக்கம்!!!

பட திறப்பு 

நிகழ்ச்சி யில்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிறுவனத் தலைவரும், வணிகர்களின் பாதுகாவலரும்,சுதேசி நாயகனுமான மறைந்த  த.வெள்ளையன்   திருவுருவப்படத்தினை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 


விழாவின் வரவேற்புரையை தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க முன்னாள் பொதுச் செயலாளர் பாஸ்கர் ஆற்றினார்கள்.

பதவிப்பிரமாணம்!!!

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட .J. ஜவகர் க்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில தலைவர்  S.சௌந்தர்ராஜன் (எ) ராஜா  பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள். 


போட்டியின்றி பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட  தெர்மல்.சொ.ராஜா B.A.,L.L.B., அவருக்கு மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனரும், வழக்கறிஞரும்,மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் தேசிய செயலாளரருமான .ஹென்றி திபேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்கள் 


 ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட மத்திய சங்க பொருளாளர் R. விக்னேஷ் -க்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில துணைத்தலைவர் பொன் தனகரன்  பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்கள்.



கலந்து கொண்டோர் 

விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில அமைப்பாளரும் செயல் தலைவருமான டாக்டர்.L.M.டேவிட்சன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு , PUCL மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாவட்ட தலைவர் முனைவர் ச. தெ. செல்வராஜ் , அரவிந்த் ஆட்டோ ஏஜென்சி மற்றும் ஆசீர் மாருதி உரிமையாளருமான தொழிலதிபர் ராஜ்குமார்  தூத்துக்குடி  வழக்கறிஞர் சங்க தலைவர்  தனசேகர் டேவிட் ,மூத்த வழக்கறிஞருமான மாரிமுத்து ,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சிக்கல்.சுரேஷ் பாபு  மாவட்ட செயலாளர் முகமது அபுபக்கர் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி  கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து வழங்கினார்கள்.

வாழ்த்துக்கள் தெரிவித்தோர் 

60 கிளை சங்க பிரதிநிதிகள் 

                       &

தூத்துக்குடியில் உள்ள பொது நல அமைப்புகள் இயக்கங்கள்!!!


விழாவில் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்திற்கு உட்பட்ட 60 கிளைச் சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர், மத்திய சங்கப் பிரதிநிதி மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். 


தூத்துக்குடியில் உள்ள பொது நல அமைப்புகள் இயக்கங்கள் நேரில் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். 

நன்றி தெரிவிப்பு!!!

விழாவிற்கு வந்த அனைவருக்கும் V.V.D ரோடு,அண்ணா நகர் K.V.K,நகர் மேற்கு பகுதி அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளரும்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருளாளர் R.நவமணி தங்கராஜ் நன்றி உரை  வழங்கினார்கள்.

ஞாயிறு, 10 நவம்பர், 2024

தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய வியாபார சங்க நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

thoothukudileaks 10-11-2024

Photo news by

Arunan journalist 

கடந்த வாரம் தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய வியாபார சங்க நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தனர்.



இது பற்றிய செய்தியாவது:-

பொதுக்குழு கூட்டம் 

தூத்துக்குடி மாநகர வர்த்தகர்களின் மத்திய சங்க தேர்தல் மற்றும் வருடாந்திர பொதுக்குழுகூட்டம் 

10.11.2024 ஞாயிறு 4.00 மணிக்கு மத்திய சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

புதிய நிர்வாகிகளை வாழ்த்தி முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் சால்வை அணிவித்தார்.



 இக் கூட்டத்தில் கடந்த 4-11-2024 அன்று தூத்துக்குடி மத்திய சங்க வியாபாரிகள் தேர்தல் நடைபெற்றது இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார் கள்


அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!!

வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளை எம்.சொக்கலிங்கம் B.Sc.,B.L. 

தேர்தல் அலுவலர் / சங்க சட்ட ஆலோசகர் 


"மத்திய சங்க தலைவர், ஜவஹர் பொதுச்செயலாளர் தெர்மல் ராஜா மற்றும் பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்ற தாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்"


இந்நிகழ்ச்சியில்... முன்னாள் தலைவர் விநாயகமூர்த்தி மற்றும் கிளை சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




சிறப்பு அழைப்பாளாராக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அதன் பின்னர் சங்க வரவு செலவு கணக்கு சங்க கட்டிடம் பத்திரம் ஆகியவற்றை முன்னாள் தலைவர் விநாயகமூர்த்தி புதியதாக தேர்வு செய்ய பட்ட நிர்வாகிகள் இடம் ஒப்படைத்தார்.

ஒப்படைப்பு 


சங்க கட்டிடம் மேல் மாடி எழுப்ப வேண்டுகோள்!!!

புதிய நிர்வாகிகளான தலைவர் செயலாளர் பொருளாளர் உங்களின் கடமையாக  நீங்கள் சங்க கட்டிடத்தில் மேல் மாடியில் கட்டிடம் கட்ட வேண்டும்  அதற்கான முயற்சியில் இப்போதிருந்தே ஈடுபடுங்கள் இதில் நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் தான் 9 வருடம் பதவியில் இருந்த போது என்னால் முடிந்ததை செய்து முடித்தேன் என கேட்டுக் கொண்டார்.

மாநில தலைவர் வெள்ளையன் மறைவுக்குப் மவுன அஞ்சலி





பொதுக்குழு கூட்டம் ஆரம்பித்ததும்

முன்னதாக தன்னிநிகரில்லா மாநில வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் 

வெள்ளையன் மறைவுக்குப் மூன்று நிமிடங்கள் அனைவரும் எழுந்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

நன்றி தெரிவிப்பு 

கூட்டம் நிறைவில் நெகிழ்ச்சி உடன் மத்திய வியாபாரிகள் சங்கம் பொது செயலாளர் தெர்மல் ராஜா பொதுக்குழு கூட்டத்தில்  கலந்து கொண்ட கிளை சங்க நிர்வாகிகள் வியாபார சங்க உறவு கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.












திங்கள், 4 நவம்பர், 2024

பரபரப்பாக நடைபெற்ற தூத்துக்குடியில் வியாபாரிகள் சங்கம் தேர்தல் பொது செயலாளராக தெர்மல்நகர் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெர்மல் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்

தூத்துக்குடி லீக்ஸ்

5-11-2024 

 photo news by

Arunan journalist 

தூத்துக்குடியில் உள்ள 60  வியாபாரிகள் சங்கங்கள் கொண்ட ஒருங்கிணைத்த சங்கமான தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்திட நேற்று 04.11.24 காலை 10 மணிமுதல் மதியம் வரை சட்ட ஆலோசகர் . M. சொக்கலிங்கம்  அறிவிப்பு கொடுத்திருந்தார்.




பரபரப்பு!!!

தூத்துக்குடியில் வியாபாரிகள் நிர்வாகிகள் அப் பகுதியில் வர தொடங்கியதும் ...

காலை 9.30 மணிமுதல் மணி நகரில் உள்ள தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் பரபரப்பு ஏற்பட்டது.



இரு அணிகளும் மோதல்!!!

இரண்டு அணிகளாக வந்து தேர்தல் போட்டியில் களம் இறங்கினார் கள் இரு நாட்களாக முன்பாக வியாபாரிகள் மத்தியில்  ஆதரவு கேட்டு ஒரு வித பரபரப்பு உருவாகியது.

 

 இதில் தெர்மல் ராஜா  அணியான  வெற்றி அணியின் தலைவராக . ஜவஹர் , பொது செயலாளராக தெர்மல் ராஜா பொருளாளராக விக்னேஷ் 

தூத்துக்குடியில் 48 கிளை சங்கங்கள் வேட்பு மனு தாக்கல்!!!

தெர்மல் ராஜா  அணி இவர்களுக்கு ஆதரவான  48 கிளை சங்க நிர்வாகிகளும் பெரும் திரளாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்கள்.

அமைதியாக வாபஸ் 

 ஏற்கனவே பொறுப்பில் இருக்கும் விநாயகமூர்த்தி  அணி அதனை பார்த்ததும் அமைதியாக மனு தாக்கல் செய்யாமல் அங்கிருந்து சென்றனர்.   


வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளான நேற்று வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத காரணத்தால்...

தலைவர் 


தலைவர் ஜவஹர் 

 புதிய தலைவராக பாளை ரோடு முனிசிபல் காம்ப்ளெக்ஸ் 

சங்க செயலாளர் ஜவஹர் 


செயலாளர் தெர்மல் ராஜா 


செயலாளர் 

தெர்மல் ராஜா 

 பொது செயலாளராக  தெர்மல்நகர் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெர்மல் ராஜா 

பொருளாளர் விக்னேஷ் 



பொருளாளர் விக்னேஷ் 

  பொருளாளராக அண்ணா பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் விக்னேஷ்  போட்டியின்றி தேர்ந்தெடுக்க பட்டார்கள். 



இவர்களுக்கு அனைத்து கிளை சங்க நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தார்கள். 

தேர்தல் சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம் 


தேர்வு பெற்ற நிர்வாகிகள் அனைவருக்கும்  தூத்துக்குடி லீக்ஸ் சார்பில் அவர்களின் மக்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!!! 



புதன், 2 அக்டோபர், 2024

தலைவர் வெள்ளையன் மறைவுக்கு பின் மாநில புதிய பொதுச் செயலாளராக மெஸ்மர்காந்த் பொறுப்பேற்பு தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

 ▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

3-10- 2024 

photo news 

Arunan journalist 

தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுச் செயலாளராக மெஸ்மர்காந்த் வெள்ளையன் பொறுப்பேற்றார்.



தூத்துக்குடியில் மாநில இளைஞர் அணி தலைவர் தெர்மல் ராஜா உடன் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சங்க வியாபாரிகளை

மெஸ்மர்காந்த் வெள்ளையன் சந்தித்தார் .



இது பற்றிய செய்தியாவது:-

  

கடந்த மாதம் வணிகர் சங்க பேரவை

தலைவர் வெள்ளையன் 

நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ( 10-9-2024) அன்று 

பிற்பகல் 02.30 மணிக்கு காலமானார்.

இவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஆக இருந்து வந்தார்.


பொறுப்பேற்பு!!!

இவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் 

மெஸ்மர்காந்த் வெள்ளையன்  மாநில பொது செயலாளர் ஆக பொறுப்பேற்றார் .

இளைஞர் அணி தெர்மல் ராஜா உடன் தூத்துக்குடி வருகை!!!

இந்நிலையில்... நேற்று 2-10-2024 மாநில இளைஞர் அணி தலைவர் தெர்மல் ராஜா உடன் மெஸ்மர் காந்த் வெள்ளையன் 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே வருகை தந்தார் .



தளபதி ஜெபஸ்டியான் வரவேற்பு!!!

அப்போது  தூத்துக்குடி பேருந்து நிலையம் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்  துனைத் தலைவர் பீட்டர்  செயளாலர் தளபதி செபஸ்தியான் பொருளாளர் எட்வர்ட் துனைச் செயளாலர்கள் செல்வராஜ்  இசக்கியப்பன்  பொன்னுமனி  மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்து ஒவ்வொருவராக சால்வையை அணிவித்தனர் 


பின்னர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் சுற்றி பார்த்து அங்கு உள்ள சங்க வியாபாரிகளை சந்தித்து அளாவினர்.

"உங்களுக்காக நானிருக்கிறேன்" "எந்த பிரச்சனையும் சரி பண்ண முடியும் என்னிடம் தெரிவியுங்கள்"

 என மெஸபர் காந்த் வெள்ளையன் வியாபாரிகள் இடம் கேட்டு கொண்டார்.


தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய முத்த வியாபாரி பீட்டர் அவருக்கு  மெஸ்மர் காந்த் வெள்ளையன் சால்வை அணிவித்து கெளரவித்த போது எடுத்த புகைப்படம்

முத்த வியாபாரிக்கு மரியாதை!!!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சங்க துனை தலைவரும் அப் பகுதி முத்த வியாபாரியுமான பீட்டர் அவருக்கு சால்வை அணிவித்து கெளரவ படுத்தினார் மெஸ் பர் காந்த் வெள்ளையன்.