Tamil Nadu updates,
photo news by Arunan Reporter
தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மல்லிகார்ஜுன் கார்கேவை அவமதித்ததாக பாஜகவினருக்கு எதிர்ப்பு
தூத்துக்குடி: ஆக14
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எம்.பி.யை அவமதிக்கும் வகையில் பாஜகவினர் செயல்பட்டதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி ஒன்றாம் ரயில் நிலையம் கேட் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்தியப் தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி மாநகர் மாவட்ட சார்பில்....
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, காங்கிரஸ் கொடிகளை ஏந்தியபடி பாஜகவினருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மல்லிகார்ஜுன் கார்கேவை அவமதிக்கும் வகையில் நடைபெற்ற சம்பவத்திற்கு பாஜகவினர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் அவமதிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஜனநாயக அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தலைவர்களின் தனிப்பட்ட மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக