வெள்ளி, 8 ஏப்ரல், 2022

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற முதல் கூட்டத்தில் நாங்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலை தான் மேயர் ஜெகன் பரபரப்பு மீண்டும் அந்த ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு திமுக அரசாங்கமும் - தூத்துக்குடியில் உள்ள திமுக வெற்றி பெற்றவர்களும் முயற்சி செய்யறாங்களா? அ தி மு க பரபரப்பு பேட்டி இதனை தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற முதல் கூட்டத்தில் நாங்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலை தான் மேயர் ஜெகன் பரபரப்பு பேச்சு ..  சொத்து வரி விதிப்பில் தேர்தல் வாக்குறுதிபடி கொரானா வில் 2 வருடமா கஷ்டப்படும் தூத்துக்குடி மக்களிடம் நடந்து கொள்ளவும்....தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எக் காரணம் கொண்டும் வரகூடாது என கவுன்சிலர்கள் அனைவரும் ஒருமித்த தீர்மானம் மாமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதற்கு செவிசாய்க்காததால் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தோம் என்றனர்.




தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் முதல் கூட்டம் 

இன்று  8-4-2022 காலை 10 மணியளவில்நடைபெற்றது

தூத்துக்குடி மாநகராட்சி 60வது வார்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.


தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா, மாநராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ கலந்து கொள்ள கூட்டம் துவங்கியது.


முதலில் கவுன்சிலர்கள் முன்பாக ஒவ்வொரு தீர்மானம் வாசிக்கப்பட்டு 18 தீர்மானம் ஆள் பாஸ் என கூறி நிறைவேற்றப்பட்டது.



தீர்மானம் வாசிக்கப்படும் போது குறிப்பாக க்ளீன் தூத்துக்குடி மாசு பொலிஷன் தீர்மானத்தின் போது ...?அதிமுக மாநகராட்சி மன்ற எதிர்கட்சி தலைவர் வீரபாகு மற்றும் எஸ்.பி. ராஜா ஆகியோர் கேள்வி எழுப்பினர்.



அப்போது அவர்களை பேச விடாமல் சத்தமிட்ட இரண்டு கவுன்சிலர்கள் ...  ஆளுமையுடன் அமைதி படுத்திவிட்டு மேயர் பெரியசாமி பதில் அளித்தார்.


இருப்பினும் .. எதிர்கட்சி தலைவர் வீரபாகு பேசியதாவது: ஸ்டெர்லைட் ஆலை எக்காரனம் கொண்டும் திறக்க கூடாது என மாமன்றத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர் அனைவரும் ஒருமித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அழுத்தமாக பேசினார்.


அதற்கு மேயர் ஜெகன் ஸ்டெர்லைட் ஆலை மாசு கட்டுபாடு வீதி மீறல் மூடப்பட்டது.

 நமது முதலமைச்சர் கட்சியின் கொள்கை படி ஸ்டெர்லைட் ஆலை திறக்க மாட்டோம் என கூற கவுன்சிலர்கள் பலமாக கைதட்டினர். மேலும் தொடர்ந்தவர் ...அடுத்ததாக பாளை ரோடு எட்டையாபுரம் ரோடு லாரி அதிக அளவில் வந்து செல்வதால் புழுதி மாசு உண்டாகிறது மக்கள் செல்ல முடியவில்லை. இதற்கு மாற்று வழி திட்டம்  க்ளீன் தூத்துக்குடி செய்ய வேண்டும் என்றார்.


அப்போது எதிர்கட்சி வீரபாகு தேர்தல் வாக்குறுதிபடி நடந்து கொள்ளுங்கள் "கொரானா காலம் நடந்துமக்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் இந்த நிலையில் அதிகபடியான சொத்து வரிவிதிப்பு என பேசியதும் ... சப்தமிட்டனர் இதனால்  அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

பரபரப்பு பேட்டி



வெளிநடப்பு செய்த மாமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்.......

 தூத்துக்குடி .தூத்துக்குடி மாநகராட்சி மாசு கட்டுபாடு வாரியம் வாயிலாக பல்வேறு பணி செய்ய இருப்பதாக கூறுகிறார்கள். தூத்துக்குடி மாசு ஏற்பட காரணமே ஸ்டெர்லைட் ஆலை தான் என சொல்லி பல போராட்டங்கள் நடைபெற்று இப்போது ஸ்டெர்லைட் ஆலை முடப்பட்டிருக்கு?

மீண்டும் அந்த ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு திமுக அரசாங்கமும் - தூத்துக்குடியில் உள்ள திமுக வெற்றி பெற்றவர்களும் முயற்சி செய்யறாங்க என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு இருக்கு ?

அந்த அச்சத்தை போக்குவதற்கு ..தூத்துக்குடி மாநகர சபையில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் வரவே வராது என ஒருமித்து கவுன்சிலர் அனைவரும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அடுத்து 150% சொத்து வரி விதிப்பதும் தேர்தல் வாக்குறுதிக்கு முரணானது அதிமுக கடந்த பத்து ஆண்டு சொத்து வரி எதுவும் உயர்த்த வில்ல 2 வருடமாக கொரனா காலத்தில் கஷ்டப்படும் மக்களிடம் சொத்து வரிய அறவே நீக்கனும் எனக் கூறி விட்டு வெளிநடப்பு செய்தோம் என்றார். மாமன்றஎதிர்கட்சி தலைவர் வீரபாகு

      பேட்டியின் போது அதிமுக மாமன்ற செயலாளர் வழக்கறிஞர் எஸ்.பி.எஸ்.ராஜா, கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, ஜெயலட்சுமி, பத்மாவதி, ஜெயராணி, வெற்றி செல்வன், ஆகியோர் உடனிருந்தனர்.



ஸ்டெர்லைட் ஆலை கண்டிப்பாக இயங்காது என்று மாமன்ற பதிவில் பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு வாழ்த்து கூறியதுடன் ஒருபோதும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணில் இயங்க அனுமதிக்கமாட்டோம் என்று மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு  மற்றும் இயக்கத்தின் உறுப்பினர்கள் கேட்டு கொண்டார்கள்.   


   ' 

    -

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக