thoothukudileaks 16-3-2023
news by arunan
தூத்துக்குடியில் இன்று 16-3-2023 காலை 11மணியளவில் உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வுக்காக மனித சங்கிலி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
இது பற்றிய செய்தியாவது
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் நடைபெறுகிறது.
கிளாக்கோமா (GLAUCOMA) என்னும் கண் நீர் அழுத்த நோய் எவ்வித அறிகுறியும் இன்றி கண் பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடியது.
இந்நோயை பற்றிய...விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த உலகம் முழுதும் மார்ச் 12 முதல் மார்ச் 18வரை உலக கிளாக்கோமா வாரமாக கொண்டாடப்படுகிறது.
இந்நோய் எந்த வயதினரையும் தாக்கக்கூடியது ...
என்பதாலும் .....
இது பரம்பரையாக
வரக்கூடிய நோய் என்பதாலும் ....
அனைவரும் முக்கியமாக 40 வயதிற்கு மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்வது அவசியம் என்பதை வலியுறுத்தி, அவ்வாறு கண் நீர் அழுத்தம்
உள்ளோர் கண்டறியப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மருத்துவச் சிகிச்சை பெற்று
பார்வை இழப்பை தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்
இணைந்து இன்று மருத்துவ மனை வளாகத்தில்மருத்துவ மாணவர்கள் செவிலியர்கள் பயிற்சி செவிலியர்கள்
உள்பட இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
.
இந்நிகழ்ச்சியை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் போராசிரியர் சிவகுமார் எம்டி. டிஏ. தொடங்கி வைத்தார்கள். இதில் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் பத்மநாபன் துணை கண்காணிப்பாளர் மருத்துவர் குமரன் உறைவிட மருத்துவர். மருத்துவர் சைலஸ் ஜெபமணி துறைத் தலைவர் மருத்துவர் பெரியநாயகி மற்றும் மருத்துவ மாணவர்கள் செவிலியர்கள் பயிற்சி செவிலியர்கள்
உள்பட இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பதானிகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக