கனிமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனிமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஜூன், 2024

கனிமொழி எம்.பி மீண்டும் வெற்றி திமுக வினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 5-6-2024

செய்தி புகைப்படங்கள்  

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி மீண்டும் வெற்றி தூத்துக்குடி மாவட்ட திமுக வினர் மகிழ்ச்சி கொண்டாடி வருகின்றனர் 



அதிமுக உள்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

     தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்டிஆர் விஜயசீலன், 

நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.


 இந்த தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. 

     கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இங்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14,58,430 ஆகும். இதில் 4,72,056 ஆண் வாக்காளர்களும், 5,03,325 பெண் வாக்காளர்களும், 87 திருநங்கைகளும் என மொத்தம் 9,75,468 வாக்குகள் பதிவாகின. 



இதில் பதிவான மின்னனு வாக்குபதிவு எந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வஉசி பொறியியல் கல்லூாியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன


     இந்நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை கடந்த 4ம்  தேதி காலை 8 மணிக்கு மின்னனு வாக்குபதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் வேட்பாளா்கள் முகவா்கள் முன்னிலையில் எண்ணும் பணி தொடங்கியது.


 இதற்காக ஓவ்வொரு தொகுதிக்கு தலா 14 மேஜைகள் போடப்பபட்டு இருந்தன.


 தூத்துக்குடி கோவில்பட்டி தொகுதிகளில் 21 சுற்றுகளும், ஓட்டப்பிடாரம் விளாத்திகுளம் திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் 19 சுற்றுகளும் வாக்குள் எண்ணப்பட்டன.


 இதில் முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த தி.மு.க. வேட்பாளர் கனிமொழி அமோக வெற்றி பெற்றுள்ளார். 

     இதில் கனிமொழி 540729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 


அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் 147991 வாக்குகள் பெற்றார். 


இதன் மூலம் 392738 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி எம்பி வெற்றி வாகைசூடினார்.


 கடந்த முறை 563143 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது. 



 பின்னர் வெற்றி வெற்ற கனிமொழி எம்்பிக்கு தேர்தல் அதிகாாியான கலெக்டர் லட்சுமிபதி சான்றிதழ் வழங்கினார்.


 அப்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பொியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், உள்பட பலர் உடனிருந்தனர். 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் விபரம் வருமாறு ...


கனிமொழி கருணாநிதி (திமுக) 540729, 


சிவசாமி வேலுமணி (அதிமுக) 147991,


 விஜயசீலன் 

( த.மா.கா.) 122380,


 ரொவீனா ரூத் ஜோன் (நாம் தமிழர் கட்சி) 120300, 


ராஜா  (

நாம் இந்தியர் கட்சி) 6640,  


அருணாதேவி (சுயேட்சை) 6072,


 சித்திரை ஜெகன் எஸ் (சுயேட்சை) 3640, 


 சிவனேஸ்வரன் ஜே (சுயேட்சை) 2245, 


  சாமுவேல் (சுயேட்சை) 2240,


 மாணிக்கராஜ் (பகுஜன் சமாஜ்) 2158, 


 சண்முகசுந்தரம் கே (சுயேட்சை) 1832,


 முருகபாவேந்தன் (மக்கள் நல்வாழ்வு கட்சி) 1736,


 பொன்குமரன்  (சுயேட்சை) 894,


 ஜெயக்குமார்  (சுயேட்சை) 825,

 காந்திமல்லர்  (சுயேட்சை) 791,

 பிஷப் டாக்டர் கோட்ரே நோபல் 

(ஆ. ஜ.பா.க) 757,


 பெருமாள்குமார்  புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி 727,

 இசக்கிமுத்து  (சுயேட்சை) 699,

 கண்ணன்  (சுயேட்சை) 679,


 டேவிட் ஜெபசீலன் (சுயேட்சை) 656,

 சுடலைமுத்து (சுயேட்சை) 576,

 கிருஷ்ணன்  (சுயேட்சை) 479,


 ராதாகிருஷ்ணன்  (சுயேட்சை) 456,

 ஜேம்ஸ்  (சுயேட்சை) 433, 


பொன்ராஜ் (சுயேட்சை) 428,


 பிரசன்ன குமார் (சுயேட்சை) 396,

 செல்வமுத்துக்குமார்  (சுயேட்சை) 341,


 செந்தில் குமார் (சுயேட்சை) 290,

 நோட்டா 9682

 திமுக வேட்பாளர் கனிமொழி யை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.




சனி, 13 ஏப்ரல், 2024

புழுவை போல் ஊர்ந்து சென்று சசிகலாவின் காலை பிடித்தவர் சசிகலாவுக்கு மட்டுமின்றி இந்த தமிழகத்திற்கும் துரோகம் செய்தாா் எடப்பாடி? பிஜேபி அதிமுக இரண்டும் கள்ள காதல் செய்கிறது?தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு சேகாித்து அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசினார் .

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

Photo news by sunmugasunthram Reporter 

புழுவை போல் ஊர்ந்து சென்று சசிகலாவின் காலை பிடித்தவர் சசிகலாவுக்கு மட்டுமின்றி ..

இந்த தமிழகத்திற்கும் துரோகம் செய்தாா் எடப்பாடி?தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு சேகாித்து போது அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசினார் .

21ல் அடிமை ஆட்சிக்கு முடிவு கட்டினோம் 24ல் சா்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் 

நாம் வெற்றி பெற்றுவிட்டோம் நமக்கு இங்கு (தூத்துக்குடி) போட்டியில்லை!!!!!

என்றார். 



 இதுபற்றி செய்தியாவது:-

  இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெறுகிறது.


 தமிழகத்தில் ஓரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது.

 17ம்தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற இருப்பதால் தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தங்களுக்குாிய சின்னத்திற்கு வாக்கு சேகாித்து வருகின்றனா். 

     தூத்துக்குடி மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளராக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார்.


 கனிமொழியை ஆதாித்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

 உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி பிரச்சாரம் பரபரப்பு பேச்சு!!!

இன்று 13-4-2024 தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அண்ணாநகர் 7 சந்திப்பில் ..



மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு திட்ட செயலாளக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கனிமொழியை ஆதாித்து பேசியதாவது :-


உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆரவாரத்துடன் வரவேற்ற உங்களுக்கு நன்றி 19ம் தேதி தான் தேர்தல் ஆனால் இங்கு இருக்கும் நிலையை பார்த்தால் தேர்தல் முடிந்து வெற்றி விழா கொண்டாடுவதை போல் இருக்கிறது.


 நாம் வெற்றி பெற்றுவிட்டோம் நமக்கு இங்கு (தூத்துக்குடி) போட்டியில்லை.


 இங்கு போட்டியிடுவது கலைஞாின் மறுஉருவம் தான். வாிசைப்பட்டியலில் முதல் பெயர் கனிமொழி கருணாநிதி என்று தான் உள்ளது .


அதில் உள்ள புளுகலர் பட்டணை அழுத்தி உதயசூாியனுக்கு வாக்களிப்பதன் மூலம் நாம் மோடிக்கு வைக்கும் வேட்டாக அமைய வேண்டும்.

ஆறு லட்சம் !!!

 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற இன்னும் நான்கு நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும். 


இந்த தூத்துக்குடி பக்கமே அவர்கள் திரும்பி பார்க்க கூடாது. 2021ல் இங்கு கீதாஜீவனை ஆதாித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.


 அவர் 51 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


 அவர் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றி வருவதற்கு நீங்கள் அங்கீகாரம் அளித்தீர்கள்.



தூத்துக்குடியில் கனிமொழி பற்றி....


 இந்த தொகுதியில் கனிமொழியும் கடந்த 5 ஆண்டுகாலம் ஆற்றிய பணிகள் ஏராளம் .


குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 16ஆயிரம் கோடியில் கார் தொழிற்சாலை, மற்றும் பர்னிச்சா் பார்க் தொழிற்சாலை அமையவுள்ளது. 

440 கோடியில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வந்துள்ளது. 


136 கோடியில் பல்வேறு சாலை பேவர்பிளாக் சாைல பணிகள் நடைபெற்றுள்ளது.


 தூத்துக்குடி திரேஸ்புரத்தில் 21 கோடியில் மீனவர்களுக்கான திட்டங்களும் மீன்பிடி துறை முகத்தில் 10 கோடியும் வளர்ச்சி பணி திட்டங்களும் நடைபெற்றுள்ளது.


 இதற்கெல்லாம் காரணம் கனிமொழிதான்.


 நெல்லை தூத்துக்குடி மழை வௌ்ள கால நிவாரண நிதியாக முதலமைச்சாிடம் பேசி இரண்டாயிரம் கோடி பெற்ற தந்தவர்தான் இந்த கனிமொழி. 


மழை வௌ்ள காலத்தின் போது சேலத்தில் இருந்த என்னை முதலமைச்சர் தொடர்பு கொண்டு தூத்துக்குடி திருநெல்வேலிக்கு செல்ல உத்தரவிட்டதும் உடனே இங்கு நான்குநாட்கள் நான் தங்கி பணியாற்றினேன்.


 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அதிகாாிகள் முகாமிட்டு பணியாற்றியதின் காரணமாக 3 நாட்களில் மீட்பு பணியை செய்தோம்.


 கனிமொழி இரண்டு மாதமாக மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பணியாற்றினார். 

தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தியவர் முதலமைச்சர் ஸ்டாலின், நம்முடைய முதலமைச்சர் யார் காலிலும் விழவில்லை.


 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்.

அதிமுக எடப்பாடியார் பற்றி...

 ஆனால் பாதம் தாங்கி பழனிச்சாமி புழுவை போல் ஊர்ந்து சென்று சசிகலாவின் காலை பிடித்து முதலமைச்சரான பின் சசிகலாவுக்கு மட்டுமின்றி இந்த தமிழகத்திற்கும் துரோகம் செய்தாா். 


2019ல் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகத்திற்கு வந்த மோடி அதன் பின் தமிழக மக்கள் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு தூத்துக்குடி நெல்லை மாவட்டங்கள் கடும் மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வந்து எட்டி பார்க்கவும் இல்லை. ஆறுதல் கூறவும் இல்லை. 


ஏன் தமிழகத்திற்கு இப்போது வரை ஓரு பைசா கூட நிதி வழங்கவில்லை.


 ஆனால் இப்போது தேர்தல் காலமாக இருப்பதால் அடிக்கடி தமிழத்திற்கு மோடி வருதெல்லாம் நம்மை ஏமாற்றுவதற்கு தான் உண்மையான தமிழர்கள் மீது அவர்க்கு பற்று இருக்குமேயானால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி எல்லாவற்றையும் முறையாக வழங்கி இருப்பார், 


இப்போது வேஷம் போடுவதற்காக தமிழகத்திற்கு வரும் மோடிக்கு நாம் ஓட்டு மொத்தமாக வேட்டு வைக்க வேண்டும்.


 நாம் சுயமாியாதை உள்ளவர்கள் மாியாதை கொடுத்தால் அதை திருப்பி கொடுப்போம் இல்லையல் விரட்டியடிப்போம். 


 தமிழகத்திற்கு எதிரான பல திட்டங்களும் சட்டங்களும் ஒன்றிய பிஜேபி அரசு கொண்டு வந்த போது அப்போது முதலமைச்சராக இருந்த பாதம்தாங்கி பழனிச்சாமி துைணயாக இருந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு எங்களுக்கு எந்த உறவும் பிஜேபியுடன் இல்லையென்று  கூறி நாடகமாடி இன்று வரை கள்ளக்காதல் தொடர்கின்றன.


 ஓன்றிய அரசுக்கு தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி வாி மூலம் ஓருபாய் நாம் கொடுத்தால் தமிழகத்திற்கு 29 பைசா திருப்பி தருகிறார். 


ஆனால் உத்திரபிரதேச மாநிலத்திற்கு இதே போல் 1 ரூபாய் கொடுத்தால் 3 ரூபாயும், பீகார் மாநிலத்திற்கு 7 ரூபாயும், பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு தமிழக வருவாயிலிருந்து வரக்கூடிய வருமானத்தில் அதிகமான நிதியை வழங்குகிறாா். இது போன்ற ஓரவஞ்சனையில் ஈடுபடும் ஓன்றிய அரசு நமக்கு தேவையில்லை. 2019ல் மதுரையில் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமணை இன்னும் ெதாடங்கி முடியவில்லை. ஆனால் பிஜேபி ஆளும் 6 மாநிலங்களில் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. 2014ல் கேஸ் விலை 450 இப்போது பல மடங்கு உயர்வு பிஜேபி ஆட்சியில், தமிழகத்தையும் தமிழக மக்களையும் மதித்தும் தமிழக திட்டங்களுக்கு முறையாக நிதி வழங்கும் ஓன்றிய அரசு அமைய வேண்டும். அந்த ஓன்றிய அரசு இந்தியா கூட்டணி அரசாக இருக்க வேண்டும். நம்முடைய முதலமைச்சா் அடையாளம் காட்டுபவரே பிரதமராக வரவேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் கேஸ் விலை 500 பெட்ரோல் விலை 75 டிசல் விலை 65க்கும் வழங்கப்படும். கலைஞர் ஆட்சியில் இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை.


 தொடர்ந்து ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலம் வரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் வரவில்லை. 


ஆனால் பாதம் தாங்கி பழனிச்சாமி முதலமைச்சராக வந்தபிறகு நீட் தேர்வை அனுமதித்தார்.


 அதன் மூலம் தமிழகத்தில் 22 பேர் நீட் தேர்வுக்கு எதிராக உயிாிழந்துள்ளனர்

ஸ்டெர்லைட் ஆலை பற்றி..!!!

 தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் கலவரத்தின் போது 13 பேர் சுட்டு படு கொலை செய்யப்பட்டனர்.


 இதை கூட அவர் டிவியில் பார்த்து தான் தொிந்து கொண்டேன். என்று கூறினார்.


 2021 தேர்தலின் போது தமிழக முதலமைச்சா் கலைஞர் வழியில் செய்வதை தான் சொல்வேன். சொல்வதை தான் செய்வேன் என்று அவர் கொடுத்த வாக்குறுதியான பெண்களுக்கு பால்விலை, குறைப்பேன் என்று கூறினார். 3 ரூபாய் குறைத்தாா். அதே போல் பெட்ரோல் விலை 3 குறைத்தாா். பெண்களுக்கு மாதம் தோறும் 1000 உதவித்தொகை தமிழகத்தில் 80 சதவீதம் பேருக்கு ஓரு கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் விடுபட்டவர்களுக்கு முதலமைச்சாிடம் கூறி அந்த துறைக்கு அமைச்சராகஇருக்கும் நானும் நிதியமைச்சரும் சேர்ந்து அதையும் உறுதியாக பெற்றுத்தருவோம்.


 ஏப்ரல் 19 தேர்தல் ஜீன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை ஜீன் 3ம்தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞாின் 101வது பிறந்தநாள் நாம் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அவரது காலடியில் சமர்ப்பிப்பது தான் சாதனை 

 ஓன்று முதல் ஐந்து வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு முதலமைச்சா் வழங்கும் திட்டத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவது மட்டுமின்றி கனடா நாட்டிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கே திராவிட மாடல் ஆட்சி வழிகாட்டியாக இருக்கிறது.



 தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டபின் நான் கலந்து கொள்ளும் 19வது நாள் பிரச்சாரம் 35வது தொகுதி தூத்துக்குடி 102வது பிரச்சார கூட்டம் இங்கு உங்களை நம்பி தான் கனிமொழிக்காக அவரது மருமகனாக வந்துள்ளேன்.


 நான் ஏற்கனவே கேட்டுக்கொண்ட படி 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு நான் சென்னை செல்கிறேன்.


 வெற்றி விழாவிற்கு இங்கு வருவேன். 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறிய நீட் விலக்கு உள்ளிட்டஅனைத்தும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் தமிழகத்திற்கு பொற்காலமாக அமையும்.


 பாஜகவை சோ்ந்த யாரும் ஓட்டு கேட்க வந்தால் 29 பைசா பிரதமர் எப்படி இருக்கிறார் என்று கேட்க வேண்டும். 21ல் அடிமைகளின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினோம் 24ல் சா்வாதிகார ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்.  

   பிரச்சாரத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மாா்க்கன்டேயன், சண்முகையா, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் ஜோயல், இன்பரகு, மேயா் ஜெகன் பொியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கர், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம்ஜெயக்குமார், தொகுதி பொறுப்பாளா் பெருமாள், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, தெற்கு மாவட்ட இளஞைர் அணி அமைப்பாளர் ராமஜெயம், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன், அன்பழகன், அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், அபிராமிநாதன், கவிதாதேவி, அருண்குமார், குபோ்இளம்பாிதி, அசோக், அந்தோணிகண்ணன், பிரதீப், பெனில்டஸ், பிரபு, அருணாதேவி, கோகுல்நாத், பார்வதி, தங்கம், ராமர், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன்ஜேக்கப், அற்புதராஜ், அருண்சுந்தா், ஜெயக்கனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், முருகஇசக்கி, மகேஸ்வரன்சிங், சீதாராமன், செய்யது காசிம், ரவி, சங்கரநாராயணன், பால்ராஜ், பெல்லா, செந்தில்குமாா், தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மாியதாஸ், கருப்பசாமி, ஓன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், ராமசுப்பு, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், சோ்மபாண்டியன். நாராயணன், செல்வகுமார், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், கவுன்சிலர்கள் சோமசுந்தாி, அதிஷ்டமணி, சரவணக்குமார், ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, ாிக்டா, பொன்னப்பன், இசக்கிராஜா, கண்ணன், ரெக்ஸின், தெய்வேந்திரன், மும்தாஜ், ராமுஅம்மாள், தனலட்சுமி, முத்துமாாி, வட்டச்செயலாளர்கள் டென்சிங், பத்மாதேவி, கதிரேசன், பாலகுருசாமி, முத்துராஜா, சுப்பையா, செந்தில்குமார், சுரேஷ், செல்வராஜ், ரவீந்திரன், முனியசாமி, சிங்கராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளா் சூர்யா, செந்தூர்பாண்டி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட், பிரபாகர், ஜோஸ்பர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்ஸீம்லீக் மாவட்ட தலைவர் மீராசா, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹர், சிபிஐ மாவட்ட செயலாளர் கரும்பன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், தமிழக வாழ்வுாிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டசெயலாளா் கணேசன், திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஹேமா, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், சிபிஐ நகர செயலாளர் ஞானசேகா், சிபிஎம் நகர செயலாளர் முத்து, உள்பட இந்தியா கூட்டணியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 

 பாக்ஸ்: முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து வரவேற்றார். பிரச்சார இடத்திற்கு வந்ததும் கருப்பு சிவப்பு வண்ண தாள்கள் வெடியின் மூலம் வரவேற்று 201 பெண்கள் கும்பத்துடன் மாியாதை வழங்கி மலர்தூவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணாநகர் பகுதி திமுக செயலாளர் ரவீந்திரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளா் அருண்சுந்தர் ஆகியோர் வீரவாள் வழங்கினார்கள். உதயநிதிஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் துரை, துணைத்தலைவர் டைகர் வினோத், ஆகியோர் ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்தனர். வேட்பாளர் கனிமொழி ஆரம்பம் முதல் கடைசி வரை அனைவரையும் கும்பிட்டும் சிாித்த முகத்தோடு புன்னகையிட்டவாறு அனைவரையும் உதயசூாியன் சைகை மூலம் உற்சாகப்படுத்தி கொண்டிருந்தார். 

முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் இங்கு போட்டியிடும் கனிமொழி கலைஞருக்கு மகளாகவும், முதலமைச்சருக்கு தங்கையாகவும் உள்ள எனது அத்தைக்கு மருமகனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். அதே போல் இங்கு கூடியிருக்கிற அனைவரும் கலைஞாின் ரத்தங்கள் தான் மோடி திமுகவைபார்த்து இது குடும்பகட்சி என்கிறார். ஆமாம். தமிழகத்தில் உள்ள அனைவரையும் அரவனைத்து அவர்களது வாழ்வில் ஔியேற்றுவதால் அது எங்கள் குடும்பம் தான். திமுகவிற்கு தற்போது உறக்கம் வருவதில்லை என்று மோடி கூறுகிறார். நாங்கள் உறங்காமல் விழித்துக்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்வதன் மூலம் ஜீன் 4ம் தேதி இந்தியா முழுவதும் உங்களை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி விட்டு நாங்கள் நிம்மதியாக உறங்க செல்வோம் அதுவரை உறக்கமின்றி பணியாற்றுவோம். என்றார்.

கனிமொழி பேசுகையில் நான்கு இடங்களில் உதயநிதி ஸ்டாலின் எனக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். எனக்கு இது இரண்டாவது தாய்வீடு திருச்செந்தூாில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று உதயநிதிஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதே போல் தூத்துக்குடியிலும் அமைக்கப்படும் கலைஞர் காலம் முதல்கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.


 முதலமைச்சர் கூறியது போல் இது இரண்டாவது சுதந்திரபோராட்டம் பிஜேபியிடம் இருந்து மீட்க வேண்டும் என்று பேசினார்.

புதன், 3 ஏப்ரல், 2024

ஸ்டெர்லைட் -க்கு ஆதரவாக நின்றவர்கள் அதிமுக பாஜக # திமுக வேட்பாளர் கனிமொழி பரபரப்பு பேச்சு!!!நமது அண்ணன் தளபதி பிரச்சாரத்தில், ‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் மூடப்படும்’ என்று உறுதி தந்தார். அதேபோல மூடிக் காட்டியவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். !!!

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂4-4-2024

news by 

arunan journalist 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை க்கு ஆதரவாக நின்றவர்கள் தான் அதிமுக -பாஜக என திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தின் போது பரபரப்பு 



இதுபற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட விளாத்திகுளம் குறுக்கு சாலை, குளத்தூர், வைப்பார் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் ஈடுபட்டார் 

அப்போது திமுக வேட்பாளர் கனிமொழி 

தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-


 தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் 2018- ல் அதிமுக -பாஜக கட்சிகள் ஆட்சியில் தான் மக்கள் மீது துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.  அந்தத் தொழிற்சாலையை எப்படியாவது திறந்து வைத்துவிட வேண்டும் என்று பாஜகவும், அதிமுகவும் முயற்சி செய்தனர். 


ஆனால் கடந்த (2021)சட்டமன்றத் தேர்தலுக்கு முன்... நமது அண்ணன் தளபதி பிரச்சாரத்தில், ‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் மூடப்படும்’ என்று உறுதி தந்தார்.  அதேபோல மூடிக் காட்டியவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.


சில பேர் வேலைவாய்ப்பெல்லாம் போய்விடும் என்று ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நின்றார்கள்.!!! 


ஆனால் அதை விட பெரிய வேலை வாய்ப்புகளை தரும் நிறுவனங்களை நான் தூத்துக்குடிக்குக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி... உலககத்திலேயே பெரிய கார் தொழிற்சாலையான  வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலையை 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இங்கே கொண்டு வந்திருக்கிறார். 


அந்த ஆலையில் தூத்துக்குடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும் என்று  அவர்களிடம் தெரிவித்திருக்கிறார் முதல்வர்.


ஒரு வேளை  தகுதி இல்லை என்று அவர்கள் கருதினால் தூத்துக்குடி இளைஞர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி கொடுத்து அதன் பின் வேலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அண்ணன் தெரிவித்திருக்கிறார்.

மிகப்பெரிய மழை, வெள்ளத்தில் நாம் பாதிக்கப்பட்டோம்.


 ஆனால் ஒன்றிய பிஜேபி அரசு ஒரு ரூபாய், ஒரு பைசா கூட தரவில்லை. நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதிதான் நிவாரணம் கொடுத்தார்.


 இடிந்துபோன வீடுகளுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்தார். பழுது பார்க்கவும் நிவாரணம் கொடுத்தார்.


 தமிழ்நாட்டுக்கு பாஜக எதையும் செய்யாது, செய்யவும் மாட்டார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.



நமது முதலமைச்சர் ஸ்டாலின் 

கலைஞர் உரிமைத் தொகை இன்று ஒரு கோடியே 16 லட்சம் சகோதரிகள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  சிலருக்கு விடுபட்டிருக்கிறது. அவர்களுக்கும் தேர்தலுக்குப் பிறகு முகாம்கள் நடத்தி வழங்கப்பட்டுவிடும். பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம் என்று தேர்தலுக்கு முன்னர் சொன்னார் தளபதி. அதேபோல சொன்னதை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றினார்.

தூத்துக்குடியில் ஒரு டைடல் பார்க், கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் ஒரு டைடல் பார்க் கொடுத்திருப்பவர் நமது முதல்வர் ஸ்டாலின்.

இப்போது?

பாஜகவில் சேர்ந்துவிட்டால் அவர்களின் வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து சுத்தமாக்கி விடுவார்கள், வழக்குகள் ஒன்றுமில்லாமல் ஆக்கப்படும். ஆனால் பாஜகவில் சேர மறுத்தால் சிறையில் தள்ளப்படுவார்கள். முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், எம்பிக்களுக்கே இந்த கதி என்றால் சாதாரண சாமானியர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்.

இவ்வாறு பேசினார் கனிமொழி.


தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட விளாத்திகுளம் குறுக்கு சாலை, குளத்தூர், வைப்பார் உள்ளிட்ட   பகுதிகளில்   நேற்று 3-4-2024 திமுக வேட்பாளரும் துணப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி  திரளான மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது....

 தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர்  அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


திங்கள், 1 ஏப்ரல், 2024

கனிமொழி காரை மறித்து தீடீர் சோதனை செய்த பறக்கும் படை காவல்துறை!!!

thoothukudileaks

 1-4-2024 news by

arunan journalist 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வாகனம் மறித்து தீடீர் சோதனை செய்தனர் பறக்கும் படை காவல்துறை இந்த செய்தி அறிந்து பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் பரபரப்பாக கனிமொழி வாகனத்தை சோதனை செய்தபோது...


திருநெல்வேலி தேர்தல் பிரச்சாரம்!!! 

 இந்திய கூட்டணியின் சார்பில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று (1-4-2024) திருநெல்வேலி சென்று கொண்டு இருந்தார்.

 அப்போது தூத்துக்குடி - 3வது மைல் பகுதியில் கனிமொழி கருணாநிதி  வாகனத்தை பரபரப்பு உடன் தீடீரென மறித்துனர்



வேட்பாளர் கனிமொழி வாகனம் மற்றும் உடன் வந்த வாகனங்கள் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்!

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஞாயிறு, 31 மார்ச், 2024

மீன் விற்கும் கடைகளில் திமுக வேட்பாளர் கனிமொழி வாக்கு சேகரிப்பு

 thoothukudileaks 

31-4-2024

 news by arunan journalist 

தூத்துக்குடி விக்டோரியா மகாராணி சாலையில் உள்ள வ உ சிதம்பரனார் மார்கெட்டில் வாக்குகள் சேகரிப்புக்கு சென்றார்

மார்க்கெட்டிங்  மீன் விற்கும் கடைகளில் அங்கு உள்ள பெண்கள் இடம் திமுக வேட்பாளர் கனிமொழி உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் அளிக்கமாறு கேட்டுக் கொண்டார்.



மீன் கடையில்....

இதுபற்றி செய்தியாவது:-

வர இருக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்திய கூட்டணியின் சார்பில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  வேட்பாளர் கனிமொழி கருணாநிதி  இன்று (31/03/2024) ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட, வ.உ.சி மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்!





வளையல் கடையில்...


வியாபார
பாட்டி உடன்...

உடன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான  கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்!

சனி, 30 மார்ச், 2024

ஆட்சி பிடித்ததும் இந்தியாவில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை ஆயிரம் வழங்கப்படும் வேட்பாளர் கனிமொழி வாக்குறுதி !!! உங்கள் அக்கவுண்டில் 15 லட்சம் போடுவதாக சொல்லி ஆட்சிக்கு வந்தார் மோடி. என கடும் குற்றச்சாட்டு!!!

ஒன்றியத்தில் நம் ஆட்சி அமைந்ததும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை” -கோவில்பட்டியில் திமுக வேட்பாளர் கனிமொழி வாக்குறுதி!




இதுபற்றி செய்தியாவது:-

வர இருக்கும் 2024 - மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்திய கூட்டணியின் சார்பில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி கருணாநிதி  (30/03/2024) சனிக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பகுதியில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.


அப்போது...

 கனிமொழி கருணாநிதி பேசும்போது...


 “கடந்த  சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் உங்களை சந்தித்த முதலமைச்சர் அண்ணன் தளபதி,  தான் அளித்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றியிருக்கிறார்.  


பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று தேர்தலில் வாக்குறுதியளித்தார். வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்தே  விடியல் இலவச பயணம்தான்.


அதேபோல மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்று வாக்குறுதி அளித்தார். இப்போது ஒரு கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத் தொகை வழங்கி வருகிறார். 


இப்போது மோடி அரசு நமது தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்காத காரணத்தால்தான் அனைத்து மகளிருக்கும் வழங்க முடியாத ஒரு நிலை இருக்கிறது.


 ஒன்றியத்தில் நம் ஆட்சி இந்தியா கூட்டணி ஆட்சி வந்தவுடனே... தமிழ்நாட்டுக்கு உரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கும். 


அதன் பின் மீதி இருக்கிற அத்தனை சகோதரிகளுக்கும் வரவேண்டிய மகளிர் உரிமைத் தொகை  கண்டிப்பாக வந்து சேரும்.


வேட்பாளர் கனிமொழி போட்டோ பதாகை வைத்தபடி பொதுமக்கள் ஆரவாரம் 


இப்ப கேஸ் விலை என்ன?  

மோடி ஆட்சிக்கு வரும்போது 410 ரூபாய் இருந்தது. இப்போது 1200 ஆக உயர்ந்தது.


 மகளிர் தினம் மார்ச் 8ல் மோடி நூறு ரூபாயை குறைத்தார்.  


மகளிர் தினம்னா கேஸ் சிலிண்டர் விலை குறைக்கிறதுதானா? மகளிர்னா சமைக்குறதுக்குத்தான்னு மோடி முடிவு பண்ணிட்டார்.


ஆனால் நமது முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருக்கிறார். 


 இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும்  கேஸ் விலையை  500 ஆக குறைப்போம் என்று வாக்குறுதியளித்துள்ளார். 



ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.  ஐந்து விரல்களை விரித்தால் அதுதான் உதயசூரியன். உதயசூரியனுக்கு வாக்களியுங்கள், 



கேஸ் சிலிண்டர் விலை 500 ஆக குறையும்.

இந்தத் தேர்தல் ஒன்றியத்தில் இருக்கும் ஆட்சியை அகற்றும் தேர்தல்


 உங்கள் அக்கவுண்டில் 15 லட்சம் போடுவதாக சொல்லி ஆட்சிக்கு வந்தார் மோடி.  


ஆனால் நம் அக்கவுண்டில் இருக்கிற காசையும்  மினிமம் பேலன்ஸ் இல்லை என சொல்லி அதையும் பிடுங்கிக்கொள்கிறார்.


100 நாள் வேலை யாருக்குமே இல்லை. மாசக் கணக்கில் 100 நாள் வேலைக்கான சம்பளம் வரவில்லை.


 ஏனென்றால் மோடி ஆட்சியில் 100 நாள் வேலையை முடக்குவதற்காக நிதி ஒதுக்குவதே இல்லை. 


 நம் இந்தியா கூட்டணி ஆட்சி மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சி வந்ததும் 100 நாள் வேலையை 150 நாளாக ஆக்குவோம் என்றும்  சம்பளம் 400 ரூபாய் என்றும் அறிவித்துள்ளார்


 முதல்வர் தளபதி. காங்கிரஸும் 400 ரூபாய் சம்பளம் என்று அறிவித்துள்ளது.


மக்களுக்கு விவசாயக் கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்றால் மோடி செய்ய மாட்டார். மாணவர்களுக்கு கல்விக் கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்றால் செய்யமாட்டார். 


ஆனால் அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்கு  68 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருக்கிறார் மோடி.


இந்த பாஜக ஆட்சியில் பாஜக எம்பிக்கள் 44 பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான வழக்கு இருக்கிறது. 


பிறகு எப்படி பெண்களுக்கு இந்த பாஜக ஆட்சியில் பாதுகாப்பு இருக்கும்?  இதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


இந்தத் தேர்தல் வெறும் ஆட்சிப் பொறுப்புக்கான தேர்தல் மட்டுமல்ல... 


நம் பிள்ளைகள், நம் பெண்கள், நம் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் மீண்டும் பாஜக ஆட்சி வரக் கூடாது.  


நம் வீட்டுப் பிள்ளைகளுக்காக தலைவர் கலைஞர் கொண்டுவந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு காரணமாக நம் பிள்ளைகள் படிக்க முடியவில்லை. 


புதிய கல்விக் கொள்கையின் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு கூட நுழைவுத் தேர்வை கொண்டு வருகிறார்கள்.


 இதெல்லாம் சாதாரண சாமானிய வீட்டுப் பிள்ளைகள் படிக்க கூடாது என்பதற்காகவே. ?

இரு நூறு வருடம் முன்பு இருந்த நிலையை உருவாக்கப் பார்ப்பதுதான் மோடி ஆட்சி.


கடலை மிட்டாய் தொழிலை மேம்படுத்த கடலை மிட்டாய்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதற்காக கோவில்பட்டியில் கடலைமிட்டாய் மேம்பாட்டு வளாகத்தை அமைப்போம் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.


 மிகப்பெரிய  கார் தொழிற்சாலை தூத்துக்குடிக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.


உங்களோடு நின்று பணியாற்றும் வாய்ப்பை எனக்கு மீண்டும் அளிக்க வேண்டும். 


போன தேர்தலில் நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது, ‘கனிமொழி சென்னையில் இருக்கிறவங்க. 

இங்க வரமாட்டாங்க’னு சிலர் சொன்னார்.


 ஆனால் தூத்துக்குடி எனது இரண்டாவது தாய் வீடு என்று சொல்லும் அளவுக்கு இங்கேயே  நான் இருக்கிறேன். 


 முதலமைச்சரால் முன்னிறுத்தப்பட்டுள்ள எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்” என்று பேசினார் கனிமொழி.


மேலும் கோவில்பட்டி பகுதிக்கு தன்னுடைய எம்பி நிதியில் இருந்து செய்யப்பட்டிருக்கும் குடிநீர் திட்டப் பணிகள், சாலைப் பணிகள், நியாய விலைக் கடைகள்,ஹைமாக்ஸ் விளக்குப் பணிகள் என்பவற்றைப் பட்டியலிட்டார் கனிமொழி.


உடன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான  கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில் பட்டி நகர் மன்றத் தலைவர் கருணாநிதி மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்!

புதன், 20 மார்ச், 2024

வரவேற்பு நிகழ்வில் கனிமொழி உருக்கம் முதல்வர் ஸ்டாலின் உங்களிடம் என்னை ஓப்படைத்துள்ளார் # கனிமொழி சந்தித்து திமுக ஆதரவு தெரிவித்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு !!!.

கலைஞர் வழியில் ஓய்வின்றி உழைக்கும் முதல்வர் ஸ்டாலின் உங்களிடம் என்னை ஓப்படைத்துள்ளார். வரவேற்பு நிகழ்வில் கனிமொழி உருக்கம்

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு கனிமொழி சந்தித்து தேர்தலில் திமுக  ஆதரவு தெரிவித்தனர்.

இதுபற்றிய செய்தியானது:-

     தூத்துக்குடி நாடாளுமன்ற தோ்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல்19ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளராக கனிமொழி எம்.பியை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

     அதனையடுத்து இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் வாகைகுளம் வந்தவருக்கு தெற்குமாவட்ட திமுக சார்பில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



 தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகயைா, ஊர்வசி அமிர்தராஜ், மேயர் ஜெகன் பொியசாமி, ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 

     நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கர், ஓன்றிய செயலாளர்கள் ஜெய்கொடி, சுப்பிரமணி, சரவணக்குமார், இளையராஜா, ரமேஷ், மாவட்ட அணி நிர்வாகிகள் ராமஜெயம், வீரபாகு, ரகுராமன், தயாநிதிபாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டேவிட்செல்வின், செந்தூர்மணி, மாடசாமி, மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜ், கணேசன், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், ஓழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகரமேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளரும் திருச்செந்தூர் நகர்மன்றஉறுப்பினருமான செந்தில்குமார், அமைப்பு சாரா ஓட்டுநா் அணி துணைத்தலைவர் சந்திரசேகர், நகர துணைச்செயலாளர் மகாராஜன், உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர். 

    வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி 3ம் மைல் எப்சிஐ குடோன் அருகில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகயைா, ஊர்வசி அமிர்தராஜ், நிர்வாகிகள் ெதாண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் கொடுத்த வரவேற்பில் பங்கேற்று 

    கனிமொழி பேசுகையில் நடைபெற இருக்கின்ற இந்த தேர்தலில் இரண்டாவது முறையாக உங்களுக்கு பணியாற்றுவதற்கு ஓய்வின்றி உழைத்த கலைஞர் வழியில் உழைப்பு என்றால் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று ஓய்வின்றி உழைக்கும் தலைவரும் முதலமைச்சருமான தளபதியார் என்னை இங்கு உங்களிடம் ஓப்படைத்துள்ளார். உங்களுடைய அன்பையும் பாசத்தையும் பெற்றிருக்கும் நான் தொடர்ந்து தேர்தல் களத்தில் அதே பாசத்தையும் அன்பையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். கூட்டணி கட்சியினரும் எனக்கு அளித்த உற்சாகம் மூலம் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவதற்கு வாய்ப்பாக இருக்கும் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தொிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார். 

     பின்னர் வடக்கு மாவட்ட திமுக அலுவலம் முன்பு உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் 3ம் மைல் தேவர் சிலை, அம்பேத்கார், குரூஸ்பா்னாந்து, காந்தி, காமராஜர், அண்ணா, வஉசி, இந்திராகாந்தி, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார். 

நிகழ்ச்சியில் ேமயர் ெஜகன் பொியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், நெசவாளர் அணி மாநில துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், கோவில்பட்டி ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் கஸ்தூாி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் ஐயாத்துரைபாண்டியன், தங்கமாாியம்மாள், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ்,  துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், இராஜா, மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, ஓன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருேகசன், ராதாகிருஷ்ணன், சின்னமாாிமுத்து, மும்மூர்த்தி, செல்வராஜ், ராமசுப்பு, நவநீதக்கண்ணன், அன்புராஜன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், குேபர்இளம்பாிதி, சீனிவாசன், கவிதாதேவி, அபிராமிநாதன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், ெஜயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர், முருகஇசக்கி, ஜெயக்கனி, பரமசிவம், துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், பால்ராஜ், சீதாராமன், முத்துராமன், வடக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பெனில்டஸ், அருணாதேவி, ராபின், சின்னத்துரை, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், ஏசுவடியான்,  கவுன்சிலர்கள் சரவணக்குமார், இசக்கிராஜா, பொன்னப்பன், கண்ணன், ஜான்சிராணி, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், மாலாதேவி, சுபேந்திரன், ஆனந்தகபாியேல்ராஜ், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, சுப்பையா, செல்வராஜ், லியோஜான்சன், பொன்ராஜ், ரவீந்திரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, பார்வர்ட் பிளாக் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் சுரேஷ் உள்பட இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


கனிமொழி சந்தித்து திமுக ஆதரவு தெரிவித்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு 

அடுத்து தூத்துக்குடி கலைஞர் மன்றத்தில் செய்தியாளர்கள் திமுக வேட்பாளர் கனிமொழி சந்திப்பு நடைபெற்றது

அப்போது தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் அக்கா பார்வதி 

தனது ஆதரவாளர்களுடன் திமுக வேட்பாளர் கனிமொழி யை சந்தித்து தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு திமுக ஆதரவு என தெரிவித்தார் 



தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி உறுதி அதற்காக எங்களது தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு பாடுபடும் என்றார்.

பேட்டி சந்திப்பில்  அமைச்சர் கீதாஜீவன் உடனியிருந்தார்.

thoothukudileaks 

21-3-2024

செய்தி புகைப்படங்கள் த.சண்முகசுந்தரம் செய்தியாளர்

 

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

கடல் சாகச போட்டி தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் சான்றிதழ் வழங்கினார்

 thoothukudileaks 9-9-2023

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில்....



இந்தியன் கயாக்கிங் மற்றும் கனோயிங் அசோசியேசன் மற்றும் தமிழ்நாடு அசோசியேசன் ஆப் கயாக் மற்றும் கனோயிங் சார்பில் தென் தமிழகத்திலேயே முதல் முறையாக பியர்ல் சிட்டி ஓஷன் ஸ்போட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி தூத்துக்குடியில் நடைபெற்றது .



கடல் சாகச போட்டி தொடக்க விழா தூத்துக்குடி எம்பி கனிமொழி கொடி அசைக்க துவக்கி வைத்தார்.முன்று நாட்கள் நடைபெறும் என அறிவித்து இருந்தனர்.





 தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் வெள்ளிக்கிழமை 8-9-2023 நடைபெற்ற. இப்போட்டிகளில், நின்று கொண்டே துடுப்பு செய்யக்கூடிய போட்டி மற்றும் அமர்ந்திருந்து துடுப்பு செய்யக்கூடிய போட்டி என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டன.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய எல்லை பாதுகாப்பு படை ஆகிய படைப்பிரிவினர் என மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. 


இரண்டு நாள்கள் நடைபெற்ற இப்போட்டிக்கான பரிசளிப்பு விழா தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சனிக்கிழமை (9-9-2023 ) நேற்று நடைபெற்றது. 

இவ்விழாவுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற அணியினருக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், சுழற்கோப்பை ஆகியவை வழங்கி பாராட்டினார்.




இப்போட்டிகளில், வெற்றிபெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக தங்க பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக வெள்ளி பதக்கம் ரூ.7 ஆயிரம், மூன்றாவது பரிசாக வெண்கலப் பதக்கம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில், தூத்துக்குடி அக்வா அவுட்பேக் நிர்வாக இயக்குநர் அர்ஜுன் மோத்தா, ஒருங்கிணைப்பாளர்கள் மெய்யப்பன், ரோஜர், சதீஷ், மிதுன், மாநில மீனவரணி துணைச் செயலளர் புளோரன்ஸ், வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல் ராஜ், பகுதிச் செயலர்கள்

சுரேஷ்குமார், ரவீந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.



ஞாயிறு, 8 ஜனவரி, 2023

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி சமத்துவ பொங்கலிட்டு ஆயிரம் பெண்களுக்கு சேலை வழங்கினார்.

 thoothukudileaks 8-1-2023

news& photo by:- shanmuga Sundaram 

தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல் விழா இன்று 8-1-2023 மாலை 4மணியளவில் நடைபெற்றது.  தூத்துக்குடி திரேஸ் புரம் பாக்கியநாதன் விளையில் அப்பகுதி பெண்களுடன் ஒன்றாக இனைந்து கனிமொழி எம்.பி, அவரும் பொங்கலிட்டார். .

கனிமொழி எம்பி 

இதுபற்றிய செய்தியாவது 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மகளிர் தொண்டரணி திரேஸ்புரம் பகுதி 6வது வட்ட திமுக சார்பில் பாக்கியநாதன் விளையில் ...

 சமத்துவ பொங்கல் விழாவில் 15 பொங்க பானை வைக்கப்பட்டு அதில் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பொங்கலிட்டனர்.

அமைச்சர் கீதா ஜீவன் 

பின்பு விழா மேடையில் ஆயிரம் பெண்களுக்கு சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பேசியதாவது:-

 பொங்கல் என்பது ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடும் திருநாளாகும் 

இந்த பொங்கல் திருவிழா என்பது ஒவ்வொரு தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் விழாவாக நடைபெறுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் திமுக பொங்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 

கவர்னர் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சர்ச்சை கருத்து மூலம் நம்முடைய அடையாளம் கலாச்சாரம் போன்றவற்றில் மூக்கை நுழைப்பது தேவையற்றது. ஒற்றுமையாக தமிழர்கள் இருந்து வருகிறோம். 


இதுபோன்ற கலாச்சாரங்களை பேணி பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு சூழுரையேற்போம். 

தமிழன் அடையாளம் பெருமை திறமை வரலாறு இவற்றை பின்பற்றுவோம். இங்கு பொங்கலிடும் போது பெண்கள் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. 

அவர்கள் இமையை கசக்கி கொண்டு நின்றனர் இது போன்ற விறகு அடுப்பில் பெண்கள் சிரமப்படக்கூடாது என்று கேஸ் அடுப்பு உங்களுக்கு எல்லாம் கலைஞர் கொடுத்தார்

 இன்றைய தலைமுறையை பற்றி கலைஞர் சிந்தித்து செயல்பட்டார். தற்போது இன்றைய தலைமுறை மட்டுமின்றி அடுத்த தலைமுறைப்பற்றி சிந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றுகிறார். எல்லோருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.


ஓட்டப்பிடாரம் வி சண்முகையா எம்.எல்.ஏ,  மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் கஸ்தூரிதங்கம், உமாதேவி, துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, கவிதாதேவி, பார்வதி, ராமர், வக்கீல் சீனிவாசன். ஜேசையா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், ராஜ்குமார், செந்தில்குமார், சேர்மபாண்டியன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், மேகநாதன், சுரேஷ்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் வக்கீல் ஆனந்தகபரியேல்ராஜ், டேனி, துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், அருண்சுந்தர், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பவாணி மார்ஷல், மெட்டில்டா, சரண்யா, வைதேகி, மரியகீதா, ஜெபஸ்டின் சுதா, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ், பாப்பாத்தி, ஜான், கண்ணன், சுப்புலட்சுமி, ஜான்சிராணி, நாகேஸ்வரி, ஒன்றிய துணை செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், டென்சிங், கதிரேசன், சுப்பையா, பாலன், தினகரன், கருப்பசாமி, முக்கையா, ஜான்சன், பொன்பெருமாள், முத்துராஜா, கீதாசெல்வமாரியப்பன், சுரேஷ், செல்வராஜ், வன்னியராஜ், சேகர், நிர்வாகிகள் செல்வம், கணேசன், ஜார்ஜ், குமார், ரஜினிமுருகன்,  பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மணி, அல்பட், ரேவதி, சந்தனமாரி, பெல்லா, சோலையப்பன், வேல்முருகன், ராஜன், மகேஸ்வரன்சிங், உள்பட பலர்கலந்து கொண்டனர். 

முன்னதாக பரதநாட்டியம் சிலம்பாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி துணைச்செயலாளர் சோலையப்பன் நன்றியுரையாற்றினார்.

புதன், 4 ஜனவரி, 2023

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் கனிமொழி எம்.பி 55 - வதுபிறந்தநாளை முன்னிட்டு திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் இனிப்பு வழங்கல்

 thoothukudileaks 5-1-2023

news& photo by shanmuga Sundaram 

மாப்பிள்ளையூரணியில் கனிமொழி எம்.பி -யின் 55 - வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் இனிப்பு வழங்கினார்.



இது பற்றிய செய்தியாவது :-

      தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் கனிமொழி எம்.பி பிறந்தநாளையொட்டி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுரையின் படி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.



    இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமேரி, மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணிமுத்து, சிவக்குமார், தர்மலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணிதனுஷ்பாலன், தொம்மை சேவியர், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜீவா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, காமராஜ், பாரதிராஜா, பாலம்மாள், தங்கபாண்டி, சக்திவேல், வசந்தகுமாரி, பாண்டியம்மாள் கதிர்வேல், உமாமகேஸ்வரி, தங்க மாரிமுத்து, சேசுராஜா, பெலிக்ஸ், திமுக ஒன்றிய துணைச் செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், பொருளாளர் மாரியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் மூர்த்தி, குருசாமி, சிவபெருமாள். சதீஷ், சந்திரசேகர், ஜெபசிங், ஆரோக்கியம், சேகர், கருப்பசாமி, கௌதம், ஆனந்த், கிளைச்செயலாளர்கள் காமராஜ், பொன்னுச்சாமி, முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.