தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி
தூத்துக்குடி: ஜன19
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் தலைமை பொறுப்புகளில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டதை தொடர்ந்து, கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய நியமனங்கள் தொடர்பாக சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான அறிவிப்பின் படி, தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் தலைவராக சகாயராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பெருமாள் சாமி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாற்றங்கள் குறித்து கட்சிக்குள் ஒருமித்த கருத்து உருவாகவில்லை எனவும், திடீர் மாற்றங்கள் களப்பணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலை தொண்டர்கள் மத்தியில் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், புதிய தலைவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையும் சிலர் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு வலுப்படுத்தல் குறித்து மேலிடம் விரைவில் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக