வெள்ளி, 14 ஜூன், 2024

திமுக அரசு ஆர்வம் காட்டுமா பிரதமர் நரேந்திர மோடியின் செயல் திட்டங்களில்முதல்வர் ஸ்டாலின் அரசு உறுதுணையாக செயல்பட வேண்டும்பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளிலும் யோகா தினம் கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டும்.

 தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது:-

உலக யோகா தினத்தை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாட திமுக அரசு ஆர்வம் காட்ட வேண்டும்.


பிரதமர் மோடியின் வழியில் உலகமே கொண்டாடி மகிழும் உலக யோகா தினத்தை தமிழக பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்



யோகா என்பது இந்தியா உலகிற்கு அளித்த மாபெரும் கொடை. யோகா என்பது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவதோடு, உள்ளத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. எதிர்மறை சிந்தனைகளை அழித்து நேர்மறை சிந்தனைகளை உருவாக்கும் அற்புதம் கொண்டது.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஆரோக்கியத்தின் அற்புதத்தை உணர்த்தி, எளிமையாக கற்றுக் கொள்ளக் கூடிய வகையில் பல்வேறு நிலைகளில் பயிற்சிகள் உள்ளது. மேலும்பல நோய்களுக்கு குறிப்பாக சுவாசக் கோளாறுகளுக்கு யோகாவின் ஒரு பகுதியான மூச்சுப் பயிற்சிகள் அருமருந்தாக உள்ளது. 



உலக மக்கள் யாவரும் நோய் இன்றி மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய சிறப்பு வாய்ந்த யோகாவை உலகம் முழுக்க கொண்டுச் சேர்க்க வேண்டும்,


 இந்தியாவின் நாகரீகம், கலாச்சாரம் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காக....



 பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெரு முயற்சியால் 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்தியா மட்டுமல்லாது வளைகுடா நாடுகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உலகின் அனைத்து நாடுகளிலும் உலக யோகா தினம் வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.


கடந்த 9 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் உலக யோகா தினத்தால் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சிகள் உலகெங்கும் பரவி நம் இந்திய திருநாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளன


குறிப்பாக கொரோனா பேரிடர் தொற்றுக்காலத்தில் இந்தியர்கள் அனைவருக்கும் உயிர்காக்கும் மருந்தாக யோக கலை இருந்தது என்பதை உலகமே அறிந்து கொண்டது.

இங்கு..ஆர்வம்? விழிப்புணர்வு இல்லையே!!!

அரபு நாடுகள் உள்பட ..உலகெங்கும் யோகா தினம் கொண்டாடப்பட்டாலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் உலக யோகா தினத்தை கொண்டாடுவதில் திமுக அரசு ஆர்வம் காட்டுவதில்லை.


யோகா என்பது கட்சி, மதம், மொழி, இனம் சார்ந்தது அல்ல. 



உலக மக்கள் அனைவருக்குமானது. உடல் வலிமைக்கானது. உள்ளத் தூய்மைக்கானது. எனவே, உலகமே உற்சாகமாகக் கொண்டாடும் உலக யோகா தினத்தை வரும் 21-ம் தேதி

தமிழகத்தில் அனைவருக்கும் அற்புத யோகா கலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசும் கொண்டாட வேண்டும். 


மது, புகைப்பழக்கம்,

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல், எதிர்மறை சிந்தனைகளை போக்கி தாழ்வு மனப்பான்மையை தடுத்து தன்னம்பிக்கையை அளித்து, உடலையும் மனதையும் வலிமைப்படுத்தி நோயற்ற வாழ்க்கை அளிக்கும் அற்புதமான ஆற்றல் கொண்ட யோகாவை இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வீடு தோறும் 

கொண்டு செல்லும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் செயல் திட்டங்களில் தமிழக மக்கள் முழுமையாக பங்கெடுத்து ஆரோக்கியத்துடன், ஆனந்தத்துடன் வாழ்வதற்கு முதல்வர் ஸ்டாலின் அரசு உறுதுணையாக செயல்பட வேண்டும்.


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் உலக யோகா தினம் கொண்டாட ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். 

பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளிலும் யோகா தினம் கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டும்.


ஏ.என்.எஸ்.பிரசாத் 

தமிழக பாஜக 

மாநில செய்தி தொடர்பாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக