வெள்ளி, 8 ஏப்ரல், 2022

தூத்துக்குடி காவல்துறையை அவதூறாக வீடியோ எடுத்து அதை தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்த இளைஞர்கள்? ஒருவர் கைது பகிர்வு செய்த மற்றவர்களை கைது செய்ய போலீஸ்வலைவீச்சு

 தூத்துக்குடி லீக்ஸ்: 08.04.2022 வெள்ளி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி காவல்துறையினர் குறித்து அவதூறாக வாட்ஸ்அப் ஸ்டேட்ஸில் வைத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி காவல்துறையினர் குறித்து சமூக வலைதளத்தில்  அவதூறாக வீடியோ பரவுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  திருச்செந்தூர் காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவருக்கு சம்பந்தப்பட்டவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமையில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆறுமுகநேரி வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த காமராஜ் மகன் மாரிமுத்து (20) மற்றும் சிலர் சேர்ந்து காவல்துறையை அவதூறாக வீடியோ பதிவு செய்து அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மாரிமுத்து என்பவரை மேற்படி போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மற்ற எதிரிகளை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக