newstami லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
newstami லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

என் தேசம் என் மக்கள் குறும்படம் வெளியீடு தூத்துக்குடி கலெக்டர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி லீக்ஸ் :-01-08-2022

தூத்துக்குடியில்  "என் தேசம் என் மக்கள்" என்ற தேசப்பற்றை ஊட்டும் குறும்படத்தை தூத்துக்குடி மாவட்டஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்ஆகியோர் இணைந்து இன்று (01-08-2022) வெளியிட்டார்கள்

இதில் குறும்பட கதை மற்றும் தயாரிப்பாளர் கி.ம.சங்கர், இயக்குநர் அருந்ததி அரசு, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.விநாயகம், முனைவர் ஐ.ஜோசப் ஜான் கென்னடி, பி.எம்.சி. பள்ளிநிர்வாகி மரு.ஜேம்ஸ் சுந்தர்சிங், செய்தியாளர் கே.ஞானதுரை, உதவிஇயக்குநர்கள் தினேஷ் கௌசில், யு.எல்.குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.





திங்கள், 25 ஜூலை, 2022

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் திருவிழா கொடியேற்றம்

  இன்று 26-7-2022 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் திருவிழா இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.


தூத்துக்குடி பனிமய மாதா 


தூத்துக்குடியில் அமைந்து உள்ள பிரசித்திபெற்ற தூய பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 5-ம் தேதி வரை நடைபெறும். அதன்படி 440-வது ஆண்டு பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து காலை 6.45 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை பிஷப் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார். 


விழாவில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன், ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா மற்றும் பாதிரியார்கள், பேராலய நிர்வாகிகள், மற்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொடியேற்றம் நிகழ்ச்சியில் கலந்து கொணடார்கள்.


  

ஞாயிறு, 3 ஜூலை, 2022

சம்படி பெத்தனாட்சி திரு கோவில் வருடாந்திர கும்பாபிஷேகம்

 தூத்துக்குடி மாவட்டம் 

சம்படி இடையர் காடு ஊருக்கு மத்தியில் அடைக்கலம் காத்த அய்யனார் திருகோயில் ஆனி மாதம் 3-1 -2022 மதியம் 1 மணி இருந்து 4 மணி வரை வருஷாபிசேகம் நடை பெற்றது.





இது பற்றிய செய்தியாவது:- 

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 03-07-2022 ஞாயிறு அன்று

சம்படி இடையர் காடு திருக்கோவினுள் விற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருகோவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தார்கள் .





இதையொட்டி பக்தர்கள் வேண்டியவுடன் வரம் தரும் பெத்தா னாட்சி அம்மன் கோவில் உள் வளாகத்தில் ஒம குண்டம் பூஜை கோவில் கலசம் கும்பாபிசேஷம் உச்சி வேளை மதியம்  நடைபெற்றது.




இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் சார்பாக கோவில் பூசாரி மந்திர மூர்த்தி பெத்த ைாட்சி அம்மன் கோவில் முன்னோடியான P முருகேசன் இருவரும் பக்தர்களுடன் உதவியுடன் சேர்ந்து சிறப்பாக கோயில் கும்பாபிஷேம் செய்திருந்தார்கள்.

  பின்பு பக்தர் கள் பூஜை முடிந்தவுடன் மதியம் அன்னதான விருந்தில் கலந்து கொண்டார்கள்.

புதன், 18 மே, 2022

கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலை ? ரூபாய் 2 லட்சம் பணம் மோசடி ? நாசரேத் பெண் ஒருவர் கைது இவருடன் தொடர்பில் இருந்த சில நபர்கள் மீது காவல்துறை விசாரணை !!?

தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 2 லட்சம் பணம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி லீக்ஸ் : 18.05.2022

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் மனைவி பிரேமா (27) என்பவரிடம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா பாண்டி மனைவி அமுதா என்பவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிவது போல் பேசி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக கூறி பிரேமாவிடம் ரூபாய் 1,98,000/- பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். 

கைதான அமுதா


பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த பிரேமா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்இடம் புகார் அளித்துள்ளார்.

மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் 

 தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர் சுதாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.


 கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு இன்று (18.05.2022) வி.கே. புரம் அகஸ்தியர்புரம் பகுதியில் வைத்து மேற்படி பணமோசடியில் ஈடுபட்ட அமுதாவை கைது செய்தனர்.


மேலும் இவ்வழக்கில் சில நபர்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்ற கோணத்தில் சைபர் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

தூத்துக்குடி காவல்துறையை அவதூறாக வீடியோ எடுத்து அதை தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்த இளைஞர்கள்? ஒருவர் கைது பகிர்வு செய்த மற்றவர்களை கைது செய்ய போலீஸ்வலைவீச்சு

 தூத்துக்குடி லீக்ஸ்: 08.04.2022 வெள்ளி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி காவல்துறையினர் குறித்து அவதூறாக வாட்ஸ்அப் ஸ்டேட்ஸில் வைத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி காவல்துறையினர் குறித்து சமூக வலைதளத்தில்  அவதூறாக வீடியோ பரவுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  திருச்செந்தூர் காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவருக்கு சம்பந்தப்பட்டவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமையில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆறுமுகநேரி வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த காமராஜ் மகன் மாரிமுத்து (20) மற்றும் சிலர் சேர்ந்து காவல்துறையை அவதூறாக வீடியோ பதிவு செய்து அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மாரிமுத்து என்பவரை மேற்படி போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மற்ற எதிரிகளை தேடி வருகின்றனர்.

திங்கள், 28 மார்ச், 2022

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் சாலை மறியல் தூத்துக்குடியில் சாலை மறியல் காவல்துறை கைதின் போது காலியாக சென்ற மினிபஸ்

 தூத்துக்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து தொமுச ஏஐடியுசி சிஐடியு, ஏ ஐ சி சி டி யு, தொழிற்சங்கத்தினர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்,  











தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று 28 - 03.2022 காலையில் நடைபெற்ற சாலை மறியல் ஈடுபட்டார்கள்.




காலியாக சென்ற மினிபஸ்


திமுக ஆதரவு தொழிற்சங்கங்கள் ஆர்வம் காட்டவில்லை. பலர் ஒதுங்கி நின்றார்கள். பெண்கள் உட்பட காவல்துறை கைதின் போதும் மினி பஸ் களில் போலீஸ் வற்புறுத்தியும் ஏறவில்லை. இதனால் காவல்துறை கொண்டு வந்த மினி பஸ் வெறுனேகாலியாக சென்றது.

மினி பஸ்களில் கைது செய்யப்பட்டவர்கள், அருகே உள்ள ராஜி மஹால் மண்டபத்தில் காவல்துறையினர் வைத்திருந்தனர்.

செவ்வாய், 14 டிசம்பர், 2021

தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக்கில் மது அருந்தியவர் குடிபோதையில் ? .. ஒரு குறிப்பிட்ட மத பெண்களை பற்றி தவறாக பேசி வாட்ஸ்அப்பில் வீடியோவாக பகிர்வு !! இதைப்பார்த்து அதிர்ச்சி யில் அந்த நபரை கேள்வி கேட்டவருக்கு கொலை மிரட்டல்!!! இதுகுறித்து அதிரடியாக குலசேகரபட்டினம் இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி வீடியோ வெளியிட்ட உடன்குடி ஜெயக்குமாரை கைது செய்தார்.


இதுகுறித்து செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (40) த/பெ. மகாலிங்கம், புதுமனை பள்ளிவாசல் கிழக்குத் தெரு, உடன்குடி பகுதியில் வசித்து வருகிறார்.


இவர் நேற்று (13.12.2021) தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக்கில் நன்றாக குடித்துவிட்டு.. தன்னுடைய செல்போனில் வாட்ஸ்அப்பில் குடிபோதையில் ஒரு குறிப்பிட்ட மத பெண்களை பற்றி தவறாக பேசி வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்அப்,  பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்து மதப் பிரச்சினை ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளார்.

கை து செய்யப்பட்டஜெயக்குமார்


 இதைப்பார்த்த பரகத்துல்லாஹ் (31) த/பெ. அப்துல் ஹாசன்,  புதுமனை பள்ளிவாசல் தெரு உடன்குடி என்பவர் இதுகுறித்து ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் அவரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


இதுகுறித்து பரகத்துல்லாஹ் அளித்த புகாரின் பேரில் குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையற்கரசி வழக்குப்பதிவு செய்து வீடியோ வெளியிட்ட ஜெயக்குமாரை   தேடி சென்று அதிரடியாக கைது செய்தார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று சாதி, மதக் கலவரங்கள தூண்டும் வகையில் வன்முறையான செய்திகளையோ, புகைப்படங்களையோ மற்றும் வீடியோக்களையோ சமூக வலைதளங்களில் யாராவது பதிவிட்டு பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளி, 10 டிசம்பர், 2021

போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்

 பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும்போது  கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்கவேண்டும் என  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் காவல் நிலையத்தில் சென்று அறிவுரைகள் வழங்கினார்.



இதுகுறித்து செய்தி யாவது...

இன்று (10-12-2021 )தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்ட அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தை பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டார்.



தூத்துக்குடி  ஊரக உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அலுவகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  ஆய்வு செய்தார்.


தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள புதுக்கோட்டை, முறப்பநாடு, புதியம்புத்தூர், தட்டப்பாறை, சிப்காட் மற்றும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது தூத்துக்குடியில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, தடைசெய்யபட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை, சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி ஊரக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப, பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ் குமார், பவித்ரா, சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துசாமி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி லீக்ஸ் பதிவு: 10.12.2021

வியாழன், 4 நவம்பர், 2021

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ஐயாவின் 90-வது பிறந்த நாள் விழாவில் கடலூர் 4-வயது சிறுவன் கு. ஆருஷ் தனிநபர் உலக சாதனை!!!!

 டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ஐயாவின் 90-வது பிறந்த நாள் விழாவில் கடலூர் 4-வயது சிறுவன் கு. ஆருஷ் தனிநபர் உலக சாதனை புரிந்து பாராட்டு பெற்றார்.



டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ஐயாவின் 90-வது பிறந்த நாள் மற்றும் அசிஸ்ட் உலக சாதனை மையத்தின் 10- ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஏழு அமைப்புகள் ஒன்றினைந்து மாணவர் மாணவிகளுக்கான தனி நபர் உலக சாதனை நிகழ்ச்சி கடந்த 19-09 - 2021 அன்று நடைபெற்றது

இரு கைகளில் ஒரே நேரத்தில் சிறுவன் ஆருஷ் எழுதும் விடியோ

 ஆன்லைன் மூலம் 2021 மணிநேர இணைய வழி தொடர் சங்கமம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கடலூர்( Edify international School ) பள்ளியில் படிக்கும் கு. ஆருஷ்.(வயது 4) என்ற சிறுவன் கலந்து கொண்டார். இருகைகளிலும் ஒரே நேரத்தில் எழுதுதல் - 

பங்கு ெடுத்து அதில் வெற்றி பெற்று இந்த ஆண்டின் தனிநபர் உலக சாதனை புரிந்து சான்றிதழ் பெற்றார்.




இது குறித்து சிறுவன் கு. ஆருஷ் குடும்ப உறவினர்கள் மற்றும் ஆசிரியர்கள்   மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தார்கள்.

வியாழன், 14 அக்டோபர், 2021

குலசேகரப்பட்டடினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பத்தாம் திருவிழா!! பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வர அனுமதி இல்லை!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 144 தடைஉத்தரவு  31.10.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர்  உத்தரவுப்படி ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பத்தாம் திருவிழா நாளான 15.10.2021 முதல் 17.10.2021 ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே  மேற்படி 3 நாட்களும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.




மேலும் நாளை (15.10.2021) நடைபெற உள்ள பத்தாம் திருவிழா சூரசம்ஹாரம் சென்ற ஆண்டு போல குலசேகரப்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் வளாகத்திலேயே நடைபெறவுள்ளது, 


கடற்கரையில் நடைபெறாது எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடற்கரை பகுதிகளில் யாருக்கும் அனுமதி கிடையாது,



மேலும் குலசை தசரா திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சி  மற்றும் பிரபல தொலைக்காட்சி மற்றும்  YouTube லும் நேரடியாக ஒளிப்பரப்பபடும்.


இதனை மீறி வரும் பக்தர்கள் சோதனை சாவடிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். 



ஆகவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தந்து 15.10.2021 முதல் 17.10.2021 ஆகிய 3 நாட்கள் கோவிலுக்கு வராமல் தங்கள் ஊரிலேயே பக்தர்கள் காப்பை கழட்டி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தூத்துக்குடி லீக்ஸ் 14.10.2021



புதன், 22 செப்டம்பர், 2021

பசுபதி பாண்டியனின் பிளக்ஸ் பேனர் கீழே தலையை வைத்து சென்றனர் கொலையாளிகள் !!!திண்டுக்கல்லில் பெண் வெட்டிக் கொலை!!! .

 பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



நிர்மலா தேவி தலையை நந்தவன பட்டியில் உள்ள பசுபதி பாண்டியன் வீட்டின் முன்பு பசுபதி பாண்டியனின் பிளக்ஸ் பேனர் கீழே தலையை வைத்து சென்றனர் கொலையாளிகள்.



தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன், கடந்த 2012 ஜனவரி 10ஆம் தேதி திண்டுக்கல் அடுத்துள்ள நத்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.


இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 18 பேரில், புறா மாடசாமி, முத்துப்பாண்டி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துவிட்டனர்.

சுபாஷ் பண்ணையார், ஆறுமுகசாமி, நடராஜன், நிர்மலா, அருண்மொழி, அருள் ஆனந்தன், பிரபு, அந்தோணி, ரமேஷ், அருள் உள்ளிட்ட 15 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் E.B. காலனியை சேர்ந்த நிர்மலா என்பவர் மர்ம நபர்களால் இன்று (22-09 - 2021) புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்


Ep காலனியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகள் காத்துக் கொண்டிருந்த இடத்தில், நிர்மலா நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.



 அப்போது அங்கு சென்ற மர்ம நபர்கள் நிர்மலாவின் தலையை துண்டித்து உள்ளனர். பின்னர் அந்த தலையை மட்டும் நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு வைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.


இதுகுறித்து தகவலறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிர்மலாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பட்டப்பகலில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சம்பவ இடத்தில் DIG. விஜயகுமாரி,

 மாவட்ட எஸ்.பி.சீனிவாசன் 

விசாரணை நடத்தி வருகின்றனர்.


வெள்ளி, 10 செப்டம்பர், 2021

வாணியம் பாடி வசீம் அக்ரம் படுகொலை முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!!!

இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.



திருப்பத்தூர் மாவட்டம், வாணியம் பாடியை சேர்ந்த வசீம் அக்ரம் மனித நேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துனை செயலாளராக பொறுப்பு வகித்தவர்.முன் விரோத காரணத்தால்  கூலிப்படையினரை எவி விட்டு வசீம் அக்ரம் படு கொலை செய்ய பட்டார் என்கிற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

 இந்த கொடூர சம்பவத்தை  முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது .


வசீம் அக்ரமை படு கொலை செய்த சமூக விரோதிகள் அனைவரையும் காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். கூலிப்படையினரை எவி இந்த படு கொலை செய்ய காரணமாக இருந்த நபர்களையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் வலியுறுத்துகிறது.


வசீம் அக்ரமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம். உயிரிழந்தள்ள வசீம் அக்ரம் குடும்பத்திற்க்கு இழப்பிடு ரூ50 லட்சமும்  அரசு வேலையும் தமிழக அரசு தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் வலியுறுத்துகிறது. 


தமிழகத்தில் போதை பொருளாளன கஞ்சாவினால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகிறார்கள். 


இளைஞர்களை கஞ்சா பழக்கத்திலிருந்து மீட்டு எடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம். மேலும் இளைஞர்களை சீரழித்து வரும் கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் கஞ்சாவை ஓழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.


எனவே : அமைதி பூங்காவனமாக தமிழகத்தில் இது போன்ற அரசியல் பிரமகர்களை சமூக விரோதிகள் படு கொலை செய்வதனால்  சட்ட ஓழுங்கு பாதிப்பு பதற்றமான சூழல் நிகழ்ந்து வருகிறது. ஆகயினால் படு கொலை சம்பவங்களை செய்து வரும் கூலிப்படையினர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரிய மன்சியின் சார்பாக தமிழக அரசை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

புதன், 8 செப்டம்பர், 2021

மாணவி சோபியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கு விசாரணை!!!

thoothukudileaks 08-09-2021



மாணவி சோபியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவரது தந்தை டாக்டர் சாமி தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் , தூத்துக்குடி காவல் துனை கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆய்வாளர்கள் திருமலை , பாஸ்கர் , அன்னத்தாய் , உதவி ஆய்வாளர்கள் லதா, நம்பிராஜன் ஆகியோர் மீது மாநில மனித உரிமை ஆனையத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரனை இன்று  08-09-2021 திருநெல்வேலியில் நடைபெற்றது.


எதிர்மனுதாரர்களான  ஆய்வாளர்கள் பாஸ்கர், அண்ணதாய் உதவி ஆய்வாளர்கள் நம்பிராஜன்,  லதா  ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். 


மனுதாரர் டாக்டர் சாமி மற்றும் மாணவி சோபியா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.


 டாக்டர் சாமி மற்றும்  மாணவி சோபியா ஆகியோரை  எதிர்மனுதாரர்கள் தரப்பில் குறுக்கு விசாரனை செய்தார்கள் .

அடுத்த விசாரனை 11-11-2021 தேதி  நடைபெறும் என மாநில மனித உரிமை  ஆணையம் தெரிவித்துள்ளது.


மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள்  சுப.இராமச்சந்திரன் பெ.சந்தனசேகர் ஆஜரானார்கள்.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

மாணவ, மாணவிகளுக்கு மெகா ஓவியப்போட்டி நடத்தி தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் வ.உ.சி யின் 150வது பிறந்த தின கொண்டாட்டம்!!!

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் , செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



முன்னதாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மெகா ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. அதில் 21 பள்ளிகளைச் சேர்ந்த 320 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.



அதில் ஆறு சிறந்த ஓவியங்களை அப்பள்ளி ஓவிய ஆசிரியர் .முரளிதரன் அவர்  தேர்ந்தெடுத்தார்

அதில் துவக்கப்பள்ளிகளுக்கான பிரிவில் சாத்தான்குளம் செயின்ட் ஜோசப் பெண்கள் ஆரம்பப் பள்ளி மாணவி நிதர்சனாஸ்ரீ -ன் ஓவியம் முதல் பரிசையும், சி.வா. மாநகராட்சி ஆரம்பப் பள்ளி மாணவன் ராம்சுந்தரின் ஓவியம் இரண்டாவது பரிசையும், ஜின் ஃபேக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி கன்னிகாவின் ஓவியம் மூன்றாவது பரிசையும் பெற்றது.

நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி களுக்கான பிரிவில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவி சமிக்ஷாவின் ஓவியம் முதல் பரிசையும், சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மதுமிதாவின் ஓவியம் இரண்டாம் பரிசையும் சிவந்தா குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் சரணின் ஓவியம் மூன்றாவது பரிசையும் பெற்றது.

பின்னர் ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரி முதல்வர் கனகராஜ் அவர்கள் வ.உ.சி யைப் பற்றி சிறப்புரை ஆற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.


போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் ஆறுதல் பரிசுகளும் பங்கு கொண்ட பள்ளிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.


சிறப்பு விருந்தினர்களாக  பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் கந்தசாமி , பழைய மாணவர்கள் ராஜா, சதீஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர் நிகழ்ச்சிகளை ஆசிரியை.ரமா தொகுத்து வழங்கினார். ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினார். 

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

அஜித் -க்கு விஜய் கொலை மிரட்டல் !!! விஜய் - ஜ கைது செய்த காவல்துறை!!!

தூத்துக்குடி லீக்ஸ்: 03.09.2021



தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் அஜித் (33) என்பவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த கோல்டுமேன் மகன் விஜய் (30) என்பவர் நேற்று (02.09.2021) இரவு  மீன்பிடி துறைமுகம் பகுதியில் வைத்து மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். 


இதற்கு மறுப்பு தெரிவித்த அஜித்திடம் விஜய் தவறாக பேசி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


இதுகுறித்து அஜித் இன்று 03-09-2021 அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜ பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தார்.


மேலும் எதிரி விஜய் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகள் உள்ளது என்கிறார்கள்.