கனிமொழி எம்.பி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனிமொழி எம்.பி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஜனவரி, 2026

சென்னையில் கனிமொழி எம்.பிக்கு அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி பிறந்தநாள் வாழ்த்து

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி


தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுத் தலைவரும், தென் மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பியை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

thoothukudileaks


அதன்படி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், கனிமொழி எம்.பியை அவரது சென்னையிலுள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இந்த சந்திப்பின்போது தூத்துக்குடி மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப் உடனிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி, கனிமொழி எம்.பியை நேரில் சந்தித்து இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த சந்திப்புகள் கட்சித் தொண்டர்களிடையே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

திங்கள், 10 நவம்பர், 2025

தூத்துக்குடியில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, நவம்பர் 11:

ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு (S.I.R) திட்டத்தை எதிர்த்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.







தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள 12-வது வாசல் மைதானத்தில் நடைபெற்றது.

மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


இந்திய தேர்தல் ஆணையம் சுயாதீனமாக செயல்பட வேண்டியது அவசியம் என்றும், ஜனநாயக அமைப்புகள் பாஜக அரசின் அழுத்தத்தில் இயங்கக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.





வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர சீராய்வு மூலம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இது ஜனநாயக விரோதமான நடவடிக்கை என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் குற்றம் சாட்டினர்.


தூத்துக்குடி லீக்ஸ், 

செவ்வாய், 20 மே, 2025

கனிமொழி எம்.பி.க்கு தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு

 #தூத்துக்குடி லீக்ஸ் செய்தி

Tamil Nadu updates, photo news by sunmugasuthram press club president 


தூத்துக்குடி, மே 20:

 இந்தியாவின் நிலைப்பாடுகளை வெளிநாடுகளில் எடுத்துரைக்கும் பணிக்காக தேர்வான திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.க்கு தூத்துக்குடி திமுகவினர் பாராட்டு விழா அளித்தனர்.



சமீபத்தில் பாகிஸ்தானில் இந்திய சுற்றுலாப் பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை உருவாக்கியது. இச்சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் இருதரப்பிலும் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டன. பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டது.


தற்போது, தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு விளக்கும் பொருட்டு ஒன்றிய அரசால் பல கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இடம்பெற்றுள்ள திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. நேற்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.



அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்  முன்னிலையில், திமுக பகுதி செயலாளரும் மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவருமான சுரேஷ்குமார், திமுக வட்டச் செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ரவிந்திரன், மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர் ஜேஸ்பர், லிங்கராஜா உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

ஞாயிறு, 30 மார்ச், 2025

தூத்துக்குடியில் புத்தொழில் களம் – இளைஞர்களுக்கான புதிய முயற்சிஇலட்சியத்தை நோக்கி – கனிமொழி கருணாநிதி!!!

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடியில் புத்தொழில் களம் – இளைஞர்களுக்கான புதிய முயற்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் 

கனிமொழி கருணாநிதி தலைமையில் "புத்தொழில் களம்" என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 


தூத்துக்குடி இளைஞர்களின் திறமையை வெளிக்கொணரவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முன்னெடுப்பு ஏப்ரல் 5, 2025 அன்று தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெறும். இதில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மீன்வளத்துறை அமைச்சர்  அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

புத்தொழில் களம் - வாய்ப்புகள் வெளிச்சம்
18 முதல் 35 வயது வரையிலான தொழில் முனைவோர்களை இலக்கு கொண்டு, சமூக மாற்றம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முயற்சியாக "புத்தொழில் களம்" அமைகிறது. தேர்ந்தெடுக்கப்படும் மூன்று சிறந்த திட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.


நடுவர் குழுவில் ...

Naturals Beauty Salon India Pvt. Ltd. நிறுவனத்தின் இணை நிறுவனர்  சி.கே. குமரவேல், CIEL HR Services Pvt Ltd மற்றும் Ma Foi Foundation and Groups இணை நிறுவனர்  லதா பாண்டியராஜன், Pearl Shipping Agencies நிறுவனர் . ஆர். எட்வின் சாமுவேல் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.



இலட்சியத்தை நோக்கி – கனிமொழி கருணாநிதி
"தூத்துக்குடி இளைஞர்களின் கனவுகளையும் திறமையையும் நம்புகிறேன். 


நமது மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இந்த முயற்சி முக்கிய பங்கு வகிக்கும்" என கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்
தேசிய இளைஞர் தினத்தில் தொடங்கிய இந்த முயற்சிக்கு 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இறுதிப் போட்டியாளர்களின் பட்டியலை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

நிகழ்வு விவரங்கள்:
தேதி: 5 ஏப்ரல் 2025 (சனிக்கிழமை)
இடம்: தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையம்

தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் "புத்தொழில் களம்" நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று திரு. கனிமொழி கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

சனி, 29 மார்ச், 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates 

News by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் - 100 நாள் வேலை திட்ட நிதி வழங்காமை குறித்துப் புகார்

இது பற்றிய செய்தியாவது:-

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, 100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி வழங்காமையை எதிர்த்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (29/03/2025) சனிக்கிழமை நடைபெற்றது.



கனிமொழி எம்பி!!!

இந்த ஆர்ப்பாட்டத்தில் ....

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி  கண்டன உரையாற்றி, பாஜக அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.




இந்நிகழ்வில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான  கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நகர் மன்றத் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.


அரசு நிதி வழங்காமை காரணமாக ஏழை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதை கண்டித்தனர். 

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!


சம்பள காசை திருடாதே!

ஏழைகள் வயிற்றில் அடிக்காதே!

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!"


தமிழக மக்கள் நலனுக்காகவே இந்த போராட்டம் நடத்தப்பட்டது என்று  வலியுறுத்தினர்.


புதன், 19 மார்ச், 2025

மன்னார் வளைகுடாவில் ஆழ்துளை நடவடிக்கைகள்: மீனவ உயிர்வாழ்வுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தல் – திட்டத்தைக் கைவிட வேண்டும் என நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

 Tamil Nadu updates photo news by Arunan journalist 19-3-2025

நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச் 19) பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி., மன்னார் வளைகுடாவில் ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள கடல்சார் ஆழ்துளை நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.



ஹைட்ரோகார்பன் ஏல திட்டம்:
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், 2025, பிப்ரவரி 11 அன்று, OALP- ஏல சுற்று-10 மூலம் புதிய எரிவாயு மற்றும் பெட்ரோலிய வளங்களை ஏலம் விட அறிவித்தது. இதில் மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் மற்றும் பாக் விரிகுடா உள்ளிட்ட பகுதிகள் அடங்கியுள்ளன.

சுற்றுச்சூழல் பாதிப்பு:
மன்னார் வளைகுடா பகுதி பவளப்பாறைகள், கடல் புல் படுகைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், தீவுகள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளால் வளமானது. இது 560 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இந்த ஏல திட்டம், இந்தியாவின் முதல் டுகோங் (கடல் பசு) பாதுகாப்பு காப்பகத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும்.


மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தல்:
மீன்பிடி தொழில் வாழ்வாதாரமாக கொண்டுள்ள ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கு இந்த ஆழ்துளை திட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கடல்சார் அகழ்வுப் பணிகள் கடல் உயிரினங்கள், மீன் கூட்டங்கள் மற்றும் கடல்சார் பொருளாதாரத்துக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு:
மாநில அரசிடம் ஆலோசனை கூட செய்யாமல் இந்த ஏலத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 4-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

கோரிக்கை:


“மன்னார் வளைகுடா போன்ற பல்லுயிர் வளம் மிக்க பகுதிகளை OALP ஏலத் திட்டத்திலிருந்து நீக்க வேண்டும். சுற்றுச்சூழலும், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும்” என கனிமொழி கருணாநிதி எம்.பி. வலியுறுத்தினார்.

புதன், 12 மார்ச், 2025

தூத்துக்குடியில் ஷேர் ஆட்டோ சேவைகள் வழங்க நடவடிக்கை தேவை தூத்துக்குடி பொது மக்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

 Tamil Nadu updates,12-3-2025

தூத்துக்குடியில் ஷேர் ஆட்டோ சேவைகள் வழங்க நடவடிக்கை தேவை

தூத்துக்குடி நகரில் போக்குவரத்து சிக்கல்களை தீர்க்கும் ஒரு முக்கிய தீர்வாக, ஷேர் ஆட்டோ சேவைகளை செயல்படுத்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்கள் தங்கள் தினசரி பயணங்களை எளிதாக மேற்கொள்ளும் வகையில், நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் ஷேர் ஆட்டோ சேவைகள் மிகவும் அவசியமாகியுள்ளது.



தூத்துக்குடி மாநகரில் ஷேர் ஆட்டோ 25 ஒடுவதாக தெரிய வருகிறது 


மாநகர் வெவ்வேறு பகுதி நிறுத்தம் புறப்பட்டு வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு பகுதி செல்ல வேண்டும் 

தெற்கு வடக்கு மேற்கு பகுதிகளுக்கு செல்வதே இல்லை!!!

ஆனால்?

இவை அனைத்தும் ஒரே ரூட் 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பிருந்தே போக்குவரத்து இடைஞ்சலாக ஒரே வழிப்பாதை கிழக்கு திரேஸ்புரம் நோக்கி மட்டுமே செல்கின்றன மீண்டும் பேருந்து நிலையம் வருகிறது????




தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் 

முன் கிளம்பி செல்வது போல

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முகப்பு ..சாந்தி பேக்கரி முன் இருந்து கிளம்ப வேண்டும் 


செயல் படுத்த வேண்டிய முக்கிய வழித்தடங்கள்:

  • வடக்கு: தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் –சாந்திபேக்கிரி ஆரம்பித்து... முத்தம்மாள் காலனி –சங்கரபேரி- ஏபிசி மகளிர் கல்லூரி – நிலாச்சி புட்ஸ் – மூக்கு ரோடு  மீண்டும் பேருந்து நிலையம் 

  • தெற்கு: பழைய மாநகராட்சி – ஃபயர் ஸ்டேஷன் – காரப்பேட்டை – ஆண் பள்ளி – லயன்ஸ் டவுன் – ஜார்ஜ் ரோடு – காமராஜர் கல்லூரி மீண்டும் பேருந்து நிலையம் 
  • மேற்கு: அரசு மருத்துவமனை – பாலிடெக்னிக் – மூன்றாவது மைல் – புதுக்குடி – கலெக்டர் அலுவலகம் – அய்யன் அடைப்பு – மறவன் மடம் மீண்டும் பேருந்து நிலையம் 

  • கிழக்கு: புதிய மாநகராட்சி -அண்ணா பேருந்து நிலையம் ஆரம்பித்து..
  • ரயில்வே நிலையம் – பழைய துறைமுகம் – சென்ட் மேரிஸ் கல்லூரி – திரேஸ்புரம் – கருப்புபட்டி – சாமுவேல் புரம் – அமெரிக்கன் ஆஸ்பத்திரி  மீண்டும் பேருந்து நிலையம் 

தூத்துக்குடி நகரில் இதற்கான உகந்த நடவடிக்கைகளை எடுக்க நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து துறை மற்றும் மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்தும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் கீதா ஜீவன், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் முன்வர வேண்டும்.

பொதுமக்கள் வேகமான, வசதியான மற்றும் குறைந்த செலவில் பயணிக்க இத்தகைய சேவைகள் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 17 பிப்ரவரி, 2025

நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம்: கனிமொழி எம்.பி.

Tamil Nadu updates, photo Arunan 

News by sunmugasuthram Reporter


நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம்: கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, ஓய்வு பெற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு சேமநலநிதி வட்டித்தொகை வழங்கும் விழா தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகிக்க, மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். 



தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வரவேற்புரையாற்றினார். பின்னர் 555 ஓய்வு பெற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு ரூ.1,48,28,383 மதிப்புள்ள சேமநலநிதி வட்டித்தொகையை வழங்கி, கனிமொழி எம்.பி. பேசினார்.



குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம்

கனிமொழி எம்பி பேசுகையில்,....

 "நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் எல்லோருக்கும் முக்கியம். குழந்தைப் பருவத்தில் காது குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை முக்கியமானது. 


"குறிப்பாக நம் பகுதிகளில் இந்த குறைபாடுகள் அதிகமாக உள்ளன. உறவினர்களுக்குள் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார்."


மேலும், "சாலையோர வியாபாரிகள் எந்த வித இடையூறும் இன்றி வியாபாரம் செய்ய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக வட்டியில்லாத கடன் மற்றும் உதவித்தொகை வழங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய இது உதவும்" என்று கூறினார்.



மாநகராட்சி மருத்துவ வசதிகள் மேம்பாடு

அமைச்சர் கீதாஜீவன் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி பேசுகையில், "தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எல்லோருக்கும் அனைத்து தேவைகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் திராவிட மாடல் ஆட்சியை செயல்படுத்தி வருகிறார். 400 கோடி நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன.



மாநகராட்சி மருத்துவ சேவைகளை மேம்படுத்த அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளடங்கிய தளங்களை உருவாக்கப்பட்டுள்ளது.



 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய, மாநில அரசு இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 


மேலும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்கு அரசு வழங்கும் உதவித் தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.




பங்கேற்றோர் மற்றும் முன்னிலை வகித்தோர்

இந்த விழாவில் மருத்துவ கல்லூரி டீன் சிவக்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி இணை ஆணையர் சரவணக்குமார், உதவி ஆணையர்கள், பொறியாளர்கள், நகராட்சி அதிகாரிகள், மாவட்ட திமுக நிர்வாகிகள், சமூக நல அமைப்பினர், பொதுமக்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமுதாய அமைப்பாளர் சரவண பாமா நன்றியுரை வழங்கினார்.


வியாழன், 6 பிப்ரவரி, 2025

கனிமொழி கருணாநிதி எம்.பி. அதிரடி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!

நமோ டிரோன் தீதி திட்டம் பெண்களுக்கு பலன் அளித்திருக்கிறதா? கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!

                                                                                   கனிமொழி எம்பி கேட்ட  கேள்வி விவரமாவது:-

                                                                                                     “நமோ டிரோன் தீதி திட்டத்தின் கீழ்  பலன் பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை என்ன?  

இந்தத் திட்டத்தின் துவக்கத்தில் இருந்து  வழங்கப்பட்ட மானியம் குறித்த விவரங்கள்  மாநில வாரியாக என்ன?  

                                                                                                                                                                                 இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று  டிரோன் பைலட் உரிமங்களை பெற்ற  எஸ்சி-எஸ்டி- ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் விவரங்கள், தமிழ்நாடு உள்ளிட்ட  மாநில  வாரியான விவரங்கள்;

                                                                                                                                                                               இந்தத் திட்டத்தால் பெண்களின் வருமானம், அதிகாரமளித்தல் மற்றும் விவசாய உற்பத்தித்திறனில்  ஏற்பட்ட தாக்கத்தை மதிப்பிடுவதற்கு அரசாங்கம் ஏதேனும் ஆய்வு நடத்தியதா?  

                                                                                                                                                                அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இல்லையென்றால், அதற்கான காரணங்கள்?” ஆகிய கேள்விகளை திமுக  நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி. எழுத்துபூர்வமாக கேட்டிருந்தார்.

     


                                                                                                                                                                         இந்தக் கேள்விகளுக்கு ஒன்றிய அரசின்  விவசாய மற்றும் விவசாயிகள் நலன் துறையின் இணையமைச்சர்  ராம்நாத் தாகூர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்,.....

                                                                                                                                                                         ”பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்களுக்கு  பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களைப் பயன்படுத்துவதற்காக   டிரோன்களை வழங்கும் ஒன்றிய அரசின் திட்டம்தான் நமோ டிரோன் தீதி திட்டம். 

                                                                                                                                                                                      2023-24 முதல் 2025-26 வரையிலான 3 ஆண்டுகளில்  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  15,000 ட்ரோன்களை வழங்கி  நிலையான வணிகம் மற்றும் வாழ்வாதாரத்துக்காக உதவி செய்யும் நோக்கில் இத்திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.   

                                                                                                                                                                                               2023-24 ஆம் ஆண்டில் முன்னணி உர நிறுவனங்கள்  தங்கள் உள் வளங்களைப் பயன்படுத்தி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1094 டிரோன்களை வழங்கியிருக்கின்றன.


 இந்த 1094 டிரோன்களில் 500 டிரோன்கள் நமோ தீதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

                                                                                                                                                                          இவற்றில்  கர்நாடகாவில் 145 பெண்களுக்கும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 128 பெண்களுக்கும், ஆந்திராவில் 108 பெண்கள், ஹரியானாவில் 102 பெண்கள், மத்தியப் பிரதேசத்தில் 89 பெண்கள், தெலங்கானாவில் 81 பெண்கள், குஜராத்தில் 58 பெண்கள், கேரளாவில் 51 பெண்கள், தமிழ்நாட்டில் 44 பெண்கள் என்ற வகையில்  டிரோன்கள் வழங்கப்பட்டுள்ளன. 

                                                                                                                                                                            தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரியம் அளித்த தகவல்படி 2023-24 ஆம் ஆண்டில் திருப்பூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாரூர், அரியலூர், ஈரோடு, பெரம்பலூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, தேனி, நாமக்கல், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி,  திண்டுக்கல்,  கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர்,  திருநெல்வேலி,  கோயம்புத்தூர். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த    மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு 44 டிரோன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 


 "இவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் ’கனிமொழி மகளிர் சுய உதவிக் குழு’வைச் சேர்ந்த உஷா லட்சுமி என்ற பெண்ணுக்கு டிரோன் வழங்கப்பட்டுள்ளது."

                                                                                                                                                                               தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட 44 பேர்களில்  9 பேர் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 35 பேர் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

                                                                                                                                                                                        2023-24 ஆம் ஆண்டில் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட 500 டிரோன்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு  பெங்களூருவில் இருக்கும் வேளாண் மேம்பாடு மற்றும் கிராமப்புற மாற்ற மையத்திடம் (ADRTC) ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


அங்கிருந்து   கிடைத்த முதல் கட்ட தகவல்கள்படி, ..

 டிரோன் பயன்படுத்துவதால் தண்ணீர் சேமிப்பு, தொழிலாளர் கூலி சிக்கனம், பூச்சிக்கொல்லி-உரம் சிக்கனம், உற்பத்தித் திறன் ஆகியவை மூலம்  ஏக்கருக்கு 400 ரூபாய் லாபம் கிடைப்பதாக தெரிவித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

பின்தங்கிய மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டாம்: ஒன்றிய பட்ஜெட் குறித்து கனிமொழி எம்.பி கடும் விமர்சனம்

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

சென்னை, பிப். 2-


ஒன்றிய அரசின் பட்ஜெட் பாட்னா மாடலில் அமைந்துள்ளதாகவும், தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களை பின்தங்கிய நிலைக்கு தள்ளும் அபாயம் உள்ளதாகவும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி எச்சரித்துள்ளார்.


ஒன்றிய பட்ஜெட் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

"பிகார் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதை எதிர்க்கவில்லை. 



ஆனால் பாஜக கூட்டணிக்குள்ளேயே ..

வட-தென் பாகுபாடு காணப்படுகிறது. தென்னிந்திய கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை" என்றார்.


"தமிழகம் ஒரு ரூபாய் வருவாய் ஈட்டினால் 29 பைசா மட்டுமே திரும்ப கிடைக்கிறது. 


ஆனால் பிகார் ஒரு ரூபாய்க்கு ஏழு ரூபாய் பெறுகிறது. 


மக்கள்தொகை கட்டுப்பாடு, மனித வள மேம்பாடு போன்றவற்றில் சிறப்பாக செயல்படும் தமிழகத்திற்கு இது அநீதி" என விமர்சித்தார்.


"வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது புரிகிறது. 


ஆனால் பிற மாநிலங்களை புறக்கணிப்பது ஏற்புடையதல்ல. தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களை பின்தங்கிய நிலைக்கு தள்ள வேண்டாம் என்பதே எங்கள் கோரிக்கை" என்று கனிமொழி வலியுறுத்தினார்.


மாநில அளவில் கோயம்புத்தூர் போன்ற வளர்ந்த மாவட்டங்களுக்கும் திட்டங்கள் வழங்கி, அதே நேரம் பின்தங்கிய மாவட்டங்களுக்கும் நியாயமான நிதி ஒதுக்கீடு செய்வது போல, ஒன்றிய அரசும் சமச்சீர் வளர்ச்சியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


நடுத்தர வர்க்கத்தினருக்கான வருமான வரி சலுகை வரவேற்கத்தக்கது என்றாலும், அதில் உள்ள குழப்பங்களுக்கு நிதியமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கனிமொழி தெரிவித்தார்.

வியாழன், 30 ஜனவரி, 2025

கனிமொழி எம்பி பங்கேற்பில் ஏ.பி.சி மகாலெட்சுமி பெண்கள் கல்லூரியின் பொன்விழா விழா கோலாகலம்

 #தூத்துக்குடி லீக்ஸ்

Tamil Nadu updates, photo news

 by Arunan journalist 

30 ஜனவரி 2025, வியாழக்கிழமை



## கனிமொழி எம்பி பங்கேற்பில் ஏ.பி.சி மகாலெட்சுமி பெண்கள் கல்லூரியின் பொன்விழா விழா கோலாகலம்



தூத்துக்குடி: தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள ஏ.பி.சி மகாலெட்சுமி பெண்கள் கல்லூரியின் பொன்விழா விழா இன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான  கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் சிறப்புரையாற்றினார்.




 மேலும், கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட உள்ள ஆடிட்டோரியம் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவையும் நிகழ்த்தினார்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக:

-  அமைச்சர்  கீதா ஜீவன்

-  அமைச்சர்  அனிதா இராதாகிருஷ்ணன்

- மாநகராட்சி மேயர்  ஜெகன் பெரியசாமி

- கல்லூரி தலைவர்  ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம்

- காங்கிரஸ் மாநில துணைத் தலைவர்  ஏ.பி.சி.வி.சண்முகம்

- கல்லூரி முதல்வர்  கே.சுப்புலெட்சுமி


ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சனி, 4 ஜனவரி, 2025

கனிமொழி பிறந்தநாள் விழா: தூத்துக்குடியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

Tamil Nadu updates 

Photo news by Arunan journalist 

தூத்துக்குடியில்...

கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில்.. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து அங்கு உள்ள பொதுமக்கள் பயணிகளுக்கு லட்டு வழங்கினார்கள் .



பின்னர் 

கனிமொழி எம்பி பிறந்த நாள் முன்னிட்டு தூத்துக்குடியில்  இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.




இது பற்றிய செய்தியாவது:- 

திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்பியுமான கனிமொழி கருணாநிதி, 1968 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி பிறந்தார்.  2025 ஆம் ஆண்டின் ஜனவரி 5 அன்று, அவர் தனது 57வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 


கனிமொழி கருணாநிதி, முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் மகளும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் சகோதரியும் ஆவார். 

அவர் கவிஞர், பத்திரிகையாளர், மற்றும் அரசியல்வாதியாக பல்வேறு துறைகளில் பங்களித்து வருகிறார்.


 2019 முதல் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக பணியாற்றி வருகிறார்.


தூத்துக்குடி மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர், திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.

தூத்துக்குடியில்...

  #கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா: 

தூத்துக்குடியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் !!!

தூத்துக்குடி லீக்ஸ், ஜன.5-

தி.மு.க. நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வி.எம்.எஸ். நகரில் உள்ள கிங் ஆப் கிங்ஸ் பள்ளி வளாகத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.



இந்த சிறப்பு மருத்துவ முகாமை  தொடங்கி வைத்து. ... அப் பகுதியில் இனிப்பு கேக் 🍰 வெட்டி கொண்டாடினார்.








 🏕️ முகாமில்..தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

இலவச மருத்துவ முகாம்!!!

மதுரையின் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை வாசன் ஜ கேர் மருத்துவமனை ஆகியவற்றின் சிறப்பு மருத்துவர்கள் குழு பங்கேற்று பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.


 இந்த முகாமில் பல்வேறு துறை மருத்துவர்கள் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.





"பொதுமக்களின் உடல்நலனை மேம்படுத்துவதே எங்களது முதன்மை நோக்கம். இது போன்ற மருத்துவ முகாம்கள் மூலம் ஏழை எளிய மக்கள் தரமான மருத்துவ சேவையை பெற முடிகிறது," என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி  தமது உரையில் தெரிவித்தார்.

 பஸ் ஏறி பயணிகளுக்கு லட்டு வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி
 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கனிமொழி எம்பி பிறந்த நாள் மேயர் ஜெகன் பெரியசாமி திருநங்கைகளுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார் 


14 வார்டில் மரக்கன்று 


மாநகர தி.மு.க துணைச்செயலாளரும், மாநகர பணிகள் குழுத் தலைவருமான கீதா முருகேசன் தலைமையில் முகாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  

ஆகாஷ் மாரிராஜ் ,மோகன் மற்றும் பகுதி செயலாளர் ஜெயக்குமார் அந்தோனி முத்துராஜ், ஞானக்கண், லட்சுமி, பந்தல் முருகன் முருகேசன், ஆட்டோ குமார், சங்கர், செல்வகுமார், படையப்பா, முனியசாமி, மகேஷ் உடனிருந்தனர்.



மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு முகாமை வெற்றிகரமாக நடத்தினர்.


இந்த மருத்துவ முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நோயாளிகளுக்கு இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன. கனிமொழி எம்.பி.யின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த சேவை முகாம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.




சனி, 28 டிசம்பர், 2024

அன்பு உள்ளங்கள்" இல்லம் திறப்பு விழாவில் சிறப்புரை: கனிமொழி எம்பி

 "அன்பு உள்ளங்கள்" இல்லம் திறப்பு விழாவில் சிறப்புரை: 

 கனிமொழி எம்.பி




தூத்துக்குடி: 28/12/2024 அன்று, சனிக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளியில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான "அன்பு உள்ளங்கள்" இல்லத்தை திறந்து வைக்கப்பட்டது.




 நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றியவர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான  கனிமொழி கருணாநிதி எம்பி.



இந்த விழாவில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான  கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.