தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி நாள்: 29.09.2026
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்பு அப்புறப்படுத்துதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
தூத்துக்குடி: செப் 29
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகள் ஓய்வறைகளை ஆக்கிரமித்துத் தங்கியிருந்தவர்களைக் காவல்துறையினர் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அப்புறப்படுத்தினர்.
தொடர் புகார்களும் தாமதமான நடவடிக்கையும்: தூத்துக்குடி ஆம்னி பேருந்து நிலைய ஓய்வறை மற்றும் வளாகப் பகுதிகளில் தங்கியிருக்கும் நரிக்குறவ இன மக்களால் பயணிகளுக்கு பாதுகாப்பு அற்ற சூழல் நிலவுவதாகவும், திருட்டுச் சம்பவங்கள், சுகாதாரச் சீர்கேடு, சண்டை சச்சரவுகள், மது அருந்துதல் போன்ற சட்டவிரோதச் செயல்கள் நடப்பதாகவும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதுகுறித்து,...
தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வட்டார சிறுதொழில் மற்றும் வியாபாரிகள் ஐக்கிய சங்கம் மற்றும் ஆம்னி பஸ் புக்கிங் ஏஜென்ட் அசோசியேஷன் சார்பில் கடந்த 21.08.2026 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்குப் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன.
இதேபோல் பல்வேறு அமைப்புகளும் பயணிகளும் தொடர்ச்சியாகப் புகார்களைத் தெரிவித்து வந்த நிலையில், நடவடிக்கை எடுப்பதில் தாமதம் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.
அரசு நிலம் ஒதுக்கியும் தொடரும் ஆக்கிரமிப்பு:
கடந்த ஆண்டுகளில் நரிக்குறவ மக்களுக்குப் பேரரூணி பகுதியில் வீடுகள் கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்பின்னரும் அவர்கள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலேயே தங்கி வந்தனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக..சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மூலம் மாப்பிள்ளையூரணி பகுதியில் 52 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொள்ள நிலம் ஒதுக்கப்பட்டு, அங்கு குடியேறுமாறு வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், அங்குச் செல்லாமல் ஆம்னி பேருந்து நிலையப் பயணிகள் தங்கும் இடங்களை ஆக்கிரமித்து, பயணிகள் நிம்மதியாகப் பேருந்து ஏறிச் செல்ல முடியாத சூழலை ஏற்படுத்தி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி அகற்றம்: பல்வேறு தரப்பிலிருந்து வந்த புகார்களின் எதிரொலியாக, தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையர் மூனீர் அகமது தலைமையில், காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் (பொக்லைன் தண்ணீர் பீச்சி அடிப்பு வாகனம் மாநகராட்சி வாகனம்)ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
![]() |
| தூத்துக்குடி வடக்கு மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் முனீர் அகமது |
அப்போது அங்குத் தங்கியிருந்த சிலர், "நாங்கள் இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டோம்" என்று எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
![]() |
| அந்த நபரை போலீசார் பிடித்து இழுத்து வந்தனர் |
மேலும், ஒருவர் தீக்குளிக்கப் போவதாக அச்சுறுத்தியதுடன், அங்கிருந்த சிறுவர் சிறுமியர் வரை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தவாறு எதிர்ப்பைக் காட்டினர்.
பொருட்கள் அகற்றம் - பகுதிக்கு 'வரவிடமாமல் டேப் சீல்'கட்டப்பட்டது :
நிலைமையைச் சுதாகரித்துக் கொண்ட வடபாகம் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர், புகார்களின் அடிப்படையில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து, ஆம்னி பஸ் இருக்கைப் பகுதிகளில் போடப்பட்டிருந்த மெத்தைகள், ஃபேன் மற்றும் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புப் பொருட்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
பின்னர் அப்பகுதிக்குத் தடுப்புப் நாடா (Tape) கட்டிச் சென்றனர்.
பாரபட்சமின்றி அகற்ற பொதுமக்கள் கோரிக்கை: தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே குடும்ப சகிதமாக முன்று கும்பல் ஆக்ரமிப்பு
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குடும்ப சகிதமாக நரிக்குறவர் கும்பல் போல் இன்னும் இரண்டு கும்பல் குடும்ப சகிதமாக ஆக்ரமிப்பு செய்து வருகிறது
குடும்ப சகிதமாக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே குடும்ப சகிதமாக தங்கி இருக்கும் மூன்று கும்பலை அகற்ற வேண்டும் என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தூத்துக்குடி பேருந்து நிலையத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, எந்தவித பாரபட்சமுமின்றி பேருந்து நிலையத்திற்குள் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் அனைத்துக் கும்பல்களையும் முழுமையாக அகற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.













