Tamil Nadu updates,12-3-2025
தூத்துக்குடியில் ஷேர் ஆட்டோ சேவைகள் வழங்க நடவடிக்கை தேவை
தூத்துக்குடி நகரில் போக்குவரத்து சிக்கல்களை தீர்க்கும் ஒரு முக்கிய தீர்வாக, ஷேர் ஆட்டோ சேவைகளை செயல்படுத்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்கள் தங்கள் தினசரி பயணங்களை எளிதாக மேற்கொள்ளும் வகையில், நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் ஷேர் ஆட்டோ சேவைகள் மிகவும் அவசியமாகியுள்ளது.
தூத்துக்குடி மாநகரில் ஷேர் ஆட்டோ 25 ஒடுவதாக தெரிய வருகிறது
மாநகர் வெவ்வேறு பகுதி நிறுத்தம் புறப்பட்டு வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு பகுதி செல்ல வேண்டும்
தெற்கு வடக்கு மேற்கு பகுதிகளுக்கு செல்வதே இல்லை!!!
ஆனால்?
இவை அனைத்தும் ஒரே ரூட்
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பிருந்தே போக்குவரத்து இடைஞ்சலாக ஒரே வழிப்பாதை கிழக்கு திரேஸ்புரம் நோக்கி மட்டுமே செல்கின்றன மீண்டும் பேருந்து நிலையம் வருகிறது????
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம்
முன் கிளம்பி செல்வது போல
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முகப்பு ..சாந்தி பேக்கரி முன் இருந்து கிளம்ப வேண்டும்
செயல் படுத்த வேண்டிய முக்கிய வழித்தடங்கள்:
- வடக்கு: தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் –சாந்திபேக்கிரி ஆரம்பித்து... முத்தம்மாள் காலனி –சங்கரபேரி- ஏபிசி மகளிர் கல்லூரி – நிலாச்சி புட்ஸ் – மூக்கு ரோடு மீண்டும் பேருந்து நிலையம்
- தெற்கு: பழைய மாநகராட்சி – ஃபயர் ஸ்டேஷன் – காரப்பேட்டை – ஆண் பள்ளி – லயன்ஸ் டவுன் – ஜார்ஜ் ரோடு – காமராஜர் கல்லூரி மீண்டும் பேருந்து நிலையம்
- மேற்கு: அரசு மருத்துவமனை – பாலிடெக்னிக் – மூன்றாவது மைல் – புதுக்குடி – கலெக்டர் அலுவலகம் – அய்யன் அடைப்பு – மறவன் மடம் மீண்டும் பேருந்து நிலையம்
- கிழக்கு: புதிய மாநகராட்சி -அண்ணா பேருந்து நிலையம் ஆரம்பித்து..
- ரயில்வே நிலையம் – பழைய துறைமுகம் – சென்ட் மேரிஸ் கல்லூரி – திரேஸ்புரம் – கருப்புபட்டி – சாமுவேல் புரம் – அமெரிக்கன் ஆஸ்பத்திரி மீண்டும் பேருந்து நிலையம்
தூத்துக்குடி நகரில் இதற்கான உகந்த நடவடிக்கைகளை எடுக்க நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து துறை மற்றும் மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்தும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் கீதா ஜீவன், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் முன்வர வேண்டும்.
பொதுமக்கள் வேகமான, வசதியான மற்றும் குறைந்த செலவில் பயணிக்க இத்தகைய சேவைகள் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக