அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 பிப்ரவரி, 2026

பின்னணியில் நடந்தது என்ன?முதல்வரின் அதிரடி அறிவிப்பு: மகளிருக்கு ₹5000 - எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்  photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்ரவரி 13, 2026

தமிழ்நாடு முதல்வரின் இன்றைய காலை அதிரடி அறிவிப்பு எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ₹3000 மற்றும் கோடை சிறப்பு தொகுப்பாக ₹2000 என மொத்தம் ₹5000 இன்று காலை 6 மணி முதல் 1.5 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks




பின்னணியில் நடந்தது என்ன?

உள்துறை உளவுத்துறை அறிக்கைகளின்படி, மகளிர் உரிமைத்தொகையை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு இத்திட்டத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் கசிந்தது.

இந்த முக்கிய தகவல் தமிழ்நாடு உளவுத்துறையால் நேற்று காலையே கண்டறியப்பட்டு முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.

அவசர ஆலோசனைகள்

நேற்று மதியம் சென்னை செனட்டாப் சாலையில் முதல்வர், துணை முதல்வர், நிதியமைச்சர் மற்றும் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் நீண்ட நேர ஆலோசனை நடத்தினர். இரவு முழுவதும் செயலக கட்டடத்தில் விளக்குகள் எரிந்தன. முக்கிய அதிகாரிகள் தொடர்ந்து வந்து போய்க் கொண்டிருந்தனர்.

அதிகாலை திருப்பம்

இன்று அதிகாலை 5 மணிக்கு முதல்வர், நிதியமைச்சர், துணை முதல்வர் ஆகியோர் மீண்டும் ஆலோசனை நடத்தினர். நிதியமைச்சர் மூன்று மாதங்களுக்கான ₹3000 வழங்கும் திட்ட வரைவை தயாரித்து முதல்வரிடம் அளித்தார்.

அப்போது முதல்வர் தனது கையெழுத்துடன் ஒரு முக்கிய திருத்தத்தை செய்தார் - கோடை சிறப்பு தொகுப்பாக ₹2000 கூடுதலாக வழங்கி மொத்தம் ₹5000 வழங்க வேண்டும் என்று.

மேலும் ஒரு அறிவிப்பு

இதோடு நின்றுவிடாமல், முதல்வர் தனது தனிப்பட்ட கோரிக்கையாக, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் கனிமொழிக்கு ஒரு கடிதம் அனுப்பி, மகளிர் உதவித்தொகை இனி மாதம் ₹2000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

நிதி ஒதுக்கீடு

மொத்தம் ₹7500 கோடி இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 1.5 கோடி பெண்களுக்கு இன்று காலை 6 மணியிலிருந்து வங்கிக் கணக்குகளில் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் நிலை

அதிமுக, பாஜக, தவெக கூட்டணி கட்சிகள் இந்த அறிவிப்பால் திகைப்பில் ஆழ்ந்துள்ளன. காலை 10 மணிக்கு நீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பே நடவடிக்கை முடிந்துவிட்டதால், தடை பெறுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.


"நடந்த விபரம் சுவாரஸ்யமான பிண்ணனி!!!

அமெரிக்கா கண்ணிலே மண்ணை தூவிட்டு அப்துல் கலாம் பொக்ரான்ல அணுகுண்டு சோதனை செஞ்சார், மிலிட்டரி யூனிஃபார்ம் போட்டுகிட்டு பாலைவனத்திலே நடந்தே போனார், நைசாப்போய் அனு குண்டை வெடிச்சுட்டார்....

இதல்லாம் பழைய கதை.

இன்று காலை தமிழ்நாட்டிலே முதல்வர் அறிவிப்பு குண்டு தான் அதிமுக பாஜக தவெக கூட்டணிக்கு வயிற்றில் புளியை அல்ல... ஆசீட்டை கரைத்து விட்டது.

""மகளிர் உரிமைத்தொகை''

எந்தந்த காரணங்களால் திமுக 200/234 அடிக்கும் என் ஒன்றிய உளவுத்துறை ஒன்றிய உள்துறைக்கு கொடுத்த ரிப்போர்டில் 1.மகளிர் உரிமைத்தொகை 1. மகளிர் விடியல் பயணம்.

மகளிர் விடியல் பயணத்தை ஒன்னும் செய்யவே முடியாது. இந்த மாதாமாதம் அரசாங்கம் வழங்கும் 1000₹ உரிமைத்தொகையை முடக்குவதற்கு என்னென்ன செய்யலாம் என யோசித்தது.

1.யாரையாவது வைத்து மகளிர் உரிமைத்தொகை விரய செலவு என சொல்லி கேஸ் போட்டு அதற்கு உச்ச நீதிமன்றம் வழியே தடை வாங்கி விடுவது.
2. தமிழ்நாடு அரசுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய நிதி பகிர்வை ஜீரோ ஆக்கி திண்டாட வைப்பது.

இன்னும் பல யோசனைகள் செய்து வைத்து பொதுநல கேஸ் போடுவது என முடிவானாதாக சொல்கிறார் கள்.

இன்று வெள்ளிக்கிழமை அதாவது இன்றைக்கு 13.02.2026 காலை 10.00 மணிக்கு கேஸ் போட ஒரு அண்ணாச்சி தரப்பு தயார் நிலையில்.... அதாவது அடுத்து சனி, ஞாயிறு கோர்ட் லீவ்... ஸ்டே வெக்கேட் கூட செய்ய இயலாது.

இதையெல்லாம் நேற்று காலையே மோப்பம் பிடித்த தமிழ்நாடு உளவுத்துறை முதலமைச்சரிடம் சொல்ல அடுத்த நிமிடம் பசுமை வழிச்சாலையில் குறிஞ்சி இல்லமும், சூரியகாந்தியும் கூடிப்பேசின. குறிஞ்சியும், சூரியகாந்தியும் ஒரே காரில் செனடாப் சாலைக்கு விரைந்தன. நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் ஏற்கனவே அங்கு வந்திருந்தார்.

மதியம் வரை அங்கேயே முதலமைச்சர், துணை முதலமைச்சர், நிதி அமைச்சர், நிதித்துறை செயலாளர் ஆகியோர் பேசினர்.பேசினர்.பேசினர்.

என்ன நடந்தது ஏது நடந்தது என யாருக்கும் புரியவில்லை. இரவு செக்ரட்ரியேட்டில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியில் லைட்டுகள் எரிந்தன.

முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போவதும் வருவதுமாய் இருந்தனர்.

நிதித்துறை அமைச்சரும், அதிகாரிகளும் மீண்டும் செனடாப் சாலைக்கு சென்றனர்.

நேற்று மாலையே துணை முதலமைச்சரின் அத்தனை அப்பாயின்மெண்ட்டுகளையும் அவரது உதவியாளர் செந்தில் கேன்சல் செய்திருந்தார்.

யாருக்கும் என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் புரியவில்லை. விடியல் காலை 5.00 மணிக்கு எல்லாம் தயார் நிலை. முதலமைச்சர் வந்து அமர்ந்தார். நிதியமைச்சரும், துணை முதலமைச்சரும் கை நிறைய பைல்கள் சகிதம் பேச ஆரம்பித்தனர்.

நடக்கும் இந்த பிப்ரவரி 2026, மற்றும் மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை 3000₹ இன்று காலை 6.00 மணிக்கு ஒன்னரை கோடி தமிழ்நாட்டு மகளிர் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்கிற ட்ராஃப்டை நிதியமைச்சர் தன் கைப்பட எழுதி அதை முதலமைச்சரிடம் கொடுக்க முதலமைச்சர் அதிலே தன் கைப்பட ஒரு திருத்தம் செய்தார்.

""கோடை சிறப்பு தொகுப்பாக 2000₹ சேர்த்து 5000₹ 1.5 கோடி மகளிருக்கும் காலை 6.00 மணி முதல் வங்கியில் வரவு வைக்கப்படும்''

முதலமைச்சரின் அந்த திருத்தத்தைப்பார்த்த துணை முதலமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும் இன்ப அதிர்ச்சி.

நிதித்துறை செயலாளர் திரு உதயசந்திரன் அதற்குள் ட்ராஃப்டை டைப் செய்து எடுத்து வர இந்த விஷயத்தை முதலமைச்சரே மக்களிடம் பேசும் வீடியோ எடுக்கும் பணி தொடங்கியது.

மேலும் இன்ப அதிர்ச்சியாக முதலமைச்சர் தன் உதவியாளர் தினேஷை அழைத்தார்.

""தினேஷ், திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் கனிமொழிக்கு நான் என் சார்பாக ஒரு கோரிக்கை வைப்பதாக ஒரு மனு தயார் பண்ணுங்க. மகளிர் உதவித்தொகை இனி மாதம் 2000₹ ஆக உயர்த்தப்பட வேண்டும் என என் தனிப்பட்ட கோரிக்கையை அனுப்பிடுங்க.

""அரசு, காலை 10.00 மணிக்கு கோர்ட் ஆரம்பிக்கும் முன்னமே எல்லோருக்கும் கிரடிட் ஆகிவிட்டது.


திங்கள், 25 ஆகஸ்ட், 2025

தமிழக காவல்துறையில் முழுமையான சீரமைப்பு – ஐந்தாவது காவல் ஆணைய பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : பாஜக




சென்னை: ஆகஸ்ட் 26
தமிழக காவல்துறையை உலகளவில் மதிக்கப்படும் முன்னோடியான அமைப்பாக மாற்ற வேண்டும் என்று, தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளார்.



அவர் தனது கடிதத்தில்,
“தமிழகத்தில் 6.5 கோடி மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், மனிதநேயம், நேர்மை, தொழில்முறைத் தன்மையுடன் செயல்படும் காவல்துறையை உருவாக்க வேண்டும். அதற்காக ‘தமிழக காவல் ஆணையம் – 2025’ என்ற பெயரில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இந்த ஆணையம் பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக அமைப்புகள், காவலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கருத்துகளை பெற்று சீரமைப்பு பரிந்துரைகளை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காவல்துறையில் நிர்வாக சீர்கேடுகளை களைவதற்காக அனைத்து கட்சிகளின் ஆலோசனையையும் அரசாங்கம் பெற வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு,

  • ஐந்தாவது காவல் ஆணைய பரிந்துரைகள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.
  • அதிகார துஷ்பிரயோகத்துக்கு கடுமையான ஒழுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • காவல் நிலைய மரணங்கள் குறித்து சி.ஐ.டி.க்கு உடனடி விசாரணை ஒப்படைக்க வேண்டும்.
  • உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப கைதுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை கொண்ட மேற்பார்வை குழு அமைக்கப்பட வேண்டும்.
  • உடல் கேமரா, டாஷ்போர்டு கேமரா போன்ற தொழில்நுட்பங்கள் காவல்துறையில் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
  • ஊடக தொடர்பு பிரிவை மேம்படுத்தி, காவல்துறையின் நேர்மறையான பிம்பத்தை உருவாக்க ‘ஊடகக் கொள்கை’ வகுக்கப்பட வேண்டும்.

“தமிழகத்தின் முதலமைச்சராகவும் காவல்துறை அமைச்சராகவும் உள்ள தங்களின் தலைமையில் இந்த சீரமைப்புகள் முன்னெடுக்கப்பட்டால், சட்டத்தின் ஆட்சியும் மக்களின் நம்பிக்கையும் வலுப்பெறும். தமிழக காவல்துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாக மாறும்” என பிரசாத் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


👉 ?

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

திருநெல்வேலியில் அமித்ஷா பங்கேற்கும் முதல் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாடு – தமிழக அரசியலில் திருப்புமுனை!

திருநெல்வேலி, ஆக.20 –

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,.. திருநெல்வேலியில் நடைபெற உள்ள முதல் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழக அரசியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.





ஆகஸ்ட் 22-ல்...

இந்த மாநாடு ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர், அரசியல் சாணக்கியர் என போற்றப்படும் அமித்ஷா  நேரில் பங்கேற்கிறார்.


 மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில்,.. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் தொடர்பான சிறப்பு பயிற்சியை பெற உள்ளனர்.


நெல்லை உள்பட தென் மாவட்டங்களில் உள்ள 5 மக்களவைத் தொகுதிகள், 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 8,595 பூத் கமிட்டிகளின் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வர்.

பயிற்சி!!!

 வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றியை இலக்காகக் கொண்டு, வாக்குச்சாவடி மட்டத்தில் மக்கள் தொடர்பு, தேர்தல் மேலாண்மை, திமுக அரசின் ஊழல் மற்றும் மக்கள் விரோத ஆட்சியை வெளிச்சமிட்டு காட்டும் பிரச்சார முறைகள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் உத்திகள் குறித்து விரிவான பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ஏ.என்.எஸ். பிரசாத் தனது அறிக்கையில்,...
“தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். திமுகவின் ஊழல், கள்ள ஓட்டு, பண விநியோகம் போன்ற அராஜக தேர்தல் முறையை வீழ்த்தி, ஒவ்வொரு பூத்திலும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று பாஜக தொண்டர்கள் வெற்றியை உறுதி செய்வார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


அதோடு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்கிய மக்கள் நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட பங்களிப்புகள் குறித்து இந்த மாநாட்டின் மூலம் வீடு தோறும் எடுத்துச் செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாநாட்டைத் தொடர்ந்து...

, செப்.13-இல் மதுரை, அக்.26-இல் கோவை, நவ.23-இல் சேலம், டிச.21-இல் தஞ்சாவூர்,2026 ஜன.4-இல் திருவண்ணாமலை, 2026ஜன.24-இல் திருவள்ளூர் ஆகிய இடங்களிலும் மாநாடுகள் நடைபெறவுள்ளன.

திருநெல்வேலி மாநாட்டில்... பாஜகவின் முன்னாள் தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர்ராஜன், அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.



அமித்ஷா அவரின் வருகை...

 தமிழக பாஜக தொண்டர்களில் மிகப்பெரிய எழுச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றும் அடித்தளமாக இந்த மாநாடு அமையும்” என அறிக்கையின் மூலம் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.


👉 

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

கொளத்தூர் அரசு மருத்துவமனையின் அலட்சியம் – முதல்வர் தலையிட வேண்டும்: பாஜக தகவல் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தல்

 Tamil Nadu updates,1-3-2025

கொளத்தூர் அரசு மருத்துவமனையின் அலட்சியம் – முதல்வர் தலையிட வேண்டும்: பாஜக தகவல் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தல்

சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் அலட்சியமான மருத்துவ சேவையால் ஒன்று ஆம் வகுப்பு மாணவி பாவனா உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். 

போட்டோ மாடல் 

இதனைக் கண்டித்தும், அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த சிறுமி பாவனாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை தமிழக முதல்வர் தாயுள்ளத்தோடு வழங்க வேண்டும். 


அரசு மருத்துவமனைகள், பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே முதல்வரின் கடமை.


 ஆனால், வெறும் பெயர்கள், கட்டிடங்கள், விளம்பரங்கள் மூலம் மட்டுமே பெருமை பேசுவதை விட, மக்களுக்கு சேவை செய்வதை உறுதி செய்வதே உண்மையான மனிதநேயத்திற்கான அடையாளம்" என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "முதல்வரின் சொந்த தொகுதியாக இருக்கும் கொளத்தூர் பகுதியில் நிர்வாக சீர்கேடுகள் மலிந்து காணப்படுகின்றன. பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் முறையான பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால், சிறுமி பாவனாவின் உயிரைக் காக்கலாம். 


இது குறித்து முதல்வர் உடனடியாக ஒரு மருத்துவ குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மருத்துவர்களின் அலட்சியத்தால் இந்த மரணம் ஏற்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த 2022ல், கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் இன்னும் மக்கள் நினைவில் இருக்கும்போதே, தற்போது ஒன்றாம் வகுப்பு மாணவி பாவனாவின் மரணம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், அரசு மருத்துவமனைகளின் சேவை தரம் கேள்விக்குறியாகி உள்ளது.

"கொளத்தூர் தொகுதியில் மொத்தம் ஆறு வட்டங்களின் கீழ் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக்களுக்கு நம்பகமான சிகிச்சை அளிக்கின்றனவா?


 சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் உள்ளனவா? இதனை முதல்வர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களின் உயிரை காப்பது அரசின் முதல் கடமை" என்று ஏ.என்.எஸ். பிரசாத் தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.


மாணவி பாவனாவின் மரணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசு உறுதி கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

சைமன் ஜெபஸ்டின் மறுஉருவமாக மாறுகிறாரா?? ஜோசப் விஜய்? வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது. தமிழக பாஜக காட்டம்

நடிகர் விஜய் நாம் தமிழர் சைமன் ஜெபஸ்டின் மறுஉருவமாக மாறுகிறாரா?? ஜோசப் விஜய்? வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது.

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார். 


நாளைய விடியல்!


இது பற்றிய செய்தியாவது:-

 

வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது.


விஜய் அதிகார அரசியலுக்காக திமுக வழியில், ஓட்டு வங்கி அரசியலுக்காக சீமான் பாதையில் செயல்பட முடிவு செய்து இருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் விதத்தில் உள்ளது.


தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர் விஜய் அவர்களின் வீர வசனங்கள் அடங்கிய உரை ஒரு அரசியல் திரைப்படத்தை பார்ப்பது போல இருந்தது. நடிகர் விஜய் -ன் கன்னி பேச்சு என்பதால் இது குறித்து விமர்சனங்களை வைக்க விரும்பவில்லை. 

சைமன் ஜெபஸ்டியான்!!!

தேர்தல் அரசியலுக்காகவும் ஓட்டு வங்கிக்காகவும் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத வகையில், நாம் தமிழர் கட்சி தலைவர் செபாஸ்டின் சைமனின் மறு உருவமாக,  அரசியல் நடிகர் ஜோசப் விஜய் விளங்குவார் என்பது மட்டும் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


திமுக மாநாட்டிற்கு கூட்டத்தை கூட்ட, உடன்பிறப்பே! கையில் காசு இல்லை என்பதற்காக, வீட்டில் இருக்கும் சாமி உண்டிகளை உடைக்காதே!* *மனைவியின் தாலியை விற்காதே! மூக்குத்தியை கழற்றாதே! என்று தொண்டர்கள் நினைக்காததை சுட்டிக்காட்டி செய்ய வைத்து, பல கோணங்களில் உணர்வு பூர்வமாக பேசி, ஏமாற்றி கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது போல, நடிகர் விஜய் அவர்களும், இருசக்கர வாகனத்தில் வராதே! கர்ப்பிணிப் பெண்கள்,குழந்தைகள் வர வேண்டாம் என்றெல்லாம் விதவிதமாக,கூட்டம் கூட்டுவதற்காக விளம்பரத்திற்காக திமுகவின் குரலில் பேசியிருந்தார்.


பாதுகாப்பாக வாருங்கள்! அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டுவோம்! என்று அழைப்பு விடுத்த நடிகர் விஜய்,தொண்டர்களின் நலனுக்கு பாதுகாப்பற்ற முறையில் குடிதண்ணீர் உணவு, கழிவறை உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் அளிக்காமல் மாநாட்டுக்கு வந்தவர்களை அலை கழித்தது ஏன்?


தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் விருந்தினர்களுக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் சொகுசு அறைகளுக்கு இணையான ஆறு கேரவன்களை ஏற்பாடு செய்த நடிகர் விஜய், தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி வந்த பல்லாயிரம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநாட்டில் குடிதண்ணீர், உணவு, கழிவறை, மருத்துவ வசதி போன்றவற்றை முறையாக திட்டமிடாதது ஏன்?


ஆனால் இந்த மாநாட்டு ஏற்பாடுகளில் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் விளம்பரத்திற்காக, மேடை அமைப்பு, மாநாட்டு திடல் அமைப்பு,  முக்கிய தலைவர்கள் தமிழ் மன்னர்கள் உள்ளிட்டவர்களின் கட் அவுட்டுகள்,  ஏற்பாடுகள் என ஒரு அரசியல் கட்சிக்குரிய 

ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக திட்டமிட்டு செய்துள்ளார். 


தன்னுடைய படம் வெளிவரும் பொழுது எப்படி கண்ணும் கருத்துமாக,  திட்டமிடுகிறாரோ? அதே முறையில் மாநாட்டுகள் ஏற்பாடுகளை சுயநலத்துடன் செய்த விஜய்,  மாநாட்டுக்கு வந்த மக்கள் நலத்தில், மனிதநேயத்துடன்போதிய அக்கறை காட்டாதது ஏன்?


நடிகர் விஜய் தன்னுடைய விளம்பரத்திற்கும் அரசியல் மாநாட்டு விளம்பரத்திற்கும் காட்டிய அக்கறை தொண்டர்களின் நலனில் காட்டவில்லை என்பது, தொண்டர்கள் பாதிப்புகள் மற்றும் மாநாட்டின் நிகழ்வுகளில்   தெளிவாக தெரிகிறது. 


பல்லாயிரக்கணக்கான 

கூடும் முதல் அரசியல் 

மாநாட்டிற்கு வரும் பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மட்டும் முறையாக சிந்தித்து சரியான முறையில், போதிய அக்கறையுடன் திட்டமிட்டு சரியாக செயல்படுத்தப்படவில்லை தமிழக வெற்றி கழக தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

எல்லாம் விளம்பரங்கள்!!!

குடிக்க தண்ணீர் இல்லை. ஆசையுடன் எழுச்சியுடன் நம்பிக்கையுடன் விஜய் காண  வந்தவர்களுக்கு பசி என்று தவிப்பவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு வழங்கப்படவில்லை. சரியான முறையில் டாய்லெட் வசதி செய்யப்படவில்லை.  டாய்லெட்டுகளில் சுத்தமாக தண்ணீரும் இல்லை. மிக முக்கியமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி ஆம்புலன்ஸ் வசதி சரியான முறையில் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்படவில்லை பல நூறு தொண்டர்கள் குழந்தைகள் பெண்கள் மயக்கம் அடைந்து தண்ணீர் கிடைக்காமல் உணவு கிடைக்காமல் அவதிப்படுவதை ஊடகங்கள்,சமூக ஊடகங்கள் காண முடிகிறது.


தமிழக வெற்றிக்கழக மாநாடு பொருத்தவரை நடிகர் விஜய் அவர்களை தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் தலைவராக மாற்ற கட்டமைக்கப்பட்ட விளம்பரம், மாநாட்டு மேடை, என மாநாட்டின் பிரம்மாண்டம் குறித்து காட்டிய அக்கறையை, பெருந்தன்மையுடன் தன்னை நம்பி வந்த தொண்டர்கள் குறித்து முழுமையான அக்கறையுடன் செயல்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.


வழக்கமாக திரைத்துறையினர் பொறுத்தவரை திரைப்படத் தயாரிப்புக்கு 5 கோடி, விளம்பரத்துக்கு 15 முதல் 20 கோடி என்ன மூன்றில் இருந்து நான்கு மடங்கு விளம்பரத்திற்காக செலவிடுவார்கள். 


அதே விளம்பர கலாச்சாரத்தில், நடிகர் விஜய் அவர்களும் 

தன்னைத் தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் தலைவராக கட்டமைப்பதிலும் மாநாட்டு பிரம்மாண்டத்திலும், பல கோடி ரூபாய் செலவு செய்து விளம்பரத்திற்கும், மாநாட்டு ஏற்பாடுகளுக்கும் நிகழ்ச்சியின் வெற்றிக்கும் முக்கியம் கொடுத்து கவனம் செலுத்தினார்.


ஆனால் விஜயை நம்பி வந்த தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் நலனுக்காக, குடிநீர் உணவு, கழிவறை, மருத்துவம் என முக்கிய அடிப்படைத் தேவைகளுக்காக

போதி அக்கறையுடன் பெருந்தன்மையுடன் மனிதநேயத்துடன், பணத்தை செலவு செய்யாமல் முழுவதுமாக சிக்கனத்தை கடைப்பிடித்து தொண்டர்கள் நலனை புறக்கணித்தது அதிர்ச்சி அளிக்கிறது.



நடிகர் விஜய் தன் வசதிக்காக ஏழு கேரவன்களை திட்டமிட்டு உருவாக்கியது போல, மாநாட்டு மேடை பந்தலில் பிரம்மாண்டத்திற்காகவும், தமிழக அரசியலில் தன்னை மிகப்பெரிய பிம்பமாக காட்டிக்கொள்ளவும் செலவு செய்த பல கோடி ரூபாய், பணத்தில் சில கோடி ரூபாயை செலவு செய்து குடிநீர் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து தன்னுடைய  தொண்டர்களின் போதி அக்கறையை காட்டாதது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

விஜய் உணர்வாரா?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழியில் உணர்வு பூர்வமான தொண்டர்களை உசுப்பேத்தி, உற்சாகப்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதற்கு முயற்சி செய்யாமல், அரசியல் தன் வளர்ச்சிக்கு காட்டும் அக்கறையைப் போல, மனித நேயத்தோடு தன் குடும்பத்தில் ஒருவராக தொண்டர்களிடம் போதிய அக்கறையை காட்ட வேண்டும். மக்களின் வாழ்த்து மகேசன் வாழ்த்து ( இறைவனின் வாழ்த்து) என்பதை நடிகர் விஜய் உணர வேண்டும்.

விஜய் ன் புதிய கட்சிக்கு பாஜக வாழ்த்துக்கள் தெரிவித்தது!!!

பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் விஜய் அரசியலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என தன்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்தன. 

உதயநிதி ஸ்டாலினின் வஞ்ச புகழ்ச்சி வாழ்த்துக்கள்!!!

ஆனால் கடந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க, சைக்கிளில் சென்று திமுகவிற்கு மறைமுக ஆதரவு தெரிவித்து, வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களை திமுகவிற்கு ஆதரவாக திசை திருப்பிய  நடிகர் விஜய் அவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மட்டும், நடிகர் விஜய் எனது நீண்ட கால நண்பர், அவரின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் என வஞ்சகப்புகழ்சியுடன் வாழ்த்து கூறியதை விஜய் உணர்ந்து கொள்ள வேண்டும்.


எனக்கு ஜோசப் விஜய் நடிகர் விஜய் ஆக, சினிமாவிற்காக மாறியதற்கு முன்பிருந்தே தெரியும் என்ற அர்த்தத்தில் தன் வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.


ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய் என் நீண்ட கால நண்பர். அவரின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் என்று விஜய் சினிமா தொழிலை விட்டு அரசியல் தொழிலுக்கு வந்திருக்கிறார் என்கிற பாணியில், வாழ்த்து சொல்லி இருப்பதைப் புரிந்து கொண்டு ஊழல் திமுகவின் சூழ்ச்சி அரசியல் மற்றும் நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத அரசியலில் இருந்து விலகி மக்கள் நல அரசியல் செய்ய வேண்டும்.


ஏ.என்.எஸ்.பிரசாத் 

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்


வெள்ளி, 14 ஜூன், 2024

திமுக அரசு ஆர்வம் காட்டுமா பிரதமர் நரேந்திர மோடியின் செயல் திட்டங்களில்முதல்வர் ஸ்டாலின் அரசு உறுதுணையாக செயல்பட வேண்டும்பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளிலும் யோகா தினம் கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டும்.

 தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது:-

உலக யோகா தினத்தை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாட திமுக அரசு ஆர்வம் காட்ட வேண்டும்.


பிரதமர் மோடியின் வழியில் உலகமே கொண்டாடி மகிழும் உலக யோகா தினத்தை தமிழக பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்



யோகா என்பது இந்தியா உலகிற்கு அளித்த மாபெரும் கொடை. யோகா என்பது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவதோடு, உள்ளத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. எதிர்மறை சிந்தனைகளை அழித்து நேர்மறை சிந்தனைகளை உருவாக்கும் அற்புதம் கொண்டது.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஆரோக்கியத்தின் அற்புதத்தை உணர்த்தி, எளிமையாக கற்றுக் கொள்ளக் கூடிய வகையில் பல்வேறு நிலைகளில் பயிற்சிகள் உள்ளது. மேலும்பல நோய்களுக்கு குறிப்பாக சுவாசக் கோளாறுகளுக்கு யோகாவின் ஒரு பகுதியான மூச்சுப் பயிற்சிகள் அருமருந்தாக உள்ளது. 



உலக மக்கள் யாவரும் நோய் இன்றி மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய சிறப்பு வாய்ந்த யோகாவை உலகம் முழுக்க கொண்டுச் சேர்க்க வேண்டும்,


 இந்தியாவின் நாகரீகம், கலாச்சாரம் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காக....



 பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெரு முயற்சியால் 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்தியா மட்டுமல்லாது வளைகுடா நாடுகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உலகின் அனைத்து நாடுகளிலும் உலக யோகா தினம் வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.


கடந்த 9 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் உலக யோகா தினத்தால் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சிகள் உலகெங்கும் பரவி நம் இந்திய திருநாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளன


குறிப்பாக கொரோனா பேரிடர் தொற்றுக்காலத்தில் இந்தியர்கள் அனைவருக்கும் உயிர்காக்கும் மருந்தாக யோக கலை இருந்தது என்பதை உலகமே அறிந்து கொண்டது.

இங்கு..ஆர்வம்? விழிப்புணர்வு இல்லையே!!!

அரபு நாடுகள் உள்பட ..உலகெங்கும் யோகா தினம் கொண்டாடப்பட்டாலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் உலக யோகா தினத்தை கொண்டாடுவதில் திமுக அரசு ஆர்வம் காட்டுவதில்லை.


யோகா என்பது கட்சி, மதம், மொழி, இனம் சார்ந்தது அல்ல. 



உலக மக்கள் அனைவருக்குமானது. உடல் வலிமைக்கானது. உள்ளத் தூய்மைக்கானது. எனவே, உலகமே உற்சாகமாகக் கொண்டாடும் உலக யோகா தினத்தை வரும் 21-ம் தேதி

தமிழகத்தில் அனைவருக்கும் அற்புத யோகா கலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசும் கொண்டாட வேண்டும். 


மது, புகைப்பழக்கம்,

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல், எதிர்மறை சிந்தனைகளை போக்கி தாழ்வு மனப்பான்மையை தடுத்து தன்னம்பிக்கையை அளித்து, உடலையும் மனதையும் வலிமைப்படுத்தி நோயற்ற வாழ்க்கை அளிக்கும் அற்புதமான ஆற்றல் கொண்ட யோகாவை இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வீடு தோறும் 

கொண்டு செல்லும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் செயல் திட்டங்களில் தமிழக மக்கள் முழுமையாக பங்கெடுத்து ஆரோக்கியத்துடன், ஆனந்தத்துடன் வாழ்வதற்கு முதல்வர் ஸ்டாலின் அரசு உறுதுணையாக செயல்பட வேண்டும்.


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் உலக யோகா தினம் கொண்டாட ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். 

பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளிலும் யோகா தினம் கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டும்.


ஏ.என்.எஸ்.பிரசாத் 

தமிழக பாஜக 

மாநில செய்தி தொடர்பாளர்.

புதன், 1 மே, 2024

காங்கிரஸ் படு தோல்வி உறுதி என்பதால் போலி வீடியோ ராகுல் காந்தியின் திட்டமிட்ட சதி!!! தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பரபரப்பு அறிக்கை

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.



அதில் தெரிவித்துள்ளதாவது:-


மக்களவைத் தேர்தலில் படுதோல்வி உறுதி என்பதால் பாஜகவுக்கு எதிராக போலி வீடியோக்களை பரப்பும் காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்


அமித்ஷா பேசுவது போன்ற போலி வீடியோ ராகுல் காந்தியின் திட்டமிட்ட சதி


நடந்து வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 400-க்கும் அதிகமான இடங்களைப் பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி  அமைக்க போவது உறுதியாகி உள்ளது.


 என்ன செய்தாலும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சியினர், பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றனர். 


அதில் ஒன்றுதான், 'இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா பேசுவது போன்ற ஒரு போலி வீடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.


 இதை காங்கிரஸ் ஆளும் தெலங்கானா மாநில  முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் பகிர்ந்துள்ளார்.


 அப்படியெனில் இந்த போலி வீடியோ உருவாக்கம் காங்கிரஸ் மேலிடம் அதாவது ராகுல் காந்தி செய்த சதி என்பது உறுதியாகிறது. 


ராகுல் காந்தியின் ஒப்புதல் இல்லாமல் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இது போன்ற பாதகச் செயலை, அயோக்கியத்தனத்தை செய்ய துணிந்திருக்க மாட்டார்.


பட்டியலின (SC), பழங்குடியின (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) இட ஒதுக்கீடு தொடர வேண்டும். தேவைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும் என்பது பாஜகவின் உறுதியான நிலைப்பாடு. இதில் ஒரு நாளும் பாஜக மாறுபட்டதில்லை. பாஜகவின் இருபெரும் தலைவர்களான வாஜ்பாயும், அத்வானியும் இடம் பெற்ற ஜனதா கட்சி ஆட்சியில் தான், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க 'மண்டல் ஆணையம்' அமைக்கப்பட்டது. பாஜக ஆதரவுடன் 1989-ல் மத்தியில் அமைந்த ஆட்சியில் தான் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டை பல ஆண்டுகள் காலம் தாழ்த்தியதுதான் காங்கிரஸ் கட்சியின் சாதனை.


நரேந்திர மோடி அவர்கள் பிரதமரான பிறகு தான், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டது. அதற்கு முன்பு எந்த அதிகாரமும் இல்லாத வெற்று ஆணையமாகவே அது இருந்தது. மருத்துவ உயர்கல்வி உட்பட அனைத்து மட்டங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பிவருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுதான். 


75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் தான், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மிக அதிக அளவில் உள்ளனர். அதாவது பட்டியலின, பழங்குடியின,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உண்மையிலேயே அரசியல் அதிகாரத்தை வழங்கியிருப்பது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தான். ஏனெனில் அரசியல் அதிகாரம் தான் உண்மையான அதிகாரம். அரசியல் அதிகாரம் கிடைத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு தேவையானதை தாங்களே எடுத்துக் கொள்ள முடியும். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களை வாங்கும் இடத்திலேயே வைத்திருந்தது. அவர்களை கொடுக்கும் இடத்திற்கு மாற்றி இருக்கிறது பாஜக அரசு. இதுதான் உண்மையான சமூகநீதி.


 அதனால்தான் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் பாஜகவுக்கு முழு ஆதரவை வழங்கி வருகிறார்கள். அதனால் தான் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மூன்றாவது முறையும் ஆட்சி அமைக்க இருக்கிறது.


இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் உள்ளிட்ட உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சியினர் பாஜகவுக்கு எதிராக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். இது தகவல் தொழில்நுட்ப யுகம்.  உண்மை ஒரு நொடியில் அம்பலமாகிவிடும்.  எது உண்மை, எது போலியானது என்பதை மக்கள் நன்கறிவார்கள். பிரிட்டிஷாரின் பிரித்தாலும் சூழ்ச்சியை கையாண்டு 55 ஆண்டு காலம் இந்த நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் இனி ஒருபோதும் வெற்றி பெறாது. குறுக்கு வழியில் வெற்றி பெற நினைக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சிகளுக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். எப்போதும் வாய்மையே வெல்லும்.


ஏ.என்.எஸ். பிரசாத் 

தமிழக பாஜக 

மாநில செய்தி தொடர்பாளர்

கைபேசி : 9840170711