சனி, 13 ஏப்ரல், 2024

புழுவை போல் ஊர்ந்து சென்று சசிகலாவின் காலை பிடித்தவர் சசிகலாவுக்கு மட்டுமின்றி இந்த தமிழகத்திற்கும் துரோகம் செய்தாா் எடப்பாடி? பிஜேபி அதிமுக இரண்டும் கள்ள காதல் செய்கிறது?தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு சேகாித்து அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசினார் .

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

Photo news by sunmugasunthram Reporter 

புழுவை போல் ஊர்ந்து சென்று சசிகலாவின் காலை பிடித்தவர் சசிகலாவுக்கு மட்டுமின்றி ..

இந்த தமிழகத்திற்கும் துரோகம் செய்தாா் எடப்பாடி?தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு சேகாித்து போது அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசினார் .

21ல் அடிமை ஆட்சிக்கு முடிவு கட்டினோம் 24ல் சா்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் 

நாம் வெற்றி பெற்றுவிட்டோம் நமக்கு இங்கு (தூத்துக்குடி) போட்டியில்லை!!!!!

என்றார். 



 இதுபற்றி செய்தியாவது:-

  இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெறுகிறது.


 தமிழகத்தில் ஓரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது.

 17ம்தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற இருப்பதால் தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தங்களுக்குாிய சின்னத்திற்கு வாக்கு சேகாித்து வருகின்றனா். 

     தூத்துக்குடி மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளராக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார்.


 கனிமொழியை ஆதாித்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

 உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி பிரச்சாரம் பரபரப்பு பேச்சு!!!

இன்று 13-4-2024 தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அண்ணாநகர் 7 சந்திப்பில் ..



மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு திட்ட செயலாளக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கனிமொழியை ஆதாித்து பேசியதாவது :-


உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆரவாரத்துடன் வரவேற்ற உங்களுக்கு நன்றி 19ம் தேதி தான் தேர்தல் ஆனால் இங்கு இருக்கும் நிலையை பார்த்தால் தேர்தல் முடிந்து வெற்றி விழா கொண்டாடுவதை போல் இருக்கிறது.


 நாம் வெற்றி பெற்றுவிட்டோம் நமக்கு இங்கு (தூத்துக்குடி) போட்டியில்லை.


 இங்கு போட்டியிடுவது கலைஞாின் மறுஉருவம் தான். வாிசைப்பட்டியலில் முதல் பெயர் கனிமொழி கருணாநிதி என்று தான் உள்ளது .


அதில் உள்ள புளுகலர் பட்டணை அழுத்தி உதயசூாியனுக்கு வாக்களிப்பதன் மூலம் நாம் மோடிக்கு வைக்கும் வேட்டாக அமைய வேண்டும்.

ஆறு லட்சம் !!!

 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற இன்னும் நான்கு நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும். 


இந்த தூத்துக்குடி பக்கமே அவர்கள் திரும்பி பார்க்க கூடாது. 2021ல் இங்கு கீதாஜீவனை ஆதாித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.


 அவர் 51 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


 அவர் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றி வருவதற்கு நீங்கள் அங்கீகாரம் அளித்தீர்கள்.



தூத்துக்குடியில் கனிமொழி பற்றி....


 இந்த தொகுதியில் கனிமொழியும் கடந்த 5 ஆண்டுகாலம் ஆற்றிய பணிகள் ஏராளம் .


குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 16ஆயிரம் கோடியில் கார் தொழிற்சாலை, மற்றும் பர்னிச்சா் பார்க் தொழிற்சாலை அமையவுள்ளது. 

440 கோடியில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வந்துள்ளது. 


136 கோடியில் பல்வேறு சாலை பேவர்பிளாக் சாைல பணிகள் நடைபெற்றுள்ளது.


 தூத்துக்குடி திரேஸ்புரத்தில் 21 கோடியில் மீனவர்களுக்கான திட்டங்களும் மீன்பிடி துறை முகத்தில் 10 கோடியும் வளர்ச்சி பணி திட்டங்களும் நடைபெற்றுள்ளது.


 இதற்கெல்லாம் காரணம் கனிமொழிதான்.


 நெல்லை தூத்துக்குடி மழை வௌ்ள கால நிவாரண நிதியாக முதலமைச்சாிடம் பேசி இரண்டாயிரம் கோடி பெற்ற தந்தவர்தான் இந்த கனிமொழி. 


மழை வௌ்ள காலத்தின் போது சேலத்தில் இருந்த என்னை முதலமைச்சர் தொடர்பு கொண்டு தூத்துக்குடி திருநெல்வேலிக்கு செல்ல உத்தரவிட்டதும் உடனே இங்கு நான்குநாட்கள் நான் தங்கி பணியாற்றினேன்.


 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அதிகாாிகள் முகாமிட்டு பணியாற்றியதின் காரணமாக 3 நாட்களில் மீட்பு பணியை செய்தோம்.


 கனிமொழி இரண்டு மாதமாக மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பணியாற்றினார். 

தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தியவர் முதலமைச்சர் ஸ்டாலின், நம்முடைய முதலமைச்சர் யார் காலிலும் விழவில்லை.


 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்.

அதிமுக எடப்பாடியார் பற்றி...

 ஆனால் பாதம் தாங்கி பழனிச்சாமி புழுவை போல் ஊர்ந்து சென்று சசிகலாவின் காலை பிடித்து முதலமைச்சரான பின் சசிகலாவுக்கு மட்டுமின்றி இந்த தமிழகத்திற்கும் துரோகம் செய்தாா். 


2019ல் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகத்திற்கு வந்த மோடி அதன் பின் தமிழக மக்கள் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு தூத்துக்குடி நெல்லை மாவட்டங்கள் கடும் மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வந்து எட்டி பார்க்கவும் இல்லை. ஆறுதல் கூறவும் இல்லை. 


ஏன் தமிழகத்திற்கு இப்போது வரை ஓரு பைசா கூட நிதி வழங்கவில்லை.


 ஆனால் இப்போது தேர்தல் காலமாக இருப்பதால் அடிக்கடி தமிழத்திற்கு மோடி வருதெல்லாம் நம்மை ஏமாற்றுவதற்கு தான் உண்மையான தமிழர்கள் மீது அவர்க்கு பற்று இருக்குமேயானால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி எல்லாவற்றையும் முறையாக வழங்கி இருப்பார், 


இப்போது வேஷம் போடுவதற்காக தமிழகத்திற்கு வரும் மோடிக்கு நாம் ஓட்டு மொத்தமாக வேட்டு வைக்க வேண்டும்.


 நாம் சுயமாியாதை உள்ளவர்கள் மாியாதை கொடுத்தால் அதை திருப்பி கொடுப்போம் இல்லையல் விரட்டியடிப்போம். 


 தமிழகத்திற்கு எதிரான பல திட்டங்களும் சட்டங்களும் ஒன்றிய பிஜேபி அரசு கொண்டு வந்த போது அப்போது முதலமைச்சராக இருந்த பாதம்தாங்கி பழனிச்சாமி துைணயாக இருந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு எங்களுக்கு எந்த உறவும் பிஜேபியுடன் இல்லையென்று  கூறி நாடகமாடி இன்று வரை கள்ளக்காதல் தொடர்கின்றன.


 ஓன்றிய அரசுக்கு தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி வாி மூலம் ஓருபாய் நாம் கொடுத்தால் தமிழகத்திற்கு 29 பைசா திருப்பி தருகிறார். 


ஆனால் உத்திரபிரதேச மாநிலத்திற்கு இதே போல் 1 ரூபாய் கொடுத்தால் 3 ரூபாயும், பீகார் மாநிலத்திற்கு 7 ரூபாயும், பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு தமிழக வருவாயிலிருந்து வரக்கூடிய வருமானத்தில் அதிகமான நிதியை வழங்குகிறாா். இது போன்ற ஓரவஞ்சனையில் ஈடுபடும் ஓன்றிய அரசு நமக்கு தேவையில்லை. 2019ல் மதுரையில் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமணை இன்னும் ெதாடங்கி முடியவில்லை. ஆனால் பிஜேபி ஆளும் 6 மாநிலங்களில் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. 2014ல் கேஸ் விலை 450 இப்போது பல மடங்கு உயர்வு பிஜேபி ஆட்சியில், தமிழகத்தையும் தமிழக மக்களையும் மதித்தும் தமிழக திட்டங்களுக்கு முறையாக நிதி வழங்கும் ஓன்றிய அரசு அமைய வேண்டும். அந்த ஓன்றிய அரசு இந்தியா கூட்டணி அரசாக இருக்க வேண்டும். நம்முடைய முதலமைச்சா் அடையாளம் காட்டுபவரே பிரதமராக வரவேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் கேஸ் விலை 500 பெட்ரோல் விலை 75 டிசல் விலை 65க்கும் வழங்கப்படும். கலைஞர் ஆட்சியில் இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை.


 தொடர்ந்து ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலம் வரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் வரவில்லை. 


ஆனால் பாதம் தாங்கி பழனிச்சாமி முதலமைச்சராக வந்தபிறகு நீட் தேர்வை அனுமதித்தார்.


 அதன் மூலம் தமிழகத்தில் 22 பேர் நீட் தேர்வுக்கு எதிராக உயிாிழந்துள்ளனர்

ஸ்டெர்லைட் ஆலை பற்றி..!!!

 தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் கலவரத்தின் போது 13 பேர் சுட்டு படு கொலை செய்யப்பட்டனர்.


 இதை கூட அவர் டிவியில் பார்த்து தான் தொிந்து கொண்டேன். என்று கூறினார்.


 2021 தேர்தலின் போது தமிழக முதலமைச்சா் கலைஞர் வழியில் செய்வதை தான் சொல்வேன். சொல்வதை தான் செய்வேன் என்று அவர் கொடுத்த வாக்குறுதியான பெண்களுக்கு பால்விலை, குறைப்பேன் என்று கூறினார். 3 ரூபாய் குறைத்தாா். அதே போல் பெட்ரோல் விலை 3 குறைத்தாா். பெண்களுக்கு மாதம் தோறும் 1000 உதவித்தொகை தமிழகத்தில் 80 சதவீதம் பேருக்கு ஓரு கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் விடுபட்டவர்களுக்கு முதலமைச்சாிடம் கூறி அந்த துறைக்கு அமைச்சராகஇருக்கும் நானும் நிதியமைச்சரும் சேர்ந்து அதையும் உறுதியாக பெற்றுத்தருவோம்.


 ஏப்ரல் 19 தேர்தல் ஜீன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை ஜீன் 3ம்தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞாின் 101வது பிறந்தநாள் நாம் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அவரது காலடியில் சமர்ப்பிப்பது தான் சாதனை 

 ஓன்று முதல் ஐந்து வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு முதலமைச்சா் வழங்கும் திட்டத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவது மட்டுமின்றி கனடா நாட்டிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கே திராவிட மாடல் ஆட்சி வழிகாட்டியாக இருக்கிறது.



 தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டபின் நான் கலந்து கொள்ளும் 19வது நாள் பிரச்சாரம் 35வது தொகுதி தூத்துக்குடி 102வது பிரச்சார கூட்டம் இங்கு உங்களை நம்பி தான் கனிமொழிக்காக அவரது மருமகனாக வந்துள்ளேன்.


 நான் ஏற்கனவே கேட்டுக்கொண்ட படி 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு நான் சென்னை செல்கிறேன்.


 வெற்றி விழாவிற்கு இங்கு வருவேன். 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறிய நீட் விலக்கு உள்ளிட்டஅனைத்தும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் தமிழகத்திற்கு பொற்காலமாக அமையும்.


 பாஜகவை சோ்ந்த யாரும் ஓட்டு கேட்க வந்தால் 29 பைசா பிரதமர் எப்படி இருக்கிறார் என்று கேட்க வேண்டும். 21ல் அடிமைகளின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினோம் 24ல் சா்வாதிகார ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்.  

   பிரச்சாரத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மாா்க்கன்டேயன், சண்முகையா, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் ஜோயல், இன்பரகு, மேயா் ஜெகன் பொியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கர், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம்ஜெயக்குமார், தொகுதி பொறுப்பாளா் பெருமாள், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, தெற்கு மாவட்ட இளஞைர் அணி அமைப்பாளர் ராமஜெயம், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன், அன்பழகன், அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், அபிராமிநாதன், கவிதாதேவி, அருண்குமார், குபோ்இளம்பாிதி, அசோக், அந்தோணிகண்ணன், பிரதீப், பெனில்டஸ், பிரபு, அருணாதேவி, கோகுல்நாத், பார்வதி, தங்கம், ராமர், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன்ஜேக்கப், அற்புதராஜ், அருண்சுந்தா், ஜெயக்கனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், முருகஇசக்கி, மகேஸ்வரன்சிங், சீதாராமன், செய்யது காசிம், ரவி, சங்கரநாராயணன், பால்ராஜ், பெல்லா, செந்தில்குமாா், தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மாியதாஸ், கருப்பசாமி, ஓன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், ராமசுப்பு, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், சோ்மபாண்டியன். நாராயணன், செல்வகுமார், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், கவுன்சிலர்கள் சோமசுந்தாி, அதிஷ்டமணி, சரவணக்குமார், ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, ாிக்டா, பொன்னப்பன், இசக்கிராஜா, கண்ணன், ரெக்ஸின், தெய்வேந்திரன், மும்தாஜ், ராமுஅம்மாள், தனலட்சுமி, முத்துமாாி, வட்டச்செயலாளர்கள் டென்சிங், பத்மாதேவி, கதிரேசன், பாலகுருசாமி, முத்துராஜா, சுப்பையா, செந்தில்குமார், சுரேஷ், செல்வராஜ், ரவீந்திரன், முனியசாமி, சிங்கராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளா் சூர்யா, செந்தூர்பாண்டி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட், பிரபாகர், ஜோஸ்பர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்ஸீம்லீக் மாவட்ட தலைவர் மீராசா, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹர், சிபிஐ மாவட்ட செயலாளர் கரும்பன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், தமிழக வாழ்வுாிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டசெயலாளா் கணேசன், திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஹேமா, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், சிபிஐ நகர செயலாளர் ஞானசேகா், சிபிஎம் நகர செயலாளர் முத்து, உள்பட இந்தியா கூட்டணியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 

 பாக்ஸ்: முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து வரவேற்றார். பிரச்சார இடத்திற்கு வந்ததும் கருப்பு சிவப்பு வண்ண தாள்கள் வெடியின் மூலம் வரவேற்று 201 பெண்கள் கும்பத்துடன் மாியாதை வழங்கி மலர்தூவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணாநகர் பகுதி திமுக செயலாளர் ரவீந்திரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளா் அருண்சுந்தர் ஆகியோர் வீரவாள் வழங்கினார்கள். உதயநிதிஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் துரை, துணைத்தலைவர் டைகர் வினோத், ஆகியோர் ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்தனர். வேட்பாளர் கனிமொழி ஆரம்பம் முதல் கடைசி வரை அனைவரையும் கும்பிட்டும் சிாித்த முகத்தோடு புன்னகையிட்டவாறு அனைவரையும் உதயசூாியன் சைகை மூலம் உற்சாகப்படுத்தி கொண்டிருந்தார். 

முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் இங்கு போட்டியிடும் கனிமொழி கலைஞருக்கு மகளாகவும், முதலமைச்சருக்கு தங்கையாகவும் உள்ள எனது அத்தைக்கு மருமகனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். அதே போல் இங்கு கூடியிருக்கிற அனைவரும் கலைஞாின் ரத்தங்கள் தான் மோடி திமுகவைபார்த்து இது குடும்பகட்சி என்கிறார். ஆமாம். தமிழகத்தில் உள்ள அனைவரையும் அரவனைத்து அவர்களது வாழ்வில் ஔியேற்றுவதால் அது எங்கள் குடும்பம் தான். திமுகவிற்கு தற்போது உறக்கம் வருவதில்லை என்று மோடி கூறுகிறார். நாங்கள் உறங்காமல் விழித்துக்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்வதன் மூலம் ஜீன் 4ம் தேதி இந்தியா முழுவதும் உங்களை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி விட்டு நாங்கள் நிம்மதியாக உறங்க செல்வோம் அதுவரை உறக்கமின்றி பணியாற்றுவோம். என்றார்.

கனிமொழி பேசுகையில் நான்கு இடங்களில் உதயநிதி ஸ்டாலின் எனக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். எனக்கு இது இரண்டாவது தாய்வீடு திருச்செந்தூாில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று உதயநிதிஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதே போல் தூத்துக்குடியிலும் அமைக்கப்படும் கலைஞர் காலம் முதல்கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.


 முதலமைச்சர் கூறியது போல் இது இரண்டாவது சுதந்திரபோராட்டம் பிஜேபியிடம் இருந்து மீட்க வேண்டும் என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக