மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 மார்ச், 2025

தூத்துக்குடியில் காச நோய் இல்லா தமிழகத்திற்காக விழிப்புணர்வு பேரணி

 Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் செய்தி

காச நோய் இல்லா தமிழகத்திற்காக விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி, மார்ச் 17: 

தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், காச நோய் இல்லா தமிழகத்திற்கான பிரச்சாரம் இன்று 100வது நாளை அடைந்ததை முன்னிட்டு, காலை 8:30 மணிக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரதான நுழைவு வாயிலில் இருந்து ஒரு விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.









அம்மா உணவகம், காவல் நிலையம் வழியாக சென்ற பேரணி, திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில் நிறைவடைந்தது.

வீடியோ பார்க்க..1


வீடியோ பார்க்க 2

இந்த நிகழ்வில் மருத்துவமனை முதல்வர், மருத்துவ கண்காணிப்பாளர், உறைவிட மருத்துவர், மற்றும் காச நோய் துணை இயக்குநர் டாக்டர் சுந்தரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புதன், 11 டிசம்பர், 2024

தூத்துக்குடி அரசு மருத்துவமனை: லஞ்சத்தில் மிதக்கிறது பிரசவ வார்டு மற்றும் பொதுவார்டு கண்டு கொள்ளாத மருத்துவமனை நிர்வாகம்????

TamilNaduupdates,

thoothukudinews,

தூத்துக்குடி அரசு மருத்துவமனை லஞ்சத்தில் மிதக்கிறது

 பிரசவ வார்டு மற்றும் பொதுவார்டு பகுதிகள்

இதை எதுவுமே....

கண்டு கொள்ளாத மருத்துவமனை நிர்வாகம்???? 

இதனால்..

தமிழக அரசுக்கு கெட்ட பெயர் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.



இதுபற்றி செய்தியாவது 

தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் அமைந்துள்ள பேறுகால வார்டு லஞ்சத்தில் சிக்கிய யுள்ளதாக  பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 



அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், தாய்மார்களிடம் தவறாக பணம் கேட்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.



 லஞ்ச விவரம்!!!

பிறந்த பிள்ளையை துடைத்து கொடுப்பதற்கு ரூ.500/- கேட்பது, தாய்மார்களை தள்ளுவண்டியில் கொண்டு செல்ல ரூ.200/- முதல் ரூ.100/- வரை வசூலிப்பது, மேலும் நோயாளியை படுக்கைக்கு மாற்றுவதற்கும் ரூ.100/- முதல் ரூ.200/- வரை பணம் கேட்பது போன்ற செயல்கள் அங்கு நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பங்கு உண்டா?? சந்தேகம்!!

இப்படி லஞ்ச வாங்குபவர்கள் அங்குள்ள உறைவிடம் மருத்துவர் மற்றும் மருத்துவமனை பொறுப்பு டீன் க்கு பங்கு கொடுக்கிறார்களா என பொதுமக்கள் சந்தேகம் எழுந்துள்ளது.

அவமானம்!!!!

“இங்கு தரமான சிகிச்சை கிடைக்கும் என்பதற்காகவே அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளோம். ஆனால் பணமின்றி இங்கு ஒரே அவமானமே அனுபவிக்கிறோம்,” என்று சில தாய்மார்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.


இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்வியாக உள்ளது. இதுகுறித்து பொது மக்கள் விரைவான நடவடிக்கை எடுத்திட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செவ்வாய், 19 நவம்பர், 2024

டாக்டர்கள் கொதிப்பு? தூத்துக்குடி மாவட்ட நலச்சங்கத்தின் ஊழல்!!!

தூத்துக்குடி மாவட்ட நலச்சங்கத்தின்  ஊழல் நடைபெற்றதுள்ளது என டாக்டர்கள்  புகார்கள் அனுப்பி கொதித்து கொண்டு இருக்கிறார்கள்.



பணி காலி இடங்கள் 3

அறிவிப்பு!!!

 தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி சுகாதாரத் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் இயங்கும் தூத்துக்குடி மாவட்ட நல சங்கத்தின்  சார்பாக கடந்த 20.09.2024 அன்று பத்திரிகைகளில் இரண்டு ஹோமியோபதி மருத்துவ அதிகாரி காலி பணியிடங்களை

( செபத்தையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், பசுவந்தனை ஆரம்ப சுகாதார நிலையம்) நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது.


கொரானா காலத்தில்...

 தூத்துக்குடியில் பல மூத்த மருத்துவர்கள் இருக்கிறார்கள்,

 கொரோனா காலத்தில் நீண்ட காலம்  பணி செய்த மருத்துவர்கள் வேலை வாய்ப்புக்காக  இருக்கிறார்கள்,!!!


100மருத்துவர்கள் விண்ணப்பம்!!!

 இந்நிலையில் இந்த காலி பணியிடங்களில் நிரப்புவதற்காக மருத்துவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்  என்று  அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.


 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்  இந்த காலி பணியிடங்களுக்கு  அறிவிப்பில் கூறியபடி முறைப்படி விண்ணப்பித்திருந்தனர்.

நேர் காணல் பற்றி குற்றச்சாட்டு?

 கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கும் மேலாகியும்  யாரும் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை.

கண்துடைப்பு!!!

 முறைப்படி நேர்காணல் வைக்காமல் இரு தினங்களுக்கு முன்பு இரண்டு ஹோமியோபதி மருத்துவர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.


 சட்டத்துக்கு புறம்பாக இந்த செயல் நடைபெற்று இருக்கிறது.


 முறைப்படி விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்காணல் வைக்காமல் எப்படி இரண்டு மருத்துவர் மட்டும்  சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்செல்வன் பணி நியமனம் செய்து இருக்கிறார்.


 சட்டத்துக்கு புறம்பாக பணியாணை கொடுத்து விட்டு சென்னைக்கு மாறுதலாகி சென்றுவிட்டார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்!!!

 இது மிகப்பெரிய ஊழல் என்பதற்கு  மற்றும் ஒரு மிகப்பெரிய ஆதாரம் என்னவென்றால்  கடந்த ஜூலை மாதம் இதை தூத்துக்குடி டிடி அலுவலகம் மூலம்  " ப்ராஜெக்ட் மேனேஜர் " பதவிக்கு(அதுவும் தற்காலிக பணி )

 இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற ஹோமியோபதி மருத்துவர் ஒருவரின் மனைவிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.


 மொத்தத்தில் இந்தப் பதவிகள்  குறிப்பிட்ட ஒரு குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல்!!!

 எத்தனையோ மருத்துவர்கள் பணிக்காக பல ஆண்டுகளாக காத்து கொண்டு இருக்கையில் இவ்வாறு பல லட்சம் அரசியல் தலையீட்டோடு  பெற்றுக் கொண்டு  பணியிடங்களை  கொடுத்து இருக்கிறார்கள் 

தினமலர் செய்தி 

 "தூத்துக்குடி மாவட்ட நலச்சங்கம்  மாவட்ட ஆட்சியரின் தலைமையில் கீழ்தான் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 எனவே இது குறித்த செய்தியானது தினமலர் நாளிதழ் பத்திரிக்கையிலும் வெளியாகி உள்ளது."


 நேர்காணல்  குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வைத்து அதில் இவர்களுக்கு வேண்டிய இரண்டு பேரை தேர்ந்தெடுத்திருப்பது  ஜனநாயக விரோத செயலாகும்.

தமிழக முதல்வருக்கு புகார்!!!

 இதில் நேர்காணலுக்கு அழைக்கப்படாத மருத்துவர்கள் இது குறித்து  முதல்வர் வரை புகார் அனுப்பியுள்ளார்கள்.


 சிலர் சட்டப் போராட்டத்திற்கும் தயாராகி வருகிறார்கள்.

பாரத பிரதமருக்கு புகார்!!!

 சிலர் தமிழக முதல்வர், தமிழக ஆளுநருக்கும்,...


 பாரதப் பிரதமருக்கும் புகார் அளிக்க தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 2 ஜூலை, 2024

தேசிய மாற்றுமுறை மருத்துவ மன்றத்தின் 10வது ஆண்டு பட்டமளிப்பு விழா

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 3-7-2024 

தேசிய மாற்றுமுறை மருத்துவ மன்றத்தின்

10வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:-

குத்தாலம், தேசிய மாற்றுமுறை மருத்துவ மன்றத்தின் 10ம் ஆண்டு  பட்டமளிப்பு விழா 

நேற்று (2-7-2024 )சென்னை தியாகராயர் நகர் சர்.பி.டி. தியாகராஜர் ஹாலில் நடைபெற்றது.


தேசிய மாற்றுமுறை மருத்துவ மன்றத்தின் தலைவர் டாக்டர். குத்தாலம். செல்வராஜ் தலைமை வகித்தார்.


 நாகர்கோயில், பயோனீர் குமாரசுவாமி கல்லூரி பேராசிரியை சுபத்ரா செல்லத்துரை வரவேற்புரை நிகழ்த்தினார். 


வி. மாணிக்கம், காவல் கண்காணிப்பாளர் ஓய்வு, கே. ராஜாராம், காவல் உதவி ஆணையர் ஓய்வு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உ. கதிரவன் திரைப்பட நடிகர் பூவிலங்கு மோகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்துகொண்டனர் 



நிகழ்ச்சியில்...

சான்றுகள் பெற்ற இளம் மருத்துவர்களை வாழ்த்தி பேசினார். 


நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி. ஹண்டே மாற்றுமுறை மருத்துவத்தின் அவசியம் மற்றும் அங்கீகாரம் குறித்தும் மாற்றுமுறை மருத்துவர்களின் கிராமப்புற சேவை குறித்தும் பேசினார்.


 மேலும் ஏழ்மையில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் சிக்கன மருத்துவம் மாற்றுமுறை மருத்துவம் என்று மாற்றுமுறை மருத்துவத்தை புகழ்ந்து பேசியதுடன் மாற்றுமுறை மருத்துவர்களின் மக்கள் சேவை சிறப்பாக அமைய வேண்டும் என்று சான்றுகள் பெற்ற மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.


அதைத் தொடர்ந்து மாற்றுமுறை மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுமுறை மருத்துவத்தின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வரும் மாற்றுமுறை மருத்துவப் போராளி குத்தாலம் டாக்டர் செல்வராஜுக்கு வெற்றி வேந்தர் விருது என்ற விருதினை தவப்புதல்வி இதழாசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை வழங்கி கவுரவித்தார்.


நவீன் பைன் ஆர்ட்ஸ் பன்னீர்செல்வம் மற்றும் மேன் பவர் சர்வீசஸ் பீர்முஹம்மது  ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்து தந்தனர். கோவலன் கலை மன்றம் விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 


தேசிய மாற்றுமுறை மருத்துவ மன்றத்தின் பொருளாளர் பாலசேகரன் நன்றியுரையாற்றினார்.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

தூத்துக்குடியில் நாளை இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம்

thoothukudileaks 13-2-2024

news by arunan journalist 

தூத்துக்குடியில் நாளை (14-2-2024 ) இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.



இதுபற்றி செய்தியாவது:-

GOVERNMENT THOOTHUKUDI MEDICAL COLLEGE

அரசு மருத்துவக்கல்லூரி தூத்துக்குடி.

மஸ்ஜித் ரஹ்மான் & தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்

மற்றும்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இணைந்து நடத்தும்

இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்

பரிசோதனை முகாம்

நாள் : 14.02.2024 புதன்கிழமை

நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

இடம் : மஸ்ஜித் ரஹ்மான்,

5/39/1 பள்ளிவாசல் தெரு, லூர்தம்மாள்புரம், தூத்துக்குடி - 2

இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.

இவண் 

தமுமுக, மமக திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம் கிளை



அளவற்ற அருளாளன்

நிகரற்ற அன்புடையோன்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

நான் நோயுற்ற காலத்தில் அவனே

என்னை குணப்படுத்துகிறான். (அல்குர்ஆன் : 26:80)

வியாழன், 14 டிசம்பர், 2023

டீன் மற்றும் ஆர் எம் ஒ பணி இடமாற்றம் தமிழக முதல்வர் நடவடிக்கை எதிர்பார்ப்பில் தூத்துக்குடி மக்கள் மற்றும் செய்தியாளர்கள்!!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் மற்றும் ஆர் எம் ஒ பணி இடமாற்றம் தமிழக முதல்வர் நடவடிக்கை எதிர்பார்ப்பில் தூத்துக்குடி மக்கள் மற்றும் செய்தியாளர்கள்!!!



 

தூத்துக்குடி அரசு மருத்துவமனை யில் நோயாளி யின் புண்கள் சுத்தம் செய்த கத்திரிக்கோல் உள்ளிட்ட உபகரணங்கள் ஒன்பது வயது சிறுவன் சுத்தம் செய்த சர்ச்சை வீடியோ வெளியானது...!!!

அதனை தொடர்ந்து மருத்துவமனை  டீன் சிவகுமார் புகாரின் பேரில் பிரபல நாளிதழ் நிருபரை காவல்துறை தூக்கி உள்ளே வைத்ததும் தூத்துக்குடியில் மெகா அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.




குறிப்பாக நாகரிகமான வார்த்தையில் அரசு மருத்துவ மனையில் நடை பெற்றதாக தவறை சுட்டிக் காட்டியவருக்கு நேர்ந்த அநியாயமாக தான்  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளோர் களால் பார்க்கப்பட்டது 


இதே போன்றே பலருக்கு ஏற்பட்ட சொல்ல இயலாத அனுபவங்களால்... 

அதனால் தான் அக் காணொளி மிக வேகமாக அதிக அளவில் வைரலாக பரவியது


வெறும் 20 ருபாய் கொடுத்து சிறுவனை நடிக்க வைத்து வீடியோ எடுத்து இருப்பார்கள் என இவ்வளவு மட்டமான கற்பனை யாருக்கும் வராது 

இந்த கற்பனைக்கு அவார்ட் தரலாம் 


தூத்துக்குடி அரசு

மருத்துவமனையில் நீர்ழிவு நோயாளியின்

புண்ணை சுத்தம் செய்த கத்திரிக்கோல்

உள்ளிட்ட உபகரணங்களை சிறுவன்

சுத்தம் செய்த வீடியோ வெளியானதை

தொடர்ந்து டீன் சிவக்குமார் விசாரணை

நடத்தினார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி

மருத்துவமனைக்கு தினந்தோறும், 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 

மேலும், 600 க்கும்

மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும்

சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்

குறை, சுகாதார சீர்கேடு என தொடர்ந்து

பல்வேறு புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி  தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்

குமார் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு

சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


13-12-2023தினகரன் நாளிதழ் செய்தி 


கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பயிற்சி

பெண் மருத்துவர் ஒருவர் வேலைப்பளு

காரணமாக தனக்குத்தானே மயக்க

ஊசி செலுத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடைபெற்றுள்ளது.


இந்நிலையில் தான் நேற்று முன்தினம் சிறுவன் மருந்துவ உபகரணங்கள் சுத்தம் செய்த வைரல் வீடியோ வும் அதனை தொடர்ந்து டீன் புகாரின் பேரில் நாளிதழ் நிருபர் அந்தோனி இன்ப ராஜ் தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார்

இதனை தொடர்ந்து தூத்துக்குடி செய்தியாளர்கள் அனைவரிடமும் பரபரப்பு தொற்றிக் கொள்ள தென் பாகம் காவல் நிலையம் முன்பு குவிந்தார்கள்

அரசின் குறைபாடு களை சுட்டி காட்டுவது சாமானியனின் உரிமை அது பார்த்து மேலதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நிலைப்பாடு 

இது காலம் காலமாக இருந்து வரும் அரசின் கொள்கை

ஆனால் சுட்டி காட்டுபவர் மீதே அடக்குமுறை கையாள்வதா ?

நிருபரை விடுவியுங்கள்

 என் ஒன்று திரண்டனர் சிலர் கொதித்து போராட்டம் ஈடுபடும் சூழ் நிலையில் ..


தூத்துக்குடி மாவட்ட எஸ் பி பாலாஜி சரவணன் அவரை சந்தித்து செய்தியாளர்கள் பேசினார்கள் 

அவர் பொறுப்பு உடன் பிரச்சினை கேட்டறிந்து ஒரு வழியாக அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தார்.

பாதிக்கப்பட்ட நிருபருக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் எதிர்ப்பு ஆலை ஸ்பான்ஸபர் சர்ச்சை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை பலவித சர்ச்சை களுக்கு ஆளாகி வருகின்றனர்


சர்ச்சை கள் வித்திட இங்கே நிரந்தர முதல்வர் என ஐம்பம்  கூறுவது போல?

நிரந்தர மாக மருத்துவ அதிகாரிகள் உள்ளார்கள் ஏழைகளின் குரல்களை காது கொடுத்து கேட்பதே இல்லை அலட்சியமாக தான் பேசுவர் 


தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிடம் மருத்துவர் ஆர் எம் ஒ சைரஸ் நீண்ட வருடமாக இருந்து வருகிறார்

பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் 

மருத்துவமனை டீன் கள் மட்டுமே மாற்றம் டிரான்ஸ்ஃபர் செய்யப்படுவர்

ரொம்ப பிஸி!!!

ஆனால் மருத்துவமனை உள்ளே சகலமாக இருக்கும் ஆனி வேறான இவர் இட மாற்றம் செய்யப்படவே இல்லை என்கிறார்கள்.

இவரை தூத்துக்குடி பொதுமக்களுக்கு நன்றாகவே தெரிகிறது



கிறிஸ்தவ மத போதகர் ரேஞ்சில் கிறிஸ்துவ பாடல் அவரது குரலில் பாடி ய யூடியூப் ல வலம் வருகிறார் அவ்வளவு பிஸியான பிரபலம் என்கிறார்கள்

இவர் பாடிய கிறிஸ்தவ பாடல்கள் 285 வீடியோ பார்க்க 


ஃபுல் சப்போர்ட்  அரசியல் தான் என்கிறார்கள் 


தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் சமுக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவரது புதல்வர் மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்பது தான் 

கூடுதல் தகவலாக சொல்கிறார்கள். 


தூத்துக்குடி மருத்துவ மனை கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் வசதி குறைகள் இல்லாத வாறு சீரமைப்பு செய்திட தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் நலன் காக்கும் மருத்துவர்கள் இடம் பெற செய்திடல் வேண்டும் என தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரது எதிர் பார்ப்பாக இருக்கிறது

புதன், 11 அக்டோபர், 2023

நோயாளிகளிடம் .. ஏன் எங்கள் உயிரை வாங்கற துரத்தியடிக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் நோயாளியின் உறவினர் வேதனை!!!

 thoothukudileaks 11-10-2023

நோயாளிகளிடம் ..செத்து போக வேண்டியது தானே !!!

ஏன் எங்கள் உயிரை வாங்கற என கூறி கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் துரத்தியடிக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை அவலம்

தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் நோயாளியின் உறவினர் வேதனை!!!



தமிழக முதலமைச்சர் அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது :-

பெறுநர்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 

முதலமைச்சரின் மக்கள் குறைகள் பிரிவு

சென்னை

     ஜயா

பொருள் :-                                                      

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரின் அடாவடிதனமான பேச்சு.


எனது உறவினர் திரு. டி. கோசல்ராம் வயது.65. ஆறுமுகநேரி. 

கால் விரலில் காயம் பட்டு ஆறாமல் புண்ணாகி சீல் பிடித்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 04-10-2023. அன்று மாலை சுமார் 5மணி அளவில் மருத்துவமனையில் 5வது மாடி ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவு -1.



படுக்கை எண்: 6ல். அனுமதிக்கப்பட்டு அன்றே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

மறுநாள் (05-10-2023 அன்று) காலை மருத்துவரின் ஆலோசனையின் பேரில்; இரத்தப்பரிசோதனை மற்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அன்று மாலை இரத்தப்பரிசோதனையின் முடிவு வாங்குவதற்கு சென்ற போது ரெடியாகவில்லை நாளை காலை வந்து பெற்றுக் கொள்ளவும் என்று சொல்லிவிட்டார்கள்.


 இரவு 8மணி அளவில் வந்த மருத்துவர்களில் ஒருவர் இரத்தப்பரிசோதனையின் முடிவு கேட்டார். 


நாளை காலை தருவதாக சொன்னார்கள் என்று சொன்னவுடன் ஒரு தடவைக்கு 10 தடவை சென்று கேட்க வேண்டியதுதானே என்று சொல்லிவிட்டு உன் உதவிக்கு உள்ள ஆள் எங்கே என்று கேட்டார் அவர் வெளியே சென்று உள்ளார் என்று கூறியவுடன்...

 நீ இப்போது செத்துப்போயிட்டினா .

நான் யாரிடம் சொல்வது ஏன் எங்கள் உயிரை வாங்குகிறீர்கள் வீட்டிலேயே போய் சாக வேண்டியது தானே என 

நா கூசும் வார்த்தைகளால் ஆவேசமாக பேசினார்கள்  நோயாளி மனமொடிந்து இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்துள்ளார்.


 06-10-2023. அன்று நான் காலை அவருக்கு காலை உணவு கொடுக்கச் சென்ற போது அருகில் உள்ளவர்கள் கூறினார்கள். உடனே பதறிப்போய் மருத்துவ அதிகாரி ஆர்.எம்.ஒ. சைரஸ் அவர்களிடத்தில் நடந்தவற்றை கூறினேன். 

நீண்ட வருடமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து வருபவர் நோயாளிகள் மேல் அக்கரை காட்ட வேண்டிய ஆ எம் ஒ சைரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  

 09-10-2023. அன்று காலை 9 மணி அளவில் 5பேர் கொண்ட பயிற்சி மருத்துவர்கள் மீண்டும் அவரை மிரட்டினார்கள் நோயாளியான எனது உறவினரிடம் யார்  புகார் அளித்தது என்ன புகார் அளித்தீர்கள் யாரிடம் சொன்னாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது 


அதற்கு நோயாளி தாங்கள் பேசியதை தானே தெரிவித்தேன் என்றிருக்கிறார்.

 இங்கே வராதே   வீட்டிலேயே போய் சாக வேண்டியது தானே என்று மீண்டும்  திட்டியவர்கள் 

 நீ உடனே டிஸ்சார்ஜ் செய்து வெளியில் செல் நான் டியுட்டி மருத்துவரிடம் கூறிக்கொள்கிறேன். என ஆவேசமாக பேசியுள்ளனர். அவர்கள் சொன்ன படி வெளியே ஏற்றி விட்டார்கள்

நிரம்ப வேதனை அடைகிறேன் 

எங்களை போன்ற ஏழைகள் நோய்க்கு செலவு செய்ய பணமின்றி நம்பி வருகிறோம் 

இப்படி பேசினால் எங்கே போவோம் 

நோயாளிகளின் மன நிலை எவ்வளவு பாதிக்கும். ஏன்பதை தாங்கள் அறிவீர்கள்.ஜயா 

ஆகவே தாங்கள் எனது உறவினர் டி. கோசல்ராம் அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டுகிறேன். 

தூத்துக்குடி ர.விவேகானந்தன்

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

.

.


வியாழன், 28 செப்டம்பர், 2023

அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதாஜீவன் பொதுமக்களுடன் 8 கிமீ தூரம் தூத்துக்குடி கடற்கரை சாலை நடந்து வந்தனர்உலக இருதய தினம் முன்னிட்டு இன்று தூத்துக்குடியில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது

தூத்துக்குடி லீக்ஸ் 29-9-2023

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர் 

அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதாஜீவன்பொதுமக்களுடன் 8 கிமீ தூரம் தூத்துக்குடி கடற்கரை சாலை நடந்து வந்தனர் 

உலக இருதய தினம் முன்னிட்டு இன்று 29-9-2023 காலை 6.00 மணியளவில் தூத்துக்குடியில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது 

 


இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி கடற்கரை சாலை தனியார் ஹோட்டல் முன்பிருந்து 'நடப்போம் நலம்பெறுவோம்" எனும் நோக்கில் 8 கி.மீ. தூரம் பொதுமக்கள் கலந்து கொண்ட நடைபயிற்சி நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் தலைமை வகித்தார். 


வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், உள்ளிட்ட பலர் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

அமைச்சர் கொடி அசைப்பு 

      பின்னர் உலக இருதய தினம் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில் முதலமைச்சர் உத்தரவு படி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் மக்கள் நலன்கருதி இதுபோன்று 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 



அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில்...

இங்கு இந்த கடற்கரை சாலை இருபுறமும் கடல்நீருடன் மரங்கள் அடங்கிய ரம்மியமான பகுதியாக உள்ளது. 


2023 அக்டோபர் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தது 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சியை மேற்கொள்கிறார்.

    இரண்டாயிரம் ஆண்டில் உலக இருதய தினம் கடைபிடிக்கப்பட்டு இன்று 23ம் ஆண்டு நடைபெறுகிறது. 

ஓவ்வொரு மனிதர்களுக்கும் நடைபயிற்சி தற்போது உள்ள சூழ்நிலையில் அவசியம் தற்போது குறைந்த வயதில் மாரடைப்பு ஏற்படுகிறது. நமது உணவு பழக்க வழக்கங்களிலும் அதை முறையாக கடைபிடிக்க வேண்டும். நோயற்ற வாழ்வு தான் நமக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் தமிழக கிராமப்புறங்களில் 10999 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாரடைப்பு மரணத்தை தவிர்க்கும் வகையில் முதல்கட்ட சிகிச்சையாக 14வகையான மாத்திரைகள் வழங்கப்பட்டு பல உயிர்கள் காக்கப்படுகின்றன. 


இதுபோன்ற தொலை நோக்கு பார்வையுடன் இந்த துறை முதல்வரின் வழிகாட்டுதலோடு செயல்படுகிறது என்று பேசினார்.

     அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் ....

மக்கள் நலன் தான் முக்கியம் என்ற அடிப்படையில் செயல்படும் முதலமைச்சரின் சிறப்பான பணிகளின் மூலம் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் வகையில் நடைபயிற்சி அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. அதே போல் இதயம் காக்க வேண்டும். என்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெறுகிறது. 


உணவு வகைகள் கட்டுபாடுடன் சத்தான உணவுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். என்று பேசினார். 


பின்னர் பசுமையை வலியுறுத்தி மரக்கன்று நட்டினார்கள்.

.

இருதயம் காப்போம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை அமைச்சர்கள் கீதாஜீவன், சுப்பிரமணியன், தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் எடுத்துக்கொண்டனர். 

விழிப்புணர்வு பேரணி முக்கிய சாலைகள் வழியாக மருத்துவகல்லூரி மருத்துவமணையை சென்றடைந்தது.



நிகழ்ச்சியில் தூத்துக்குடி பொதுமக்கள் உடன் சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு பணிகள் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மருத்துவ கல்லூரி டீன் சிவகுமார், மாவட்ட மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் குமரன், இருதய நோய் கண்காணிப்பாளர் பாலமுருகன், மருத்துவகல்லூரி துணை முதல்வர் கல்யாணி, சுகாதார பணிகள் துறை கூடுதல் இயக்குநர் பொற்செல்வன், மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும் மாநகராட்சி மண்டல தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட மருத்துவ அணிதலைவர் அருண்குமார், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ராமகிருஷ்ணன், சரவணக்குமார், ரெக்ஸின், ஜான், விஜயகுமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, டிஎஸ்பி சத்தியராஜ், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜசேகர், ராஜபாண்டி, மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதர நிலைய ஆய்வாளர் வில்சன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட வனத்துறை அலுவலர் மகேந்திரன், வனத்துறை சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சின்னத்துரை, மாநகர திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் ராமசந்திரன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், வட்டச்செயலாளர்கள் முத்துராஜா, கதிரேசன், பொன்ராஜ், பொன்னுச்சாமி, கங்காராஜேஷ், சுரேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் மீனாட்சி சுந்தரம், ஜெயசிங், வட்டப்பிரதிநிதி ரஜினி முருகன், பாஸ்கர், மற்றும் மணி, மகேஸ்வரசிங், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்

வெள்ளி, 26 மே, 2023

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீ பேரிடர் விழிப்புணர்வு

thoothukudileaks 26-5-2023

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ பேரிடர் சம்பந்தமான விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ பேரிடர் சம்பந்தமான விழிப்புணர்வு  நிகழ்ச்சி இன்று( 26-5-2023) நடைபெற்றது.



🔥 தீ பேரிடர் ஏற்படும் போது அதை மேலும் பரவாமல் தடுக்கும் முயற்சி செய்முறை விளக்கம் நிகழ்த்தி  காட்டப்பட்டது.

 இந் நிகழ்ச்சி யில் மருத்துவ மாணவர்கள் செவிலியர்கள் செவிலிய மாணவியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்


 முதல்வர் டாக்டர் சிவக்குமார்  கண்காணிப்பாளர் டாக்டர் பத்மநாபன் உறைவிட மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெயமணி உதவி உறைவிட மருத்துவர் டாக்டர் சூரிய பிரதிபா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


தீயணைப்புத்துறையில் இருந்து முருகையா  தலைமையில் தீயணைப்பு துறையினர் கலந்து கொண்டார்கள்

புதன், 15 மார்ச், 2023

தூத்துக்குடியில் மனித சங்கிலி விழிப்புணர்வு உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

thoothukudileaks 16-3-2023

news by arunan 

தூத்துக்குடியில் இன்று 16-3-2023 காலை 11மணியளவில்   உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வுக்காக மனித சங்கிலி  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.  




இது பற்றிய செய்தியாவது 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் நடைபெறுகிறது. 

கிளாக்கோமா (GLAUCOMA) என்னும் கண் நீர் அழுத்த நோய் எவ்வித  அறிகுறியும் இன்றி கண் பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடியது. 

இந்நோயை பற்றிய...விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த உலகம் முழுதும் மார்ச் 12 முதல் மார்ச் 18வரை உலக கிளாக்கோமா  வாரமாக கொண்டாடப்படுகிறது.

இந்நோய் எந்த வயதினரையும் தாக்கக்கூடியது ...

என்பதாலும் .....

இது பரம்பரையாக

வரக்கூடிய நோய் என்பதாலும் ....

அனைவரும் முக்கியமாக 40 வயதிற்கு மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்வது அவசியம் என்பதை வலியுறுத்தி, அவ்வாறு கண் நீர் அழுத்தம்

உள்ளோர் கண்டறியப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மருத்துவச் சிகிச்சை பெற்று

பார்வை இழப்பை தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்

இணைந்து இன்று மருத்துவ மனை வளாகத்தில்மருத்துவ மாணவர்கள் செவிலியர்கள் பயிற்சி செவிலியர்கள்

உள்பட இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட  மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

.


இந்நிகழ்ச்சியை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் போராசிரியர் சிவகுமார் எம்டி. டிஏ.  தொடங்கி வைத்தார்கள். இதில் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் பத்மநாபன் துணை கண்காணிப்பாளர் மருத்துவர் குமரன் உறைவிட மருத்துவர். மருத்துவர் சைலஸ் ஜெபமணி துறைத் தலைவர் மருத்துவர் பெரியநாயகி மற்றும் மருத்துவ மாணவர்கள் செவிலியர்கள் பயிற்சி செவிலியர்கள்

உள்பட இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பதானிகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர்.

வியாழன், 24 நவம்பர், 2022

தூத்துக்குடி மாநகரத்தில் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பாக உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு பேரணி

 தூத்துக்குடி டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பாக 

உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி மாநகரத்தில் 25-11-2022 இன்று காலை 7மணி அளவில் நடைபெற்றது.



தூத்துக்குடி லீக்ஸ் 2022நவம்பர் 25

தூத்துக்குடி டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் உலக

நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 


சிறப்புஅழைப்பாளர்.G.சத்தியராஜ் (TPS) Deputy Superindent of Police

தூத்துக்குடி பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர்.பெர்னார்டு

ஆல்பர்ட் ராஜ்குமார், டாக்டர். சக்திவேல், டாக்டர். அஜய் சந்தோஷ் டேவிட் இருந்தனர். 


பின்னர் தூத்துக்குடி டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர்.பெர்னார்டு

ஆல்பர்ட் ராஜ்குமார் தூத்துக்குடி செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:- 

புகை மற்றும் காற்று மாசு கெடும் அதிகமுள்ள தொழிற்சாலை உள்ள நமது மாவட்டங்களில் கண்பார்வை மங்குதல் புரை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

நீரிழிவு நோய் வந்துவிட்டால் அடுத்து கண்பார்வை குறைபாடு தான் ஏற்பட வாய்ப்பு உள்ளது அதற்குள்ளாக கண் பரிசோதித்து கொள்வது அவசியம்.

 ஜந்து வயது சிறு குழந்தைகளுக்கு கூட சத்து குறைபாட்டால் கண்பார்வை குறைபாடு ஏற்படலாம்.பெற்றோர்கள் சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை வழங்க வேண்டும் மேலும் மிகஅதிக வெளிச்சம் தரக்கூடிய பல்புகள் தவிர்க்கவும்அதுபோல் தொலைகாட்சி பெட்டி செல்போன் தொடர்ந்து அதிக நேரம் பார்க்க கூடாது என வலியுறுத்திகிறேன் என்றார்.தூத்துக்குடி டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர்.பெர்னார்டு.

இவ்விழாவில் புனித அன்னை செவிலியர் கல்லூரி மாணவியர்கள்

மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் அனைவரும் விழிப்புணர்வு பேரணியில்

கலந்து கொண்டார்கள்.




புதன், 15 ஜூன், 2022

தூத்துக்குடியில் ரத்த தான வழங்கிய மருத்துவ மாணவர்கள்

 தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் ஒன்று சேர்ந்து நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி தேர்வு அரங்கில் வைத்து 15.06.2022 அன்று காலை 10 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.

முகாமில் கலந்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் இரத்த தானம் வழங்கினார்கள்.


     இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள், பணியாளர் செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து சுமார் 250 அலகு இரத்த தானம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


               முதல்வர் Dr.ராஜேந்திரன், துணை முதல்வர் Dr.கலைவாணி மற்றும் உறைவிட மருத்துவ அதிகாரி  Dr.J.சைலஸ் ஜெயமணி ஆகியோர்  தலைமையேற்று முகாமை துவக்கி வைத்தனர்.

       


       

             இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கினைப்பாளர் Dr.I.இஸ்ரேல் ராஜா ஜான்லி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Dr.சபரி ராஜா, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் Dr.சாந்தி,மாணவப் பிரதிநிதிகள் Dr.விஜய் சூர்யா மற்றும் Dr.ஹேமதர்சினி ஆகியோர் செய்திருந்தனர்.

செவ்வாய், 7 ஜூன், 2022

4 வயது குழந்தையின் தொண்டையில் உலோக டாலர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் கடும் முயற்சி யில் அகற்றம் பெற்றோர் மகிழ்ச்சி

 தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 வயது குழந்தையின் தொண்டையில் உலோகத்தால் ஆன டாலர்  வெற்றிகரமாக அகற்றப்பட்டது.



    தூத்துக்குடியைச் சேர்ந்த நான்கு வயதுக் குழந்தை 06/06/2022 அன்று காலை 8 மணியளவில் கழுத்துச் சங்கிலியில் இருந்து உலோக டாலர் தவறுதலாக விழுங்கிவிட்டதால் உணவு விழுங்குவதில் சிரமம் மற்றும்

 மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 


எக்ஸ்ரே பரிசோதனையில், மேல் உணவுக்குழாய் மட்டத்தில் தொண்டையில் வைர வடிவ உலோக டாலர் கண்டுபிடிக்கப்பட்டது, 


இது குழந்தைக்கு உணவு விழுங்குவதில் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தியது. முதல்வர் டாக்டர். டி. நேருவின் அறிவுறுத்தலின் பேரில், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். சிவசங்கரி, டாக்டர். சந்தானகிருஷ்ணகுமார், டாக்டர். ராபின் ரிச்சர்ட்ஸ் மற்றும் மயக்க மருந்து நிபுணர் குழு டாக்டர். பலராமகிருஷ்ணன், டாக்டர். சுகிர்த்ராஜ் ஆகியோர் அடங்கிய அவசரக் குழுவினர் குழந்தைக்கு முழு மயக்க மருந்து கொடுத்து உணவுக் குழாய் உள் நோக்கு கருவி மூலம் குழந்தையின் தொண்டையில் இருந்து உலோக டாலரை அகற்றினர். 


குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது. இந்த அறுவை சிகிச்சையானது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நோயாளிக்கு இலவசமாக செய்யப்பட்டது. 


முதல்வர் டி.நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திரன், துணை கண்காணிப்பாளர் டாக்டர் குமரன், ஆர்எம்ஓ டாக்டர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ குழுவினரை பாராட்டினர்.

வியாழன், 12 மே, 2022

தூத்துக்குடியில் உலக செவிலியர் தினம்

உலக செவிலியர் தினம் - 2022
 

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர் துறையில்
25 ஆண்டுகளுக்கு மேலாக சேவை புரிந்த செவிலியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ்
பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.



மரு.D. நேரு MD(GM)., DMRD 
( முதல்வர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை)
தலைமையில்,
. V. முத்துலெட்சுமி
(செவிலயர் கண்காணிப்பாளர் தரம்-1, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை)
முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  மரு. கி. செந்தில் ராஜ் இ.ஆ.ப., 
செவிலியர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி
விழா பேருரையாற்றினார்.


இவ்விழாவில் மருத்துவர்கள், செவிலிய போதகர்கள், கலந்துகொண்டார்கள்

முன்னதாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

நாள் : 12-05-2022, வியாழக்கிழமை
நேரம் : காலை 8.00 மணியளவில்
நிகழ்ச்சி தொடங்கியது
தமிழ்தாய் வாழ்த்து
குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்
வரவேற்புரை
. சீ. செல்வம்
இணைச் செயலாளர்,
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம். தூத்துக்குடி கிளை
(செவிலியர் TKMCH)
தலைமையுரை
: மரு. D. நேரு MD(GM)., DMRD அவர்கள்
( முதல்வர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை)


சான்றிதழ் வழங்கி
விழா பேருரை
மரு.கி.செந்தில் ராஜ் இ.ஆ.ப., 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்




சிறப்புரை
:. J. ஹெப்சி ஜோதிபாய் 
தலைவர், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம். தூத்துக்குடி கிளை
(செவிலியர் கண்காணிப்பாளர் தரம்-II TKMCH)
. A. சுப்புலெட்சுமி B.Sc.(N) அவர்கள்
முதல்வர், செவிலியர் பயிற்சி பள்ளி, தூத்துக்குடி
நன்றியுரை  த. அமுதா ராணி 
செவிலியர் கண்காணிப்பாளர் தரம்-II TKMCH)

தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைரஸ் 
நிகழ்ச்சி முடிவில் நாட்டுப்பண்

இவ்விழாவில்
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்
கிளை : தூத்துக்குடி மாவட்டம் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

ஞாயிறு, 8 மே, 2022

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக தலசீமியா தினம் விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி லீக்ஸ் நாள்: 09.05.2022

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
உலக தலசீமியா தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., 
தலைமையில் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக தலசீமியா தினம்
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் நேற்று
(08.05.2022) கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் 
குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, தலசீமியா நோயாளிகளை ஊக்குவிக்கும் விதமாக
பரிசுப்பொருட்கள் வழங்கி அவர்களிடம் தலசீமியா நோய் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தினார்.


நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., 
பேசியதாவது:
தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன். தலசீமியா நோய் எப்படி ஏற்படுகிறது, அதனை தடுப்பது எப்படி
என்பது குறித்து மக்களிடையே விழிப்பணாவு ஏற்படுத்த ஆண்டுதோறும் மே மாதம் 8 ஆம்
தேதியை உலக தலசீமியா தினம் கொண்டாடப்படுகிறது.


 தலசீமியா இன்டர்நேஷனல்
/பெடரேஷன் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதியை உலக தலசீமியா தினமாக
அறிவித்தது. 


இந்த நோயின் தீவிரத்தன்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்
என்பதால், இதற்காக ஒரு தினத்தை அறிவித்து, TIF அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நோயைப்
பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.



இந்த ஆண்டு, உலக தலசீமியா தினத்துக்கான கருப்பொருள், "விழிப்புணர்வு,
பகிர்தல் மற்றும் பராமரித்தல்: தலசீமியா பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு சமூகத்தில்
ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகும். தலசீமியா பரம்பரை நோய் என்பதால், பலரும்
தெரியாமலேயே தங்களின் குழந்தைக்கு இந்த நோய் ஏற்படக் காரணமாக உள்ளனர்.


முறையான சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், நோயால் பாதிக்கப்படும்
குழந்தைகளின் எண்ணிகையை குறைக்க வேண்டும்.
பலருக்கும், இப்படியொரு மரபணு நோய் இருப்பது தெரியாமல் இருக்கலாம். எனவே,
இதைப் பற்றி பலருக்கும் சென்றடைய வேண்டும் என்று விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. 



தீவிர தலசீமியா பாதிப்புடன் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் 10,000
முதல் 15,000 குழந்தைகள் பிறப்பதாக இந்திய தேசிய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.



உலக அளவில், பாதிப்படைந்த குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 300,000 முதல் 500,000
ஆக அதிகரிக்கிறது. மேலும், இந்தியாவில் தோராயமாக 67,000 நோயாளிகள் பீட்டா
தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



ஹீமோகுளோபின் தொடர்பான நோய்களை விரைந்து கண்டுபிடிப்பதற்கும், அதற்கு
தேவையான சிகிச்சை அளிப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறன்றன. இந்தியாவில் 4 முதல் 5 சதவீதம் பேருக்கு தலசீமியா நோய்
இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. 

மரபணு மூலம் 3 முதல் 4 சதவீத மக்களுக்கு இந்த
நோய் வருகிறது. எனவே இந்த நோய் வராமல் தடுப்பதற்கு மருத்துவ துறையினர் பல்வேறு
நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 



நாம் இரத்த உறவு சம்பந்தப்பட்ட
சொந்தங்களில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் அனைவரும்
திருமணத்திற்கு முன்பு மரபு வழி நோய்கள் தங்களுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா
என்று மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்த பின்னர் திருமணம் செய்து கொள்ள
வேண்டும்.


தலசீமியா நோய்க்கான நவீன சிகிச்சை முறைகள் சென்னை அரசு மருத்துவ கல்லூரி
மருத்துவமனையில் உள்ளது. 

தூத்துக்குடி உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களுக்கும் இந்த
வசதிகள் விரைவில் கிடைக்கப்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அதிக அளவில் தலசீமியா நோய் பாதிப்பு
உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 


தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் இந்த
நோய் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து பொது சுகாதாரத்துறையினர் தேவையான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இரத்தம் அதிகளவில்
தேவைப்படுவதால் தன்னார்வலர்கள் இரத்த தானம் செய்வதற்கு அதிகளவில் முன்வர
வேண்டும். 


இதுதொடர்பாக மக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மருத்துவர்களும்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஒவ்வொரு மாதமும் விழிப்புணர்வு நிக்ச்சிகள் நடத்த
வேண்டும். 


அடுத்த ஆண்டு தலசீமியா தினம் கொண்டாடுவதற்கு முன்பு தலசீமியா பாதித்த
குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கும்
அளவிற்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளர வேண்டும் என
பேசினார்.



நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்
மரு.நேரு, துணை கண்காணிப்பாளர் மரு.மு.குமரன், உறைவிட மருத்துவர் மரு.து.சைலஸ்
ஜெபமணி, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி
வட்டாட்சியர் திரு.செல்வக்குமார், துறைத்தலைவர் மரு.ஏ.அருணாசலம், மருத்துவர்கள்,
செவிலியர்கள் மற்றும் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கலந்து
கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.

செவ்வாய், 3 மே, 2022

உலக ஆஸ்துமா தினம் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்மூச்சு இளைப்பு திணறல் நோய் பற்றி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

ஆஸ்துமா எனப் படும் மூச்சு இளைப்பு திணறல் நோய்  குறித்து உலக ஆஸ்துமா தினம் இன்று கடைபிடிக்க படுகிறது.

தூத்துக்குடி மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை ஆஸ்துமா தினத்தையொட்டி ..இன்று ( 3-4-2022 )காலை 10மணியளவில் சுவாச சிகிச்சை பிரிவு மாணவமாணவிகள் மற்றும் செவிலியர் ஆகியோர் கலந்து கொண்ட ஆஸ்துமா நோய் வராமல் தடுக்கும் விழிப்புணர்வு பற்றி கூட்டம் நடைபெற்றது.

இந்த நோய் குறித்து துறை தலைவர் டாக்டர் சங்கமித்ரா பேசியதாவது:-

 ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுதே மருத்துவரிடம் காண்பித்தால் அவர்கள் நெபுலைசர் மூலமாக அந்த சிகிச்சை அளிக்க முடியும் என்று எடுத்துக் கூறினார்.




 மாத்திரைகளும், ஊசி மருந்துகளும் அதற்கான  சுவாச பயிற்சி மற்றும் சுவாச இயன் முறை சிகிச்சைகள் உண்டு.


 மேலும் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் செலுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.


 புகைபிடித்தல் ரசாயன  புகை களுக்கு எக்போஸ் ஆகுதல் மற்றும் தூசி மற்றும் பணியின் காரணமாக நுரையீரல் பாதிக்கப்படும் போதும் இது ஏற்பட வாய்ப்பிருக்கிறது.


 பரம்பரையாக அலர்ஜி ( ஒவ்வாமை) காரணமாக ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது என்றார்.



நெஞ்சக நோய் மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் சங்கமித்ரா,முதல்வர் டி நேரு , உறைவிட மருத்துவர் டாக்டர் ஜே சைலஸ் ஜெபமணி அவர்கள் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் செவிலியர் மற்றும்  சுவாச சிகிச்சை பிரிவு மாணவர்கள் பங்கேற்றார்கள்.

சனி, 30 ஏப்ரல், 2022

நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை திட்டத்தின் கீழ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இம்மாத நடவடிக்கை

 நம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் "நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை" என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள்  இந்த மாதம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ளன.  



 மருத்துவமனையில் ஏற்படக்கூடிய கிருமித்தொற்றை கட்டுப்படுத்துவது மற்றும் நோயாளிகளை திருப்திப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கங்கள் ஆகும். 

இதன் ஒரு பகுதியாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதர்கள் மற்றும் தேங்கி இருக்கும் இதர கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.  



சுத்தப்படுத்துதல் வீடியோ பார்க்க

மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் தொற்று பாதிப்பு அபாயத்தை கணக்கு செய்து துப்பரவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.


மஞ்சள் பை வீடியோ பார்க்க 

 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிளாஸ்டிக் தடை மற்றும் மஞ்சப்பை இயக்கம் குறித்து ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவு செய்துள்ளனர். 


மேலும் மருத்துவமனை நிர்வாகம் இந்தத் திட்டத்தினை தொடர்ந்து வெற்றிகரமாக செய்ய ஆவண செய்யப்படும் என்று உறுதி கூறியுள்ளனர். 

As part of Clean Hospital Campaign, in  Government Thoothukudi Medical College Hospital, cleaning and disinfection of whole hospital premises are being done throughout the month of April. The main aim of this campaign is to prevent Hospital acquired infections by eliminating disease causing organism in the environment,

to improve the Patient satisfaction and overall experience during their visit/stay in the hospital and to

improve the aesthetics and appearance of the Government Hospital. As part of this campaign, various activities like clearing of bushes, cleaning and disinfection of all over head tanks and sumps, clearance of debris and condemned things and scheduled cleaning by calculating the risk stratification of areas are being done. An awareness video on plastic ban and Meendum manja pai is done by the students of Thoothukudi Medical College. Today being the last day of the drive month, mass cleaning is being done. All efforts are done by the hospital administration to make the clean Hospital Campaign activities sustainable and successful.