காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

மக்களவை தொகுதி மறுசீராய்வு மசோதாவுக்கு எதிர்ப்பு தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம்

 Tamil Nadu updates, அருணன் செய்தியாளர் 

மக்களவை தொகுதி மறுசீராய்வு மசோதாவுக்கு எதிர்ப்பு

தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம்

தூத்துக்குடி:
மக்களவை தொகுதி மறுசீராய்வு (Delimitation) மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம் நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கிய இந்த நடைபயணம், ஒன்றாம் கேட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலை வரை நடைபெற்றது.

நடைபயணத்திற்கு மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினர் கற்பகவள்ளி சேகர், மாநில பேச்சாளர் அப்துல் மஜீத், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், மாநகர கிழக்கு மண்டல தலைவர் ஜசைஸ் செல்வா, எஸ்.சி./எஸ்.டி. மாவட்ட தலைவர் பிரபாகர், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சுரேஷ் பர்ணாரந்து உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

“மக்களவை தொகுதி மறுசீராய்வு மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்”

நடைபயணத்தின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் பேசுகையில், “மோடி-லிமிட்டேஷன் (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கும் அரசியல் முயற்சி” என குற்றம்சாட்டினர்.

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீராய்வு செய்வதற்கான முயற்சியால், மக்கள் தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பாதிக்கப்படும் என்றும், மக்கள் தொகை கட்டுப்பாட்டில் பின்தங்கிய மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் சூழல் உருவாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.




மேலும், தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை உயர்த்தும் வகையில் மறுசீராய்வு செய்யப்பட்டால், உத்தரப்பிரதேசத்தின் மக்களவை தொகுதிகள் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆகவும் அதிகரிக்கக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர்கள், இதன் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான தொகுதி எண்ணிக்கை இடைவெளி மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.

“தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பறிபோகும்”

நாடாளுமன்றத்தில் எண்களின் பலமே முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் நிலையில், தென் மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் குறையும் வகையில் தொகுதி மறுசீராய்வு மேற்கொள்ளப்பட்டால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினர்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கடந்த காலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை முடக்கப்பட்டதாகவும், அந்த பாதுகாப்பை அகற்றும் முயற்சியே தற்போது நடைபெறுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

“சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகே தொகுதி மறுசீராய்வு”

சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட தேவையான தரவுகள் முழுமையாகப் பெறப்படுவதற்கு முன்பாக தொகுதி மறுசீராய்வு மேற்கொள்ளப்பட்டால், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளை முறையாக நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

“தமிழ்நாட்டின் சுயமரியாதை, அரசியல் உரிமை மற்றும் ஜனநாயக பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே இந்த நடைபயணம் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் உரிமைகளை எவராலும் பறிக்க முடியாது. மாநிலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தொகுதி மறுசீராய்வு நடவடிக்கையையும் எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்போம்” என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், “தமிழ்நாட்டின் நலனுக்கும், தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொகுதி மறுசீராய்வு செய்யக்கூடாது. தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கும் வகையிலான எந்த முயற்சியையும் முறியடிக்க வேண்டும்” என நடைபயணத்தில் வலியுறுத்தப்பட்டது.

வெள்ளையனே வெளியேறு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நடைபயணம், ‘QUIT UNFAIR DELIMITATION MARCH’ என்ற பெயரில் நடைபெற்றதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திங்கள், 2 மார்ச், 2026

தூத்துக்குடி மாவட்ட சட்ட மன்ற ஆறு தொகுதிகளில் 2026 தேர்தலில் இந்த தடவை களம் மாறும் பிரபலங்கள் யார் யார்?

சீனியர் ரிப்போர்ட்டர் வார இதழ் & தூத்துக்குடி லீக்ஸ் 

சிறப்பு பார்வை  கட்டுரை எழுதியவர் செய்தியாளர் அருணன்  2-3-2026

சுவாரஸ்யமான தகவல் முழுவதும் படிக்கவும் 

 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன தூத்துக்குடி மாவட்டத்தில் குறைந்த பட்சம்  அமைச்சர்கள் தமிழக சட்டசபையில் தேர்வு இரண்டு பேர்களுக்கு வாய்ப்பு வழங்குகின்றார்கள். இதனால் ஆறுசட்டமன்ற தொகுதியில் ஆளும் கட்சி எதிர்கட்சி தரப்பில் வேட்பாளராக நிற்க பெரும் போட்டி நிலவுகிறது.  



கடந்த சில நாட்களாக அதிமுக வில் வேட்பாளர் ஆக தூத்துக்குடி பகுதியில் நிற்பவர்கள் பற்றி தகவல்கள் பரபரக்கின்றது.

  அதிலும் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வெற்றி பெறுவது என்பது ரொம்ப சுலபம் 


தூத்துக்குடி மாநகராட்சியில் 60 ல் 8வார்டு ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு செல்கிறது அதனால் வெறும் 52 வார்டு பகுதி மட்டுமே ‌வருவதால் ஒவ்வொரு வார்டிலும்  தோராயமாக 5ஆயிரம் டூ 7 ஆயிரம்  இருக்கிறதால் தூத்துக்குடி சட்டமன்றத் வேட்பாளர் தேர்வு பெறுவதும் மிக எளிதாக பார்க்கப்படுகிறது .

"சமீபத்திய தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி கணக்கெடுப்பின்படி 2,48,300 வாக்காளர்கள் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன வாக்காளர் கவனிப்பு 1000என்றால்? 2,48,300 × 1000 கவனித்தால் கூட= 24,83,00,000

(அதாவது 2 கோடி 48 லட்சம் 30 ஆயிரம் × 1000 = 24 கோடி 83 லட்சம்) வருகின்றது  

 அதனால் தான் ஆளும் கட்சி எதிர் கட்சி வேட்பாளர்களிடம்  20கோடி பெற்று  மேலும் தலைமை 10 கோடி சேர்த்து ஒரு தொகுதிக்கு 30 கோடி வழங்குகிறார்கள் என கேள்வி படுகிறோம்? ஆயிரம் தராமல்?இதில் 500 கவனித்து மீதி ஆட்டைய போடுவர்களும்...? எதுவுமே செலவழிக்காமல் தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லும் வேட்பாளர்களும் உண்டாம்????? அடங் கொய்யா லே????!!! "   

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் நிற்க விரும்புபதாக தெரியவருகிறது ஏனெனில் அவரதுசொந்த தொகுதியான ஸ்ரீவைகுண்டம் தொகுதியை அதிமுக கூட்டணி பாஜக தெற்கு மாவட்ட செயலாளர் சித்ராங்கன் நிற்பதற்கு விட்டு கொடுக்கிறார் ஆகவே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட போகிறாராம் ? 


தூத்துக்குடி தொகுதியில் நின்றிட கடந்த ஓராண்டாக தீவிரமாக வேலை செய்து வரும் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் அவர் விட்டு கொடுப்பாரா? அல்லது அதிமுக தலைமைக்கு கட்டுப்பட்டு  வேறு தொகுதிற்கு செல்வாரா இது ஒரு பக்கம் நீடிக்கிறது தூத்துக்குடி அப்படியானால்.. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவன் அதிமுக வேட்பாளர் எஸ் பி சண்முகநாதன் இருவரும் தேர்தல் களத்தில் மோது வார்கள்.  

thoothukudileaks


இருவரும் மோதினால், தூத்துக்குடியில் பெரும் மோதல் நிச்சயம்!

thoothukudileaks


ஸ்ரீவைகுண்டம் தொகுதி


காங்கிரஸ் தற்போதைய எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் உடன் பாஜக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சித்ராங்கன் (அல்லது சித்ராங்கன் தொடர்புடையவர்) போட்டியிட வாய்ப்பு. எஸ்.பி. சண்முகநாதன் இத்தொகுதியை விட்டுக்கொடுத்தால், பாஜகவுக்கு இங்கு வலுவான களம் கிடைக்கும்

thoothukudileaks


திருச்செந்தூர் தொகுதி


திமுக தரப்பில் வழக்கறிஞர் ஜோயல் (அல்லது தற்போதைய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்புடைய வாய்ப்பு) போட்டியிடலாம். பாஜக தரப்பில் நடிகர் சரத்குமார் போட்டியிடுவது குறித்து பேச்சு உள்ளது – ஆனால் சமீபத்தில் அவர் "2026-ல் தானே போட்டியிட மாட்டேன், தோழர்களுக்கு வாய்ப்பு" என்று தெரிவித்துள்ளார். எனவே இது உறுதியாகவில்லை.

thoothukudileaks

thoothukudileaks


விளாத்திகுளம் தொகுதி


திமுக தற்போதைய எம்எல்ஏ மார்கண்டேயன் vs அதிமுக தரப்பில் ஜெய விலாஸ் (பஸ் முதலாளி) அல்லது கடம்பூர் ராஜூ நிறுத்தப்பட வாய்ப்பு.

thoothukudileaks


கோவில்பட்டி தொகுதி


திமுக தரப்பில் மாணிக்க ராஜா vs கடம்பூர் ராஜூ (அதிமுக அல்லது கூட்டணி தரப்பில்).


ஒட்டப்பிடாரம் தொகுதி


அதிமுக கூட்டணியில் அமமுக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் vs திமுக தரப்பில் மாரி செல்வராஜ் ஆதரவாளர் கபடி கணேசன் நிறுத்தப்பட சாத்தியம்.

 

இவை அனைத்தும் தற்போதைய வதந்திகள், கட்சி வட்டார தகவல்கள் அடிப்படையிலானவை. தேர்தல் நெருங்க நெருங்க, தலைமை முடிவுகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் எல்லாம் மாறலாம். 

ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இம்முறை பிரபலங்கள் மோதல் உறுதி போல தெரிகிறது – குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் இடையேயான உள் போட்டி, பண பலம், செல்வாக்கு ஆகியவை தேர்தல் களத்தை சூடாக்கும். யார் ஜெயிப்பார்கள்? மக்கள்தான் தீர்மானிப்பார்கள்!


தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் இளம்பகவத் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்..

thoothukudileaks


 இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் மொத்தம் 13,76,624 வாக்காளர் இடம் பெற்றுள்ளனர்.. 


 தூத்துக்குடி தொகுதியில் 2,48,300 வாக்காளர்களும்.. 


 திருச்செந்தூர் தொகுதியில் 2,30,702 நபர்களும், 


 ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2,12,885 நபர்களும்.. 


ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 2,40,988 வாக்காளர்களும், 


கோவில்பட்டி தொகுதியில் 2,40,017 வாக்காளர்களும் உள்ளனர். 

விளாத்திகுளம் தொகுதியில் 2,03,732 வாக்காளர்களும்.

ஒட்டுமொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 6,71,742 ஆண் வாக்காளர்களும், 7,04,689 பெண் வாக்காளர்களும், 193 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்..


 இதில் பாலின வாரியாகப் பார்க்கும்போது, பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விடக் கூடுதலாக உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் தொகுதி வாரியாக ஆண் வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள் விவரம்!!!

மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 6,78,752 பெண் வாக்காளர்களும், 6,49,224 ஆண் வாக்காளர்களும், 182 இதர பாலினத்தவரும் இடம் பெற்றுள்ளனர்..


தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,15,136 ஆண்கள், 1,21,263 பெண்கள் 62 இதர என மொத்தம் 2,36,461 வாக்காளர்கள் உள்ளனர். 


திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,08,526 ஆண்கள், 1,14,077 பெண்கள், 28 இதரர் என மொத்தம் 2,22,631 வாக்காளர்கள் உள்ளனர்.   


 ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,02,364 ஆண்கள் 1,04,688 பெண்கள், 2 இதரர் என மொத்தம் 2,07,054 வாக்காளர்கள் உள்ளனர். 


ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,13,480 ஆண்கள், 1,19,002 பெண்கள், 54இதரர் என மொத்தம் 2,32,536 வாக்காளர்கள் உள்ளனர். 


கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,12,445 ஆண்கள், 1,19,062 பெண்கள், 22 இதரர் என மொத்தம் 2,31,529 வாக்காளர்கள் உள்ளனர்..


விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 97,273 ஆண்கள், 1,00,660 பெண்கள் 14 இதரர் என மொத்தம் 1,97,947 வாக்காளர்கள் உள்ளனர்..

தொகுதிகளின் வாரியாகப் பார்க்கையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி 2,36,461 வாக்காளர்களுடன் மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளது.. 


இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 2,32,536 வாக்காளர்களும், கோவில்பட்டி தொகுதியில் 2,31,529 வாக்காளர்களும் உள்ளனர். திருச்செந்தூர் தொகுதியில் மொத்தம் 2,22,631 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2,07,054 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 


மாவட்டத்திலேயே குறைந்தபட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 1,97,947 வாக்காளர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு தொகுதியிலும் பெண்களின் ஆதிக்கமே அதிகமாகக் காணப்படுகிறது. 


குறிப்பாக தூத்துக்குடி தொகுதியில் அதிகபட்சமாக 1,21,263 பெண் வாக்காளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 54 இதர பாலினத்தவரும் உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இதர பாலினத்தவர் எண்ணிக்கை மிகக் குறைவாக 2 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி கட்டுரை புகைப்படங்கள் 

அருணன் செய்தியாளர் 



ஞாயிறு, 18 ஜனவரி, 2026

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் அதிரடி மாற்றம் கட்சிக்குள் குழப்பம், நிர்வாகிகள் தொண்டர்கள் அதிருப்தி?

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: ஜன19

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் தலைமை பொறுப்புகளில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டதை தொடர்ந்து, கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய நியமனங்கள் தொடர்பாக சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



சமீபத்தில் வெளியான அறிவிப்பின் படி, தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் தலைவராக சகாயராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பெருமாள் சாமி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாற்றங்கள் குறித்து கட்சிக்குள் ஒருமித்த கருத்து உருவாகவில்லை எனவும், திடீர் மாற்றங்கள் களப்பணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலை தொண்டர்கள் மத்தியில் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், புதிய தலைவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையும் சிலர் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு வலுப்படுத்தல் குறித்து மேலிடம் விரைவில் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 29 மார்ச், 2024

காங்கிரஸ் தூத்துக்குடியில் பழைய அண்ணா பேருந்து நிலையம் போராட்டம்


தூத்துக்குடியில் காங்கிரஸ்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதுபற்றி செய்தியாவது

வருமான வரித்துறை நோட்டீஸை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று 30-3-2024 நாடு முழுக்க போராட்டம்

video பார்க்க 

பொருளாதார ரீதியாக முடக்க பாஜக அரசு முயல்வதாகக் காங்கிரஸ் குற்றச்சாட்டு


ரூ. 1700 கோடி செலுத்த காங்கிரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இன்று 30-3-2024 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பழைய அண்ணா பேருந்து நிலையம் முன்பு இன்று 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியினர் கையில் காங்கிரஸ் கொடியேந்திய படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





சனி, 7 அக்டோபர், 2023

பாரத பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தூத்துக்குடி பாஜக அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வருகை தந்ததால் பரபரப்பு

 thoothukudileaks 7-10-2023

தூத்துக்குடி மாவட்டம்

பாரத பிரதமர் மோடியை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தூத்துக்குடி யில் உள்ள பாஜக அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் காங்கிரஸ் கட்சியினர் 15 பேர் கைது.

சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வருகை தந்ததால் சிறிது நேரம் பரபரப்பு



இது பற்றிய செய்தியாவது:-

கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்ததை மூடி மறைத்து, திசை திருப்பும் நோக்கத்துடன் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தியை, பிரதமர் மோடி  ராகுல்காந்தி 10 தலை ராவணன் போல் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளதை கண்டித்து. தமிழ்நாடு முழுவதும் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி  அறிவித்தபடி. இன்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் கேடிசி நகர் சந்திப்பு முன்பிருந்து காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று பாஜக மாவட்ட அலுவலகத்தை  முற்றுகையிடும் (06-10-2023) போராட்டம் நடைபெற்றது.


இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலிசார் குவிக்கப்ட்டனர். சம்பவ இடத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர்வருகை தந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.



 பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை சிப்காட் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட15 பேரை கைது செய்து அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து பின்னர் அவர்களை விடுவித்தனர்.