வெள்ளி, 14 மார்ச், 2025

மதுக்கடைகள் மூட கோரிக்கை – எதிர்க்கட்சி தலைவரிடம் பரிந்துரை

மதுக்கடைகள் மூட கோரிக்கை – எதிர்க்கட்சி தலைவரிடம் பரிந்துரை

தூத்துக்குடி: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியனை அவரது இல்லத்தில் சந்தித்து, புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூடக்கோரியும், இந்த கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களிடம் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.



இதற்கு பதிலளித்த அவர், சென்னையில் மனுவை ஒப்படைத்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வழியாக வலியுறுத்துவோம் என உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின் போது, மறைமாவட்ட அனைத்து மதுவிலக்கு சபைகளின் ஒருங்கிணைப்பாளர் ரஸ்டன், தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு சபையின் தலைவர் ரூஸ்வெல்ட் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மதுவிலக்கு கோரிக்கையை முன்வைத்ததற்காக மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் அவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் அவர்களுக்கும் மதுவிலக்கு சபையின் சார்பில் நன்றியினை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு சபைகளின் இயக்குநர் அருட்தந்தை ஜெயந்தன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக