thoothukudi leaks 11-7-2023
இந்த வீடியோ பதிவு(21.05.2022) தூத்துக்குடி மாநகராட்சி முத்து கிருஷ்ணாபுரம் சுப்பையா வாட்டர் டேங்க் மேல் எடுக்கப்பட்டது.
இந்த வீடியோ வில் சிகப்பு நிற சட்டையில் இருப்பவர் முருகன். இவர்தான் இந்த டேங்கில் தண்ணீர் திறந்து விடுபவர்.
மேலும் உயரமான அந்த டேங்கில் ஏறி நள்ளிரவிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டியது இவரது பொறுப்பு. எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் உயிரை பணயம் வைத்து இவரைப் போன்றோர் வேலை செய்வதால் தான் தூத்துக்குடி மக்கள் சுத்தமான நீரைப் பெறுகின்றனர்.
இவர் இன்று இயற்கை எய்தி உள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்து மரணம் அடைந்துள்ளார்.
ஆனால் தூத்துக்குடி மாநகர மக்களுக்கு இவர் ஆற்றிய சேவை போற்றப்பட வேண்டிய ஒன்று. இதை பணியை செய்யும் மற்ற ஊழியர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க பட வேண்டும்
இந்த வீடியோ எடுக்கப்பட்ட பொழுது தூத்துக்குடி மாநகராட்சியில் பல பகுதிகளில் சத்தமின்றி மஞ்சகாமாலை,நோய் பரவிக் கொண்டிருந்தது. சுகாதாரம் இன்றி வழங்கப்பட்ட குடிநீரால் ஜெய்லானி தெரு, சண்முகபுரம், தாமோதர் நகர், தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு , என்று பல பகுதிகள் சுகாதாரமற்ற குடிநீரை பருகியதால் மஞ்சகாமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். கொரோனாவை தொடர்ந்து தூத்துக்குடி மக்களை வாட்டி வதைத்த அந்த மஞ்சள் காமாலையை அப்போது வெளிக்கொண்டு வந்தது தூத்துக்குடி மாநகராட்சியில் அப்போது இருந்த மாநகர நல அலுவலர்,மற்றும் இரண்டு ஆயுஷ் மருத்துவர்கள், மற்றும்பொது சுகாதார பிரிவு மேலாளர். இவர்களது களப்பணியால் தூத்துக்குடியில் மிகப்பெரிய உயிர் சேதம் தடுக்கப்பட்டது.
இந்த வீடியோவில் முருகனோடு டேங்கின் மேல் புறத்தில் நிற்பது அன்றைய தூத்துக்குடி மாநகராட்சி மருத்துவக் குழு. குளோரின் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.
இன்று 11-7-2023 முருகன் மறைந்திருக்கிறார் ஆனால் அன்று தூத்துக்குடி மாநகர மக்களை மஞ்சகாமாலை என்னும் அரக்கனிடமிருந்து இருந்து பாதுகாத்ததில் முருகன் போன்றோரின் பங்களிப்பு நாம் அனைவரும் போற்றப்பட வேண்டும்.
தூத்துக்குடி யை காத்த இந்த மாமன்னனை நம் மனதில் உயர்த்தி டுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக